விநாயக சதூர்த்திக்கு கிளம்ப வேண்டியவன், டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், அதன் தொடர்ச்சி...
சரி என்று வெள்ளிக்கிழமை சென்னை செல்ல வேண்டிய டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டேன். இரவு ஆபிஸ் கெஸ்ட் அவுசுக்கும் திரும்பியாச்சு. மறுநாள் காலை வந்தான்யா அந்த Factory Engineer. அட! நம்ம சென்னை பையன். ஊரெல்லாம் சுத்தி கெஸ்ட் அவுஸ் அட்ரஸ் கண்டு பிடிக்க முடியாம கெஸ்ட் அவுஸ்க்கு போன் பண்ணப்ப என்கிட்ட மாட்டினான். அந்த Factory Engineer கூட பேச்சு கொடுத்தேன். பயபுள பாவம்! விநாயக சதுர்த்திக்கு சென்னைக்கு போக பிளான் பண்ணி இருந்தவனை புடிச்சி ஐதராபாத் அனுப்பிடாங்களாம்.
அவன், நான், எங்க டெமேஜர் மூணு பேரும் போய் கஸ்டமரை பார்த்துட்டு வந்தாச்சு. டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு. டேமெஜர் இப்ப கேக்குறார், “என்ன அருண், விநாயக சதுர்த்திக்கு ஊருக்கு போகலையா”னு. (ங்கெய்யால, பிளானை டெமேஜ் பண்ணிட்டு 3 மணிக்கு கேக்குற கேள்வியபாரு?) நான் பதிலுக்கு, “அதான் சார் யோசிக்கறேன் போகலாமா, வேணாமானு? நீங்க பண்டிகைக்கு போகலையா சார்?” என நானும் ஒரு பிட்டு போட. அதுக்கு அவர், “எனக்கு நைட் 8 மணிக்கு பிளைட் தம்பி, போய்டுவேன். நீ வேணா இன்னைக்கு போய்ட்டு திங்கள் காலைல ஆபிஸ் வந்துடு போதும்”. (ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார்)
(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடுப்பு ஏத்துறார், விடாத அருண்! பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.
(கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடுப்பு ஏத்துறார், விடாத அருண்! பதிலுக்கு கடுப்பேத்து) “கண்டிப்பா போக போறேன் சார், நேரா ஆபிஸ் போய் டிக்கட் புக் பண்ண வேண்டியதுதான். NGPAY ல டிரெயின் டிக்கெட் chart prepared னு காண்பிக்குது. பஸ் டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடறேன் சார்”.
அடுத்து ஆபிஸ் போய், டிக்கெட் செக் செய்தப்பதான் பிரச்சனை தெரிஞ்சது. முக்கிய பேருந்துகள் எல்லாம் பண்டிகையால் full. சில சிறு சிறு டிராவல்ஸ் செக் செய்தால் அனைத்திலும் கடைசி சீட் தான் இருந்தது. (பேருந்துகளில் எப்பொழுதும் கடைசி 2 வரிசை மற்றும் வலது புறமும் இருக்கும் சீட்டுகள் அதிக ரிஸ்க் சீட்டுகள். விபத்துகளில் அதிகம் அடிபடுவது இந்த சீட்டுகள்தான்)
பாவம் அந்த Factory Engineer, அப்ப ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)
பாவம் அந்த Factory Engineer, அப்ப ஊருக்கு போக முடியாதானு புலம்ப ஆரம்பிச்சுட்டான். ரயிலில் ஒபன் டிக்கெட் எடுத்து டிடிஆர்யிடம் கேட்டு பெர்த் வாங்குவதும் அன்றைய நாளில் கடினம். அப்பதான் என் பிரெண்டு ஒருமுறை USL TRAVELSனு ஒன்று நல்லா இருந்ததா சொன்னது ஞாபகம் வந்தது. அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி ஆனா, ஒரு போன் நம்பர் கொடுத்து அதுல தொடர்பு கொண்டால் சீட் கிடைக்க முயற்சி செய்வோம்னு போட்டு இருந்தது. (கடைசி நேரத்துல கேன்சல் ஆகுறது, Block பண்ணி வெச்சு இருப்பதை தருவாங்க போல)
போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,
நான் “இரண்டு”.
எதிர் முனையில் “சரி சார் இருக்குது, கன்பார்ம் பண்ணிக்கவா. சீட்டு நம்பர் L9, L10 ஓகே வா. மொபல் நம்பர் தாங்க சார்”
நான், “செய்துகோங்க. மொபல் நம்பர் 91771 57007. சரி, எவ்வளவு ரேட்”
எதிர் முனை “அதே 800 ரூ தான் சார்”
நான் “ஓகே, எப்ப, எங்க வந்து டிக்கெட் வாங்கிகனும்”
எதிர்முனை “7.30 மணிக்கு Lakdi ka Pool (ஹைதராபாதின் ஒரு முக்கிய ஏரியா) வந்துடுங்க pick up van வந்துடும், பஸ்ல உட்கார்ந்த பிறகு காசு கொடுத்தா போதும்”
நான் “மிஸ் ஆகாதே! கடைசில சீட் இல்லைனு சொல்ல கூடாது”
எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....
மொபலை பார்த்தால் ஒரு SMS From USL BUS. "YOUR TICKET HAS BEEN CONFIRMED. SEAT NO IS L9, L10. PICK UP TIME 7.30 PM @ LAKDI-KA-POOL" என வந்திருந்தது. எதிர் பார்க்காத ஆச்சர்யம். ஒரு போன் காலை மதித்து கன்பார்ம் செய்து இருந்தார்கள்.
மாலை சரியாக 7.30 மணிக்கு pick up செய்து பஸ்க்கு சென்றோம். அங்கு ஒரு ஆச்சரியம், ஒவ்வொரு சீட்டுக்கும் சிறிய தலையனை கழுத்தில் வைக்கவும், நன்றாக துவைத்த போர்வையும் இருந்தது. சீட்டின் அளவும் மற்ற பேருந்துகள் போல இல்லாமல் சற்று அகலம். அந்த வண்டி Helper வந்து எங்க பெயர் சொல்லி பணம் வாங்கி கொண்டு சரியான ரசீதையும் தந்து விட்டு சென்றார்.
பேருந்தின் Interiorஉம் அழகாக கண் கூசாத வண்ண விளக்குகளால் செய்திருந்தனர். மேலும், மற்ற பேருந்துகள் போல அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை கொடுத்து வாய்க்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போவது போல செய்யாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை தந்தனர். (நான் பல தனியார் பேருந்துகளில் பயணம் செய்து உள்ளேன், சில பேருந்துகள் கேவலமாகவும் போர்வை ஒரு வித வாசத்துடனும் இருக்கும்.... பலருக்கு இந்த அனுபவம் வாய்த்து இருக்கலாம்)
பயணிகளை கேட்டு, எப்பொழுதும் போடும் மொக்கை தெலுங்கு படத்தை போடாமல், தலைவர் நடித்த “சிவாஜி”யை போட்டனர். சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (தலைவர் படம்னா சும்மாவா) வழியில் நல்ல சுகாதாரமான ஓட்டலிலும் நிறுத்தினர்.
சரியாக காலை 7 மணிக்கு சென்னையை அடைந்தது பேருந்து. சுமார் 800 கிமீ தொலைவை 10 மணி நேரத்தில் வந்து அடைந்தோம். அதில் இருந்து சென்னை-ஐதராபாத் பேருந்தில் செல்ல நேர்ந்தால் USL BUS தான் என் முதல் சாய்ஸ். இவ்வளவு சின்ன சின்ன விஷயங்களால் செய்து கூட பயணிகளை திருப்திபடுத்தி ஆதரவை பெற முடியும் என்பதை கண்கூடாக கண்டேன்.
அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.
அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.
டிஸ்கி: இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது. ஆனால், இந்த கட்டுரை எழுத அந்த பேருந்தின் Website ஐ தேடும்போது அது Delete செய்யப்பட்டு உள்ளது. அந்த டிராவல்ஸ் தற்போதும் கண்டிப்பாய் இயங்கி கொண்டுதான் இருக்கும் என நம்புகிறேன். இந்த டிராவல்ஸின் தற்போதைய நிலையைபற்றி யாருக்காவது தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.
அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....
35 comments:
mee the first..
ippa within TN porathuna ABT travel best.. pakkava irukku timeku eduthu timeku konduporanga
கலக்கலா இருக்குண்ணா.
அதுக்குள்ளே பயணம் முடிந்துவிட்டது
போல ஒரு உணர்வு.
நல்ல அழகாய் பயணம் செய்து இருக்கீங்க..
//டெமெஜர் செலவுல Lunch க்கு Buffet போயும் கும்மியாச்சு. /
நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு தெரியும் ..!!
//சந்தோஷமாக 25 வது தடவை அந்த படத்தை பார்த்தேன் (//
25 ஆவது தடவையா ..?
//அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்.//
சரி சரி ., மெதுவா போலாம் அண்ணா ..!!
ஒரு வருடம் கழித்து எழுதினாலும். நல்ல பகிர்வு ரசிக்கும் படி இருக்கிறது (என்னது ரமேஷ் காய்ச்சல் ல பெட் ல இருந்த அனுபவத்தை எழுத போறேன் ன்னு சொல்லுறன்.)நீங்க ஆரம்பிச்சு வைச்சிடீங்க இனி ஒரே பயண பதிவும் .காய்ச்சல் பதிவும் தான் இருக்கும் போல இருக்கு அருண்
ரொம்ப நல்ல டிராவல்ஸ் இருக்கு இப்போ இருக்கா இல்லையா யாரவது சொல்லுங்கள்
பஸ்ல ஏதாவது டிக்கட்டுக வந்திச்சா? (எப்படியும் வந்திருக்குமே, அதப்பத்தியும் எழுதுமா!)
என்ன அருண் அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க!
// ஞாயிற்றுகிழமை லீவு எடுத்துக்கனு சொல்லாம செல்லுறார் //
என்ன வில்லத்தனம்.. சும்மாவா விட்டீங்க ;)
//அடுத்த பயணம் சிறிது நாள் கழித்து செல்வோம்....//
சீக்கிரம் எங்கள பிக் அப் பண்ணிக்கோங்க.. வெய்டிங் :)
Customer is the Boss என்கின்ற விஷயத்தை அருமையா புரிஞ்சி வைச்சிட்டு சேவையா அழகாக தந்திருக்காங்க.
அவர்களைப் பற்றிய பகிர்வு பலருக்கும் உபயோகமாக இருக்கும். நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!
// டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், //
சூப்பர் மச்சி!! உன் பதிவ படிக்க மாட்டோம் சும்மா பாத்துட்டு, ஓட்டு போட்டு போய்டுவோம் நல்லா தெரிஞ்சி வச்சி இருக்க....
//அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி//
Full?? அட டாஸ்மாக் கம்பணி... என் கொவட்டர், ஹாப் எல்லாம் இல்லையா??
//போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,
//
அட ஐதராபாத்ல தமிழ்ல பேசறாங்களா?? What a pleasant surprise u know!!!
(மொழிமாற்றம் செய்த உரையாடல் நீங்க சொல்லவில்லை...)
//எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....
மொபலை பார்த்தால் ஒரு SMS //
ஏன் மச்சி உன் மொபைல்ல உனக்கு SMS வந்து இருக்க விஷயம்கூட உனக்கு ஒரு ஆள் சொன்னா தான் தெரியுமா?? What a pity....
//அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். //
ஓசில சுண்டல் சாப்பிட இவ்வளோ செலவு பண்ணி வந்து இருக்க..
// நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.//
அய்யயோ!! அப்போ இந்த பதிவு முடியலயா?? அடுத்து சென்னை - ஹைதராபாத்தா?? அவ்வ்வ்வ்வ்வ்....
சுவாரஸ்யமாக எழுத கைவருகிறது உங்களுக்கு.. உங்கள் வாழ்வின் வித்தியாசமான அனுபவங்களை எழுதுங்க அருண் ...
//TERROR-PANDIYAN(VAS) said...
//போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,
//
அட ஐதராபாத்ல தமிழ்ல பேசறாங்களா?? What a pleasant surprise u know!!!
(மொழிமாற்றம் செய்த உரையாடல் நீங்க சொல்லவில்லை...)//
கொய்யால ஐதராபாத்ல தமிழ்லபேசகூடாத என்ன. சிங்கபூர்லையே தமிழ்ல பேசுறாங்க. அங்க பேச கூடாதா. அருண் இதுக்குதான் படிச்சவங்க சகவாசம் வச்சிகோங்கன்னு சொன்னேன்.
// TERROR-PANDIYAN(VAS) said...
//எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....
மொபலை பார்த்தால் ஒரு SMS //
ஏன் மச்சி உன் மொபைல்ல உனக்கு SMS வந்து இருக்க விஷயம்கூட உனக்கு ஒரு ஆள் சொன்னா தான் தெரியுமா?? What a pity....//
எலேய் Terror உனக்கு செல்போன் ல SMS எப்படி படிகனும்னாவது தெரியுமா?
@ரமேஷ்
//கொய்யால ஐதராபாத்ல தமிழ்லபேசகூடாத என்ன. //
வந்துடாருயா... கண்டுபிடிப்பு கண்ணாயிரம்...விட்டா ஐதராபாத் தமிழகத்தின் ஒரு மாவட்டம் எழுதுவ போல??
//சிங்கபூர்லையே தமிழ்ல பேசுறாங்க. அங்க பேச கூடாதா.//
சிங்கபூர்ல மட்டுமா?? இங்க இருக்கா எல்லா பதிவரும் தமிழ் பேசராங்கபா...
//அருண் இதுக்குதான் படிச்சவங்க சகவாசம் வச்சிகோங்கன்னு சொன்னேன்.//
சொல்லிடாருயா அப்துல்கலாம் அசிஸ்டண்ட்... போ போ போய் வெட்டி பேச்ச விட்டு மாட்ட ஒழுங்க மேய்.. நேத்தே உன் ஓனர்கிட்ட திட்டு வாங்கின....
@ரமேஷ்
//எலேய் Terror உனக்கு செல்போன் ல SMS எப்படி படிகனும்னாவது தெரியுமா?//
ரமேசு... உனக்கு சொல்போன் எல்லாம் தெரியுமா? போன் கண்டுபிடிச்சவன் கேட்டா ரொம்ப சந்தோஷபடுவான்.
அதிசயமாகத்தான் இருக்கு இத்தனை அஹழகான சௌரியமான பேரூந்து..சூப்பர்..உங்க பயணமும்
// முன்னாள் விகடன் மாணவ நிருபர்
//
அருண் அண்ணா,
”முன்னாள் விகடன் மாணவ நிருபர்” என்றால் விகடன் முன்னாடி இருந்தது,இப்ப வர்றதில்லை என்ற அர்த்தம் வந்திடும். ”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” என்றால்தான் நீங்க விகடனில் முன்பு நிருபராக இருந்ததாகப் பொருள் வரும்.
மண்டையா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.அருமையான பல இடுகைகள் உள்ள இந்தத் தளத்தில் சொற்பிழையைச் சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணமே.
பயணம்... பயணம்... பயணம்...
எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்...
பயணத்தை சுகமாய் ஓட்டினீங்க...
நல்ல பதிவு...சுவாரஷ்யமா இருந்தது..
@ LK
//TN porathuna ABT travel best.//
Hyderabad to Chennai ABT Travels service இல்லை
@ siva
நன்றி தம்பி
@ செல்வா
//நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு தெரியும் //
public public
@ இம்சை பாபு
//இனி ஒரே பயண பதிவும் .காய்ச்சல் பதிவும் தான் இருக்கும் போல//
அதான டிரெண்ட்
@ செளந்தர்
நீ சென்னை தானே! பார்த்து சொல்லுப்பா
@ பன்னிக்குட்டி
//பஸ்ல ஏதாவது டிக்கட்டுக வந்திச்சா?//
டிக்கெட் வந்துச்சானு கேக்குறயே, ஓட்டு போட்டியா?
@ Balaji saravan
//என்ன அருண் அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க!//
இன்னும் 2 தொடரும் போட்டா உதைப்பாங்க மக்கள்
நன்றி! என்னது நானு யாரா?
@ கே ஆர் பி
//சுவாரஸ்யமாக எழுத கைவருகிறது உங்களுக்கு.. உங்கள் வாழ்வின் வித்தியாசமான அனுபவங்களை எழுதுங்க அருண் //
நன்றி அண்ணா, செய்துடுவோம்
@ terror & ரமெஷ்
பஸ்ல சீட்டுக்கு என்ன சண்டை, 2 பேரும் போய் குடுத்த கிளினர் வேலைய ஒழுங்கா பாருங்க
நன்றி Gayathri
போட்டாச்சு போட்டாச்சு!
@ அப்துல்லா
//”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” //
மாற்றியாச்சு பாஸ், கருத்துக்கு நன்றி
நன்றி நிசாமுதீன்
@ பிரியமுடன் ரமெஷ்
வாங்க ரமெஷ், திருமண வாழ்க்கை எப்படி போகுது. வாழ்த்துக்கள்.
@ பன்னிகுட்டி சார்
//போட்டாச்சு போட்டாச்சு!//
நன்றி! நன்றி!!
நல்ல பதிவு...நல்ல நடை..!
அன்புடன் வெற்றி
எம்.எம்.அப்துல்லா..,
// ”முன்னாள் விகடன் மாணவ நிருபர்”
என்றால் விகடன் முன்னாடி இருந்தது,
இப்ப வர்றதில்லை என்ற அர்த்தம் வந்திடும்.
”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” //
என்னங்க நீங்க..?
இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க..
இதெல்லாம் சும்மா Publicity Stunt-ங்க..
இதையே தப்பா எழுதறவரை எப்படிங்க
விகடன்ல " மாணவர் நிருபரா " தேர்ந்து எடுத்து
இருப்பாங்க..?!!
கொஞ்சம் யோசிங்க..!!
இதை எனக்கு சொன்ன அனுவுக்கு நன்றி..!!
நன்றி வெற்றி
@ வெங்கட்
//இதெல்லாம் சும்மா Publicity Stunt-ங்க..//
ஆமாங்க, நீங்களும் பல பேர்ல குறிப்பா லேடீஸ் பேர்ல உங்களுக்கு நீங்களே கமெண்ட் போட்டுகறத டெரர் சொன்னதா நான் வெளியே சொல்லமாட்டேன்ங்க
cool makka..
Post a Comment