Cricket Countdown....

Showing posts with label மருத்துவ கருவிகள். Show all posts
Showing posts with label மருத்துவ கருவிகள். Show all posts

Tuesday, June 22, 2010

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு - MRI

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு  -2


மருத்துவ கருவிகள் தொடர்பான முந்தைய பதிவில் CT SCAN பற்றி பார்த்தோம். இந்த பதிவில் MRI பற்றியும், CT - MRI இடையேயான வித்தியாசத்தை பற்றியும் பார்ப்போம்.

MRI ஸ்கேன்:

MAGNETIC RESONANCE IMAGING என்பதன் சுருக்கமே MRI ஆகும்.  CT ஸ்கேன் போலவே MRI யும் முழு உடலையும் ஸ்கேன் செய்யவே உதவுகிறது.  MRI யும் CT போலவே அதே 3 பகுதிகளான PATIENT டேபிள், GANTRY , COMPUTER ஐ கொண்டுள்ளது. 



ஆனால் MRI GANTRY யில் CT ஸ்கேன் இல் உள்ள X RAY  TUBE க்கு பதில் சக்தி வாய்ந்த காந்தம் (MAGNET) உள்ளது. இந்த காந்தத்தின் உதவியாலேயே உடலின் பாகங்களை ஊடுருவி பார்கிறார்கள்.

செயல்படும் முறை:
PATIENT ஐ டேபிளில் படுக்க வைத்து டேபிள் ஐ GANTRY க்குள் செலுத்துவர். நம் உடல் 90 சதவிகிதம் நீர் ( H2O ) ஆல் ஆனது. இந்த நீரில் உள்ள ஹைட்ரோஜன்  அணுக்கள் GANTRY யில் உள்ள காந்த விசையால் ஈர்க்கப்பட்டு RADIO FREQUENCY  அலைகளை வெளியிடும். இந்த அலைகள் உடலின் எலும்பு மற்றும் தசைகளை ஊடுருவி வெளியேறும்போது , ஊடுருவும் இடத்திற்கு ஏற்ப இதன் வலிமை மாறுபடும். இதை DETECTORகள் COMPUTER ருக்கு அனுப்பி நம்மக்கு சீரான படத்தை கொடுக்கும்.


கூடுதல் தகவல் :
GANTRY க்கு உள்ளே உள்ள காந்தம் எப்போதும் குளுமையாக இருக்க வேண்டும். இதற்காக LIQUID HELIUM ஐ ஒரு பம்ப் மூலம் மறு சுழற்சி செய்து கொண்டே இருப்பர். இது எப்போதும் ஒரு வித ஒலியை எழுப்பிகொண்டிருக்கும். பலருக்கு இதனால் பயம் உண்டாகி ஸ்கேன் ஐ பாதியிலேயே நிறுத்த சொல்வர். அந்த சமயத்தில், அவருடன் வருபவரை உடன் அமர சொல்வர்,இதனால் உடன் வருபவருக்கு எந்த தீமையும் ஏற்படாது.

ஸ்கேன் செய்யும் போது அசையாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டும். இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். குறிப்பாக வலியில் உள்ளவர்கள், குழந்தைகளுக்கு ஸ்கேன் செய்யும் போது இந்த சிரமத்தை தவிர்க்க மயக்க மருந்து கொடுப்பதும் உண்டு.

MRI மூலம் மூளையின் படம்

எச்சரிக்கை:
சக்தி வாய்ந்த காந்தம் இருப்பதால் -  எலும்பு உடைந்ததால் அதில் PLATE வைத்து அறுவை சிகிச்சை செய்தவர்கள், PACEMAKER பொருத்தி உள்ளவர்கள் இதில் ஸ்கேன் செய்ய கூடாது. MOBILE PHONE , CREDIT CARD , WATCH  போன்றவைகளுக்கும் அனுமதி இல்லை.
தவறுதலாக ஏதேனும் காந்தத்துடன் ஒட்டிக்கொள்ள நேரிட்டால் இந்த காந்தத்தை சுற்றி நிரப்பயுள்ள LIQUID HELIUM ஐ வெளியேற்றி செயல் இழக்க செய்வார்கள். மறுபடியும் HELIUM ஐ நிரப்ப பல லட்சம் செலவுசெய்ய வேண்டிவரும்.

MRI - CT வேறுபாடு:

CT போல Xray கதிர்களை உபயோகிக்காமல் காந்த சக்தியை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கவலை இல்லை. அடுத்தடுத்து ஸ்கேன் செய்ய வேண்டுவோர் கதிர்வீச்சை தவிர்க்க CT க்கு பதில் MRI ஐ உபயோகிக்கலாம். குறிப்பாக SOFT TISSUE DIFFERENCE எனப்படும் தசைகளுக்கு  இடையேயான  வேறுபாடுகளை காணவும், நரம்பியல், CANCER செல்களை கண்டறியவும் CT ஐ விட  MRI சிறந்தது. ஆனால் கட்டணம் CT யை விட இருமடங்கு அதிகம் ஆகும்.

சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேட்கலாம். அடுத்த பதிவில் ULTRASOUND SCAN பற்றி பார்ப்போம்.....

Tuesday, June 15, 2010

மருத்துவ கருவிகள் - CT SCAN - தொடர் பதிவு

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு  - 1



மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில்  (SCAN சென்டர்ஸ்),  " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து  பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT  ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

CT  ஸ்கேன்

நம் திரைப்படங்களில்  அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT  ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.



XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி  DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும். 

தலை, கண், மூக்கு, மூளை - CT படம்

XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE  சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!

அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.