Cricket Countdown....

Monday, December 20, 2010

கேப்பிரியல் தீவு....

என்னுடைய பயண அனுபவங்கள் வரிசையில் இன்று ஒரு வித்தியாசமான பயணம் போகலாம். பாராசூட்டுக்கு அடுத்து இப்பொழுது கடல் வழி பயணம். டால்பின்களின் வரவேற்புடன்...

கேப்பிரியல் தீவு டாப்ல இருக்கு...
 
மொரீசியஸ் தீவின் வடக்கு முனையில் உள்ள Grandbay கடற்கரையிலிருந்து கடல் வழியாக சுமார் 1.30 மணி நேர பயண தொலைவில அமைந்துள்ளது Gabriel Island.  ரொம்ப நாளா பிளான் செஞ்சி ஒரு ஆளுக்கு மொரீசியன் ரூபாய் 1200 கொடுத்து அட்வான்ஸ் புக் செய்து கிளம்பினோம். படகில் மொத்தம் கிட்டதட்ட 25 பேர். எங்க கோஷ்டிதான் பெரிய கோஷ்டி... மற்றவர்கள் எல்லாம் வெள்ளைகாரர்கள்...
நாங்க போன படகு....

படகு ஒரு ஸ்பீட் போட் மாதிரி இருக்கும். படகின் முன்னால் இரு வலை போல கட்டி அதிலும் அமர்ந்து கொள்ளலாம். வலைக்கு கீழே கடல் தண்ணீர் தெளிக்கும். வலை கட்டி இருக்கு கம்பிகளில் காலை தொங்க விட்டு கடல் தண்ணீரை தொட்டபடியும் பயணம் செய்யலாம். எங்க கோஷ்டி  மொத்த வலையையும் ஆக்கிரமிச்சாச்சு.... வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர். 

ஹீரோ எப்பிடி...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and  Fruit juice FREE....
படகில் ஒரு ஓட்டுனரும் 3 உதவியாளர்களும் வழக்கமான ரூல்ஸ் மற்றும் சில safety tips களை விளக்கினர். பெரும்பாலானோருக்கு படகு போடும் ஆட்டத்தில் வாந்தி வருமாம். எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க சொன்னார்கள்.

கிளம்பிய கொஞ்ச நேரத்தில் படகு போட்ட ஆட்டத்தை விட தண்ணீரை காலால் தொட்டு நாங்கள் போட்ட ஆட்டம் தான் அதிகம். தெளிவான வானமும், நீல கடலும், துள்ளும் தண்ணீரும், ஈரக்காற்றும் கண்டிப்பாய் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்.

நீலக்கடல்....தொலைவில் தெரியும் மலையை அடுத்து தான் கேப்பிரியல் தீவு

நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்.... திடீரென படகின் வேகத்தை குறைத்து திசைதிருப்பி நிறுத்தி... அனைவரையும் அமைதியாக இருக்குமாறு கூறி கடலின் ஒரு பகுதியை பார்க்க சொன்னார்கள்.....

அழகான நீல கடலின் அமைதியான நீரை கிழித்துக்கொண்டு “ஜிவ்” என வெளியே துள்ளி குதித்தது ஒரு டால்பின்....

தொடரும்....

டால்பின்களின் வரவேற்பு...
52 comments:

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

செம ட்ரிப் போலயே... அங்க வந்தா கூட்டிட்டு போவீங்களா

Unknown said...

அண்ணே
மிக அருமையான புகைப்படங்கள்
நீல வனம்
தெளிவாக...

ஹீரோ சூப்பரா இருக்கார்,
உங்களை mindla
வைத்துக்கொள்கிறேன்

Gayathri said...

நல்லா இருக்கும் போல இருக்கே இந்த இடம், கொஞ்சம் மூணு டிக்கெட் அனுப்பிவைங்க உங்க செலவுல சந்தோஷமா ஊற சுத்தி பார்த்துட்டு வரோம்

Ramesh said...

படிக்க படிக்கவே ஆசையா இருக்கே....

ஆனா என்னங்க.. ஆரம்பிச்ச உடனே தொடரும் போட்டுட்டீங்க...

karthikkumar said...

நல்லா வூர் சுத்துறீங்க :))

எல் கே said...

உங்க செலவில் டிக்கெட் புக் பண்ணுங்க பாஸ். வந்து பாக்கணும்

சேலம் தேவா said...

நல்ல புகைப்படங்கள்..!!என்ஜாய் பண்ணுங்க..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல நல்ல இடமெல்லாம் சுத்தி பாக்குறீங்கன்னு அகந்தை...


வேறன்ன செல்ல..

THOPPITHOPPI said...

அருமையான இடம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

padankal nallaayirukku..

Unknown said...

படக ஸ்டார்ட் பண்ணவுடனேயே தொடரும் போட்டா எப்புடி?..

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// செம ட்ரிப் போலயே... அங்க வந்தா கூட்டிட்டு போவீங்களா//
வாப்பா கண்டிப்பா கூட்டிட்டு போறேன்... ஆனா அதுக்கு முன்னாடி அடுத்த அத்தியாயத்தையும் படிச்சிடு

நன்றி சிவா

@ Gayathri
// நல்லா இருக்கும் போல இருக்கே இந்த இடம், கொஞ்சம் மூணு டிக்கெட் அனுப்பிவைங்க உங்க செலவுல சந்தோஷமா ஊற சுத்தி பார்த்துட்டு வரோம்//
ஆகா... கூடை வெச்சி இருக்கறவுங்களுக்குலாம் டிக்கேட் குடிக்கற்து இல்ல...

@ பிரியமுடன் ரமேஷ்
// ஆனா என்னங்க.. ஆரம்பிச்ச உடனே தொடரும் போட்டுட்டீங்க..//
இன்னும் சேர்க்க வேண்டியது அதிகம் இருக்கு ரமெஷ்... அதான் தொடரும் போட்டுடேன்

அருண் பிரசாத் said...

@ karthikkumar
// நல்லா வூர் சுத்துறீங்க :))//
இவ்வளோ தூரம் வந்தாச்சி.... எல்லாத்தையும் அனுபவிச்சிட வேணாமா?

@ LK
// உங்க செலவில் டிக்கெட் புக் பண்ணுங்க பாஸ். வந்து பாக்கணும்//
எல்லோரும் கிளம்பிட்டாங்கய்யா... அருண் offline

நன்றி சேலம் தேவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப இன்ட்ரஸ்டிங்க்.....

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// நல்ல நல்ல இடமெல்லாம் சுத்தி பாக்குறீங்கன்னு அகந்தை...
வேறன்ன செல்ல..//
பொறாமை... :)

@ THOPPITHOPPI
// அருமையான இடம்//
இன்னும் இடத்துக்கே போகலைங்க...இன்னும் இருக்கு

@ வெறும்பய.
// padankal nallaayirukku..//
thanks

@ கே.ஆர்.பி.செந்தில்
// படக ஸ்டார்ட் பண்ணவுடனேயே தொடரும் போட்டா எப்புடி?..//
இல்லை அண்ணே, கேப்பிரியல் தீவுல இன்னும் சில விஷயங்கள் இருக்கு....
இப்போவே டால்பின்னை பத்தி சொல்லிட்டா மத்த விஷயங்கள் சாதாரணமா போய்டுமேனுதான்

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// ரொம்ப இன்ட்ரஸ்டிங்க்....//
நான் இதுக்கு என்ன ரிப்பிளை போடனும்???? அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

என்ன கமெண்ட் போட்டாலும் டெம்ப்ளேட் கமெண்ட் என்று திட்டு விழும் என்ற காரணத்தால் அனானியாக அலையும் டெரர்... :))

எஸ்.கே said...

சூப்பர்! அருமையாக உங்கள் அனுபவத்தை எழுத்தில் கொண்டு சேர்க்கிறீர்கள்!

ரிஷபன்Meena said...

படங்கள் நல்லாருக்கு. டால்பின்கள் அணிஅணியாய் கடலில் துள்ளிக் குதிப்பது பார்பதற்கு அழகாக இருக்கும்.

ஓமனில் இருக்கும் ”முசண்டம்” பகுதியில் (நவம்பர்-மார்ச் மாதங்களில்) இது போல் டால்பின்களைப் பார்த்திருக்கிறேன்.

வைகை said...

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and Fruit juice FREE....///////////


இதுதான் நமக்கு முக்கியம் என்ஜாய்!!

செல்வா said...

//நாங்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டும் சத்தம் போட்டு கொண்டும் தண்ணீர் விளையாடி கொண்டு இருந்தோம்..////


தண்ணி விளயாடுரதுனா என்ன அண்ணா ..? ஹி ஹி ஹி

செல்வா said...

//// Arun Prasath said...
வடை///அட ச்சே .. என்ன இப்படி மிஸ் ஆகுது ..!!

செல்வா said...

//ஹீரோ சூப்பரா இருக்கார்,
உங்களை mindla
வைத்துக்கொள்கிறேன்

//

அருண் அண்ணன் பேர கெடுத்துடாரே ..
இப்படியா நக்கல் பண்ணுறது ..?

செல்வா said...

// வெறும்பய said...
நல்ல நல்ல இடமெல்லாம் சுத்தி பாக்குறீங்கன்னு அகந்தை... //எனுங்னா நீங்க ONLINE அப்படின்னு ஒரு கமென்ட் போடுவீங்களே அத காணோம் ..?!

சௌந்தர் said...

என்ன கமெண்ட் போடுறது டேம்லேட் கமெண்ட் தான் போடனும் அதை தான் நானும் போட போகிறேன் நல்ல அனுபவம் வா....தி வரும் சொன்னிங்க வந்ததா வரலையா

Anonymous said...

ரைட்டு அடுத்த பயணம்..
வரர்ர்ர்ரூம் :))

Chitra said...

nice photos..... சூப்பர் பயண அனுபவம்! கலக்குறீங்க.....

Unknown said...

அருண் அண்ணன் பேர கெடுத்துடாரே ..
இப்படியா நக்கல் பண்ணுறது ..?

//இது உள் நாட்டு சதி என்பதை தெரிவித்து கொள்கிறோம்//

Unknown said...

நல்லவேளை விஜய் பறந்து வந்தாரோன்னு நினைச்சேன்.. :-)

படங்களும்.. நீங்கள் விளக்கிய விதமும் நன்றாக இருந்தது..

Anonymous said...

படங்களும் ரொம்ப அருமையா இருக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

நமக்கு எல்லாம் அங்க வர சான்ஸ் இல்ல........மக்கா .......இப்படியாச்சும் பார்த்து கொஞ்சம் மனச தேத்திகிடலாம் ......போடுங்க இன்னும் நிறையா போட்டோவ .........சரி எனக்கு தனியா ஒரு மெயில் போட்டோ அனுப்புனீங்க இல்ல அதுல ரெண்டு வெள்ளகாரி மேல கை போட்டுக்கிட்டு .....அந்த போட்டோவ ஏன் இதுல போடல மக்கா ........

Anonymous said...

ஆமா மச்சி ..,வெறும் டால்பின் மட்டும் தான் தீவுல இருக்குதா ..,மீன் எதுவும் இல்லையா

கருடன் said...

@அருண்

//வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர்//

அப்பொ மொரிஷியஸ்ல நீ மட்டும் உள்நாட்டுகாரனா? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படகு நடுகடள்ள நிக்கும்போது இறங்கி தள்ளினதா கேள்விப்பட்டனே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//Gayathri said...

நல்லா இருக்கும் போல இருக்கே இந்த இடம், கொஞ்சம் மூணு டிக்கெட் அனுப்பிவைங்க உங்க செலவுல சந்தோஷமா ஊற சுத்தி பார்த்துட்டு வரோம்///


naanum nanaum

சுசி said...

அற்புதமான பயணம் அருண்..

அழகான படங்கள்.

அனு said...

ஐ.. படத்தைப் பாக்கும் போதே போகனும் போல ஆசையா இருக்கு..

பேசாம மொரிசியஸ்க்கு ஒரு வாரம் பொட்டிய கட்டிட வேண்டியது தான்.. ஊர் காசு தராமயா விட்டுடுவீங்க...

அன்பரசன் said...

//ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and Fruit juice FREE....//

காரியத்தில கண்ணா இருக்கீங்களே...

Philosophy Prabhakaran said...

// முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேனே....கொடுத்த காசுக்கு மதியம் சாப்பாடும்... Unlimited Beer and Fruit juice FREE... //

unlimited meals மாதிரி சொல்றீங்களே... வயிற்றெரிச்சலாக இருக்கிறது...

குறையொன்றுமில்லை. said...

படங்களும் கட்டுரையும் நல்லா இருக்கு. நாங்க கூட கோவாவில் கடலில் இதுபோல டால்பினைத்தேடிப்போனோம். ஒன்னொன்னும் துள்ளிக்குதிக்கும் அழகை சொல்லவே முடியாது.

Anonymous said...

புகைப்படங்களெல்லாம் நல்லா இருக்கு..
என்ஜாய் பண்ணுங்க.

பொன் மாலை பொழுது said...

அருண் ..எங்க உங்கள ஆளையே காணோம்?

அருண் பிரசாத் said...

@ டெரர்
// என்ன கமெண்ட் போட்டாலும் டெம்ப்ளேட் கமெண்ட் என்று திட்டு விழும் என்ற காரணத்தால் அனானியாக அலையும் டெரர்... :))//
அது ஏன் நீங்க எங்க போனாலும் உதைக்கறாங்க

@ எஸ்.கே
// சூப்பர்! அருமையாக உங்கள் அனுபவத்தை எழுத்தில் கொண்டு சேர்க்கிறீர்கள்!//
நன்றி எஸ் கே

@ ரிஷபன்Meena
// படங்கள் நல்லாருக்கு. டால்பின்கள் அணிஅணியாய் கடலில் துள்ளிக் குதிப்பது பார்பதற்கு அழகாக இருக்கும்.
ஓமனில் இருக்கும் ”முசண்டம்” பகுதியில் (நவம்பர்-மார்ச் மாதங்களில்) இது போல் டால்பின்களைப் பார்த்திருக்கிறேன்.//
ஓ இங்க யும் அந்த மாதங்களில் தான் வருகிறது

அருண் பிரசாத் said...

@ வைகை
//இதுதான் நமக்கு முக்கியம் என்ஜாய்!!//
ஹி ஹி ஹி

@ கோமாளி செல்வா
// அருண் அண்ணன் பேர கெடுத்துடாரே ..
இப்படியா நக்கல் பண்ணுறது ..?//
பொறாமை

@ செளந்தர்
//வா....தி வரும் சொன்னிங்க வந்ததா வரலையா//
அடுத்த பதிவுல சொல்லுறேன்

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
// ரைட்டு அடுத்த பயணம்..
வரர்ர்ர்ரூம் :))//
வாங்க வாங்க

@ Chitra
// nice photos..... சூப்பர் பயண அனுபவம்! கலக்குறீங்க.....//
நன்றி சித்ரா

@ பதிவுலகில் பாபு
// நல்லவேளை விஜய் பறந்து வந்தாரோன்னு நினைச்சேன்.. :-)//
நான் ஹீரோனு சொன்னது தப்புதான் தப்புதான் தப்புதான்

@ ஆர்.கே.சதீஷ்குமார்
// படங்களும் ரொம்ப அருமையா இருக்கு//
நன்றி பாஸ்

அருண் பிரசாத் said...

@ இம்சைஅரசன் பாபு..
// சரி எனக்கு தனியா ஒரு மெயில் போட்டோ அனுப்புனீங்க இல்ல அதுல ரெண்டு வெள்ளகாரி மேல கை போட்டுக்கிட்டு .....அந்த போட்டோவ ஏன் இதுல போடல மக்கா ........//
உஸ்... பப்ளிக் பப்ளிக்

@ தில்லு முல்லு
// ஆமா மச்சி ..,வெறும் டால்பின் மட்டும் தான் தீவுல இருக்குதா ..,மீன் எதுவும் இல்லையா//
ஆக்டோபஸ் இருக்கு... வேணுமா?

@ TERROR-PANDIYAN(VAS)
//
//வெளிநாட்டினர் டீசண்டாக படகில் நிழலில் அமர்ந்து கொண்டனர்//
அப்பொ மொரிஷியஸ்ல நீ மட்டும் உள்நாட்டுகாரனா? :))//
கிர்ர்ர்ர்ர்... எப்படி எழுதுனாலும் வெட்டுறானே

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// படகு நடுகடள்ள நிக்கும்போது இறங்கி தள்ளினதா கேள்விப்பட்டனே?//
அட நான் ஹீரோனு சொன்னதுக்காக இப்படி விஜய் பட சீனை எல்லாமா சொல்லுறது?

அருண் பிரசாத் said...

@ சுசி
// அற்புதமான பயணம் அருண்..

அழகான படங்கள்.//
நன்றி சுசி

@ அனு
//பேசாம மொரிசியஸ்க்கு ஒரு வாரம் பொட்டிய கட்டிட வேண்டியது தான்.. ஊர் காசு தராமயா விட்டுடுவீங்க...//
அட உங்களுக்கு தராமலா? டிக்கெட் கேக்காம விட்டீங்களே அதுக்காகவே ஊர் காசு உண்டு

@ அன்பரசன்
//காரியத்தில கண்ணா இருக்கீங்களே...//
பின்ன போன வேலை முக்கியம் இல்ல

@ philosophy prabhakaran
// unlimited meals மாதிரி சொல்றீங்களே... வயிற்றெரிச்சலாக இருக்கிறது...//
அதிகமா குடிச்சதான் வயிறு எறியும் பிரபா

அருண் பிரசாத் said...

@ Lakshmi
// படங்களும் கட்டுரையும் நல்லா இருக்கு. நாங்க கூட கோவாவில் கடலில் இதுபோல டால்பினைத்தேடிப்போனோம். ஒன்னொன்னும் துள்ளிக்குதிக்கும் அழகை சொல்லவே முடியாது.//
உண்மைங்க...அதோட அழகே அழகு

@ இந்திரா
// புகைப்படங்களெல்லாம் நல்லா இருக்கு..
என்ஜாய் பண்ணுங்க.//
நன்றி இந்திரா

@ கக்கு - மாணிக்கம்
// அருண் ..எங்க உங்கள ஆளையே காணோம்?//
நான் கேக்க வேண்டிய கேள்வி நீங்க கேட்டுடீங்க... என்ன பதில் சொல்ல?

Arun Prasath said...

வடை தந்த வள்ளல் வாழ்க

அனு said...

//அட உங்களுக்கு தராமலா? டிக்கெட் கேக்காம விட்டீங்களே அதுக்காகவே ஊர் காசு உண்டு//

ஊர் காசுன்னு நான் சொன்னது டிக்கட் ஃபேரை தான் :) இங்க இருந்து அவ்வ்வ்வளவு தூரம் உங்களைப் பாக்க கிளம்பி வர்றோம்.. டிக்கெட் நாங்க எடுத்தா நல்லாவா இருக்கும்?

ப்ரியமுடன் வசந்த் said...

ஒரே போஸ்ட்ல போட்ருக்கலாம்ல மாம்ஸ்! :(


போட்டோஸ் நல்லாருக்கு..