Cricket Countdown....

Wednesday, December 28, 2011

டெரர் கும்மி விருதுகள் - 2011


பாராட்டும் அங்கிகாரமும் ஒரு மனிதனை எந்த அளவு சந்தோஷப்பட வைக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உலக அளவில் நோபல் பரிசு, ஆஸ்கார் விருது, கிராமி விருது, புக்கர் விருது என வழங்கி திறமையானவர்களை வருடா வருடம் கெளரவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்துகளுக்கு என பல விருதுகள் இந்தியா அளவிலும் உலக அளவிலும் வழங்கப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. அதே போல், பதிவுலகில் எழுது பவர்களும் யாருக்கும் குறந்தவர்கள் அல்ல, அவர்களுடைய எழுத்துக்களும் அங்கீகரிக்க பட வேண்டும் என்ற எண்ணத்தில் டெரர்கும்மி விருதுகள் - 2011 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு பதிவருக்கும் அவருடைய எழுத்துக்கள் மேல் காதலும் ஏன் கர்வமும் இருக்கிறது, இருக்க வேண்டும். அதை பிறருக்கு எடுத்து சொல்லவும் உங்கள் எழுத்துக்களுக்கு அங்கீரம் தரவும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம்......

பதிவுகளை இணைக்கவும், விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்களை அறியவும் இங்கே செல்லுங்கள்.....


Friday, November 11, 2011

KLUELESS 7 - அறிவாளிகளுக்கான விளையாட்டு

கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட “HUNT FOR HINT” கேமின் முன்னோடி “KLUELESS” தனது 7 ஆம் பாகத்தை இன்று காலை இந்திய நேரம் 11.11 க்கு வெளியிடுகிறது.

இது இந்தூர் ஐஐஎம் மாணவர்களால் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு அறிவுசார்ந்த போட்டி. இந்த போட்டியின் மேல் இருந்த இன்ஸ்பைரேஷனால் தான் நாங்கள் இதை அடிப்படையாக கொண்டு HUNT FOR HINT நடத்தினோம். எதிர்பார்த்தது போலவே நல்ல ஆதரவு கிடைத்தது . பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 


இப்பொழுது அதன் ஒரிஜினல் வெர்ஷனை விளையாட நீங்கள் தயாரா? எங்களுக்கு தெரிந்து HUNT FOR HINT விளையாட்டு KLUELESS விளையாட்டை விட மிகவும் சுலபமாக அமைத்து இருந்தோம். க்ளூலெஸ் விளையாட்டுக்கு ஐந்தில் ஒரு பங்கு கடினம் தான் ஹண்ட் பார் ஹிண்ட்க்கு வைத்து இருந்தோம். ஆனாலும் நம் பதிவர்கள் க்ளூலெஸ் கேமில் வெற்றி பெற எங்களால் ஆன உதவிகளை செய்ய முயற்சியாக தான் இந்த பதிவு. 


HUNT FOR HINT விளையாட்டின் அதே விதிமுறைகள் தான் இங்கும். ஆனாலும் புதியவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம்.

எப்படி விளையாடுவது?

  • பல லெவல்கள் கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு லெவலுக்கான விடையையும் கண்டு பிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்
  • கேள்விகள் படங்களாகவே பெரும்பாலும் இருக்கும்
  • விடைகள், ஆன்சர் பாக்ஸ்சிலோ கொடுத்தோ, URL மாற்றியோ,  கிளிக் செய்வது போன்றோ இருக்கும்
  • அனைத்து விடைகளும் கூகுளில் தேடுவதால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்
  • விடைகளுக்கான க்ளூக்கள், வெப் பேஜ் டைட்டில்லிலோ, URL, Image Name, Page source என பல விதங்களில் இருக்கும். குழப்புவதற்காகவே சில தேவையற்ற க்ளூக்களும் இருக்கும், ஜாக்கிரதை....
விளையாடுபவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய பிரத்தியேக தளத்திலேயே க்ளூக்களை கொடுக்கிறார்கள் இருந்தாலும் நம் தமிழ் பதிவுலக நண்பர்களுக்காக நாங்களும் இங்கு கமெண்ட்களில் க்ளூக்கள் கொடுக்கலாம் என இருக்கிறோம்.

எந்த காரணம் கொண்டும் நேரடி விடைகள் கொடுக்கப்பட மாட்டாது. 

நாங்களும் இனிதான் விடைகளை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் சில சமயங்களில் உங்களை விட பின்னால் இருப்பதறக்கு வாய்ப்புகள் அதிகம், அதனால் க்ளூ கொடுப்பது தாமதமாகலாம்.

உங்களுக்கு விடை தெரிந்தால் நீங்களும் க்ளூகளை கமெண்ட்களில் தெரிவிக்கலாம். (எங்களுக்கும் உதவும் :) )

அனைத்து கமெண்ட்டுகளும் மாடரேட் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்....

விளையாட்டை தொடங்க இங்கு கிளிக் செய்யவும்.


LETS PLAY TOGETHER....

ENJOY THE GREAT GAME :) with usTuesday, October 25, 2011

Happy Deepavali Folks!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Happy Deepavali Folks!Tuesday, September 6, 2011

Trou Aux Cerf - உறங்கும் எரிமலை

மொரீசியஸ் நாடு எரிமலை வெடிப்பால் உருவான தீவுனு ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லி இருக்கேன். இந்திய பெருங்கடல்ல ஆப்பிரிக்க கண்டத்துக்கு பக்கத்துல இருக்கற சின்ன புள்ளிதான் இந்த தீவு. தீவில் ஆங்காங்க சில உறங்கும் எரிமலைகள் இருந்தாலும், மிக முக்கியமானது "TROU AUX CERF" என்னும் எரிமலைதான்.

மொரீசியசின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த உறங்கும் எரிமலை சரியான கூம்புவடிவையும், அழகான மைய பள்ளத்தையும் கொண்டு இருக்கிறது. சுமார் 1,985 அடி உயரம் உள்ள இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது. 

இப்போது உறங்கி கொண்டு இருந்தாலும் அடுத்து வரும் 1000 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வளவு ஏங்க அந்த மைய பள்ளத்துல இறங்க முடியாத அளவு அடர்த்தியான மரங்களும், நடுவுல பல அடி ஆழ சிறிய ஏரியும் அமைஞ்சி இருக்கு.

கீழ இருக்குற கூகுள் மேப்பை பாருங்க. கூகுள் மேப்பில் காணப்படும் சில அழகான இடங்களில் இந்த எரிமலையும் ஒன்று.


இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த எரிமலைல இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துல தான் என் ஆபிசும் வீடும் இருக்கு.இந்த மேப்ல மவுஸ் வெச்சி right side drag செய்தால் “+” வடிவில் ஒரு கட்டிடம் தெரியும் அதுதான் என் ஆபிஸ். இப்போ எதுக்கு இந்த விளம்பரம்னு கேக்கறீங்களா? நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க அப்படினு நான் சொல்லுறதை நீங்க நம்பனும்ல.....Thursday, September 1, 2011

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்....

ஸ்ரீ விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சுகரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துந் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இதுபொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளடுங்குங் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்தே
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளியிரண்டிற் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தி என் செவியில்
எல்லை இல்லா ஆனந் தமளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
 
  

Wednesday, August 17, 2011

HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

நண்பர்களே,


சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு.

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.


இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....

வாழ்த்துக்கள்....டிஸ்கி: விளையாட்டின் ஆர்வத்தை கருதி.... இந்த பதிவிற்கு வரும் அனைத்து கமெண்ட்டுகளும் மட்டறுக்கப்படுகிறது.For Non Tamil Players:

Dear Friends,

Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Please read the Rules of the Game and play with a high integrity.

With the above hope, We declaring that the Game to begins now...

Friday, August 12, 2011

Hunt for Hint புதிர் போட்டி அறிவிப்பு - பரிசு 10,000 ரூபாய்

நம்ம பதிவுலகத்துல எத்தனையோ கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி, சமூக விழிப்புணர்வு போட்டினு பல போட்டிகள் நடந்து இருக்கு. ஆனா இதில் கலந்துக நீங்க ஒரு கவிஞராவோ எழுத்தாளராவோ இருந்தாத்தான் வெற்றி பெற முடியும். 

ஆனா முற்றிலும் வித்தியாசமான ஒரு போட்டிய நம்ம டெரர்கும்மி.காம்ல நடத்த போறாங்க. இதுக்கு நீங்க பெரிய அறிவாளியாவோ, இலக்கியம் தெரிஞ்சவராவோ இருக்கனும்னு அவசியம் இல்லை. கொஞ்சம் smart thinking இருந்தா போதும், கூகுளாண்டவர் உங்களுக்கு விடைகளை அள்ளி தருவார்.

ஆமாங்க, ஏற்கனவே போன சினிமாபுதிர் பதிவுல இதை பத்தி சொல்லி இருந்தேன். இதோ, பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி -  “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமை (17/08/2011) வெளியாகிறது.


மொத்த பரிசாக ரூபாய் 10,000....


என்ன புதிர் போட்டி இது?

1.இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.

2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்

3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து  விடை சொல்ல வேண்டும்

4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.... 

5. விடையை  கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு)  செல்லும்

6. இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....

7.  அனைத்து லெவல்களையும்  முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.

8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்

9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.

பரிசு விவரம்:

முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்

இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.நீங்கள் விளையாடி பார்க்க சாம்பிள் போட்டிகள் இதோ,

பரிசு தர நாங்க ரெடி!
விளையாட நீங்க ரெடியா?

Tuesday, August 9, 2011

3 Idiots - தொடர்பதிவு

சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்.... ரமேஷ், செல்வா, பாபு, டெரர், நரினு ஒரு பெரிய பட்டாளத்தோட பிளாக் எல்லாம் தூசு புடிச்சி இருந்ததை பார்த்து பொறுக்காத வெட்டிபயல்.... (சாரி... வெறும்பயல்னு சொல்லனுமா....) வெறும்பய ஜெயந்த் மூணை வெச்சி ஒரு தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு.... எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... தொடர் பதிவ.....
1. விரும்பும் 3 விஷயங்கள் 

அ. ரயில் பயணம்
ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா


2. விரும்பாத 3 விஷயங்கள்


அ.  அரசியல்
ஆ. ஊருக்கு உபதேசம்
இ.  தற்பெருமை

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு 

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  தற்கால சினிமா பாடல்
ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் 
இ.  கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஃபைல்கள்
ஆ. Planனே எழுதாத Monthly Planner
இ.  என் குழந்தையின் கிறுக்கல்கள்

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. கும்மி குரூப்
ஆ.ஷமியின் குறும்புகள்
இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும்7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ.  சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)
ஆ. டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்
இ.
கும்மி குரூப்புடன் அரட்டை

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்
ஆ. இலக்கியம்
இ. போட்டோஷாப்

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்
. சரவண பவன் காபி
இ.  ஹைதராபாத் பிரியாணி

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. தற்பெருமை
ஆ. குறை சொல்லுறது
இ. அட்வைஸ்

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. இதயம் ஒரு கோவில்...
ஆ. சலங்கையிட்டால் ஒரு மாது
இ. ஹரிவராசனம் (காலைல தினமும் அலாரம் அடிச்சி எழுப்பிவிட்டுரும்)

14. பிடித்த 3 படங்கள்

அ. தில்லுமுல்லு, வசூல்ராஜா, அன்பே சிவம் (காமெடி)
ஆ. பாட்ஷா, சிவாஜி, காக்க காக்க (அதிரடி)
இ. ரோஜாக்கூட்டம், சேது, இதயத்தை திருடாதே (காதல்)

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆ, இ. அதானால இந்த 2 கேள்வி பாஸ் 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு
ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்
இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய்எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான்

Thursday, August 4, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 6

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு (?!?!?) இருந்த சினிமாபுதிர்  இதோ..


தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் -6

இந்த முறை சற்று சுலபம்தான். இருந்தாலும் கடினமா உணர்பவர்களுக்காக  க்ளூகளை நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துராதீங்க, படத்தை வைத்து எல்லா  ஆங்கிளிலும் யோசித்து பாருங்க. விடையை சுலபமா கண்டு பிடிச்சிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

 1.

 2.

3.4.

 5.

6.


7.

8.


9.

10.

Courtesy Questions:

11.
Courtesy: மனம்+  - எஸ்.கே 

12.
Courtesy: அனு


Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்


முக்கிய அறிவிப்பு: 
தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக "KLUELESS" போன்ற ஒரு அறிவுசார் விளையாட்டு உங்கள் “டெரர்கும்மி” பிளாக்கில் மெகா பரிசுடன் மிக விரைவில்.....

காத்திருங்கள்....

அறிவிப்பு மிக விரைவில்....


Tuesday, August 2, 2011

பன்னிக்குட்டி ராம்சாமியை காப்பாத்துங்க....

டிஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து கற்பனைகளும் எழுதியவரையே சாரும்.... சத்தியமா எனக்கு இவ்வளோ காமெடி வராதுங்க. அட பதிவு எழுதவே வராதுங்க. எங்கேயோ எப்பவோ கேட்டதை வச்சிகொஞ்சம் உல்ட்டா பண்ணி எழுதின பதிவு இது.


நம்ம பன்னிகுட்டி ராம்சாமி அவரோட பன்னீஸ் டிவிக்காக ஒரு வீ ஜே வை தேடிட்டு இருக்காரு. அவருக்காக நம்ம செல்வா, அவரை மாதிரியே ஒல்லியா இருக்கற ஒரு ஆளை இன்ட்ரவியூக்கு கூட்டி வராரு. இருங்க என்ன நடக்குதுனு பார்ப்போம்....செல்வா:                             அண்ணே, அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி:   வாடா கோபுரதலையா, என்ன இந்த பக்கம்

செல்வா:                             அண்ணே நீங்க ஒரு பெரிய டிவி கம்பனி ஓனர் இல்லையா?

ப.ரா:                                    ஆமா, அதுகென்ன இப்போ

செல்வா:                             உங்க டீவி ஒரு வீ ஜே வேணும்னு சொன்னீங்க இல்லையா

ப.ரா:                                    ஆமா, ஏன் நீயே வரேன்னு சொல்லுறீய்யா.

செல்வா:                            அட இல்லைண்ணே, (உங்க கம்பனில எவன் வேலை செய்வான்) ஒரு
                                            தம்பிய கூட்டி வந்து இருக்கேன்.ஆனா தம்பிக்கு ஒரு சின்ன பிரச்சனை

ப.ரா:                                    என்ன? பேச வராதா?

செல்வா:                            அது நல்லாவே வரும் ஆனா ஒரு எழுத்துதான் வராது “வ”னாக்கு பதில்
                                           “த”னா தான் வரும்

ப.ரா:                                   தமிழ்ல இருக்கற 247 எழுத்துல ஒரு எழுத்துவறலைனா என்ன? வர
                                           சொல்லு நான் சமாளிச்சிக்கறேன்

செல்வா:                           தம்பி வாப்பா....

தம்பி:                                சார் தணக்கம் சார்

ப.ரா:                                  யார்றா இந்த பன்னிய உள்ள விட்டது

செல்வா:                          அண்ணே, இவர் தான்னே நான் சொன்ன அந்த தம்பி

தம்பி:                                சார் தணக்கம் சார்

செல்வா:                          வணக்கம்னு சொல்றான்னே

ப.ரா:                                 ஓ, வணக்கம்பா, உன் பேரு என்ன?

தம்பி:                               தடிதேலு சார்

ப.ரா:                                 என்னது தடிதேலா, உனக்கு ஊரல வேற பேரே கிடைக்கலையா? இப்படி
                                          ஒரு பேரை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லையே ராசா

செல்வா:                         வடிவேலுன்னே

ப.ரா:                                 ஓ, வடிவேலா. சரி, தம்பி குரலை டெஸ்ட் பண்ணுவோம்.
                                          தம்பி ஏதாவது பேசு பார்ப்போம்

தம்பி:                               சார், நான் சிதாஜி மாதிரி நல்லா தசனம் பேசுதேன் சார்

ப.ரா:                                 என்னது சிதாஜி மாதிரி தசனமா?

செல்வா:                         சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்னு சொல்றான்னே... டேய், பேசி
                                         காட்டுறா

தம்பி:        தரி, தட்டி, திரை , கிஸ்தி.
                   யாரை கேட்கிறாய் தட்டி.
                   தானம் பொழிகிறது ,பூமி திளைகிறது,
                   உனக்கேன் கொடுக்க தேண்டும் கிஸ்தி.

ப.ரா:          அய்யோ, அய்யோ, அய்யோ... தரி, தட்டியா....நிறுத்துடா நிறுத்துடா
செல்வா:   டேய் வேற பேசுடா
தம்பி:        அண்ணே ஒரு பாட்டு பாடதா
ப.ரா:          பாது...சே...பாடு
தம்பி:        தாடியம்மா, தாடி. தண்டாட்டம் தாடி....

ப.ரா:          டேஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....செல்வா...நிறுத்த சொல்லுடா.... முடியல....

செல்வா:   அவன் வாடியம்மா வாடி, வண்டாட்டம் வாடின்ற பாட்டை பாடுறான்னே....
                    டேய் வேற பாடு

தம்பி:         சரிண்ணே.... தாங்கய்யா, தாதியாரைய்யா, தரதேற்க்க தந்தோம் அய்யா...

ப.ரா:           அய்யோ சாமி யாராவது காப்பதுங்களேன்...
                    டேய் செல்வா முதல்ல இவனை கூட்டிட்டு வெளில போடா

செல்வா:    சரிண்ணே, டேய் தம்பி அண்ணனுக்கு மூட் சரியில்லை அப்புறம் வரலாம்.
                   அண்ணன்கிட்ட சொல்லிட்டு கிளம்பு

தம்பி:        சரிண்ணே அப்போ போயிட்டு தரேன்னே.....

ப.ரா:          போயிட்டு தர்றிய்யா..... அய்யோ.... யாராவது என்னை காப்பாத்துங்களேன்.......

செல்வா:   அண்ணே நாளைக்கு வேற ஒருத்தனை கூட்டிட்டு வரேன்னே....அவன் இவனை மாதிரி
                   இல்லைனே நல்லா பேசுவான்...என்ன “ச”னா வராது அதுக்கு பதில் “ரா”னா தான் வரும்.

ப.ரா:             இன்னொருத்தனா.................

Breaking News: பன்னீஸ் டீவியின் அவசர செய்தி. எங்கள் தொலைக்காட்சியின் ஓனர், முதலாளி பன்னிகுட்டி ராம்சாமியை காணவில்லை. சென்னை கீழ்பாக்கம் பக்கமோ, ஏர்வாடி பக்கமோ தென்பட்டால் தகவல் தெரிவிக்கவும்.....

டிவி பன்னி.... எங்க போனே நீ....
Tuesday, July 26, 2011

ஷமி பக்கங்கள்....

என் குழந்தை ஷம்ஹித்தாவின் குறும்புகளை சொல்லி ரொம்ப நாளாச்சு, இதோ உங்களுக்காக.....

குறும்பு 1:
இந்தியா சென்று வந்ததுல இருந்து இவளின் ஆட்டமும், சந்தோஷமும் அதிகமாகி இருக்கு... கூடவே குறும்புகளும். இப்பொழுது எல்லாம் பேனாவை வைத்து கொண்டு நிறையவே கிறுக்க ஆரம்பிச்சி இருக்கா. நாங்கள் வேற அதை கட்டாயம் வேடிக்கை பார்த்தே ஆகனுமாம்.

ஒருநாள் ஹாலில் விளையாடிட்டு இருந்தா, நான் ரொம்ப சீரியசாக நிதின் கோகலே எழுதிய “இலங்கையின் இறுதிப்போர்” புத்தகத்த படிச்சிட்டு  இருந்தேன். சுற்றி சுற்றி விளையாடிட்டு இருந்தவ  என் கிட்ட வந்து நின்னா. நான் புத்தகத்துல மும்முரமா இருந்தேன். என்னை பார்த்துட்டு பிறகு குனிந்து புத்தகத்தின் அட்டையை பார்த்தா. அதுல இருந்த ராஜபக்‌ஷே, பிரபாகரன், இலங்கை வரைபடங்களை தொட்டு ஏதோ சொல்லிட்டு, என்னை பார்த்து “அப்பா, Bookaa No” ன்னு சொல்லிட்டு அந்த புத்தகத்தை விடாப்பிடியாக என்னிடம் இருந்து பிடுங்கி அலமாரியில் வெச்சிட்டா. நான் அந்த புத்தகத்தை படிச்சா என்னங்க தப்பு? ஏனோ தெரியல, இன்னைக்கு வரை அந்த புத்தகத்தை நான் எடுக்கறதும் உடனே அவ வந்து அதை பிடுங்கி வைக்கறதும் தொடர்ந்துகிட்டே தான் இருக்குது. அப்போதான் அந்த புத்தகத்தை படிச்சி முடிப்பேனோ....

குறும்பு 2:

இவகிட்ட இருக்கற ஒரே கெட்ட பழக்கம் தூங்கும் போது விரல் சூப்புறது. தூங்கும் போது மட்டும் தான், மத்த நேரத்துல இல்லை. ஒருநாள் தூங்க படுத்துட்டு இருக்கும் போது விரல் சூப்பினா. நான் “பாப்பாக்கு 2 வயசு ஆக போகுது இல்லையா? விரல் சூப்பாமா தூங்கனும். பாரு அப்பா, விரல் சூப்பரனா இல்லைல, நீயும் விரல் சூப்பாம சமத்தா தூங்கனும்” என்றேன். உடனே என் பொண்ணு, “அப்பா, இந்தா” என தன் இன்னொரு கை விரலை எடுத்து என் வாயில் வைத்து சூப்ப சொல்கிறாள். என்னத்த பண்ண?

குறும்பு 3:
என் பொண்ணு குறும்பு செய்யும் போது “வாலு” என செல்லமா திட்டுவேன். ஒருநாள் ஏதோ குறும்பு செய்ததற்காக, அவளை பார்த்து “வால் பொண்ணு நீ” என்றேன். அதற்கு அவள் “வாலு NO" என்றாள். உடனே நான் “நீ தான் வாலு, பாரு பின்னாடி வால் முளைச்சி இருக்கு”ன்னு சொல்ல. உடனே, வேகமாக என் பின்னாடி வந்து நின்னு, என் முதுகை பார்த்து  “அச்சசோ, வால் காணோம்” ன்னு சொல்றா? என் பொண்ணுக்கும் தெரிஞ்சி போச்சோ!

Wednesday, July 6, 2011

Tamil பாட்டுங்கோ....

பிப்ரவரி மாசம் நான் இந்தியால சுற்றுபயணம் செஞ்சிட்டு இருந்தப்போ, (வெளிநாட்டுத் தலைவருங்க இந்தியா வந்து போறதுக்கு பேரு சுற்றுபயணம்னு தானேப்பா சொல்லுவாங்க) சென்னைல இருந்து எங்க ஊருக்கு நம்ம அரசு பேருந்துல போனேன். நம்ம ஊரு வண்டி என்னை ஏமாத்தலை, வழக்கம் போல எல்லாமே ஓட்ட உடைச்சலாதான் இருந்துச்சு. இதுல வீடியோ போடறேன் பேர் விழினு பழைய சிவாஜி பாட்டுகளை போட்டானுங்க. என்ன பிரச்சனையோ தெரியல ஆடியோ மட்டும் விட்டு விட்டு வந்துச்சு, ஆனா படம் தெளிவா போச்சு ஆங்கில சப் டைட்டில்லோட. 


அநியாயத்துக்கும் தமிழை அப்படியே டிரான்ஸ்லேட் (அவ்வ்வ்வ்.... நானும் ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்கறேன்னா?) பண்ணி வெச்சி இருக்காங்க..... சில பாடல்களின் முதல் வரி இதோ..... என்ன பாட்டுனு கண்டுபிடிங்க பார்க்கலாம்...


1) What i told? why you feel giddy?


2) Good man, I am a goodman for Myself

3) I am neither a poet nor I am a great fan

4) Is it somebody that i've seen young in a frock

5) What ever I want to say, You must say

6) Let the One let us, go

7) She has just flown away, she has forgetten me completely

8) can all the stones turn into diamonds

டிஸ்கி: இதை விட கொடுமையா நான் ஒரு பாட்டை டிரான்ஸ்லேட் பண்ணி இருக்கேன் இங்க போய் பாருங்க.Monday, June 20, 2011

சூரியன் மீண்டும் உதிக்கும்

அன்பார்ந்த தோழர்களே தோழமைகளே, (ரெண்டும் ஒண்ணுதானா? யாருப்பா இங்க இலக்கியவாதி... வந்து விளக்கத்தை சொல்லிட்டு போங்க)

கடந்த சில மாதங்களாக இழுத்து மூடப்பட்டு BLOCK ஆகி இருந்த என் BLOG சென்ற வாரம் முதல் தூசுத்தட்ட ஆரம்பிக்கப்பட்டது. அந்த நெடிதாங்காமல் சீக்கிரம் சுத்தம் செய்ய வேண்டி Baa, Baa, Black Sheep பாபா ராம்தேவ் அவர்கள் ஹாஸ்பிட்டலில் டிரிப்ஸ் ஏற்றி கொண்டே உண்ணாவிரதம் இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஒருவர் கதறி அழுது கேட்டதாலும் (யாரா? என் Blogதான், “நான் துரு பிடிச்சி போயிட்டேன்...சீக்கிரம் வாடா வெண்னை” என்றது) இன்று முதல் இந்த வலையுலகில் மீண்டும் பதவி பிரமானம் எற்கிறேன். (யார் அது, “சூரியன் மீண்டும் உதிக்காதுனு சொன்னது” - அய்யோ, அம்மா, அது நீங்க சொன்னதா.. உணர்ச்சி வசத்துல பேசிட்டேன்மா மன்னிச்சிடுங்க, சூரியன் என் பிளாக்கோட பேரும்மா...இதுல எந்த உள்குத்தும் இல்ல)

இந்த சூரியன், கண்ணாடி ரெண்டையும் சேர்த்து வெச்சி இது அரசியல் பதிவுனு கிளப்பிவிட்டுறாதீங்கப்பா

சரி இத்தனை நாள் ஏன் பதிவு எழுத முடியலைனு கேக்றீங்களா? ( நீங்க  கேக்கலைனாலும் நான் சொல்லியே தீருவேன்... அப்புறம் எப்படி இந்த பதிவை ஒரு பக்கத்துக்கு இழுக்கறதாம்) எல்லாத்துக்கும் கூடா நட்புதாங்க காரணம். அட ஆமாங்க இந்த கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு, இதுக்கு நடுவுல நம்ம தேர்தல் கமிஷன் நடத்திய விளையாட்டுனு இப்படி பல கூடா நட்புகள் சேர்ந்து எனது ஆட்சிக்கு சாரி... என் பிளாக்குக்கு கேடாய் முடிஞ்சிடுச்சி.

சரி அதெல்லாம் முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சி.... இன்னும் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு பார்த்தீங்களா? நானும் இப்போ எழுதலாம், அப்போ எழுதலாம்னு பார்த்தா நமக்கு ஜாமினே...சே... நேரமே கிடைக்கமாட்டுது. அதானால, ரெண்டு மூணு முறை அவசர செயற்குழுகூட்டத்தை கூட்டி என்ன பண்ணலாம்னு கேட்டு, மறுபடி மறுபடி எதுவுமே பண்ண வேணாம்னு ஒரே மொக்கை முடிவையே எடுத்து காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.

சரி இதுக்கு மேலயும் என்னை நம்பி ஓட்டு போட்ட (அட இண்ட்லி, தமிழ்மணத்துலதாங்க) மக்களையும் என்னை நம்பி என் கட்சில சேர்ந்து இருக்கற 200 Followersகளையும் டார்சர் பண்ணாம விடக்கூடாதுனு முடிவு பண்ணி எனது வலையுலக ஆட்சியை, புரட்சிதலைவர் கனவு கண்ட ஆட்சியை, காமராஜர் ஆட்சியை (இவங்கள்லாம் பழைய பிரபலபதிவருங்கோ) இனிதே தொடங்குகிறேன். 

விதீஈஈஈஈ வலியதூஊஊஊ.....

ஆட்சியின் முதல் ஒப்பந்தமாக என் பதிவுக்கு வாக்களித்த அனைவருக்கும் ஒரு லேப்டாப்.... மன்னிச்சிக்கோங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்.... அனைவருக்கும் ஒரு லாலிபாப் இலவசமாய் வழங்கப்படுகிறது. உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல போய் என் பேரை சொல்லி அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோங்க.

முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது

டிஸ்கி: இந்த சமயத்தில் எல்லா எதிர்கட்சிக்கும் ஒன்று சொல்லிகொள்ள விருப்பபடுகிறேன், ஆசைப்படுகிறேன், கடமை படுகிறேன். நான் வலைப்பூவை தூசி தட்டியதற்கும், ரஜினி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வே....

ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?

சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க

Thursday, April 7, 2011

ஊழலுக்கு எதிரான முதல் அடி - அண்ணா ஹசாரே

கடந்த ஆண்டு மெகா ஊழல்கள் ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம், CVC கமிஷனராக தாமஸ் நியமணம் என ஊழல் கொடி கட்டி பறந்தது. இன்னும் அதற்குண்டான தீர்வுதான் எட்டப்படவில்லை. தமிழக தேர்தலிலும், உலக கோப்பை கிரிக்கெட் வெற்றியிலும் மூழ்கி திளைத்துவரும் பதிவுலகம், இவரை பற்றி எழுத்தாது ஆச்சரியமே. 

ஊழலுக்கு எதிரான ஒரு வலுவான சட்ட வரையறையை கொண்டு வரவும், மத்தியில் லோக்பால் மற்றும் மாநிலத்தில் லோகாயுக்த்தா அமைப்பை நிறுவவும் 73 வயது அண்ணா ஹசாரே தில்லியில் இன்று 3 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.


யார் இந்த அண்ணா ஹசாரே?
மகாராஷ்டிரத்தில் ஜூன் 15, 1938ல் பிறந்த கிசான் பாபு அசாரே (எ) அண்ணா ஹசாரே ஒரு சமூக சேவகர். இவர் சமூக சேவையை பாராட்டி இந்தியா பத்மபூசன் விருதை 1992 ல் இவருக்கு வழங்கியது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது தற்போது நடைமுறையில் உள்ள சட்டவரைவினை விட வலுவானதாக உள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றகோரி இவருடன் சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இவருடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். நாடு முழுவதும் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஊழலுக்கெதிரான இந்தியா:
இந்த சட்ட முன்வரைவு வலுவான, திறனான, அரசியலில் இருந்து விடுபட்ட இரு அமைப்புகளாக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உருவாக்கப்படவும் அவை பொதுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை புலனாய்வு செய்யவும் வழி செய்கிறது. மேலும் குறிப்பிட்ட காலவரைக்குள் குறை நீக்கலும் புலனாய்வு முடிவு பெறவும் வழி செய்கிறது.

இந்த சட்ட வரையறை மூலம்,
1. ஊழலுக்கு எதிரான தனி ஆணையம் அமைக்கப்படும்
2. இதன் உறுப்பினர்களை மக்களும் நீதியரசர்களும் தேர்ந்து எடுப்பர்
3. ஆளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில வராமல் தேர்தல் ஆணையம் போல தனி அமைப்பாக இயங்கும்
4. இதில் செய்யப்படும் புகார்கள் ஓராண்டில் விசாரணையும் அடுத்த ஆண்டில் தீர்ப்பும் வழ்ங்கப்படும்
5. சிறிய அளவில் நடைபெறும் கையூட்டு முதல் பெரிய அளவில் நடைபெறும் ஊழலகள் வரை இந்த அமைப்பில் புகார் செய்யலாம்
6. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மீதே புகார் வந்தால் 2 மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும்.

ஒரு தனி மனிதனாக இருந்து மாபெரும் சமூக போராட்டத்தை தூண்டியிருக்கும் அண்ணா ஹசாரேவிற்கு தோள் கொடுப்போம். நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் புற்றுநோயை களைய சரியான சமயம் இதை விட்டால் வேறு கிடைக்காது.

உலககோப்பை வெற்றிக்காக தெருவிற்கு வந்து கொண்டாடும் நாம், ஏன் இது போன்ற நல்லவிஷயத்துக்காக வீதியில் இறங்ககூடாது.

குறைந்தபட்சம் பதிவுகள் மூலமாகவாவது நம் ஆதரவை தெரிவிக்கலாமே.....

facebook மூலம் ஆதரவு தர இங்கே சொடுக்குங்கள்

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரிப்பவர்கள் கிழே தமிழ்மணத்தில் +ve ஓட்டு போட்டு இந்த பதிவு பலரை சென்று அடைய உதவுங்கள் (இது ஹிட்ஸ் வேண்டி அல்ல, இந்த பதிவு பலரை சென்று அடைய மட்டுமே)


Friday, April 1, 2011

ஸ்பெஷல் மீள் பதிவு


டிஸ்கி 1: இது ஒரு ஸ்பெஷல் மீள்பதிவு.
டிஸ்கி 2 :
இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள்.

2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும்.


3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி)

5. இன்னும் கண்டுபிடிக்க முடியலையா?

6. சரி, Refresh செய்துட்டு விடையை பின்னுட்டத்தில ( Comment Section) பாருங்கள்.Wednesday, March 9, 2011

பதிவர் சந்திப்பும் கோல்மாலும்

அப்பாடி ஒரு வழியா ஊரை எல்லாம் சுத்தி முடிச்சிட்டு திரும்ப மொரீசியஸ் வந்து சேர்ந்தாச்சு. சரி ரொம்ப நாளா பதிவுலகம் பக்கமே வரலையேனு ஒவ்வொரு பிளாக்கா போய் பார்த்தா...... நம்ம சிரிப்பு போலீஸை சென்னைல சந்திச்சப்போ என்னமோ அவர் தான் சாப்பாட்டுக்கு பில் பே பண்ணதா பதிவுலாம் போட்டு இருக்காரு.

இந்த உலகம் இதையும் நம்பிடுச்சோனு ஒரு சந்தேகம்.... அதனால, அந்த பதிவர் சந்திப்பின் Behind the Scenes இதோ....

அவரோட இந்த பதிவுல சொன்னது 90% உண்மைதான். நான், பட்டிக்காட்டன் ஜெய், ஆயிரத்தில் ஒருவன் மணி, பனங்காட்டு நரி, தான் பிரபல பதிவருனு சொல்லிக்கற சிரிப்பு போலீஸ் ரமேஷ் - எல்லோரும் சந்திச்சி, எல்லோரையும் கலாய்ச்சி, போதாத குறைக்கு போன் பண்ணி கோகுலத்தில் சூரியன் வெங்கட்டையும் டெரர் பாண்டியனையும் கலாய்ச்ச பிறகு அந்த களைப்பு போக நல்லா சாப்பிட்டோம்.....


நானும் ஜெய்யும் ஏற்கனவே பேசி ரமேஷைதான் பில் கட்ட வைக்கறதுனு ஒரு பிளானே பண்ணி இருந்தோம். ஆனா அசருவாரா நம்ம போலீஸ், ஒத்த பைசா வெளில எடுக்கலையே.என்னா பேசியும் பிரியோஜனம் இல்லைனு சொல்லி நம்ம ஜெய்யும் நானும் பிளான் B யை ஆரம்பிச்சோம். ரமேஷை நல்லா சாப்பிட சொன்னோம். ஓசி சோறச்சே விடுவாரா போலீஸ். செம கட்டு கட்டினாரு.


வெக்கற ஆப்பு தெரியாம இப்படி வேடிக்கை பார்க்குதே போலீசு

மெதுவா பேச்சு கொடுத்தோம் அவர்கிட்ட. ரமேஷ் நீங்க எந்த கிரெடிட் கார்டு உபயோகிக்கறீங்கனு கேட்டப்போ, உண்ட மயக்கத்துல இருந்த சிங்கம் (அதாங்க ரமேஷ்) தன்னோட கிரெடிட்கார்ட்டை கொடுத்துடுச்சு. உடனே ஜெய் அந்த கிரெடிட்கார்டு வெச்சி பே பண்ணிட்டாரு. எப்பூடி.....

இந்த டெக்னிக் வெச்சி இனி யாரும் ரமேஷை ஏமாற்றக்கூடாது. All Rights Reserved Only to Arun and Jey

டிஸ்கி 1: என்னை பார்க்க ஏர்போர்ட்டு வந்த ஆயிரத்தில் ஒருவன் மணிக்கும், என்னை வீட்டிற்கே வந்து பார்த்த காணாமல் போன கனவுகள் ராஜிக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

டிஸ்கி 2: முக்கியமான விஷயம், அந்த ஓசி சோறுக்கு டிப்ஸ் (சுளையா 20 ரூபாய்)  நான் தான் கொடுத்தேன் யுவர் ஆனர்.


இந்த படத்தை பார்த்து ரமேஷ்தான், தானே விரும்பி பில் பே பண்ணாரு சொன்னா யாராவது இனியும் நம்புவீங்க?Monday, February 14, 2011

பிரபல பதிவரின் தலைகனம்

போன வியாழகிழமை நம்ம
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கோவை வந்து இருந்தாரு.....

எனக்கு போன் பண்ணி,
அவரோட Family யோட
கோவை வந்து இருக்கேன்
RS புரம் KFC ல Meet பண்ணலாம்
வாங்கனு கூப்பிட்டாரு....

பிரபலபதிவரா ஆச்சே, அதிலும்
எதிர்கட்சிகாரர் ஆச்சே,
அவர் கூப்பிட்டும் போகலைனா
அரசியல் நாகரீகம் கெட்டுபோச்சினு
அறிக்கை வந்துடுமேனே
நானும் என் Family யோட போய்
மரியாதை நிமித்தம் சந்திச்சிட்டு வந்தேன்

இதை பத்தி பெருமையா
ஒரு பதிவா வேற போட்டு இருந்தாரு

அதே மாதிரி நான் சனிக்கிழமை
என் Family யோட சேலம் போனேன்
அவருக்கு PHONE  பண்ணி
நான் சேலம் வந்து இருக்கேன்
வாங்க MEET பண்ணலாம்னு
சொன்னா முடியதுனுட்டாரு

அட ஒரு 10 நிமிஷம் வந்து
போங்கனு சொல்லியும்
வரவே முடியாதுனு
முடிவா சொல்லிட்டாரு

சரி ரயில்வே ஸ்டேஷனுக்காவது
வாங்கனு சொன்னா
கண்டபடி திட்ட ஆரம்பிச்சிட்டாருங்க

நான் என்னங்க பண்ணுறது
நான் சென்னைக்கு போற
சேரன் எக்ஸ்பிரஸ் ராத்திரி
1 மணிக்குதான் சேலம் வருது

நான் வேணா கண் முழிச்சி
உங்களுக்காக வெயிட் பண்ணுறேன்
நீங்க வாங்கனு 
சொன்னதுக்காங்க இப்படி திட்டுவாரு!

நீங்ளாவது அவர் பண்ணுற
அநியாத்தை கேளுங்கங்களேன்.......Wednesday, February 9, 2011

என்னத்த தலைப்பு வெக்கறது இதுக்கு?

முஸ்கி: எப்போவோ, எங்கயோ படிச்சது.....

இரண்டு புலவர்கள் பேசிக்கறாங்க.....

புலவர் - 1: 
முக்காலை கையில் எடுத்து
மூவிரண்டு போகையிலே
இக்காலில் ஐந்துதலை நாகம்
அழுந்த கடித்தது....

புலவர் - 2:

பத்து ரதன் புத்திரனின்
மித்துருவின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி
தேய்!...

டிஸ்கி: யாருக்காவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க... விடையை நான் அப்புறம் சொல்லுறேன்

Monday, January 31, 2011

எச்சரிக்கை - உங்களுக்குதான்...

அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை

இத்தனை நாட்களாக மொரீசியஸ்ல் மையம் கொண்டு இருந்த புயல் சற்றே தீவிரமாகி, வடமேற்கே நகர்ந்து, நாளை இந்திய நேரம் காலை 6.30 மணி அளவில் சென்னையை தாக்கப்போகிறது. இதனால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் நன்மையே நடக்க இருக்கிறது. பிறகு அந்த புயல் கோவையில் கொஞ்ச நாளும், வந்தவாசியில் கொஞ்ச நாளும் அருள் மழை பொழிந்து அவ்வப்பொழுது சென்னையையும் தாக்கும் என அறிவிக்கப்பபடுகிறது. அந்த புயலுக்கு அருண்பிரசாத் என பல வருடங்களுக்கு முன்பே பெயரிடப்பட்டுவிட்டது.

@ ஆல்,

கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்...

ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க! 


அட, நான் ஒன்னும் உங்க கிட்ட பெருசா எதிர் பார்க்கலைங்க, நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம். நான் தான் பரவாயில்லப்பா மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும், நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)

என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும், அதை சமாளிக்க மொரீசியஸ் மக்கள் இப்போவே என் காலடி மண்ணை கொண்டு போய் எரிமலைய சுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் எரிமலைங்க பயந்து உள்ளவே இருக்குமாம். சே... இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிட்டு இருக்கு!  சாரி.....சாரி..... தப்பா டைப் பண்ணிட்டேன்.... (என்ன கெட்ட பழக்கம் அது, அடிச்சி வெச்சதை படிக்கறது...ராஸ்கல்ஸ்) சே.... எவ்வளவு மரியாதை நம்ம மேல!  ஒரு மாசத்துல திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டேன். வந்தவுடனே பெரிய விழா எடுக்க போறாங்களாம். அதை தனி பதிவா மார்ச் 1, 2011 அன்னைக்கு சொல்லுறேன். (மகாசிவராத்திரி திருவிழாவை நமக்கான விழா தான்னு சொன்னா யாராவது வந்து பார்க்கவா போறாங்க...அருண், அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா)

சரி, அண்ணண் தரிசனம் வேண்டுறவங்க, அண்ணண் ஆட்டோகிராப் தேவைபடுறவங்க, அண்ணணுக்கு ஊர்காசு தர விருப்பபடுறவங்க (எத்தனை முறை சொல்லுறது அண்ணண்னு சொன்னா அது நான் தான், திரும்ப திரும்ப கேட்டுகிட்டு)  எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் , டிராபிக் ஜாம் ஆக கூடாதுனு சொல்லி ரஜினிகாந்து, டாக்குடரு தம்பி, கலிஞ்சருனு யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். பார்த்து சூதனாம நடந்துக்கோங்க இன்னொரு மகர ஜோதி டராஜடி சென்னைல வேணாம்.

இருங்க, இருங்க, ஒரு நிமிஷம் அங்க ஏதோ சத்தமா இருக்கு என்னானு பார்த்துட்டு வரேன்.

எலேய்ய்ய்ய்ய்ய்ய்...... யார்ரா அது என் பிளாக்கை இப்போவே ஏலம் போட ஆரம்பிச்சிட்டது? நடக்காது மகனே, நடக்காது. பிளாக்கை மூடி யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன், பதிவுகள் வழக்கம் போல வரும். 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி. சிங்கம் தூங்கினாலும் பதிவு சும்மா ஜிவ்வுனு வரும் (மறுபடியும் பாரு, அட சிங்கமும் நான் தாங்க)

சரி, அடுத்த 3 வரிகளை யாரும் படிக்காதீங்க, அது டெரருக்கு மட்டும்தான் (நீங்க பதிவையே படிக்கலைனு தெரியும் இருந்தாலும் லைட்டா ஒரு பிலடப். லைட்டாதான்பா)

@ டெரர்
மச்சி, டாக்சி புக் பண்ணகூட சென்னைல எனக்கு ஆள் இல்ல. ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியுமானு பாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அப்பாடி எழுதி அடிச்சிட்டேன், இப்போ யாராலும் படிக்க முடியாதே படிக்க முடியாதே....)

சரி எல்லோரும் கேட்டுக்கோங்க அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்.... என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க.


BYEEEEEEEEEEEEEE.........

Thursday, January 27, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 5

கடந்த ஒரு வாரமா ஆபிஸ்ல இண்டர்நெட் பிராப்ளம். அதுக்காக வழக்கமா பொதுமக்கள் அறிவை(?!?!) வளர்க்க போடுற நம்ம சினிமா புதிரை போடாம விட்டுட முடியுமா. அதான் பல போராட்டங்களுக்கு (எதுக்கெல்லாம் போராட வேண்டி இருக்குது!) மத்தியில இதோ தயாராகிடுச்சி

இந்த முறை சுலபமா, கடினமானு கணிக்க முடியல. இருந்தாலும் முயற்சி பண்ணுங்க. முடியலைனா க்ளூ நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.


1.

2.

3.

4.

5.

6. 

7.

8.

9.

10.


Courtesy Questions:

11.
 Courtesy: அனு

12.
Courtesy: எஸ். கே

Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி 1 : என் இண்டர்நெட் பிராப்ளம் இன்னும் முழுமையாக சரியாகாததால் உங்கள் விடைகள் சரியா இல்லையானு உடனே சொல்ல முடியாம போகலாம். எதுக்கும் comment subscribe போட்டு வச்சிக்கோங்க. எப்போலாம் நெட் ஒர்க் ஆகுதோ அப்போ பதில் போடுறேன்.

டிஸ்கி 2: கமெண்டையும் விடைகளை ஒரே கமெண்டில் போடுவதால் சில கமெண்ட்டுகளை வெளியிட முடியவில்லை. கருத்துக்களை தனி கமெண்ட்டாகவும் விடைகளை தனி கமெண்ட்டாகவும் போடவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.