Cricket Countdown....

Tuesday, September 6, 2011

Trou Aux Cerf - உறங்கும் எரிமலை

மொரீசியஸ் நாடு எரிமலை வெடிப்பால் உருவான தீவுனு ஏற்கனவே சில பதிவுகள்ல சொல்லி இருக்கேன். இந்திய பெருங்கடல்ல ஆப்பிரிக்க கண்டத்துக்கு பக்கத்துல இருக்கற சின்ன புள்ளிதான் இந்த தீவு. தீவில் ஆங்காங்க சில உறங்கும் எரிமலைகள் இருந்தாலும், மிக முக்கியமானது "TROU AUX CERF" என்னும் எரிமலைதான்.

மொரீசியசின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த உறங்கும் எரிமலை சரியான கூம்புவடிவையும், அழகான மைய பள்ளத்தையும் கொண்டு இருக்கிறது. சுமார் 1,985 அடி உயரம் உள்ள இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது. 

இப்போது உறங்கி கொண்டு இருந்தாலும் அடுத்து வரும் 1000 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வளவு ஏங்க அந்த மைய பள்ளத்துல இறங்க முடியாத அளவு அடர்த்தியான மரங்களும், நடுவுல பல அடி ஆழ சிறிய ஏரியும் அமைஞ்சி இருக்கு.

கீழ இருக்குற கூகுள் மேப்பை பாருங்க. கூகுள் மேப்பில் காணப்படும் சில அழகான இடங்களில் இந்த எரிமலையும் ஒன்று.


இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இந்த எரிமலைல இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்துல தான் என் ஆபிசும் வீடும் இருக்கு.இந்த மேப்ல மவுஸ் வெச்சி right side drag செய்தால் “+” வடிவில் ஒரு கட்டிடம் தெரியும் அதுதான் என் ஆபிஸ். இப்போ எதுக்கு இந்த விளம்பரம்னு கேக்கறீங்களா? நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க அப்படினு நான் சொல்லுறதை நீங்க நம்பனும்ல.....



39 comments:

வெளங்காதவன்™ said...

வடை!

வெளங்காதவன்™ said...

இருங்க அப்பு!
படிச்சிட்டு வாரேன்!

வெளங்காதவன்™ said...

+ வடிவில் ஒரு கட்டடத்தையும் காணோமே!

ஒரு வேளை கண்ணாடி போட்டுட்டு பாக்கணுமா?

வெளங்காதவன்™ said...

///1000 ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் ///

எரிமலை எப்படிப் பொறுக்கும்?

அதுவும் நீங்கல்லாம் அங்க இருந்தா?

வெளங்காதவன்™ said...

///நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க////

வாழுக!

#கடைக்காரரைக் காணாததால் நான் எஸ்கேப்...

Madhavan Srinivasagopalan said...

// இந்த மேப்ல மவுஸ் வெச்சி right side drag செய்தால் “+” வடிவில் ஒரு கட்டிடம் தெரியும் அதுதான் என் ஆபிஸ். //

ஆயிரம் வருஷம்லாம் வெயிட் பண்ண முடியாது..
இன்னும் ரெண்டு மூணு நாளுல வெச்சிக்கலாம்னு அதுகிட்ட சொல்லுங்க..

Madhavan Srinivasagopalan said...

// இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது. //

எம்-சீல் போதுமா.. ?
வேணும்னா ஃபேவி க்விக்கையும் சேத்துக்கலாம்.. !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடேங்கப்பா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுதான் எரிமலையா? அது பச்சபசேல்னு இருக்கறத பாத்தா அது தூங்கி பலநூறு வருசம் இருக்கும் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாங்க எல்லாம் எரிமலைல உட்கார்ந்து டீ சாப்பிடுறவங்க//////

அப்போ இட்லி தோசைலாம் அங்க நின்னுக்கிட்டு சாப்புடுவீங்களா?

செல்வா said...

எரிமலைனா என்னனா ?

செல்வா said...

//அப்போ இட்லி தோசைலாம் அங்க நின்னுக்கிட்டு சாப்புடுவீங்களா?//

இல்ல. நடந்திட்டே சாப்பிடுவாரு..

Madhavan Srinivasagopalan said...

செல்வாக்கு ரெண்டு எரிமலை பார்சேல்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
எரிமலைனா என்னனா ?
/////

எரியுற மலை எரிமலை.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இட்லிய எரிமலை கொழம்புல தொட்டுதான் சாப்புடுவாரு?

செல்வா said...

//எரியுற மலை எரிமலை.....//

அத யாரு பத்த வச்சது ?

செல்வா said...

//தமிழில் டைப் செய்ய இங்கு செல்லவும் (Copy there & Paste Here)//

நான் அங்க போகாமயே தமிழ்ல டைப் பண்ணுறேனே ? இதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?

வெளங்காதவன்™ said...

///கோமாளி செல்வா said...

//எரியுற மலை எரிமலை.....//

அத யாரு பத்த வச்சது ?/////

கேட்டாம்பாரு கேள்வி...

@பன்னி- யாரடுச்சாரோ? யாரடுச்சாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கோமாளி செல்வா said...
//எரியுற மலை எரிமலை.....//

அத யாரு பத்த வச்சது ?
//////

அய்யய்யோ நான் இல்ல......

வெளங்காதவன்™ said...

///கோமாளி செல்வா said...

//தமிழில் டைப் செய்ய இங்கு செல்லவும் (Copy there & Paste Here)//

நான் அங்க போகாமயே தமிழ்ல டைப் பண்ணுறேனே ? இதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?////

ஆமா...
பன்னி சார் அக்கவுண்ட்ல 108 ரூவாய மஞ்சத் துணில முடுஞ்சு போடணும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//தமிழில் டைப் செய்ய இங்கு செல்லவும் (Copy there & Paste Here)//

நான் அங்க போகாமயே தமிழ்ல டைப் பண்ணுறேனே ? இதுக்கு எதாச்சும் பரிகாரம் பண்ணனுமா ?
///////

ஆமா மல்லாக்க படுத்துக்கிட்டு டாகுடர் விஜய் வால்கன்னு முன்னூறு வாட்டி சொல்லனும்..........

Madhavan Srinivasagopalan said...

// ஆமா...
பன்னி சார் அக்கவுண்ட்ல 108 ரூவாய மஞ்சத் துணில முடுஞ்சு போடணும்... //

வெளங்காதவன் சொன்னா ரைட்டுதான்.. .

வெளங்காதவன்™ said...

//ஆமா மல்லாக்க படுத்துக்கிட்டு டாகுடர் விஜய் வால்கன்னு முன்னூறு வாட்டி சொல்லனும்..........///

ROFL!

Madhavan Srinivasagopalan said...

Arun Prasad POST..

வெளங்காதவன்™ said...

///Arun Prasad POST..///

அவரு போஸ்ட் போட்டுட்டு மட்டை ஆகிட்டாரு தலீவா!
#யோவ் எனக்கு அந்த + வடிவில் இருக்கும்னு சொன்ன கட்டடம் கண்ணுக்கே சிக்கலை! யாராவது பாத்தீங்களா?

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான தகவல்.படத்தை பார்த்தால் எரிமலை இருப்பது மாதிரி தெரியவே இல்லை.

Mohamed Faaique said...

நீங்க பதிவு போடுரதும் எரிமலை மாதிரியே ஆகிடுச்சு பாஸ். திடீர் திடீர்`னு வருது...

Mohamed Faaique said...

எரிமலை`னா சினிமா`ல வர்ரது மாஅதிரி நெருப்புக் குழம்புகளுடன், புகை கக்கிக் கொண்டிருக்கும்`னு பாஅர்த்தா.. இது சூப்பரா இருக்கு...

அந்த நீல நிற கட்டிடம்தானே உங்க ஆபீஸ்.

தினேஷ்குமார் said...

மாம்ஸ் சூப்பர் உங்க ஆபிஸ் ஏன் ப்ளஸ் வடிவில் இருக்கு

இந்திரா said...

எதுக்கிந்த விளம்பரம்????

எஸ்.கே said...

கொஞ்சம் ஆபத்துதான்! எப்பவேணா வெடிக்கும்னா ஒரு பயம் எப்பவும் இருக்கும்ல!

இம்சைஅரசன் பாபு.. said...

என்னா விளம்பரம் ...டீ குடிக்கிறதுக்கு விளம்பரமா ...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

கொஞ்சம் ஆபத்துதான்! எப்பவேணா வெடிக்கும்னா ஒரு பயம் எப்பவும் இருக்கும்ல!//

என்ன இருந்தாலும் நமத்துப்போன அருணை ஒன்னும் பண்ண முடியாது :)

வைகை said...

இத்தினி வருசமா தூங்கினே இருக்கே.. அதுக்கு கொசு கடிக்காதா மச்சி? :))

வைகை said...

எஸ்.கே said...
கொஞ்சம் ஆபத்துதான்! எப்பவேணா வெடிக்கும்னா ஒரு பயம் எப்பவும் இருக்கும்ல//

ஆமா எஸ்.கே... இங்க ஜெயந்த்தோட வயிற நினைச்சும் எங்களுக்கு அதே பயம்தான் :))

மாலதி said...

// இந்த எரிமலையின் மைய பள்ளம் மட்டும் 350 மீட்டர் விட்டமும், 80 மீட்டர் ஆழமும் கொண்டது. //payankarm veri nice

சீனுவாசன்.கு said...

உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?
நம்ம சைட்டுக்கு வாங்க!!
ஈஸியா தமிழ் கத்துக்கற மாதிரி
பாட்டு எழுதியிருக்கேன்!
கருத்து சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!!

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...

ஆகவே சார், 2012 (12-12-12)நமக்கு எல்லாம் ஆப்பு என்பது புரியுது சார்,

Lets do good things before that ... :)

ADMIN said...

ஃபாலோ பண்ணிட்டேன்.!