Cricket Countdown....

Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, December 22, 2010

கேப்பிரியல் தீவு....2

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீரில் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

உடனே, சுமார் 20 டால்பின்கள்  ஒன்றன்பின் ஒன்றாய் எங்கள் படகை சுற்றி திரிந்தன. எல்லா டால்பின்களும் “பாட்டில் மூக்கு” டால்பின் வகையை சார்ந்தவை. நாங்கள் சென்றது டால்பின்களின் இனப்பெருக்க சீசனாம், அப்பொழுது மட்டுமே இவை இந்த பகுதிக்கு வருமாம்.அவை துள்ளி விளையாடிய அழகே அழகு.


அவை சிறிது நேரம் விளையாடிவிட்டு சென்றதும், மீண்டும் எங்கள் பயணம் தொடர்ந்தது. கடல் நடுவில் மிகப்பெரிய மலை ஒன்று இருந்தது. எரிமலை வெடிப்பால் உருவானது என சொன்னார்கள். அதை கடந்தவுடன் கப்பலின் ஆட்டத்தாலும் என்னுடைய ஓவர் ஆட்டத்தலும் எனக்கு தலை சுற்ற... நான் மட்டையாகி விட்டேன். (சத்தியாமா, பீர் அடிச்சி அதனால மட்டையாகல... நம்புங்க மக்களே!)

எரிமலைப்பாறை?!

கேப்பிரியல் தீவை அடைந்தவுடன் எங்களை சிறு ரப்பர் படகு மூலம் தீவில் எங்களை விட்டனர்... மதியம் சாப்பிட வந்து பிக் அப் செய்வதாக சொன்னார்கள். கடலில் குளித்து தீவை சுற்றி பார்த்தோம். திருமணம் செய்வதற்காக பிரத்தியேக திறந்த வெளி சர்ச் ஒன்று இருக்கிறது. எப்படிலாம் யோசிச்சி கல்யாணம் பண்ணுறாங்க?

கேப்பிரியல் தீவு


அங்கு, சில கடல்சார் இடங்களில் மட்டுமே பார்க்க கூடிய கயிறு போல நீண்ட வால் கொண்ட Phaethon lepturus (paille en queue) பறவைகளை காண முடிந்தது. இவை Air Mauritius ன் லோகோ என்பது கூடுதல் செய்தி. மீண்டும் மதியம் படகிற்கு சென்று லஞ்ச் முடித்து கடலில் ஆட்டம் போட்டோம்.

Phaethon lepturus

3 மணிக்கு கிளம்பி, வந்தது போலவே முழு வலையையும் நாங்கள் ஆக்கிரமித்து வந்து சேர்ந்தோம். இப்பொழுதும் கடல் நீரில நன்றாக நனைந்து... சுடும் வெயிலில் காய்ந்தும் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் தான் அதன் பின்விளைவுகள் தெரிய ஆரம்பித்தது. ஆட்டம் போட்ட எங்கள் அனைவரின் தோலும் உறிய ஆரம்பித்தது (skin burn).

நீச்சல் குளம் இல்லைங்க...கடல்தான். குளிப்பது நம்ம நண்பர்

திரும்பி வந்த பிறகு சொல்லுறாங்க... ஏதோ லோஷன்லாம் போட்டுட்டு தான் கடல் தண்ணில ஆடனுமாம்... அதனால தான் வெள்ளைகாரங்க நிழல்ல உட்கார்ந்து இருந்தாங்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

டால்பின் வீடியோ:
கிட்டதட்ட 50 MB கொண்டது. அதை Compress செய்து 3gp யாக Convert செய்ததில் clarity குறைந்துவிட்டது. 50 MB original video தரவேற்றவும் முடியவில்லை. அதனால் அட்ஜெஸ்ட் செய்து பார்த்துக்கோங்க.





Monday, December 20, 2010

கேப்பிரியல் தீவு....

என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...

கேப்பிரியல் தீவு டாப்ல இருக்கு...
 
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island.  ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
நாங்க போன படகு....

படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி  மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர். 

ஹீரோ எப்பிடி...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and  Fruit juice FREE....
படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.

நீலக்கடல்....தொலைவில் தெரியும் மலையை அடுத்து தான் கேப்பிரியல் தீவு

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

தொடரும்....

டால்பின்களின் வரவேற்பு...




Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....


Saturday, September 25, 2010

ஐதராபாத் to சென்னை...2

விநாயக சதூர்த்திக்கு கிளம்ப வேண்டியவன், டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், அதன் தொடர்ச்சி...

சரி என்று வெள்ளிக்கிழமை சென்னை செல்ல வேண்டிய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். இரவு ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கும் திரும்பியாச்சு. மறுநாள் காலை வந்தான்யா அந்த Factory Engineer. அட! நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம்! விநாயக சதுர்த்திக்கு சென்னைக்கு போக பிளான் பண்ணி இருந்தவனை புடிச்சி ஐதராபாத் அனுப்பிடாங்களாம்.

அவன், நான், எங்க டெமேஜர் மூணு பேரும் போய் கஸ்டமரை பார்த்துட்டு வந்தாச்சு. டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு.  டேமெஜர் இப்ப கேக்குறார், “என்ன அருண், விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு போகலையா”னு. (ங்கெய்யால, பிளானை டெமேஜ் பண்ணிட்டு 3 மணிக்கு கேக்குற கேள்வியபாரு?) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு? நீங்க பண்டிகைக்கு போகலையா சார்?” என நானும் ஒரு பிட்டு போட. அதுக்கு அவர், “எனக்கு நைட் 8 மணிக்கு பிளைட் தம்பி, போய்டுவேன். நீ வேணா இன்னைக்கு போய்ட்டு திங்கள் காலைல ஆபிஸ் வந்துடு போதும்”. (ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார்)

(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடுப்பு ஏத்துறார், விடாத அருண்! பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.

அடுத்து ஆபிஸ் போய், டிக்கெட் செக் செய்தப்பதான் பிரச்சனை தெரிஞ்சது. முக்கிய பேருந்துகள் எல்லாம் பண்டிகையால் full. சில சிறு சிறு டிராவல்ஸ் செக் செய்தால் அனைத்திலும் கடைசி சீட் தான் இருந்தது. (பேருந்துகளில் எப்பொழுதும் கடைசி 2 வரிசை மற்றும் வலது புறமும் இருக்கும் சீட்டுகள் அதிக ரிஸ்க் சீட்டுகள். விபத்துகளில் அதிகம் அடிபடுவது இந்த சீட்டுகள்தான்)

பாவம் அந்த Factory Engineer, அப்ப  ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)


போன் செய்தேன், 
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”, 
நான் “இரண்டு”. 
எதிர் முனையில் “சரி சார் இருக்குது, கன்பார்ம் பண்ணிக்கவா. சீட்டு நம்பர் L9, L10 ஓகே வா. மொபல் நம்பர் தாங்க சார்” 
நான், “செய்துகோங்க. மொபல் நம்பர் 91771 57007. சரி, எவ்வளவு ரேட்”
எதிர் முனை “அதே 800 ரூ தான் சார்”
நான் “ஓகே, எப்ப, எங்க வந்து டிக்கெட் வாங்கிகனும்”
எதிர்முனை “7.30 மணிக்கு Lakdi ka Pool (ஹைதராபாதின் ஒரு முக்கிய ஏரியா) வந்துடுங்க pick up van வந்துடும், பஸ்ல உட்கார்ந்த பிறகு காசு கொடுத்தா போதும்”
நான் “மிஸ் ஆகாதே! கடைசில சீட் இல்லைனு சொல்ல கூடாது”
எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....

மொபலை பார்த்தால் ஒரு SMS From USL BUS. "YOUR TICKET HAS BEEN CONFIRMED. SEAT NO IS L9, L10. PICK UP TIME 7.30 PM @ LAKDI-KA-POOL" என வந்திருந்தது. எதிர் பார்க்காத ஆச்சர்யம். ஒரு போன் காலை மதித்து கன்பார்ம் செய்து இருந்தார்கள். 

மாலை சரியாக 7.30 மணிக்கு pick up செய்து பஸ்க்கு சென்றோம். அங்கு ஒரு ஆச்சரியம், ஒவ்வொரு சீட்டுக்கும் சிறிய தலையனை கழுத்தில் வைக்கவும், நன்றாக துவைத்த போர்வையும் இருந்தது. சீட்டின் அளவும் மற்ற பேருந்துகள் போல இல்லாமல் சற்று அகலம். அந்த வண்டி Helper வந்து எங்க பெயர் சொல்லி பணம் வாங்கி கொண்டு சரியான ரசீதையும் தந்து விட்டு சென்றார். 

பேருந்தின் Interiorஉம் அழகாக கண் கூசாத வண்ண விளக்குகளால் செய்திருந்தனர். மேலும், மற்ற பேருந்துகள் போல அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொடுத்து வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போவது போல செய்யாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தந்தனர். (நான் பல தனியார் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளேன், சில பேருந்துகள் கேவலமாகவும் போர்வை ஒரு வித வாசத்துடனும் இருக்கும்.... பலருக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கலாம்)


பயணிகளை கேட்டு, எப்பொழுதும் போடும் மொக்கை தெலுங்கு படத்தை போடாமல், தலைவர் நடித்த சிவாஜியை போட்டனர். சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (தலைவர் படம்னா சும்மாவா) வழியில் நல்ல சுகாதாரமான ஓட்டலிலும் நிறுத்தினர்.

சரியாக காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தது பேருந்து. சுமார் 800 கிமீ தொலைவை 10 மணி நேரத்தில் வந்து அடைந்தோம். அதில் இருந்து சென்னை-ஐதராபாத் பேருந்தில் செல்ல நேர்ந்தால் USL BUS தான் என் முதல் சாய்ஸ். இவ்வளவு சின்ன சின்ன விஷயங்களால் செய்து கூட பயணிகளை திருப்திபடுத்தி ஆதரவை பெற முடியும் என்பதை கண்கூடாக கண்டேன்.

அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.

டிஸ்கி: இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால், இந்த கட்டுரை எழுத அந்த பேருந்தின் Website ஐ தேடும்போது அது Delete செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராவல்ஸ் தற்போதும் கண்டிப்பாய் இயங்கி கொண்டுதான் இருக்கும் என நம்புகிறேன். இந்த டிராவல்ஸின் தற்போதைய நிலையைபற்றி யாருக்காவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.

அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....

Thursday, September 23, 2010

ஐதராபாத் to சென்னை...

ஏற்கனவே விஜயவாடா டூ வைசாக் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். ஆந்திராவில் செய்த சில மறக்கமுடியாத பயணங்களின் தொடர்ச்சியில், இப்போழுது அடுத்த பயணம் போகலாமா.....

இந்த முறை ஹைதராபாத் டூ சென்னை பயணம்.

2009, சில பல நிதி நெருக்கடியாலும், குழந்தைக்கு 6 மாதமே ஆனதாலும் நான் ஐதராபாத்திலும், என் மனைவி சென்னையிலும் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. குழந்தையை பார்த்துக் கொள்ள என் மாமியார், என் மனைவியுடன் சென்னையில் இருந்தார்

அந்த ஞாயிற்றுகிழமை விநாயக சதுர்த்தி, வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னை போக சென்னை எக்ஸ்பிரஸிலும் ஞாயிறு மாலை ஐதராபாத் திரும்ப சார்மினார் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. வெள்ளிக்கிழமை காலை வரை நல்லாதான் போச்சு, வழக்கம் போல டிரஸ் எல்லாம் pack பண்ணிட்டு ஆபிஸ் வந்தாச்சு.


ஆபிஸ் வந்தா வில்லன் உட்கார்ந்து இருக்கார். என் சேல்ஸ் மேனஜர் ரூபத்துல. பெங்களூர்ல இருந்து இதுக்குனே வந்து இருக்கார் போல, “அருண், நாளைக்கு Factory Engineer இங்க வரார் நாம 3 பேரும் கஸ்டமரை பார்க்க போறோம். பிளான் பண்ணிக்க!”. (ஆப்பு) என்னத்த பிளான் பண்ண, போட்ட பிளானைத்தான் கான்சல் செய்யனும் என முடிவு செய்து என் பிளானை டேமேஜ்   செய்த டேமெஜருக்கு ஓகே சொன்னேன். (வேற வழி)

எனக்கு என் வேலை மேல எப்பவுமே அப்படி ஒரு நம்பிக்கை, இப்படி ஏதாவது எப்பவும் சொதப்பும்னு தெரியும், அதனால எப்பவுமே டிக்கெட்டை வெயிட்டிங் லிஸ்ட் 12 லிருந்து 15 க்குள்ள தான் புக் பண்ணுவேன். அப்பதான், கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும். (அட, என்ன ஒரு சிந்தனை) இதுலாம் ரயில்வே டிக்கெட் புக்கிங் சீக்ரெட், நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.

டிரெயின் 5 மணிக்கு, 2 மணிக்கு சார்ட் Prepare பண்ணிடுவாங்க. அப்புறம் கேன்சல் பண்ண முடியாது. இப்போ (காலை 9 மணி) கான்செல் பண்ணா வெயிட்டிங் லிஸ்ட் சார்ஜ் போக 50 ரூபாய்க்குள்ள தான் பிடிச்சிட்டு மிச்சம் ரிட்டர்ன் வந்துடும். சேல்ஸ் மேனேஜர் பிளானை மாத்துற மாதிரி தெரியல, சரின்னு அன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் செய்தாச்சு.

ஆனா, ரிட்டன் டிக்கெட் கேன்சல் செய்யல. பண்டிகைக்கு எப்படியாவது போகனும்னு ஒரு பக்கம் ஆசை, ஒருநாளுக்காக போகனுமானு ஒரு குழப்பம்.

போகனும்னு ஆசைபட காரணம்,

  1. என் குழந்தை பிறந்து அதுதான் அவளுக்கு முதல் பண்டிகை. அதை மிஸ் பண்ண விரும்பல.
  2. அந்த ரிட்டர்ன் டிக்கெட் அதிசயமா RAC ல புக் பண்ணேன். கன்பார்ம் ஆகிடுச்சு கேன்சல் பண்ணா Penalty அதிகம்
  3. தீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு!
  4. முதல் கடவுள் விநாயகர் மேல ஒரு தனி பிரியம். அதை பற்றி ஒரு தனி பதிவே போட்டு இருக்கறேன்.
இந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

Friday, August 13, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2

சென்ற பதிவில் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்.


முதல் பகுதிக்கு இங்கு சென்று பார்க்கவும்...

இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு காலை 6 மணி ரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஆனால், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வழியில்லை. கையில் (பாக்கெட்டில்?) இருக்கும் ஒரே புரூப் மொபைலில் PNR number உடன் வந்த Ticket Confirmation SMS, NGPAY அனுப்பியது.

தொடர்ந்து ரயிலில் பயணம் செய்வதால் ரயில்வேயின் சில விதிமுறைகள் தெரியும், அதில் ஒன்று, E Ticket  எனப்படும் இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கெட் தொலைந்தாலோ, TTR இடம் காண்பிக்க தவறினாலோ, PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.

பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. அன்று வந்த TTR உம் அப்படிபட்ட ஆள்தான். ஒரு வழியாக, காலை ரயில் ஏறியாகியாச்சு. TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன். ஆம், எல்லா E Ticket லும் இந்த விதிமுறையை  பிரிண்ட் செய்து இருப்பர். பிறகு அவர் ஒத்துக்கொண்டார்.

உதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.


(படத்தை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)

அந்த ரயிலில் இருந்த மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும். அதில் தற்போதய நேரம், அடுத்து வரும் நிலையம், அதற்கு உள்ள தொலைவு ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம். தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா? இல்லையா? என தெரியாது. இருந்தாலும் சில கட்சிகள் அதில் வரும் ஆங்கில எழுத்தில் "தார்" பூசினாலும் பூசுவார்கள்.


எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?

பயணங்கள் முடிவதில்லை ......

Tuesday, August 10, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும்

நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்வதில் தப்பில்லை. இப்பொழுது இல்லையெனும் என்றாவது, யாருக்காவது உதவும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த பதிவு. (நாமதான் மத்தவங்களுக்கு உதவுறதுல கர்ணனுக்கு பக்கத்து வீடாச்சே)



NGPAY - இந்த வசதியை பற்றி அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தெரியும். இது ஒரு Mobile Software. (அப்பிடியா, தல ரொம்ப படிச்சவனு காட்டிக்குதோ...) இதன் மூலம் நீங்கள் ரயில் டிக்கட், தனியார் பஸ் டிக்கட், சினிமா டிக்கட், (பிளாக் டிக்கெட் கிடைக்குமா?) ஷாப்பிங் போன்ற ஏராளமான சேவைகள் பெறலாம். ஓசி கிடையாது. (சொல்லிட்டாருயா... எவன் ஓசில ஒத்தை பைசா கொடுக்கறது அதுவும் உனக்கு...) 

இதை உங்கள் GPRS உள்ள மொபைலில் நிறுவி, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அவர்களுடன் இணைந்துள்ள பல மேற்சொன்ன நிறுவனங்களின் சேவையை நீங்கள் சுலபமாக பெறலாம். (இதுக்கு மொபைல் ஆன் பண்ணனுமா, சிம் போடனுமா, பெலன்ஸ் இருக்கனுமா?)

இந்த NGPAY மூலமாகதான், நான் எல்லா ரயில் டிக்கெட்களையும் புக் செய்வேன். காரணம்,
1. என் வேலை. எப்பொழுது எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது.

2. மற்ற இடத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்ய இன்டர்நெட் சென்டரை தேடி அலைய முடியாது (வேலை செய்யாம ஊரை சுத்தினதை எப்படி பில் டப் கொடுத்து சொல்லுறத பாரு...)

3. கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவதால், அதிகபடியான பணம் கையில் வைத்திருக்க தேவையில்லை (கைல காசு இல்லைன்றத டீசண்டா சொல்லி இருக்கீரு)

4. புக் செய்தவுடன் டிக்கெட் மெயிலில் (இது E mail, ஹவுரா மெயில் இல்லை) அனுப்பிவிடுவார்கள்

5. தட்கால் டிக்கெட் கண்டிப்பாய் கிடைத்துவிடும். சர்வர் ஜாம் ஆகி இன்டர்நெட் சைட் ஓப்பன் ஆகவில்லை என்ற பிரச்சினை குறைவு.

6. டிக்கெட் Availability யை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

7. எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியும். மொபைலில் சிக்னல் இருந்தால் போதும்

 சரி, விஷயத்துக்கு வருவோம், (இன்னும் இவ்வளோ நேரம் விஷயத்துக்கே வரலையா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..)

ஒருமுறை நான் வேலை விஷயமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி இருந்தேன் (பாவம் அங்க எவன் இவர் மொக்கைக்கு மாட்டினானோ?) .  மறுநாள், நான் விசாகபட்டிணத்தில் இருக்க வேண்டும் ( இப்போதான் தெரியுது ஆந்திரால ஏன் அவ்வளோ பிரச்சினைனு...). இரவு 11 மணி ரயிலில் டிக்கட் புக் செய்தாகிவிட்டது. திடீரென, அன்று ஓங்கோல் என்ற இடத்திற்கு  செல்ல வேண்டிய கட்டாயம். விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் 3 மணி நேர பயணம். (நடந்து போனா கூடவா 3 மணி நேரம்? ) எப்படியாவது இரவு திரும்பி விடலாம் என்று காரில் கிளம்பி விட்டேன். ஆனால் அங்கு தாமதமாகிவிட்டது. ஓங்கோலில் இருந்து கிளம்பியதே இரவு 8 மணிக்குதான்.

எப்படியும் 11 மணி ரயிலை பிடிக்க முடியாது. ஏனெனில், விஜயவாடாவில் ரூம் காலி செய்ய வேண்டும், உடன் வரும் நண்பர்களுக்காகவாவது சாப்பிட வேண்டும், (அதை சொல்லு முதல்ல... அந்த வேலைதான முக்கியம்...) டாக்ஸி செட்டில் செய்ய வேண்டும். அப்பொழுது கபாலத்தில் கனபொழுதில் உதித்தது ஒரு யோசனை. (அதான, எப்பவுமே லேட்டாதான மேல்மாடி வேலை செய்யும்...) உடனே இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தேன். மறுநாள், காலை 6 மணி ரத்னாசல் எக்ஸ்பிரஸில் புக் செய்தேன். (ராத்திரி தூங்க வழி செஞ்சாச்சினு சொல்லுங்க...) எல்லாம் NGPAY மூலம் வரும் வழியிலேயே காரில் இருந்தபடியே செய்தேன். டிக்கெட்டும் மெயிலில் அனுப்பிவிட்டார்கள்.

அடுத்த பிரச்சினை, டிக்கெட் பிரிண்ட் எடுப்பது. வழியில் ஏதாவது பிரெளசிங் சென்டர் தென்படுகிறதா என்றால், இல்லை. (காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...) விஜயவாடா சென்று சேர்ந்தது இரவு மணி 12. அங்கும் கடைகள் குளோஸ். காலை 5.30 க்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். 

என்ன செய்ய? 
எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?

விடையை யூகித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீதி அடுத்த பதிவில் தொடரும்..... (அடுத்த பதிவுவேறயா... வெளங்கிடும்...)