Cricket Countdown....

Monday, August 2, 2010

இதனால அறிவிப்பது என்னனா...


டிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.பதிவுலக அன்பர்களே! நண்பர்களே!! இதுனால சகலமானவர் அறிவிக்கறது என்னனா, நம்ம 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களை நான் ஏற்கனவே ஒரு பதிவில் மாட்டிவிட்டதால், பதிலுக்கு ஒரு தொடர்பதிவில் என்னை மாட்டிவிட்டுருக்கிறார், அதற்கு அவருக்கு முதலில் நன்றி. அடுத்து, நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள். சே... என்ன பேட்டின்னு சொன்னவுடனே அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம். அதாங்க பேட்டிக்கு,

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அருண்பிரசாத்

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் அருண் பிரசாத். என்ன? மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா? வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண? நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா?????) உங்களை ஏற்கனவே A for அவஸ்தைனு மொக்கை போட்டமாதிரி போட விரும்பலை. ( ஒரு வழியா எல்லாரையும் இங்கயே மொக்கை போட்டாச்சு, இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம்)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

கண்டிப்பாக அது ஒரு வெளிநாட்டு சதிதான். ஆமாங்க, இங்க மொரிசியஸ் வந்து கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டு பத்தி எந்த நியூஸிம் தெரியல. இங்க தமிழ் சேனலோ, படமோ எதுவும் வராது. அதனால் ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு ஒரு சைட் வந்தது, அதுல நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு அப்படியே பிக்கப் பண்ணிட்டேன். அதனால, இதுக்கெல்லாம் காரணம் மொரீசியஸ் அரசாங்கம்தான்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

(என்னாது என் வலைபதிவு பிரபலம் ஆகிடுச்சா!) இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும். சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க. ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு. (நல்லவேளை பிரபலம், இதுவரை Problem ஆகலை). யூத்புல் விகடன் பரிந்துரைத்த 'பிளாக்குக்கு சூனியம்' பலரை அழைத்து வந்தது

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மொத்த பதிவு 31 ல் 14 பதிவுகள் சொந்த (சில நொந்த) அனுபவம் தான். ஆனால் மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. நீங்க வேற, திருவிளையாடல் படத்தில் வரும் முருகன் சொல்லும் டயலாக் போல, என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இருக்குற ஒன்னை பாத்துக்கவே நேரம் இல்லை, இதுல இன்னும் 2, 3 வெச்சிக்கிட்டா அப்புறம் யார் உதை  வாங்குறது. (சத்தியமா நான் பிலாக்கைதான் சொன்னேன்) 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல், நாமக்குதான் எந்த ஸ்டைல்  ஒத்துவருதுனு  இன்னும் கண்டுபிடிக்க முடியல

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம்  இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம். தொடர்ந்து வந்து படிச்சு தெரிஞ்சுக்குங்க.

சரி, கடைசியா யாருக்கு மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போட்டு வெட்ட கூப்பிடலாம், Sorry, தொடர்பதிவு எழுத கூப்பிடுலாம்னா,First, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு

அடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்

அப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.

கண்ணுகளா மேடைக்கு வாங்க.....

டிஸ்கி 2: எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!

75 comments:

சௌந்தர் said...

அந்த ஆடு நான் தான்.....அவ்......

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை நண்பரே..

ஒவ்வொரு பதிலும் கலக்கலாக உள்ளது..

சௌந்தர் said...

நேற்று நம்ம அருண் மாலையுடன் வந்து நாளை நம்ம ப்ளாக் பக்கம் வாங்க சொல்லி ஓரு மாலை போட்டார் எதுக்கு என்று புரியவில்லை இப்போ புரியுது...

அருண் பிரசாத் said...

@ வெறும்பய

நன்றி

@ செளந்தர்

எங்கப்பா மத்த 2 ஆடுகளை கானோம்

ஜில்தண்ணி said...

செம செம கலக்கல் பதில்கள்

//உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான் //

அப்ப உங்களுக்கு வயசாயிடிச்சா ஐயய்யோ,ஹா ஹா

கலக்குங்க :)

Karthick Chidambaram said...

அருண் பிரசாத் - ஆகா உங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கா ?
என் பெயரிலும் கொஞ்சம் இப்படி இருக்கு.

உங்க ஸ்டைல் இதுதான். உங்க மனைவிக்கு நன்றி சொல்லுங்க. அவுங்களோட பினாமிதானே நீங்க :)))

வெளிநாட்டு சதிதான் இந்த பதிவுகளே.
நானும் வெளிநாடு வந்துதான் எழுத aarambiththen.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை தொடர்பதிவு எழுத கூப்பிட்டதுக்கு ஏதாச்சும் வெளிநாட்டு சதி உண்டா?

சௌந்தர் said...

நான் மறுபடி இவரையே தொடர் பதிவுக்கு கூப்பிடுவேன்....ஹா ஹா ஹா ஹா

கருடன் said...

@அருண்
//எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!//

ஹ ஹ ஹ ஐ லவ் யு ஜெய் தல....

(அருண் உங்கள போய்ட்டு வந்து வெட்டறேன். ஓட்டு போட்டாச்சி... )

Jey said...

///எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!///

டப்பாவி, இடுக்குதான், மாலைபோட்டமாதி ஆடுபடம் ஏதாவது இருக்கானு கேட்டியா?..., நான் வேற மஞ்சத்தண்ணி ஊத்தினா மாதிரி ஊள்ள படடத்தை அனுப்பி வச்சேன் , கடைசில,ந்னக்கு நானே சூனியம் வச்சுகிட்டேனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

( ஆனி அதிகம், அப்புரமா வர்றேன்..)

Gayathri said...

என்ன ஒரு தன்னடக்கம் பாஸ்..இப்படியா அதுக்குன்னு அடக்கி வசிகர்த்து...உங்க பேட்டி நல்லாருக்கு...கேள்வி கேட்பவர் என்ன ஆனார்??

Anonymous said...

அருண் எல்லா பதில்களும் சூப்பர் ..தொடருக்கு அழைப்பு கிடைச்ச எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..

வெங்கட் said...

@ அருண்..,

// ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி
கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு
ஒரு சைட் வந்தது, அதுல
நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு //

ஆஹா..,
" தமிழ்ன்னு " டைப் பண்ணினாலே
கூகுள் நம்ம Blog-ஐ தான் காட்டுதாம்லே..

நம்ம டெரர் சொன்ன மாதிரி
திருக்குறளுக்கு அடுத்தபடியா
உலக மொழிகள் அனைத்திலும்
Translate பண்ண வேண்டியது
நம்ம Blog தான் போல..

அருண் பிரசாத் said...

@ ஜில்தண்ணி

யோவ் நாங்க பால்ய விவாகம் செஞ்சுக்கிட்டோம். எனக்கு 20 அவங்களுக்கு 18 வயசு

@ Karthick

அப்ப வெளிநாட்டுக்கு வேலைக்கு போன பதிவர் ஆகுறது நிச்சயமா

@ ரமெஷ்

வெளிநாட்டு சதி இல்லை. எல்லாம் உள்குத்து வேலைதான்

@ Terror & ஜெய்

என்னாங்கயா, ரெண்டு பேரும் ஆணி புடுங்க போய்ட்டீங்க. சரி வாங்குற சம்பளத்துக்கு ஒரு நாளாவது வேலை பாருங்க

அருண் பிரசாத் said...

@ Gayathri & Sandhya

இந்த ரெண்டு ஆடுகளும் தப்பிச்சிடுச்சு, அடுத்த தொடர்பதிவுல போட்டுடவேண்டியதுதான்

@ வெங்கட்

//ஆஹா..,
" தமிழ்ன்னு " டைப் பண்ணினாலே
கூகுள் நம்ம Blog-ஐ தான் காட்டுதாம்லே..//

ஹலோ, நல்லா படிச்சுப்பாருங்க. கூகுள் தமிழ்10 சைட்டை காட்டுச்சு, அன்னைக்கு ஏதோ உங்க நல்ல நேரம் உங்க பிலாக் frontpage ல publish ஆகவே என் கண்ணுல பட்டுச்சு. அதனால எழுத ஆரம்பிச்சேன்

(“வெங்கட் மாதிரி ஆளுங்க பதிவு எழுதும் போது உங்க பதிவு எவ்வளவோ மேல் ” - அப்படினு யாருப்பா அது சவுண்ட் விடுறது)

சுசி said...

:)))

கருடன் said...

@அருண்
//என்னாங்கயா, ரெண்டு பேரும் ஆணி புடுங்க போய்ட்டீங்க. சரி வாங்குற சம்பளத்துக்கு ஒரு நாளாவது வேலை பாருங்க //

எலேய் எந்த பாவிபய கண்ணு பட்டுதோ... நிறய ஆணி. ஆனா நான் கண்டிப்பா வந்து வெட்டுவேன்... ராத்திரி 12 மணி ஆனாலும் இன்னைக்கு உனக்கு மஞ்சத்தண்ணி ஊத்தறேன்யா.... ஜெய் தல நைட் இங்க ஆடு வெட்டறோம்...

(அருண் டைம் கிடச்ச ஜெய் ப்ளாக் போய் கமெண்ட்ஸ் பாருங்க...)

செல்வா said...

///நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள்////

எனக்கு வலிக்காது ...!!!

செல்வா said...

///உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான்.////
அட பாவமே ... அவங்க என்ன பாவம் செய்தாங்க ..???

எல் கே said...

foto arumai....

Jey said...

///
டிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.///
ஒம்பேச்சக் கேட்டு திரும்பி வந்து ஓட்டு போட்டா, ஏற்கனவே போட்டாச்சுனு சொல்றாங்கய்யா...

Jey said...

//சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம்//

அதானே, நமக்கு என்ன தெரியுமோ அதுக்கு நேரா போயிரனும்...

Jey said...

அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?////

தெளிவாச்சொல்லு ஒய்.. அப்ப ’சூரியனின் வலை வாசல்’னு ஏதோ ஒரு பேரு இருகே அதுக்கு விளக்கம் கொடுக்கவே இல்லை....

Jey said...

///மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன்///

பூரிக்கட்டைல அடிவாங்குனத சொல்லவே இல்லையே....

Cable சங்கர் said...

இண்ட்ரஸ்டிங்..sa

Riyas said...

கலக்கல பதில்கள் நணபரே

ப்ரியமுடன் வசந்த் said...

// என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா//

ஹெஹெஹே செம்ம பதில் பாஸ்..!

பங்காளி ஜெய் ஏன்யா நீயா தலைய குடுத்துகிடுற?

அருண் பிரசாத் said...

@ சுசி

வாங்க சுசி

@ செல்வா

நீ ரொம்ப நல்லவன்யா

@ LK

photo பத்தி பதிவிலேயே சொல்லிருக்கேன்

அருண் பிரசாத் said...

@ ஜெய்

//தெளிவாச்சொல்லு ஒய்.. அப்ப ’சூரியனின் வலை வாசல்’னு ஏதோ ஒரு பேரு இருகே அதுக்கு விளக்கம் கொடுக்கவே இல்லை....//

கேள்வி தெளியா இல்ல வோய்

//பூரிக்கட்டைல அடிவாங்குனத சொல்லவே இல்லையே..//

சரி சரி நமக்குள்ளயே இருக்கட்டும்

அருண் பிரசாத் said...

@ cable sankar

வாங்க சார், முதல் வருகைக்கு நன்றி

@ Riyas

நன்றி பாஸ்

@ ப்ரியமுடன் வசந்த்

ஹி ஹி ஹி ஜெய் ஆடுக்கு தெரியாது அதைதான் வெட்ட போறேன்னு, தானா வந்த தானை தலைவன் அவர்

Jey said...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
// என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா//

ஹெஹெஹே செம்ம பதில் பாஸ்..!

பங்காளி ஜெய் ஏன்யா நீயா தலைய குடுத்துகிடுற?///

வெல்லந்திய ஏமாத்திட்டாய்ங்க பங்காளி..., அந்த கிடா, என் பையனுக்கு முதல் மொட்டை எடுக்க, குலதெய்வம் கோயில்ல பலிகொடுத்த ஆடு..., ஆவியா வந்து இப்ப என்னை பலி வாங்கிருச்சி...

ப்ரியமுடன் வசந்த் said...

//வெல்லந்திய ஏமாத்திட்டாய்ங்க பங்காளி..., அந்த கிடா, என் பையனுக்கு முதல் மொட்டை எடுக்க, குலதெய்வம் கோயில்ல பலிகொடுத்த ஆடு..., ஆவியா வந்து இப்ப என்னை பலி வாங்கிருச்சி...//

பின்னா ஆட்டை வலிக்காம வெட்டி பலிகொடுத்திருக்கணும்டி நீ வலிக்க வலிக்க வெட்டியிருப்ப அதான் போல...!

கருடன் said...

@அருண்
//சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க.//

இதுவரை சொன்னத நம்பலையா அது மாதிரி இதையும் நம்பறோம்.. சும்மா சொல்லுங்க...

Jey said...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…
//வெல்லந்திய ஏமாத்திட்டாய்ங்க பங்காளி..., அந்த கிடா, என் பையனுக்கு முதல் மொட்டை எடுக்க, குலதெய்வம் கோயில்ல பலிகொடுத்த ஆடு..., ஆவியா வந்து இப்ப என்னை பலி வாங்கிருச்சி...//

பின்னா ஆட்டை வலிக்காம வெட்டி பலிகொடுத்திருக்கணும்டி நீ வலிக்க வலிக்க வெட்டியிருப்ப அதான் போல...///

உங்க ஊர்க்கார பயபுள்ளதான் வந்து வெட்டினான், அந்த பயபுள்ளகிட்டதான் போய் கேக்கனும்....

கருடன் said...

@அருண்
//ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு//

இவங்கதான இவ்வளவுக்கும் காரணம்.... mind ல வச்சிக்கிறேன்...

கருடன் said...

@ஜெய்
//உங்க ஊர்க்கார பயபுள்ளதான் வந்து வெட்டினான், அந்த பயபுள்ளகிட்டதான் போய் கேக்கனும்....//

தல ஆட்ட நிக்க வச்சி வெட்டினிங்கள இல்ல உக்கார வச்சி வெட்டினிங்கள?

Jey said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

இதுவரை சொன்னத நம்பலையா அது மாதிரி இதையும் நம்பறோம்.. சும்மா சொல்லுங்க...///

பாண்டி வந்துட்டயா, வா வா, காலையிலிருப்து ஆனி பிடுஙி டயர்டாருக்கு, இங்க அருணை, வெட்டி வெட்டி விளையாடலாம்.

அருண் பிரசாத் said...

//பின்னா ஆட்டை வலிக்காம வெட்டி பலிகொடுத்திருக்கணும்டி நீ வலிக்க வலிக்க வெட்டியிருப்ப அதான் போல...!//

ஆமா வசந்த்,அது மட்டும் இல்ல எத்தனை பேரை கமெண்ட் என்ற பேர்ல கொடுமைபடுத்தி இருப்பாப்ல அதான் சேத்து வெச்சி சோலிய முடிச்சாச்சு

Jey said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

தல ஆட்ட நிக்க வச்சி வெட்டினிங்கள இல்ல உக்கார வச்சி வெட்டினிங்கள?///

ஆட்டை விடு, இப்ப அருண எப்படி பொங்க வைக்கிரதுன்னு ரொசனை பண்ணுய்யா...

அருண் பிரசாத் said...

வெட்டிட்டே இருங்க நான் சாப்புட்டு தெம்பா வரேன்

கருடன் said...

@ஜெய்
//பாண்டி வந்துட்டயா, வா வா, காலையிலிருப்து ஆனி பிடுஙி டயர்டாருக்கு, இங்க அருணை, வெட்டி வெட்டி விளையாடலாம்//

தல ஆட நல்ல ஓட விட்டு வேட்டனுமம்... அப்போ தன் கரி நல்ல வேகும் சொல்லி என்ன வெளியூர் ப்ளாக் ல வெட்டின அப்போ சொன்னங்க... அதனால அவசரபட்டு வெட்டிடதிங்க...

கருடன் said...

@அருண்
//வெட்டிட்டே இருங்க நான் சாப்புட்டு தெம்பா வரேன்//

தல தல ஆடு தப்பிக பாக்குது... மடக்கி பிடிங்க...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@அருண்
//வெட்டிட்டே இருங்க நான் சாப்புட்டு தெம்பா வரேன்//

தல தல ஆடு தப்பிக பாக்குது... மடக்கி பிடிங்க...///

பசியோட இருக்குற ஆட்டை வெட்டுரது பாவம்யா,அதனால, இங்கயே கட்டிவச்சி, நல்லா தீனி போட்டு அப்புரம் எநம்ம வேலைய ஆரம்பிக்கலாம்.

கருடன் said...

ஜெய் தல யாரவது chat ல இருந்த இங்க இழுங்க... வசந்த் போய்டர?? இல்ல இருக்கற??

கருடன் said...

@ஜெய்
//பசியோட இருக்குற ஆட்டை வெட்டுரது பாவம்யா,அதனால, இங்கயே கட்டிவச்சி, நல்லா தீனி போட்டு அப்புரம் எநம்ம வேலைய ஆரம்பிக்கலாம்.//

அப்போ சரி. பிரியாணி போடறம இல்ல வறுவலா.... அதுக்கு தகுந்த மசாலா ரெடி பண்ணனும் இல்ல...

Jey said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

அப்போ சரி. பிரியாணி போடறம இல்ல வறுவலா.... அதுக்கு தகுந்த மசாலா ரெடி பண்ணனும் இல்ல...//

வீட்லவேர அடிவாங்குற குடும்பஸ்தன்யா, பாவம் விட்ரலாம்.

கருடன் said...

@ஜெய்
//வீட்லவேர அடிவாங்குற குடும்பஸ்தன்யா, பாவம் விட்ரலாம்//

அப்படி சொல்றிங்கள? ஆமா ஆமா இரண்டு இடத்துல அடி வாங்கறது கஷ்டம்தான்... சரி நம்ப வேற கிரௌண்ட் போய் அங்க எதாவது ஆடு மேயுத பாக்கலாம்...

கருடன் said...

@அருண்
//உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான்//

உங்கள கட்டிகிட்டது இல்லாம இந்த கொடுமை வேறைய?? ஹ்ம்ம்... பாவம் சகோதரி நீங்க.

கருடன் said...

@அருண்
//ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும்//

என்னனு?? அருண் கண்டிப்பா இதை பப்ளிஷ் பண்ணனும? ஜெனங்க பாவம்.. இப்படியா சொல்லுவாங்க??

கருடன் said...

50..... சரி கடமை முடிஞ்சிது கிளம்புவோம்...

அருண் பிரசாத் said...

புயல் ஓய்ஞதா. அப்பாடி

Chitra said...

Super answers! good ones.

Unknown said...

கடைசில போட்டுருக்கிற ஆடு படம் பார்த்து சிரிப்பா சிரிச்சுகிட்டு இருக்கிறேன்..
ரொம்பதான் நக்கல் ....

அருண் பிரசாத் said...

@ Chitra

Thanks for your Support

@ கே ஆர் பி

ஹி ஹி ஹி நன்றிண்ணா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும்.///
அதுக்கு ஜெய் இருக்காறு ..,நீ எப்படி பிரபலம் அடைஞ்சே ...,புனைவு அது இதுன்னு எதாவது?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////ஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. ////
இங்கே அடிமாட்டு ,ஆக்டோபஸ் போன்ற உயிரினங்களை உங்கள் பதிவுகளோடு சம்பந்தபடுத்தி எழுதியதால் அது மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளபட்டிருக்கு என்று உலக உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பு மிகுந்த கவலை கொண்டுள்ளது ...,தயை கூர்ந்து அந்த பத்தியை நீக்கவும் :)))

அருண் பிரசாத் said...

@ பனங்காட்டு நரி

வாங்க நரி, இப்படி ஜெய் மாதிரி ஆளுகளை கலாய்ச்சி, மொக்கை போட்டும் பிரபலம் ஆகலாமுங்கோ!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////பொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல்,////
நுண் அரசியல் ?????:)))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/////உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)////

பொய் பொய் சக பதிவர்களே !!! :))

அருண் பிரசாத் said...

//இங்கே அடிமாட்டு ,ஆக்டோபஸ் போன்ற உயிரினங்களை உங்கள் பதிவுகளோடு சம்பந்தபடுத்தி எழுதியதால் அது மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளபட்டிருக்கு//

விடுங்க அதை பார்க்க தான் நரி வந்திருக்கே, அதை காட்டி அரசாங்கத்தை அடக்கிடலாம்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//////@ பனங்காட்டு நரி

வாங்க நரி, இப்படி ஜெய் மாதிரி ஆளுகளை கலாய்ச்சி, மொக்கை போட்டும் பிரபலம் ஆகலாமுங்கோ!////

அப்பா ஜெய் பிரபல பதிவரா ????????? அவ்வவ்வ்வ்வ்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////நாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம் இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம்/////

Ha Ha good one :)))))))))

அருண் பிரசாத் said...

//அப்பா ஜெய் பிரபல பதிவரா ????????? அவ்வவ்வ்வ்வ்//

அவர் பிரபலமோ இல்லையோ, நாங்க பிரபலம்னு சொல்லிக்க வேண்டிய்துதான்.

ஆட்டை கேட்டா வெட்டுறாங்க?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////First, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு
அடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்
அப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.
கண்ணுகளா மேடைக்கு வாங்க.....////

இதுக்கு உன்னக்கு ஆயிரம் நன்றிகள் தல ..,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///வெளியிட்டவர் அருண் பிரசாத் நேரம் 10:10 AM தேதி Aug 2, 2010///

அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space.
இங்கே பயன்படுத்திய பேர் தான் ஒரிஜினல் பேரா தல

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

செம கலாய் !!! அருண் பிரசாத் (அல்லது )அருண்பிரசாத்..,வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

@ பனங்காட்டு நரி

//செம கலாய் !!! அருண் பிரசாத் (அல்லது )அருண்பிரசாத்..,வாழ்த்துக்கள்//

நன்றி தல

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதில்கள் அனைத்தும்
கலக்கலாய்,
நகைச்சுவையாய்
இருந்தன.
பாராட்டுக்கள்...
தொடருங்கள்...
அப்படியே நம்ம
'நிஜாம் பக்கம்'மும்
வந்து பாருங்க...

Gayathri said...

அடக்கடவுளே என் இப்படி நான் ஒன்னும் ஆடு இல்ல மாடாக்கும்!!! ஹ ஹ ஹா காயத்ரி ல காய்னா மாடு ல..ஐயோ ஐயோ

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

http://muttalpaiyannan.blogspot.com/2010/08/blog-post.ஹ்த்ம்ல்

தல ஒரு பதிவு போடிருகேன் ..,ஏதோ என்னக்கு தெரிஞ்ச நடையில,நீ வோட்டு எல்லாம் போடவேண்டாம் ,எதாவது கருத்து பிழையோ ,தகவல் பிழையோ இருந்த சொல்லு தல திருத்திகிரேன்..,இனிமே தொடரலாம ????

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

பெசொவி said...

கலக்கிட்டீங்க அருண். நான் கூப்பிட்ட ரெண்டு பேருமே ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
(சாரி பாஸ், ரொம்ப நாள் கழிச்சு பின்னூட்டம் போடறேன்.)

Athiban said...

இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க...

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

Unknown said...

74,

Unknown said...

hi nanthan 75....
kalakal introduction..