Cricket Countdown....

Friday, September 10, 2010

தடம் மாறும் பண்டிகைகள்...

விநாயக சதுர்த்தி - எனக்கு பிடித்த பண்டிகைகளில் முதலாவது இடத்தை பிடிக்கும் பண்டிகை. சிறு வயது முதலே முழுமுதற்கடவுள் விநாயகன் மீது ஒரு வித தனி ஈடுபாடு. அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா என இன்று வரை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. என் 3 வயதில் ஒரு பிள்ளையார் பொம்மையை தலையில் வைத்து கொண்டு வீடு முழுவதும் சாமி வருது சாமி வருது என்று சுற்று வேணாம், என் அம்மா சொல்வார்கள் (அதை போட்டு உடைத்ததும் நான்தான் என்றும் சொன்னார்கள்). 


பள்ளி பருவத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகர் செய்யும் இடத்தில் அமர்ந்து அவர்கள் செய்வதை வெகு நேரம் வேடிக்கை பார்த்து, பின் அவர்களிடம் சிறிது களிமண் வாங்கி வந்து நானும் பிள்ளையார் செய்கிறேன் என்று ஒரு வித உருவத்தை செய்து (பிள்ளையார் பிடிக்க குரங்கு) அதையும் அடம் பிடித்து வீட்டு பிள்ளையாருடன் வைப்பதும், அந்த பிள்ளையார் கண்களை சேகரித்து வைப்பதும் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.

வாலிபத்தில் விநாயகசதுர்த்திக்காக இளைஞர் நற்பணி மன்றத்தை கூட்டி நன்கொடை வசூலித்து பெரிய விநாயகர் சிலை வைப்பதும், அதற்கு இரண்டு பேர் DUTY போட்டு இரவில் காவல் இருப்பதும், ஐந்தாம் நாள் ஆட்டம் பாட்டத்துடன் அதை குளத்தில் கரைப்பதும் - அனுபவித்தால் தான் தெரியும் அந்த குதூகலம்.


ஆனால் இன்று யோசிக்கும் போது, நம் குழந்தைகள் இதை எல்லாம் அனுபவிக்கிறார்களா? பணத்திற்காக நாடு தாண்டியும், நகரத்திற்கு இடம் மாறியும் இருக்கும் நாம் இதை ஒரு கதையாக சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டோம். நம் குழந்தைகள்,  இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்?

இன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.

களிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.

சுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்?


இனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு.

அடுத்து, மனிதர்களை காக்க கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற காலம் போய் இப்பொழுது கடவுள் சிலைகளை காக்க போலிஸ் காவல் வைக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.


அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.


அனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இது என் 50வது பதிவு

41 comments:

செல்வா said...

நான்தான் முதல் ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

முத வெட்டு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

50 க்கு வாழ்த்துக்கள் தல ..,

ஜெயந்த் கிருஷ்ணா said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன்... 50 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே...

மதன் said...

பண்டிகைங்கறதே எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கொண்ட்டாட தாங்கறது மாறி தொலைக்காட்சியில சிறப்பு நிகழ்ச்சி பாக்குற நாளா மாறி போச்சு உண்மையான வார்த்த....

விடுங்க தல....விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்....நாமாவது பண்டிகையோடு உள்ளர்த்தம் உணர்ந்து கொண்டாடுவோம்...

எல் கே said...

aimbathukkum, vinayagar saturthikkum en vaalthukkal

சௌந்தர் said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan said...

//களிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.

சுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்?//

//இன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.//

சரியாச் சொன்னீங்க.. எப்பத்தான் இந்த கொசுத் தொல்லை ஒழியுமோ ? தெரியளிடா சாமி..
"விநாயகச் சதுர்த்தியை முன்னிட்டு.. சிறப்பு நிகழ்சிகளை காணத் தவறாதீர்கள்" (கொடுமைட சாமி.. கொடுமை..)


//நம் குழந்தைகள், இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்?//

நாமளாவது, நம்ம பசங்களுக்கு பண்டிகைகளை சொல்லித் தெரிய வைப்போம்.. அப்பத்தான் அவங்களும் பின்னாடி அடுத்த தலைமுறைக்கு சொல்லுவாங்க..

//இனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு. //

try பண்ணிட்டாப் போச்சு.. 'ரெடி ஸ்டார்ட் மியுசிக்..'

என்னது நானு யாரா? said...

அருண்!விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன்... 50 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்!

நல்ல ஒரு சமூக மறுமலர்ச்சி கருத்துடன் விநாயகர் சதூர்த்தி வாழ்த்தை சொல்லி இருக்கீங்க. எல்லோரும் இதனை Follow செய்தா எவ்வளவு நல்லா இருக்கும். நல்லது நடக்கும் என நம்புவோம்!!!

செல்வா said...

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.!
உண்மைலேயே விநாயகர் சதுர்த்தி மட்டும் அல்ல , அனைத்து விழாக்களிலும் இந்த தொலைக்காட்சிதான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது கசப்பான உண்மை.!
இனிப்பான ஒரு செய்தி என்னவென்றால் நம்ம அருண் அண்ணனோட 50 வது பதிவுல முதல் கமெண்ட் போட்டதுக்கு எனக்கு ட்ரீட் வைக்கப்போறார்.. அதுதான் ..!! அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி அருண், என்னோட draft ல இருந்து ஏன்யா போஸ்ட்-ட திருடினே. இது உங்களுக்கே நல்லா இருக்கா? போலீஸ் கிட்ட திருடுறதே உங்க வேலையாப் போச்சு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50-வது பதிவு. அந்த விநாயகர் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொரிசியஸ் ல இருந்து நம்ம செல்வா பயலுக்கு கொழுக்கட்டை அனுப்பி வைங்க தல. நம்மள ஊசி மாதிரி குத்தி கொல்றானே. அவனுக்கு ஊசி போன கொழுக்கட்டைகொடுப்போம்.

துளசி கோபால் said...

//நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.//

நாம் இருக்கும்வரை செய்வோம். நமக்குப்பின் தொடருமா என்பது சந்தேகம்.

ஒருவேளை இந்தியாவில் தொடரும். வெளிநாடுகளில் வீட்டில் செய்யும் விசேஷங்கள் தொடர வழி இல்லை என்னைப்பொறுத்தவரை:(

மங்குனி அமைச்சர் said...

விநாயகர் சதுர்த்தி , மற்றும் 50 - க்கு வாழ்த்துக்கள்

Gayathri said...

ஐம்பதாவது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

உங்க ஆதங்கம் நியாயமானதுதான்..சுற்றுப்புற சூழல் பற்றிய எண்ணமே பாதிபெருக்கு இல்லை...பண்டிகைகளின் பெயரை வைத்துக்கொண்டு இந்த தொ(ல்)லைக்காட்சிகள் அடிக்கும் லூட்டி தாங்க முடியல...


விநாகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

கருடன் said...

ஆமங்க அருண், சரிங்க அருண், நல்ல கருத்துங்க அருண், கலக்கிட்டிங்க அருண், வாழ்த்துகள் அருண், வறேனுங்க அருண்...

கருடன் said...

//அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா//

அப்போ நீ பிள்ளையார கலாய்க்கர??

கருடன் said...

//அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.//

நல்ல கருத்து!! அமோதிக்கிறேன்.... :)

GSV said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களுடன்....50 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

G.S.V

கருடன் said...

//டிஸ்கி: இது என் 50வது பதிவு//

மச்சி இப்பொ நான் உனக்கு கருத்து சொல்றேன் கேள்.... உன்னை மாதிரி நல்ல திறமை, சிந்திக்கிற சக்தி இருக்கவங்க 50 பதிவு எழுதறது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை... நீ 500 பதிவு எழுதிட்டு நன்றி தெரிவிச்சி ஒரு பதிவு போடு.... 500க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!!

(யோ!! உன்ன நம்பி பப்ளிக்ள ஓவரா பேசிட்டேன்.. மானத்த காப்பாத்து..)

சுசி said...

//எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. //

எனக்கும் இந்த வழக்கம் இருக்கு :)

முனியாண்டி பெ. said...

வாழ்த்துக்கள் இரண்டுக்கும்

சாந்தி மாரியப்பன் said...

இரண்டு வாழ்த்துக்கள்.

எங்கூர்ல இந்த வருசம் eco friendly புள்ளையார்களை நிறையபேர் கேட்டு வாங்க ஆரம்பிச்சிருக்காங்க.

புதியஜீவன் said...

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

Unknown said...

ஐம்பதுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

50-க்கு வாழ்த்துக்கள்..

அருண்..!! வர வர நீங்க ரொம்ப
கெட்டு போயிட்டீங்க..
நல்ல., நல்ல கருத்துள்ள
பதிவா போட ஆரம்பிச்சிட்டீங்க..

உங்களை சங்கத்தில இருந்து நீக்க
அனுவுக்கு பரிந்துரை செய்கிறேன்..

Desikadasan said...

ஐம்பதுக்கு வாழ்த்துகள், அருண்!
விநாயக சதுர்த்திக்கு சிறப்பு வாழ்த்துகள்!

கும்மாச்சி said...

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்.

Anonymous said...

I have told my family members not to watch the TV programmer during festival days. The first year was bit tough as we literally don't know what to do after the pooja. When we tried to call our relatives/friends, everybody was watching tv. Later we have talked to our relatives and friends to follow what we are doing and currently it is the 4th year running as we switch off the TV the whole day during festival. Hope everyone can do the same.

அனு said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்!!!

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!

அருமையான பதிவு போட்டதற்கு இன்னொரு வாழ்த்து!!

எங்க காலனியிலும் இந்த தடவை eco friendly பிள்ளையார் தான்...

அருண் பிரசாத் said...

50 வது பதிவிற்கு வாழ்த்தியதற்கும், விநாயகசதுர்த்தி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

Unknown said...

hey 50 followersai

thodarnthu

50vathu padivirukum

ganesh saduthirthikum valthukkal.

மார்கண்டேயன் said...

இந்த 50 வது பதிவுக்கு என்னோடது 35 வது பின்னூட்டம், வாழ்த்துகள், வெளிநாடெல்லாம் போயிர்க்கீங்க, மருதைய பத்தி எழுதிர்க்கேன், நேரமிருந்தா நம்ம கடையில வந்து பாருங்க . . .

அ.முத்து பிரகாஷ் said...

சுற்று சூழல் குறித்தும் சட்டம் ஒழுங்கு குறித்தும் தாங்கள் கொள்ளும் கவலையில் பங்கு கொள்கிறேன் ... விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள் தோழர் !

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
உங்கள் 50 ஆம் பதிவிற்கும் வாழ்த்துக்கள்...
"கடவுள் மனிதனைக் காத்தது போய்....கடவுள் சிலையை காக்கும் போலீஸ் மனிதர்கள்..."
அருமையா சொன்னிங்க.. பகிர்வுக்கு நன்றி..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
உங்கள் 50 ஆம் பதிவிற்கும் வாழ்த்துக்கள்.
"கடவுள் மனிதனைக் காத்தது போய்....கடவுள் சிலையை காக்கும் போலீஸ் மனிதர்கள்..."
அருமையா சொன்னிங்க.. பகிர்வுக்கு நன்றி..

கருடன் said...

ஆமாம் அருண், பண்டிகைகள் தடம் மாறிவிட்டது உண்மைதான். இப்பொழுது சிலர் கோகுலாஷ்டமிக்கு எல்லாம் Cake வெட்டி கொண்டாடுறாங்க

dheva said...

வினாயகர் சதுர்த்தி.....

சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு...

இப்டியே பாத்துட்டு போனா 50 வது பதிவு வேறயா.. தம்பி.. அடிச்சி பிடிச்சு 50 பிடிச்சுட்ட.. ! சரி நான் எல்லா போஸ்ட்டையும் எண்ணி பாத்துட்டு வர்றேன்.. நீ எதும் கள்ள ஆட்டம் ஆடியிருக்கியான்னு பாத்துட்டு வர்றேன்....

...

...

...

...

அட ஆமா.. 50 போட்டு இருக்கான் அரும்பாடு பட்டு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வாழ்த்துக்கள் தம்பி!

சசிகுமார் said...

//எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.//

நண்பா இப்போல்லாம் சிறுவர்கள் கூட நம்மை மடக்கும் அளவிற்கு புத்திசாலிகளாக உள்ளனர் என்பதற்கு சமி ஒரு எடுத்துகாட்டு. குழந்தையின் படமும் சேர்த்து போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் நண்பா.