என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா. இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். (குழந்தை பயப்படாதே? என கேட்க கூடாது)
அன்று காலை மகள் விளையாடி கொண்டிருந்தால், நானும் ஏதோ வேலை செய்து கொண்டே இந்த பாடலை பாட ஆரம்பித்தேன். திடிரென குழந்தை அழ ஆரம்பிக்க, என் மனைவி சமாதானபடுத்த முயன்றும் முடியவில்லை. இதை பார்த்து நான் பாடியதை நிறுத்தியதுதான் தாமதம். அவளும் அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
என்னா வில்லத்தனம்?
குறும்பு 2:
அன்று பிரேசிலுக்கும் ஹாலாந்திற்கும் இடையேயான உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி. பரபரப்பான கடைசி 10 நிமிடங்கள். ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க, பிரேசில் ஒரு கோலை எப்படியாவது போட்டுவிட போராடி கொண்டிருந்தது. மணி இரவு 8 இருக்கும்.
விளையாடி கொண்டிருந்த என் மகள், என்னை இருமுறை அழைத்தாள். தொலைக்காட்சியில் கவனமாக இருந்த நான் அவளை கண்டுகொள்ளவில்லை. உடனே, வேகமாக என்னிடம் வந்து, ஏதோ மழலையில் என்னை திட்டி(?)விட்டு, என் கையில் இருந்த ரிமொட் கண்ட்ரோலை பிடுங்கினாள்.
அதை நேராக என் மனைவியிடம் கொடுத்து கார்ட்டூன் சேனலை மாற்ற செய்து, பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
என்னா வில்லதனம்?
குறும்புகள் தொடரும்....
40 comments:
இதையும் பதிவா போட்டு நம்மளை டார்ச்சர் பண்றாரே.. என்னா வில்லத்தனம்..
சும்மா. குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். என்னைப்போல...
me the 1st
தினமும் உங்க பாட்டை கேட்டு பயந்து தூங்கி இருப்பா
நீங்க செய்தது தான் வில்லத்தனம்
/// ஒரு வயது மகள் ஷம்ஹித்தா ///
என்ன தல ஹிந்தில சேட்டு பொண்ணுங்களுக்கு வக்கிற மாதிரி பேர் வச்சிருக்கீங்க
முதல் வெட்டு
ithu arunin villathanam not samhitta`s
@@@ Jey கூறியது...
// முதல் வெட்டு ///
அண்ணனுக்கும் தொப்பி எனக்கு தொப்பி ஹீ ஹீ
ithu arunin villathanam not samhitta`s
அடப் பாவிகளா காலங்காத்தால பல்பா... வெளங்கிரும்...
/// சும்மா. குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். என்னைப்போல... //
ரமேசு அண்ணே உங்க போட்டோவ நம்ம அருண் பொண்ணுகிட்ட காட்டி மாமா பாருன்னு சொன்னா :)
இந்த தாத்தா ரொம்ப ரொம்ப அழகா இருக்காருன்னு சொல்லுதாமே :)
//இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். //
நீ பாடுரத ஒரு வீடியோ கிளிப்பா போடு ராசா.. , இங்க பதிஉலகத்துல பாதிப் பேராவது அதக் கேட்டு காலியாடுவாங்க...
நீங்க வில்லத்தனம் செய்து விட்டு குழந்தை மேல ஏம்பா பழி போடுறே
//கார்ட்டூன் சேனலை மாற்ற செய்து, பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
என்னா வில்லதனம்?///
போய்யா போ ரொம்ப பீத்திகிடாதே..., அடிவாங்குனியா!!! இல்லையில்ல..., கைல கிடைக்கிறத தூக்கி உம்மேல எறியலையில்ல... சந்தோஷப் படு மக்கா...
Jey கூறியது...
முதல் வெட்டு//
@@@jey முதல் வெட்டு ரெண்டாவது வெட்டு ஆக மொத்தம் வெட்டு வெட்டு தான்
//இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். //
அந்த பிஞ்சு கொழந்த என்ன பாவம் செய்தது ??
இப்டி கொடும படுத்துறீங்க :)
நல்ல வேலை அத வீடியோவா போடலியேன்னு எல்லாரும் சந்தோசப் படுங்க :)
@ ரமெஷ்
//என்னைப்போல//
யாரு? யாரு?? யாரு???
@ செளந்தர்
நான் வில்லத்தனம் யார் செஞ்சதுனு சொல்லவே இல்லையே!
@ ஜில்லு
ஷம்ஹித்தா - வேதங்களின் தொகுப்பு.
சமஸ்கிரத பெயர்
///குழந்தை பயப்படாதே? என கேட்க கூடாது///
உங்களைப் பார்த்தே பயப் படாத குழந்தை பாட்டை கேட்ட பயப்படப் போகுது...
@ செளந்தர்
நான் வில்லத்தனம் யார் செஞ்சதுனு சொல்லவே இல்லையே!///
@@@அருண் நீங்க பாடியதே ஒரு வில்லத்தனம்
@ Anony
Thanks
@ ஜெய், ஜில்லு
பல்பு
@ jey
திங்கட்கிழமை காலைலயே, Have a Wonder ful week
@ ஜில்லு
//இந்த தாத்தா ரொம்ப ரொம்ப அழகா இருக்காருன்னு சொல்லுதாமே :)//
அப்படி சொன்னா பரவாயில்லை ஜில்லு, பூச்சாண்டினு அழுவுது!
//இதையும் பதிவா போட்டு நம்மளை டார்ச்சர் பண்றாரே.. என்னா வில்லத்தனம்..
சும்மா. குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். என்னைப்போல...///
ஒரே நேரத்துல ரெண்டு பொய் சொல்ல முடியாதுள்ள ..
அதனால ,,, முதலாவது ஒரு உண்மையும் இரண்டாவது ஒரு பொய்யும் சொல்லி இருக்கார்..
போய்யா போ ரொம்ப பீத்திகிடாதே..., அடிவாங்குனியா!!! இல்லையில்ல..., கைல கிடைக்கிறத தூக்கி உம்மேல எறியலையில்ல... சந்தோஷப் படு மக்கா...////
@@@jey அதெல்லாம் அடி வாங்குறார் அந்த ரிமோட் அப்படியே பறந்து வந்து முகத்தில் விழுந்து இருக்கும்
@ jey
//நீ பாடுரத ஒரு வீடியோ கிளிப்பா போடு ராசா.. ,//
ஏன்? எல்லாரும் தூங்கனுமா? நோ பிராப்ளம்
//கைல கிடைக்கிறத தூக்கி உம்மேல எறியலையில்ல... சந்தோஷப் படு மக்கா..//
அதை வெளில சொல்ல முடியாது மக்கா, இமேஜ் பிராப்ளம்
ஆஹா அருண் நீங்க ஒரு பாடகனா சொல்லவே இல்லை ..குட்டி செல்லத்தின் வில்லத்தனம் படிக்க நான் ரெடி மீதி எப்போ எழுதுவீங்க ?
நல்லவேளை இங்க ப்ளாக் மட்டும் இருக்கறதால தப்பிச்சோம் ..
இல்லனா இவரு பாடரதயும்ல கேக்கணும்..
ஹி ஹி . உங்க பொண்ணு பண்ணினதுதான் சரி..
இன்னிக்கு மேட்ச் பார்கலேன்னா நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிக்கலாம்.
ஆனா கார்டூன் அப்படி கிடையாதே ..?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..........
// அந்த Pretty Boy அனுப்பிய கதை // என்னவாயிற்று ?
அதுசரி .இந்த பால் வடியும் பிள்ளை அப்பாவா ஆகிட்டாரா?
சந்தோஷம்.
உங்க பெண்ணின் முகத்தை காட்டாமல் போட்டோ போட்டது மட்டும் வில்லத்தனம் இல்லையா??
உங்க வில்லதனத்தில பாதியாவது இருந்தா தானே! புலிக்கு பிறந்தது பூணையாகுமா அருண்!
நல்லா இருக்கு!
புது பதிவுகள் போட்டிருக்கேன்! வந்து பாருங்க அருண்!
@ mohamed
//உங்களைப் பார்த்தே பயப் படாத குழந்தை பாட்டை கேட்ட பயப்படப் போகுது//
உங்க கருத்துக்கு நன்றி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
வாங்க sandhya மாமி
ஓகே செல்வா
@ கக்கு-மாணிக்கம்
அடுத்த பதிவுல பொண்ணு போட்டோ போடுறேன்
@ என்னது நான் யாரா?
உண்மை. என் வாரிசு எப்படி இருக்கும்!
நீ பாட்டு எல்லாம் பாடுவியா...? தம்பி....ப்ளிஸ்... குழந்தைய நிம்மதியா வளரவிடு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
உனக்கு புட்பால் மேட்ச் ஒரு முக்கியமா...புள்ள கார்ட்டூன் பாக்கட்டும்.... நிம்மதியா!
உங்க பொண்ணாச்சே.
இதே விஷயத்தை கொஞ்ச வருஷம் கழித்து உங்க மக கிட்ட சொல்லுங்க, அப்போ வர சந்தோசம் இதை விட டபுளா இருக்கும்.
குழந்தைங்க சேட்டை, எப்பவும் குதூகலம்தான்!
நல்ல வேலை.. ரெண்டாவது மேட்டரு எங்க ஊட்டுல நடக்கவே நடக்காது..
---- '24 ' மணி நேரமும் pogo , சுட்டி, கார்ட்டூன் தானே ஓடிக்கிட்டு இருக்குது..
வில்லத்தனம் னு டைட்டில் போட்டதுக்கு உங்க பொண்ணுகிட்ட செம அடியாமே. வெங்கட் சொன்னார். அதான் டைட்டில் மாத்திடீங்களோ?
// ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க,
பிரேசில் ஒரு கோலை எப்படியாவது
போட்டுவிட போராடி கொண்டிருந்தது.
மணி இரவு 8 இருக்கும்.. //
அப்ப என்ன நடந்ததுன்னா...
ஷம்ஹித்தா மனசுக்குள்..
நம்ம அப்பா சுத்த லூசு..
இந்த மேட்ச் தான் 6 மணிக்கே
நடந்து முடிஞ்சி.,
ஹாலாந்து ஜெயிச்சிடுச்சே..
இது கூட தெரியாம
நம்ம அப்ப இந்த " Highlights -ஐ "
" Live Match-ன்னு நினைச்சி
பார்த்திட்டு இருக்காரே..?!! "
ம்ம்.. கடவுளே...!!
இவரு போயி எப்படி
எனக்கு அப்பாவா பொறந்தாரு..?!!
சரி நாமளாவது போயி சொல்லுவோம்..
அப்புறம் நடந்தது தான் இது..
// என் மகள், என்னை இருமுறை
அழைத்தாள். தொலைக்காட்சியில்
கவனமாக இருந்த நான் அவளை
கண்டுகொள்ளவில்லை.
ஏதோ மழலையில் என்னை திட்டி(?)விட்டு,
என் கையில் இருந்த ரிமொட் கண்ட்ரோலை பிடுங்கினாள். //
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.
வீட்டுக்கு வீடு லூட்டி...
பல்பு...
பல்பு...
பல்பு...
பல்பு...
ஒரு கடையே வெக்கலாம்.அவ்வளவு பல்ப் குடுத்துருக்காங்க...
ha ha ha ha......
Post a Comment