Cricket Countdown....

Monday, January 31, 2011

எச்சரிக்கை - உங்களுக்குதான்...

அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை

இத்தனை நாட்களாக மொரீசியஸ்ல் மையம் கொண்டு இருந்த புயல் சற்றே தீவிரமாகி, வடமேற்கே நகர்ந்து, நாளை இந்திய நேரம் காலை 6.30 மணி அளவில் சென்னையை தாக்கப்போகிறது. இதனால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் நன்மையே நடக்க இருக்கிறது. பிறகு அந்த புயல் கோவையில் கொஞ்ச நாளும், வந்தவாசியில் கொஞ்ச நாளும் அருள் மழை பொழிந்து அவ்வப்பொழுது சென்னையையும் தாக்கும் என அறிவிக்கப்பபடுகிறது. அந்த புயலுக்கு அருண்பிரசாத் என பல வருடங்களுக்கு முன்பே பெயரிடப்பட்டுவிட்டது.

@ ஆல்,

கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்...

ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க! 


அட, நான் ஒன்னும் உங்க கிட்ட பெருசா எதிர் பார்க்கலைங்க, நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம். நான் தான் பரவாயில்லப்பா மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும், நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)

என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும், அதை சமாளிக்க மொரீசியஸ் மக்கள் இப்போவே என் காலடி மண்ணை கொண்டு போய் எரிமலைய சுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் எரிமலைங்க பயந்து உள்ளவே இருக்குமாம். சே... இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிட்டு இருக்கு!  சாரி.....சாரி..... தப்பா டைப் பண்ணிட்டேன்.... (என்ன கெட்ட பழக்கம் அது, அடிச்சி வெச்சதை படிக்கறது...ராஸ்கல்ஸ்) சே.... எவ்வளவு மரியாதை நம்ம மேல!  ஒரு மாசத்துல திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டேன். வந்தவுடனே பெரிய விழா எடுக்க போறாங்களாம். அதை தனி பதிவா மார்ச் 1, 2011 அன்னைக்கு சொல்லுறேன். (மகாசிவராத்திரி திருவிழாவை நமக்கான விழா தான்னு சொன்னா யாராவது வந்து பார்க்கவா போறாங்க...அருண், அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா)

சரி, அண்ணண் தரிசனம் வேண்டுறவங்க, அண்ணண் ஆட்டோகிராப் தேவைபடுறவங்க, அண்ணணுக்கு ஊர்காசு தர விருப்பபடுறவங்க (எத்தனை முறை சொல்லுறது அண்ணண்னு சொன்னா அது நான் தான், திரும்ப திரும்ப கேட்டுகிட்டு)  எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் , டிராபிக் ஜாம் ஆக கூடாதுனு சொல்லி ரஜினிகாந்து, டாக்குடரு தம்பி, கலிஞ்சருனு யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். பார்த்து சூதனாம நடந்துக்கோங்க இன்னொரு மகர ஜோதி டராஜடி சென்னைல வேணாம்.

இருங்க, இருங்க, ஒரு நிமிஷம் அங்க ஏதோ சத்தமா இருக்கு என்னானு பார்த்துட்டு வரேன்.

எலேய்ய்ய்ய்ய்ய்ய்...... யார்ரா அது என் பிளாக்கை இப்போவே ஏலம் போட ஆரம்பிச்சிட்டது? நடக்காது மகனே, நடக்காது. பிளாக்கை மூடி யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன், பதிவுகள் வழக்கம் போல வரும். 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி. சிங்கம் தூங்கினாலும் பதிவு சும்மா ஜிவ்வுனு வரும் (மறுபடியும் பாரு, அட சிங்கமும் நான் தாங்க)

சரி, அடுத்த 3 வரிகளை யாரும் படிக்காதீங்க, அது டெரருக்கு மட்டும்தான் (நீங்க பதிவையே படிக்கலைனு தெரியும் இருந்தாலும் லைட்டா ஒரு பிலடப். லைட்டாதான்பா)

@ டெரர்
மச்சி, டாக்சி புக் பண்ணகூட சென்னைல எனக்கு ஆள் இல்ல. ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியுமானு பாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அப்பாடி எழுதி அடிச்சிட்டேன், இப்போ யாராலும் படிக்க முடியாதே படிக்க முடியாதே....)

சரி எல்லோரும் கேட்டுக்கோங்க அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்.... என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க.


BYEEEEEEEEEEEEEE.........

Thursday, January 27, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 5

கடந்த ஒரு வாரமா ஆபிஸ்ல இண்டர்நெட் பிராப்ளம். அதுக்காக வழக்கமா பொதுமக்கள் அறிவை(?!?!) வளர்க்க போடுற நம்ம சினிமா புதிரை போடாம விட்டுட முடியுமா. அதான் பல போராட்டங்களுக்கு (எதுக்கெல்லாம் போராட வேண்டி இருக்குது!) மத்தியில இதோ தயாராகிடுச்சி

இந்த முறை சுலபமா, கடினமானு கணிக்க முடியல. இருந்தாலும் முயற்சி பண்ணுங்க. முடியலைனா க்ளூ நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். 



உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.


1.

2.

3.

4.

5.

6. 

7.

8.

9.

10.


Courtesy Questions:

11.
 Courtesy: அனு

12.
Courtesy: எஸ். கே

Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி 1 : என் இண்டர்நெட் பிராப்ளம் இன்னும் முழுமையாக சரியாகாததால் உங்கள் விடைகள் சரியா இல்லையானு உடனே சொல்ல முடியாம போகலாம். எதுக்கும் comment subscribe போட்டு வச்சிக்கோங்க. எப்போலாம் நெட் ஒர்க் ஆகுதோ அப்போ பதில் போடுறேன்.

டிஸ்கி 2: கமெண்டையும் விடைகளை ஒரே கமெண்டில் போடுவதால் சில கமெண்ட்டுகளை வெளியிட முடியவில்லை. கருத்துக்களை தனி கமெண்ட்டாகவும் விடைகளை தனி கமெண்ட்டாகவும் போடவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.



Wednesday, January 19, 2011

மொரீசியஸ் தைப்பூசக்காவடி...

முஸ்கி: நாளைக்கு தைப்பூசம்

மலைக்கோவில்
தேர்
மொரீசியஸ்ல தமிழ் ஆட்சிமொழினு ஒரு பதிவுல சொல்லி இருந்தேன். தமிழர்களும் அதிகம். தமிழ் கடவுள் முருகன் மேல அளவுகடந்த பக்தி உள்ளவர்கள். பெரும்பாலானவர்களுக்கு சிவனும், முருகனும் குலதெய்வமாக இருக்கிறார்கள். தைப்பூச காவடியும், மகாசிவராத்திரியும் இங்கு தமிழ் நாட்டை விட வெகு விமரிசையாக கொண்டாடுறாங்க. இந்த இரண்டு விழாவுக்கும் அரசு விடுமுறை இருக்குதுனா பார்த்துக்கோங்க.



வரும் நாளைக்கு (ஜன்வரி 20) இங்க தைபூச காவடி. சென்ற வருடம் நான் இங்க வந்த புதுசுல பார்த்து அசந்து போயிட்டேன். இங்க பல தமிழர் கோவில்கள் இருக்குது. முருகன், துர்கை, சிவன் தான் பிரதானம். கோவிலுக்கு தமிழ் பேசும் குருக்கள்களை இந்தியா, இலங்கை பகுதில இருந்து வர வைக்கறாங்க.

காவடி ஊர்வலம்

கட்டர்போன்ஸ் (Quatre Bornes) என்ற இடத்துல இருக்கற முருகன் மலை கோவில் கொஞ்சம் பிரசித்தி பெற்றது. போன வருஷம் காவடிக்கு அங்க போயிருந்தேன். நம்ம தமிழ் நாட்டு கோவில மாதிரியே கட்டிட அமைப்பு, மலை மேல முருகன், தமிழ் குருக்கள், பாலாபிஷேகம் என தமிழ் நாட்டுல இருந்த உணர்வு.
ஆணி செருப்பு


காவடியும் நம்ம ஊர் மாதிரியே பால் காவடி, பழக்காவடி, வேல் காவடி, புஷ்பகாவடினு அமர்களபடுத்தினாங்க. இதுக்காக 10 நாள் விரதம்லாம் இருப்பாங்கலாம். எல்லாரும் காவடி எடுத்துக்கிட்டு ஊர்வலமா ஆட்டம் பாட்டத்துடன் வந்தாங்க. பெண்கள், நம்ம ஊருல இப்போலாம் விஷேசநாட்கள்ல கூட பார்க்க முடியாத டிரெடிஷனல் தாவணி, பாவாடை சட்டைல வந்து இருந்தாங்க.

சுவாமி வீதியுலா


(இதுக்கு தான் ரமெஷ் கூட சேர கூடாதுனு சொல்லுறது.  வெறும் படத்தை வெச்சி பதிவு போடுற வியாதி  தொத்திக்கிச்சே... சே...)

டிஸ்கி: கமெண்ட்ல அரோகரா போட தடை விதிக்கப்படுகிறது.


Wednesday, January 12, 2011

பதிவுலக பஞ்ச் டயலாக் (Courtesy: ரஜினிகாந்த்)

தலைவர் பாணியில் சில பதிவுலக பஞ்ச் டயலாக்ஸ்:




மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....

உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்

கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்

மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்

எப்பவாச்சும் பதிவு போடுறது சிலர் பாலிசி
அடிக்கடி பதிவு போடுறது பலர் பாலிசி

---------------------------------------------------------------------------------------
கொஞ்சம் தத்துவங்கள்:

பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது

சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்

ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது

பதிவு படிகறவங்க எல்லோரும் ஓட்டு/கமெண்ட்டு போடமாட்டாங்க
சில சமயம் ஓட்டு/கமெண்ட்டு போடறவங்க பதிவை படிக்கமாட்டாங்க

10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்

 ----------------------------------------------------------------------------
பிரபலபடங்களின் பஞ்ச்:


நீ முந்திட்டா நோக்கு, நான் முந்திட்டா நேக்கு

வியட்னாம் வீடு  - சிவாஜி
பதிவுலகம் -  வடை

நீங்க நல்லவரா? கெட்டவரா?
நாயகன் - கமல்
பதிவுலகம் - டெரர் பாண்டியன்


Friday, January 7, 2011

2010 - சில நினைவுகள்



நண்பர் பாலாஜி சரவணா, 2010ல் என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை எழுதுமாறு ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார். உண்மையிலேயே 2010 என் வாழ்வில் மிகச்சிறந்த ஆண்டாகவே இருந்துச்சி. ஒரு செண்டிமெண்ட் காரணமாக நான் டைரி எழுதும் பழக்கத்தை விட்டுவிட்டுடேன், அதனால எல்லா விஷயங்களையும் சொல்ல முடியுமானு தெரியலை. முடிஞ்ச அளவு நினைவுக்கு வரும் விஷயங்களை சொல்லுறேன்.

ஆண்டு தொடக்கமே என் வாழ்க்கையின் நீண்ட நாள் கனவான வெளிநாட்டு பயணம் + வேலையில் தான் ஆரம்பிச்சுச்சு. ஆமாங்க, மொரீசியஸ் வேலைக்கு சேர்ந்தது ஜனவரி 5 ல தான். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைனு எல்லோரையும் பிரிஞ்சி மொரீசியஸ் வந்து சேர்ந்தேன். சொந்த மண் மற்றும் சொந்தங்களை பிரியரனேன்னு  ஒரு வருத்தம் இருந்தாலும் ஒரு புதிய அனுபவம் கிடைச்சி இருக்கேனு ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தான் செஞ்சிச்சி.


எனக்கு கல்யாணம் ஆன பின்னாடி என் மனைவிய பிரிஞ்சிருந்த 18 மாச பிரிவு முடிவுக்கு வந்துச்சி. வேலை விஷயமா ஹைதராபாத், விசாகபட்டினம்னு ஆந்திரா முழுசா சுத்தி வாராவாரம் சென்னைக்கு வந்துட்டு போயிட்டு (கிட்டதட்ட வாரத்துக்கு 4 நாள் தலா 700 கிமீ பயணம்) இருந்தது முடிவுக்கு வர, மார்ச் மாசம் மனைவியும் என் குழந்தையும் என் கூடவே இருக்க மொரீசியஸ் வந்ததாங்க. இதுதான் என் ஒட்டு மொத்த வாழ்க்கையின் மிக மிக சந்தோஷமான நிகழ்வு.


அலைஞ்சி திரிஞ்ச வேலை நின்று, ஒரே இடத்தில் வேலை செய்யும் சூழலும் உருவாச்சி. என் இத்தனை வருட தொழில் அனுபவத்துக்கு அங்கிகாரம் கிடைச்சதும், என் திறமைகளை காண்பிக்க ஒரு நல்ல இடமும் அமைஞ்சதும் இந்த வருடம்தான்.


சும்மா இருந்தவனை சொறிஞ்விட்ட மாதிரி... சும்மா நெட்டுல மேஞ்சிட்டு இருந்தப்போ பிளாக் பத்தி தெரிஞ்சி அதை ஆரம்பிச்சி உங்களை எல்லாம் டார்சர் பண்ண ஆரம்பிச்சதும் 2010ல தான். ஆனா, இந்த பிளாக் தயவால கிடைச்ச நண்பர்கள் பட்டாளம் உலகம் முழுக்க இருக்குது. இன்னைக்கு நான் எந்த நாட்டுக்கு போனாலும் என்னை தேடி வந்து அடிக்க ஆள் தயாரா இருக்காங்க.


அவ்வளவுதாங்க நினைவுக்கு வருது.... ஆங்...கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிகறேனே பிளிஸ். இதையும் கேட்டுருங்க ப்ளீஸ். என்னது மாட்டீங்களா, நான் பல்பு வாங்கறது பத்திங்க. ஓ அப்போ கேகறீங்களா? என்னா வில்லத்தனம்! என் பொண்ணு கையால நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா பல்பு வாங்கிட்டு இருக்கறேன். இனியும் வாங்குவேன், சும்மாவா எத்தனை பேருக்கு பல்பு கொடுத்து இருக்கேன். பொண்ணு கையால பல்பு வாங்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தாங்க செய்யுது.....


இது தொடர்பதிவாமே, யாரையாவது மாட்டிவிடலைனா பதிவுலக தொழில் தர்மம் ஆகாது அதனால யார்கிட்டலாம் 2010 ல வாங்கி கட்டிகிட்டேன்னு சொல்லவராங்க,


அருண்பிரசாத் (ஜூனியர்)
தலைவர் எஸ் கே
பாசமலர் சுபத்ரா
மச்சான் டெரர் பாண்டியன்