Cricket Countdown....

Saturday, July 31, 2010

அமெரிக்கன் சாப்ஸி



                       நானும் என் நண்பனும் அலுவலக வேலை விஷயமாக பாண்டிசேரியில் இரண்டு வாரம் தங்க நேர்ந்தது. தினமும் ஹோட்டலில் தான் சாப்பிடவேண்டும். அங்கு புதிதாய் திறந்த ஒரு செட்டிநாடு  ஹோட்டலை தேர்ந்து எடுத்து தினமும் புது புது ஐட்டம் ஆக சாப்பிடுவது என முடிவுசெய்தோம். கம்பணி காசுதான் அதனால் செலவு பற்றி கவலை இல்லை. ( ஏன்னா, கம்பனி சொத்து ஆளுக்கு, ஒரு குத்து - என்பது எங்கள் பாலிசி)

ஒவ்வொரு நாளும் பிரியாணி, கீமா தோசை, செட்டிநாடு முட்டை கறி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ் என வெளுத்து கட்டினோம்
ஊருக்கு கிளம்ப இன்னும் 2 நாட்களே இருக்க, அன்றும் அதே ஹோட்டலுக்கு சென்றோம். அன்று மெனு கார்டில் AMERICAN CHOPSUEY என ஒரு ஐட்டம் கண்ணில் பட அதை TRY செய்யலாம் என, சர்வரை அழைத்தோம்.

சர்வர்:     என்ன சார் சாப்பிடுறீங்க
நான்:       ரெண்டு AMERICAN CHOPSUEY
சர்வர்:     ( எங்களை ஒருமாதிரியாக பார்த்தவாரே) ரெண்டா சார்!
நான்:        ஆமாம், சரி அது எப்படி இருக்கும்
சர்வர்:      நூடுல்ஸ் மாதிரிதான் சார், கூடவே முந்திரி, FRUITS எல்லாம் போட்டு
                   இருப்பாங்க. VEG ஆ NON VEG ஆ சார்.

நான்:        எனக்கு VEG AMERICAN CHOPSUEY
என் நண்பன்: ரிஸ்க் எடுக்குறது எல்லாம் நமக்கு தான் ரஸ்க்கு  
                           சாப்பிடறமாதிரி என்று சொல்லி கொண்டே எனக்கு NON VEG
சர்வர்:     ஓகே சார் (என்று சென்றுவிட்டார்)

நான், என் நண்பனிடம் "டேய், அந்த சர்வர் லுக்கே சரியில்லை. உனக்கு NON VEG அவசியம் தானா? ஏதும் பிரச்சினை ஆகப்போகுது"
அதற்கு அவன், "தல, நாம தினமும் பிரச்சினைய போர்வையா போர்த்தி தூங்குறவுங்க. ஒன்னும் ஆகாது".

 சரியென, காத்திருந்தோம்.......

வந்ததுயா AMERICAN CHOPSUEY அத பார்த்து நாங்க ரெண்டு பேரும்  பேஜார் ஆகிட்டோம்.

எனக்கு VEG AMERICAN CHOPSUEY , ஒரு PLATE FULL ஆ (நிஜமாவே ஒரு பெரிய PLATE FULL ஆ வழிய வழிய ) நூடுல்ஸ் ஐ போட்டு அதை TOMATTO SAUCE ல மிதக்க விட்டு FRUITS , முந்திரி எல்லாம் கலந்து குடுத்தங்க.

எனக்கு பரவாயில்லை என் நண்பனுக்கு NON VEG AMERICAN CHOPSUEY . அவனுக்கும் நூடுல்ஸ் ஐ SAUCE ல மிதக்க விட்டு சிக்கன் பீஸ் எல்லாம் போட்டு எல்லாத்துக்கும் மேல் ஒரு முழு ஆப் பாயில் ஆம்லட் ஐ வச்சி கொடுத்தாங்க.



சத்தியமா என்னால ஒரு PLATE AMERICAN CHOPSUEY யை சாப்பிட முடியாது. இப்போதான் புரிஞ்சது எதுக்கு அந்த சர்வர் அப்படி ஒரு லுக்கு விட்டார்னு.

சரி நூட்லஸ் தான சாப்பிட்டுடலாம்னு எடுத்து வாயில வைத்தால், நூடுல்ஸ் போல SOFT ஆக இல்லாமல் முறுக்கு போல மொறு மொறுனு இருந்தது. சர்வரிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே நக்கலாக FRIED NOODLES அப்படிதான் இருக்கும் என்கிறார்.

அதனால் மக்களே, என்னதான் ஓசில கிடைக்குதுனாலும் இதற்கு முன் தெரியாததை சாப்பிடதிங்க, அப்படியே சாப்பிடறதா இருந்தாலும் AMERICAN CHOPSUEY சாப்பிடாதிங்க.

டிஸ்கி;
பிரச்சனைய போர்வையாக போர்த்தி தூங்குவதாக சொன்ன என் நண்பன் அன்று இரவு எல்லாம் தூங்க முடியாமல் அவஸ்தை பட்டது வேறு கதை...



மன்னிக்கவும்

மன்னிக்கவும், இந்த பதிவில் சில Error வருவதால் மறுபடி புதியதாக பதிவு செய்துள்ளேன். உங்கள் ஓட்டுக்களையும் கமெண்ட்களையும் அங்கு இடவும்.

http://arunprasathgs.blogspot.com/2010/07/blog-post_31.html

நன்றி!

Thursday, July 29, 2010

மைக் மோகன்!


நடிகர் " Mike " மோகன்.,
ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போறார்.
ஆனா அங்கே யாருமே
இவரை கண்டுக்கலை.

வந்து உட்கார்தவருக்கு ஒரு
Juice கொடுக்கலை.
ஏன் ஒரு பீஸ் Cake கூட வரலை.

அவருக்கு ஒரே பீலிங்கா போச்சு..,

அவர் பீலிங் ஆயிட்டா உடனே
பாட ஆரம்பிச்சுடுவாரே..
( எத்தனை தமிழ் சினிமால பார்த்திருக்கோம்.. )

மேடையில இருந்த
ஆர்க்கெஸ்ட்ராகாரன் கிட்ட
மைக்கை பிடுங்கி
படுத்தினார் பாருங்க..
Sorry, பாடினார் பாருங்க..

"மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

Cake தா, Cake தா"



Monday, July 26, 2010

A for அவஸ்த்தை



அருண்பிரசாத் னு எனக்கு பேரை வெச்சாலும் வெச்சாங்க, நான் படுற அவஸ்த்தை இருக்குதே, சொல்லி மாளாது. இந்த அவஸ்த்தை சின்ன வயசுலயே ஆரம்பிச்சிடுச்சி, 

ஸ்கூல்ல Attendanceல முதல் 4 பேருக்குள்ள வந்திடும், அதனால எடுத்தவுடனே வாத்தியாருங்க நம்மளதான் கும்முவாங்க. இதுல எங்க Class teacher மாத்தி யோசிக்கிறன்னு எல்லோரும் Alphabetical Orderல உட்காருங்கனார். கடைசி பெஞ்சுல சுகமா தூங்குன என்னை தாக்கி, சாரி, தூக்கி மொத பெஞ்சுல போட்டுடாங்க. 

அடுத்து, பரிட்சை ஹால்ல முதல் பெஞ்சுல உட்காரனும். பாத்துக்க வர்ற வாத்தி நமக்கு முன்னாடி நந்தி மாதிரி பெஞ்சு போட்டு உட்கார்ந்துடுவார். அந்த பக்கம் இந்தபக்கம் திரும்பமுடியாது. (அட, எல்லாரும் நல்லா பரிட்சை எழுதறாங்களானு பாக்கதாங்க)

உட்கார ஆளு சும்மா இருப்பாரா, நாம தீவிரமா ?! யோசிச்சிகிட்டு இருக்கும்போது (யாரது முழிக்கும்போதுனு படிக்கிறது, சின்னபுள்ளதனமா) இவரு “என்ன தம்பி பேப்பர் ரொம்ப கஷ்டமா?” ம்பார். (ஆமானு சொன்னா ஆன்சர் சொல்ல போறாரா? இல்லை Question மாத்த போறாரா). நாமளும் இளிச்சிட்டே ”பார்முலா யோசிக்கிறேன் சார்” னு (தமிழ் பரிட்சைல கூடதான்) புழுகனும்

அப்புறம், ஒருமுறை தமிழ் வாத்தியார் Class Teacherஆ வந்தார். வந்தவர் அதிரடியா எல்லோரும் நான் சொல்லுற வரிசைல தான் உட்காரனும்னு சொல்ல, யப்பா முதல் பெஞ்சுல இருந்து எஸ்கெப்னு நினைச்சா, தலைவர் “எல்லோரும் அகர வரிசைல உட்காருங்க”னிட்டார். மறுபடியும் வட போச்சு. பக்கத்துல இருந்த பாரதி பையன் எஸ்கேப். சரி போறான், நம்ம இலக்கியா  பொண்ணு பக்கதுல உட்காரும்னு சந்தோஷபட்டா, புள்ளைங்கள தனியா உட்கார வெச்சிட்டார்.

ஒரு வழியா, கஷ்டப்பட்டு சொந்த முயற்சியில் (படிச்சிதான்னு சொன்னா நம்பவா போறீங்க) காலெஜ் வந்தாச்சு. ஆனாலும் இந்த பெயர் பிரச்சினை விடல. Practical கிளாஸ்னு சொல்லி Attendance படி காலங்காத்தால 6.30 மணிக்கெல்லாம் வந்து attend பண்ணுங்கனு சொல்லிட்டாங்க. ராத்திரி பூரா குரூப் ஸ்டடிஸ் செஞ்சிட்டு (எதை படிச்சோம்னு கேட்க கூடாது) விடியற்காலை 6 மணிக்கு எழுந்துக்கறது எவ்வளவு கஷ்டம்னு பசங்களுக்குதான் தெரியும்.


போகுதுனு பொருத்துக்கிட்டா, இந்த Viva-Voce கேட்குறேனு வர்ற External வாத்தி தனக்கு எல்லாம் தெரியும்னு எங்க Mam முன்னாடி சீன் போட முதல் ஆளா வர்ற நம்மல போட்டு தாக்கு தாக்குனு தாக்கு வாங்க. மார்க்கு சராமாரியா அடிவாங்கும். இதை பார்த்து பயந்து மேனேஜ்மெண்ட் External ஐ convince (கொடுக்க வேண்டியத கொடுத்துதான்) பண்ணி பின்னாடி வர்றவங்களுக்கு மார்க் போடவெப்பாங்க.

இப்படி பல சா(சோ)தனைகள் இருக்கு, இந்த A வால. அதுக்கு இன்னும் 2 பதிவு  போடலாம் (இன்னும் ரெண்டா? Me பாவம்னு நீங்க சொல்லுறது கேக்குது) இதுக்கு மேல நாம பெயரை மாத்தி என்ன பிரியோஜனம். நாம என்ன டி.ராஜேந்தரா? ஏதோ, நாம பட்ட அவஸ்தைய என் பொண்ணு பட கூடாதுனு அவள் பெயரை "S" ல வெச்சிட்டேன். ங்கொய்யால, எவன் alphabetla உட்காரவெச்சாலும், அகர வரிசைல உட்காரவெச்சாலும் கவலையில்லை.



Thursday, July 22, 2010

பழ (புது)மொழி


என் தம்பி 3வது படித்து கொண்டிருந்தான். நானும் அவனும் ஒரே பள்ளி. (ஒரே கிளாஸானு கேட்டு கமெண்ட் போட தடை)

அரையாண்டு பரிட்சை முடிந்து பள்ளி திறந்த முதல் நாள். அனைத்து பரிட்சை விடைத்தாள்களையும் கொடுத்தார்கள் (அதுதான் காலகாலமா நடக்குதே, லீவு முடிஞ்சு ஸ்கூல் போய் வந்த மொத நாள் வீட்டுல பூசை இல்லைனா தெய்வ குத்தம் ஆகிடுமே!)

என் தம்பி வகுப்பிலிருந்து எனக்கு அழைப்பு, அழைத்தது தமிழ் ஆசிரியை. “நாளை உன் பெற்றோரை அழைத்துவந்து உன் தம்பி விடைதாளை வாங்கி போக சொல்” - வேறு விளக்கங்கள் இல்லை. ( தம்பி கிளாஸ் தமிழ் ஆசிரியை என்னை கூப்பிடுறதும், என் தமிழ் ஆசிரியை என் தம்பியை கூப்பிடுறதும் சகஜம், இதை அவங்க ஒரு விளையாட்டாவே செய்துட்டு இருக்காங்க. இப்பவும்?!)

மறுநாள் என் தந்தை வந்து விடைதாளை வாங்கி சென்றார். மாலை ஒருவித பயத்துடன் நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்றோம்.(முந்தின நாள் கிடைக்க வேண்டிய பூசை, மறுநாள் கண்டிப்பா உண்டுன்னு தயாரா போனோம்)

அப்பா, டென்ஷனாக இருப்பார் என பார்த்தால், என் தம்பியை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

மேட்டர் இதுதான்:

தமிழ் பரிட்சையில் பழமொழிகளை எழுத சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு பழமொழி

“கந்தையானாலும் கசக்கி கட்டு”

அதற்கு என் தம்பி எழுதியது,

தந்தையானாலும் காசாக்கி காட்டு”

(எப்புடி குடும்பமா தமிழ் வளர்க்குறோம்ல, நான் வளர்த்த தமிழை இங்க போய் பாருங்க மக்கா)


Wednesday, July 21, 2010

உதவுங்கள் நண்பர்களே!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ரமெஷ் தன் பதிவில் ஒரு கல்லூரி மாணவனுக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்.

கீழே உள்ள லிங்கில் சென்று படித்து விட்டு, முடிந்தவரை உதவுங்கள் நண்பர்களே!



Monday, July 19, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

டிஸ்கி:
இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை (எப்புடி, டிஸ்கி போட்டு ஆரம்பிச்சிருக்கோம்ல. கொஞ்ம் வில்லங்கமான பதிவுதான்)

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள்.

2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும்.


3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி)

5. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?

6. சரி, Refresh செய்து விடையை பின்னுட்டத்தில் ( Comment Section) பாருங்கள்.



Friday, July 16, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!

தில்லுதுர, சூப்பர் சிங்கர், தில்லாலங்கடி, சீரியல் கில்லர் (இதெல்லாம் பட்டபெயர் இல்லை, இவர் எழுதிய பதிவின் பெயர்) பிரபல பதிவரான (?!?!) வெங்கட் அவர்களை ஒரு வாரமாக காணவில்லை. 


அவரை பற்றிய பய(யோ)டேட்டா:
(கே.ஆர்.பி அண்ணன் மன்னிப்பாராக)

பெயர்                                             : வெங்கட்
தலைவர்                                       : இவர் கட்சில இருக்குறது இவர் மட்டும்தான். இவரே 
                                                               தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர்
                                                               எல்லாம்
துணை தலைவர்கள்                 : ஜனா என்ற நல்லவர்
மேலும் துணைத் தலைவர்கள் : தேடி கொண்டிருக்கிறார்
வயது                                              : சமீபத்தில் Profile ல் இருந்து Date of Birth ஐ 
                                                                எடுத்துட்டாரு (ஆனாலும் 34 னு கண்டுபிடிச்சாச்சு)
தொழில்                                         : பிளாக்கில் மொக்கை போடுவது
பலம்                                                : ஜனா
பலவீனம்                                       : தன் மொக்கையே தன்னை திருப்பி தாக்குவது
நீண்ட கால சாதனைகள்          : தனி ஆளாய் அடி வாங்குவது
சமீபத்திய சாதனைகள்            : உடன் அடிவாங்க Terror - Pandiyan ஐ சேர்த்து கொண்டது
நீண்ட கால எரிச்சல்                  : VKS சங்கம் (V - வெங்கடை K - கலாய்ப்போர் S - சங்கம்)
சமீபத்திய எரிச்சல்                    : தன் கம்பியூட்டரும் தன் கால் ஐ வாரியது
மக்கள்                                            : VKS ல் உள்ளவர்கள் தவிர
சொத்து மதிப்பு                           : 94 Followers, 113 பதிவுகள்
நண்பர்கள்                                    : உலக தமிழர்கள் அனைவரும்னு அவரே சொல்லிக்கிறார்
எதிரிகள்                                      : கண்டிப்பா VKS ல உள்ள 5 பேர் மட்டுமே
ஆசை                                            : மொக்கை வாங்காமல் தப்பிக்க
நிராசை                                        : எப்படி எழுதினாலும் VKS கும்முவது
பாராட்டுக்குரியது                    : எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவது
பயம்                                              : VKS தவிர வேறு எதற்கும் இல்லை
கோபம்                                         : இவர் மனைவியும் இவரை கலாய்ப்பது
காணமல் போனவை               :  சீரியஸ் பதிவுகள்
புதியவை                                     : சுட்ட கவிதைகள்
கருத்து                                          : சூரியனுக்கே டார்ச் அடிக்கிறேனு சொல்லிகொண்டு
                                                          பகலில் டார்ச் உடன் அலைவது
டிஸ்கி: VKS ,VAS பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இங்கு சென்று பார்க்கவும். இவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு VKS சார்பாக கேட்டுகொள்கிறேன். கலாய்க்க ஆள் இல்லாமல் தவிக்கிறோம், தாமதமானால் அனைத்து பதிவர்களையும் கன்னாபின்னாவென கலாய்க்கும் வாய்ப்பு உள்ளதால் சீக்கிரம் கண்டுபிடித்து தந்து கலாய்ப்பில் இருந்து தப்பிக்கவும். பிறகு நீங்களும் தாராளமாக உடன் சேர்ந்து வெங்கடை கலாய்க்கலாம்

Wednesday, July 14, 2010

மோரீஷியஸ் - இல் நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு


மோரீஷியஸ் - இல் நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


காமிரா - சோனி
மாடல் - சைபர் ஷாட் DSC W110
7 .2 மெகா பிக்செல்



மோரிசியஸ்ல் சற்று பெரிய (?!) அலை  வரும் கடற்கரை (இடம்: கிரி கிரிஸ்)

ஒரு தேயிலை தோட்டம் (இடம்: BOIS CHERI )

பிரதோஷ தரிசனம்!

மழை நாளில் சிவன் ஆலய தரிசனம் (இடம் : GANGA THALO )

இது வேறொரு நல்ல பொழுதில் அதே இடம்

சிவன் BACKGROUND இல் வெள்ளை சிவன் (இடம்: GANGA THALO )

மஹா சிவராத்திரியில் நள்ளிரவு 12 மணி சிவன் தரிசனம்

பூக்களால் அருவிக்கு வரவேற்கும் பாதை (இடம்: ROOCHSTER FALLS )

வழியில் இளைப்பாறும் பொழுது எடுத்தது

அருவி மேலிருந்து ஒரு பார்வை (இடம்: ROOCHSTER FALLS )

நீச்சல் குளம் இல்லங்க சத்தியமா கடல் தாங்கோ (இடம்: BLUE BAY )

GABREAL தீவிற்கு போகும்போது டால்பின்களின் வரவேற்பு


இந்த குகையில் எந்த மந்திரவாதியின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ? (இடம்: GIRI GIRIS )

பயம் ஏற்பட்டாலும் இயற்கையின் அழகே தனி தான் (இடம்: CARAMAL FALLS )

Monday, July 12, 2010

ஒலக கோப்பய செயிச்சது ஆறு?

ஒரு வழியாக கால்பந்து உலகக்கோப்பையை ஸ்பெயின் ஜெயிச்சிட்டாங்கப்பா. ஆனா இதுக்கு எல்லாரும் பண்ணாங்க பாருங்க ஒரு அழிச்சாட்டியம், யப்பா தாங்க முடியலை.

ஸ்பெயினும், ஹாலந்தும் ரொம்ப கஷ்டப்பட்டு, பெரிய பெரிய அணிகளான பிரெசில், அர்ஜண்டினா, ஜெர்மனி எல்லாரையும் ஜெயிச்சி இறுதி போட்டிக்கு வந்தா? ஏதோ ஆக்டோபஸ் ஜோசியமாம் அதை பார்த்து ஸ்பெயின் தான் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க.



நம்ம டவுட் என்னாநா:

1. ஆக்டோபஸ் ஜோசியம் உண்மைனா, எல்லா போட்டியையும் இப்படியே நடத்தி இருக்கலாம்ல (கோடி கோடியா செலவு மிச்சம்)
2. அப்ப ஆக்டோபஸையும் சேர்த்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்காக விளையாடி இருக்காங்க (கள்ள ஆட்டம்?)
3. ஆக்டோபஸ் தன் உணவுக்காக ஏதோ ஒரு பெட்டியை திறக்க, அதுல ஸ்பெயின் கொடி இருந்ததால, ஸ்பெயின் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க. யாராவது இந்தியா கொடி அதுல வெச்சிருந்தா, இந்தியா ஜெயிச்சிருக்கும்ல!
4. சரி, கொடிக்கு பதிலா, ஒரு ஸ்பெயின் வீரரையும், ஒரு ஹாலந்து வீரரையும் தொட்டில இறக்கிவிட்டு இருந்தா, ஆக்டோபஸ்க்கும் நல்ல சோறு கிடைச்சிருக்கும், அந்த நாட்டுக்கும் புதுசா நல்ல Players கிடைச்சிருப்பாங்க
5. கடைசியா என் டவுடுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க, உலககோப்பையை ஜெயிச்சது ஸ்பெயினா? ஆக்டோபஸா?


ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம், இந்த உலக கோப்பை இறுதி போட்டில ஸ்பெயின் Famous ஆச்சோ இல்லையோ, இந்த ஆக்டோபஸ் உலக Famous ஆகிடுச்சு.

சரியாருக்காவது உங்க பிளாக் Famous ஆகுமானு தெரிஞ்சுகனுமா? என்கிட்ட முதலை ஜோசியம் இருக்கு, ஆனா நீங்க அது வாயில கைவிட்டு பார்க்கனும். கடிச்சா நீங்க கண்டிப்பா Famous.

Friday, July 9, 2010

பிளாக்குக்கு சூனியம்

போன வாரம், நம்ம சிரிப்பு போலீசிடம் இருந்து அவசர அழைப்பு.

”தல, உன் பிளாக்குல யாரோ சூனியம் வச்சிட்டாங்க. இந்தியாவுல எந்த ஆபிஸ்லயும் உன் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன்குது.


இந்த Error மெசேஜ் வருது” 

சொன்னது போலீஸ் ஆச்சே,  சினிமா படத்தை மிஸ் பண்ணாலும் பண்ணுவாரு  இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டாரு.




















இந்த படத்தை வேற அனுப்பி வெச்சாரு. என்ன பிரச்சனைனா, நம்ம பிளாக் Firewall இருக்குற, IE உபயோகிக்கிற எந்த ஆபிஸ்லயும் ஓப்பன் ஆகலை. நம்ம ஆளுங்க ஆபிஸ்ல வேலை செய்யுறதவிட பிளாக் படிக்கிற நேரம்தான் அதிகம். ( உன் ஆபிஸ்ல நீ செய்யுற வேலை அது, நாங்க ரொம்ப பிஸி னு யாரும் கமெண்ட் போட கூடாது). இப்படி இருந்தா நம்ம பிளாக்குக்கு யாரும் வரமாட்டாங்களே! (ஏற்கனவே, யாரும் வர்றது இல்லை)

"எடுக்கறேன், செய்வினைய எடுக்கறேன்"

போலீசும் நானும் பல விதங்களில் துப்பறிஞ்சோம். Template மாத்தினேன், எல்லா Widgets ஐயும் தூக்கியும் ஓப்பன் ஆகலை. ரொம்ப பெரிய சூனியம் போல இருக்குனு அப்படியே ஷாக் ஆகிடேன். எல்லாம் போச்சா! வேற பிளாக் ஓப்பன் பண்ண வேண்டியதுதான்னு முடிவு பண்ணி பழைய பதிவுகளை Back up எடுக்க ஆரம்பிச்சாச்சு (அதுக்காக, பிளாக் எழுதுறத நிறுத்தி உங்களை நிம்மதியா இருக்க விட முடியுமா?). எதுக்கும் ஒருமுறை நம்ம கூகிள் ஆண்டவரை உதவிக்கு கூப்பிட்டு பார்த்தேன். 10 நிமிஷத்துல பிரச்சினை தீர்ந்தது.

அவர் இதைதான் செய்ய சொன்னார்:

1. உங்கள் Dashboard லிருந்து, Design ஐ சொடுக்கவும்
2. அதில் உள்ள Edit HTML ஐ Click செய்து அங்கு வரும் "Expand Widget Templates" ஐ டிக் செய்யவும்
3. கிழே உள்ள கோடிங்குகளில்  script type='text/javascript' ஐ தேடி கண்டுபிடிக்கவும்
4. அதில்  defer='defer' என்பதை script defer='defer' type='text/javascript' இவ்வாறு சேர்க்கவும்
5. "Save Template" ஐ சொடுக்கிவிட்டு, வெளியேறவும்

பிரச்சினை முடிந்தது.

என்ன பிரச்சினைனா, இது உலகளவில் Microsoft IE ல இருக்குற பூச்சியாம் (அதாங்க Bug ஆம்). பழைய IE version ல இந்த பிராப்ளம் இருக்காம். அதை சரிப்பண்ணத்தான் இந்த கோடிங்.

நாம எழுத கூடாதுனு சர்வதேச அளவுல பிரச்சினை பண்ணுறாங்கப்பா. இந்த பயபுள்ள பில் கேட்ஸ் நம்மகூட சின்னபுள்ளதனமா விளையாடுறான்யா....

இப்படி சர்வதேச அளவுல நாம எழுதுறத தடுக்கறாங்களே, ஒருவேளை நானும் பிரபல பதிவர் ஆகிட்டனோ?

தல, நீ சொல்லேன்.......

Monday, July 5, 2010

நான் இந்தியன் அல்ல! - தொடர்பதிவு


தொடர்பதிவுக்கு அழைத்த ரமெஷுக்கு நன்றி. அவர் தந்த தலைப்பு "நான் இந்தியன் அல்ல" அதாவது, நான் ஒரு வெளிநாட்டுக்காரன். சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றேன். என் பார்வைல இந்தியா எப்படி இருக்கும். இதுதான் பதிவுக்கான கரு. இந்த கருவை கொண்டு பல பதிவுகளை போடலாம், பின் அதுவே ஒரு பெரிய தொடர் பதிவாக போய்விடும். அதனால், ஒரு சில விஷயங்களை ஒரு பயணகட்டுரையாக பதிவு செய்து உள்ளேன்.


"நான் இந்தியன் அல்ல"

வாண்க்கமுங்க, நான் தான் சைக்கிள் ஜாக்சனுங்க. இந்தியாக்கி நான் போய்ட்டு வந்தான். நம்க்கு தமிள் கொஞ்சம்தான் வரும் so நெம்மல் friends பதிவர்கள் help கேட்க மிடியுதானு பார்துச்சு. ஆனா, அவங்க blog போய் பார்த்தா,

1. ரமெஷ் - இந்த ஆள் சினிமா ரொம்ப பாக்குது. so, நம்கு ஊர் சுத்திகாட்ட டைம் கிடையாது
2. பட்டாபட்டி -எழுதுன பதிவைவிட கமெண்ட் overaa வருது. அத reply பண்ணவே டைம் போதாது
3. வெங்கட் - சாரி, இவர் பிஸியோ பிஸி மனைவிக்கு புடவை எடுக்க போகனும், பசங்களுக்கு homework செய்யனும்.
4.பெயர் சொல்ல விருப்பமில்லை - பாவம் பொண்ணு கேட்குற கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் இல்லை
5. அனு - வெங்கிய கலாய்கரதே Full Time Job, நம்கி Appointment தராது
6. ப்ரியமுடன் வஸந்த் - ஒரு தொடர்பதிவுக்கு அல்லாரையும் மாட்டிவிட்டுச்சி, பதிவுல்கம் இத அடிக்க தேடுது, So நம்கூட வராது

(வெளிநாட்டு தமிழ் தொடர்ந்து எழுத கடினமாக இருப்பதால், நம் தமிழிலேயே இனி தொடருவோம்)

அதனால் இவங்களை எல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நானே நேரடியாக சென்று பார்த்தேன்.



முதலில் எங்கள் நாட்டில் இல்லாத ஆட்டோவில் ஏறி ஒரு கோவிலுக்கு போனேன். நல்லா பெயர் வெச்சாங்கையா, ஆட்டோனு ஒரே ஆட்டோ ஆட்டுனு ஆட்டி எடுத்துட்டான். கிடைக்கிற சந்துல, 2 பஸ்க்கு நடுவுலலாம் ஓட்டுராங்க. ஒரு வழியா உயிர்பிழைத்து கோவிலுக்கு போனேன்.
இந்த நாட்டின் கோவில்கள் மிக அருமையான கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை பார்த்து வியந்தேன். அவற்றை சரியாக பாராமரிக்க வேண்டும். அங்கு வரும் பெண்களும் அவர்களின் உடையும் வண்ணமயம்.

இந்த ஆட்டோவே வேணாம் சாமினு, அடுத்து பேருந்தில் கடற்கரைக்கு போனேன்.ஏதோ மாநகர பேரூந்தாம்ல இதுல ஏறி உட்கார்ந்தா ஏதோ ஹெலிகாப்டர்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது. நீங்க வேற பெருசா கற்பனை பண்ண வேண்டாம், நான் அதோட ஓட்டை உடைச்சல் சத்தத்தை சொன்னேன். பக்கத்துல இருந்த புண்ணியவான் நான் அவர் வீட்டு தலையணை மாதிரி நல்லா என் தோள் ல சாஞ்சு தூங்குறார். இன்னும் என்னடானா இந்த மாதிரி பஸ்ல மனிஷனை ஏத்திட்டு போறதே பெருசு போதாததுக்கு பஸ் மேல சைக்கிள், சாமான்கள், மூட்டை இன்னும் எதைஎதையோ ஏத்துறாங்க.
ஆனா இந்த மெரீனா கடற்கரை, எவ்வளவு பெருசு! எவ்வளவு கூட்டம்! எவ்வளவு குப்பை! குப்பைத்தொட்டியை தவிர எல்லா இடத்திலும் குப்பை இருக்கு.

அடுத்து மைசூருக்கு போனேன்.  உலகதுலயே அதிக Employers இருக்குற நிறுவனம்னு பெருமை உள்ள ரயில்ல பயணம், உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இத பத்தி சொல்லியே ஆகணும். இது தான் இந்த நாட்டிலேயே வேகமா போகும் வாகனமாம். நடுவுல டிரைவருக்கு வழி மறந்துபோச்சானு தெரியலை. அங்க அங்க அரை மணிநேரம் நிருத்திபுடராருயா! சிக்னல் கிடைகலையாம். இதுல பான் பராக் நாற்றம் வேற வண்டி பூரா. நாங்க எங்க ஊருல இந்திய டீயை விரும்பி குடிப்போம் அந்த நினைப்புல ரயில்ல விற்கிர டீயை குடிச்சா, வாய்ல வைக்க முடியல. கிட்டதட்ட 3 மணிநேரம் லேட்டா போய் சேர்ந்தேன் . ஆனா, இந்த மைசூரு அரண்மனை அருமைங்க. என்னமா வாழ்ந்து இருக்காருயா அந்த மஹாராஜா. Climate உம் நல்லா இருந்தது.

அடுத்து அங்க இருந்து ஆக்ரா போனேன், ஒரு கார்ல ஏறி தாஜ்மகாலுக்கு போனேன். என்னா டிராபிக்பா. வண்டி நத்தை போல ஊருது. அங்க அங்க டிராபிக் போலிசு வண்டிய நிறுத்தி பணம் வாங்குறார். இது இங்க வழக்கமாம் (மாமூலாம்). அடிக்குற வெயில்ல Non Ac கார்ல போனா நீங்க கருவாடுதான். ஆனாலும், அந்த பெரிய ரோடை நல்லா மெயின்டேய்ன் பண்ணுறாங்கப்பா....

ஆணிய புடுங்க வேணாம்னுட்டு, நடந்தா - அய்யோ, பிளாட்பாரத்தை கானோம். எல்லாத்துலயும் கடை போட்டு இருக்காங்க. நீங்க இங்க நடக்கும்போது கவனம் கொள்ளவேண்டியது என்னனா முதல்ல லாரி, பிறகு பஸ், பிறகு கார், பிறகு பைக் எல்லாத்துக்கும் வழிவிட்டுட்டு பிறகே நீங்க போகனும். என்னாது? டிராபிக் சிக்னல்லா! அதை பார்த்து போனா உங்களுக்கு சங்குதான்.

ஆனா, தெரு ஓரமா இருக்குற சாப்பாட்டு கடைல கூட்டம் இருக்கு. ஏழைல இருந்து எல்லாதரப்பு மக்களும் சாப்பிடுறாங்க. விலையும் ரொம்ப குறைவு. ருசியும் அருமை. இந்த நாடு எல்லா துறைகளிலும் வேகமாக முன்னெறிவருகிறது. மக்களின் உழைப்பும், அப்துல் கலாம் போன்ற அறிவாளிகளும் இணைந்து விரைவில் இதை உலகின் பெரிய வல்லரசாக மாற்றுவர். கண்டிப்பாக படங்களில் காட்டுவது போல இந்தியா கிடையாது 20% அப்படி இருந்தால் 80% நன்றாக முன்னேறியுள்ளது. சிறு மாற்றங்களையும், சில திருத்தங்களையும் செய்தால் இந்தியா அழகான, வலிமையான நாடு.


டிப்ஸ்:
1. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், இந்தியாவில் பிரதமர் பதவியை எளிதாக அடையலாம். அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
2. மேலும் இங்கு எந்த ஒரு பதவியையும் அடைய நீங்கள் ஒரு அரசியல்வாதியின் வாரிசாகஇருக்க வேண்டும்
3. இல்லையெனில், வெட்டியாய் இதை போல எழுதியும், பேசியும் மட்டுமே வாழ்நாளை முடிக்க வேண்டும்.


இந்த 3 க்கும் நீங்கள் உடன்பட்டால் - நீங்கள் "இந்தியர்" ஆக தகுதி உண்டு

ஜெய் ஹிந்த்!

டிஸ்கி: இதில் சொல்லிய கருத்துக்கள், பெரும்பாலும் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்து சென்ற என் வெளிநாட்டு நண்பர்கள் சொல்லியது.

அடுத்து தொடர்பதிவுக்கு வருபவர் - "பெயர் சொல்ல விருப்பமில்லை"
கரு - கடவுள் ஒரு வாரம் லீவில் செல்கிறார், நீங்கள் அவர் பொறுப்பை ஏற்றால் என்ன என்ன செய்வீர்கள்?
தலைப்பு - நான் கடவுள்

கலக்குங்க......


Friday, July 2, 2010

ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்

நண்பர்களே


ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்………………………………..



    ----- ஒரு சின்ன சோதனை, உங்கள் கண் பார்வைக்கு. உங்களுக்கு இது பயன் தரலாம். விதிமுறைகளைக் கவனமாக பின்பற்றவும்....
   
1.
  முதலில் ஒரு கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள்.
2. 
  உங்கள் எலியை (mouse) சிவப்பு நிறத்தில் உள்ள இந்த  * குறிக்கு நகர்த்தி செல்லுங்கள் .    
3.  
இந்த சிவப்பு * குறியின் மீது வலப்பக்க சொடுக்கு (RIGHT lick) புரியுங்கள்.  
4.  
பிறகு எல்லாவற்றையும் தெரிவு (select all) செய்யுங்கள்.
5.  
இனிபரிசோதனையின் முடிவைக் காண்க.
  அட 
யாராச்சும் எதாச்சும் பண்ண சொன்னா அப்படியே பண்ணிடுறதா? மேல் மாடி வேலை செய்யுறதே இல்லையாக்கும் ;)
கண் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, மூளையிலதான் பிரச்சனை கெக்கபுக்க கெக்கபுக்க .. 
  சரி, போதும் வேலைய பாருங்க, நானும் ஏமாந்தவன் தான்....