Cricket Countdown....

Monday, August 16, 2010

Pretty boy - நான் தானுங்க....

நாங்க காதலிக்க தொடங்கி ஒரு மாதம் இருக்கும். திடீருனு அவங்க கிட்ட இருந்து போன் “நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாத்துட்டு போன் பண்ணுங்க” னு சொல்லிட்டு வெச்சிட்டாங்க. என்னடா இது என்னவா இருக்கும்னு, ஒரே யோசனை.

அன்னிக்கு வேக வேகமா ஆபிஸ் வேலைய முடிச்சிட்டு, சாயந்திரம் ஒரு பிரௌசிங் செண்டர் போய் பாத்தேன். அவங்க மெயில்ல ஒரு விடியோ அனுப்பி இருந்தாங்க. ஓப்பன் பண்ணிப்பாத்தா கிழே சப் டைடில்ஸோட ஒரு அனிமேட்டட் விடியோ ஓடுச்சு. நானும் அவங்களுக்கு போன் பண்ணி, “நல்லா இருந்துச்சு”னு சொல்லிட்டு வெச்சிட்டேன்.

ரெண்டு நாள் கழிச்சி அவங்களை நேரில் பாத்தப்ப அந்த விடியோ பற்றி பேச்சு வந்துச்சு. நான் பெருமையா “அந்த விடியோ சூப்பர், Lines-ம் நல்லா இருந்துச்சு”னு ஒரு பிட்டு போட. உடனே, அவங்க ”மியூசிக்கும் நல்லா இருந்துச்சில்ல”ன்னாங்க. நான் ரொம்ப கூல்லா “மியூசிக்கா? நான் அதில் படம் மட்டும்தானே பாத்தேன், மியூசிக் கேட்கலையே. பிரெளசிங் செண்டர்ல எந்த கம்யூட்டருக்கும் Head Phone கிடையாதே!” அப்படினு சொன்னதுதான் தாமதம், “டொம்”னு ஒரு சத்தம், வேற என்ன? அவங்க குட்டினதுதான். (Tom & Jerry ல மண்டைல அடிச்சி பூனை தலைல பெருசா ஒரு வீக்கம் வருமே! அதை நினைச்சுக்குங்க)

அன்னிக்கு வாங்க ஆரம்பிச்சது, ஒரு தொடர்கதையா ஓடிட்டு இருக்குது. நான் சொதப்புறதும், அவங்க அடிக்கிறதும் தான்..... அவ்வ்வ்வ்வ்வ்....

இதை தெரிஞ்ச எங்க ரெண்டு பேரின் நண்பன் ஒருத்தன் என்னை எங்க பார்த்தாலும் “Preety boy, Pretty boy” ஒரு உரைநடை படிக்கிறமாதிரி தான் இப்பவும் கூப்பிடுறான்.மறக்கமுடியாத அந்த விடியோவை இணைத்து இருக்கேன், பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். ஆனா தயவு செய்து ஆடியோ கேட்டபடி பாருங்க.


43 comments:

Mohamed Faaique said...

நம்ம ஆபீஸ்ல வேடியோவே இல்லைங்க.. என்ன கொடும சார் ....

ஜில்தண்ணி said...

///“Preety boy, Pretty boy” ஒரு உரைநடை படிக்கிறமாதிரி தான் இப்பவும் கூப்பிடுறான்.///

உங்க ஆளு பேரு ப்ரீத்தியா :)

Mohamed Faaique said...

ஐ... நாமதான் 1ST ....

சௌந்தர் said...

பாட்டை பார்த்து ஏமார்ந்து போய்ட்டார்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,
வீடியோ பார்க்க முடியாது .......

சௌந்தர் said...

இந்த பாட்டை பார்த்தும் கூட அவங்க என்ன சொல்ல வரங்க என்று புரியலை என்றால் எப்படி கோபம் வரும் அதான் குட்டு....

சௌந்தர் said...

பனங்காட்டு நரி சொன்னது…
தல ,
வீடியோ பார்க்க முடியாது .......///

நல்லவேளை

ஜில்தண்ணி said...

இப்பதான் தெரியுது அந்த குட்டு கண்டிப்பா விழ வேண்டியதான் :)

Unknown said...

“Preety boy, Pretty boy” ....

மங்குனி அமைச்சர் said...

இப்ப ஹெட் போன் கொஞ்ச நேரம் கழிச்சு கேட்டுகேர்றேன்

Jey said...

//அன்னிக்கு வேக வேகமா ஆபிஸ் வேலைய முடிச்சிட்டு, சாயந்திரம் ஒரு பிரௌசிங் செண்டர் போய் பாத்தேன்//

சரி விடு ராசா, வெற என்ன செய்வே பாவம்...

Jey said...

ஆமா, அம்மனி ரொம்ப படிச்ச பில்ளயோ, வீடியோ சாங்க் இங்லீஷ்ல இருக்கு...., புரியலைனாலும் புரிஞ்சா மாதிரி தலயாட்டிருக்கே....

சௌந்தர் said...

Preety boy, Pretty boy.........எங்க போனிங்க.....இப்போது இந்த பாட்டு புரியுதா இல்லையா....

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,
இந்த வீடியோ எங்க இருந்து எடுத்த ? யூ tube விலாசம் ????? urgent urgent

Chitra said...

////அன்னிக்கு வாங்க ஆரம்பிச்சது, ஒரு தொடர்கதையா ஓடிட்டு இருக்குது. நான் சொதப்புறதும், அவங்க அடிக்கிறதும் தான்..... அவ்வ்வ்வ்வ்வ்....////


....... நீங்க ரொம்ப நல்லவங்க போல..... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறீங்க.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

அருண் பிரசாத் said...

வாங்க Mohammed

@ ஜில்-தண்ணி
எப்படிப்பா இப்படிலாம் யோசிக்கற

@ நரி
என்னா ஆனவம், பாக்க முடியாதுனு சொல்லுறீங்க. வீட்ல போய் பாருங்க

அருண் பிரசாத் said...

@ செளந்தர்
புரியாமதான இன்னும் வாங்கிட்டு இருக்கேன்

@ கே ஆர் பி
அண்ணா, நீங்களுமா?

@ மங்குனி
சரி ஓட்டையாவது போட்டுட்டு போங்க

Anonymous said...

அருண் இந்த வீடியோவ டவுன் லோடு பண்ண முடியாதா?
you tube லிங்க் கொடுங்க நண்பா!

அருண் பிரசாத் said...

@ ஜெய்
//புரியலைனாலும் புரிஞ்சா மாதிரி தலயாட்டிருக்கே.... //

வேற வழி, எல்லாத்துக்கும் தலை ஆட்டியே பழகிட்டேன்

@ நரி
யூடிப்ல கிடையாது, வேணும்னா மெயில் பண்ணுறேன். (உங்க ஆளுக்கு அனுப்பனுமா?)

@ Chitra
அவ்வ்வ்வ்வ்வ்வ்...

பொன் மாலை பொழுது said...

உண்மையில் அந்த பாடலும் இசையும் மனத்தை வருடி செல்லுகிறதே!
அவசரப்பட்டு , சப்தம் இல்லாமல் வெறும் வீடியோவை மட்டும் எப்படி பார்த்தீர்கள் ?
ஆனாலும் அதையும் வெகுளி தனமாக சொல்லவும் செய்த உங்கள் குழந்தை தனம்
ரசிக்க கூடியதுதான்.படத்தில் பார்த்தால் பால் வடிகிறது. சரிதான் ! :)

Anonymous said...

ஹேய் pretty boy வீடியோ பார்த்தேன் சூப்பர் ஆ இருக்கு.எவ்ளோ ஆசையா என் தங்கை உனக்கு இது அனுப்பினா நீ பாட்டு கேக்காமல் வந்ததுக்கு இப்போ இந்த அக்கா கிட்டே இருந்தும் ஒரு குட்டு வாங்கிக்கோ .

பொன் மாலை பொழுது said...

Mr. Arun, would you please, mail me the same video clip ?
kakkoo.saatanathan@gmail.com

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
இது யூடிப்பில் காப்பிரைட் படி தடை செய்யப்பட்டுள்ளது. மெயில் ஐடி கொடுங்கள் அனுப்புகிறேன்

@ கக்கு மாணிக்கம்
//படத்தில் பார்த்தால் பால் வடிகிறது//
ஹி ஹி ஹி, உண்மைதாங்க

விடியோ கிளிப் அனுப்பியாச்சு

@ Sandhya
ஒன்னு கூடிடாங்கயா

Anonymous said...

Arun,
pls send the video to this is id.
thanks.
balajisaravana@gmail.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நம்ம ஆபீஸ்ல வேடியோவே இல்லைங்க.. என்ன கொடும சார் ....

//

எனக்கு ஆபீஸ்-சே இல்லையே இப்ப என்ன பண்ணுவீங்க...

சௌந்தர் said...

இன்று ஒரே நாளில் அதிக அளவு விற்பனை ஆனா dvd இது தான்

Unknown said...

எனக்கு ஆபீஸ்-சே இல்லையே இப்ப என்ன பண்ணுவீங்க--repeatu...

Unknown said...

anney template superu...

Unknown said...

ஊருக்கு நல்லது சொல்வேன்! எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!! சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்!!!
--ethukkuthan avar....padam paakthenganu cholrathu..neengalum eppdi dialge pesurengaley..

வெங்கட் said...

@ அருண்..,

உண்மைய சொல்றேன்..
உங்களை கலாய்க்கணும்னு தான்
இந்த வீடியோவை பார்க்கறதுக்கு
முன்னாடி நினைச்சேன்..

ஆனா இந்த வீடியோவை பார்த்த
3.30 நிமிஷங்களும் இனம் புரியாத
சந்தோஷம் எனக்குள்ள வந்துடுச்சி..

இப்ப இந்த கமெண்டை கூட ரொம்ப
Happy-ஆ தான் டைப் பண்ணுறேன்..

இந்த வீடியோவை இங்கே பகிர்ந்ததுக்கு
Thanks..

வெங்கட் said...

@ அருண்..,

எனக்கும் இந்த வீடியோவை
அனுப்புங்க..

செல்வா said...

அட ச்சே .. pertty boy அப்படின்னு தலைப்பைப் பார்த்ததும் நான் இது எப்படி உங்களுக்கு சரியா வரும் அப்படின்னு நினைச்சேன் .. நான் நினைச்சதும் சரியாத்தான் போச்சு ..!!

செல்வா said...

வீடியோ உண்மைய்லையே அருமையா இருக்கு அண்ணா ..
ஆனா ஒரு பிரச்சினை என்ன அப்படின்னா உங்களை மாதிரியே எங்க ஆபீஸ்லயும் ஸ்பீக்கர் இல்ல .. என்னாலையும் அந்த இசைய கேக்க முடியல..
ஆனா அந்த வரிகள் அருமை .. முதல்ல உங்களை கலாய்ச்சதுக்கு சாரி ..

அருண் பிரசாத் said...

@ BALA
அனுப்பியாச்சு

@ ரமெஷ்
நல்ல வேளை கம்பியூட்டரே இல்லையேனு சொல்லலை

@ siva
நன்றிப்பா

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
இப்படி ஒரு நல்ல விடியோவை என்னை மாதிரி சொதப்பலா பார்த்தா யாருக்குதான் கோபம் வராது

விடியோ அனுப்பியாச்சு

@ செல்வா
இவ்வளோ சொல்லியும் நீ என்னை மாதிரிதான் பாத்து இருக்க, ரைட்டு. உனக்கு கல்யாணம் எப்போனு சொல்லு, அவங்களை பார்க்கனும்

அனு said...

ரொம்ப நல்லா இருக்கு..

//நானும் அவங்களுக்கு போன் பண்ணி, “நல்லா இருந்துச்சு”னு சொல்லிட்டு வெச்சிட்டேன்//

இதைக் கேட்டதும் அவங்களுக்கு எவ்வளவு சொதப்பலா இருந்திருக்கும்னு புரியுது.. அதுக்கு அந்த குட்டு ரொம்ப கம்மி..

//வெங்கட் சொன்னது…
எனக்கும் இந்த வீடியோவை
அனுப்புங்க..//

வெங்கட்-க்கு விடியோ அனுப்பிட்டீங்களா?? போச்சு.. என்னை நினைச்சு தான் M2M இந்த பாட்டை எழுதினாங்க-ன்னு அடுத்த பதிவ போட போறாரு..

Gayathri said...

வீடியோ அருமை...உங்க வீட்டு மேடம்கு நல்ல ரசனை..இப்படி சொதப்பிடீன்களே..வாழ்த்துக்கள் ப்ரோ...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

வீடியோ வை மெயில் அனுப்பிய அருண் அவர்களே .....வாழ்க நீ எம்மான் ....,( புரிந்தவர்கள் NO COMMENTS)

கருடன் said...

அட மானம் கெட்டவனே இதை போய் இசை இல்லம பாத்து இருக்கியே... சகோதரி ஒரு விடியோ வச்சி உன்ன கவுத்துடாங்க போல...

கருடன் said...

@நரி
//தல ,
இந்த வீடியோ எங்க இருந்து எடுத்த ? யூ tube விலாசம் ????? urgent urgent //

பாரு ஒரு நரி ரசிக்குது... உனக்கு தெரியல...

கருடன் said...

@நரி
//தல ,
இந்த வீடியோ எங்க இருந்து எடுத்த ? யூ tube விலாசம் ????? urgent urgent //

நரி செல்லம் ஏன்மா ஆந்த விடியோ... யாருக்குட அனுப்ப போர? அட்ரஸ் சொல்லு....

கருடன் said...

@நரி
//தல ,
இந்த வீடியோ எங்க இருந்து எடுத்த ? யூ tube விலாசம் ????? urgent urgent //

ஆமா... அது பொண்ணு பாடர மாதிரி இருக்கு.. அது உனக்கு எதுக்கு? ஒரு வேலை உன் ஆளு கிட்ட கொடுத்து உனக்கு மெய்ல் அனுப்ப சொல்ல போரியா?? ஏன் டர்லிங் நமக்கு இந்த மானம் கெட்ட பொழப்பு?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@Terrror
மச்சி நம்ம பத்தி உன்னக்கு தெரியலை ..., இப்பதான் நம்ம அருண் தலைக்கு சொன்னேன் ....,இந்த பொழப்பு அவ நல்லதுக்கு இல்ல அவ தலை எழுத்து