Cricket Countdown....

Tuesday, August 31, 2010

தனியொருவனுக்கு உணவில்லையெனில்....


“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்”


ஏ பாரதியே!
நீ சொல்லிவிட்டு போய்விட்டாய்! 
இங்கு வந்து பார்
செத்து மடியும் எம்மக்களை!
என் செய்வோம் யாம்
எதற்கும் உதவா மானிட பதர்கள் நாங்கள்!!


பசி - இந்த ஒரு வார்த்தையை மனதில் இருந்து உச்சரித்து பாருங்கள், 

என்ன காட்சி உங்கள் கண்முன் விரிகிறது?

பாலுக்காக அழும் குழந்தை, 
பாலில்லாமல் தவிக்கும் தாய்,
எலும்பாய் தெரியும் ஏழை நாட்டு குழந்தைகள், 
எலிக்கறி சாப்பிடும் விவசாயி, 
கஞ்சித்தொட்டியில் காத்திருக்கும் நெசவாளி.


வாழ்க்கையின் பாதையில் இப்படி பல சம்பவங்களை அனுபவித்திருக்கலாம், குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கலாம். 

ஐநா சபையின் கணக்குபடி 10 நொடிகளுக்கு (Seconds) ஒரு குழந்தை பசியால் இறக்கிறது. 

யார் காரணம்?  “விதி” என ஒரு வார்த்தை சொல்லி ஒதுங்கி போக முடியாது.

அரசாங்கமா? இயற்கையா? எதிரி நாடா? கடவுளா? யாரை குறை கூறி தப்பிக்கலாம்.

ஒரே ஒரு முறை உங்களை ஒரு கேள்வி கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும் நான் மற்றவர்கள் பசி போக்க என்ன செய்தேன்?

அனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருகிறேன், உதவுகிறன் என்று சொல்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

செல்ல நேரம் இல்லை, பணவசதி இல்லை, ஆனால் தினமும் உதவ மனம் உண்டு என விரும்புபவர்களுக்கு நான் வழிகாட்ட நினைக்கிறேன். உங்கள் ஒரு  சொடுக்கு (Mouse Click) ஒரு மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு பிடி சோற்றை கொடுக்கிறது என்றால் செய்வீர்களா?
இந்த 2 வெப்சைட்டுக்கும் சென்று பாருங்கள்.

நீங்கள் செய்யும் கிளிக் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, அங்கு வரும் விளம்பரங்கள் உங்கள் சார்பாக உணவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.

உடனே, ஒரு கேள்வி வரும், இது உண்மையா? எப்படி நம்புவது? இது போல 100 மெயில் வருகிறது! எல்லாம் பொய்!! என நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன், ஆராய்ந்து பார்த்ததில் சில விஷயம் தெரிந்தது.


இது ஒரு ஐநா சபையின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.

இங்கு அறிவு சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே உதவலாம் - ஆங்கில மொழிஅறிவு சார்ந்த கேள்விகள் default option ஆக இருக்கிறது

விருப்பத்திற்கு ஏற்ப கணிதம், புவியியல், வேதியியல் என பல துறைகளை தேர்ந்து எடுத்து விளையாடி கொண்டே உதவலாம்

எவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவு உணவு கொடுக்க முடியும்

FAQ பகுதியில் தெளிவான விளக்கமும், செயல்படும் விதமும் கொடுத்து இருக்கிறார்கள்

முடிந்தால் பண, பொருள் உதவியும் செய்யலாம்

உண்மையானது தானா?: New York Times Magazine, USA Today, CBS Evening News, BBC News, Washington Post போன்ற நாளிதழ்களில் இந்த தளத்தை பற்றி நல்ல தகவல்கள் வந்துள்ளது.


இது இந்திய இளைஞர்களின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.

இதில் உதவ ஒரு எல்லை வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சொடுக்கு மட்டுமே அனுமதி ( IP Address - வைத்து கணக்கிடுகிறார்கள்)

நீங்கள் அலுவலகத்திலும், வீட்டுலும் கிளிக் செய்து 2 முறை உதவலாம்.

FAQ மூலமும், வீடியோ மூலமும் எப்படி செயல்படுகிறார்கள் என விளக்கி இருக்கிறார்கள்

பண, பொருள் உதவியும் செய்யலாம்

உண்மையானது தானா?: Times of India வில் 2006 ல் "Hello, conscience?"என ஒரு கட்டுரை இவர்களை பற்றி வந்துள்ளது.நண்பர்களே! ஒரு கிளிக் செய்து விட்டு போவதுடன் முடித்து கொள்ளாதீர்கள். வலைதளம் என்னும் ஒரு அரிய ஆயுதம் நமது கையில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோம்.

என் இந்த பதிவின் மூலம் ஒரு 100 பேருக்கு தெரியும் இந்த விஷயம் உங்கள் வலைதளம் மூலம் ஆயிரம் பேருக்கு சென்றடைய முடியும்.

அனைத்து மக்களும் நல்லவர்களே! உதவ மனம் உள்ளவர்களே! அவர்களின் சூழலும் பொருளாதார வசதியும் அவர்களை தடுக்கிறது. அவர்கள் எல்லாம் இது போல ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், இதை பரவச்செய்வது.

நூறு மெயில்களையும் ஆயிரம் மொக்கைகளையும் பதிவிடும் நாம், நம் தேசிய அவமானத்தை கலைக்க ஒரு பதிவு வெளியிடும் உணர்வு கொண்டிருக்கிறோமா?


தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
  
இனி அது உங்கள் கைகளில்.....

இலவச உணவு வழங்கும் தளங்களின் விட்ஜெட்களை உங்கள் பிளாக்கில் வைக்க இங்கு செல்லவும்Monday, August 30, 2010

I'm Back


மக்களே! உங்களை நிம்மதியா விட மாட்டேன்.

சும்மா... ஒரு பிரேக் எடுத்தா என்ன சொல்லுறாங்கனு பாத்தா! ஒரு பயபுள்ளையும் சீக்கிரம் திரும்பி வா மச்சினு சொல்லலை. போனா சரினு சந்தோஷப்ப்டுறாங்க.....

@ ரமெஷ்
//wow excellent post//
தல, எப்பவும் வராத இங்கிலீசு இப்போ நல்லா வருதோ... முதல் கும்மி உங்க வீட்டுலதான்

@ ஜெய்
//எத்தனை பேருடா கிளம்பிருக்கிங்க இப்படி?
டீ பிரேக்கா? லன்ச் பிரேக்கா?.//
நீ அறிவாளிய்யா, எருமைமாடு மேய்ச்சாலும் மூளை வளர்ந்திருக்குய்யா. கரெக்டா கண்டுபிடிச்சிட்ட

@ வெறும்பய
//நீங்க போட்டதிலையே சூப்பர் போஸ்ட் இது தான்...
கவிதை சூப்பர்.. ஒவ்வொரு வரியும் ஒரு அர்த்தம் சொல்லுது...//
எலேய்... உம்ம 100 கவிதைக்கு இந்த கவிதை பரவாயில்லை வோய்... பாபர் போஸ்ட்டுனவே விட்டு வைக்கிறேன் ...

@ Madhavan
//இதை.. இதை.. இதத்தான் நா எதிர்பாத்தேன்..//
இதையும் எதிர்பார்த்து இருக்கனுமே....

@ வெங்கட்
// ennapa ithu ellorum ippadi solreenga..?
ithellaam venaam arun seekiram next post podunga.
daily ungalai kalaaikalainnaa ennakku thookame varaathu//
நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே! உங்க தூக்கத்துக்காக தான் I'm Back

@ Terror
//இதை எல்லாம் நாங்க முன்னாடியே பாத்துடோம்.... புதுசா எதவது ட்ரை பன்னுன் மச்சி....//
யோவ்... விஜய் ஒரே மாதிரி நடிச்சா மட்டும் பார்ப்பே! நாங்க ஒரே மாதிரி போட்டா மட்டும் பார்க்க மாட்டியோ... பார்த்துதான் ஆகனும்

எல்லோருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன், ஜில்தண்ணி ஒரு நாள் பிரேக் எடுக்கிறப்போ, நான் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க கூடாதா.

தல நீ சொல்லேன்.....

Taking a BreakWANT TO TAKE A BREAK. 
WILL BE BACK SOON....


சுட்டி குறும்பு (வில்லத்தனம்?!)

குறும்பு 1:

என் ஒரு வயது மகள் ஷம்ஹித்தா. இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். (குழந்தை பயப்படாதே? என கேட்க கூடாது)

அன்று காலை மகள் விளையாடி கொண்டிருந்தால், நானும் ஏதோ வேலை செய்து கொண்டே இந்த பாடலை பாட ஆரம்பித்தேன். திடிரென குழந்தை அழ ஆரம்பிக்க, என் மனைவி சமாதானபடுத்த முயன்றும் முடியவில்லை. இதை பார்த்து நான் பாடியதை நிறுத்தியதுதான் தாமதம். அவளும் அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

என்னா வில்லத்தனம்?


குறும்பு 2:

அன்று பிரேசிலுக்கும் ஹாலாந்திற்கும் இடையேயான உலக கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி. பரபரப்பான கடைசி 10 நிமிடங்கள். ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க, பிரேசில் ஒரு கோலை எப்படியாவது போட்டுவிட போராடி கொண்டிருந்தது. மணி இரவு 8 இருக்கும். 

விளையாடி கொண்டிருந்த என் மகள், என்னை இருமுறை அழைத்தாள். தொலைக்காட்சியில் கவனமாக இருந்த நான் அவளை கண்டுகொள்ளவில்லை. உடனே, வேகமாக என்னிடம் வந்து, ஏதோ மழலையில் என்னை திட்டி(?)விட்டு, என் கையில் இருந்த ரிமொட் கண்ட்ரோலை பிடுங்கினாள்.

அதை நேராக என் மனைவியிடம் கொடுத்து கார்ட்டூன் சேனலை மாற்ற செய்து, பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

என்னா வில்லதனம்?

குறும்புகள் தொடரும்....


Thursday, August 26, 2010

சந்திரனை தொட்டது யார்....

சென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.

என்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். அந்த நிகழ்ச்சி - MythBusters.

அந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும்,  அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.

முதல் படம்:Mythbusters கேள்விகள்:
படத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.

NASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார்,  கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.

இரண்டாவது படம்:


MythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.

NASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை.  எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.

மூன்றாவது படம்:


MythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது?

NASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.

நான்காவது படம்:


MythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு  பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.

NASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என  பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.

ஐந்தாவது படம்:
Mythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி? நிழல் மறைத்து கருப்பாக  தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.

NASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.

எது எப்படியோ? நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.

கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....

Monday, August 23, 2010

களவாணி

சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி:

சிரிப்பு போலிசிடம் இருந்த அவார்டு காணாமல் போயுள்ளது. இதை  போலிசார் ரகசியமாக தேடி வருகிறார்கள். 

பதிவுலகில் பிரபல பதிவர்களுக்கும், நல்ல பதிவுகளுக்கும் Outstanding Blog, Excellent Blog என அதிக பில்டப் கொடுத்து விருது வழங்கப்படுவது வழக்கம். அதை அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் வழக்கம். அதன் வரிசையில் நமது சிரிப்பு போலீசுக்கு நண்பர் ஜெய்லானி  “தங்க மகன்” என்ற விருதை கடந்த ஜீலை மாதம் வழங்கி இருந்தார்.


அந்த அவார்டு அவர் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து காணாமல் போயுள்ளது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் சிரிப்பு போலிசுக்கு அவமானம் என்று அறிந்த போலிஸ் அதே போன்ற ஒரு டூப்பிளிக்கேட் அவார்டை தன் ஸ்டேஷன் அலமாரியில் வைத்து இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது நிருபர் படை துப்பு துலக்கியதில், அந்த அவார்டை திருடி தன் பிளாக்கில் வைத்திருப்பது TERROR-PANDIAN (VAS) என தெரிய வந்துள்ளது. இதை பற்றி டெரர் பாண்டியிடம் நமது நிருபர் கேட்ட போது “ ஆமாங்க, பதிவுலகத்துல எதுக்கு அவார்டு குடுக்குறதுனு விவஸ்த்தை இல்லாம கொடுக்கராங்க. பாருங்க, அவார்டு காணாம போனதையே கண்டுபிடிக்க முடியாத இந்த சிரிப்பு போலீசுக்குலாம் அவார்டு கொடுத்து இருக்காங்க” என கடுப்புடன் தெரிவித்து இருக்கிறார்.


“சரி, இவர் மட்டும்தான் அவார்டு வெச்சிருக்காரா? எல்லாரும்தான் வெச்சிருக்காங்களே!” என கேட்டதுக்கு “இதுதான் ஆரம்பம், இதுக்கு மேல யாராவது அவார்டு கொடுக்கறதோ, இல்லை சும்மாதானே குடுக்கறாங்கனு வாங்குறதோ வெச்சிகிட்டீங்க. அவங்க பிளாக்லயும் வந்து திருடிட்டு வந்துடுவேன். பதிவுலகத்துக்கு நான் ஒரு அன்னியன்” என தன் தலைமுடியை அவிழ்த்துவிட்டு மிரட்டினார்.


இது இப்படி இருக்க, இதை பற்றி தெரியாத சிரிப்பு போலிஸும் அவர் குழுவும்  சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்லிக் கொண்டு வழக்கம் போல திருடு போன தன் அவார்டை வலைவீசி தேடி வருகிறது.


நமது செய்தி மூலம் பதிவுலகத்துக்கு அறிவிப்பது இது தான்.

“தயவுசெய்து, அனைத்து பதிவர்களும் தத்தமது அவார்டுகளை தங்கள் வலைபக்க அலமாரியில் இருந்து எடுத்துவிட்டு லாக்கரில் பத்திரமாக வைத்து கொள்ளவும். காணாமல் போனால் சிரிப்பு போலிசோ, நாங்களோ கண்டுபிடித்து தர இயலாது. மேலும், விருது வழங்குவதற்கும் தடை விதிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்”

இத்துடன் இந்த சிறப்பு செய்தி அறிக்கை நிறைவு பெறுகிறது.
வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................


Friday, August 20, 2010

பதிவு போடுவது எப்படி?

முஸ்கி: இந்த பதிவில் வரும் அனைத்து யோசனைகளும் கற்பனையே, ஏதேனும் தொடர்பு இருப்பது போல இருந்தால் அது தற்செயலானது.... (இப்படி ஒரு வரி போட்டாலே விபரீதம் இருக்குனு அர்த்தம்)


பிரபல பதிவர்(?!?!) ஆகிட்டாலே இந்த பிரச்சினைதான் (ஆகுறோமோ இல்லையோ நாமலே போட்டுக்க வேண்டியதுதான். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு ஒளவையார்(?!?!) சும்மாவா சொன்னாங்க) . வாரத்திற்கு 3 பதிவு வரணும், நமக்கு கமெண்ட் போடுற எல்லோருடைய பதிவிலும் கமெண்ட் போடனும். நமக்கு போடுற கமெண்ட்க்கு பதில் கொடுக்கணும். ரொம்ப குஷ்டம்பா, சே... கஷ்டம்பா....

சரி, பதிவு போடலாம்னு பார்த்தா, வெரைட்டியா வேற கேக்குறாங்க. வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணுரோம். வந்தா தானே எழுத முடியும். இந்த மாதிரி சமயத்துலயும், பதிவு போட மேட்டர் கிடைக்காமல் திணறும் போதும் எப்படி பதிவு போடுறதுக்கான ரகசியத்தை சொல்லவா?

1. ஏதாவது பழைய மெயில் பார்த்து அதை அப்படியே உல்ட்டா பண்ணி போடுங்க.

2. இருக்கவே இருக்கு, புதுசா எதாவது படம் வந்திருக்கும் அதை விமர்சனம் பண்ணுறேன்னு படத்தை தவிர தியேட்டர்ல பார்த்த மத்த எல்லா விஷயத்தையும் போடுங்க.

3. புதுசா வந்த சாப்ட்வேர், ரூபாய் சிம்பிள், ஆக்டோபஸ் ஜோசியம்னு மொக்கை போடுங்க

4. இது என்னோட 27 வது பதிவு, 83 வது பதிவு, 111 வது Followerனு ஒரு பில்டப் குடுத்து பதிவு போடலாம்

5. இந்த ஊருக்கு போனேன், அந்த ஊருக்கு போனேன், எங்க ஊர் பூக்குழி , கீரி புள்ள, எருமைமாடு இப்படினு போடலாம்

6. மாத்தி யோசிக்கிறேன்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சி மத்தவங்களை மாட்டிவிடலாம்

7. பதிவு திலகம், நட்பு திலகம்னு அவார்டு கொடுக்கலாம்

8. பழைய குப்பைல, பரணை மேல இருந்து தேஞ்சி போன ஆடியோ கேசட் பொட்டி பார்த்து சினிமா புதிர் வைக்கலாம்

9. கவிதை எழுதுறேன் பேர்விழினு மத்தவங்களை டார்ச்சர் பண்ணலாம்

10. உங்களுக்கும் புரியாம, மத்தவங்களுக்கும் புரியாத மாதிரி கடவுள், ஜாதி, மதம், நாடு இப்படி பக்கம் பக்கமா எழுதி பதிவு போடலாம். அப்பதான் புரியும் ஆனா புரியாது

11. சமைக்கிறேன் பாருனு வீட்டுகாரை கொல்றது இல்லாம, படிக்கறவங்களையும் கொல்லலாம்

12. சும்மா இருக்குறது எப்படினு சும்மா ஒரு பதிவு போடலாம்

13. இந்த ஊருக்கு போன போது இப்படி இருந்துச்சு, அந்த ஊரு இப்படினு ஒரு பயண கட்டுரை எழுதலாம்

14. தமிழ் தப்பு தப்பா எழுதி பாதி புரிஞ்சி பாதி புரியாம ஒரு பதிவும், தொடர் பதிவே எழுத முடியாத அளவுக்கு காண்டாமிருகம் பேபி சோப்பு எப்படி வாங்கும்னும் ஒரு பதிவு போடலாம்

15. ஸ்கூல் படிக்கிறப்போ எப்படி டார்சர் கொடுத்தேன், இட்லி மாவு செய்யுறது எப்படி, பசங்க ஏன் இப்படி மாறாங்கனு யாருக்குமே தெரியாத விஷயத்தை பத்தி பதிவு போடலாம்

16. எதுவும், தேறலையா என்னை மாதிரி பதிவு போடுவது எப்படினு ஒரு பதிவு போடலாம்.

அடுத்து கமெண்ட் போடுறது எப்படினு விரிவாக நம்ம டெரர் பாண்டி எழுதுவார்.(ஏன்னா, அவர் தான் அதிகமா கமெண்ட் போடுறதா கூகுள் கம்பனில சொல்லி இருக்காங்க)

(@ Terror,

எலேய் மக்கா, பதிவுக்கு கிழே Post Comments, கருத்துரையிடுக என்ற இடத்தை கிளிக் செய்தா ஒரு பொட்டி வரும், அங்க போய் கமெண்ட் போடனும்னு மொக்கை போட்ட பிச்சி பூடுவேன் பிச்சி.

பதிலுக்கு நீங்க வேணும்னா நம்ம ஜெய், ரமெஷ் இவங்களை “ஓட்டு போடுறது எப்படி”னு பதிவு போட சொல்லி கூப்பிடுங்க. (இவங்க தான் அதிகமா ஓட்டு வாங்கறதா இண்ட்லி கம்பனில சொல்லி இருக்காங்க) வர்ட்டா)

டிஸ்கி: சக பதிவர் தேசாந்திரி, தன் பதிவில் இதேபோல ஒரு பதிவை போட்டிருப்பதாய் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு பதிவின் கருவும் ஒன்றேயானாலும், இருவரும் அவர் அவர் நடையில் எழுதி இருக்கிறோம்.


Tuesday, August 17, 2010

ஐம்பது தோழர்கள்....


சேவாக்குக்கு வேணும்னா 100 ஐ குடுக்காம தடுக்கலாம்! ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது. (அது சேவாக்! நீயும் அவரும் ஒண்ணா?)என்னையும் என் எழுத்துகளையும் ரசித்து (?!?!) ஆதரவு தரும் நீங்கள் இல்லாமல் இது சாத்தியபட்டு இருக்காது (பின்னே, நீயே வா உன்னை Follow பண்ணிக்க முடியும்)


ரசிக்க சிலர் follow பண்ணுறாங்க,  சிரிக்க சிலர் follow பண்ணுறாங்க ஆனா, கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு. ஆனா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எழுத முயற்சி செஞ்சிருக்கேனு நம்புறேன். (காதுல ரத்தம் வர்றது எங்களுக்குதான் தெரியும்)

சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery  வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்!

அப்பாடி, ஒரு வழியா ஒரு பதிவு தேத்தியாச்சி. ஆங்... சொல்ல மறந்துடேனே, என் ரத்தத்தின் ரத்தமான உங்கள் அனைவருக்கும்நன்றிங்கோ! நன்றிங்கோ!! நன்றிங்கோ!!!


டிஸ்கி: நான் எந்த கட்சிக்காரனும் இல்லை, நம்ம போஸ்ட்டுக்கு பல பிரபலங்கள் மறைமுகமா follow பண்ணுறாங்க. அதுல இவங்களும் ஒன்னு

விடை: டெரர், வெங்கட், செல்வா - விடையை சரியா சொல்லிட்டாங்க. ஆமாம், எனக்கு நானே Follower. காரணம்,
1. அப்படி இருந்தா தான் நம்ம Followersக்கு Message அனுப்ப முடியும்.
2. Dashboard ல சரியா update ஆகுதானு பாக்க முடியும். சில சமயம் ஆகுறது   இல்லை. check பண்ண உபயோகப்படும்
3. உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணா என்ன தப்பு?Monday, August 16, 2010

Pretty boy - நான் தானுங்க....

நாங்க காதலிக்க தொடங்கி ஒரு மாதம் இருக்கும். திடீருனு அவங்க கிட்ட இருந்து போன் “நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாத்துட்டு போன் பண்ணுங்க” னு சொல்லிட்டு வெச்சிட்டாங்க. என்னடா இது என்னவா இருக்கும்னு, ஒரே யோசனை.

அன்னிக்கு வேக வேகமா ஆபிஸ் வேலைய முடிச்சிட்டு, சாயந்திரம் ஒரு பிரௌசிங் செண்டர் போய் பாத்தேன். அவங்க மெயில்ல ஒரு விடியோ அனுப்பி இருந்தாங்க. ஓப்பன் பண்ணிப்பாத்தா கிழே சப் டைடில்ஸோட ஒரு அனிமேட்டட் விடியோ ஓடுச்சு. நானும் அவங்களுக்கு போன் பண்ணி, “நல்லா இருந்துச்சு”னு சொல்லிட்டு வெச்சிட்டேன்.

ரெண்டு நாள் கழிச்சி அவங்களை நேரில் பாத்தப்ப அந்த விடியோ பற்றி பேச்சு வந்துச்சு. நான் பெருமையா “அந்த விடியோ சூப்பர், Lines-ம் நல்லா இருந்துச்சு”னு ஒரு பிட்டு போட. உடனே, அவங்க ”மியூசிக்கும் நல்லா இருந்துச்சில்ல”ன்னாங்க. நான் ரொம்ப கூல்லா “மியூசிக்கா? நான் அதில் படம் மட்டும்தானே பாத்தேன், மியூசிக் கேட்கலையே. பிரெளசிங் செண்டர்ல எந்த கம்யூட்டருக்கும் Head Phone கிடையாதே!” அப்படினு சொன்னதுதான் தாமதம், “டொம்”னு ஒரு சத்தம், வேற என்ன? அவங்க குட்டினதுதான். (Tom & Jerry ல மண்டைல அடிச்சி பூனை தலைல பெருசா ஒரு வீக்கம் வருமே! அதை நினைச்சுக்குங்க)

அன்னிக்கு வாங்க ஆரம்பிச்சது, ஒரு தொடர்கதையா ஓடிட்டு இருக்குது. நான் சொதப்புறதும், அவங்க அடிக்கிறதும் தான்..... அவ்வ்வ்வ்வ்வ்....

இதை தெரிஞ்ச எங்க ரெண்டு பேரின் நண்பன் ஒருத்தன் என்னை எங்க பார்த்தாலும் “Preety boy, Pretty boy” ஒரு உரைநடை படிக்கிறமாதிரி தான் இப்பவும் கூப்பிடுறான்.மறக்கமுடியாத அந்த விடியோவை இணைத்து இருக்கேன், பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். ஆனா தயவு செய்து ஆடியோ கேட்டபடி பாருங்க.


Sunday, August 15, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

இந்தியர் அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

Happy Independence Day
PROUD  TO  BE  AN  INDIAN.
 

JAI HINDUSTAN

             JAI HIN JA
              JAI HIND JAI HI
                JAI HIND JAI H
              JAI HIND JAI HI
               JAI HIND JAI
               JAI HIND JAI
                 JAI HIND JAI
                 JAI HIND
                 JAI HIND J
                JAI HIND JAI H
              JAI HIND JAI HIN
             JAI HIND JAI HIN                                  JAI H
           JAI HIND JAI HIND J                               JAI HIND J
          JAI HIND JAI HIND JAI H                 J         JAI HIND J
     JAI HIND JAI HIND JAI HIND JAI              JA     JAI HIND JAI
    JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J        JA      JAI HIND
     JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN
      JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J JAI HIND JAI

       
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND  JAI HIND JAI
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        JAI HI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND      JAI H
   JAI HIND JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND JAI        JAI
 
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN        J
   
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI
    JAI H JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND J
           JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND
          JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
           JAI HIND JAI HIND JAI HIND JAI
           JAI HIND JAI HIND JAI HIND JAI
           JAI HIND JAI HIND JAI HIND J
           
JAI HIND JAI HIND JAI HIND
           JAI HIND JAI HIND JAI HIN
            JAI HIND JAI HIND JAI HI
             JAI HIND JAI HIND JA
             JAI HIND JAI HIND J
              JAI HIND JAI HIN
               JAI HIND JAI HIN
               JAI HIND JAI HI
                JAI HIND JAI H
                 JAI HIND JAI
                 JAI HIND JAI
                 JAI HIND JAI
                   JAI HIND
                   JAI HIN
                    JAI HI
                     JAI H
                      JAI


 

டிஸ்கி: இது எனக்கு மெயிலில் வந்தது. வாழ்த்தும் கூறியாச்சு, இந்த நல்ல Mail-ஐ உங்களுடன் பகிர்ந்தும் ஆச்சு.


Friday, August 13, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும் - 2

சென்ற பதிவில் விஜயவாடாவிலிருந்து விசாகப்பட்டனம் போக வேண்டியவன், ஓங்கோலில் மாட்டி கொண்டதை சொல்லி இருந்தேன்.


முதல் பகுதிக்கு இங்கு சென்று பார்க்கவும்...

இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்துவிட்டு காலை 6 மணி ரயிலில் புக் செய்தாகிவிட்டது. ஆனால், டிக்கெட் பிரிண்ட் எடுக்க வழியில்லை. கையில் (பாக்கெட்டில்?) இருக்கும் ஒரே புரூப் மொபைலில் PNR number உடன் வந்த Ticket Confirmation SMS, NGPAY அனுப்பியது.

தொடர்ந்து ரயிலில் பயணம் செய்வதால் ரயில்வேயின் சில விதிமுறைகள் தெரியும், அதில் ஒன்று, E Ticket  எனப்படும் இன்டர்நெட்டில் புக் செய்த டிக்கெட் தொலைந்தாலோ, TTR இடம் காண்பிக்க தவறினாலோ, PNR number ஐயும் உங்கள் போட்டோ ID Proof ஐயும் காண்பித்து, 50 ரூபாய் அபராதம் செலுத்தினால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யலாம்.

பலருக்கு இந்த விதிமுறையை பற்றி தெரியபடுத்தவே இந்த பதிவு. இந்த விதி சில TTRகளுக்கே தெரியாது. அன்று வந்த TTR உம் அப்படிபட்ட ஆள்தான். ஒரு வழியாக, காலை ரயில் ஏறியாகியாச்சு. TTR டிக்கெட் செக் செய்ய வந்தார். நான் என் நிலையை விளக்கினேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு நான் என்னிடம் இருந்த முன்னிரவு பயணம் செய்ய வேண்டிய டிக்கெட்டில் இருந்த அந்த ரூல்ஸை காண்பித்தேன். ஆம், எல்லா E Ticket லும் இந்த விதிமுறையை  பிரிண்ட் செய்து இருப்பர். பிறகு அவர் ஒத்துக்கொண்டார்.

உதாரணத்திற்காக, வேறொரு டிக்கெட் ஐ படமாக இணைத்துள்ளேன்.


(படத்தை கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்கவும்)

அந்த ரயிலில் இருந்த மற்றும் ஒரு சுவாரசியமான விஷயம், GPS System. ஒவ்வொரு பெட்டியிலும் இரு பக்கமும் கதவிற்கு அருகில் ஒரு DISPLAY இருக்கும். அதில் தற்போதய நேரம், அடுத்து வரும் நிலையம், அதற்கு உள்ள தொலைவு ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ஓடிக்கொண்டிருக்கும். இது என்னை போல கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெலுசுன பிள்ளகாலுக்கு (தெலுங்கு தெரிந்த பசங்களுக்கு - தெலுங்கில்) உபயோகமான விஷயம். தமிழ்நாட்டில் இது போல வசதி உண்டா? இல்லையா? என தெரியாது. இருந்தாலும் சில கட்சிகள் அதில் வரும் ஆங்கில எழுத்தில் "தார்" பூசினாலும் பூசுவார்கள்.


எனக்கும் ரயிலுக்கும் இடையேயான நேசமும், ஆந்திராவில் நான் செய்த சுவாரசியமான பயணமும் பல இருக்கிறது. முடிந்தவரை பதிவு செய்கிறேன். உடன் பயணம் செய்ய நீங்கள் தயாரா?

பயணங்கள் முடிவதில்லை ......

Tuesday, August 10, 2010

NGPAYயும் இந்திய ரயில்வேயும்

நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்வதில் தப்பில்லை. இப்பொழுது இல்லையெனும் என்றாவது, யாருக்காவது உதவும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த பதிவு. (நாமதான் மத்தவங்களுக்கு உதவுறதுல கர்ணனுக்கு பக்கத்து வீடாச்சே)NGPAY - இந்த வசதியை பற்றி அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தெரியும். இது ஒரு Mobile Software. (அப்பிடியா, தல ரொம்ப படிச்சவனு காட்டிக்குதோ...) இதன் மூலம் நீங்கள் ரயில் டிக்கட், தனியார் பஸ் டிக்கட், சினிமா டிக்கட், (பிளாக் டிக்கெட் கிடைக்குமா?) ஷாப்பிங் போன்ற ஏராளமான சேவைகள் பெறலாம். ஓசி கிடையாது. (சொல்லிட்டாருயா... எவன் ஓசில ஒத்தை பைசா கொடுக்கறது அதுவும் உனக்கு...) 

இதை உங்கள் GPRS உள்ள மொபைலில் நிறுவி, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அவர்களுடன் இணைந்துள்ள பல மேற்சொன்ன நிறுவனங்களின் சேவையை நீங்கள் சுலபமாக பெறலாம். (இதுக்கு மொபைல் ஆன் பண்ணனுமா, சிம் போடனுமா, பெலன்ஸ் இருக்கனுமா?)

இந்த NGPAY மூலமாகதான், நான் எல்லா ரயில் டிக்கெட்களையும் புக் செய்வேன். காரணம்,
1. என் வேலை. எப்பொழுது எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது.

2. மற்ற இடத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்ய இன்டர்நெட் சென்டரை தேடி அலைய முடியாது (வேலை செய்யாம ஊரை சுத்தினதை எப்படி பில் டப் கொடுத்து சொல்லுறத பாரு...)

3. கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவதால், அதிகபடியான பணம் கையில் வைத்திருக்க தேவையில்லை (கைல காசு இல்லைன்றத டீசண்டா சொல்லி இருக்கீரு)

4. புக் செய்தவுடன் டிக்கெட் மெயிலில் (இது E mail, ஹவுரா மெயில் இல்லை) அனுப்பிவிடுவார்கள்

5. தட்கால் டிக்கெட் கண்டிப்பாய் கிடைத்துவிடும். சர்வர் ஜாம் ஆகி இன்டர்நெட் சைட் ஓப்பன் ஆகவில்லை என்ற பிரச்சினை குறைவு.

6. டிக்கெட் Availability யை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

7. எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியும். மொபைலில் சிக்னல் இருந்தால் போதும்

 சரி, விஷயத்துக்கு வருவோம், (இன்னும் இவ்வளோ நேரம் விஷயத்துக்கே வரலையா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..)

ஒருமுறை நான் வேலை விஷயமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி இருந்தேன் (பாவம் அங்க எவன் இவர் மொக்கைக்கு மாட்டினானோ?) .  மறுநாள், நான் விசாகபட்டிணத்தில் இருக்க வேண்டும் ( இப்போதான் தெரியுது ஆந்திரால ஏன் அவ்வளோ பிரச்சினைனு...). இரவு 11 மணி ரயிலில் டிக்கட் புக் செய்தாகிவிட்டது. திடீரென, அன்று ஓங்கோல் என்ற இடத்திற்கு  செல்ல வேண்டிய கட்டாயம். விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் 3 மணி நேர பயணம். (நடந்து போனா கூடவா 3 மணி நேரம்? ) எப்படியாவது இரவு திரும்பி விடலாம் என்று காரில் கிளம்பி விட்டேன். ஆனால் அங்கு தாமதமாகிவிட்டது. ஓங்கோலில் இருந்து கிளம்பியதே இரவு 8 மணிக்குதான்.

எப்படியும் 11 மணி ரயிலை பிடிக்க முடியாது. ஏனெனில், விஜயவாடாவில் ரூம் காலி செய்ய வேண்டும், உடன் வரும் நண்பர்களுக்காகவாவது சாப்பிட வேண்டும், (அதை சொல்லு முதல்ல... அந்த வேலைதான முக்கியம்...) டாக்ஸி செட்டில் செய்ய வேண்டும். அப்பொழுது கபாலத்தில் கனபொழுதில் உதித்தது ஒரு யோசனை. (அதான, எப்பவுமே லேட்டாதான மேல்மாடி வேலை செய்யும்...) உடனே இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தேன். மறுநாள், காலை 6 மணி ரத்னாசல் எக்ஸ்பிரஸில் புக் செய்தேன். (ராத்திரி தூங்க வழி செஞ்சாச்சினு சொல்லுங்க...) எல்லாம் NGPAY மூலம் வரும் வழியிலேயே காரில் இருந்தபடியே செய்தேன். டிக்கெட்டும் மெயிலில் அனுப்பிவிட்டார்கள்.

அடுத்த பிரச்சினை, டிக்கெட் பிரிண்ட் எடுப்பது. வழியில் ஏதாவது பிரெளசிங் சென்டர் தென்படுகிறதா என்றால், இல்லை. (காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...) விஜயவாடா சென்று சேர்ந்தது இரவு மணி 12. அங்கும் கடைகள் குளோஸ். காலை 5.30 க்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். 

என்ன செய்ய? 
எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?

விடையை யூகித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீதி அடுத்த பதிவில் தொடரும்..... (அடுத்த பதிவுவேறயா... வெளங்கிடும்...)


Sunday, August 8, 2010

பொங்கல்....


டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு, 2 வயதில் நான் செய்த குறும்பு இது. ஒரு சுவாரசியத்திற்காக, தற்பொழுது நடந்தது போல எழுதியுள்ளேன்.

அன்றில் இருந்து பொங்கலுக்கு
இன்னும் பத்தே நாட்கள்...  
யாருக்கும் இன்னும்  
புத்தாடைகள் எடுக்கவில்லை....  

இந்த ஞாயிற்றுகிழமையை விட்டால்  
அடுத்த வாரம் தி நகரில் கூட்டம் அலை மோதும்....  

சரி இன்றே போத்திஸ் 
அல்லது சரவணா ஸ்டோர்ஸ் 
சென்றுவிடலாம் என முடிவாயிற்று...  

யார் யாருக்கு...  
என்ன என்ன வேண்டும்... 
லிஸ்ட் போடுங்கள் என்றேன்...  

மனைவி - எனக்கு பேன்சி சாரி....  
அம்மா - எனக்கு பட்டு சாரி.... 
அப்பா - எனக்கு வேட்டி சட்டை... 
தங்கை - எனக்கு சல்வார் காமிஸ்... 
தம்பி - எனக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட்...  

விளையாடிகொண்டிருந்த 
என் இரண்டு வயது மகளிடம்...  
" குட்டிமா, பொங்கலுக்கு பாப்பாக்கு என்ன வேண்டும்?" என்றேன்...

 மழலை மாறாமல் சொன்னாள் 
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."


Friday, August 6, 2010

மாறவேண்டுமா கல்வி முறை?
மாறவேண்டுமா கல்வி முறை? என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை கழுகு வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

பார்க்க இங்கு சொடுக்கவும்......
Thursday, August 5, 2010

பதின்ம வயதுஉன் வீட்டை கடக்கும் போது
எனக்காய் நீ பூத்த புன்னகை....

தெரு கோவிலை கடக்கும் போது
உனக்காய் நான் காத்திருந்த நேரங்கள்....

உன் தெருவை கடக்கும் போது
பண்டிகைகாய் நீ வரைந்த கோலங்கள்...

சாலை மரத்தை கடக்கும் போது
கல்லூரி பேருந்திற்கு நீ காத்திருந்த நிமிடங்கள்...

கல்லூரி பேருந்தை பார்க்கும் போது
எனக்காக நீ அமர்ந்த ஜன்னல் ஓர இருக்கை...


மறுகரையில் நீ கால் நனைத்தாய் என்பதற்காய்
இக்கரையில் நான் கால் நனைத்த குளக்கரை....


ஏனோ இன்றுவரை
என் பதின்மவயது நினவுகளை
மறக்கமுடியவில்லை,
என் முன்னாள் காதலியே!


Monday, August 2, 2010

இதனால அறிவிப்பது என்னனா...


டிஸ்கி 1 : இந்த பதிவில் பல Linkகளை கொடுத்து இருப்பதால், லிங்க் வழியே எஸ்கேப் ஆகி வெளியே சென்றுவிடாதீர்கள், மறக்காமல் திரும்பி வந்து ஓட்டு போடுங்க.பதிவுலக அன்பர்களே! நண்பர்களே!! இதுனால சகலமானவர் அறிவிக்கறது என்னனா, நம்ம 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அவர்களை நான் ஏற்கனவே ஒரு பதிவில் மாட்டிவிட்டதால், பதிலுக்கு ஒரு தொடர்பதிவில் என்னை மாட்டிவிட்டுருக்கிறார், அதற்கு அவருக்கு முதலில் நன்றி. அடுத்து, நான் எவ்வளவு மொக்கை போட்டலும் பொறுமையுடன் படித்து வலிக்காத மாதிரியே நடிக்கும் உங்களுக்கு வணக்கங்கள். சே... என்ன பேட்டின்னு சொன்னவுடனே அரசியல்வாதி மாதிரி பேச ஆரம்பிச்சிட்டேன். சரி, நேரா தம்பட்டத்திற்கு போவோம். அதாங்க பேட்டிக்கு,

1) வலைபதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அருண்பிரசாத்

2) அந்த பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்க காரணம் என்ன?

இல்லை, உண்மையான பெயர் அருண் பிரசாத். என்ன? மறுபடியும் முன் கேள்வி பதிலை பார்கிறீங்களா? வித்தியாசம் இருக்கு, 6 கிடையாது. ஒன்றே ஒன்றுதான், அது அருணுக்கும் பிரசாத்துக்கும் நடுவில் ஒரு Space. என்ன பண்ண? நம்ம கவர்ண்மெண்ட் என் பத்தாவது சர்டிபிகேட்ல சேர்த்து போட்டுடாங்க, அப்படியே Continue ஆகிடுச்சு.(ஒழுங்கா பெயர் எழுதி கொடுக்காததுக்கு என்னா பில்டப் பாரு) அதை பத்தி தனி பதிவு போட்டு (இன்னொரு பதிவா?????) உங்களை ஏற்கனவே A for அவஸ்தைனு மொக்கை போட்டமாதிரி போட விரும்பலை. ( ஒரு வழியா எல்லாரையும் இங்கயே மொக்கை போட்டாச்சு, இன்னிக்கி நிம்மதியா தூங்கலாம்)

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

கண்டிப்பாக அது ஒரு வெளிநாட்டு சதிதான். ஆமாங்க, இங்க மொரிசியஸ் வந்து கொஞ்ச நாள்ல தமிழ்நாட்டு பத்தி எந்த நியூஸிம் தெரியல. இங்க தமிழ் சேனலோ, படமோ எதுவும் வராது. அதனால் ஒரு நாள் 'தமிழ்' அப்படினு டைப்பண்ணி கூகுள்ல தேடினா தமிழ்10 அப்படினு ஒரு சைட் வந்தது, அதுல நம்ம கோகுலத்தில் சூரியன் முதல்ல வந்துச்சு அப்படியே பிக்கப் பண்ணிட்டேன். அதனால, இதுக்கெல்லாம் காரணம் மொரீசியஸ் அரசாங்கம்தான்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடைய செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

(என்னாது என் வலைபதிவு பிரபலம் ஆகிடுச்சா!) இதுக்கெல்லாம் பூக்குழியா இறங்க முடியும். சும்மா இஷ்டத்துக்கு கிறுக்கி தமிழ்10, தமிலிஷ், உலவு, தலைவன் ல சப்மிட் பண்ணேன். அப்படியே, பிச்சுக்கிட்டு போச்சு, இன்டர்னெட் டிராபிக் ஜாம் ஆகிடுச்சு. அப்படினு சொன்னா நம்பவா போறீங்க. ஆனா இதை சொல்லியே ஆகனும் வெங்கட் மூலம் தேவா அண்ணன் அறிமுகம் ஆனார், அவர் என்னை வலைசரதில் அறிமுகபடுத்தியும், வெங்கட், ரமெஷ், அனு போன்றவர்கள் சரியான நேரங்களில் கொடுத்த வழிகாட்டுதலாலும் கொஞ்சம் பிரபலம் ஆகிருக்கு. (நல்லவேளை பிரபலம், இதுவரை Problem ஆகலை). யூத்புல் விகடன் பரிந்துரைத்த 'பிளாக்குக்கு சூனியம்' பலரை அழைத்து வந்தது

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் மொத்த பதிவு 31 ல் 14 பதிவுகள் சொந்த (சில நொந்த) அனுபவம் தான். ஆனால் மனைவி என்ற கவிதை பாருங்கள், அதன் விளைவை கமெண்டில் கொடுத்திருப்பேன். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆமாங்க, ஒரு பதிவுல பில் கேட்ஸ் பத்தி சொன்னதால Microsoft பங்குகள் அடிமாட்டு விலைக்கு இறங்கிடுச்சு, இன்னொரு பதிவுல ஆக்டோபஸ் பத்தி சொன்னதால அது உலக பேமஸ் ஆகிடுச்சு. அதனால அவங்க நம்மளை நல்லா கவனிச்சுகிறாங்க. நீங்க வேற, திருவிளையாடல் படத்தில் வரும் முருகன் சொல்லும் டயலாக் போல, என் பிலாக், என் Followers அப்படினு வாழ்ந்துகிட்டு இருக்குறது உங்களுக்கு பிடிக்கலையா

7) நீங்கள் மொத்தம் எத்த்னை வலைப்பதிவுகளுக்கு சொந்தகாரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இருக்குற ஒன்னை பாத்துக்கவே நேரம் இல்லை, இதுல இன்னும் 2, 3 வெச்சிக்கிட்டா அப்புறம் யார் உதை  வாங்குறது. (சத்தியமா நான் பிலாக்கைதான் சொன்னேன்) 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை உண்டு எல்லா பதிவர் எழுத்துக்கள் மீதும். என்னமா எழுதுறாங்க. ஒவ்வொருவரும் ஒரு ஸ்டைல், நாமக்குதான் எந்த ஸ்டைல்  ஒத்துவருதுனு  இன்னும் கண்டுபிடிக்க முடியல

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

உண்மையை சொல்ல வேண்டுமானால், என் முதல் ரசிகை என் மனைவிதான். எந்த பதிவையும் முதலில் படித்து விட்டு விமர்சிப்பது அவர்தான். தமிழை மெதுவாகதான் படிப்பார், ஆனால் அவர் சொல்லும் கருத்து உண்மையிலேயே யோசிக்கவைக்கும். அதன் பிறகு மாற்றியே பப்ளிஷ் செய்வேன் (மாத்தலைனா என்ன ஆகும்னுதான் எல்லாருக்கும் தெரியுமே)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நாம பிலாக்கு எழுதுறதுக்கே ஆப்பு வெச்சிடுவீங்க போல இருக்கு, அதை எல்லாம்  இங்க சொல்லிட்டா, அப்புறம் இதுக்கு மேல போடப்போற பதிவுல என்னத்தை போடுறதாம். தொடர்ந்து வந்து படிச்சு தெரிஞ்சுக்குங்க.

சரி, கடைசியா யாருக்கு மஞ்சதண்ணி தெளிச்சி மாலை போட்டு வெட்ட கூப்பிடலாம், Sorry, தொடர்பதிவு எழுத கூப்பிடுலாம்னா,First, லீவுல இருந்து திரும்பி வந்திருக்குற நம்ம சிரிப்பு போலீசு ரமெசு

அடுத்து, பட்டிகாட்டான்னு சொல்லிட்டு நாட்டு வைத்தியமா சொல்லுற நம்ம ஜெய்

அப்புறம்,நம்ம சின்ன தம்பி செளந்தர்.

கண்ணுகளா மேடைக்கு வாங்க.....

டிஸ்கி 2: எதுக்கு கிடா வெட்டு படம் குடுக்குறோம்னு தெரியாமல், ஆடு படம் கொடுத்து உதவிய நண்பர் ஜெய்க்கு நன்றி!