மருத்துவ கருவிகள் - தொடர் பதிவு - 1
மருத்துவ அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவகையில் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அது தொடர்பான ஒரு தொடர் பதிவை பதிவு செய்யலாம் என இருக்கிறேன்,
பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்களில் (SCAN சென்டர்ஸ்), " இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப்படும், ECG எடுக்கப்படும், XRAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்" என பல விளம்பரங்களை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?
இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் அறிவுக்காக இல்லாமல் ஆபத்து காலங்களுக்காகவாவது உதவும். என்னால் முடிந்த அளவு எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன். சிறிதேனும் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி.
ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, தவறி விழுந்தாலோ தற்போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வது CT SCAN மற்றும் MRI . இந்த இரண்டு கருவிகளும் உடலின் அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்து பார்க்க உதவுகிறது, இரண்டும் ஏறக்குறைய ஒரே பணியை செய்தாலும், இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தொழில்நுட்பத்திலும் கட்டணத்திலும் உள்ளது.
CT ஸ்கேன்:
COMPUTED TOMOGRAPH என்பதின் சுருக்கமே CT ஆகும். இதை 3 பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது COMPUTER அடுத்து PATIENT TABLE பிறகு GANTRY . பலர் XRAY பிலிம் - ஐ பார்த்திருப்பீர்கள், பல படங்களிலும் சிலர் வீட்டிலும் இருக்கும் கருப்பு BACKGROUND இல் எலும்புகள் தெரியும் ஒளி ஊடுருவும் படம். இந்த XRAY பிலிம் போல் பல பில்ம்களை சேர்த்தால் கிடைக்கும் ஒரு தொடர் படங்களே CT ஸ்கேன்.
CT ஸ்கேன்
நம் திரைப்படங்களில் அடுத்தடுத்த frame களின் தொடர்ச்சியே படமாக வரும் அதுபோல அடுத்தடுத்த XRAY பிலிம் களின் தொடர்ச்சியே CT ஸ்கேன் படமாக வருகிறது.ஆனால் FILM களில் RECORD செய்யாமல் கம்ப்யூட்டர் இல் பதிவு செய்து எடுக்கப்படுகிறது.
முதலில் PATIENT ஐ டேபிள் இல் படுக்க வைப்பர்.
அந்த டேபிள் இன் மேல் பாகம் GANTRY எனப்படும் பெரிய வலையத்திற்குள் பொருத்தி எந்த பாகம் ஸ்கேன் செய்ய வேண்டுமோ அந்த இடத்தை POSITION செய்வர்.
GANTRY - க்கு உள்ளே ஒரு XRAY TUBE உம் DETECTOR களும் எதிர் எதிரில் இருக்கும், ஸ்கேன் ஆரம்பித்தவுடன் இவை இரண்டும் GANTRY வளையத்தில் வேகமாய் சுற்றும்.
XRAY கதிர் வீச்சை உமிழ PATIENT இன் உடலில் ஊடுருவி DETECTOR ஐ சேரும். DETECTOR அதை கம்ப்யூட்டர் ருக்கு அனுப்பி ஒரு தெளிவான IMAGE ஐ கொடுக்கும்.
தலை, கண், மூக்கு, மூளை - CT படம்
XRAY கதிர் எலும்புகளை ஊடுருவாது அதனால் அந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்கள் ஊடுருவல் அடிப்படையில் வெள்ளை கருப்பாக மாறி தெரியும்.
டிப்ஸ்:
இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தால் XRAY TUBE சுற்றும் வேகத்தை பொறுத்து SCAN செய்யும் இடமும் மாறுகிறது. வேகமாக இயங்கும் இதயத்தை கூட ஸ்கேன் செய்ய முடியும், இதன் மூலம் ரத்த குழாய் அடைப்பையும் காணலாம். சுற்றும் வேகம் கூட கூட கட்டணமும் அதிகரிக்கும்.
எச்சரிக்கை:
கதிர்வீச்சை உபயோகிப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் செய்ய கூடாது, அங்கு வேலை செய்யும் TECHNICIAN கள் பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். சரியான அளவு உபயோகித்தால் இது மருத்துவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
கட்டி அல்லது வெட்டு - இவ்வாறுதான் தெரியும்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தானே!
அடுத்த பதிவில், MRI பற்றியும் மற்றும் CT கும் MRI கும் உள்ள வித்தியாசத்தை பற்றியும் பார்போம்.
10 comments:
அறிய தகவல்.
என்னங்க, நீங்களும் ட்ராக் மாறி பதிவு போடுறீங்க.. நல்ல informativeவா இருக்கு.. ஆனா நமக்கு தான் இந்த டாக்டர், அவங்க use பண்ணுற tools, ரத்தம் இதை எல்லாம் பார்த்தா ஒரு பயம் கலந்த...பயம்...
Continue பண்ணுங்க.. வெளில இருந்து ஆதரவு கொடுக்கிறேன் :)
ஐன்ஸ்ட்டினுக்கு அடுத்த அறிவாளி 'அனு'ன்னு BBCல நியூஸ் பாத்தீங்களா??
miss பண்ணியிருந்தா இங்க போய் பாருங்க http://shadiqah.blogspot.com/2010/06/blog-post_14.html
என் புகழ் உலகம் முழுக்க பரவுறதுக்கு முன்னாடி சீக்கிரம் என் கிட்ட autograph வாங்கிக்கங்க.. அப்புறம் கிடைக்காது..
ஊர் பூராவும் அனுவோட விளம்பரம்தானா.
அருண் நல்ல பதிவு நண்பா. keep it up
ஏன் வெங்கட் மட்டும் தான் சீரியஸ் பதிவு போடுவாரா? நாங்களும் போடுவோம்ல
@ அனு
அது என்னங்க பயம் கலந்த பயம்?
ஹி ஹி ஹி உங்களுக்கு பிடிக்காதது தான உங்க உடம்புல ஓடிட்டு இருக்கு. ஓகே ரத்தம் பிடிக்கலைனா மத்தவங்களுக்கு கொடுத்துட வேண்டியதுதானே! அதாங்க BLOOD DONATE செய்யுங்க. அட என்ன ஒரு சிந்தனை! (யாரும் இத எங்கயோ கேட்டமாதிரி இருக்குனு சொல்ல கூடாது, அன்பே சிவம் படத்துல வரும் கமல் சார் டயலாக் இது)
@ அனு
// http://shadiqah.blogspot.com/2010/06/blog-post_14.html //
அந்த பதிவ முழுக்க படிச்சிட்டு பாராட்டறேன்
@ ரஹ்மான்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரஹ்மான்
@ ரமேஷ்
ஆமாம் ரமேஷ், தலைவிக்கு நாம கட் அவுட் வைக்கணும், ஆனா அவங்களே அவுங்களுக்கு கட் அவுட் வச்சிக்கிறாங்க
வாழ்த்துக்கு நன்றி ரமேஷ்
என்ன தான் அழுது ஆர்பாட்டம் பண்ணினாலும், regular-ஆ ரத்தம் கொடுக்குற ஜாதி நான் :)
(ஊசி போடும் அழுவுறவக்கள பாத்திருப்பீங்க.. ஊசிய எடுக்கும் போது அழுவுறவக்கள பாத்திருக்கீங்களா?? எங்க டாக்டர் பாத்திருக்கார்..)
//ஏன் வெங்கட் மட்டும் தான் சீரியஸ் பதிவு போடுவாரா? நாங்களும் போடுவோம்ல//
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா...
//ஆமாம் ரமேஷ், தலைவிக்கு நாம கட் அவுட் வைக்கணும், ஆனா அவங்களே அவுங்களுக்கு கட் அவுட் வச்சிக்கிறாங்க//
என் புகழை என்னால் முடிந்த வரை பரப்பிட்டேன்.. இன்னும் பதிவுலகம் fullஆ பரப்ப வேண்டியது தொண்டர்களின் பொறுப்பு..
useful informations .thanks.
Post a Comment