Cricket Countdown....

Tuesday, April 27, 2010

மறக்க முடியாத கிரிக்கெட் மேட்சுகள் - 1

சாதித்து காட்டிய இளைஞர் படை !
இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மனதில் திக் திக் திக் ....

4 பந்துகளில் 6 ரன்கள் தேவை ....

பந்து வீசுவதோ புதிய முகம் - ஜோகிந்தர் ஷர்மா....

மட்டையுடன் அடிக்க காத்திருப்பது அதிரடி ஆட்டக்காரர் - மிஸ்பாஹ் உல் ஹாக்

அதற்கு முந்தய பந்தில் தான் ஒரு சிக்ஸர் அடித்தார் மிஸ்பாஹ்!

ஜோகிந்தர் மித வேகத்தில் பந்து வீச மிஸ்பாஹ் அதை சாதாரனமாய் ஷர்ட் பைன் லேக் திசையில் தூக்கி அடிக்கிறார் பந்து நீராக அங்கு தயாராய் இருந்த ஸ்ரீசாந்த் கையில் தஞ்சம் அடைந்தது. டோனி தலைமையில் ஆனா இந்திய கிரிக்கெட் அணி உலக சாம்பியன்!இந்திய அணி அவ்வளவு சுலபமாக இறுதி போட்டிக்குள் நுழையவில்லை. ஸ்காட்லான்ட் உடன் ஆனா போட்டி மழை காரணமாக கைவிடப்பட ஒரு புள்ளியுடன் பாகிஸ்தானுடன் மோதியது. அந்த போட்டி tie ஆகா பெளல் அவுட் முறையில் இந்தியா வென்று அதிக புள்ளி யுடன் அடுத்த சுற்றுக்கு நுழைந்தது. அந்த சுற்றில் முதல் போட்டியில் நியூசீலாந்துஉடன் 10 ரன் களில் தோற்று இங்கிலாந்த் மற்றும் சவுத் ஆப்ரிக்கா விடம் வென்று அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வென்றது

இறுதி போட்டி:டோஸ் வென்ற டோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். முதன் முதலாக சர்வதேச கால் பதித்த யூசுப் பதான் 4 வது பந்தில் சிக்ஸர் அடிக்க ஆடம் சுடு பிடித்தது. ஆனால் அடுத்து அடுத்து பதான் மற்றும் முத்தப்ப அவுட் ஆகா யுவராஜ் காம்பிருடன் ஜோடி சேர்ந்து 14 வது ஓவரில் 100 ரன்களை சேர்த்தனர். பிறகு யுவராஜ் மற்றும் டோனி அவுட் ஆகா, கம்பீர் மறு முனையில் அதிரடி ஆடம் ஆடினார். ஓய்ந் வந்த ஷர்மா தன் பங்குக்கு சிக்ஸர், பௌண்டரி என விளாசி இந்திய அணி எணிக்கையை 157 நிர்ணயித்தார்பேட் செய்ய களம் இறங்கிய பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, 5 வது பந்தில் ஹபீஸ் ஐ அவுட் ஆகினார் ஆர் பீ சிங். ஆனால் அடுத்த ஓவரில் ஸ்ரீ சாந்த் 4 ,6 ,6 ,4 என வாரி கொடுத்தார். அடுத்த ஓவரில் ஆர் பீ சிங் மீண்டும் ஒரு விக்கெட் அடுத்து நிம்மதி தந்தார். ஆனாலும் பாகிஸ்தான் நசிர் அதிரடியில் வேகமாக இலகு நோக்கி முன்னேறியது. 6 வது ஓவரில் 50 ஐ கடந்தது பாகிஸ்தான். அடுத்த 2 ஓவரில் நசிர் மற்றும் யூனுஸ் அவுட் ஆகா பாகிஸ்தானின் வேகம் குறைந்தது. 12 வது ஓவரில் ஈர்பான் பதான் அடுத்து அடுத்து 2 விக்கெட் எடுத்து, 4 விக்கெட் மீதம் இருக்க 48 பந்துகளில் 80 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 16 வது ஓவரில் மீதும் ஒரு விக்கெட் பதான் னுக்கு. அடுத்து வந்த ஹர்பஜன் ஓவரில் மிஸ்பாஹ் 3 சிக்ஸர் அடித்தார், அத்த ஸ்ரீ சாந்த் ஓவரில் தன்வீர் தன் பங்குக்கு 2 சிக்ஸர் அடிக்க 2 ஓவரில் 20 ரன்கள் தேவை என மாறியது. ஹர்பஜன் 19 வது ஓவர் இல் 7 ரன்கள் கொடுத்தார். 13 ரன் 6 பால் . வேறு அனுபவ பந்து வீச்சாளர்கள் இல்லாததால் இளம் ஜோகிந்தர் ஷர்மா வை தேர்வு செய்தார்

ஜோகிந்தர் மித வேக பந்து வீச்சாளர், வெறும் 13 ரன்களே தேவை, அடிக்க போவதோ ஹர்பஜன் ஐ பதம் பார்த்த மிஸ்பாஹ் உல் ஹாக், உலக கோப்பை இறுதி போட்டி வேறு - ஜோகி கு டென்ஷன். தொனிக்கும் தான்.

முதல் பந்தை wide ஆக வீசினார், டோனி ஜோகிந்தர் ஐ சமாதன படுத்தினார், அடுத்த பந்தில் ரன் இல்லை. 2 வது பந்தில் இமாலய சிக்ஸர் இப்பொது வெறும் 6 ரன்கள் 4 பந்துகளில்.... ( பதிவின் தொடக்கத்தை படித்து கொள்ளுங்கள்)


சாதித்து காட்டியது இளைஞர் படை !


Thursday, April 15, 2010

ஸ்ரீ விநாயகர் அகவல்சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்
 
சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.