Cricket Countdown....

Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Tuesday, December 7, 2010

வலைச்சர அனுபவம்....

ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.  நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)

எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.

சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய்  நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....

பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.

டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....

சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் -  கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!



Tuesday, August 17, 2010

ஐம்பது தோழர்கள்....


சேவாக்குக்கு வேணும்னா 100 ஐ குடுக்காம தடுக்கலாம்! ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது. (அது சேவாக்! நீயும் அவரும் ஒண்ணா?)



என்னையும் என் எழுத்துகளையும் ரசித்து (?!?!) ஆதரவு தரும் நீங்கள் இல்லாமல் இது சாத்தியபட்டு இருக்காது (பின்னே, நீயே வா உன்னை Follow பண்ணிக்க முடியும்)


ரசிக்க சிலர் follow பண்ணுறாங்க,  சிரிக்க சிலர் follow பண்ணுறாங்க ஆனா, கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு. ஆனா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எழுத முயற்சி செஞ்சிருக்கேனு நம்புறேன். (காதுல ரத்தம் வர்றது எங்களுக்குதான் தெரியும்)

சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery  வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்!

அப்பாடி, ஒரு வழியா ஒரு பதிவு தேத்தியாச்சி. ஆங்... சொல்ல மறந்துடேனே, என் ரத்தத்தின் ரத்தமான உங்கள் அனைவருக்கும்



நன்றிங்கோ! நன்றிங்கோ!! நன்றிங்கோ!!!


டிஸ்கி: நான் எந்த கட்சிக்காரனும் இல்லை, நம்ம போஸ்ட்டுக்கு பல பிரபலங்கள் மறைமுகமா follow பண்ணுறாங்க. அதுல இவங்களும் ஒன்னு

விடை: டெரர், வெங்கட், செல்வா - விடையை சரியா சொல்லிட்டாங்க. ஆமாம், எனக்கு நானே Follower. காரணம்,
1. அப்படி இருந்தா தான் நம்ம Followersக்கு Message அனுப்ப முடியும்.
2. Dashboard ல சரியா update ஆகுதானு பாக்க முடியும். சில சமயம் ஆகுறது   இல்லை. check பண்ண உபயோகப்படும்
3. உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணா என்ன தப்பு?



Sunday, June 27, 2010

நன்றி

விளையாட்டாய் வலைப்பூவை ஆரம்பித்து, விளையாட்டை பற்றி எழுதி வந்த  என்னை, தன் நையாண்டி கலந்த எனர்ஜி பூஸ்டர் எழுத்துக்களால் கவர்ந்து என் எழுத்தை திசை திருப்பியவர் வெங்கட்.
என்னதான் அவருடைய பதிவுகளை நக்கல் அடித்தாலும், அதற்கு சரியான பதில் சொல்வதோடு என் எழுத்துப்பிழைகளை நாசுக்காக சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்றியவர்.

இன்று, Century போட்ட தன் வலைப்பூவுடன் 10 பதிவு போடவே பகிரதபிரயத்தனப்படும் என் வலைப்பூவையும் திரு.தேவா மூலம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை.

என்னுடைய எழுத்துக்களிலும் ஏதோ உள்ளதாக உணர்ந்து என்னை அறிமுகப்படுத்திய தேவாவிற்கும் என் எழுத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வலைச்சரத்திற்கும் நன்றிகள் பல...


நண்பர்கள் அனு, ரமெஷ், RK, Velu G, KRP, நியோ, தமிழ் சரியாக படிக்க தெரியவில்லையானாலும் பொறுமையாக படிக்கும் என் முதல் ரசிகையான என் மனைவி  போன்றோர் தரும் ஊக்கத்திற்கும் நன்றி.

இந்த வலைச்சர அறிமுகம் எனக்கு குருவி தலையில் வைத்த பனைப்பழம் போல தோன்றினாலும், தொடர்ந்து எழுதுவேன் உங்கள் ஆதரவுடன்.

டிஸ்கி:

இப்படி எழுதியதால் கழக கண்மணிகள் கவலைபட வேண்டாம் வெங்கடை கலாய்ப்பது நிறுத்தப்படமாட்டாது. VKS (வெங்கடை கலாய்ப்போர் சங்கம்) சங்க கொள்கையில் தீவிரமாக இருப்போம்.