Cricket Countdown....

Friday, August 20, 2010

பதிவு போடுவது எப்படி?

முஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே, ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது.... (இப்படி ஒரு வரி போட்டாலே விபரீதம் இருக்குனு அர்த்தம்)


பிரபல பதிவர்(?!?!) ஆகிட்டாலே இந்த பிரச்சினைதான் (ஆகுறோமோ இல்லையோ நாமலே போட்டுக்க வேண்டியதுதான். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு ஒளவையார்(?!?!) சும்மாவா சொன்னாங்க) . வாரத்திற்கு 3 பதிவு வரணும், நமக்கு கமெண்ட் போடுற எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும். நமக்கு போடுற கமெண்ட்க்கு பதில் கொடுக்கணும். ரொம்ப குஷ்டம்பா, சே... கஷ்டம்பா....

சரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க. வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுரோம். வந்தா தானே எழுத முடியும். இந்த மாதிரி சமயத்துலயும், பதிவு போட மேட்டர் கிடைக்காமல் திணறும் போதும் எப்படி பதிவு போடுறதுக்கான ரகசியத்தை சொல்லவா?

1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க.

2. இருக்கவே இருக்கு, புதுசா எதாவது படம் வந்திருக்கும் அதை விமர்சனம் பண்ணுறேன்னு படத்தை தவிர தியேட்டர்ல பார்த்த மத்த எல்லா விஷயத்தையும் போடுங்க.

3. புதுசா வந்த சாப்ட்வேர், ரூபாய் சிம்பிள், ஆக்டோபஸ் ஜோசியம்னு மொக்கை போடுங்க

4. இது என்னோட 27 வது பதிவு, 83 வது பதிவு, 111 வது Followerனு ஒரு பில்டப் குடுத்து பதிவு போடலாம்

5. இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன், எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம்

6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம்

7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம்

8. பழைய குப்பைல, பரணை மேல இருந்து தேஞ்சி போன ஆடியோ கேசட் பொட்டி பார்த்து சினிமா புதிர் வைக்கலாம்

9. கவிதை எழுதுறேன் பேர்விழினு மத்தவங்களை டார்ச்சர் பண்ணலாம்

10. உங்களுக்கும் புரியாம, மத்தவங்களுக்கும் புரியாத மாதிரி கடவுள், ஜாதி, மதம், நாடு இப்படி பக்கம் பக்கமா எழுதி பதிவு போடலாம். அப்பதான் புரியும் ஆனா புரியாது

11. சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம்

12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம்

13. இந்த ஊருக்கு போன போது இப்படி இருந்துச்சு, அந்த ஊரு இப்படினு ஒரு பயண கட்டுரை எழுதலாம்

14. தமிழ் தப்பு தப்பா எழுதி பாதி புரிஞ்சி பாதி புரியாம ஒரு பதிவும், தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் ஒரு பதிவு போடலாம்

15. ஸ்கூல் படிக்கிறப்போ எப்படி டார்சர் கொடுத்தேன், இட்லி மாவு செய்யுறது எப்படி, பசங்க ஏன் இப்படி மாறாங்கனு யாருக்குமே தெரியாத விஷயத்தை பத்தி பதிவு போடலாம்

16. எதுவும், தேறலையா என்னை மாதிரி பதிவு போடுவது எப்படினு ஒரு பதிவு போடலாம்.

அடுத்து கமெண்ட் போடுறது எப்படினு விரிவாக நம்ம டெரர் பாண்டி எழுதுவார்.(ஏன்னா, அவர் தான் அதிகமா கமெண்ட் போடுறதா கூகுள் கம்பனில சொல்லி இருக்காங்க)

(@ Terror,

எலேய் மக்கா, பதிவுக்கு கிழே Post Comments, கருத்துரையிடுக என்ற இடத்தை கிளிக் செய்தா ஒரு பொட்டி வரும், அங்க போய் கமெண்ட் போடனும்னு மொக்கை போட்ட பிச்சி பூடுவேன் பிச்சி.

பதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க. (இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க) வர்ட்டா)

டிஸ்கி: சக பதிவர் தேசாந்திரி, தன் பதிவில் இதேபோல ஒரு பதிவை போட்டிருப்பதாய் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு பதிவின் கருவும் ஒன்றேயானாலும், இருவரும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.


132 comments:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

முத வீட்டு தலைவரே

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// 1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க.////

இது பட்டாபட்டி

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// இது என்னோட 27 வது பதிவு, 83 வது பதிவு, 111 வது Followerனு ஒரு பில்டப் குடுத்து பதிவு போடலாம் /////

இது
சூரியனின் வலை வாசல் அருண் பிரசாத்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன், எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம் ////
ஹி ஹி ஹி நம்ம ஜெய்

Jey said...

இப்படியும் ஒரு பதிவு?. இது ஒரு பொளப்பு..., ந்க்கொய்யாலே, ஆனி புடிங்கிட்டு வந்து உனக்கெல்லா உச்சி மண்டைல உளிய வச்சி இறக்குனாதான்லே சரிப்பட்டு வருவே...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// 6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம் ////
இது தான் ஆரம்பதிலேரிருந்து யாருன் தேடிகிடுயருகேன் ...நம்ம மங்குனி, ஜெய் எல்லாம் தொடர் பதிவு போடுது

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// 12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம் ////

ஹி ஹி ஹி .....,

ப்ரியமுடன் வசந்த் said...

;)

அருண் இன்னும் ஜெய்கிட்ட கேட்டுப்பாருங்க நிறைய சொல்வார்

இல்லியா பங்கு?

dheva said...

டேய்.......................பாயின்ட் நம்பர் 9 யார பத்தி எழுதி இருக்க...........?

ஏய்யா...எப்படி எல்லாம் யோசிகிறாய்ங்க...பாருங்க....! தட மாதிரு ஒரு சட்டம் போட்டாதான் சரியாகுமோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

என்னது நானு யாரா? said...

சூப்பரு தல! மௌரிஷியஸ் நாட்டில ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ? எல்லா பாயிண்ட்ஸ்சும் அருமை. பதிவு முழுசா, எல்லாருடைய கால வாறிவிட்டு இருக்கீங்க. அதுவும் அம்மா கார்டூன் செம தூள். எங்கே பிடீச்சீங்க அந்த கார்டூனை.

உண்மையாளுமே சிரிப்புங்க. வெரி குட்! வெரி குட்!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////// 7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம்/////

நம்ம ஜெய்லானி

dheva said...

ஜெய்.........@ உங்கள டார்ச்சர் பண்றதே வேலைய போச்சு இவுங்களுக்கு....அருண்...@ உன்ன நடு மண்டைல ஆப்பு அடிச்சா பாக்க எப்படி இருப்ப...?ஹா....ஹா...ஹா!

சௌந்தர் said...

டேய்.......................பாயின்ட் நம்பர் 9 யார பத்தி எழுதி இருக்க...........?///

@@@தேவா அண்ணா உங்களை தான் சொல்றார் விடாதிங்க

Unknown said...

Aa Aa, Aa kaa

ப்ரியமுடன் வசந்த் said...

@ சௌந்தர் பாயிண்ட் நம்பர் 10தான் தேவா :)

ப்ரியமுடன் வசந்த் said...

// பனங்காட்டு நரி கூறியது...
/// 6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம் ////
இது தான் ஆரம்பதிலேரிருந்து யாருன் தேடிகிடுயருகேன் ...//

:)))))))))))))))) தேடாதீங்க பாஸ் கிடைச்சா பாவம் நொந்துடுவீங்க...!

சௌந்தர் said...

10.வது தேவா அண்ணன் தான் போட்டு இருக்கலம்

Madhavan Srinivasagopalan said...

//சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம்//

வடிவேலு இதக் கூட ஒரு படத்துல செஞ்சுட்டாரே.

அருண் பிரசாத் said...

@ தேவா

அண்ணே உங்களது 10வது பாயிண்ட்

ஜில்தண்ணி said...

// 8. பழைய குப்பைல, பரணை மேல இருந்து தேஞ்சி போன ஆடியோ கேசட் பொட்டி பார்த்து சினிமா புதிர் வைக்கலாம் ///

சினிமா புதிர் சிங்கம் சிரிப்பு போலீசையே ஓட்டுறீங்களா :)

தல சீக்கிரம் வாங்க :)

dheva said...

ப்ரியமுடன் வசந்த்...@ பங்காளி... பாயின்ட் நம்பர் 9ம் நான்...10 நானா...

காப்பாத்துங்க....பங்ஸ்...! ஆமா நீங்க எத்தனாவது பாயிண்ட்...!

அருண் பிரசாத் said...

@ தேவா

நம்ம வசந்த், 6 வது பாயிண்ட்

ப்ரியமுடன் வசந்த் said...

dheva கூறியது...
ப்ரியமுடன் வசந்த்...@ பங்காளி... பாயின்ட் நம்பர் 9ம் நான்...10 நானா...

காப்பாத்துங்க....பங்ஸ்...! ஆமா நீங்க எத்தனாவது பாயிண்ட்...!
/////

ஆவ்வ்வ்வ்வ்வ்

பங்காளியா?

ஏற்கனவே ஒரு பங்காளி ஜெய் என்கிட்ட மாட்டிகிட்டு பாடுபடறார் நீங்களுமா? என்னிடம் இருந்து உங்களை கடவுள் காப்பாற்றுவாராக பங்காளி :))

அருண் சொன்னதுதான் ஆறு...

dheva said...

அருண்....@ ஒரு கவிதை எழுதணது புரியலேண்ணா.....அதுக்காக


இந்த கும்மாடா கும்முவ....!

ஜில்தண்ணி said...

// 7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம் ///

ஏன் அவார்டுக்கு பதிலா நூறு ரூபாய்க்கு DD எடுத்து அனுப்புனா கூட தான் நல்லாருக்கும் :)

எல்லாரும் தங்கள் விலாசத்தை அருணுக்கு மெயில் செய்யவும், நாளைக்கே நமது நட்பை பாராட்டி பணம் அனுப்புவார் :)

dheva said...

ப்ரியமுடன் வசந்த்...@

பங்காளின்ன.....பக்கதுல நிப்பீகளே..அதன் சொன்னேன்....ஏத்துக்கங்க்..பங்ஸ்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Ramesh said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க. அருண் சாரி சரி..பிரபல பதிவர் அருண் பிரசாத்..எல்லா பாயிண்ட்ஸுமே சூப்பர்...

சௌந்தர் said...

2.வது ஜாக்கி சேகர்

சௌந்தர் said...

4.வது நம்ம அருண் (சூரியனின் வலை வாசல்)

dheva said...

ஜில்தண்ணி..@

விவேகானந்தர் தெரு
துபாய் குறுக்கு சந்து...
பூக்கடை முக்கு
துபாய்.

பணம் அனுப்புவாரா?

ஜில்தண்ணி said...

// அடுத்து கமெண்ட் போடுறது எப்படினு விரிவாக நம்ம டெரர் பாண்டி எழுதுவார். ///

யோவ் பாண்டி நீ எப்பயா கிளம்புன :)

என்ன பின்னூட்டத்துல போடுற மொக்கைய பதிவா போட்டா நாட்டுக்கு உபயோகமா இருக்குமேன்னு கிளம்பிட்டியா :)

ஜில்தண்ணி said...

@தேவா

/// விவேகானந்தர் தெரு
துபாய் குறுக்கு சந்து...
பூக்கடை முக்கு
துபாய்.

பணம் அனுப்புவாரா? ///

ம்ம்ம் அனுப்பலன்னா விட்டுடுவோமா :)

அருண் விலாசத்த நோட் பண்ணிக்கிங்க :)

அருண் பிரசாத் said...

@ All

இதுக்கு தான் முஸ்கினு ஒண்ணு போட்டு ஆரம்பிச்சி இருக்கேன்.

எல்லா பயிண்டும் கற்பனையே,ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது....

சௌந்தர் said...

@@@ஜில்லு தேவா அண்ணன் விலாசம் நான் தரேன் வா

ஜில்தண்ணி said...

/// 1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க. ///

இது யார் தெரியுமா நம்ம சௌந்தர் :)

ஃபார்வடு மெயிலை பதிவுல போட்டுட்டு என்னுமோ தான் எழுதுன மாதிரி அளப்பறை கட்டுறது :)

ஜில்தண்ணி said...

இத பாயிண்ட் நம்பர் 15 ஆக சேர்த்துக் கொள்ளவும்

15.எதாவது சங்கம்/கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொல்லி கும்மியடிக்கலாம் (எங்கள மாதிரி)

சௌந்தர் said...

@@@ஜில்லு உனக்கு தோழி கிடைக்க வில்லை சரி நான் ஒரு தோழி அறிமுகம் செய்யலாம் நினைத்தேன் போ....இப்படி கமெண்ட் போட்டு என் மனதை மாற்றி விட்டாய் அவ்வ்வ்வ்வ்

dheva said...

அருண்...@ ஒரே பதிவுல எல்லார் மானத்தையும் ஏத்துறானே.....இந்த அருண்...

நீ கடவுளுக்கே டார்ச் அடிக்கிற பயன்னு ஜெய் சொன்னாரு...

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது…
@ All

இதுக்கு தான் முஸ்கினு ஒண்ணு போட்டு ஆரம்பிச்சி இருக்கேன்.

எல்லா பயிண்டும் கற்பனையே,ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது....////


@@@allஇதை யாரும் நம்பாதிங்க....

Unknown said...

அப்படியே...பதிவுகளுக்கு பதில் பதிவு போடுவது பத்தி ஒரு பதிவு பதிந்திடுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அருண் இந்த பதிவுல பல உண்மைகள் வெளியாகும் போல இருக்கே. அடுத்து யாருப்பா சீக்கிரம் வந்து உண்மைய சொல்லுங்க.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சினிமா புதிர் சிங்கம் சிரிப்பு போலீசையே ஓட்டுறீங்களா :)

தல சீக்கிரம் வாங்க :)///

vanthutten. aamaa inka enna pirachchanai...

ஜில்தண்ணி said...

/// உனக்கு தோழி கிடைக்க வில்லை சரி நான் ஒரு தோழி அறிமுகம் செய்யலாம் நினைத்தேன் போ....இப்படி கமெண்ட் போட்டு என் மனதை மாற்றி விட்டாய் அவ்வ்வ்வ்வ் ////

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :)

சரி யார் அந்த தோழி (நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் )

Jey said...

ஒரே பதிவுல இத்தனை பேருக்கு பிஆர்ஓ வேலை பாத்திருக்கியே...எப்படி இதெல்லாம்....

Jey said...

// கவிதை எழுதுறேன் பேர்விழினு மத்தவங்களை டார்ச்சர் பண்ணலாம்//

ஏம்பா இந்த கொலைவெறி... மத்த ரோசைனைல உசுராவது மிஞ்சும்...இதுல அதுவும் காலி.....

Jey said...

//சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம் //

பதிவுலக சமையல் குறிப்பு எழுது அம்மனிகளே... உங்கள் கையில் கடைத்ததை எடுத்துட்டு வந்து...இந்த @#$!%&* அருணை கும்மி எடுக்குமாறு... அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.

ஆணாதிக்கவாதி அருன்பிரசாத்..ஒழிக...

Jey said...

ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா :)

சரி யார் அந்த தோழி (நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் )///

ஜில்லு ஜொள்ளு-ல கிலாடிப்பா...

ஜில்தண்ணி said...

ஆணாதிக்கவாதி அருன்பிரசாத்..ஒழிக... ஒழிக

சௌந்தர் said...

Jey சொன்னது…
ஒரே பதிவுல இத்தனை பேருக்கு பிஆர்ஓ வேலை பாத்திருக்கியே...எப்படி இதெல்லாம்..////


@@@@jey இதுக்கு 15 பேர் கொண்ட குழு ஒன்று வேலை செய்கிறது

அருண் பிரசாத் said...

50

நானே போட்டுடேன்

ஜில்தண்ணி said...

50

ஜில்தண்ணி said...

அட இப்பவும் வட போச்சே :(

அருண் பிரசாத் said...

@ ஜில்லு

பல்பு

Jey said...

///ப்ரியமுடன் வசந்த் கூறியது...
;)

அருண் இன்னும் ஜெய்கிட்ட கேட்டுப்பாருங்க நிறைய சொல்வார்

இல்லியா பங்கு?//

மக்களே...தயவு செஞ்சி இந்த வசந்த் பங்காளிகிட்ட எதுகாகவும்...ஐடியாவோ...ஆலோசனையோ.. கேட்ராதீக...நான் இவருகிட்ட சிக்கி சின்னாபின்னமாகி...குத்துயிரும்..கொலௌயிருமா..தப்பிச்சி வரதுக்குள்ளா...னொம்ப கச்டமாயிருசி...அதனால நான் சொல்ல வருரது என்னன்னா.....

அருண் பிரசாத் said...

50 வது கமெண்ட் போடுறது எப்படினு ஒரு பதிவு போடுறேன், வந்து கத்துக்கங்க

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ அருண் இந்த பதிவுல பல உண்மைகள் வெளியாகும் போல இருக்கே. அடுத்து யாருப்பா சீக்கிரம் வந்து உண்மைய சொல்லுங்க.....///


சிப்பு நாட்டாமை சொல்லிட்டாரு... உண்மைய சொல்லிருங்கப்பா...

அருண் பிரசாத் said...

@ ஜெய்

யோவ்.... நீதான யா இப்படி ஒரு பதிவு போடுறதுனு ஐடியா கொடுத்த.

Jey said...

//அருண் பிரசாத் கூறியது...
@ ஜெய்

யோவ்.... நீதான யா இப்படி ஒரு பதிவு போடுறதுனு ஐடியா கொடுத்த///

அட நாதாரி...இப்படியா பப்ளிக்ல போட்டு உடைக்கிறது..., ஆனா ஆரும் இங்க நம்ப மாட்டாங்களே.....

Unknown said...

//கருத்துரையிடுக///

ஒரே ஆள் பத்துக்கு மேல் பின்னூட்டங்கள் இடுவதும் என சேர்த்திருக்கணும் தம்பி ...

அருண் பிரசாத் said...

@ ஜெய்

இருய்யா... நம்ம காயத்திரி மேடத்தை கலாய்கலயேனு feelings சா இருக்கு, அவங்களுக்கும் ஒரு பாயிண்ட் போட்டுட்டு வந்துடறேன்

ஜில்தண்ணி said...

/// 12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம் ///

இங்க சொன்னீங்க பாருங்க,இதான் டாப்பு

அருமையான ஐடியா
இந்த பதிவை நாளக்கே போடுறோம்
நான்,செல்வா,வெறும்பய

Jey said...

அருண் பிரசாத் கூறியது...
50

நானே போட்டுடேன்//

நாங்க வழக்கமா...50 போடுரவங்களுக்கு கலாக்காகிட்ட , கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புவோம்...போறியா ராசா...:)

Jey said...

// ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...
/// 12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம் ///

இங்க சொன்னீங்க பாருங்க,இதான் டாப்பு

அருமையான ஐடியா
இந்த பதிவை நாளக்கே போடுறோம்
நான்,செல்வா,வெறும்பய///

உங்கள்ல ஒருத்தர் மொக்கையே ஊர் தாங்காது... இதுல மூனு பேர் ஒட்டுக்க கிளம்பிட்டீங்களா...,எங்கள ஒரு வழி பன்ரதுன்னு முடிவே பண்ணியாச்சா...

ஜில்தண்ணி said...

/// அட நாதாரி...இப்படியா பப்ளிக்ல போட்டு உடைக்கிறது..., ஆனா ஆரும் இங்க நம்ப மாட்டாங்களே..... ///

யாரும் அருணை நம்பாதீங்க :)

நம்ம jey பிராக்கெட்டில் சத்தியமா நல்லவன்னு போட்டுக்காத அளவுக்கு நல்லவர் தெரியுமா :)

கருடன் said...

@All

ஹி ஹி ஹி.... மக்கா அடி பின்றிங்க மக்கா....சும்மா பூந்து விளையாடுங்க. நம்ப கிரவுண்டுதான்.

@அருண்

எனக்கு இங்க வேலையெ இல்ல...பொதுமக்களே கொலை வெறில இருக்காங்க.

Jey said...

அருண் பிரசாத் கூறியது...
@ ஜெய்

இருய்யா... நம்ம காயத்திரி மேடத்தை கலாய்கலயேனு feelings சா இருக்கு, அவங்களுக்கும் ஒரு பாயிண்ட் போட்டுட்டு வந்துடறேன்///

விசப்பரிட்சை வேணாம்...அப்புரம்...அவங்க இங்கபின்னூடத்துலேயே ...காண்டாமிருகம் கதை சொல்லி...கடைசில உன் மூக்குல ரத்தம் வரப்போகுது....

Jey said...

டெர்ரர்...இந்த பீச கொஞ்சம் கவனிச்சிக்க...நான் போய் ஆணி பிடுங்கிட்டு வரேன்...

ஜில்தண்ணி said...

/// உங்கள்ல ஒருத்தர் மொக்கையே ஊர் தாங்காது... இதுல மூனு பேர் ஒட்டுக்க கிளம்பிட்டீங்களா...,எங்கள ஒரு வழி பன்ரதுன்னு முடிவே பண்ணியாச்சா... ///

ஒரு வழி பண்ணிட வேண்டியது தான் :)

கருடன் said...

//பதிவு போடுவது எப்படி?//

பலி போடுவது எப்படி இப்பொ நான் சொல்லி தரன் ராசா....

கருடன் said...

//முஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே, ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது...//

கொய்யால.....இது மட்டும்தான் கற்பனை.

கருடன் said...

@ஜில்லு
//என்ன பின்னூட்டத்துல போடுற மொக்கைய பதிவா போட்டா நாட்டுக்கு உபயோகமா இருக்குமேன்னு கிளம்பிட்டியா :)//

யேலேய் சில்லு.... நான் எழுதினத படிச்சி 60 காந்தி, 80 நேரு, 2000 பின்லாடன் உருவாகி இருக்காங்க... வரலாறு தெரியாம பேசத.... :))

சௌந்தர் said...

கொய்யால.....இது மட்டும்தான் கற்பனை.////

TERROR- சரியா சொன்னிங்க வந்து இவரை நல்லா கவனியுங்கள்

Deepa said...

//தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் //
:)))

கருடன் said...

@ஜய்
//டெர்ரர்...இந்த பீச கொஞ்சம் கவனிச்சிக்க...நான் போய் ஆணி பிடுங்கிட்டு வரேன்...//

நீங்க மெதுவ வாங்க தலை... ஆடு இப்பொதான் கடைக்கு வந்து இருக்கு...நாம இத வச்சி அறுக்கலாம்.

சௌந்தர் said...

நேத்து அருண் வந்து சிரிப்பு போலீஸ் கிட்ட பேசினார் நான் பதிவு போட போறேன் நம்ம terror பாதுகாப்பு சட்டத்தில் புடித்து உள்ளே போடனும் பேசிட்டு இருந்தார் என்னனு கேளுங்க terror

கருடன் said...

@சொளந்தர்
ஆமா... இங்க போலீஸ்கே பாதுகாப்பு இல்ல... போலீஸ் ஸ்டேஷன் திருடு போய் 4 மாசம் அச்சி....

ஜில்தண்ணி said...

@ALL

நம்ம சௌந்தருக்கு புதுப் பட்டபெயராக சொளந்தர் என்று அற்புமான பெயரை கொடுத்த டெர்ரர் நீவீர் வாழ்க :)

கருடன் said...
This comment has been removed by the author.
கருடன் said...

ஜில்லு

//இந்த பதிவை நாளக்கே போடுறோம்
நான்,செல்வா,வெறும்பய//

//நம்ம சௌந்தருக்கு புதுப் பட்டபெயராக சொளந்தர் என்று அற்புமான பெயரை கொடுத்த டெர்ரர் நீவீர் வாழ்க :)//

வா அப்பு... தொடார் பதிவு யாரும் கூப்பிடலையா? உன்ன நீயே கூப்பிட்டு இருக்க?

(சரிரிரி சரிரிரி... அப்போ நான் எழுதினது தப்பா? சொல் குற்றமா இல்லை பொருள் குற்றமா? சொல்லுங்கள் புலவரே...)

கருடன் said...

//எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும். நமக்கு போடுற கமெண்ட்க்கு பதில் கொடுக்கணும். //

இதை எல்லம் சரியா செய்வ... ஆன ஓட்டு மட்டும் போட மாட்ட.... எல்லா கள்ள ஓட்டும் நீயே போட்டுக்கோ..

கருடன் said...

//உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு//

நன் டிசண்டாதான பேசரேன். நீ என் இப்ப கெட்ட வார்த்தை பேசர?

ஜில்தண்ணி said...

/// சரிரிரி சரிரிரி... அப்போ நான் எழுதினது தப்பா? சொல் குற்றமா இல்லை பொருள் குற்றமா? சொல்லுங்கள் புலவரே. ///

குற்றமேதுமில்லை
அடியேன் மெச்சுவேன் உன்னை
நீவிர் செய்தது பிழையல்ல
அது உன் வார்த்தை மழை

:(

Jey said...

என்ன டெர்ரர் ஆட்டை வெட்டி வறுவல்,குழம்பு ந்னு வெருத்து ரெடியா இருக்கா...இல்ல.. இனிமே நாந்தான் விட்டனுமா...ஸ்டேட்டஸ் என்னப்பா?

கருடன் said...

@ஜில்
//குற்றமேதுமில்லை
அடியேன் மெச்சுவேன் உன்னை
நீவிர் செய்தது பிழையல்ல
அது உன் வார்த்தை மழை//

நன்றி ஐயா!! இனி வார்த்தை இடி, வார்த்தை மின்னால் எல்லாம் காண்பிர்.. வாருங்கள் ஐயா நாம் இருவரும் சேர்ந்து இந்த ஆட்டை அறுக்கலாம்....

Jey said...

//இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே//

நாலு பேர்கிட்ட முதநா சாட் பண்ணவேண்டியது...அத மறுநாள் பதிவா போட்டு...கற்பனையேன்னு சொல்ல வேண்டியது....வெட்கமா இல்லை....சூடு சொரனை...

கருடன் said...

@ஜய்
//ரெடியா இருக்கா...இல்ல.. இனிமே நாந்தான் விட்டனுமா...ஸ்டேட்டஸ் என்னப்பா?//

இல்ல தல... ஆடு தூங்குது. இப்பவே அறுக்கலாமா? இல்ல எழுந்ததும் அறுக்கலாமா?

Jey said...

//உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு ஒளவையார்(?!?!) சும்மாவா சொன்னாங்க//

அதான் மொட்டை கோடாறியால ...உம்மை உழுதுகிட்டு இருக்கோமெ....இன்னும் பத்தலையா....

ஜில்தண்ணி said...

@JEY

/// நாலு பேர்கிட்ட முதநா சாட் பண்ணவேண்டியது...அத மறுநாள் பதிவா போட்டு...கற்பனையேன்னு சொல்ல வேண்டியது....வெட்கமா இல்லை....சூடு சொரனை... ///

தல CHAT என்ற வார்த்தைய தமிழில் எழுதாதீங்க,படிக்க வேற மாதிரி ? இருக்கு

கருடன் said...

@ஜய்
//கற்பனையேன்னு சொல்ல வேண்டியது....வெட்கமா இல்லை....சூடு சொரனை...//

அருண் பிரபல பதிவர் தல. முதல் வரிலே இருக்கு பாருங்க... இது எல்லாம் எதிர் பாக்கலாமா?

Jey said...

//வாரத்திற்கு 3 பதிவு வரணும், நமக்கு கமெண்ட் போடுற எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும்.//
இத்எல்லாம் உமக்கு தூசுமாறி ராசா..., நாரஹ்துக்கு 8 பதிவு போடுர திறமை உம்மகிட்ட இருக்கு ராசா...என்ன எங்களுக்குதான் மூக்குல ..காதுல ரத்தம் வருது....

1 நிமிசத்துல 9 பேருக்கு கமென்ஸ் போடுர வித்தய எனக்கும் சொல்லி குடு ராசா...புண்ணியமா போகும்..எப்படி அவ்வளவு சீக்கிரமா படிச்சி போடுரே...

Jey said...

//சரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க.//

ஆகா...எந்த நாதாரியோ உசுப்பேத்திவிட்ருக்கு...அதான்...இது கொலைவெறியோட கிளம்பிருக்கு... அது யாருண்ணு சொல்லு அருண்...ஒரே போடா போட்டுத்தள்ளிரலாம்...

Jey said...

//இந்த ஊருக்கு போன போது இப்படி இருந்துச்சு, அந்த ஊரு இப்படினு ஒரு பயண கட்டுரை எழுதலாம்//

இது பீசு யாருன்னு தெரியலையே....யாரா இருக்கும்...

வெங்கட் said...

Blog சட்டதிட்டங்களை மீறி.,
Blogger ரகசியத்தை நீங்க
வெளியே சொல்லிட்டீங்க..

அதனால...
உங்களை பதிவுலகத்தில் இருந்து
Dismiss பண்ணுமாறு பரிந்துரைக்கிறேன்..

கருடன் said...

//சரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க//

நீ வராட்டி எல்லாம் ஒன்னும் தட்ட வேனாம். முதல்ல படிக்கிர மாதிரி ஒரு பதிவு போடு... இல்லாட்டி நம்ம தேவா மாதிரி யாருக்கும் புரியாம எழுது... ஓட்ட போட்டு போய்டே இருப்பேன்...

Jey said...

///பதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க.///

அடங்கொய்யாலே ... எம்ப்பா எக்குதப்பா மாட்டிவுடுரே...உனக்குதான்...என்ன மொக்கை போட்டாலும் பொறுத்துகிட்டு ஓட்டு போடுரோம்ல....பிறகெதுக்கு...

//(இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க) வர்ட்டா)//

கண்ணு பட்ருச்சா...பொறாமையில பொசுங்காத ராசா...

ஜில்தண்ணி said...

96

ஜில்தண்ணி said...

97

ஜில்தண்ணி said...

98

ஜில்தண்ணி said...

99

ஜில்தண்ணி said...

100

ஜில்தண்ணி said...

ஐ ஜாலி சேவாக் தவறவிட்ட 100 ஐ நான் அடிச்சிட்டேண்

Jey said...

///எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம் ///

பூக்குழில இறங்கனும்னா, கீரிப்பிள்ளை கூட விளயாடனும்னா,எருமை மாட்டுல சவாரி செய்யனும்னா...எங்கிட்டா தனியா கேடா அதுக்கு ஏற்பாடு செய்ய மாட்டேனா..., உனகில்லாததா..மக்கா...

Jey said...

//ஜில்தண்ணி - யோகேஷ் கூறியது...
100///

அடப்பாவி....இதுவும் ஒரு பொளப்பாய்யா...என்ன மாறி கமென்ஸ் போட்டு 100 போடனும் இப்படி அடுத்த கமென்ஸ் டைப் அடிச்சிட்டு இருக்கும் போது குறுக்குவழில 100 போடக்கூடாது...இது கல்லாட்டை கணக்குல சேராதுடியோவ்..

Jey said...

இத்துடன் கமென்ஸ் பாக்ஸ் மூடப்படுகிறது என்பதை....

ஜில்தண்ணி said...

//// அடப்பாவி....இதுவும் ஒரு பொளப்பாய்யா...என்ன மாறி கமென்ஸ் போட்டு 100 போடனும் இப்படி அடுத்த கமென்ஸ் டைப் அடிச்சிட்டு இருக்கும் போது குறுக்குவழில 100 போடக்கூடாது...இது கல்லாட்டை கணக்குல சேராதுடியோவ்.. ////

அப்ப இந்த பதிவ அருண்கிட்ட சொல்லி அழிச்சிட்டு புதுசா விளையாடுவோமா :)

கருடன் said...

//11. சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம்//

எங்கே போனது மகளிர் அணி வீரம்... பொங்கி எழுங்கள். புலியை முறத்தால் அடித்த உங்களாள் இந்த புன்னாக்கை அடிக்கா முடியாத? அலை கடல்யென திரண்டு வாரீர்.. அடியை அள்ளி தரீர்....

கருடன் said...

//14. தமிழ் தப்பு தப்பா எழுதி பதி புரிஞ்சி பாதி புரியாம ஒரு பதிவும், தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் ஒரு பதிவு போடலாம்//

காயத்ரி இதுக்கு நீ்ங்க எதிர்ப்பு தெரிவிச்சே ஆகனும். நாமலே 3 வகுப்பு பெயில் ஆகி வேறு வேலை கிடைக்காம, பதிவு எழுதரேன் சொல்லி கொலையா கொன்னுடு இருக்கோம்...இதை எப்படி நக்கல் பன்னலாம்?

கருடன் said...

//எலேய் மக்கா, பதிவுக்கு கிழே Post Comments, கருத்துரையிடுக என்ற இடத்தை கிளிக் செய்தா ஒரு பொட்டி வரும், அங்க போய் கமெண்ட் போடனும்னு மொக்கை போட்ட பிச்சி பூடுவேன் பிச்சி.//

போ மக்கா... நல்லா கலாய்க்கர மாதிரி ஏதாவது தலைப்பு கொடு மக்கா...

(பதில் நீயே சொல்லிட்ட இது போங்காட்டம்)

அருண் பிரசாத் said...

ஆணி ஓவரா போச்சு, மதியம் வெச்சிகிறேன். எல்லாருக்கும் இருக்குடியே

கருடன் said...

@அருண்
//ஆணி ஓவரா போச்சு, மதியம் வெச்சிகிறேன். எல்லாருக்கும் இருக்குடியே //

யேலேய் அப்படியே ஓடி போய்டு... இந்த பக்கம் வந்துடாத. எல்லாம் கொலை வெறில இருக்காங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நம்ம jey பிராக்கெட்டில் சத்தியமா நல்லவன்னு போட்டுக்காத அளவுக்கு நல்லவர் தெரியுமா :)///

எலேய் ஜில்லு எனக்கு கோவம் வராது....

ஜில்தண்ணி said...

@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...


/// எலேய் ஜில்லு எனக்கு கோவம் வராது....///

வராதுன்னு தானே சிரிப்பு போலீசுன்னு ஆயிட்டீங்க :)

சுசி said...

இத்தனை தகுதியும் இருந்தா பதிவர் தானே??

Anonymous said...

ஆஹா அருமை .பாயிண்ட் நம்பர் 10 தேவா தானே மிகவும் சரியா சொன்னிங்க ( சாரி தேவா கோபபேட வேண்டாம் )

செல்வா said...

///பதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க. (இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க)///
மொக்கை போடுறது பத்தி எதுவுமே சொல்லலையே ..??!!??

Jey said...

மக்காஸ் என் கடை வந்து சேருங்க

”சென்னை வந்துட்டேன்....+1 சேந்துட்டேன்...” http://pattikattaan.blogspot.com/2010/08/1.html

Thamira said...

'தமிழைத் தப்பு தப்பாக எழுதி..'ங்கிற வரியிலேயே தப்பு இருக்குதே பாஸ். தெரிஞ்சேதான் பண்ணேன்னு டபாய்க்காதீங்க. :-))

மங்குனி அமைச்சர் said...

என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு??? ராஸ்கல்ஸ் பிட்ச்சுபுடுவேன்

Riyas said...

AAAHAAAA... GOOOOODDD

Chitra said...

very funny! Which one is mine? :-)

Unknown said...

121..........

Mohamed Faaique said...

யாருடையாவது பாதிவை copy பண்ணி போட்டு விட்டு.. எயர்கிற நெருப்புல குளிர் காயலாம். அதை வைத்தே நமக்கும் நாலு பதிவு extra எழுதலாம். அடுத்தவங்களுக்கும் நம்மளை திட்டி நாலு பதிவு எழுதலாம். நாலு பேருக்கு நல்லதுண்ட எதுவுமே தப்பில்ல...

Gayathri said...

point 14 :

என்ன இது??? நான் தான் இதுன்னு படிச்ச உடனேயே புருஞ்சுபோச்சு !!

ஏன் இந்த கொலை வெறி ?? நான் என்ன பண்ணேன் உங்கள ??


ப்ரோ...இங்க பாருங்க..தமிழ தமிழ எழுதத்தான் நீங்க அனைவரும் இருக்கிங்களே..அத தவிர...நான் எழுதுற தமிழ எப்படியோ கஷ்டப் பட்டு படிச்சு அதுக்கு பின்னூட்டம் போட உங்கள மாதிரி நிறைய நண்பர்கள் இருக்கறச்சே எனக்கென்ன கவலை ?? ( எனக்கு ஒரு காலம் வரும் அப்போ வசுகறேன் ப்ரோ உங்கள பத்தி ஒரு தாக்குதல் பதிவு ஹா ஹா ஹா )

Gayathri said...

@ டெர்ரர் பாண்டியன் : என்ன செய்யலாம் சொலுங்க இதுக்கொரு எதிர் பதிவு போட்டுடலாமா?


@ ப்ரோ அருண் : சொந்த காசுல சூன்யம் வச்சுக்குரதுன்னு இதத்தான் சொல்லுவோம்...

அவ்வ்வ்வவ்வ்வவ் பி ரெடி !!! ( அய்யோ எனக்கு சிரிப்பு தாங்கல !!! ஹு ஹ ஹ ஹ )

கருடன் said...

Gayathri
//என்ன செய்யலாம் சொலுங்க இதுக்கொரு எதிர் பதிவு போட்டுடலாமா? //

கண்டிப்பா.. தலைப்பு நான் சொல்ரேன்

அரைகிருக்கன் அருண்

(மச்சி உன் பதிவுலக எதிரி யார் சொல்லு போட்டு தள்ளிடலாம்)

தேசாந்திரி-பழமை விரும்பி said...

ஹ்ம்ம்.... அப்புடி வாங்க வழிக்கு....
என்னோட மொக்கைய கொஞ்சம் பாருங்க தல.
இதே மாதிரிதான்.....
ஆனா கொஞ்சம் பழைய சரக்கு...


புதிய பதிவு போடுவது எப்படி...?


http://desandhiri.blogspot.com/2010/02/blog-post_19.html

அருண் பிரசாத் said...

ஓ சாரி பாஸ், நான் இதை இதுவரை பார்க்கவில்லை. ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.

தவறாக நினைக்க வேண்டாம்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

இதுல தப்பா நெனைக்க என்னங்க இருக்கு ?!
ஜஸ்ட் ஒரு இம்ப்ரமேசன் ..... அவ்ளோதான்...
நீங்க கண்டின்யு பண்ணுங்க தல...
;)
என் இனமைய்யா நீங்கள்...
(என் இனமடா நீ...!!! என்பதன் 'மரியாதையான' ,'மொழி' பெயர்ப்பு !)

அருண் பிரசாத் said...

@ தேசாந்திரி

இல்லைங்க, இதை நான் ஏற்கனவே பார்த்திருந்தா கண்டிப்பா குறைந்த பட்சம் உங்க பதிவை என் பதிவில் சொல்லி இருப்பேன். இப்போது ஒரு டிஸ்கி போட்டு விடுகிறேன்

தேசாந்திரி-பழமை விரும்பி said...

////இல்லைங்க, இதை நான் ஏற்கனவே பார்த்திருந்தா கண்டிப்பா குறைந்த பட்சம் உங்க பதிவை என் பதிவில் சொல்லி இருப்பேன். இப்போது ஒரு டிஸ்கி போட்டு விடுகிறேன்////
ஆஹா...
என்னதான் இருந்தாலும் பிரபல பதிவர் , பிரபல பதிவர் தான்...
விஸ்கிக்கு நன்றி..சாரி... டிஸ்கிக்கு நன்றி தல...
என்றும் மொக்கையுடன்,
தேசாந்திரி-பழமை விரும்பி.

அருண் பிரசாத் said...

@ தேசாந்திரி
பிரபல பதிவர்லாம் இல்லை பாஸ், புரிதலுக்கு நன்றி.

தொடர்ந்து வாங்க

கருடன் said...

அருண்
//இல்லைங்க, இதை நான் ஏற்கனவே பார்த்திருந்தா கண்டிப்பா குறைந்த பட்சம் உங்க பதிவை என் பதிவில் சொல்லி இருப்பேன். இப்போது ஒரு டிஸ்கி போட்டு விடுகிறேன்//

என்ன இருந்தாலும் நீ பெரிய மனுசன்யா...