Cricket Countdown....

Friday, July 9, 2010

பிளாக்குக்கு சூனியம்

போன வாரம், நம்ம சிரிப்பு போலீசிடம் இருந்து அவசர அழைப்பு.

”தல, உன் பிளாக்குல யாரோ சூனியம் வச்சிட்டாங்க. இந்தியாவுல எந்த ஆபிஸ்லயும் உன் பிளாக் ஓப்பன் ஆக மாட்டேன்குது.


இந்த Error மெசேஜ் வருது” 

சொன்னது போலீஸ் ஆச்சே,  சினிமா படத்தை மிஸ் பண்ணாலும் பண்ணுவாரு  இந்த மாதிரி விஷயத்தை கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டாரு.
இந்த படத்தை வேற அனுப்பி வெச்சாரு. என்ன பிரச்சனைனா, நம்ம பிளாக் Firewall இருக்குற, IE உபயோகிக்கிற எந்த ஆபிஸ்லயும் ஓப்பன் ஆகலை. நம்ம ஆளுங்க ஆபிஸ்ல வேலை செய்யுறதவிட பிளாக் படிக்கிற நேரம்தான் அதிகம். ( உன் ஆபிஸ்ல நீ செய்யுற வேலை அது, நாங்க ரொம்ப பிஸி னு யாரும் கமெண்ட் போட கூடாது). இப்படி இருந்தா நம்ம பிளாக்குக்கு யாரும் வரமாட்டாங்களே! (ஏற்கனவே, யாரும் வர்றது இல்லை)

"எடுக்கறேன், செய்வினைய எடுக்கறேன்"

போலீசும் நானும் பல விதங்களில் துப்பறிஞ்சோம். Template மாத்தினேன், எல்லா Widgets ஐயும் தூக்கியும் ஓப்பன் ஆகலை. ரொம்ப பெரிய சூனியம் போல இருக்குனு அப்படியே ஷாக் ஆகிடேன். எல்லாம் போச்சா! வேற பிளாக் ஓப்பன் பண்ண வேண்டியதுதான்னு முடிவு பண்ணி பழைய பதிவுகளை Back up எடுக்க ஆரம்பிச்சாச்சு (அதுக்காக, பிளாக் எழுதுறத நிறுத்தி உங்களை நிம்மதியா இருக்க விட முடியுமா?). எதுக்கும் ஒருமுறை நம்ம கூகிள் ஆண்டவரை உதவிக்கு கூப்பிட்டு பார்த்தேன். 10 நிமிஷத்துல பிரச்சினை தீர்ந்தது.

அவர் இதைதான் செய்ய சொன்னார்:

1. உங்கள் Dashboard லிருந்து, Design ஐ சொடுக்கவும்
2. அதில் உள்ள Edit HTML ஐ Click செய்து அங்கு வரும் "Expand Widget Templates" ஐ டிக் செய்யவும்
3. கிழே உள்ள கோடிங்குகளில்  script type='text/javascript' ஐ தேடி கண்டுபிடிக்கவும்
4. அதில்  defer='defer' என்பதை script defer='defer' type='text/javascript' இவ்வாறு சேர்க்கவும்
5. "Save Template" ஐ சொடுக்கிவிட்டு, வெளியேறவும்

பிரச்சினை முடிந்தது.

என்ன பிரச்சினைனா, இது உலகளவில் Microsoft IE ல இருக்குற பூச்சியாம் (அதாங்க Bug ஆம்). பழைய IE version ல இந்த பிராப்ளம் இருக்காம். அதை சரிப்பண்ணத்தான் இந்த கோடிங்.

நாம எழுத கூடாதுனு சர்வதேச அளவுல பிரச்சினை பண்ணுறாங்கப்பா. இந்த பயபுள்ள பில் கேட்ஸ் நம்மகூட சின்னபுள்ளதனமா விளையாடுறான்யா....

இப்படி சர்வதேச அளவுல நாம எழுதுறத தடுக்கறாங்களே, ஒருவேளை நானும் பிரபல பதிவர் ஆகிட்டனோ?

தல, நீ சொல்லேன்.......

31 comments:

எல் கே said...

//இப்படி சர்வதேச அளவுல நாம எழுதுறத தடுக்கறாங்களே, ஒருவேளை நானும் பிரபல பதிவர் ஆகிட்டனோ?//

illai
1. kuranja paccham 4 peru ungalai titti eluthi irukkanumn
2. 2 or 3 ethir pathjivu podanum
3. meel pathivu podanum

ப்ரியமுடன் வசந்த் said...

பிரபல பதிவர் அருண் வாழ்க

சின்ன விஷயத்தை கூட நகைச்சுவையா சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் இதெல்லாம் VAS-சோட சதி. உடனே வெங்கட் அடுத்த பதிவுல பில்கேட்ஸ் VAS சங்க மெம்பெர் அப்டின்னு பதிவு போட்டுடுவார். அதபத்தி எல்லாம் கவிப் படாதீங்க. பில்கேட்ஸ் என்ன யார் வச்ச சூனியத்தையும் நாம எடுக்குறோம். நீங்க பிரபல பதிவர் தான் தல

soundr said...

:)

http://vaarththai.wordpress.com

அருண் பிரசாத் said...

@ LK

இன்னும் நிறைய அனுபவம் தேவையோ! ரைட்டு!

@ வசந்த்

கொடுத்ததுக்கு மேல கூவுறுயே தல! உங்களுக்கு இன்னும் ரெண்டு செட் அல்வா பார்சல் பண்ணுறேன்

நன்றிங்க

@ ரமெஷ்

அதுதான matter. சே... நான் பில் கேட்ஸ் அ சந்தேகபட்டுடேன். இது உள்ளூர் சதி. நீ இருக்குற அப்போ என்ன தல எல்லா சூனியத்தையும் எடுக்கலாம்

மறுபடியும் அருண், ரமெஷ் Combination. நான் உன் college friend மாதிரி இல்லப்பா

சௌந்தர் said...

பூச்சியாம் என் ப்ளாக் பூச்சி இருக்கு எனக்கு ஒன்னும் ஆகலை ஹி ஹி ஹி

சுசி said...

உலகப் பதிவர் அருண் வாழ்க!!!

Jey said...

எச்சூஸ்மீ, இந்த “ சூனியம்”, ’ சூனியம்’ நு சொல்றாங்களே அப்படினா என்னதுங்க?.
தகவலுக்கு நன்றி.

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா... இந்த கொசு தொல்லை தாங்கலடா. (வருகைக்கு நன்றி)

@ சுசி
நான் உலக பதிவரா! நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா... நானும் பிரபலம் தான், நானும் பிரபலம் தான்...

அருண் பிரசாத் said...

@ Jey

அது ஒன்னும் இல்ல ஜெய்,

நீங்க வந்து கமெண்ட்ல மொக்கை போட்டா ”நீங்க சூனியம் வைக்கறதுனு” அர்த்தம்

நானே மொக்கை பதிவு போட்டா ”எனக்கு நானே சூனியம் வெச்சிக்கிறதுனு” அர்த்தம்

பனித்துளி சங்கர் said...

பிரபல பதிவர் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .

ஜெயந்தி said...

//நாம எழுத கூடாதுனு சர்வதேச அளவுல பிரச்சினை பண்ணுறாங்கப்பா. இந்த பயபுள்ள பில் கேட்ஸ் நம்மகூட சின்னபுள்ளதனமா விளையாடுறான்யா....//
நம்மளப்பத்தி அவங்களுக்கு சரியாத் தெரியல.

அருண் பிரசாத் said...

@ பனித்துளி சங்கர்

எப்படிலாம் பிரபலம் ஆகவேண்டி இருக்கு பாருங்க சார்.

முதல் வருகைக்கு நன்றிங்க

@ ஜெயந்தி
அதானே, நாம யாரு? சூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக (வெங்கட் மண்ணிப்பாராக)

முதல் வருகைக்கு நன்றிங்க

bogan said...

இன்னமும் நீங்க IE விட்டு மாறலியா

வெங்கட் said...

@ ரமேஷ்.,

இடம் : போலீஸ் ஸ்டேஷன்..

சிரிப்பு போலீசிடம் Complaint
கொடுக்க வர்றாங்க..

" சார்.. என் Bike-ஐ காணோம்..!! "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

இன்னொருத்தர்..

" சார்.. மெரினா பீச்ல ஏதோ கலாட்டாவாம்..? "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

பக்கத்தில் இருக்கும் கான்ஸ்டபிள்..

" சார்.. Football Semi Finals-ல ஜெர்மனி
தோத்து போச்சாமே..!!

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

கம்பிளைண்ட் கொடுக்க வந்தவர்..

" சரியான லூசு போலீசா இருக்கே..!!
ஒருவேளை தப்பா Mental Hospital வந்துட்டோமோ..??!! "

அருண் பிரசாத் said...

Hi gsaprasath,

Congrats!

Your story titled 'பிளாக்குக்கு சூனியம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 10th July 2010 03:37:03 AM GMTHere is the link to the story: http://www.tamilish.com/story/298055

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஓட்டளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Sathyan said...

தல, நீங்க பிரபல்யம் ஆகீட்டீங்க. சூரியன் ஆச்சே யார்தான் தடுக்க முடியும்! கலக்கீட்டிங்க போங்க.

Gayathri said...

அதான் சன் டிவி ல வந்துச்சா " பிரபல பதிவர் அருண் அவர்களின் மிது மறைமுக தாக்குதல் நடத்திய பூச்சிக்கு வலய்பதிவு உலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுன்னு"..ம்ம்
எப்படியும் பூச்சியய் வென்றமைக்கு பாராட்டுக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்க வந்து கமெண்ட்ல மொக்கை போட்டா ”நீங்க சூனியம் வைக்கறதுனு” அர்த்தம்

நானே மொக்கை பதிவு போட்டா ”எனக்கு நானே சூனியம் வெச்சிக்கிறதுனு” அர்த்தம்///

இது புதுசா இருக்கே, நோட் பண்ணுங்க நோட் பண்ணுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" சார்.. என் Bike-ஐ காணோம்..!! "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

இன்னொருத்தர்..

" சார்.. மெரினா பீச்ல ஏதோ கலாட்டாவாம்..? "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

பக்கத்தில் இருக்கும் கான்ஸ்டபிள்..

" சார்.. Football Semi Finals-ல ஜெர்மனி
தோத்து போச்சாமே..!!

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "
///

இவ்ளோ சதிகளை VAS பண்ணினதா சங்கத் தலைவர், பொருளாளர், செயலர் மற்றும் தொண்டர் வெங்கட்டே ஒத்துக்கிட்டார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" சார்.. என் Bike-ஐ காணோம்..!! "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

இன்னொருத்தர்..

" சார்.. மெரினா பீச்ல ஏதோ கலாட்டாவாம்..? "

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "

பக்கத்தில் இருக்கும் கான்ஸ்டபிள்..

" சார்.. Football Semi Finals-ல ஜெர்மனி
தோத்து போச்சாமே..!!

" எல்லாம் VAS சதியா இருக்கும்..!! "
///

இவ்ளோ சதிகளை VAS பண்ணினதா சங்கத் தலைவர், பொருளாளர், செயலர் மற்றும் தொண்டர் வெங்கட்டே ஒத்துக்கிட்டார்.

ரசிகன்! said...

good one... very interesting and a very useful post... :)

Cheers

அன்புடன் அருணா said...

ஓ ப்இரபலமாயிட்டீங்களா????

அருண் பிரசாத் said...

@ போகன்

நான் இல்லிங்க, இன்னும் இந்தியால பாதி ஆபிஸ்ல IE தான் யூஸ் பண்ணுறாங்க

@ Gayathri

சன் டிவி ல வந்துதா? மொக்கை படம் போடுற நினைப்புல நம்ம மொக்கை பதிவையும் போட்டுடாங்களா?

@ சூர்யா

அப்ப உண்மையிலேயே பிரபலம் ஆகிட்டேனா?!

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

ஓ, இந்தியா கிரிக்கெட்ல தோற்றது, அதிமுக இடைதேர்தல்ல தோத்தது, சானியா மிர்சா டென்னிஸ்ல தோத்தது எல்லாத்துக்கும் VAS தான் காரணமா? (VAS - புரியாதவர்கள் http://gokulathilsuriyan.blogspot.com/ சென்று பார்க்கவும்)

@ ரசிகன்

Thanks.

cheers சொல்லிட்டிங்க எங்க என் cutting

@ அன்புடன் அருணா

நீங்களாவது சொல்லுங்க, நான் பிரபலம் ஆகிட்டேனா? இல்லையா? ஒரே Confusionஆ இருக்குப்பா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Best wishes for youthful vikatan, tamilish and all ur features thala

pinkyrose said...

அருண் சார் நீங்க என் கவிதைய படிச்சு பின்னூட்டம் போடலைல அதான் பெரிய்ய்ய சூனியம்...

அனு said...

என்னவோ சூனியம்-ன்றீங்க, IE-ன்றீங்க, Errorன்றீங்க, Firewall-ன்றீங்க..
இதையெல்லாம் பார்த்தா, மெத்த படிச்ச மேதாவியா இருப்பீங்க போல இருக்கு.. நமக்கு (எனக்கு) இதெல்லாம் ஒத்து வராதுங்க.. அதனால அப்பீட்டாகிக்கிறேன்..

குட் ப்ளாக்ஸ் லிஸ்ட்-ல வந்ததுக்கு + tamilish popularityக்கு வாழ்த்துக்கள் அருண்..

அனு said...

//இவ்ளோ சதிகளை VAS பண்ணினதா சங்கத் தலைவர், பொருளாளர், செயலர் மற்றும் தொண்டர் வெங்கட்டே ஒத்துக்கிட்டார்//

ஹாஹாஹா.. இது நல்லா இருக்கே...

அருண் பிரசாத் said...

@ ரமெஷ், அனு

வாழ்த்துக்களுக்கு நன்றி

@Pinkyrose

ஒஹோ, இப்படிகூட நடக்குதா? முதல்ல உங்களை கலாய்க்கறேன், சாரி பின்னுட்டம் போடுறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிரபல பதிவரா இருக்குமோ?.. அது என்ன மோ?..

நான் சொல்றேன்.. பிரபல பதிவர்தான் நீங்க..