Cricket Countdown....

Tuesday, October 26, 2010

சில்லுனு ஒரு பாராசூட் பயணம்...

என்னுடைய சுவாரசிய பயணங்களின் வரிசையில் இந்த முறை ஒரு வித்தியாசமான பயணம். இந்த முறை பேருந்திலோ இரயிலிலோ அல்ல. வித்தியாசமாக பாராசூட் பயணம் அதுவும் காமெடி + அபாயத்தில் முடிந்த பயணம். சரி, பயணத்திற்கு கிளம்புவோம்....

சென்னை நண்பர் ஒருவர் ஒரு வார பயணமாக மொரீசியஸ் வந்து இருந்தார். அவருடன் சேர்ந்து நாங்கள் ஒரு 6 பேர் குழுவாக ஊர் சுற்ற கிளம்பினோம். சரி வெகுநாள் ஆசையான பாராசூட் பயணத்தை அனுபவிக்கலாம் என்று  ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.

அங்கு அவர் பாராசூட்டில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்தார். அங்கு சென்ற பின் அவ்ர் எங்களை ஒரு SPEED BOAT - ல் கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார். அந்த மேடை கடல் நடுவில் தண்ணீரில் இருந்ததால் போதையில் ஆடுவது போல ஆடியது. (மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). பின் ஒவ்வொருவராக பேலன்ஸ் செய்து நின்று ஸ்பெஷல் COSTUME மாட்டிகொண்டோம்.

Special Costume ல் நாந்தாங்கோ....

பாராசூட்டில் இரண்டு இரண்டு பேராக பயணம் செய்வதாக முடிவானது. நானும் சென்னை நண்பரும் ஒன்றாக செல்ல முடிவெடுத்தோம். ஏனென்றால் அவர் கொஞ்சம் வெயிட்டான ஆள். நான் முன்பும் அவர் எனக்கு பின்னாலும் அமர, எங்கள் காஸ்டியூமில் இருந்த கொக்கியை பாராசூட்டில் இணைத்தனர். பாராசூட்டை ஒரு நீண்ட கயிற்றில் கட்டி அதன் மறுமுனையை SPEED BOAT-ல் கட்டினர்.

நல்லாதான் கிளம்புச்சி, வலது பக்கம் ஒரு கிமீட்டரும், இடது பாகம் ஒரு கிமீட்டரும் சென்று வந்தோம். இதில் ஒரு மேட்டர் என்னன்னா? மற்றவர்களை அழைத்து போன போது, கடல் நடுவில் BOAT-ஐ நிறுத்தி பாராசூட்டை தண்ணீரில் இறக்கினர் பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.

Take Off - சாகசம் ஆரம்பம்

மேடைக்கு மேலே வந்தவுடன், பாராசூட் கயிறை இழுத்து இழுத்து விட வேண்டும். அப்பொழுது தான் பாராசூட் சரியாக மேடையில் இறங்கும். எங்களுக்கு இருந்த கடுப்பில் நாங்கள் கயிறை இழுக்கவில்லை. பேலன்ஸ் தவறியதால் மீண்டும் எங்களை ஒரு ரவுண்ட் கொண்டு சென்று மேடைக்கு மேல் நிறுத்தினர். இப்பொழுதும் எங்களை கடலில் இறக்காததால் மீண்டும் நான் கயிறை இழுக்கவில்லை. இப்படியே மூன்று முறை அவரும் எங்களை இறக்கவில்லை, நாங்களும் கயிறை இழுக்கவில்லை.

நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.

தண்ணீரில் Landing

கூட இருக்கற HELPERS கயிறை பிடிச்சி எங்களை இழுக்க ஆரம்பிச்சாங்க. நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். பாராசூட் எங்களை ஒருபக்கம் மேல இழுக்க, மறுபக்கம்  எங்களை HELPERS மேடைக்கு இழுக்க ஜாலியாதான் இருந்தது.

அப்போ பின்னாடி இருந்த நம்ம நண்பருக்கு திடீருனு ஒரு சந்தேகம், என்னை கேட்டார். “அருண், உங்களுக்கு நீச்சல் தெரியுமா?”. அடங்கொக்கமொக்கா, இப்போதான் ஞாபகத்துக்கு வருது அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே “காப்பாதுங்க”னு என மேடையில் இருந்த என் பிரண்ட்ஸை பார்த்து கையகாட்டினா, அவங்க ஏதோ நான் ஏரோபிளேன்ல போக போற மாதிரி டாட்டா காட்டுறாங்க. என்ன வில்லத்தனம்? எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை பார்த்த என் நண்பர் என் தலையில் தட்டு, “ங்கொய்யால, அதான் தண்ணீர்ல மிதக்க Special Costume ல Life jacketஉம் போட்டு இருக்கியே என்ன பயம்?” ன்னு கேட்ட பிறகுதான், “ஆமாம்ல” என உயிர் வந்தது

அப்பாடி! ஒரு வழியா கரை ஏறியாச்சு

ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி  உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம். நல்ல வேளை பணம், கேமரா போன்றவற்றை மேடையிலேயே வைத்துவிட்டு போனதால் தப்பிச்சது. 
 
நனைந்த கோழி - நான் தான்

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....


53 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கொயால.. அப்படியே கடல்ல இறக்கி விட்டிருக்கணும்... மெதுவா நீந்தி வான்னு சொல்லிட்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்கு நீச்சல் தெரியாம மேல போகபோறேன்னு தெரிஞ்சிதான் டாட்டா காட்டுறாங்களோ! நான் கத்த ஆரம்பித்ததை//

ஹ ஹ ஹா

போருக்கு போறமாதிரி கவசமெல்லாம் மாட்டி பாட்ஷா ரஜினி ஸ்டைல்ல கிளம்புன ஆளு

கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்ற வடிவேலு ஸ்டைல்ல சிரிச்சுகிட்டே திரும்பி வர்றார்யா ..

சுவாரஸ்யமான பதிவு மாம்ஸ்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட நாந்தேன் மொத ஆளா... அப்போ எனக்கு தான் TICTAC

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

கொயால.. அப்படியே கடல்ல இறக்கி விட்டிருக்கணும்... மெதுவா நீந்தி வான்னு சொல்லிட்டு.///

நான் சொல்லவேண்டிய டயலாக் நீங்க சொல்லிட்டீங்க

மங்குனி அமைச்சர் said...

அடப்பாவிகளா , ஜஸ்ட்டு மிஸ்ஸு???? சே..... வாய்ப்ப தவற விட்டானுகளே ... சரி ..சரி அருணு இனி பாராசூட் ல போகும் போது என்னைய ஹெல்ப்புக்கு கூட்டிட்டு போ

எல் கே said...

வயசான காலத்தில எதுக்கு இந்த வேலை

Anonymous said...

//வெறும்பய said...
கொயால.. அப்படியே கடல்ல இறக்கி விட்டிருக்கணும்... மெதுவா நீந்தி வான்னு சொல்லிட்டு..//

ஒரு சின்ன திருத்தம்.. மெதுவா "தத்தளிச்சுவா"ன்னு சொல்லு, ஏன்னா நம்ம அருணுக்குத் தான் நீச்சல் தெரியாதே ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///(மேடைதாங்க தண்ணீல இருந்துச்சு நாங்க தெளிவாத்தான் இருந்தோம்). ///


பரவாயில்லையே, உங்களுக்கு நல்ல கெப்பாசிட்டிதான், தண்ணியடிச்சும் தெளிவாத்தான் இருந்திருக்கீங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாலாவது முறை BOAT ஓட்டியவன் கடுப்பாகி, எங்களை மேடைக்கு பின்னால் நேராக கடலில் இறக்கினான். கால்ல தான் தண்ணிய தொட இறக்குறானோனு நம்பி இறங்கினோம், ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான்.////

இதுக்குத்தான் மிச்சம் இருந்த தண்ணிய அவனுக்கும் கொஞ்சம் கொடுத்துட்டு வந்திருக்கனும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// LK said...
வயசான காலத்தில எதுக்கு இந்த வேலை////

இது ஞாயம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// மங்குனி அமைசர் said...
அடப்பாவிகளா , ஜஸ்ட்டு மிஸ்ஸு???? சே..... வாய்ப்ப தவற விட்டானுகளே ... சரி ..சரி அருணு இனி பாராசூட் ல போகும் போது என்னைய ஹெல்ப்புக்கு கூட்டிட்டு போ///

ஆமா, நீங்க தண்ணில விழுந்த உடனே, ஒரே அமுக்கா அமுக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நானும் ஜாலியா “அமைதியான நதியினிலே ஓடம்”ன்னு ஜாலியா பாட ஆரம்பிச்சேன். /////


பயத்துல கதறுனேன்னு டீசன்ட்டா சொல்ல வறீங்க?
ஓ நீங்க சும்மா பாடுனாலே அப்பிடித்தான் இருக்குமா? அப்போ சரி!

சௌந்தர் said...

இதுல உச்ச கட்ட சோகம் என்னன்னா, ஆசையா சாப்பிட வாங்கிவெச்ச TIC TAC மிட்டாய் BOX ஐ பாக்கெட்ல வெச்சி இருந்தேன். அது மொத்தமா நனைஞ்சி போய் அந்த BOX முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு. வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ...../////


பட்கெட்டில்...டப் டப் சப்தம் கேட்டுதா ...

இம்சைஅரசன் பாபு.. said...

//மொத்தமா நனைஞ்சி உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம்//

உரிச்ச கோழின்னு சொல்லிக்கிட்டு டிரஸ் போட்டு நிக்குற ........சரி அந்த போட்டோ வ இதுல போட வேண்டாம் .நம்ம கும்மில போடு

Unknown said...

HAHAHA...

Unknown said...

அருண் அண்ணா
நியூ காஸ்டும்ல கலக்குறீங்க ..

நல்ல வேலை படகுக்கும்
பாரசோடுக்கும் ஒண்ணும் ஆகலை

சசிகுமார் said...

செம காமடி போங்க

Madhavan Srinivasagopalan said...

எல்.கே சொன்னமாதிரி (ஒரு சிறிய திருத்தத்தோடு) 'வயசு' காலத்தில , ஏன் இந்த ஆசை..?

NaSo said...

பாராசூட்ல மேலே எவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியும் அருண்?

vinu said...

முழுசும் வெறும் ஆரஞ்சு கலர் தண்ணீர்தான் இருந்துச்சு

appa ttictac tholachu aranchu `juice kuducheengannu solla vareenga greattttttttttttttttt

Unknown said...

நல்ல ஜாலியான பயணம்தான்.. :-)))

Unknown said...

தண்ணில பறந்திருக்கீங்க ...

Anonymous said...

அட...ரொம்ப நல்லாருக்கே குவார்ட்டர் ல நம்மாளுங்க இதை விட சுப்பரா பறப்பாங்களாக்கும்

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// கொயால.. அப்படியே கடல்ல இறக்கி விட்டிருக்கணும்... மெதுவா நீந்தி வான்னு சொல்லிட்டு...//
ஏன் இந்த கொல வெறி?

@ ப்ரியமுடன் வசந்த்
//போருக்கு போறமாதிரி கவசமெல்லாம் மாட்டி பாட்ஷா ரஜினி ஸ்டைல்ல கிளம்புன ஆளு
கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலைன்ற வடிவேலு ஸ்டைல்ல சிரிச்சுகிட்டே திரும்பி வர்றார்யா ..//
அட உம்ம வர்ணனை நல்ல இருக்கே!

@ வெறும்பய
// அட நாந்தேன் மொத ஆளா... அப்போ எனக்கு தான் TICTAC//
ஆமாம், அதே நனைஞ்ச TICTAC எடுத்துக்கோங்க

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// நான் சொல்லவேண்டிய டயலாக் நீங்க சொல்லிட்டீங்க//
பதிவுதான் சொந்தமா போடுறது இல்லை... கமெண்டையாவது சொந்தமா போடலாம்ல

@ மங்குனி அமைசர்
//அடப்பாவிகளா , ஜஸ்ட்டு மிஸ்ஸு???? சே..... வாய்ப்ப தவற விட்டானுகளே ... சரி ..சரி அருணு இனி பாராசூட் ல போகும் போது என்னைய ஹெல்ப்புக்கு கூட்டிட்டு போ//
நீங்க தானா அது? ரொம்பநாளா என் எதிரி யாருனு தேடிட்டு இருந்தேன். இப்போ கண்டுபிடிச்சிட்டேன்....
BE CAREFUL (நான் என்னை சொன்னேன்)

@ LK
// வயசான காலத்தில எதுக்கு இந்த வேலை//
என்ன பாஸ், இதையெல்லாம் பாத்தா நாம சந்தோஷமா இருக்க முடியுமா?

@ பாலாஜி சரவணா
//ஒரு சின்ன திருத்தம்.. மெதுவா "தத்தளிச்சுவா"ன்னு சொல்லு, ஏன்னா நம்ம அருணுக்குத் தான் நீச்சல் தெரியாதே ;)//
அட அட நண்பேண்டா! தள்ளிவிட்டாலும் காமென்சென்ஸோட இருக்கீங்க

அருண் பிரசாத் said...

@ பண்ணிக்குட்டி ராம்சாமி
ஆபிஸ்ல ஆணி இல்லையா? இந்த கும்மு கும்மி இருக்கீங்க!

@ செளந்தர்
//பட்கெட்டில்...டப் டப் சப்தம் கேட்டுதா ...//
அது டப்... டப்.. இல்லை... லப்.. டப் சத்தம்... என் இதயத்துல இருந்து

@ இம்சைஅரசன் பாபு
//உரிச்ச கோழின்னு சொல்லிக்கிட்டு டிரஸ் போட்டு நிக்குற ........சரி அந்த போட்டோ வ இதுல போட வேண்டாம் .நம்ம கும்மில போடு//
அட பாவி, அந்த மாதிரி படம் பாக்குறதுக்கே குருப் கும்மி மெயில் ஆரம்பிச்சி இருக்கீங்களா... நடக்கட்டும்

@ siva
// அருண் அண்ணா
நியூ காஸ்டும்ல கலக்குறீங்க ..

நல்ல வேலை படகுக்கும்
பாரசோடுக்கும் ஒண்ணும் ஆகலை//
நல்ல தம்பி

சசிகுமார் said...
// செம காமடி போங்க//
நன்றி சசி

@ Madhavan
// எல்.கே சொன்னமாதிரி (ஒரு சிறிய திருத்தத்தோடு) 'வயசு' காலத்தில , ஏன் இந்த ஆசை..?//
ஓடுற பாம்பை மிதிக்கற வயசாச்சே... வீர சாகசம்லாம் இப்போதான் செய்ய முடியும்...

சரி, “வயசு” - இதுல உள்குத்து எதுவும் இல்லையே

@ நாகராஜசோழன் MA
// பாராசூட்ல மேலே எவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியும் அருண்?//
அட என்ன ஒரு சிந்தனை? கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு உயரம் பறக்கலாம்... நான் சுமார் 20 மீட்டர் உயரம் பறந்து இருப்பேன்னு நினைக்கறேன்... கயிறு அறுந்தா நேரா கைலாசம்தான்

@ vinu
// appa ttictac tholachu aranchu `juice kuducheengannu solla vareenga //
greattttttttttttttttt//
அட சரிதான், ஆனா ஜீஸ்ல உப்பு இல்ல கலந்து இருந்துச்சு!

அருண் பிரசாத் said...

@ பதிவுலகில் பாபு
// நல்ல ஜாலியான பயணம்தான்.. :-)))//
நன்றி பாபு

@ கே.ஆர்.பி.செந்தில்
// தண்ணில பறந்திருக்கீங்க ...//
எந்த தண்ணீ அண்ணே, தெளிவா சொல்லுங்க

செல்வா said...

//பாராசூட்டில் இருப்பவர் கால் கடல் தண்ணீரை தொட்டவுடன் BOAT -ஐ கிளப்பி, மீண்டும் பாராசூட் பறக்கவைப்பர். இதை எங்களுக்கு மட்டும் செய்யவில்லை. எனக்கு செம கடுப்பு.////

உங்களை பார்த்ததுமே இவுங்களுக்கு இதுவே போதும் அப்படின்னு நினைச்சிருப்பார் ..!!

செல்வா said...

அந்த போட்டோவ பார்த்த பயமா இருக்கு ..!!

செல்வா said...

//ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம்./

அப்படியே எடுத்து வேகவசிருக்கணும் .. ஜஸ்ட் மிஸ் ..!!

செல்வா said...

/////// LK said...
வயசான காலத்தில எதுக்கு இந்த வேலை////

இது ஞாயம்!

//

அருண் அண்ணாவை வயசானவர் என எல்லோரும் சொல்லவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .. அவருக்கு அப்படி என்ன வயசாகிப்போச்சு...?
ஒரு எழுபது இருக்குமா ..? எழுபது எல்லாம் ஒரு வயசா ..?

எஸ்.கே said...

இந்த மாதிரி பயணங்களை டீவியில் பார்த்திருக்கேன். அனுபவம் புதுமையோ?

அன்பரசன் said...

//LK said...

வயசான காலத்தில எதுக்கு இந்த வேலை
//

Repeatuu..

அன்பரசன் said...

அப்புறம் மறுபடியும் TICTAC வாங்கினீங்களா இல்லியா?

ஜெயந்தி said...

நல்லா பறந்திருக்கீங்க. சூப்பர் அனுபவம்ல.

Arun Prasath said...

நல்ல அனுபவங்க உங்களுக்கு. என் பேர்ல வேற யாரும் பதிவர் இருக்காங்களானு பாத்தேன். கண்டுபுடிச்சிட்டேன். நல்லா எழுதறீங்க... தொடர்ந்து எழுதுங்க.

Ramesh said...

சூப்பர் அனுபவம்...

//வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....

லைஃப்ல சாதாரணமா எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு.. அப்பயும் டிக்டேக் போச்சேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கீங்களே.. என்னத்த சொல்றது..

dheva said...

உன்னை தண்ணிலயே போட்டுடு வந்து இருக்கணும்...! கொண்டு வந்து நல்லா இறக்கிவிட்டு..

எங்க உயிர எடுக்குற.. ! ஏய்யா.....ஓவரா ரவுண்டடிக்க ஆசைப்பட்டு உசுரு போகத்தெரிஞ்சுச்ச்சேப்பா...! அச்சச்சோ.. வெகுளியான புள்ளையா இருக்கியே.. ! போ..போ.. போய் தலைய தொவட்டு... .ஜலதோசம் புடிச்சுக்க போகுது..!

Madhavan Srinivasagopalan said...

//லைஃப்ல சாதாரணமா எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு.. அப்பயும் டிக்டேக் போச்சேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கீங்களே.. என்னத்த சொல்றது.. //

Repeettoi...

சுசி said...

முகத்தில பயத்தை மீறிய ஒரு சந்தோஷம் தெரியுது அருண் :))

சிவராம்குமார் said...

செம கலக்கலான பதிவு! ஆமா...நனைஞ்ச கோழியா இல்லை சேவலா!!! ஹி ஹி ஹி!

Philosophy Prabhakaran said...

சென்னை மக்கள் இதுப்போன்ற விஷயங்களை பதிவில் படித்துதான் தெரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது...

Chitra said...

Parasailing is lot of fun!
Super post and photos!

வெங்கட் said...

// அய்யய்யோ! எனக்கு நீச்சல் தெரியாதே //

இத்தனை வயசாகியும்
' எனக்கு நீச்சல் தெரியாதுன்னு '
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம
சொல்றதை பாருங்க..

' எனக்கும் தான் நீச்சல் தெரியாது '
இதை நான் எங்கேயாவது
சொல்லி இருப்பேனா..
Secret-மா..Secret..!!

கருடன் said...

//ஒரு உள்ளூர் நண்பரின் ரிசார்ட் ஒன்றிற்கு சென்றோம்.//

ஓசில போன சொல்லு!!

கருடன் said...

@அருண்

//கடல் நடுவில் அமைக்கப்பட்ட மிதக்கும் மேடைக்கு அழைத்து சென்றார்//

அந்த மேடைல யார் மச்சி பேசினா?? டாக்டர் விஜய்? மேதை ராமராஜன்??

கருடன் said...

@அருண்

// ங்கொய்யால, அப்படியே கடல்தண்ணில போட்டுடான். இரண்டுபேரும் முழுசா நனைஞ்சாச்சு. சரி மேல தூக்குவான்னு பார்த்தா BOAT ஐ மேடைக்கு அந்த பக்கம் நிறுத்திட்டான்.//

ஹா..ஹா..ஹா.. அந்த போட் ஓட்டினவன் என் நண்பேண்டா!!!

பெசொவி said...

பாராசூட்டில பறந்ததால, இனிமே அருண் "பற"சாத்னு கூப்பிடலாமா?

அருண் பிரசாத் said...

@ கே.ஆர்.பி.செந்தில்
//தண்ணில பறந்திருக்கீங்க ...//
ஆமாம்ண்னெ, பயபுள போட் ஓட்டுனவந்தான் தண்ணி அடிச்சைட்டான் போல

@ ஆர்.கே.சதீஷ்குமார்
//அட...ரொம்ப நல்லாருக்கே குவார்ட்டர் ல நம்மாளுங்க இதை விட சுப்பரா பறப்பாங்களாக்கும்//
அட அப்படியா! சரி இந்த குவாடர் குவாட்டர்னு சொல்லுறீங்களே அப்படினா என்ன?

@ ப.செல்வக்குமார்
// //ஒரு வழியா எங்களை மேடைக்கு இழுத்து விட்டனர். மொத்தமா நனைஞ்சி உறிச்ச கோழிமாதிரி ரெண்டு பேரும் வந்து நின்றோம்./
அப்படியே எடுத்து வேகவசிருக்கணும் .. ஜஸ்ட் மிஸ் ..!!//
எத்தனை நாள் வஞ்சம் ராசா

@ எஸ்.கே
// இந்த மாதிரி பயணங்களை டீவியில் பார்த்திருக்கேன். அனுபவம் புதுமையோ?//
ரொம்ப புதுமை எஸ் கே... தேடில போனோம்..

@ அன்பரசன்
//அப்புறம் மறுபடியும் TICTAC வாங்கினீங்களா இல்லியா?//
நீங்க தாங்க நம்ம ஆளு.... டிக் டாக் கடைசிவரை யாரும் வாங்கி தரலைங்க. சொந்த காசுல வாங்க வெச்சிட்டாங்க

அருண் பிரசாத் said...

@ ஜெயந்தி
// நல்லா பறந்திருக்கீங்க. சூப்பர் அனுபவம்ல.//
செம அனுபவம்ங்க

@ arunmaddy said...
// நல்ல அனுபவங்க உங்களுக்கு. என் பேர்ல வேற யாரும் பதிவர் இருக்காங்களானு பாத்தேன். கண்டுபுடிச்சிட்டேன். நல்லா எழுதறீங்க... தொடர்ந்து எழுதுங்க.//
வாங்க... உங்களையும் வந்து பாக்குறேன்

@ பிரியமுடன் ரமேஷ்
//
சூப்பர் அனுபவம்...

//வட போச்சே... சாரி, TICTAC போச்சேஏஏஏஏஏஏஏ.....

லைஃப்ல சாதாரணமா எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு.. அப்பயும் டிக்டேக் போச்சேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கீங்களே.. என்னத்த சொல்றது..//
ஹி ஹி ஹி. அது ஓசி டிக் டாக் வேற

@ dheva.
// உன்னை தண்ணிலயே போட்டுடு வந்து இருக்கணும்...! கொண்டு வந்து நல்லா இறக்கிவிட்டு..

எங்க உயிர எடுக்குற.. ! ஏய்யா.....ஓவரா ரவுண்டடிக்க ஆசைப்பட்டு உசுரு போகத்தெரிஞ்சுச்ச்சேப்பா...! அச்சச்சோ.. வெகுளியான புள்ளையா இருக்கியே.. ! போ..போ.. போய் தலைய தொவட்டு... .ஜலதோசம் புடிச்சுக்க போகுது..!//
அண்ணே, நீங்க நல்லவரா கெட்டவரா?

@ சுசி
// முகத்தில பயத்தை மீறிய ஒரு சந்தோஷம் தெரியுது அருண் :))//
உண்மை சுசி... அதான் கரைக்கு வந்துட்டோம்ல

@ சிவா
// செம கலக்கலான பதிவு! ஆமா...நனைஞ்ச கோழியா இல்லை சேவலா!!! ஹி ஹி ஹி!//
அனுபவத்தை சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

@ Chitra
// Parasailing is lot of fun!
Super post and photos!//
Thanks Chitra

@ வெங்கட்
//எனக்கும் தான் நீச்சல் தெரியாது '
இதை நான் எங்கேயாவது
சொல்லி இருப்பேனா..
Secret-மா..Secret..!!//
அப்ப எழுத படிக்க தெரியாத நீங்க... எல்லாம் படிச்ச மாதிரி பில்டப் குடுக்கற்தும் இப்படிதானா

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
// பாராசூட்டில பறந்ததால, இனிமே அருண் "பற"சாத்னு கூப்பிடலாமா?//
ஐ, இது நல்லா இருக்கே

கருடன் said...

50

கருடன் said...

50

ஜீவன்பென்னி said...

பகிர்வுக்கு நன்றி அருண். எனக்கு ஒரு போட்டோவும் ஓபன் ஆகல.

Unknown said...

அடுத்த தடவ பறக்கும் போது கண்டிப்பா சொல்லுங்க..
தீம் மியூசிக்-கோட பாக்க வந்துறோம்.