Cricket Countdown....

Wednesday, August 17, 2011

HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

நண்பர்களே,


சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு.

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.


இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....

வாழ்த்துக்கள்....டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.For Non Tamil Players:

Dear Friends,

Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Please read the Rules of the Game and play with a high integrity.

With the above hope, We declaring that the Game to begins now...

Friday, August 12, 2011

Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்

நம்ம பதிவுலகத்துல எத்தனையோ கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி, சமூக விழிப்புணர்வு போட்டினு பல போட்டிகள் நடந்து இருக்கு. ஆனா இதில் கலந்துக நீங்க ஒரு கவிஞராவோ எழுத்தாளராவோ இருந்தாத்தான் வெற்றி பெற முடியும். 

ஆனா முற்றிலும் வித்தியாசமான ஒரு போட்டிய நம்ம டெரர்கும்மி.காம்ல நடத்த போறாங்க. இதுக்கு நீங்க பெரிய அறிவாளியாவோ, இலக்கியம் தெரிஞ்சவராவோ இருக்கனும்னு அவசியம் இல்லை. கொஞ்சம் smart thinking இருந்தா போதும், கூகுளாண்டவர் உங்களுக்கு விடைகளை அள்ளி தருவார்.

ஆமாங்க, ஏற்கனவே போன சினிமாபுதிர் பதிவுல இதை பத்தி சொல்லி இருந்தேன். இதோ, பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி -  “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமை (17/08/2011) வெளியாகிறது.


மொத்த பரிசாக ரூபாய் 10,000....


என்ன புதிர் போட்டி இது?

1.இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7.  அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.

பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்

இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.நீங்கள் விளையாடி பார்க்க சாம்பிள் போட்டிகள் இதோ,

பரிசு தர நாங்க ரெடி!
விளையாட நீங்க ரெடியா?

Tuesday, August 9, 2011

3 Idiots - தொடர்பதிவு

சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்.... ரமேஷ், செல்வா, பாபு, டெரர், நரினு ஒரு பெரிய பட்டாளத்தோட பிளாக் எல்லாம் தூசு புடிச்சி இருந்ததை பார்த்து பொறுக்காத வெட்டிபயல்.... (சாரி... வெறும்பயல்னு சொல்லனுமா....) வெறும்பய ஜெயந்த் மூணை வெச்சி ஒரு தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு.... எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... தொடர் பதிவ.....
1. விரும்பும் 3 விஷயங்கள் 

அ. ரயில் பயணம்
ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா


2. விரும்பாத 3 விஷயங்கள்


அ.  அரசியல்
ஆ. ஊருக்கு உபதேசம்
இ.  தற்பெருமை

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு 

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  தற்கால சினிமா பாடல்
ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் 
இ.  கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஃபைல்கள்
ஆ. Planனே எழுதாத Monthly Planner
இ.  என் குழந்தையின் கிறுக்கல்கள்

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. கும்மி குரூப்
ஆ.ஷமியின் குறும்புகள்
இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும்7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ.  சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)
ஆ. டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்
இ.
கும்மி குரூப்புடன் அரட்டை

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்
ஆ. இலக்கியம்
இ. போட்டோஷாப்

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்
. சரவண பவன் காபி
இ.  ஹைதராபாத் பிரியாணி

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. தற்பெருமை
ஆ. குறை சொல்லுறது
இ. அட்வைஸ்

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. இதயம் ஒரு கோவில்...
ஆ. சலங்கையிட்டால் ஒரு மாது
இ. ஹரிவராசனம் (காலைல தினமும் அலாரம் அடிச்சி எழுப்பிவிட்டுரும்)

14. பிடித்த 3 படங்கள்

அ. தில்லுமுல்லு, வசூல்ராஜா, அன்பே சிவம் (காமெடி)
ஆ. பாட்ஷா, சிவாஜி, காக்க காக்க (அதிரடி)
இ. ரோஜாக்கூட்டம், சேது, இதயத்தை திருடாதே (காதல்)

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆ, இ. அதானால இந்த 2 கேள்வி பாஸ் 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு
ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்
இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய்எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான்

Thursday, August 4, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 6

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு (?!?!?) இருந்த சினிமாபுதிர்  இதோ..


தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் -6

இந்த முறை சற்று சுலபம்தான். இருந்தாலும் கடினமா உணர்பவர்களுக்காக  க்ளூகளை நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துராதீங்க, படத்தை வைத்து எல்லா  ஆங்கிளிலும் யோசித்து பாருங்க. விடையை சுலபமா கண்டு பிடிச்சிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

 1.

 2.

3.4.

 5.

6.


7.

8.


9.

10.

Courtesy Questions:

11.
Courtesy: மனம்+  - எஸ்.கே 

12.
Courtesy: அனு


Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்


முக்கிய அறிவிப்பு: 
தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக "KLUELESS" போன்ற ஒரு அறிவுசார் விளையாட்டு உங்கள் “டெரர்கும்மி” பிளாக்கில் மெகா பரிசுடன் மிக விரைவில்.....

காத்திருங்கள்....

அறிவிப்பு மிக விரைவில்....


Tuesday, August 2, 2011

பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....

டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.


நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. இருங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்....செல்வா:                             அண்ணே, அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி:   வாடா கோபுரதலையா, என்ன இந்த பக்கம்

செல்வா:                             அண்ணே நீங்க ஒரு பெரிய டிவி கம்பனி ஓனர் இல்லையா?

ப.ரா:                                    ஆமா, அதுகென்ன இப்போ

செல்வா:                             உங்க டீவி ஒரு வீ ஜே வேணும்னு சொன்னீங்க இல்லையா

ப.ரா:                                    ஆமா, ஏன் நீயே வரேன்னு சொல்லுறீய்யா.

செல்வா:                            அட இல்லைண்ணே, (உங்க கம்பனில எவன் வேலை செய்வான்) ஒரு
                                            தம்பிய கூட்டி வந்து இருக்கேன்.ஆனா தம்பிக்கு ஒரு சின்ன பிரச்சனை

ப.ரா:                                    என்ன? பேச வராதா?

செல்வா:                            அது நல்லாவே வரும் ஆனா ஒரு எழுத்துதான் வராது “வ”னாக்கு பதில்
                                           “த”னா தான் வரும்

ப.ரா:                                   தமிழ்ல இருக்கற 247 எழுத்துல ஒரு எழுத்துவறலைனா என்ன? வர
                                           சொல்லு நான் சமாளிச்சிக்கறேன்

செல்வா:                           தம்பி வாப்பா....

தம்பி:                                சார் தணக்கம் சார்

ப.ரா:                                  யார்றா இந்த பன்னிய உள்ள விட்டது

செல்வா:                          அண்ணே, இவர் தான்னே நான் சொன்ன அந்த தம்பி

தம்பி:                                சார் தணக்கம் சார்

செல்வா:                          வணக்கம்னு சொல்றான்னே

ப.ரா:                                 ஓ, வணக்கம்பா, உன் பேரு என்ன?

தம்பி:                               தடிதேலு சார்

ப.ரா:                                 என்னது தடிதேலா, உனக்கு ஊரல வேற பேரே கிடைக்கலையா? இப்படி
                                          ஒரு பேரை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லையே ராசா

செல்வா:                         வடிவேலுன்னே

ப.ரா:                                 ஓ, வடிவேலா. சரி, தம்பி குரலை டெஸ்ட் பண்ணுவோம்.
                                          தம்பி ஏதாவது பேசு பார்ப்போம்

தம்பி:                               சார், நான் சிதாஜி மாதிரி நல்லா தசனம் பேசுதேன் சார்

ப.ரா:                                 என்னது சிதாஜி மாதிரி தசனமா?

செல்வா:                         சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்னு சொல்றான்னே... டேய், பேசி
                                         காட்டுறா

தம்பி:        தரி, தட்டி, திரை , கிஸ்தி.
                   யாரை கேட்கிறாய் தட்டி.
                   தானம் பொழிகிறது ,பூமி திளைகிறது,
                   உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி.

ப.ரா:          அய்யோ, அய்யோ, அய்யோ... தரி, தட்டியா....நிறுத்துடா நிறுத்துடா
செல்வா:   டேய் வேற பேசுடா
தம்பி:        அண்ணே ஒரு பாட்டு பாடதா
ப.ரா:          பாது...சே...பாடு
தம்பி:        தாடியம்மா, தாடி. தண்டாட்டம் தாடி....

ப.ரா:          டேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....செல்வா...நிறுத்த சொல்லுடா.... முடியல....

செல்வா:   அவன் வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடின்ற பாட்டை பாடுறான்னே....
                    டேய் வேற பாடு

தம்பி:         சரிண்ணே.... தாங்கய்யா, தாதியாரைய்யா, தரதேற்க்க தந்தோம் அய்யா...

ப.ரா:           அய்யோ சாமி யாராவது காப்பதுங்களேன்...
                    டேய் செல்வா முதல்ல இவனை கூட்டிட்டு வெளில போடா

செல்வா:    சரிண்ணே, டேய் தம்பி அண்ணனுக்கு மூட் சரியில்லை அப்புறம் வரலாம்.
                   அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு

தம்பி:        சரிண்ணே அப்போ போயிட்டு தரேன்னே.....

ப.ரா:          போயிட்டு தர்றிய்யா..... அய்யோ.... யாராவது என்னை காப்பாத்துங்களேன்.......

செல்வா:   அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....அவன் இவனை மாதிரி
                   இல்லைனே நல்லா பேசுவான்...என்ன “ச”னா வராது அதுக்கு பதில் “ரா”னா தான் வரும்.

ப.ரா:             இன்னொருத்தனா.................

Breaking News: பன்னீஸ் டீவியின் அவசர செய்தி. எங்கள் தொலைக்காட்சியின் ஓனர், முதலாளி பன்னிகுட்டி ராம்சாமியை காணவில்லை. சென்னை கீழ்பாக்கம் பக்கமோ, ஏர்வாடி பக்கமோ தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும்.....

டிவி பன்னி.... எங்க போனே நீ....