Cricket Countdown....

Monday, May 24, 2010

மனைவி.....



மே 26,

ஒவ்வொருவருடமும் சாதாரனமாய் இருந்த இந்த நாள்,
2004 முதல் முக்கியமானதாய் மாறியது.

நட்பை காதலித்தேன், காதலியாய் வந்தாள்.
காதலை மணந்தேன், மனைவியாய் மாறினாள்.

நண்பன்னாய் அவள் பிறந்தநாளில்,
உலகத்தில் ஒருவனாய் வாழ்த்தினேன்.

காதலனாய் அவள் பிறந்தநாளில்,
நாங்களே உலகமாய் வாழ்ந்தோம்.

கணவனாய் அவள் பிறந்தநாளில்......
ஒரு முறையும் உடன் இருக்கவில்லை.....

பணத்தை தேடி, பிரதேசங்கள் சென்றேன்....
மனதையும் மழலையையும் மறந்தேன், மறுத்தேன்...

இன்று,

மனம், மனைவி, மழலை - மூன்றும் என்னுடன்....
மணமாகி இரண்டு வருடங்களில்.....
மனைவியுடன் கொண்டாடும்....
அவளின் முதல் பிறந்தநாள்....

என்ன பரிசு கொடுக்க?
எப்படி அவளை பரவசபடுத்த?

கொடுக்கும் பரிசு ....
அவளை சுனாமியாய் சுழற்றிபோடவேண்டும்...
பரவசத்தில் அவள்...
பதில் சொலமுடியாமல் பாடாய் பட வேண்டும்....

யோசித்து... யோசித்து....
ஏதும் புலபடாமல்...

கவிதை எழுதவா? காவியம் பாடவா?
ஓவியம் வரையவா? பூக்கள் கொடுக்கவா?

ஏது செய்தாலும்....
அது நீ என்மேல் காட்டும் காதலுக்கு ஈடு ஆகாதடி...

ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்...
பார்! என்னையே கொடுத்தாலும், எல்லாம் அற்பமே...

ஏதும் கிடைக்காமல், ஒற்றை ரோஜாவுடன்...
அவள் முன் நின்றேன்...
என்னிடம் வேறு பரிசு இல்லை என்றேன்...


" இந்த நொடி போதுமடா, என்ன பரிசு உண்டு உலகில் இதை ஈடுசெய்ய" என்றாள்.


அன்பு மனைவி காயத்ரிகாக இந்த பதிவு....




 

11 comments:

வெங்கட் said...

அருண்..

கலாய்க்க வந்தேன்.,
கலங்கி நிக்கறேன்.,
கலக்கிட்டீங்க..

தங்கை காயத்ரிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அருண் இப்ப புரியுதா..

To the World you are Someone.,
But for Gayathri you are her World..!

அனு said...

//ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்//

அருமையா எழுதியிருக்கீங்க..

ஒற்றை ரோஜா, இரவின் அமைதி, இருவரின் தனிமை, அன்பாய் ஒரு வாழ்த்து.. இதுக்கு மேல என்னங்க வேணும்??

உங்களில் பாதிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

ஜஸ்ட்ல மிஸ்...
போன பதிவிற்கு வந்திருந்தால் நல்லா வாங்கி கட்டிகிட்டு இருந்திருபேன் ....

வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி...

அருண் பிரசாத் said...

@ அனு,

இந்த பதிவை publish செய்த பிறகு மனைவியை கூப்பிட்டு படிக்கச் சொலிவிட்டு நான் சற்று தொலைவில் அமர்ந்தேன். அவள் படிக்கச் படிக்கச் அவளுடைய கண்களில் கண்ணீர். முடித்தவுடன் ஓடிவந்து என்னை கட்டிபிடித்து அழுதால் பாருங்கள்.... என் வாழ்வில் பொக்கிஷம் மாக பாதுகாக்க வேண்டிய நிமிடங்கள் அவை. என்றும் மறவாதவை... இது போதுங்க நான் சாதித்துவிட்டேன்.

வெங்கட் said...

அருண்..,
சர்பிரைஸ் குடுக்க 4 பவுன்ல நெக்லசும்.,
ஒரு பட்டுபுடவையும் எடுத்து வெச்சி
இருக்கேன்னு சொன்னீங்களே..
குடுத்திட்டீங்களா..??

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

ஆமாங்க.... அதுக்கு கூட நீங்க எனக்கு ஒரு 30000 ரூபாய், என் அக்கௌன்ட்கு அனுபறதா சொன்னீங்களே, அனுபிடீங்களா? என்னும் வந்து சேரல.

வெங்கட் said...

// அதுக்கு கூட நீங்க எனக்கு ஒரு 30000 ரூபாய்,
என் அக்கௌன்ட்கு அனுபறதா சொன்னீங்களே,
அனுபிடீங்களா? என்னும் வந்து சேரல. //

கல்யாணம் பண்ணி குடுத்தப்பவே 100 பவுன் நகையும், 5 லட்ச ரூபா ரொக்கமும்., ஒரு Honda City காரும் குடுத்து., ஒரு தங்கமான பொண்ணையும் கட்டி குடுத்தா...

பார்த்தீங்களா இந்த கொடுமைய..

தங்கச்சி..!
யோசிக்காதேம்மா.. அப்படியே தலையில " நச் " சுன்னு ஒண்ணு போடுங்க..

Srinivasan M said...

anne
superaaa irku-)

anniku vazthukal-)

அருண் பிரசாத் said...

///கல்யாணம் பண்ணி குடுத்தப்பவே 100 பவுன் நகையும், 5 லட்ச ரூபா ரொக்கமும்., ஒரு Honda City காரும் குடுத்து., ஒரு தங்கமான பொண்ணையும் கட்டி குடுத்தா..//

எவ்வளவோ பண்ணி இருக்கீங்க. தங்கச்சி பிறந்த நாளைக்கு இத பண்ண மாட்டிங்களா?

சரி, பெங்களூர் சிட்டி ஹைதராபாத் சிட்டி கேள்விபட்டு இருக்கேன் அது எனதுங்க ஹோண்டா சிட்டி? எங்கங்க இருக்குது அந்த ஊரு?

Saravanan said...

Hi Arun

un kitta evlavu thiramaya irruku ana ne enaikume velipatuthala yee

i am proud your my friend

saravanan s

முனியாண்டி பெ. said...

நல்ல பதிவு உண்மையான பதிவு