Cricket Countdown....

Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Tuesday, August 9, 2011

3 Idiots - தொடர்பதிவு

சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்.... ரமேஷ், செல்வா, பாபு, டெரர், நரினு ஒரு பெரிய பட்டாளத்தோட பிளாக் எல்லாம் தூசு புடிச்சி இருந்ததை பார்த்து பொறுக்காத வெட்டிபயல்.... (சாரி... வெறும்பயல்னு சொல்லனுமா....) வெறும்பய ஜெயந்த் மூணை வெச்சி ஒரு தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு.... எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... தொடர் பதிவ.....




1. விரும்பும் 3 விஷயங்கள் 

அ. ரயில் பயணம்
ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா


2. விரும்பாத 3 விஷயங்கள்


அ.  அரசியல்
ஆ. ஊருக்கு உபதேசம்
இ.  தற்பெருமை

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு 

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  தற்கால சினிமா பாடல்
ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் 
இ.  கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஃபைல்கள்
ஆ. Planனே எழுதாத Monthly Planner
இ.  என் குழந்தையின் கிறுக்கல்கள்

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. கும்மி குரூப்
ஆ.ஷமியின் குறும்புகள்
இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும்



7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ.  சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)
ஆ. டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்
இ.
கும்மி குரூப்புடன் அரட்டை

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்
ஆ. இலக்கியம்
இ. போட்டோஷாப்

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்
. சரவண பவன் காபி
இ.  ஹைதராபாத் பிரியாணி

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. தற்பெருமை
ஆ. குறை சொல்லுறது
இ. அட்வைஸ்

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. இதயம் ஒரு கோவில்...
ஆ. சலங்கையிட்டால் ஒரு மாது
இ. ஹரிவராசனம் (காலைல தினமும் அலாரம் அடிச்சி எழுப்பிவிட்டுரும்)

14. பிடித்த 3 படங்கள்

அ. தில்லுமுல்லு, வசூல்ராஜா, அன்பே சிவம் (காமெடி)
ஆ. பாட்ஷா, சிவாஜி, காக்க காக்க (அதிரடி)
இ. ரோஜாக்கூட்டம், சேது, இதயத்தை திருடாதே (காதல்)

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆ, இ. அதானால இந்த 2 கேள்வி பாஸ் 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு
ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்
இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய்



எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான்

Friday, January 7, 2011

2010 - சில நினைவுகள்



நண்பர் பாலாஜி சரவணா, 2010ல் என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை எழுதுமாறு ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். உண்மையிலேயே 2010 என் வாழ்வில் மிகச்சிறந்த ஆண்டாகவே இருந்துச்சி. ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன், அதனால எல்லா விஷயங்களையும் சொல்ல முடியுமானு தெரியலை. முடிஞ்ச அளவு நினைவுக்கு வரும் விஷயங்களை சொல்லுறேன்.

ஆண்டு தொடக்கமே என் வாழ்க்கையின் நீண்ட நாள் கனவான வெளிநாட்டு பயணம் + வேலையில் தான் ஆரம்பிச்சுச்சு. ஆமாங்க, மொரீசியஸ் வேலைக்கு சேர்ந்தது ஜனவரி 5 ல தான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைனு எல்லோரையும் பிரிஞ்சி மொரீசியஸ் வந்து சேர்ந்தேன். சொந்த மண் மற்றும் சொந்தங்களை பிரியரனேன்னு  ஒரு வருத்தம் இருந்தாலும் ஒரு புதிய அனுபவம் கிடைச்சி இருக்கேனு ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தான் செஞ்சிச்சி.


எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி என் மனைவிய பிரிஞ்சிருந்த 18 மாச பிரிவு முடிவுக்கு வந்துச்சி. வேலை விஷயமா ஹைதராபாத், விசாகபட்டினம்னு ஆந்திரா முழுசா சுத்தி வாராவாரம் சென்னைக்கு வந்துட்டு போயிட்டு (கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) இருந்தது முடிவுக்கு வர, மார்ச் மாசம் மனைவியும் என் குழந்தையும் என் கூடவே இருக்க மொரீசியஸ் வந்ததாங்க. இதுதான் என் ஒட்டு மொத்த வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான நிகழ்வு.


அலைஞ்சி திரிஞ்ச வேலை நின்று, ஒரே இடத்தில் வேலை செய்யும் சூழலும் உருவாச்சி. என் இத்தனை வருட தொழில் அனுபவத்துக்கு அங்கிகாரம் கிடைச்சதும், என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான்.


சும்மா இருந்தவனை சொறிஞ்விட்ட மாதிரி... சும்மா நெட்டுல மேஞ்சிட்டு இருந்தப்போ பிளாக் பத்தி தெரிஞ்சி அதை ஆரம்பிச்சி உங்களை எல்லாம் டார்சர் பண்ண ஆரம்பிச்சதும் 2010ல தான். ஆனா, இந்த பிளாக் தயவால கிடைச்ச நண்பர்கள் பட்டாளம் உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க.


அவ்வளவுதாங்க நினைவுக்கு வருது.... ஆங்...கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிகறேனே பிளிஸ். இதையும் கேட்டுருங்க ப்ளீஸ். என்னது மாட்டீங்களா, நான் பல்பு வாங்கறது பத்திங்க. ஓ அப்போ கேகறீங்களா? என்னா வில்லத்தனம்! என் பொண்ணு கையால நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பல்பு வாங்கிட்டு இருக்கறேன். இனியும் வாங்குவேன், சும்மாவா எத்தனை பேருக்கு பல்பு கொடுத்து இருக்கேன். பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.....


இது தொடர்பதிவாமே, யாரையாவது மாட்டிவிடலைனா பதிவுலக தொழில் தர்மம் ஆகாது அதனால யார்கிட்டலாம் 2010 ல வாங்கி கட்டிகிட்டேன்னு சொல்லவராங்க,


அருண்பிரசாத் (ஜூனியர்)
தலைவர் எஸ் கே
பாசமலர் சுபத்ரா
மச்சான் டெரர் பாண்டியன்





Tuesday, December 14, 2010

2010 ன் எனக்கு பிடித்த 10 திரைப்படங்கள்...


நம்ம சிரிப்புபோலிசு 2010 ல வெளிவந்து தனக்கு பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி டாப் 10 போட்டு இருந்தாரு... என்னையும் தொடர்பதிவு எழுத கூப்டுட்டாரு. இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்....

1.கோவா
2. தமிழ்படம்
3. விண்ணைதாண்டி வருவாயா
4.ரேணுகுண்டா
5.  சிங்கம்
6. இராவணன்
7. களவாணி
8. மதராசபட்டினம்
9. பாஸ் என்கிற பாஸ்கரன்
10. எந்திரன்


எல்லா படங்களும் அவை ரிலீஸ் ஆன வரிசையில் கொடுத்துள்ளேன்....

லிஸ்ட்டை மயிரிழையில் தவறவிட்ட படங்கள்....

11. பையா
12 வம்சம்
13. தில்லாலங்கடி



யாரது,

மைனா, நந்தலாலா, அங்காடிதெரு, சுறா....

இதெல்லாம் மிஸ்சிங்னு சண்டைக்கு வர்றது.... நல்லா பாருங்க “நான் பார்த்த” படங்களின் லிஸ்ட் இது.....எனக்கு மட்டும் மத்த படங்களை பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன?.... மொரீசியஸ்ல எந்த தமிழ்படமும் ரிலிஸ் ஆகுறது இல்லைங்க...

ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே  ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்?  இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....


2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த 


3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....

Friday, December 10, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

“நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்....

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் “என் வானிலே.. ஒரே வெண்ணிலா” - மனதை மயக்கும் பாடல்

“நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...”

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

“நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...”

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம...”

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
“ஒரு தெய்வம் தந்த பூவே” இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

“எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!...”

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் “சின்னத்தாயவள் தந்த” பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் “சிங்கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்...

“செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா”

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

“இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே”

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 “புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்”

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


Monday, November 1, 2010

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்

இன்றுடன் எந்திரன் திரைக்கு வந்து சரியாக ஒரு மாதம் முடிந்துவிட்டது. ரஜினியின் மாஸ்சாலும் சன் டீவியின் அதித விளம்பரத்தாலும் இந்த படத்தை 90% பேர் பார்த்துவிட்டனர். சில ஆகா ஓகோ விமர்சனங்களும், பல எதிர் மறை விமர்சனங்கள் வந்து ஓய்ந்தது.
ஆனால், இந்த படம் ஒரு டிபிக்கல் ரஜினி ரசிகனுக்கு திருப்தி அளித்ததா? மற்ற ரஜினி படங்களின் வரிசையில் இந்த படம் எந்த இடத்தில் உள்ளது என தெரிந்துகொள்ள விருப்பப்பட்டேன்.

இதோ என் பார்வையில் ரஜினி யின் டாப் 10 திரைப்படங்கள்.


10. அருணாசலம்
சாதாரணமாக தொடங்கும் இந்த படம், 30 நாளில் 30 கோடி செலவழிக்க வேண்டும் என்றவுடன் பரபரப்பாக மாறும். என்னை போன்ற ரசிகர்களின் கனவான அரசியல்வாதி ரஜினியைகாட்டிய ஒரே படம்

9. எந்திரன்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கடைசியில் சுட்டி டிவி பார்ப்பதை போல இருந்தது என விமர்சிக்கப்பட்ட படம். சராசரி ரஜினி ரசிகனை திருப்திபடுத்த தவறிய படம். எவ்வளவு பிரம்மாண்டம் இருந்தாலும் ரஜினியை பார்க்க முடியாத ரஜினி படம்

8. சந்திரமுகி
பாபா பட படுதோல்விக்கு பிறகு வந்து ரஜினி இமேஜை தூக்கி நிறுத்தியபடம். ரசிகனின் எதிர்பார்ப்பை எல்லா வகையிலும் நிறைவேற்றி ஒரு வருடம் ஓடிய சாதனை திரைப்படம்

7. அண்ணாமலை
“மல டா, அண்ணாமலைடா”  ஒரே பாடலில் பணக்காரன் ஆகும் டிரெண்டை தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய படம். காமெடி, ஸ்டைல், பஞ்ச் டயலாக் என கலக்கி இருப்பார்

6. முள்ளும் மலரும்
தன்னாலும் குணசித்திர பாத்திரங்களில் நடிக்க முடியும் என ரஜினி நிரூபித்தபடம். மகேந்திரன், இளையராஜா, ரஜினி கூட்டணியில் கலக்கியபடம். ரஜினி படங்களில் ஒரு மகுடம் இது.



5. சிவாஜி
ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினி - ரசிகர்களை அதிரவைத்த படம். வயதான ரஜினியை இளைஞராக காட்டிய படம். பஞ்ச் டயலாக், சண்டைகாட்சிகள், வெள்ளைதோல் ரஜினி என படம் முழுக்க பரபர விறுவிறுப்பு படம்.



4. தில்லுமுல்லு
ரஜினியின் முழுநீள நகைச்சுவை திரைப்படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். தேங்காய் சீனிவாசனும் ரஜினியும் போட்டி போட்டு காமெடி செய்து இருப்பர்



3. படையப்பா
நடிகர்திலகத்துடன் ரஜினி நடித்த கடைசிபடம். ரம்யாகிருஷ்ணனா, ரஜினியா என கடைசிவரை போட்டியாகவே செல்லும் படம். “மின்சாரகண்ணா, இந்த வயசுலயும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகலை” என்ற நீலாம்பரி டயலாக்கை நிருபித்தபடி ரஜினியின் நடிப்பு இருக்கும்



2. தளபதி
நட்புக்கு இலக்கணம் கர்ணனை நினைவு படுத்தும் கதாபாத்திரம். இளையராஜாவின் இசை கூடுதல் பலம். பாசம், நட்பு, காதல், கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்தி ஜெயித்து இருப்பார் ரஜினி. ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் பெவரைட்டில் கண்டிப்பாய் இந்த படம் இருக்கும்



1. பாட்ஷா
பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் நெ 1 ரஜினி படம். ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் டயலாக், சண்டை என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம்.


ஆக, என் பார்வையில் “எந்திரன்” 9வது இடத்தைதான் பெற்று உள்ளது. இதை ஒரு தொடர்பதிவாக மாற்றி மற்றவர் நிலையையும் பார்க்க விருப்பம்.

எனவே, நான் இந்த பதிவை தொடர அழைப்பது.,

1. சிரிப்பு போலிஸ் ரமெஷ்
2. அமீரக அரிமா தேவா
3. ரஜினி ரசிகர் நண்பர்  எல் கே

ரஜினி நடித்த 154 படங்களின் பெயர் பட்டியலும் இங்கு இருக்கிறது.


Monday, August 2, 2010

இதனால அறிவிப்பது என்னனா...


டிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.



பதிவுலக அன்பர்களே! நண்பர்களே!! இதுனால சகலமானவர் அறிவிக்கறது என்னனா, நம்ம 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களை நான் ஏற்கனவே ஒரு பதிவில் மாட்டிவிட்டதால், பதிலுக்கு ஒரு தொடர்பதிவில் என்னை மாட்டிவிட்டுருக்கிறார், அதற்கு அவருக்கு முதலில் நன்றி. அடுத்து, நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள். சே... என்ன பேட்டின்னு சொன்னவுடனே அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம். அதாங்க பேட்டிக்கு,

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அருண்பிரசாத்

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் அருண் பிரசாத். என்ன? மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா? வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண? நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா?????) உங்களை ஏற்கனவே A for அவஸ்தைனு மொக்கை போட்டமாதிரி போட விரும்பலை. ( ஒரு வழியா எல்லாரையும் இங்கயே மொக்கை போட்டாச்சு, இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம்)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

கண்டிப்பாக அது ஒரு வெளிநாட்டு சதிதான். ஆமாங்க, இங்க மொரிசியஸ் வந்து கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டு பத்தி எந்த நியூஸிம் தெரியல. இங்க தமிழ் சேனலோ, படமோ எதுவும் வராது. அதனால் ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு ஒரு சைட் வந்தது, அதுல நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு அப்படியே பிக்கப் பண்ணிட்டேன். அதனால, இதுக்கெல்லாம் காரணம் மொரீசியஸ் அரசாங்கம்தான்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

(என்னாது என் வலைபதிவு பிரபலம் ஆகிடுச்சா!) இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும். சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க. ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு. (நல்லவேளை பிரபலம், இதுவரை Problem ஆகலை). யூத்புல் விகடன் பரிந்துரைத்த 'பிளாக்குக்கு சூனியம்' பலரை அழைத்து வந்தது

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மொத்த பதிவு 31 ல் 14 பதிவுகள் சொந்த (சில நொந்த) அனுபவம் தான். ஆனால் மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. நீங்க வேற, திருவிளையாடல் படத்தில் வரும் முருகன் சொல்லும் டயலாக் போல, என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இருக்குற ஒன்னை பாத்துக்கவே நேரம் இல்லை, இதுல இன்னும் 2, 3 வெச்சிக்கிட்டா அப்புறம் யார் உதை  வாங்குறது. (சத்தியமா நான் பிலாக்கைதான் சொன்னேன்) 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல், நாமக்குதான் எந்த ஸ்டைல்  ஒத்துவருதுனு  இன்னும் கண்டுபிடிக்க முடியல

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம்  இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம். தொடர்ந்து வந்து படிச்சு தெரிஞ்சுக்குங்க.

சரி, கடைசியா யாருக்கு மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போட்டு வெட்ட கூப்பிடலாம், Sorry, தொடர்பதிவு எழுத கூப்பிடுலாம்னா,



First, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு

அடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்

அப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.

கண்ணுகளா மேடைக்கு வாங்க.....

டிஸ்கி 2: எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!

Monday, July 5, 2010

நான் இந்தியன் அல்ல! - தொடர்பதிவு


தொடர்பதிவுக்கு அழைத்த ரமெஷுக்கு நன்றி. அவர் தந்த தலைப்பு "நான் இந்தியன் அல்ல" அதாவது, நான் ஒரு வெளிநாட்டுக்காரன். சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றேன். என் பார்வைல இந்தியா எப்படி இருக்கும். இதுதான் பதிவுக்கான கரு. இந்த கருவை கொண்டு பல பதிவுகளை போடலாம், பின் அதுவே ஒரு பெரிய தொடர் பதிவாக போய்விடும். அதனால், ஒரு சில விஷயங்களை ஒரு பயணகட்டுரையாக பதிவு செய்து உள்ளேன்.


"நான் இந்தியன் அல்ல"

வாண்க்கமுங்க, நான் தான் சைக்கிள் ஜாக்சனுங்க. இந்தியாக்கி நான் போய்ட்டு வந்தான். நம்க்கு தமிள் கொஞ்சம்தான் வரும் so நெம்மல் friends பதிவர்கள் help கேட்க மிடியுதானு பார்துச்சு. ஆனா, அவங்க blog போய் பார்த்தா,

1. ரமெஷ் - இந்த ஆள் சினிமா ரொம்ப பாக்குது. so, நம்கு ஊர் சுத்திகாட்ட டைம் கிடையாது
2. பட்டாபட்டி -எழுதுன பதிவைவிட கமெண்ட் overaa வருது. அத reply பண்ணவே டைம் போதாது
3. வெங்கட் - சாரி, இவர் பிஸியோ பிஸி மனைவிக்கு புடவை எடுக்க போகனும், பசங்களுக்கு homework செய்யனும்.
4.பெயர் சொல்ல விருப்பமில்லை - பாவம் பொண்ணு கேட்குற கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் இல்லை
5. அனு - வெங்கிய கலாய்கரதே Full Time Job, நம்கி Appointment தராது
6. ப்ரியமுடன் வஸந்த் - ஒரு தொடர்பதிவுக்கு அல்லாரையும் மாட்டிவிட்டுச்சி, பதிவுல்கம் இத அடிக்க தேடுது, So நம்கூட வராது

(வெளிநாட்டு தமிழ் தொடர்ந்து எழுத கடினமாக இருப்பதால், நம் தமிழிலேயே இனி தொடருவோம்)

அதனால் இவங்களை எல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நானே நேரடியாக சென்று பார்த்தேன்.



முதலில் எங்கள் நாட்டில் இல்லாத ஆட்டோவில் ஏறி ஒரு கோவிலுக்கு போனேன். நல்லா பெயர் வெச்சாங்கையா, ஆட்டோனு ஒரே ஆட்டோ ஆட்டுனு ஆட்டி எடுத்துட்டான். கிடைக்கிற சந்துல, 2 பஸ்க்கு நடுவுலலாம் ஓட்டுராங்க. ஒரு வழியா உயிர்பிழைத்து கோவிலுக்கு போனேன்.
இந்த நாட்டின் கோவில்கள் மிக அருமையான கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை பார்த்து வியந்தேன். அவற்றை சரியாக பாராமரிக்க வேண்டும். அங்கு வரும் பெண்களும் அவர்களின் உடையும் வண்ணமயம்.

இந்த ஆட்டோவே வேணாம் சாமினு, அடுத்து பேருந்தில் கடற்கரைக்கு போனேன்.ஏதோ மாநகர பேரூந்தாம்ல இதுல ஏறி உட்கார்ந்தா ஏதோ ஹெலிகாப்டர்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது. நீங்க வேற பெருசா கற்பனை பண்ண வேண்டாம், நான் அதோட ஓட்டை உடைச்சல் சத்தத்தை சொன்னேன். பக்கத்துல இருந்த புண்ணியவான் நான் அவர் வீட்டு தலையணை மாதிரி நல்லா என் தோள் ல சாஞ்சு தூங்குறார். இன்னும் என்னடானா இந்த மாதிரி பஸ்ல மனிஷனை ஏத்திட்டு போறதே பெருசு போதாததுக்கு பஸ் மேல சைக்கிள், சாமான்கள், மூட்டை இன்னும் எதைஎதையோ ஏத்துறாங்க.
ஆனா இந்த மெரீனா கடற்கரை, எவ்வளவு பெருசு! எவ்வளவு கூட்டம்! எவ்வளவு குப்பை! குப்பைத்தொட்டியை தவிர எல்லா இடத்திலும் குப்பை இருக்கு.

அடுத்து மைசூருக்கு போனேன்.  உலகதுலயே அதிக Employers இருக்குற நிறுவனம்னு பெருமை உள்ள ரயில்ல பயணம், உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இத பத்தி சொல்லியே ஆகணும். இது தான் இந்த நாட்டிலேயே வேகமா போகும் வாகனமாம். நடுவுல டிரைவருக்கு வழி மறந்துபோச்சானு தெரியலை. அங்க அங்க அரை மணிநேரம் நிருத்திபுடராருயா! சிக்னல் கிடைகலையாம். இதுல பான் பராக் நாற்றம் வேற வண்டி பூரா. நாங்க எங்க ஊருல இந்திய டீயை விரும்பி குடிப்போம் அந்த நினைப்புல ரயில்ல விற்கிர டீயை குடிச்சா, வாய்ல வைக்க முடியல. கிட்டதட்ட 3 மணிநேரம் லேட்டா போய் சேர்ந்தேன் . ஆனா, இந்த மைசூரு அரண்மனை அருமைங்க. என்னமா வாழ்ந்து இருக்காருயா அந்த மஹாராஜா. Climate உம் நல்லா இருந்தது.

அடுத்து அங்க இருந்து ஆக்ரா போனேன், ஒரு கார்ல ஏறி தாஜ்மகாலுக்கு போனேன். என்னா டிராபிக்பா. வண்டி நத்தை போல ஊருது. அங்க அங்க டிராபிக் போலிசு வண்டிய நிறுத்தி பணம் வாங்குறார். இது இங்க வழக்கமாம் (மாமூலாம்). அடிக்குற வெயில்ல Non Ac கார்ல போனா நீங்க கருவாடுதான். ஆனாலும், அந்த பெரிய ரோடை நல்லா மெயின்டேய்ன் பண்ணுறாங்கப்பா....

ஆணிய புடுங்க வேணாம்னுட்டு, நடந்தா - அய்யோ, பிளாட்பாரத்தை கானோம். எல்லாத்துலயும் கடை போட்டு இருக்காங்க. நீங்க இங்க நடக்கும்போது கவனம் கொள்ளவேண்டியது என்னனா முதல்ல லாரி, பிறகு பஸ், பிறகு கார், பிறகு பைக் எல்லாத்துக்கும் வழிவிட்டுட்டு பிறகே நீங்க போகனும். என்னாது? டிராபிக் சிக்னல்லா! அதை பார்த்து போனா உங்களுக்கு சங்குதான்.

ஆனா, தெரு ஓரமா இருக்குற சாப்பாட்டு கடைல கூட்டம் இருக்கு. ஏழைல இருந்து எல்லாதரப்பு மக்களும் சாப்பிடுறாங்க. விலையும் ரொம்ப குறைவு. ருசியும் அருமை. இந்த நாடு எல்லா துறைகளிலும் வேகமாக முன்னெறிவருகிறது. மக்களின் உழைப்பும், அப்துல் கலாம் போன்ற அறிவாளிகளும் இணைந்து விரைவில் இதை உலகின் பெரிய வல்லரசாக மாற்றுவர். கண்டிப்பாக படங்களில் காட்டுவது போல இந்தியா கிடையாது 20% அப்படி இருந்தால் 80% நன்றாக முன்னேறியுள்ளது. சிறு மாற்றங்களையும், சில திருத்தங்களையும் செய்தால் இந்தியா அழகான, வலிமையான நாடு.


டிப்ஸ்:
1. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், இந்தியாவில் பிரதமர் பதவியை எளிதாக அடையலாம். அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
2. மேலும் இங்கு எந்த ஒரு பதவியையும் அடைய நீங்கள் ஒரு அரசியல்வாதியின் வாரிசாகஇருக்க வேண்டும்
3. இல்லையெனில், வெட்டியாய் இதை போல எழுதியும், பேசியும் மட்டுமே வாழ்நாளை முடிக்க வேண்டும்.


இந்த 3 க்கும் நீங்கள் உடன்பட்டால் - நீங்கள் "இந்தியர்" ஆக தகுதி உண்டு

ஜெய் ஹிந்த்!

டிஸ்கி: இதில் சொல்லிய கருத்துக்கள், பெரும்பாலும் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்து சென்ற என் வெளிநாட்டு நண்பர்கள் சொல்லியது.

அடுத்து தொடர்பதிவுக்கு வருபவர் - "பெயர் சொல்ல விருப்பமில்லை"
கரு - கடவுள் ஒரு வாரம் லீவில் செல்கிறார், நீங்கள் அவர் பொறுப்பை ஏற்றால் என்ன என்ன செய்வீர்கள்?
தலைப்பு - நான் கடவுள்

கலக்குங்க......