Cricket Countdown....

Tuesday, June 29, 2010

'செந்'தமிழ் வளர்ப்போம்....




இது திடீரென தமிழை சாரி செந்தமிழை வளர்க்கும் சீசன். அதனால நாமளும் செந்தமிழை எப்படி வளர்க்கலாம் என யோசித்தபொழுது, கனப்பொழுதில் கபாலத்தில் உதித்தது ஒரு யோசனை.....

தமிழ் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் என்ன?

அதனால ஏதோ நம்மாலான சிறு உதவி, தமிழை வளர்க்கும் முயற்சியில் முதல் அடி இதோ --

Thanjaavuru Soil Taking....

Thamarabarani Water pouring....

Mixing Mixing Doing This Toy....

This Toy not Toy not... True....

So much Toy doing Kannamma....

Nothing is Gilter like You lady....

Tell Answer di....

(ரொம்ப யோசிக்காதீங்க original பாட்டு கீழே கொடுத்துள்ளேன்)

ஹி ஹி ஹி

எப்புடி... எங்களோட மொழிபெயர்ப்பு.

ச்சே... கலைஞருக்கு தெரியாம போச்சு, இல்லனா நமக்கும் ஒரு சிலையோட இனியவை நாற்பதுல ஒரு வண்டி விட்டுருப்பாரு. வட போச்சே....

(என்னாது... ஆட்டோ அனுப்பறீங்களா......

Wait....Wait... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்...
வன்முறை கூடாது.... என்னா கொலைவெறி....

Be Careful .... நான் என்னை சொன்னேன்....)

அந்த பாடல்:
தஞ்சாவூரு மண்ணு எடுத்து....
தாமரபரணி தண்ணிய விட்டு....
சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த பொம்ம...
இது பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்ம...
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா...
அத்தனையும் உன்ன போல மின்னுமா....
பதில் சொல்லம்மா....



சிரிப்பு போலீஸ்: வீரத் திருமகன்

நம்மல பத்தி என்னமா கூவி இருக்காருயா நம்ம போலீசு........


இந்த லிங்க் போய் பாருங்கண்ணா.....






Sunday, June 27, 2010

நன்றி

விளையாட்டாய் வலைப்பூவை ஆரம்பித்து, விளையாட்டை பற்றி எழுதி வந்த  என்னை, தன் நையாண்டி கலந்த எனர்ஜி பூஸ்டர் எழுத்துக்களால் கவர்ந்து என் எழுத்தை திசை திருப்பியவர் வெங்கட்.
என்னதான் அவருடைய பதிவுகளை நக்கல் அடித்தாலும், அதற்கு சரியான பதில் சொல்வதோடு என் எழுத்துப்பிழைகளை நாசுக்காக சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மெருகேற்றியவர்.

இன்று, Century போட்ட தன் வலைப்பூவுடன் 10 பதிவு போடவே பகிரதபிரயத்தனப்படும் என் வலைப்பூவையும் திரு.தேவா மூலம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை.

என்னுடைய எழுத்துக்களிலும் ஏதோ உள்ளதாக உணர்ந்து என்னை அறிமுகப்படுத்திய தேவாவிற்கும் என் எழுத்துக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வலைச்சரத்திற்கும் நன்றிகள் பல...


நண்பர்கள் அனு, ரமெஷ், RK, Velu G, KRP, நியோ, தமிழ் சரியாக படிக்க தெரியவில்லையானாலும் பொறுமையாக படிக்கும் என் முதல் ரசிகையான என் மனைவி  போன்றோர் தரும் ஊக்கத்திற்கும் நன்றி.

இந்த வலைச்சர அறிமுகம் எனக்கு குருவி தலையில் வைத்த பனைப்பழம் போல தோன்றினாலும், தொடர்ந்து எழுதுவேன் உங்கள் ஆதரவுடன்.

டிஸ்கி:

இப்படி எழுதியதால் கழக கண்மணிகள் கவலைபட வேண்டாம் வெங்கடை கலாய்ப்பது நிறுத்தப்படமாட்டாது. VKS (வெங்கடை கலாய்ப்போர் சங்கம்) சங்க கொள்கையில் தீவிரமாக இருப்போம்.


Friday, June 25, 2010

காதல் வலி




உன் பிறந்த நாளில்
நான் தந்த பூங்கொத்து 

நீ ஜெயிக்க வேண்டுமென்றே ஊருக்கு
நான் வைத்த கோலப்போட்டி

திருவிழாவில் உன் அம்மாவிற்கு தெரியாமல்
நான் வாங்கித்தந்த வளையல்கள்

நீ கவிதை போட்டியில் பரிசுபெற
நான் எழுதி தந்த கவிதைகள்

பலமுறை அழைத்தும் நீ வராததால்
நான் பார்க்காமலே போன திரைப்படங்கள்

உன்னை எடுக்க சொல்லி
கோவில் நந்திமேல் நான் வைத்த பூச்சரங்கள்

எனக்கு தருவதாய் சொல்லி
பக்கத்துக்கு வீட்டு குழந்தைக்கு நீ தந்த முத்தங்கள்


அடி காதலியே!
என்னைத்தான் மறந்துவிட்டாய்
இவைகளையாவது நினைவில் இருக்கிறதா!!

Tuesday, June 22, 2010

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு - MRI

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு  -2


மருத்துவ கருவிகள் தொடர்பான முந்தைய பதிவில் CT SCAN பற்றி பார்த்தோம். இந்த பதிவில் MRI பற்றியும், CT - MRI இடையேயான வித்தியாசத்தை பற்றியும் பார்ப்போம்.

MRI ஸ்கேன்:

MAGNETIC RESONANCE IMAGING என்பதன் சுருக்கமே MRI ஆகும்.  CT ஸ்கேன் போலவே MRI யும் முழு உடலையும் ஸ்கேன் செய்யவே உதவுகிறது.  MRI யும் CT போலவே அதே 3 பகுதிகளான PATIENT டேபிள், GANTRY , COMPUTER ஐ கொண்டுள்ளது. 



ஆனால் MRI GANTRY யில் CT ஸ்கேன் இல் உள்ள X RAY  TUBE க்கு பதில் சக்தி வாய்ந்த காந்தம் (MAGNET) உள்ளது. இந்த காந்தத்தின் உதவியாலேயே உடலின் பாகங்களை ஊடுருவி பார்கிறார்கள்.

செயல்படும் முறை:
PATIENT ஐ டேபிளில் படுக்க வைத்து டேபிள் ஐ GANTRY க்குள் செலுத்துவர். நம் உடல் 90 சதவிகிதம் நீர் ( H2O ) ஆல் ஆனது. இந்த நீரில் உள்ள ஹைட்ரோஜன்  அணுக்கள் GANTRY யில் உள்ள காந்த விசையால் ஈர்க்கப்பட்டு RADIO FREQUENCY  அலைகளை வெளியிடும். இந்த அலைகள் உடலின் எலும்பு மற்றும் தசைகளை ஊடுருவி வெளியேறும்போது , ஊடுருவும் இடத்திற்கு ஏற்ப இதன் வலிமை மாறுபடும். இதை DETECTORகள் COMPUTER ருக்கு அனுப்பி நம்மக்கு சீரான படத்தை கொடுக்கும்.


கூடுதல் தகவல் :
GANTRY க்கு உள்ளே உள்ள காந்தம் எப்போதும் குளுமையாக இருக்க வேண்டும். இதற்காக LIQUID HELIUM ஐ ஒரு பம்ப் மூலம் மறு சுழற்சி செய்து கொண்டே இருப்பர். இது எப்போதும் ஒரு வித ஒலியை எழுப்பிகொண்டிருக்கும். பலருக்கு இதனால் பயம் உண்டாகி ஸ்கேன் ஐ பாதியிலேயே நிறுத்த சொல்வர். அந்த சமயத்தில், அவருடன் வருபவரை உடன் அமர சொல்வர்,இதனால் உடன் வருபவருக்கு எந்த தீமையும் ஏற்படாது.

ஸ்கேன் செய்யும் போது அசையாமல் ஒரே நிலையில் படுத்திருக்கவேண்டும். இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். குறிப்பாக வலியில் உள்ளவர்கள், குழந்தைகளுக்கு ஸ்கேன் செய்யும் போது இந்த சிரமத்தை தவிர்க்க மயக்க மருந்து கொடுப்பதும் உண்டு.

MRI மூலம் மூளையின் படம்

எச்சரிக்கை:
சக்தி வாய்ந்த காந்தம் இருப்பதால் -  எலும்பு உடைந்ததால் அதில் PLATE வைத்து அறுவை சிகிச்சை செய்தவர்கள், PACEMAKER பொருத்தி உள்ளவர்கள் இதில் ஸ்கேன் செய்ய கூடாது. MOBILE PHONE , CREDIT CARD , WATCH  போன்றவைகளுக்கும் அனுமதி இல்லை.
தவறுதலாக ஏதேனும் காந்தத்துடன் ஒட்டிக்கொள்ள நேரிட்டால் இந்த காந்தத்தை சுற்றி நிரப்பயுள்ள LIQUID HELIUM ஐ வெளியேற்றி செயல் இழக்க செய்வார்கள். மறுபடியும் HELIUM ஐ நிரப்ப பல லட்சம் செலவுசெய்ய வேண்டிவரும்.

MRI - CT வேறுபாடு:

CT போல Xray கதிர்களை உபயோகிக்காமல் காந்த சக்தியை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கவலை இல்லை. அடுத்தடுத்து ஸ்கேன் செய்ய வேண்டுவோர் கதிர்வீச்சை தவிர்க்க CT க்கு பதில் MRI ஐ உபயோகிக்கலாம். குறிப்பாக SOFT TISSUE DIFFERENCE எனப்படும் தசைகளுக்கு  இடையேயான  வேறுபாடுகளை காணவும், நரம்பியல், CANCER செல்களை கண்டறியவும் CT ஐ விட  MRI சிறந்தது. ஆனால் கட்டணம் CT யை விட இருமடங்கு அதிகம் ஆகும்.

சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேட்கலாம். அடுத்த பதிவில் ULTRASOUND SCAN பற்றி பார்ப்போம்.....

Sunday, June 20, 2010

அப்பாவுக்கு....


அப்பா....


முன்பே நான் பதிவு செய்த இடுகையை "தந்தையர்  தினத்திற்காக"   மீண்டும் பதிவு செய்கிறேன்.
ஒரு மெயில் இல் வந்த கவிதையை பகிரிந்து கொள்கிறேன்.... 

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

 
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா
செல்லம் என்று

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...




Friday, June 18, 2010

அழகான ராட்சசி!




உன் குறும்புகளால்
என்னை கோபப்படுத்துகிறாய் ...

என் கோபங்களை
நீ குறும்பாக பார்க்கிறாய்...

உன் முத்தங்களில்...
என்னை மகிழ்விக்கிறாய்...

என் மகிழ்ச்சியில்
நீ முத்தம் பெறுகின்றாய் ....

உன் அழுகையால்
என்னை சோகம் கொள்ளசெய்கிறாய்...

நான் சோகமானால்
உன் சிரிப்பால் அதை கரைக்கிறாய்...




விரலின் ஸ்பரிசம்,
எச்சில் முத்தம்,
சிறு நடை,
கொஞ்சம் அடம்,
நிறைய குறும்பு,
இவைகளை தினமும் எனக்கு தரும் நீ

தேவதை தந்த வரமா?
இல்லை வரமாய் வந்த தேவதையா?

இன்பத்தையும் சோகத்தையும் சேர்த்து தரும்
நீ என்றுமே எனக்கு ஒரு
அழகான ராட்சசி!

ஒரு சிந்தனை:

தமிழில் பெயர் வைக்க சொல்லி பெயர் பலகைகளில் "தார்" பூசும் அரசியல்வாதிகளே! அதற்கு பதில் அந்த பலகைக்கு பக்கத்தில் சொந்த செலவில் அதே போல ஒரு பலகையை தமிழில் எழுதி வைத்தால் என்ன?


Tuesday, June 15, 2010

மருத்துவ கருவிகள் - CT SCAN - தொடர் பதிவு

மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு  - 1



மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில்  (SCAN சென்டர்ஸ்),  " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.

ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து  பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.

CT ஸ்கேன்:

COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT  ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.

CT  ஸ்கேன்

நம் திரைப்படங்களில்  அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.

முதலில் PATIENT  ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.

அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.

GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.



XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி  DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும். 

தலை, கண், மூக்கு, மூளை - CT படம்

XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.

டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE  சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.

எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!

அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.

Thursday, June 10, 2010

கோழி முட்டையில் இருந்து குதிரை வருமா?



கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?

என்னடா இவன் கேனத்தனமா கேட்கிறான் என பார்கிறீர்களா?

மறுபடியும் கேட்கிறேன் - கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?

வராது என்று சொன்னா அவன் மனுஷன்,
வரும்னு சொன்ன அவன் பெரிய மனுஷன்.

நான் பெரியமனுஷன்.
கோழி முட்டை யில் இருந்து குதிரை வருதுங்க.

நீங்க FARMVILLE  விளையாடிநீங்கனா குதிரை மட்டும் இல்ல, 
பசு பன்றி ஆடு மரம் வீடு  இன்னும் என்னென்னமோ வருதுங்க.
என்ன லாஜிக் கோ தெரியல!
ஒரு வேலை இதை தான் கூமுட்டை (குதிரை முட்டை) னு சொல்றாங்களோ! 


சரி விஷயத்துக்கு வருவோம்,
இது என்ன விளையாட்டுனா, அவங்க ஒரு எடாத கொடுபாங்களாம் நாம அத கம்ப்யூட்டர் லயே உழுது, பயிர் செஞ்சி, அறுவடை செய்யணுமாம் .நீங்க விதைக்கும் பயிறுக்கு ஏற்ப அது விளையற நேரமும் தொகையும் மாறுமாம்.
ஊர்ல விவசாயம் பண்ண மாட்டேனு சொல்லிட்டு  நகரத்துக்கு ஓடி வந்து ராத்திரி BPO ல வேல செய்யற முக்கால் வாசி பேர் இத விளையாடுறாங்க. என்னத்த சொல்ல?


அதுமட்டும் இல்லங்க அடுத்தவங்க FARM முக்கு போய் உரம் போட்டா இவங்களுக்கு XP என்கிற EXPERIENCE அதிகம் ஆகி அடுத்த LEVEL லுக்கு போலாமாம்.
அடுத்த வீட்ல கொலையே நடந்தாலும் என்னனு எட்டி பாக்க மாடோம் ஆனா இதுல மட்டும் தினமும் அடுத்தவன் FARM முக்கு போய் வேலை செய்வானாம்.


இன்னும் இருக்கு, FARMVILLE காரங்க கிட்ட சேத்து வெச்ச காசை (FARMVILLE CASH தாங்க, சொந்த காசு இல்ல) கொடுத்து நாய் குட்டி வாங்கி அதுக்கு தினமும் சோறு ( அதாங்க DOG TREAT ) போடணுமாம் இல்லாட்டி அது உங்களைவிட்டு ஓடி போயிடுமாம்.
பெத்த அப்பனுக்கே சோறு போடா யோசிக்கிற ஜனங்க இந்த நாய் குட்டி சோறுக்கு நாய் மாதிரி அலைஞ்சி பக்கத்துக்கு FARM காரன்கிட்ட சோத்த  அனுப்ப சொல்வான்.


இன்னொன்னு என்னனா இவங்க ஒரு பரிசை நண்பருக்கு அனுப்புவாங்களாம், பதிலுக்கு அவுங்க ஒரு பரிசை திரும்ப அனுப்புவாங்களாம் , இது தினமும் நடக்குமாம். (கவலை படாதிங்க ஒத்த பைசா செலவுஇல்ல, எல்லாம் கம்ப்யூட்டர் லயே தான்)
பிச்சகாரனுக்கு ஒரு ரூபாய் போட யோசிகிறவுங்க, இதுல தினமும், ஏன் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பரிசு அனுபறாங்க. கலிகாலம்டா சாமி

இன்னும் நெறயா சொல்லாம் இந்த GAME ஐ பத்தி, கொக்காமோக்க எவன்டா இந்த GAME ஐ கண்டுபுடிச்சவன்? அவன் மட்டும் என் கைல கிடைச்சான்! 

:

:

:

:

:

:

:

என்ன பண்ண முடியும், " எப்படிடா இது? ரூம் போட்டு யோசிச்சியானு கேக்கணும்"


அப்புறம் எல்லாருக்கும் ஒரு சின்ன REQUEST ,


யாராவது FARMVILLE விளையாடுனீங்கனா

ஹி ஹி ஹி 

arunprasath.gs@gmail.com க்கு NEIGHBOUR REQUEST அனுப்பி என்னையும் உங்க NEIGHBOUR ஆ செத்துகொங்கோ ...... GIFT டே வர மாட்டேங்குது.


 ஹி ஹி ஹி


(நண்பர் வெங்கட் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, NEIGHBOUR ஆ செத்துகொங்கோ என்பதை சேர்த்துகொள்ளுங்கள் என திருத்தி வாசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்)





Monday, June 7, 2010

திரும்ப கிடைக்குமா?



திரும்ப கிடைக்குமா?

யாரையும் அறியா கோவைக்கு உனக்காக நானும்
யாரையும் அறியா சென்னைக்கு எனக்காக நீயும் 
வந்திறங்கிய நாட்கள்....

பௌர்ணமி இரவில், கடற்கரை மணலில் 
கால் நனைத்த பொழுதுகள்...

திக்கு தெரியாமல், வழிகளும் அறியாமல்
ஒன்றாய் பைக்கில் சுற்றிய சாலைகள்...

மழைகாலம் என தெரிந்தும், கடற்கரை சென்று
ஒதுங்க இடம் இல்லாமல் நனைந்த மழை....

நான் அழைத்து போகும் திரைப்படம் எல்லாம்
அறுவையான படம் என்று கூறி உனக்கு வரும் கோபங்கள்...

நீ கோபப்படுவாய் என தெரிந்தும் உன் கோபத்தை ரசிக்கவே
நான் புக் செய்யும் அறுவை படங்கள்...

உனக்காக நானும் எனக்காக நீயும் புத்தாடை 
எடுபதற்காகவே வரும் பண்டிகைகள்...

அடுத்தவர் தூக்கம் கெடும் என்பதிற்காக
SMS - ல்லேயே நீளும் இரவுகள்...

நீ வீட்டில் இருந்து கிளம்பிவிட்டாய் என தெரிந்தும்
எந்த உடையில் நீ வருவாய் என காத்திருக்கும் நொடிகள்...

உடன் இருக்க வேண்டும் என்பதிற்காக 
பாண்டிச்சேரிகும், திண்டிவனத்திற்கும் சென்று
பேருந்திலேயே பொழுதை கழிக்கும் பயணங்கள்...

மனைவியாய் மாறிய காதலியே!
என் அலுவலகத்தின் வேலை பளுவிற்கும்,
உன் வீடு வேலையின் சுமைகளுக்கும்,
நம் குழந்தையின் பராமரிப்பிற்கும்,

இடையில், திரும்ப கிடைக்குமா?

 இ . வா. பேசும் படம்:

 பஸ் இல் புட் போர்டு தெரியும்! இதற்கு ஒரு பெயர் வையுங்களேன் !!


Wednesday, June 2, 2010

என்ன கொடுமை சார் இது?




மோரீஷியஸ்....

90  களில் இந்தியா எப்படி இருந்ததோ
அப்படி இருக்கிறது தற்போதைய மோரீஷியஸ்...

5 மணிக்கு மேல் கடைகள் கிடையாது...

6 மணிக்கு மேல் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிவிடுவர்...

8 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது...

தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும்,
தமிழ் திரைப்படங்கள் வராது....

நம்முடைய தூர்தர்ஷன் போல 
இங்கும் 3 சேனல் கள் உண்டு....
உருப்படி இல்லை....

சரி DTH கொடுக்கலாம் என்றால்
தமிழ் சேனல்களே கிடையாது....

மருந்திற்கு கூட இவர்களுக்கு
கிரிக்கெட் என்றால் என்னவென தெரியாது....

IPL தொடங்குகிறது எங்க 
அலசி ஆராய்ந்து சவுத் ஆப்ரிக்கா வில் இருந்து
கிரிக்கெட் ஒளிபரப்பும் DSTV DTH -ஐ வாங்கினேன்...
Package மாதம் 2000 ரூபாய்..... 

வந்தான்யா அந்த சேல்ஸ் ரெப்பு...
" சார் 4 ஹிந்தி சேனல், செட் மக்ஸ், அணைத்து ஸ்போர்ட்ஸ்
மற்றும் ஒரு புதிய சேனல் 1500 ரூபாய்க்கு ஜூன் இல் வருது" என்றான் 

நானும் ஆர்வ கோளாரில் 
"எந்த சேனல், SUN டிவி யா?" 

அவன்: இல்ல சார், வேற

நான்: ஸ்டார் விஜய் யா?

அவன்: இல்ல சார், எதோ நீளமா பேர் வரும் சார்? ஹிந்தி சேனல்

நான்:  ஹ்ம்ம், சஹாரா, கலர்ஸ், ஸ்டார் பிளஸ்....

அவன்: இல்ல சார், எதோ "ஷா, ஓர்" லாம் வரும்.

நான்: தூர்தர்ஷன்?

அவன்: ஆமாம் சார், அதே தான்.

கொய்யால... அத நாங்க இந்தியாலயே கிரிக்கெட் தவிர வேற எதுக்கும் பாக்க மாடோம், இங்க வந்து அந்த கொடுமைய அனுபவிக்கணுமா?

ஒன்றும் இல்ல சனி உச்சத்துல இருந்தா இப்படிதான். 

விடு விடு உலக தொலைக்காட்சிகளை  பார்த்து அறிவை வளர்த்துக்கலாம்! ( வேற வழி?)

கொடுமை கொடுமை னு கோவிலுக்கு போன அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்.....

உட்காருகிற இடம் எல்லாம் ஆப்பு வெச்சிடுறாங்கையா....

இ. வா. பேசும் படம்:
சல்யூட்....