பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர்களை குளிப்பாட்டி, ரெடி செய்து, சாப்பிட வைத்து, புத்தகங்களை சரிபார்த்து பள்ளி பேருந்துக்கோ அல்லது பள்ளி வாசலிலோ அவர்களை விடும்வரை ஓட வேண்டும்.
ஒருகட்டத்தில் இது சுகமானதாய் மாறி, பலர் விருப்பத்துடன் ஓடுவதும் உண்டு. ஆனால், முதல் முதல் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களின் கவலை வேறு விதம்.....
இத்தனை நாள் தன் பார்வையிலேயே வளர்ந்த பிள்ளை சில மணி நேரங்கள் தன்னை பிரிந்து இருக்குமா?
அங்கு மற்ற குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் நன்றாக பழகுமா?
தன்னை காணாமல் தவிக்குமா?
அடம் செய்து பிடிவாதம் செய்யுமா?
மற்ற குழந்தைகளிடம் அடிவாங்கி அழாமல் பார்த்துகொள்வார்களா?
அடம் செய்வதால் ஆசிரியர்கள் குழந்தை மேல் கோபப்படுவார்களா?
இப்படி பல கேள்விகள் எழும்....
குழந்தை அழுமா என நினைத்து அழும் பெற்றோர்கள் பலர்...
ஆனால், அந்த குழந்தை முதுகில் சிறிய பையை மாட்டி கொண்டும், சட்டையில் ஒரு கர்சிப் குத்திக்கொண்டும், ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை மாட்டி கொண்டும் பெற்றோருக்கு முத்தம் தந்து டாட்டா காட்டி பள்ளிக்கு செல்லும் அழகை பார்க்க, இரு கண்கள் போதாது.
ஆம்,
என் மகள் ஷம்ஹித்தா இன்று முதல் பள்ளிக்கு போகிறாள்! நாங்கள் இன்று முதல் எங்கள் ஓட்டத்தை ஆரம்பிக்கிறோம்.... என்ன தான் 3 மணி நேரமே என்றாலும், PlaySchool தான் என்றாலும் மனதில் ஒரு வித பயமா தயக்கமா சந்தோசமா என என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு உருண்டு கொண்டு இருக்கிறது. பார்போம்.... எப்படி சமாளிக்கிறாள் என்று
ஆனால், காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட....
மம்மி டாட்டா... நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்....
66 comments:
பாப்பா டாடாட நல்ல படிங்க
எல்லாப் பெற்றோர்களும் ஒரே மாதிரிதான்
குட்டிப்பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களும்! கவலையேபடாதீங்க, இது எல்லா பெற்றோருக்கும் இருக்கும் பயம் தான், பசங்க சூப்பரா சமாளிப்பாங்க!
குட்டி பாப்பா
சமத்தா விளையாடிவிட்டு
வரணும்.
யாரவது ஏதும் பேசின கிள்ளிவிட்டு வந்துரு
நாங்க பாத்துகிறோம்
சோ ஸ்வீட்...
Baby அப்பா அருண் மாதிரி மக்கா இல்லாம நல்லா படி. all the best
யாரவது ஏதும் பேசின கிள்ளிவிட்டு வந்துரு
நாங்க பாத்துகிறோம்
சோ ஸ்வீட்...
குட்டி பாப்பா
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
பள்ளி செல்லும் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்!
ஒரு பாசமுள்ள, பொறுப்பான அப்பாவின் கவலைதான் இது..!!என்ன பண்றது..?
இதெல்லாம் பாத்தா ஷம்ஹித்தா எப்டி கலெக்டரு,டாக்டரு,என்ஜினியரு எல்லாம் ஆவறது..? :-)))
என்னோட பாப்பாவுக்கு 3 மாசம்தான் ஆவுது..!!இத படிச்சவுடன் எனக்கு இப்பவே கவலையா இருக்கு..!! நல்ல பதிவு..!!
மிக்க மகிழ்ச்சி!! :)
குழந்தைக்கு வாழ்த்துக்கள்!
என்னை 1வது சேர்க்கிறப்போ முதல்நாள், என் அப்பா பள்ளியில் விட்டுட்டு கிளம்பறப்போ நான் அழுதது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு!
//
TERROR-PANDIYAN(VAS) said...
மிக்க மகிழ்ச்சி!! :)//
பாப்பா ஸ்கூல் போறதுக்கா? இல்லை அருண் பின்னாடியே ஓடுறதுக்கா? எதுக்கு மகிழ்ச்சி! தெளிவா சொல்லு..
கவலையே படாதீங்க குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாகவே புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.
நடு ரோட்டிலயா கொழந்தய கூட்டிட்டுப் போவாங்க???
சமத்து பொண்ணு..... நல்லா வருவா!
நீங்க பயப்படாதீங்க/கவலைப்படாதீங்க....... என் பொண்ணு முதல் நாள் பள்ளிக்கு போனப்ப, அவள் சிரித்து கொண்டு டாட்டா சொல்லிட்டு போய்ட்டா.... உட்கார்ந்து அழுதது நான்தான்... அவ்வ்வ்....அவளோட டீச்சர், என்னை பார்த்துட்டு, கேலியா சொன்ன பிறகுதான், எனக்கு சிரிப்பே வந்தது.
எக்ஸாட்லி தம்பி.. வாழ்க்கை ஓடிட்டுதான் இருக்க்கு.....
குட்டிம்மாவுக்கு வாழ்த்துக்கள்...! (புள்ளைய நீ டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி....!!!)
சந்தோசமா இருக்கு அண்ணா .!!
உங்க மகளுக்கு வாழ்த்துக்கள் ..!!
அருமை நண்பரே
//குட்டிப்பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களும்! கவலையேபடாதீங்க, இது எல்லா பெற்றோருக்கும் இருக்கும் பயம் தான், பசங்க சூப்பரா சமாளிப்பாங்க! //
அதே..
@ செளந்தர்
நன்றிப்பா
@ LK
//எல்லாப் பெற்றோர்களும் ஒரே மாதிரிதான்//
உண்மைதான் LK. நாம் பெற்றோராக மாறும் போதுதான் அந்த வலி தெரிகிறது
@ பன்னிக்குட்டி ராம்சாமி
//குட்டிப்பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களும்! கவலையேபடாதீங்க, இது எல்லா பெற்றோருக்கும் இருக்கும் பயம் தான், பசங்க சூப்பரா சமாளிப்பாங்க!//
மூளை அதை சொன்னாலும் மனசு ஏற்கமறுக்கிறது பாஸ்
@ siva
//குட்டி பாப்பா
சமத்தா விளையாடிவிட்டு
வரணும்.
யாரவது ஏதும் பேசின கிள்ளிவிட்டு வந்துரு
நாங்க பாத்துகிறோம்
சோ ஸ்வீட்...//
எங்க கிளிட்டு வந்தானு பார்த்துக்க போறீங்களா? நன்றி சிவா
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//Baby அப்பா அருண் மாதிரி மக்கா இல்லாம நல்லா படி. all the best//
நல்லவேளை உங்களை மாதிரி வர சொல்லலை அதுவரைக்கும் சந்தோசம்
@ மங்குனி அமைசர்
//பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி அமைச்சரே!
@ நாகராஜசோழன் MA
//பள்ளி செல்லும் பிள்ளைக்கு வாழ்த்துக்கள்!//
நீங்கதான் பக்கா அரசியல்வாதி... வாழ்த்துக்கு நன்றி
@ சேலம் தேவா
//என்னோட பாப்பாவுக்கு 3 மாசம்தான் ஆவுது..!!இத படிச்சவுடன் எனக்கு இப்பவே கவலையா இருக்கு..!! //
வாழ்த்துக்கு நன்றி தேவா!
உங்க மனைவிகிட்ட சொல்லி பாருங்க, அவங்க இன்னும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க
@ TERROR-PANDIYAN(VAS)
// மிக்க மகிழ்ச்சி!! :)//
கொண்ணியா... நான் ஃபீல் பண்ணி பதிவு போட்டா உங்களுக்கு மகிழ்ச்சியா?
@ எஸ்.கே said...
//என்னை 1வது சேர்க்கிறப்போ முதல்நாள், என் அப்பா பள்ளியில் விட்டுட்டு கிளம்பறப்போ நான் அழுதது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு!//
வாழ்த்துக்கு நன்றி எஸ் கே!
என் பழைய நினைவுகளையும் இந்த நிகழ்ச்சி கிளிறிடுச்சி பாஸ்
@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
//கவலையே படாதீங்க குழந்தைகள் நாம் நினைப்பதைவிட அதிகமாகவே புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்.//
உண்மை. நாமதான் கவலைபடுறோம் அவங்க சுலபமா சமாளிக்கறாங்க. வாழ்த்துக்கு நன்றிங்க
@ YOGA.S Fr
//நடு ரோட்டிலயா கொழந்தய கூட்டிட்டுப் போவாங்க???//
சாரி பாஸ் அது நடுரோடு இல்லை. பார்க்கிங் லேன். சும்மா, பாப்பாவுக்கு பேக் வாங்கிட்டு வீட்டுக்கு வரும் போது எடுத்த போட்டோ அது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
@ சித்ரா
//உட்கார்ந்து அழுதது நான்தான்... அவ்வ்வ்//
இங்கயும் அதே கதைதான். அவங்க மம்மி நேத்துல இருந்து ஒரே அழுகாட்சி. வாழ்த்துக்கு நன்றிங்க
@ தேவா
//எக்ஸாட்லி தம்பி.. வாழ்க்கை ஓடிட்டுதான் இருக்க்கு.....
குட்டிம்மாவுக்கு வாழ்த்துக்கள்...! (புள்ளைய நீ டார்ச்சர் பண்ணாம இருந்தா சரி....!!!)//
நன்றி அண்ணா. கண்டிப்பா உங்க கவிதைய படிச்சி காட்ட மாட்டேன்
நன்றி செல்வா, சசிகுமார்
ஒரு அப்பாவா சின்ன பதட்டத்த அழகா பதிவு பண்ணிருக்க அருண் :)
இப்பத்திய புள்ளைங்க ரொம்ப வெவரமானவங்க.. அதனால, பயப்படாம தைரியமா இருங்க..
வாழ்த்துக்கள் ஷம்ஹித்தா
Same Blood!
என் முதல் பெண் ஸ்கூலுக்குப் போகும்போது நான் ஒரு ஐடியா செய்தேன். அதன்படி, ஸ்கூல் திறப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பே அந்த ஸ்கூல் பக்கம் கூட்டி சென்று, "இது தான் நீ வரப் போற ஸ்கூல்" என்று அறிமுகப் படுத்தி ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டேன். பள்ளி செல்லும் நாள் அன்று அவளும், நானும், என் மனைவியும் துளி கவலை இல்லாமல் இருந்தோம்.
அவள் ஸ்கூலுக்குப் போவதைப் பார்த்து, என் இரண்டாம் மகளும் பள்ளிக்கு செல்லத் தன்னை தயார் படுத்திக் கொண்டதால், அவளைப் பற்றியும் கவலை இல்லாமல் இருந்தோம்.
மிக்க மகிழ்ச்சி அருண் .உங்களை போன்றே உங்கள் குழந்தையும் நன்கு கற்று நல்ல நிலைமைக்கு வருவாள்.
எல்லோருக்கும் இருக்கும் கவலை தான்.குழந்தை பருவமே இந்த உலகில் சிறந்த பருவம் .....
@அருண்
//உண்மைதான் LK. நாம் பெற்றோராக மாறும் போதுதான் அந்த வலி தெரிகிறது//
நானும் காலைல இருந்து பாக்கறேன் ஓவர படம் போட்டு.... இவரு புள்ளை பாடர்க்கு அனுப்பறாரு... வலி, எலி கதை சொல்லிட்டு.... உன் புள்ள ஊரையே வித்துட்டு வரும்.
appaava maathiri makkaa illaama nalla padimaa kutty..
@சிவா
//யாரவது ஏதும் பேசின கிள்ளிவிட்டு வந்துரு
நாங்க பாத்துகிறோம்
சோ ஸ்வீட்...//
இது அட்வைஸ்!! எதாவது பிரச்சனை வந்தா ரமேஷ் பூச்சாண்டி கிட்ட பிடிச்சி கொடுத்துடலாம்...
@ரமேஷ்
//பாப்பா ஸ்கூல் போறதுக்கா? இல்லை அருண் பின்னாடியே ஓடுறதுக்கா? எதுக்கு மகிழ்ச்சி! தெளிவா சொல்லு..//
தெளிவா சொன்னா மட்டும் உனக்கு புரியுமா?? அது சரி நேத்து பஸ் ஸ்டாண்டுல சூண்டல் வித்த பையன் கிட்ட மாமுல் கேட்டு அடி வாங்கினது நீதான?
பாப்பா வீட்டுக்கு வரும்போது ஒரு போட்டா எடுச்சு அனுப்புங்க.. அப்பத்தான் பாப்பாவோட முக தரிசனமும் கெடைக்கும் எங்களுக்கு..
-- nice.
இந்த சூழல் நம்மிடம் கடந்த 15 வருடங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஆணிவேரை பிடுங்கி எடுக்காமல் உட்கார்ந்து கவலைபட்டுக்கொண்டிருக்கிறோம் அல்லது குழந்தையின் பகட்டு காட்சியை ரசிக்கிறோம். குழந்தைகள் சமாளித்துவிடுவார்கள் என்பதெல்லாம் பொய். எதனால் அவர்கள் பலவிதங்களில் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். தனியாரின் பண வேட்டைக்காக ஆரம்பமனதே இந்த மழலை கல்வி. இது தாயுடன் மட்டுமே நடக்க வேண்டும். இதற்கு ஊக்கமளிக்கும் பள்ளிகளும் சென்னையில் உண்டு. அனால் அது எல்லோருக்கும் எட்டாக்கனி. வருடத்துக்கு 1 லட்சம் வரை செலவாகும்.
இந்த சூழல் நம்மிடம் கடந்த 15 வருடங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஆணிவேரை பிடுங்கி எடுக்காமல் உட்கார்ந்து கவலைபட்டுக்கொண்டிருக்கிறோம் அல்லது குழந்தையின் பகட்டு காட்சியை ரசிக்கிறோம். குழந்தைகள் சமாளித்துவிடுவார்கள் என்பதெல்லாம் பொய். எதனால் அவர்கள் பலவிதங்களில் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். தனியாரின் பண வேட்டைக்காக ஆரம்பமனதே இந்த மழலை கல்வி. இது தாயுடன் மட்டுமே நடக்க வேண்டும். இதற்கு ஊக்கமளிக்கும் பள்ளிகளும் சென்னையில் உண்டு. அனால் அது எல்லோருக்கும் எட்டாக்கனி. வருடத்துக்கு 1 லட்சம் வரை செலவாகும்.
yay! My daughter also started school today.
Best wishes to your little one Shamhitha.
@ பாலாஜிசரவணா
//ஒரு அப்பாவா சின்ன பதட்டத்த அழகா பதிவு பண்ணிருக்க அருண் :)//
நன்றிங்க... சாரி உங்க கமெண்ட் ஸ்பேம்ல போய்டுச்சு அதான் கவனிக்கலை
@ அமைதிச்சாரல்
//இப்பத்திய புள்ளைங்க ரொம்ப வெவரமானவங்க.. அதனால, பயப்படாம தைரியமா இருங்க.//
:) நன்றி பாஸ்
@ VELU.G
//வாழ்த்துக்கள் ஷம்ஹித்தா//
நன்றி Velu
@ பெ சொ வி
//"இது தான் நீ வரப் போற ஸ்கூல்" என்று அறிமுகப் படுத்தி ஒரு ஆர்வத்தை தூண்டி விட்டேன்.//
உண்மைய சொல்லுங்க இது நீங்கதந்த ஐடியாவா இல்லை உங்க மனவி சொன்னதா?
@ TERROR-PANDIYAN(VAS)
@ அருண்
//
//உண்மைதான் LK. நாம் பெற்றோராக மாறும் போதுதான் அந்த வலி தெரிகிறது//
நானும் காலைல இருந்து பாக்கறேன் ஓவர படம் போட்டு.... இவரு புள்ளை பாடர்க்கு அனுப்பறாரு... வலி, எலி கதை சொல்லிட்டு.... உன் புள்ள ஊரையே வித்துட்டு வரும்.//
என்னதான் ஊருக்கே பெரிய அறிவாளியாக இருந்தாலும் பெற்றோருக்கு பிள்ளைகள் எப்பவும் குழந்தைதான்யா. அனுபவிச்சாதான் தெரியும், நான் உங்களையும் பார்க்கத்தான போறேன்
@ இம்சைஅரசன் பாபு.. said...
//மிக்க மகிழ்ச்சி அருண் .உங்களை போன்றே உங்கள் குழந்தையும் நன்கு கற்று நல்ல நிலைமைக்கு வருவாள்.
எல்லோருக்கும் இருக்கும் கவலை தான்.குழந்தை பருவமே இந்த உலகில் சிறந்த பருவம் ....//
வாழ்த்துக்கு நன்றி பாபு. அவ என்னைவிட பெரிய ஆளா வருவா.
@ வெறும்பய
// appaava maathiri makkaa illaama nalla padimaa kutty..//
Thanks ... grrrrrrrrr
@ Madhavan
//பாப்பா வீட்டுக்கு வரும்போது ஒரு போட்டா எடுச்சு அனுப்புங்க.. அப்பத்தான் பாப்பாவோட முக தரிசனமும் கெடைக்கும் எங்களுக்கு.//
கண்டிப்பா போடுறேன் சார்
@ Deepa
//yay! My daughter also started school today.
Best wishes to your little one Shamhitha.//
Thanks Deepa.
@ Suresh D
உங்கள் முதல் வருகைக்கு நன்றி சுரேஷ். நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் காலம் மாறிவிட்டது பாஸ். இது போட்டி நிறைந்த உலகம். அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டார்கள். நாமும் ஓடித்தான் ஆகவேண்டும் அதை விடுத்து. ஆணி வேரை பிடுங்க வேண்டும் என்று சொல்வது எல்லாம் வெட்டி பேச்சு.
உதாரணமாக, நான் பள்ளி சேர்ந்தது 5 வயதில். ஆனால், இப்போது 5 வயது குழந்தை Rhymes சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். நாம் பாடங்களை திணிக்க போவது இல்லை, எனக்கு கிடைக்காத வாய்ப்பை அவர்களுக்கு தருகிறோம். படிப்பதும் படிக்காததும் அவர்கள் விருப்பம். நான் அவர்களை கட்டாயபடுத்த மாட்டேன். இதில் தெளிவாய் இருக்கிறேன்.
அடுத்து, நான் இருப்பது மொரீசியஸ்ல். என் மகள் எங்கள் இருவரை மட்டுமே உலகமா எண்ணி இருக்கிறாள். அவளுக்கு மற்ற குழந்தைகளுடன் பழக ஒரு வாய்ப்பாகவே இதை பார்க்கிறேன்.
கருத்து மற்றும் புரிதலுக்கு நன்றி பாஸ்
குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துகள்.
//பார்போம்.... எப்படி சமாளிக்கிறாள் என்று
ha ha ha parunga unga wife yeppadi samalikka porangannu..kulandhainga innoru kulandhaiya partha...
yen inamada nee... appadinnu ottippanga...
ammakkaloda nilamaidhan konja nalaikku kastama irukkum...
வழக்கமா அப்பாக்களுக்கு வரும் கவலை .............விடுங்கக் சார் நாடு ரொம்ப முன்னேறி விட்டது. எல்லாம் சமர்த்த இருப்பாங்க. நல்ல பிரன்ஸ் கிடைச்ச மகிழ்ச்சியில்
சந்தோஷம் அருண்.. ஷம்ஹித்தாவுக்கு வாழ்த்துக்கள்..
//காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட...//
உண்மை!!! :(
Wish her the very best !!
மருமகளுக்கு வாழ்த்துகள்!
ரொம்ப சந்தோசம்..
உங்க குட்டிப் பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்..
@ மாதேவி
//குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துகள்.//
நன்றிங்க
@ பிரியமுடன் ரமேஷ்
// ha ha ha parunga unga wife yeppadi samalikka porangannu..kulandhainga innoru kulandhaiya partha...
yen inamada nee... appadinnu ottippanga...
ammakkaloda nilamaidhan konja nalaikku kastama irukkum...//
உண்மை ரமெஷ்.
@ நிலாமதி
//வழக்கமா அப்பாக்களுக்கு வரும் கவலை .............விடுங்கக் சார் நாடு ரொம்ப முன்னேறி விட்டது. எல்லாம் சமர்த்த இருப்பாங்க. நல்ல பிரன்ஸ் கிடைச்ச மகிழ்ச்சியில்//
அந்த தைரியத்தில்தான் இருக்கிறேன்
@ அனு
//சந்தோஷம் அருண்.. ஷம்ஹித்தாவுக்கு வாழ்த்துக்கள்..
//காலம் மிக வேகமாய்தான் ஓடுகிறது! நம்மைவிட...//
உண்மை!!! :(//
வாழ்த்துக்கு நன்றி அனு!
ஆமாம், அதுக்குள்ள ஸ்கூலுக்கு போற அளவுக்கு வளர்ந்துட்டாங்க
@ Anonymous
//Wish her the very best !!//
Thank you
@ ப்ரியமுடன் வசந்த்
// மருமகளுக்கு வாழ்த்துகள்!//
ரைட்டு மாப்ஸ்! பொண்ணுகிட்ட சொல்லிடறேன் :)
@ பதிவுலகில் பாபு
//ரொம்ப சந்தோசம்..
உங்க குட்டிப் பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்..//
நன்றி பாபு
@ All
ஷம்ஹித்தா நேற்று பள்ளியில் நன்றாக விளையாடி இருக்கிறாள். ஒரு மணி நேரம் கழித்துதான் எங்களை தேடி அழுது இருக்கிறாள்.
இன்று எப்படியோ?
அடிச்சான் பாரு 50....
(ஒரு வேளை 50 இல்லையோ... அவ்வ்வ்வ்)
50
டாட்டா செல்லம்.. சமத்தா விளையாடிட்டு வாங்க..
அழகான பெயர் அருண்..
//மனதில் ஒரு வித பயமா தயக்கமா சந்தோசமா என என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு உருண்டு கொண்டு இருக்கிறது.//
ஹிஹிஹி.. நானும் அனுபவித்தேன்.. :))))
குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்..
பயப்படாதீங்க அருண்..
குட்டி பாப்பா நல்லாவே படிப்பா..
அவ அவங்க அம்மா மாதிரின்னு
சொன்னீங்கல்ல... :)
முதன் முதலாக நம்மள சிலமணி நேரம் பிரிஞ்சி போறப்ப அப்படித்தான் இருக்கும்.
@ டெரர்
//அடிச்சான் பாரு 50....
(ஒரு வேளை 50 இல்லையோ... அவ்வ்வ்வ்)//
வாங்க கரெக்டா 50 ய தப்பா போட்டு சமாளிச்சிட்டீங்க
@ சுசி
//டாட்டா செல்லம்.. சமத்தா விளையாடிட்டு வாங்க..
அழகான பெயர் அருண்..//
நன்றி சுசி
@ வெங்கட்
//குட்டி பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்..
பயப்படாதீங்க அருண்..
குட்டி பாப்பா நல்லாவே படிப்பா..
அவ அவங்க அம்மா மாதிரின்னு
சொன்னீங்கல்ல... :)//
நன்றி வெங்கட். ஆமாங்க, நீங்க உங்க பையன் அவங்க அம்மா மாதிரினு சொன்னப்போ தான் நானும் சொன்னேன்
@ ஜெயந்தி
// முதன் முதலாக நம்மள சிலமணி நேரம் பிரிஞ்சி போறப்ப அப்படித்தான் இருக்கும்.//
உண்மைதாங்க... சமாளிச்சுடுவானு நினைக்கிறேன்
ok paapa unga daady mathri illama nala padichu oru doctor aaga practice panni, engineering mudichu, collector aayudanum ok va............
my best wishes to kutti ma.
செல்ல மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பழகிக்குங்க.. :) இனி ஸ்கூல்ல இருந்து வர பஞ்சாயத்தெல்லாம் கவனிக்கனும்ல?
சம்ஹித்தாவிற்கு வாழ்த்துக்கள் :-))
நானும் இப்படியே தான் பீல் பண்ணேன்..
SUPER..SUPER..SUPER..SUPER
குட்டிப்பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களும்
மக்களே VKS தலைவி அனுவின் பதிவு பரிசல்காரன் தளத்தில் வந்துள்ளது....
இங்க போய் பாருங்க
கம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு
http://www.parisalkaaran.com/2010/10/by.html
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்
பாப்பா: daddy bye bye see you(கடவுளே ஜாலி இனி எனக்கு அப்பா இம்சை பகல்ல கொறஞ்சிடும்)
@ வினு
//ok paapa unga daady mathri illama nala padichu oru doctor aaga practice panni, engineering mudichu, collector aayudanum ok va............//
கண்டிப்பா என்னை விட நல்லா வருவா... இதுக்காக என்னை இவ்வள்வு வாரிட்டீங்க்ளே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ மகேஷ் : ரசிகன்
//செல்ல மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
பழகிக்குங்க.. :) இனி ஸ்கூல்ல இருந்து வர பஞ்சாயத்தெல்லாம் கவனிக்கனும்ல?//
நன்றி பாஸ். இது வேற இருக்கா?
@ Ananthi
// சம்ஹித்தாவிற்கு வாழ்த்துக்கள் :-))
நானும் இப்படியே தான் பீல் பண்ணேன்..//
நன்றி ஆனந்தி
@ ஆர்.கே.சதீஷ்குமார்
//குட்டிப்பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்களும்//
நன்றி சதீஷ்
@ தியாவின் பேனா
//பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிங்க
@ பிரியா
//பாப்பா: daddy bye bye see you(கடவுளே ஜாலி இனி எனக்கு அப்பா இம்சை பகல்ல கொறஞ்சிடும்)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நீங்களுமா... மீ பாவம்...
பாப்பா நீ ஸ்கூல்லுக்கு போறியா ....,நல்லா விளையாடு ...,அப்புறம் படிச்சிக்கலாம் ..,
வாழ்த்துக்கள்
@அருண்
யோவ் சும்மா பாப்பாவை பயம் புடுத்தாதே....,காலைல சீக்கிரமா எழுப்பி பாப்பாவை கடுபேத்தாதே ...,பாப்பா எப்போ தூங்கி எழுந்திருகுதோ அது வரை நீ சும்மா இரு ..,இது விளையாடுற வயசு ........,
ஷம்ஹிதாவுக்கு நல்வாழ்த்துக்கள்!
அருண், இப்ப பாப்பா சமர்த்தா ஸ்கூல் போய் வறாங்களா?
இந்த காலத்துப் பிள்ளைங்க எல்லாத்தையும் சமாளிக்கிற புத்திக்கூர்மையோடவே பிறக்கிறாங்க! உங்க பொண்ணும் சமாளிச்சி சாதிச்சுக் காட்டுவா பாருங்க அருண்!
Post a Comment