Cricket Countdown....

Thursday, September 30, 2010

ரஜினி படம் - First Day, First Show

ரஜினி - இந்த வார்த்தைக்கும் இந்த மனிதனுக்கும் மயங்கிகிடக்கும் பல தமிழர்களில் நானும் ஒருவன்.

ஜீன் 14, 2007, மறுநாள் சிவாஜி படம் official ஆக ரிலீஸ். ஆனால், ரசிகர் மன்றத்தை பிடித்து எங்கள் அலுவலம் சார்பாக 10 டிக்கெட் அன்று இரவு பிரிவியூ ஷோவிற்கு வாங்கி விட்டோம். குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இரவு 9 மணிக்கு ஷோ. நான் புரசைவாக்கம் கிளையிலும், மற்ற நண்பர்கள் நுங்கம்பாக்கம் கிளையிலும் வேலை செய்தனர்.


நான் மாலை 7 மணிக்குதான் புறப்பட முடிந்தது. வழியில் மற்றோரு நண்பரையும் பிக் கப் செய்து கொண்டு தியேட்டருக்கு சென்று சேர 8.45 ஆகிவிட்டது. மற்ற நண்பர்கள் தியேட்டர் உள் சென்று விட்டனர். இதுதான் நான் முதல் முறை ரஜினி படத்தை சென்னையில் முதல் காட்சியில் பார்ப்பது. என்ன ஆராவாரம், எவ்வளவு மகிழ்ச்சி. அந்த GST சாலையில் ரஜினிக்கு தேர் இழுப்பதும், ரஜினி படம் போட்ட டீ சர்ட் மாட்டி கொண்டு பைக்கில் சுற்றுவதும்,  சரம் சரம் ஆக 1000 வாலா பட்டாசுக்கள் வெடிப்பதுமாக அந்த ஏரியாவே களைக்கட்டியது.


கடைசி நேரத்தில் போன எங்களால் உள்ளே சென்று என் பைக்கை பார்க் செய்ய முடியவில்லை. பார்க்கிங் full ஆகி, ரோடு வரையும், பக்கத்து சந்துகளிலும் நிறுத்தி இருந்தனர். நானும் வேறு வழியில்லாமல் என் வண்டியையும் சந்தில் நிறுத்திவிட்டு தியேட்டருக்கு உள்ளே சென்றேன். ஏற்கனவே full, நண்பர்கள் எங்கோ நடுவில் உட்கார்ந்து இருப்பதாக மொபைலில் கூறினர். வேறு வழியின்றி வாசலிலேயே நின்று இடைவேளை வரை பார்த்தோம்.

அன்று தான் சென்னை ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தையும் ஆராவாரத்தையும் பார்த்தேன்.... இந்த மனிஷன் ரஜினிக்கு இவ்வளவு crazeஆ! இடைவேளைக்கு பிறகு நண்பர்களின் மடியில் அமர்ந்து மீதிப்படம் பார்த்து விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் அதுவும் ஒன்று! பார்த்துவிட்டு வந்து 10 நாளைக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்களை வெறுப்பேற்றியது தனி கதை.

சரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே! தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....


Tuesday, September 28, 2010

தலைகீழ் பதிவு


 ןıɹɐɐןɐɹɐʌ ɐƃɐןnʌıɥʇɐd

ɐƃɐɐʎıɐɹnɯ ןɐɥʇnɯ

ıɥɔɹɐʎnɯ ɐɥʇɐɐʎǝs ɯnɹɐɐʎ


„nʌıɥʇɐd ןǝǝʞıɐןɐɥʇ„

ɐƃuɐʌɐɹnpɐd ɐʇɥsɐʞ ɐʞıpɐd

nʇʇod nɥʇnʌɐʞ ıɐɹoʇıuoɯ

˙˙˙˙ɐƃuıpɐd

¡ɐɐuıɐןןı

ɐƃuıpɐd nɥʇuɐʌ nʇʇod ɹoʇıuoɯ

சரி சரி, இதுக்காக எல்லாம் என்னை ஓவரா புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.... நீங்களும் இதே மாதிரி பதிவோ? இல்லை, இந்த  பதிவுக்கு இதே மாதிரி தலைகீழா கமெண்டோ போடனும்னு விருப்படுவீங்க. அவங்க,

http://textmechanic.com/Reverse-Text-Generator.html

இந்த லிங்க் போய் வித்தியாசம் வித்தியாசமா எழுதி போடுங்க...


Saturday, September 25, 2010

ஐதராபாத் to சென்னை...2

விநாயக சதூர்த்திக்கு கிளம்ப வேண்டியவன், டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், அதன் தொடர்ச்சி...

சரி என்று வெள்ளிக்கிழமை சென்னை செல்ல வேண்டிய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். இரவு ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கும் திரும்பியாச்சு. மறுநாள் காலை வந்தான்யா அந்த Factory Engineer. அட! நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம்! விநாயக சதுர்த்திக்கு சென்னைக்கு போக பிளான் பண்ணி இருந்தவனை புடிச்சி ஐதராபாத் அனுப்பிடாங்களாம்.

அவன், நான், எங்க டெமேஜர் மூணு பேரும் போய் கஸ்டமரை பார்த்துட்டு வந்தாச்சு. டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு.  டேமெஜர் இப்ப கேக்குறார், “என்ன அருண், விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு போகலையா”னு. (ங்கெய்யால, பிளானை டெமேஜ் பண்ணிட்டு 3 மணிக்கு கேக்குற கேள்வியபாரு?) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு? நீங்க பண்டிகைக்கு போகலையா சார்?” என நானும் ஒரு பிட்டு போட. அதுக்கு அவர், “எனக்கு நைட் 8 மணிக்கு பிளைட் தம்பி, போய்டுவேன். நீ வேணா இன்னைக்கு போய்ட்டு திங்கள் காலைல ஆபிஸ் வந்துடு போதும்”. (ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார்)

(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடுப்பு ஏத்துறார், விடாத அருண்! பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.

அடுத்து ஆபிஸ் போய், டிக்கெட் செக் செய்தப்பதான் பிரச்சனை தெரிஞ்சது. முக்கிய பேருந்துகள் எல்லாம் பண்டிகையால் full. சில சிறு சிறு டிராவல்ஸ் செக் செய்தால் அனைத்திலும் கடைசி சீட் தான் இருந்தது. (பேருந்துகளில் எப்பொழுதும் கடைசி 2 வரிசை மற்றும் வலது புறமும் இருக்கும் சீட்டுகள் அதிக ரிஸ்க் சீட்டுகள். விபத்துகளில் அதிகம் அடிபடுவது இந்த சீட்டுகள்தான்)

பாவம் அந்த Factory Engineer, அப்ப  ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)


போன் செய்தேன், 
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”, 
நான் “இரண்டு”. 
எதிர் முனையில் “சரி சார் இருக்குது, கன்பார்ம் பண்ணிக்கவா. சீட்டு நம்பர் L9, L10 ஓகே வா. மொபல் நம்பர் தாங்க சார்” 
நான், “செய்துகோங்க. மொபல் நம்பர் 91771 57007. சரி, எவ்வளவு ரேட்”
எதிர் முனை “அதே 800 ரூ தான் சார்”
நான் “ஓகே, எப்ப, எங்க வந்து டிக்கெட் வாங்கிகனும்”
எதிர்முனை “7.30 மணிக்கு Lakdi ka Pool (ஹைதராபாதின் ஒரு முக்கிய ஏரியா) வந்துடுங்க pick up van வந்துடும், பஸ்ல உட்கார்ந்த பிறகு காசு கொடுத்தா போதும்”
நான் “மிஸ் ஆகாதே! கடைசில சீட் இல்லைனு சொல்ல கூடாது”
எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....

மொபலை பார்த்தால் ஒரு SMS From USL BUS. "YOUR TICKET HAS BEEN CONFIRMED. SEAT NO IS L9, L10. PICK UP TIME 7.30 PM @ LAKDI-KA-POOL" என வந்திருந்தது. எதிர் பார்க்காத ஆச்சர்யம். ஒரு போன் காலை மதித்து கன்பார்ம் செய்து இருந்தார்கள். 

மாலை சரியாக 7.30 மணிக்கு pick up செய்து பஸ்க்கு சென்றோம். அங்கு ஒரு ஆச்சரியம், ஒவ்வொரு சீட்டுக்கும் சிறிய தலையனை கழுத்தில் வைக்கவும், நன்றாக துவைத்த போர்வையும் இருந்தது. சீட்டின் அளவும் மற்ற பேருந்துகள் போல இல்லாமல் சற்று அகலம். அந்த வண்டி Helper வந்து எங்க பெயர் சொல்லி பணம் வாங்கி கொண்டு சரியான ரசீதையும் தந்து விட்டு சென்றார். 

பேருந்தின் Interiorஉம் அழகாக கண் கூசாத வண்ண விளக்குகளால் செய்திருந்தனர். மேலும், மற்ற பேருந்துகள் போல அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொடுத்து வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போவது போல செய்யாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தந்தனர். (நான் பல தனியார் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளேன், சில பேருந்துகள் கேவலமாகவும் போர்வை ஒரு வித வாசத்துடனும் இருக்கும்.... பலருக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கலாம்)


பயணிகளை கேட்டு, எப்பொழுதும் போடும் மொக்கை தெலுங்கு படத்தை போடாமல், தலைவர் நடித்த சிவாஜியை போட்டனர். சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (தலைவர் படம்னா சும்மாவா) வழியில் நல்ல சுகாதாரமான ஓட்டலிலும் நிறுத்தினர்.

சரியாக காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தது பேருந்து. சுமார் 800 கிமீ தொலைவை 10 மணி நேரத்தில் வந்து அடைந்தோம். அதில் இருந்து சென்னை-ஐதராபாத் பேருந்தில் செல்ல நேர்ந்தால் USL BUS தான் என் முதல் சாய்ஸ். இவ்வளவு சின்ன சின்ன விஷயங்களால் செய்து கூட பயணிகளை திருப்திபடுத்தி ஆதரவை பெற முடியும் என்பதை கண்கூடாக கண்டேன்.

அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.

டிஸ்கி: இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால், இந்த கட்டுரை எழுத அந்த பேருந்தின் Website ஐ தேடும்போது அது Delete செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராவல்ஸ் தற்போதும் கண்டிப்பாய் இயங்கி கொண்டுதான் இருக்கும் என நம்புகிறேன். இந்த டிராவல்ஸின் தற்போதைய நிலையைபற்றி யாருக்காவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.

அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....

Thursday, September 23, 2010

ஐதராபாத் to சென்னை...

ஏற்கனவே விஜயவாடா டூ வைசாக் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். ஆந்திராவில் செய்த சில மறக்கமுடியாத பயணங்களின் தொடர்ச்சியில், இப்போழுது அடுத்த பயணம் போகலாமா.....

இந்த முறை ஹைதராபாத் டூ சென்னை பயணம்.

2009, சில பல நிதி நெருக்கடியாலும், குழந்தைக்கு 6 மாதமே ஆனதாலும் நான் ஐதராபாத்திலும், என் மனைவி சென்னையிலும் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. குழந்தையை பார்த்துக் கொள்ள என் மாமியார், என் மனைவியுடன் சென்னையில் இருந்தார்

அந்த ஞாயிற்றுகிழமை விநாயக சதுர்த்தி, வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னை போக சென்னை எக்ஸ்பிரஸிலும் ஞாயிறு மாலை ஐதராபாத் திரும்ப சார்மினார் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. வெள்ளிக்கிழமை காலை வரை நல்லாதான் போச்சு, வழக்கம் போல டிரஸ் எல்லாம் pack பண்ணிட்டு ஆபிஸ் வந்தாச்சு.


ஆபிஸ் வந்தா வில்லன் உட்கார்ந்து இருக்கார். என் சேல்ஸ் மேனஜர் ரூபத்துல. பெங்களூர்ல இருந்து இதுக்குனே வந்து இருக்கார் போல, “அருண், நாளைக்கு Factory Engineer இங்க வரார் நாம 3 பேரும் கஸ்டமரை பார்க்க போறோம். பிளான் பண்ணிக்க!”. (ஆப்பு) என்னத்த பிளான் பண்ண, போட்ட பிளானைத்தான் கான்சல் செய்யனும் என முடிவு செய்து என் பிளானை டேமேஜ்   செய்த டேமெஜருக்கு ஓகே சொன்னேன். (வேற வழி)

எனக்கு என் வேலை மேல எப்பவுமே அப்படி ஒரு நம்பிக்கை, இப்படி ஏதாவது எப்பவும் சொதப்பும்னு தெரியும், அதனால எப்பவுமே டிக்கெட்டை வெயிட்டிங் லிஸ்ட் 12 லிருந்து 15 க்குள்ள தான் புக் பண்ணுவேன். அப்பதான், கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும். (அட, என்ன ஒரு சிந்தனை) இதுலாம் ரயில்வே டிக்கெட் புக்கிங் சீக்ரெட், நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.

டிரெயின் 5 மணிக்கு, 2 மணிக்கு சார்ட் Prepare பண்ணிடுவாங்க. அப்புறம் கேன்சல் பண்ண முடியாது. இப்போ (காலை 9 மணி) கான்செல் பண்ணா வெயிட்டிங் லிஸ்ட் சார்ஜ் போக 50 ரூபாய்க்குள்ள தான் பிடிச்சிட்டு மிச்சம் ரிட்டர்ன் வந்துடும். சேல்ஸ் மேனேஜர் பிளானை மாத்துற மாதிரி தெரியல, சரின்னு அன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் செய்தாச்சு.

ஆனா, ரிட்டன் டிக்கெட் கேன்சல் செய்யல. பண்டிகைக்கு எப்படியாவது போகனும்னு ஒரு பக்கம் ஆசை, ஒருநாளுக்காக போகனுமானு ஒரு குழப்பம்.

போகனும்னு ஆசைபட காரணம்,

  1. என் குழந்தை பிறந்து அதுதான் அவளுக்கு முதல் பண்டிகை. அதை மிஸ் பண்ண விரும்பல.
  2. அந்த ரிட்டர்ன் டிக்கெட் அதிசயமா RAC ல புக் பண்ணேன். கன்பார்ம் ஆகிடுச்சு கேன்சல் பண்ணா Penalty அதிகம்
  3. தீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு!
  4. முதல் கடவுள் விநாயகர் மேல ஒரு தனி பிரியம். அதை பற்றி ஒரு தனி பதிவே போட்டு இருக்கறேன்.
இந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

Monday, September 20, 2010

விசித்திர மரணங்கள்....

Friday, September 17, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள்
எப்பவும் சினிமா பத்தி எழுதுற சிரிப்பு போலீஸ் ரமெஷின் பிளாக்கையும், எல்லாத்தையும் மாத்தி யோசிச்சி மாட்டிக்கிற நம்ம வஸந்தின் பிளாக்கையும் தீவிரமா Follow பண்ணதுல ரெண்டு பேரும் ரெகுலரா போடுற பதிவை மிக்ஸ் பண்ணி போடலாம்னு யோசனை வந்தது. இதோ பதிவு, இல்லை. கேள்விகள்.

யாருக்காவது என்னை கும்மனும்னு தோணுச்சினா, அவங்க, மேலே சொன்ன இரண்டு பேரையும் தாறாளமா போய் கும்மலாம். என் இந்த விபரீத பதிவுக்கு அவர்களே காரணம். சரி விஷயத்துக்கு வருவோம். கீழே உள்ள படங்களை வைத்து தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்கவும். சரியாக சொன்னால் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கைப்புள்ள மூலம் அனுப்பி வைக்கப்படும். 

உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

1.


2.

3.

  4.


5.


6.

7.


8.

9.

10.விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

Tuesday, September 14, 2010

ஒரிஜினல் “பல்பு”

முன்பே ஒரு பதிவில் என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா செய்த குறும்புகளை பற்றி சொல்லி இருந்தேன். அடுத்த குறும்பு இதோ!

அவளுடைய பிறந்தநாளுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்து இருந்தேன். அதை வைத்து நன்றாக விளையாடுவாள். அதில் ஏறி அமர்வது, தள்ளி கொண்டு சென்று சுவற்றில் இடிப்பது, அதன் பெட்டியில் விளையாட்டு பொருட்களை போட்டு மூடுவது, அதை கவிழ்த்து போட்டு உருட்டுவது, இப்படி பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள்.


ஒரு நாள் மாலை, வழக்கம் போல சைக்கிள் வைத்து விளையாடி கொண்டு இருந்தாள். நான் அப்பொழுது தான் கவனித்தேன் சைக்கிளில் உள்ள ஒரு இண்டிகேட்டர் லைட் காணாமல் போயிருந்ததை. என் மனைவியிடன்,  “சைக்கிள் வாங்கி வந்து 10 நாள் கூட ஆகலை, அதுக்குள்ள லைட்டை உடைச்சாச்சா?” என கேட்க, அதற்கு அவங்க “என்னை ஏன் கேக்கறீங்க உங்க பொண்னை கேளுங்க”. (எப்ப நாம கேக்குறதுக்கு பதில் சொல்லி இருக்காங்க!)

இவங்க மேல் இருந்த கோபத்துடன் என் மகளிடம், “ ஷமி,  எங்க லைட்டு” என்றதுதான் தாமதம். விளையாடி கொண்டு இருந்தவள் பொம்மையை தூக்கி போட்டு விட்டு கையை தூக்கி “அதோ” இ இ இ இ என சிரித்து கொண்டே சுவற்றில் இருந்த டியூப் லைட்டை காட்டினாள்.

ஒரு நிமிடம் நான் திணற, என் மனைவி விழுந்து விழுந்து சிரிக்க, என் மகள் ஏன் அப்பா முழிக்கிறாரு? ஏன் அம்மா சிரிக்கிறாங்க??  நான் என்ன சொன்னேன்??? என்பது போல ஒரு லுக்கு விட்டாள்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், என் மகள் கையால பல்பு.

சரி விடுடா அருண், உன் வாரிசுனு நிருபிச்சுட்டா.


Friday, September 10, 2010

தடம் மாறும் பண்டிகைகள்...

விநாயக சதுர்த்தி - எனக்கு பிடித்த பண்டிகைகளில் முதலாவது இடத்தை பிடிக்கும் பண்டிகை. சிறு வயது முதலே முழுமுதற்கடவுள் விநாயகன் மீது ஒரு வித தனி ஈடுபாடு. அது அவருடைய தொப்பையா, பெரிய காதுகளா, யானை முகமா, அவரை பற்றிய கதைகளா என இன்று வரை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை.

எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் விநாயகனை நினைத்து ஆரம்பித்தால் ஒரு வித கூடுதல் பலம் வந்தது போல உணர்வு. என் 3 வயதில் ஒரு பிள்ளையார் பொம்மையை தலையில் வைத்து கொண்டு வீடு முழுவதும் சாமி வருது சாமி வருது என்று சுற்று வேணாம், என் அம்மா சொல்வார்கள் (அதை போட்டு உடைத்ததும் நான்தான் என்றும் சொன்னார்கள்). 


பள்ளி பருவத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று தெருவில் விநாயகர் செய்யும் இடத்தில் அமர்ந்து அவர்கள் செய்வதை வெகு நேரம் வேடிக்கை பார்த்து, பின் அவர்களிடம் சிறிது களிமண் வாங்கி வந்து நானும் பிள்ளையார் செய்கிறேன் என்று ஒரு வித உருவத்தை செய்து (பிள்ளையார் பிடிக்க குரங்கு) அதையும் அடம் பிடித்து வீட்டு பிள்ளையாருடன் வைப்பதும், அந்த பிள்ளையார் கண்களை சேகரித்து வைப்பதும் இன்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.

வாலிபத்தில் விநாயகசதுர்த்திக்காக இளைஞர் நற்பணி மன்றத்தை கூட்டி நன்கொடை வசூலித்து பெரிய விநாயகர் சிலை வைப்பதும், அதற்கு இரண்டு பேர் DUTY போட்டு இரவில் காவல் இருப்பதும், ஐந்தாம் நாள் ஆட்டம் பாட்டத்துடன் அதை குளத்தில் கரைப்பதும் - அனுபவித்தால் தான் தெரியும் அந்த குதூகலம்.


ஆனால் இன்று யோசிக்கும் போது, நம் குழந்தைகள் இதை எல்லாம் அனுபவிக்கிறார்களா? பணத்திற்காக நாடு தாண்டியும், நகரத்திற்கு இடம் மாறியும் இருக்கும் நாம் இதை ஒரு கதையாக சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டோம். நம் குழந்தைகள்,  இந்த பண்டிகைகளை பற்றி அவர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு விவரிப்பார்கள்?

இன்றைய பண்டிகைகள் பெரும்பாலும் தனியார் தொலைகாட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலேயே சென்று விடுகிறது. ஊர் கூடி தேர் இழுப்பதும் இல்லை, சொந்தங்கள் கூடி பண்டிகை செய்வதும் இல்லை.

களிமண்ணில் செய்யும் பிள்ளையார்களி நலினம், இப்போழுது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை ரசாயண பூச்சுக்கள் கொண்டு அச்சில் உருவாகும் பிள்ளையார்களின் அழகுக்கு பல மடங்கு வேறுபாட்டு இருந்தாலும் முன்பு பெற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் இப்பொழுது இல்லை.

சுற்று சூழலை கெடுத்து மகிழ்ச்சி வாங்க முயன்று கொண்டு இருக்கிறோம். இது எவ்வளவு நாள் நிலைக்கும்?


இனியாவது, சுற்று சூழல் கெடாமல் களிமண் மற்றும் இயற்கை சாயங்களால் ஆன விநாயகர் சிலைகளை உபயோகிப்போம். முடிந்தால் நீங்களே விநாயகர் சிலைகளை செய்து பாருங்கள் அதை உங்கள் குழந்தைகளை பார்க்கசொல்லுங்கள். அதில் கிடைக்கும் திருப்தியே வேறு.

அடுத்து, மனிதர்களை காக்க கடவுள்கள் இருக்கிறார்கள் என்ற காலம் போய் இப்பொழுது கடவுள் சிலைகளை காக்க போலிஸ் காவல் வைக்கும் நிலைமை உருவாகி இருக்கிறது.


அனைத்து மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான், வன்முறையை அல்ல. கடவுள் மற்றும் மதங்களின் பெயரால் உருவாக்கப்படும் வன்முறைகள் சமுதாயத்தின் கொடிய தொற்று நோயை போன்றது. தனிமனிதனை மட்டும் இன்றி ஒரு சமுதாயத்தையே அழிக்கும் வலிமையுடையது. இது தவிர்க்கபட வேண்டும். பண்டிகைகள் மகிழ்ச்சிக்குதானே தவிர மத வலிமையை காட்ட உருவானது அல்ல என்பதை உணர்ந்து சாதி மத பேதம் இன்றி ஒன்றாக கொண்டாட முயற்சிப்போம். நம் சந்ததியினர்க்கு சில பண்டிகைகளை அதன் தன்மை மாறாமல் விட்டு செல்வோம்.


அனைவருக்கும் விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்.

டிஸ்கி: இது என் 50வது பதிவு

Wednesday, September 8, 2010

என்னது இவர் யாரா?

வருடம் 1980,
செப்டம்பர் 8....


நல்ல இடியுடன் கூடிய மழை,
திடீரென வெட்டிச்சென்றது ஒரு வெளிச்சம்,
இதை அனைத்தையும் தாண்டி ஒரு குழந்தையும் அழுகுரல்.

 “ஆண்பிள்ளை பிறந்து இருக்குங்க” என செவிலியர் சொல்ல, குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சினை தெரியாமல்.

பள்ளி செல்லும் காலம் வந்தது. பள்ளியில் இவருடைய குறும்புதனம் ஆரம்பமானது.யாராவது அடித்தால் பூத்தொட்டி கொண்டு அடிப்பது, ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு பழைய சினிமா பற்றி கேள்வி கேட்பது, ஓவராக மொக்கை போடுவது என இவருடன் அவையும் வளர ஆரம்பித்தது

சரி, காலேஜ் சென்றால் சரியா போகும் என்று பார்த்தனர். ஆனால் அங்கே சென்று, ஸ்ட்ரைக் செய்கிறேன் பேர் விழி என்று போலிஸ் வந்தவுடன் இடத்தை விட்டு ஓடுவது, பஸ் கண்ணாடியை உடைத்து நம்பி உடன் வந்த நண்பனை தர்மஅடிவாங்க வைப்பது என ஓவர் அலும்பு பண்ண ஆரம்பித்தார். ஒரு சினிமா விடாமல் பார்த்து டயலாக்கா விட ஆரம்பித்தார். குறிப்பாக சரத்குமார் படம்னா ரத்தம் சிந்தியாவது பார்த்துட்டு வருவார்.

இவர் தொல்லை தாங்காமல் நாட்டைவிட்டே துரத்தி சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பினார்கள் அங்கேயும் ஆபிஸில் Farmville விளையாடியும், பிளாக் ஆரம்பிச்சும் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கொடுமைப்படுத்தினார்.

சார், பெல்ட் கட்டாம வந்துட்டாரு அதான் இடுப்புல கை

இது ஒத்துவராது என்று சொல்லி ஒரு போலிஸ் வேலை கொடுத்தால் அதையும் காமெடியாக மாற்றி அங்க அங்க போய் அடிவாங்குகிறார். ஏன் தனக்கு கிடைத்த அவார்டை கூட பத்திரமா வைத்துக்கொள்ள தெரியாமல் ஒரு களவாணியிடம் குடுத்துவிட்டு முழித்தவர் இவர்.

அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருஷம் இவருக்கு திருமணம் ஆகி நாங்கள் பெறும் (?!?!) இன்பம் அனைத்தையும் பெற இறைவனை வேண்டுவோம்.

டிஸ்கி: என்னது இவர் யாரா? சத்தியமா, இது யாரை பற்றிய பதிவும் இல்லை, அதே போல இங்க கொடுத்து இருக்குற லிங்க் வேற ஒருவர் பிளாக்குக்கு டைவர்ட் ஆச்சுனாலும் அவருக்கும் இந்த பதிவுல சொல்லபட்டவருக்கும்  அந்த படத்தில் இருப்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!.


பதிவுலக வரலாற்றில் முதன் முதலாக ஒருவருக்கு என் பதிவையும் சேர்த்து 4 வாழ்த்து(?!?!) பதிவுகள்.  மற்ற 3க்கும் இங்க போய் பாருங்க

ஒன்று
இரண்டு
மூன்று

அங்க போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க.


Sunday, September 5, 2010

TERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பதிவுலகின் பிரபல தாதா,
அவார்டு கொடுப்பதை தடுக்க சாரி திருடவந்த அன்னியன்,
கமெண்டு போடுபவர்களை கண்டிக்க வந்த சாத்தான்,

சிரிப்பு போலீசை தூக்கி போட வந்த சிங்கம்,
MLM Businessஐ தாக்கிய தங்கம்,
தானே மத்த பிளாக் போய் அடிவாங்கும் தானை தலைவன்,
தானும் பதிவுலகில் இருக்கிறேன் என்று காட்டி கொ(ல்)ள்ளும் வீரன்,
பிரபல பதிவர்களை ஓட்டும் டுபாகூர் பதிவர்

அஞ்சா நெஞ்சன் “TERROR- PANDIAN"

நம் உயிரை வாங்க மண்ணில் அவதரித்த இந்த மகத்தான நாளில் அவர் மேலும் மேலும் வளர்ந்து, அனைத்து பிளாக்கிலும் சென்று அடிவாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். ( @ அனானி, யோவ்... இது கடவுள் பற்றின பதிவு இல்லை, களவானி பற்றியது. வந்துடாத)


அவரை பற்றிய சின்ன ப(ய)யோடேட்டா.... (@ கே.ஆர்.பி அண்ணா, இதை நீங்க படிச்சி நொந்து போறதைவிட படிக்காம நேரா ஓட்டு பொட்டிக்கு போய்டுங்க)

பெயர் :                               டெரர் பாண்டியன்

இயற்பெயர்:                    அடிமை பாண்டியன்

தலைவர்:                          அடிவாங்கிற சங்கத்துக்கு இவரே தலைவர், தொண்டன், 
                                               எல்லாம்...

துணை 
                                               வெங்கட், பனங்காட்டு நரி - இவங்கள்லாம் டெரரை 
                                               கரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப் 
                                               ஆகுறவுங்க (நான் இந்த Gang இல்லைப்பா)

மேலும் துணை 
தலைவர்கள்:                   மங்குனி, பட்டாபட்டி, இலுமி, ரெட்டைவால்ஸ்

வயது:                                 வருஷத்தை நான் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு க்ளூ 
                                               1977 கும் 1979 கும் நடுவுல வர்ற ஏதோ ஒரு வருஷம். 
                                               முடிஞ்சா கண்டு பிடிச்சுகோங்க (@ டெரர், உம்ம மேல
                                                சத்தியம் பண்ணபடி நான் வருஷத்தை சொல்லய்யா...)

தொழில்:                             சொந்த பிளாக் இருந்தும், மத்தவங்க பிளாக்ல தான் 
                                                எழுதுறது (கமெண்ட் தாங்க, சரக்கு இருந்தா தன் 
                                                பிளாக்லயே எழுதி இருப்பாரே)

பலம் :                                   பாராபட்சம் இல்லாமல் எல்லோரையும் ஓட்டுவது

பலவீனம்:                          ஓட்டி ஏடாகூடமா மாட்டிகிட்டு அடிவாங்கி வருவது
 
நீண்டகால சாதனை:    வெளியூர்காரன் பிளாக்ல அடிவாங்கியது

சமீபத்திய சாதனை:      வெளியூரையும் ரெட்டையையும் தன் பிளாக்குக்கே 
                                               வரவழைக்க எதிர்பதிவு போட்டு இருப்பது

நீண்டகால எரிச்சல்:     கடவுள், கம்யூனிசம் பற்றி பேசும் அனானிகள்

சமீபத்திய எரிச்சல்:       அவார்டு கொடுப்பவர்கள், காதல் கடிதம் + கவிதை 
                                               எழுதுபவர்கள் மீது

மக்கள்:                                யாரும் இல்லை, எல்லோரும் ஆடுகள் தான்

சொத்து மதிப்பு:               1 பிளாக், 7 பதிவு தான் ஆனால் 33 Followers, 500+ Comments  
                                               பெற்றது (போட்ட comments 1000துக்கு மேல)

நண்பர்கள்:                        கூட நிறைய பேர் இருந்தாலும், எல்லோரும் இவரை 
                                               வெட்ட சமயம் பார்த்து இருப்பவர்கள்

எதிரிகள்:                            அனைத்து பதிவர்கள் 

ஆசை:                                 பாராட்டி கமெண்ட் போட நினைப்பது

நிராசை:                             பாராட்டி கமெண்ட் போட்டலும் அது கலாய்ப்பது போல  
                                             முடிவது

பாராட்டுகுரியது:          எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பது

பயம்:                                  பயமா எனக்கா உனக்கா என கேட்டு நடிப்பது

கோபம்:                            சீரியஸ் பதிவு போடுபவர்கள் மீது

காணாமல் 
போனவை:                     அடிவாங்கிய தழும்புகள்

புதியவை:                       சமீபத்தில் அடிவாங்கி வந்த தழும்புகள்

கருத்து :                           இது உருப்படாது.....

டிஸ்கி: மொத்தத்துல நம்ம TERROR PANDIAN சத்தியமா ரொம்ப நல்லவன்யா... நம்புங்க...


Thursday, September 2, 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில்....Widgets

ஒரு மவுஸ் கிளிக்கின் மூலம் பசித்தவர்களுக்கு உணவளிக்கும் வழியை சென்ற பதிவில் கூறியதும், அதை ஏற்று நீங்கள் தந்த ஆதரவு மலைக்க வைக்கிறது. 

அதற்கு அனைவருக்கும் என் முதல் நன்றிகள்....

அதை ஒவ்வொரு நாளும் மறவாமல் நாம் செய்யவும், அடுத்த வரை செய்ய ஊக்கப்படுத்தவும் நம்மால் முயன்ற சிறு முயற்சியை செய்யலாம். 

எப்படி?

அடுத்தவர் கொடுக்கும் அவார்டுகளையும், நம்மை பற்றிய பெருமைகளையும், எத்தனை பேர், எந்த எந்த நாட்டில் இருந்து வருகிறார்கள் என பல விட்ஜட்களையும் நம் தளத்தில் வைக்கும் நாம், ஏன் இலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட் லிங்குகளை வைக்க கூடாது.

இதோ, அவற்றின் விட்ஜட்டுகள். உங்களுக்கு விருப்பமானதை உங்கள் தளத்தில் இணைத்து மேலும் பலர் பார்க்க செய்யுங்கள்.

இந்தியதளமான Bhookh.com Widget:
(இதை நான் உருவாக்கினேன், அவர்களுடைய Official Widget கிடையாது)


<a href="http://www.bhookh.com/index.php" title="Donate Food"><img src="http://1.bp.blogspot.com/_TrMEAFlbAbA/TH42KZbTE9I/AAAAAAAAAg8/7jyAJAouTPw/S240/giving-hands.jpg"  alt="Donate Food" /></a> ஐ நா வின் Freerice.com Widgets:

125 X 125 Pixels:

<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice125x125&utm_name=bannersfreerice125x125&utm_medium=bannersfreerice125x125" title="Fight World Hunger"><img src="http://www.freerice.com/banners/125_125_banner_a.jpg"  alt="Fight World Hunger" /></a>125 X 125 Pixel:
<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice125x125&utm_name=bannersfreerice125x125&utm_medium=bannersfreerice125x125" title="Fight World Hunger"><img src="http://www.freerice.com/banners/125_125_banner_a.jpg"  alt="Fight World Hunger" /></a>


 120 X 600 Pixels:

<a href="http://www.freerice.com?utm_source=bannersfreerice120X600&utm_name=bannersfreerice120X600&utm_medium=bannersfreerice120X600"><img width="120" height="600" src="http://www.freerice.com/banners/120x600.jpg" alt="Fight World Hunger" /></a>
நான் என் தளத்தில் இணைத்துவிட்டேன், நீங்க?