Cricket Countdown....

Monday, October 11, 2010

பரிவர்தன் - ஒரு மாற்றம்

மதிய உணவு இடைவேளையில் 8 பெண்கள் சேர்ந்தால் அங்கு வெட்டி பேச்சுக்களும், கிண்டல்களும் தான் இருக்கும். அன்றும் அந்த அலுவலகத்தில் அப்படித்தான் இருந்தது. அவர்கள் பேச்சு Times of India நடத்திய TEACH INDIA வை பற்றி திரும்ப, ஒவ்வொருவரும்  தங்கள் சிரமங்களையும், அதில் பங்கேற்க முடியாத வருத்தங்களையும் தெரிவித்தனர்.

அப்பொழுது தான் ஒரு சிறு தீப்பொறி உருவானது. “ஏன், நாம் ஒரு குழுவாக இயலாதவர்களுக்கு உதவ கூடாது?”. இந்த சிறுதீப்பொறியை அணையாமல் பெரியதாக்கும் முயற்சியில் விரைவாக செயலில் இறங்கினர்.முதலில் AID INDIA ( இது TEACH INDIA விற்கு உதவும் ஒரு NGO அமைப்பு ) விற்கு தங்கள் தொழில் சம்பந்தமான கல்வி பொருட்களையும், கற்பிக்கும் சாதனங்களையும் வழங்கினர். இவர்கள் வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு இந்தியாவில் இருந்து கொண்டே கணிதம் சொல்லித்தரும் பணியை செய்கின்றனர். அதனால், கணித்தை எவ்வாறு எளிமையாய் புரிய வைப்பது, எவ்வாறு படங்கள் கொண்டு விளக்குவது என்பது இவர்களுக்கு கைவந்த கலை. இந்த உதவியை தொடர்ந்து வழங்கி கொண்டு இருந்த போது ஒரு தேக்கம் வந்தது.


சரி, வேறு வழியில் உதவலாம் என இவர்கள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்ல அனாதை ஆசிரமம், முதியோர் இல்லம், ஏழை சிறுவர்களுக்கு படிக்க உதவி என பட்டியல் நீண்டது.

இதன் காரணமாக மேலும் சக ஆண் ஊழியர்கள் 3 பேர் உட்பட சிலர் சேர எண்ணிக்கை 15 ஐ தொட்டது

15 பேரை வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும் என்ற இவர்களின் கேள்விக்கு எதையும் சாதிக்கலாம் என இவர்கள் அலுவலகம் மூலம் பதில் வந்தது. உருவாக்கினர் ஒரு குழுவை, “பரிவர்தன்” என பெயரும் வைத்தனர். எவ்வளவு பொருத்தமான் பெயர் “பரிவர்தன்” ( परिवर्तन ) என்றால் “மாற்றம்” என்ற பொருள்.

எல்லாம் சரி, துவக்கம் ஓஹோ என இருக்க வேண்டாமா? அடித்தனர் முதல் பந்திலேயே சிக்சர். “THE BANYAN" அமைப்பை தொடர்பு கொண்டனர். இந்த அமைப்பு சென்னையில் மனநலம் குன்றியவர்களை பாதுகாத்துவருகிறது. BANYAN மூலம் மனநலம் குன்றியவர்கள் உருவாக்கிய வாழ்த்து அட்டைகள், கலை பொருட்கள் போன்றவற்றை ஒரு கண்காட்சியாக தங்கள் அலுவலகம் இருக்கும் 4 அடுக்கு மாடி கட்டிட வரவேற்பறையில் வைத்தனர்


ஆச்சர்யபடும் விதமாக, அனைத்து பொருட்களும் பகல் 2 மணிக்குள்ளேயே விற்று தீர்ந்தது. இவர்கள் முயற்சிக்கு அந்த கட்டிடத்தில் இருந்த அனைத்து அலுவலகங்களும் ஆதரவுதந்து வெற்றிக்கு உதவினர். அடுத்து அடுத்து இவர்கள் பல அனாதை விடுதிகளுக்கு உணவு வழங்குதல், படிக்க உதவி வேண்டுவோருக்கு உதவி செய்தல் என பல செயல்களை செய்து வருகின்றனர்.

வருடம்தோறும் அலுவலகம் சார்பாக கொண்டாடும் சில நிகழ்ச்சிகளை தவிர்த்து அந்த பணத்தில் பிறருக்கு உதவுகின்றனர். இது என்ன பெரிய விஷயம் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் செய்வது தானே என சிந்திக்கிறீர்களா? 

இது சிறு தீப்பொறிக்கு கிடைத்த வெற்றி!
10 பெண்களின் முயற்சியில் விளைந்த மாற்றம்!!

வாய் சொல்லில் வீரர்கள் இருக்கும் நாட்டில்,
செயலில் இறங்கி சத்தம் இல்லாமல் 
சாதித்து கொண்டு இருக்கும் இவர்கள்,
நம்மை எதுவும் கேட்கவும் இல்லை!
நம் உதவியை எதிர்பார்க்கவும் இல்லை!!

இந்த உதவிகளை இவர்கள் தங்கள் மனத்திருப்திக்காக மட்டுமே செய்துவருகிறார்கள்.

இவர்களின் இத்தகைய முயற்சிக்கு தேவை சில பாராட்டுகளும், சில உற்சாக வார்த்தைகளும்தான். அதை தருவோமே அவர்களுக்கு!

பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என உணர்த்தியுள்ள இந்த மகளிர் அமைப்புக்கு நான்  அளிப்பது

ஒரு ராயல் சல்யூட்...

நீங்கள்?

28 comments:

dheva said...

சும்மா பிறந்தோம்.. வாழ்ந்தோம் என்றில்லாமல் வாழ்வில் ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கும் அனைவருக்குமே ராயல் சல்யூட்தான் தம்பி....!

கட்டுரையை வெளியிட்டு இருக்கும் உன் ஆக்கப்பூர்வமான எண்ணமும் போற்றப்படக் கூடியதே....

வாழ்த்துக்கள் தம்பி!

எல் கே said...

nalla muyarchi.. avargalukkum pagirntha ungalukkum vaalthukkal

Anonymous said...

hats off u women!

Madhavan Srinivasagopalan said...

//பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என உணர்த்தியுள்ள இந்த மகளிர் அமைப்புக்கு நான் அளிப்பது//

Very true..

Gayathri said...

rombha sandhoshama irukku..nejamave avanga seyrathu peria vishayam..avangalukum ungalukkum vazhthukkal

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விஷயமே! உங்கள் பதிவைப் பார்த்து இன்னும் பலருக்கும் அத்தீப்பொறி பரவட்டும்! நன்றி!

Anonymous said...

அவர்களுக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
நல்ல பதிவு நண்பா! தொடர்க..

ஜீவன்பென்னி said...

avarkal menmelum uthava vazthukkal...

செல்வா said...

//ஆச்சர்யபடும் விதமாக, அனைத்து பொருட்களும் பகல் 2 மணிக்குள்ளேயே விற்று தீர்ந்தது. //

கண்டிப்பா அவர்களைப் பாராட்டியே தீரனும் அண்ணா ., அதைப் பற்றி பதிவு எழுதிய உங்களையும் பாராட்டுகிறேன் ..!!

Chitra said...

ROYAL SALUTE!!!

மங்குனி அமைச்சர் said...

ஒரு ராயல் சல்யூட்...///

டபுள் சல்யூட்

Unknown said...

பரிவர்தன் சார்பாக, மிகவும் நன்றி அருண் பிரசாத் அவர்களே!தங்களுடைய எழுத்துகள் எங்களை மேலும் உற்சாகப்படுத்துகின்றன. இச்சிறிய அமைப்பிற்கு தங்களது வாழ்த்துக்கள் மேலும் நம்பிக்கை ஊட்டுகின்றன! நம்மில் பலர் பிறர்க்கு உதவி செய்ய விரும்பினாலும், அதற்கென்று நேரம் ஒதுக்க முடியாது இருக்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக முன்வருவர். அதற்கு ஒரு உதாரணமே "banyan" விற்பனை.

இம்சைஅரசன் பாபு.. said...

அவர்கள் மேலும் பல நல்ல காரியங்கள் செய்ய வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

//பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும்//
உண்மை உண்மை. அந்த அமைப்பிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நாமும் இதுபோல் உதவ முயற்சிப்போம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு ராயல் சல்யூட்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!ROYAL SALUTE !!!!!!!

Unknown said...

me the 17....

Valuthukkal..

annaivarukkum..

eppathivai pagirnthu konda

arun annavukum...

thodarttum ungal payanam..

NaSo said...

சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்!!

சௌந்தர் said...

பிறருக்கு உதவ நாம் அன்னை தெரேசாவாகவோ, மகாத்மாகாந்தியாகவோ இருக்க தேவையில்லை, மனம் இருந்தால் போதும்/////

ரொம்ப சரியா சொன்னிங்க....


ஒரு ராயல் சல்யூட்...

நீங்கள்?/////

நானும் தான்

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

வாழ்த்துக்கள்..!
அருமையான பகிர்வு..

சுசி said...

எனது சல்யூட்டும் பாராட்டுக்களும்.

பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி அருண்.

Unknown said...

என்னுடைய சல்யூட்டும் அருண் ...

வெங்கட் said...

நல்ல பதிவு அருண்.,

இதுவரை இப்படி ஒரு அமைப்பு
செயல்படுதுன்னே என்னை போல்
பலருக்கு தெரியாது..

தெரிய வெச்சதுக்கு நன்றி..

அரசாங்க செலவில் உதவிகள்
வழங்குவதற்கே பல லட்ச ரூபாய்
செலவில் விளம்பரங்கள் பண்ற
அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
பரிவர்த்தன் அமைப்பின் செயல்
நிச்சயம் பாராட்டபட வேண்டும்..!!

ராயல் சல்யூட் to பரிவர்த்தன்..!!

ஜெயந்தி said...

நிச்சயம் இவர்கள் செயல் பாராட்டுக்குரியது.

ப்ரியமுடன் வசந்த் said...

பரிவர்தன்

நல்ல மாற்றம்...

அமைப்புக்கு பாராட்டுக்கள்...!

சசிகுமார் said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பா

அருண் பிரசாத் said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

ஜில்தண்ணி said...

royal salute to those womens