மரணம் - மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. சில சமயங்களில் அது வரும் வழியே விசித்திரமாக இருக்கும். அதிக தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட மரணத்தை பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். இதோ, அதன் தொடர்ச்சியில் அடுத்த விசித்திர மரணம்...
24 மார்ச், 1975. 50 வயதான இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் மிட்சல் தன்னுடைய விருப்பமான காமெடி நிகழ்ச்சியான “The Goddies” பார்த்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு பிடித்த ஒன்று. தவறவிடுவதில்லை. அதில் வரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வாய்விட்டு சிரிப்பார்.
அன்றும் அப்படிதான் ஆரம்பித்தது. தொடர்ந்து 10 நிமிடம் நிகழ்ச்சி நகைச்சுவையாக சென்று கொண்டு இருக்க, இவர் தொடர்ந்து சிரித்து கொண்டு இருந்தார். இவர் தொல்லைதாளாத இவர் மனைவி எச்சரித்தும் சிரிப்பது நிற்கவில்லை. இப்படி தொடர்ந்து 25 நிமிடங்கள் சிரித்த இவர், அமர்ந்து இருந்த சோபாவில் இருந்து சுருண்டுவிழுந்து இறந்தார்.
மரணத்திற்கான மருத்துவ காரணம்:
- தொடர்ந்து சிரித்தால், சுவாசம் குறைந்து மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
- மேலும், இதய துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
- இதனால் இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை குறைகிறது.
- ஆக்சிஜன் குறைந்ததால் இதய தசைகள் செயல் இழக்கின்றன.
- இதன் காரணமாக “Heart Attack” அல்லது “Heart Failure” ஏற்பட்டும்.
- இதன் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.
- இவர் தொடர்ந்து சிரித்த THE GODDIES நிகழ்ச்சியின் பாகத்தின் பெயர் “ Kung Fu Kapers ”
- அலெக்ஸ்ன் மனைவி, அவர் இறந்த பின்னர் THE GOODIES நிகழ்ச்சிக்கு அனுப்பிய கடிதத்தில் அலெக்ஸ்ன் இறுதி நிமிடங்களை மகிழ்ச்சியாக வைத்ததற்கு நன்றி கூறி இருக்கிறார்
அதிகமாக சிரிப்பதும் ஆபத்துதான்....
42 comments:
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
me the firstuuuuuu
அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு தான்..
முத வெட்டு
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது பழமொழி
ஆனால் இங்கு உசிருல போகுது .......எபாடி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்க ........
//அதிகமாக சிரிப்பதும் அபத்துதான்....//
கரெக்ட்ங்க எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்.
ஒக்கே! ரைட்டு..!
மீ தி ஃபர்ஸ்டு..
மரணத்திற்கான மருத்துவ காரணம்:
.....அப்போ, "வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டு போகும்" என்பதை "உயிர் விட்டு போகும்" என்று மாற்றி எழுதணும் போல. அவ்வ்வ்வ் .....
கணவர் இறந்ததற்கு நன்றி கடிதமா...? வில்லங்கமான மனைவியாக இருப்பார் போல இருக்கே...
இது ரொம்ப ரொம்ப ரேர் அருண், அதுக்கெல்லாம் கவலை படவேண்டியது இல்லை, சிரிப்பு ஒரு அருமையான மருந்து
இதுக்குத்தான் அம்ரிதமும் நஞ்சு அப்படின்னு சொல்லுரான்களோ...?
// மங்குனி அமைசர் said...
இது ரொம்ப ரொம்ப ரேர் அருண், அதுக்கெல்லாம் கவலை படவேண்டியது இல்லை, சிரிப்பு ஒரு அருமையான மருந்து
//
கரீட்டு .. ஏன்னா என்னோட பதிவ படிச்சிட்டு இப்படி ஆகிடுச்சு அப்படின்னு எனக்கு ஒரு கடிதம் கூட வரலையே .. !!
ஒரு வருடத்திற்க்கு முன் உறவினர் ஒருத்தர் இப்படித்தான் கலக்கப்போவது யாரு பார்த்து விடாமல் சிரித்து ஹார்ட் அட்டாக் வந்து உயிரை விட்டார்!
:(
சிரிச்சே செத்துட்டாரா..அதிர்ச்சியா இருக்கே...
படம் சூப்பரா இருக்கப்பூ
சிரிச்சே செத்துட்டாரா அப்போ நம்ம எதிரியை கிச்சு கிச்சு மூட்டியே கொன்னுடலாமா
99.9 சதவீதம் இது சாத்தியமில்லை..சிரிப்போம் டென்சனை குறைப்போம்
விசித்திரமான ஒன்றுதான்..
யப்பா சிரிச்சு சாவறதா....? ஆனா அதுகூட நல்லாத்தானே இருக்கு....
நரசிம்ம ராவ் சிரிக்கவே மாட்டாரே அவர் எப்படி செத்தார்
எப்படியெல்லாம் சாவு வருது பாருங்க.
சிரிச்சா போச்சி......எல்லா நகைசுவை நிகழ்ச்சி தடைசெய்யப்படுகிறது
அய்யய்யோ அப்போ இனிமே மங்குனி, பன்னிக் குட்டி, செல்வா, பதிவுலாம் படிக்க கூடாதா ;)
இப்புடி பயமுறுத்திரியே அருண் :)
ஆஹா!! சிரிச்சே செத்துப்போனவரா..
இதுக்குத்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்லியிருக்காங்களோ..
இப்படியும் மரணமா உண்மையிலேயே விசித்திரமானது.
மனுஷன் அதிகமா தண்ணி குடிக்க கூடாது..
அதிகமா சிரிக்க கூடாது...
ஐயோ.. இன்னும் என்ன என்ன எல்லாம்
இருக்கோ தெரியலையே..!!
நான் இனிமே அளவா சிரிச்சு உயிரை காப்பாத்திக்கிடனும் போல.
மங்குனி அமைச்சர் சொல்றதுதான் சரி அருண் ...
அச்சச்சோ!
@அருண்
இந்த பதிவை படித்து முடித்த டெரர் மயங்கி விழுந்து இறந்தார்.
காரணம்
--------
1. ஒன்னும் புரியவில்லை
2. அதுவாக இருக்குமோ?
3. இதுவாக இருக்குமோ?
:)
(ரொம்ப சிரிக்கக் கூடாதாமே, அதான், ஒரு ஸ்மைலி)
சிரிச்சாலும் டிக்கேட சூப்பர் போங்க
@ LK
//அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு//
உண்மைதான் எல் கே
@ இம்சைஅரசன் பாபு
// me the firstuuuuuu//
தொப்பி... தொப்பி
@ வெறும்பய said...
//அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு தான்..//
ஆமாங்க
@ பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி
// முத வெட்டு //
மாமேதைக்கு பல்பு
@ இம்சைஅரசன் பாபு.. said...
// வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பது பழமொழி
ஆனால் இங்கு உசிருல போகுது .......எபாடி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்க ........//
அவர் மனைவி சொல்லியும் கேக்கலையே அவரு!
@ நாகராஜசோழன்
//கரெக்ட்ங்க எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்.//
உண்மைங்க
நன்றி மாதவன் சார், சித்ரா
@ philosophy prabhakaran
//கணவர் இறந்ததற்கு நன்றி கடிதமா...? வில்லங்கமான மனைவியாக இருப்பார் போல இருக்கே...//
அவங்க ஊருல எல்லாமே நடக்கும் போல
@ மங்குனி அமைசர்
// இது ரொம்ப ரொம்ப ரேர் அருண், அதுக்கெல்லாம் கவலை படவேண்டியது இல்லை, சிரிப்பு ஒரு அருமையான மருந்து//
உண்மை மங்குனி, இது ஒரு ரேர் கேஸ் அதுனாலதான் போட்டேன்... இப்படியும் நடந்து இருக்கு
நான் யாரையும் சிரிக்க வேணாம்னுலாம் சொல்லலை
@ செல்வா
//கரீட்டு .. ஏன்னா என்னோட பதிவ படிச்சிட்டு இப்படி ஆகிடுச்சு அப்படின்னு எனக்கு ஒரு கடிதம் கூட வரலையே .. !!//
உங்க பதிவ படிச்சுட்டு பாதிபேர் காது இல்லாம சுத்துறது பத்தி லெட்டர் வரலையா?
@ ப்ரியமுடன் வசந்த்
//ஒரு வருடத்திற்க்கு முன் உறவினர் ஒருத்தர் இப்படித்தான் கலக்கப்போவது யாரு பார்த்து விடாமல் சிரித்து ஹார்ட் அட்டாக் வந்து உயிரை விட்டார்!//
ஓ! இது நம்ம ஊருலையும் நடந்து இருக்கா!
@ பிரியமுடன் ரமேஷ்
//சிரிச்சே செத்துட்டாரா..அதிர்ச்சியா இருக்கே...//
இப்படியும் நடக்குதுங்க
@ சி.பி.செந்தில்குமார்
// படம் சூப்பரா இருக்கப்பூ//
வாங்க செந்தில், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@ ஆர்.கே.சதீஷ்குமார்
// சிரிச்சே செத்துட்டாரா அப்போ நம்ம எதிரியை கிச்சு கிச்சு மூட்டியே கொன்னுடலாமா//
அட இந்த ஐடியா நல்லா இருக்கே!
சிரிச்சா கூட சாவங்களா??
ஆச்சரியமா இருக்கே!!!!!!
என்னத்த சொல்ல....
ஆண்டவா இப்படியுமா ?
அய்யைய்யோ...
நல்ல ஒரு புதுமையான ஒரு தகவலை சொல்லி இருக்கீங்க! இப்படியும் நடந்திருக்கான்னு ஒரே வியப்பா இருக்கு! நன்றி அருண்!
அட கடவுளே... அதிகமா சிரிச்சா கூட குத்தமா..?? :-(
சிரிச்சுக்கிட்டே சாவறது எல்லாருக்கும் கிடைக்குமா? இதத்தான் நல்ல சாவுன்னு ஊருல சொல்வாங்க.
nice one
Post a Comment