Cricket Countdown....

Monday, June 20, 2011

சூரியன் மீண்டும் உதிக்கும்

அன்பார்ந்த தோழர்களே தோழமைகளே, (ரெண்டும் ஒண்ணுதானா? யாருப்பா இங்க இலக்கியவாதி... வந்து விளக்கத்தை சொல்லிட்டு போங்க)

கடந்த சில மாதங்களாக இழுத்து மூடப்பட்டு BLOCK ஆகி இருந்த என் BLOG சென்ற வாரம் முதல் தூசுத்தட்ட ஆரம்பிக்கப்பட்டது. அந்த நெடிதாங்காமல் சீக்கிரம் சுத்தம் செய்ய வேண்டி Baa, Baa, Black Sheep பாபா ராம்தேவ் அவர்கள் ஹாஸ்பிட்டலில் டிரிப்ஸ் ஏற்றி கொண்டே உண்ணாவிரதம் இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஒருவர் கதறி அழுது கேட்டதாலும் (யாரா? என் Blogதான், “நான் துரு பிடிச்சி போயிட்டேன்...சீக்கிரம் வாடா வெண்னை” என்றது) இன்று முதல் இந்த வலையுலகில் மீண்டும் பதவி பிரமானம் எற்கிறேன். (யார் அது, “சூரியன் மீண்டும் உதிக்காதுனு சொன்னது” - அய்யோ, அம்மா, அது நீங்க சொன்னதா.. உணர்ச்சி வசத்துல பேசிட்டேன்மா மன்னிச்சிடுங்க, சூரியன் என் பிளாக்கோட பேரும்மா...இதுல எந்த உள்குத்தும் இல்ல)

இந்த சூரியன், கண்ணாடி ரெண்டையும் சேர்த்து வெச்சி இது அரசியல் பதிவுனு கிளப்பிவிட்டுறாதீங்கப்பா

சரி இத்தனை நாள் ஏன் பதிவு எழுத முடியலைனு கேக்றீங்களா? ( நீங்க  கேக்கலைனாலும் நான் சொல்லியே தீருவேன்... அப்புறம் எப்படி இந்த பதிவை ஒரு பக்கத்துக்கு இழுக்கறதாம்) எல்லாத்துக்கும் கூடா நட்புதாங்க காரணம். அட ஆமாங்க இந்த கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு, இதுக்கு நடுவுல நம்ம தேர்தல் கமிஷன் நடத்திய விளையாட்டுனு இப்படி பல கூடா நட்புகள் சேர்ந்து எனது ஆட்சிக்கு சாரி... என் பிளாக்குக்கு கேடாய் முடிஞ்சிடுச்சி.

சரி அதெல்லாம் முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சி.... இன்னும் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு பார்த்தீங்களா? நானும் இப்போ எழுதலாம், அப்போ எழுதலாம்னு பார்த்தா நமக்கு ஜாமினே...சே... நேரமே கிடைக்கமாட்டுது. அதானால, ரெண்டு மூணு முறை அவசர செயற்குழுகூட்டத்தை கூட்டி என்ன பண்ணலாம்னு கேட்டு, மறுபடி மறுபடி எதுவுமே பண்ண வேணாம்னு ஒரே மொக்கை முடிவையே எடுத்து காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.

சரி இதுக்கு மேலயும் என்னை நம்பி ஓட்டு போட்ட (அட இண்ட்லி, தமிழ்மணத்துலதாங்க) மக்களையும் என்னை நம்பி என் கட்சில சேர்ந்து இருக்கற 200 Followersகளையும் டார்சர் பண்ணாம விடக்கூடாதுனு முடிவு பண்ணி எனது வலையுலக ஆட்சியை, புரட்சிதலைவர் கனவு கண்ட ஆட்சியை, காமராஜர் ஆட்சியை (இவங்கள்லாம் பழைய பிரபலபதிவருங்கோ) இனிதே தொடங்குகிறேன். 

விதீஈஈஈஈ வலியதூஊஊஊ.....

ஆட்சியின் முதல் ஒப்பந்தமாக என் பதிவுக்கு வாக்களித்த அனைவருக்கும் ஒரு லேப்டாப்.... மன்னிச்சிக்கோங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்.... அனைவருக்கும் ஒரு லாலிபாப் இலவசமாய் வழங்கப்படுகிறது. உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல போய் என் பேரை சொல்லி அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோங்க.

முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது

டிஸ்கி: இந்த சமயத்தில் எல்லா எதிர்கட்சிக்கும் ஒன்று சொல்லிகொள்ள விருப்பபடுகிறேன், ஆசைப்படுகிறேன், கடமை படுகிறேன். நான் வலைப்பூவை தூசி தட்டியதற்கும், ரஜினி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வே....

ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?

சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க