Cricket Countdown....

Friday, August 13, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2

சென்ற பதிவில் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்.


முதல் பகுதிக்கு இங்கு சென்று பார்க்கவும்...

இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு காலை 6 மணி ரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஆனால், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வழியில்லை. கையில் (பாக்கெட்டில்?) இருக்கும் ஒரே புரூப் மொபைலில் PNR number உடன் வந்த Ticket Confirmation SMS, NGPAY அனுப்பியது.

தொடர்ந்து ரயிலில் பயணம் செய்வதால் ரயில்வேயின் சில விதிமுறைகள் தெரியும், அதில் ஒன்று, E Ticket  எனப்படும் இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கெட் தொலைந்தாலோ, TTR இடம் காண்பிக்க தவறினாலோ, PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.

பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. அன்று வந்த TTR உம் அப்படிபட்ட ஆள்தான். ஒரு வழியாக, காலை ரயில் ஏறியாகியாச்சு. TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன். ஆம், எல்லா E Ticket லும் இந்த விதிமுறையை  பிரிண்ட் செய்து இருப்பர். பிறகு அவர் ஒத்துக்கொண்டார்.

உதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.


(படத்தை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)

அந்த ரயிலில் இருந்த மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும். அதில் தற்போதய நேரம், அடுத்து வரும் நிலையம், அதற்கு உள்ள தொலைவு ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம். தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா? இல்லையா? என தெரியாது. இருந்தாலும் சில கட்சிகள் அதில் வரும் ஆங்கில எழுத்தில் "தார்" பூசினாலும் பூசுவார்கள்.


எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?

பயணங்கள் முடிவதில்லை ......

39 comments:

வெங்கட் said...

1st Part-ஐ நகைச்சுவையாகவும்.,
2nd Part-ல நல்ல ஒரு Information
எல்லோருக்கும் தெரியணும்னு
எழுதி இருக்கீங்க..

Very Nice.. Good Post

சௌந்தர் said...

நல்ல தகவல் பலருக்கு இது பற்றி தெரியாது நன்றி...

எல் கே said...

payanam seyya thayarthan

Anonymous said...

நல்ல தகவல்கள் அருண்.
ரொம்ப உபயோகமானதும் கூட...

// உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா? //

ரெடி ரெடி ரெடி..
நான் இப்பவே துண்டு போட்டுட்டேன் ஆமா!

Riyas said...

ரயில் பயணம் நல்லாயிருந்தது..

Jey said...

//PNR number,
Ticket Confirmation SMS,
NGPAY ,
E Ticket,TTR,
ID Proof,
GPS System,
DISPLAY //

இதுக்குதான், படிச்ச பயபுள்ளக கூட கூட்டு சேரகூடாதுன்றது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே...

பகிர்வுக்கு நன்றி...

Jey said...

இங்க கட்டுணா 50 கோர்ட்டுல கட்டுணா 500-னு , நம்ம ஊரு ட்ராபிக் போலீஷ் சொன்னா மாறி...டிடிஆர், ரசீது குடுத்தா 50 , இல்லாம என் கையில அமுத்துனா 25-னு ஏதும் துண்டு போத்தி விரல் பிடிச்சி பேரம் பேசலைய்யா..? ரொம்ப நல்லவர் போலயே..

Jey said...

// விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்//

வெளிநானுகளுகெல்லாம் போயிருக்கீரா... ஆமா இந்த இடமெல்லாம் எந்த நாட்ல இருக்கு...?( சந்தேகம் கேட்டா பொறுமையா பதில் சொல்லனும்...)

Unknown said...

நல்ல உபயோகமான தகவல்.. சின்னப்புள்ளைக நீங்க என்னமா வேலயாடுரீங்க ...

Jey said...

//இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு//

பழமொழிகள் தெரிஞ்ச “பன்மொழி வித்தகர்”னு சொல்லுங்க...

Jey said...

//பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு.//

ரொம்ப நன்றி. (அப்படியே எங்கூருக்கு சென்னைலேர்ந்து டைரக்ட் ட்ரைன் விட ஆவனம் செஞ்சா உங்களுக்கு புண்ணியமா போகும்)

ஜில்தண்ணி said...

ngpay பற்றி கொஞ்சம் கேள்விப் பட்டிருக்கேன்

முதல் பகுதியையும் இப்பதான் படித்தேன்,இரண்டும் பயனுள்ளவை

தங்களின் அனுபவத்தின் மூலம் இதை பற்றி சொல்லும் போது தெளிவாக இருக்கு

வாழ்த்துக்கள் :)

என் நண்பன் ஒருத்தன் இந்த ngpay யையும் அவன் atm card மட்டும் பயன்படுத்தி செல்போன் ரீச்சார்ஜ் செய்றான்,அதுக்கு அவனுக்கு கமிஷன் தராங்க :)

Jey said...

//தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா? இல்லையா? என தெரியாது. ///

பயபுள்ள ஊர் உலகமெல்லாம் சுத்திருக்கு, கடைசில தமிழ்நாட்ல, ட்ரைன்ல போனதில்லபோல...., இதற்கு என் கடும் கண்டனங்கள்...

Jey said...

//எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?///

எழுது ராசா.. ஆனா நல்லா கும்முரா மாதிரி நெறய அந்த பதிவில இருக்கனும்( அங்கங்கே கருத்து சொல்லிக்கலாம்).... டீல் ஓகேவா...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?//////

தயார் தலைவா !!! ஸ்டார்ட் மியூசிக்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

////எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. /////

உங்களுக்கும் ரயில்க்கும் மட்டும் தானா ஒரு கேள்வி குறி

Anonymous said...

அருண் பயணம் செய்ய நானும் ரெடி ...

கருடன் said...

@நரி
//தயார் தலைவா !!! ஸ்டார்ட் மியூசிக் //

என்ன ஒரு நாள் கும்மில அட்ங்கிட?

கருடன் said...

@ஜய்
//எழுது ராசா.. ஆனா நல்லா கும்முரா மாதிரி நெறய அந்த பதிவில இருக்கனும்( அங்கங்கே கருத்து சொல்லிக்கலாம்).... டீல் ஓகேவா... //

கடமை செய்த ஜய் வாழ்க... இப்பொ நான்...

கருடன் said...

//பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. //

வருங்கால ரயில்வே அமைச்சர் அருண் வாழ்க...

கருடன் said...

//TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன்.//

நல்ல வேலை ரூல்ஸ் தெரியாத TTR எப்படி சமாலிதேன் அப்படினு ஒரு போட்டி வைக்கல...

கருடன் said...

//உதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.//

ஒரு சந்தேகம்.. நீங்கள் இங்கு இணைத்துள்ள டிக்கட் பிரிண்ட் எடுத்து பயனம் செய்யலாமா? முடியும் எண்ட்ரல் எந்த ரயில் நிலையம்வரை.

கருடன் said...

//ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும்//

GPS மற்றும் DISPLAY தமிழ் வார்தை கூரவும். என்ன சுவாரசியமான விஷயம்? அதில் நீய? நான? நிகழ்ச்சி வருமா?

கருடன் said...

//ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம்.//

அப்படின உனக்கும் ஆங்கிலம் வராதா மச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பயபுள்ள ஊர் உலகமெல்லாம் சுத்திருக்கு, கடைசில தமிழ்நாட்ல, ட்ரைன்ல போனதில்லபோல...., இதற்கு என் கடும் கண்டனங்கள்...//

jey தலை மொரிசியசுக்கு நடைப்பயணம் பொய் அந்த ஆள ஒரு வழி பண்ணிடலாமா?

//ஒரு சந்தேகம்.. நீங்கள் இங்கு இணைத்துள்ள டிக்கட் பிரிண்ட் எடுத்து பயனம் செய்யலாமா? முடியும் எண்ட்ரல் எந்த ரயில் நிலையம்வரை.//

ஏய் டெரர் இந்த டிக்கெட் வச்சு போனா போலீஸ் ஸ்டேஷன் ல இடம் கிடைக்கும். ஆனா அங்க என் பெற சொல்ல கூடாது..ஓகே வா?

அருண் பிரசாத் said...

@ Terror

வக்கனையா பேசு! ஓட்டு போட்டியா?

கருடன் said...

//முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?//

நீங்க டிக்கட் எடுத்த... என்றும் உங்கலுடன் பயணம் செய்ய இந்த அண்பு நண்பன் தயார்...

கருடன் said...

நல்ல பயனுல்ல பதிவு. அழக சொல்லி இருக்கிங்க...நன்றி நண்பரே!!!!!

கருடன் said...

ரமேஷ்
//ஏய் டெரர் இந்த டிக்கெட் வச்சு போனா போலீஸ் ஸ்டேஷன் ல இடம் கிடைக்கும். ஆனா அங்க என் பெற சொல்ல கூடாது..ஓகே வா?//

எதுக்கு? சொல்லி அதிகமா அடி வாங்கவா?

செல்வா said...

//PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்////

இது எனக்குப் புதிய தகவல் ..!!
நல்லா இருக்கு ...

செல்வா said...

நான் எங்கள் செயலர் TERROR-PANDIAN(VAS) அவர்கள வழிமொழிகிறேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.
////

E- ticket ல தெளிவா போட்டு இருக்கும் , நிறைய பேருக்கு தெரியாதா ? ஆச்சரியமா இருக்கு

அனு said...

ஆஹா,இந்த விஷயம் தெரியாம போச்சே!!! இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் வாங்கின ஒரு பெரிய மண்டகப்படியை தவிர்த்திருக்கலாம்..ஹூம்.. இப்போதாவது தெரிஞ்சதே..

//எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது.//

மும்பையிலும் ரயில் ஒரு தவிர்க்க முடியாத விஷயம்.. முதலில் கூட்டதைப் பார்த்து மிரண்டு போய் ரயில் பக்கமே போகக் கூடாதுன்னு முடிவு பண்ணினேன்.. ஹூம்.. ஆனா, நம்ம நினைக்கிறது எல்லாம் நடந்துடுமா என்ன?? இப்போ, கூட்டத்தோட கூட்டமா நானும் ரயில் பயணத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பயனுள்ள, சுவையான இடுகை.
அதற்காக ஓர் இடுகையில் கேள்வி,
மறு இடுகையில் பதிலா? பரவாயில்லை.
நல்ல தகவல் என்பதால் எந்த நடவடிக்கையும்
எடுக்க வேண்டாம் என்று அன்பர்களைக்
கேட்டுக் கொள்கிறேன்.
விரைந்து பயணத்திற்கு வாங்க.
நானும் 'பயணங்கள் முடிவதில்லை'
என்று தலைப்பிட்டு ஓர் இடுகை
பதிந்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
http://nizampakkam.blogspot.com/2009/09/endlesstravel.html

பனித்துளி சங்கர் said...

ரயில் பயணத்தின் அனுபவங்களை ஒவ்வொரு பதிவிலும் மிகவும் அழகாக சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி . தொடரு ங்கள் மீண்டும் வருவேன்

carthickeyan said...

என்ன உங்க வயசு 28 ஆ

carthickeyan said...

என்ன உங்க வயசு 28 ஆ

GSV said...

Nanum Varen !!! Super Enakku theriatha visayam. Best Wishes for your post.