Cricket Countdown....

Thursday, September 30, 2010

ரஜினி படம் - First Day, First Show

ரஜினி - இந்த வார்த்தைக்கும் இந்த மனிதனுக்கும் மயங்கிகிடக்கும் பல தமிழர்களில் நானும் ஒருவன்.

ஜீன் 14, 2007, மறுநாள் சிவாஜி படம் official ஆக ரிலீஸ். ஆனால், ரசிகர் மன்றத்தை பிடித்து எங்கள் அலுவலம் சார்பாக 10 டிக்கெட் அன்று இரவு பிரிவியூ ஷோவிற்கு வாங்கி விட்டோம். குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் இரவு 9 மணிக்கு ஷோ. நான் புரசைவாக்கம் கிளையிலும், மற்ற நண்பர்கள் நுங்கம்பாக்கம் கிளையிலும் வேலை செய்தனர்.


நான் மாலை 7 மணிக்குதான் புறப்பட முடிந்தது. வழியில் மற்றோரு நண்பரையும் பிக் கப் செய்து கொண்டு தியேட்டருக்கு சென்று சேர 8.45 ஆகிவிட்டது. மற்ற நண்பர்கள் தியேட்டர் உள் சென்று விட்டனர். இதுதான் நான் முதல் முறை ரஜினி படத்தை சென்னையில் முதல் காட்சியில் பார்ப்பது. என்ன ஆராவாரம், எவ்வளவு மகிழ்ச்சி. அந்த GST சாலையில் ரஜினிக்கு தேர் இழுப்பதும், ரஜினி படம் போட்ட டீ சர்ட் மாட்டி கொண்டு பைக்கில் சுற்றுவதும்,  சரம் சரம் ஆக 1000 வாலா பட்டாசுக்கள் வெடிப்பதுமாக அந்த ஏரியாவே களைக்கட்டியது.


கடைசி நேரத்தில் போன எங்களால் உள்ளே சென்று என் பைக்கை பார்க் செய்ய முடியவில்லை. பார்க்கிங் full ஆகி, ரோடு வரையும், பக்கத்து சந்துகளிலும் நிறுத்தி இருந்தனர். நானும் வேறு வழியில்லாமல் என் வண்டியையும் சந்தில் நிறுத்திவிட்டு தியேட்டருக்கு உள்ளே சென்றேன். ஏற்கனவே full, நண்பர்கள் எங்கோ நடுவில் உட்கார்ந்து இருப்பதாக மொபைலில் கூறினர். வேறு வழியின்றி வாசலிலேயே நின்று இடைவேளை வரை பார்த்தோம்.

அன்று தான் சென்னை ரஜினி ரசிகர்களின் ஆர்வத்தையும் ஆராவாரத்தையும் பார்த்தேன்.... இந்த மனிஷன் ரஜினிக்கு இவ்வளவு crazeஆ! இடைவேளைக்கு பிறகு நண்பர்களின் மடியில் அமர்ந்து மீதிப்படம் பார்த்து விட்டு வந்தேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களில் அதுவும் ஒன்று! பார்த்துவிட்டு வந்து 10 நாளைக்கு படம் பார்க்க டிக்கெட் கிடைக்காதவர்களை வெறுப்பேற்றியது தனி கதை.

சரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே! தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....


42 comments:

கருடன் said...

உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு!!!!

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துகள் அருண்

Madhavan Srinivasagopalan said...

Present Sir

எல் கே said...

thalaivar vaalga.. nan saturday noon show

Unknown said...

உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு!!!!--

repeatuellam chollamaten...

nice sharing anna.

great..me too going to watch..

சௌந்தர் said...

நம்ம முதல் ஷோ படம் பார்த்துவிட்டு நண்பர்களிடம் பெருமையாக சொல்லி கொள்வோம் அவர்கள் கதை என்ன, என்ன கேட்க்க அட போய் படத்தை பாருடா சொல்லி வெறுப்பு ஏற்றுவோம்

Anonymous said...

டிக்கெட் வாங்கிட்டியா? ம்.. என்ஜாய் மாப்பு :)

Anonymous said...

டிக்கெட் வாங்கியாச்சா நானும் வாங்கிட்டேன் கலக்கிடலாம்

Anonymous said...

ஆண்டவனை பார்த்தவனும் இல்லை ரஜினியை வென்றவனும் இல்லை

Anonymous said...

சரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பா//
இதை வெச்சே ஒரு பதிவா கலக்கு மாப்ள

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எஞ்சாய் மாப்பு!

இம்சைஅரசன் பாபு.. said...

//உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு!!!! //
திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம் ...................

ஒரு நெட் ஜோக் :
இந்தியன் படத்துல ஒரு ஹீரோ
கஷ்டப்பட்டு தாத்தாவாக நடித்தார்

எந்திரன் படத்துல ஒரு தாத்தா
கஷ்டப்பட்டு ஹீரோவாக நடிக்கிறார் ...........
(யாரும் கோபப்பட்டு நான் ரஜினி ரசிகன் இல்லை என்று நினைக்க வேண்டாம் )
நேத்து ஒரு மகான் chat ல வந்து நான் இன்னி கும்மி அடிக்க மாட்டேன் .பதிவு என்பது எல்லோருக்கும் நல்ல கருத்துகள் சொல்ல வேண்டும் .சும்மா வந்து கும்மி அடிக்க கூடாது அப்படின்னு சொன்னாரு .சரி நானும் கருத சொல்லலாமேன்னு இங்க வந்து கமெண்ட் டிபே பண்ணி முடிகிரதுகுள்ள அவர் தன இந்த ப்ளாக் ல முதல் ஆளா கமெண்ட் போட்டிருக்காரு .....
நல்ல கருத்துள்ள கமெண்ட்ப்பா...........
இது எப்படி இருக்கு ...............

என்னது நானு யாரா? said...

என்னமோ போங்க! நாடு போகிற போக்கைப் பார்த்தால் பயமா இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ங் கொய்யால சனிக்கிழமை உங்க ஊர் அரசியல்வாதி எவனாவது செத்து ஊர்ல பஸ், ஆட்டோ வேன் எதுவும் ஓடாம நீங்க வீட்ட விட்டு வெளில போக முடியாம ஆக வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் சிவாஜி பெங்களூரு PVR ல அறநூறு ரூபாய் கொடுத்து பார்த்தேன்

சுசி said...

டிக்கட் விலை ஜாஸ்தி.. இருந்தாலும் இங்க ரெண்டு நாள் ஷோ..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// என்னமோ போங்க! நாடு போகிற போக்கைப் பார்த்தால் பயமா இருக்கு!////

ithu thaan ...,ithu thaan pudikkathu ..,oru moonu manineram santhoshama time spend panna ..,nadu ketudumo ....ithu enna logic theriyallai ...

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..

//திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன லாபம் ..................//

மக்கா சொன்னது நீங்க அதனால சும்மா போறேன்... வேற யாராவது வரட்டும்...

அருண் பிரசாத் said...

@ டெரர்
//உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு!!!!//
அது நல்ல ரசிகனுக்கு அழகு

நன்றி மங்குனி

ok Madhavan sir

@ Lk
//thalaivar vaalga.. nan saturday noon show//
தாக்குங்க

@ siva
//nice sharing anna.

great..me too going to watch..//
நானும் வெறியன் கிடையாது, ஆனா அவர் படம் பார்கறதுல ஒரு சந்தோஷம்

அருண் பிரசாத் said...

@ செளந்தர்
//என்ன, என்ன கேட்க்க அட போய் படத்தை பாருடா சொல்லி வெறுப்பு ஏற்றுவோம்//
அதுவும் ரஜினி படம்னா இன்னும் ஓவரா செய்வோம்ல

@ Balajisaravana
//டிக்கெட் வாங்கிட்டியா? ம்.. என்ஜாய் மாப்பு :)//
இங்க மெரீசியஸ்ல ஓபன் டிக்கெட்டே கிடைக்கும் பாஸ்

நன்றி ஆர்.கே.சதீஷ், பன்னிகுட்டி ராமசாமி

@ இம்சை
//இந்தியன் படத்துல ஒரு ஹீரோ
கஷ்டப்பட்டு தாத்தாவாக நடித்தார்
எந்திரன் படத்துல ஒரு தாத்தா
கஷ்டப்பட்டு ஹீரோவாக நடிக்கிறார்//

சரிங்க, உங்க so called இளைய நட்சத்திரம் நடிச்ச எங்க படத்துக்காவது இப்படி ஒரு craze இருக்கா? LION IS ALWAYS LION

அருண் பிரசாத் said...

@ என்னது நானு யாரா?
//என்னமோ போங்க! நாடு போகிற போக்கைப் பார்த்தால் பயமா இருக்கு!//
அட போங்க சார், படம் பாக்குறது தப்புனு ஒரு பதிவு போடுவீங்க போல...

@ ரமெஷ்
//ங் கொய்யால சனிக்கிழமை உங்க ஊர் அரசியல்வாதி எவனாவது செத்து ஊர்ல பஸ், ஆட்டோ வேன் எதுவும் ஓடாம நீங்க வீட்ட விட்டு வெளில போக முடியாம ஆக வாழ்த்துக்கள்.//
வயித்தெரிச்சல். இன்னும் உங்களுக்கு டிக்கெட் கிடைகளையா? நான் பார்த்துட்டு வந்து கதை சொல்லுறேன்.

@ சுசி
//டிக்கட் விலை ஜாஸ்தி.. இருந்தாலும் இங்க ரெண்டு நாள் ஷோ..//
இங்கயும் 3 நாள்தான் ஷோங்க

@ நரி
//ithu thaan ...,ithu thaan pudikkathu ..,oru moonu manineram santhoshama time spend panna ..,nadu ketudumo ....ithu enna logic theriyallai ...//
இவங்களாம் வலிக்காத மாதிரி நடிக்கறவங்க. முதல்ல டிக்கெட் பன்ணிட்டு இங்க வந்து சும்மா சலம்பு வாங்க. நீ டென்ஷன் ஆகாத

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

@@அருண்

//சரிங்க, உங்க so called இளைய நட்சத்திரம் நடிச்ச எங்க படத்துக்காவது இப்படி ஒரு craze இருக்கா? LION IS ALWAYS LION //

LION IS ALWAYS LION இது என்ன proverb
இப்படி போடுடா என் சூப்பு ...

LION IS ALSO ALONE IN THE JUNGLE
BUT IT IS THE கிங்
இத போடுவிய அத விட்டு போட்டு .......

செல்வா said...

///சரி, இதை எதுக்கு இப்போ சொல்லுறேன்னு பார்கறீங்களா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே! தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....
///

சரி சரி போய் பார்த்துட்டு வாங்க .. ஆனா நான் கமல் ரசிகன் .. அதனால எனக்கு அதிகமா பரபரப்பு இல்லை .. ஆனாலும் பார்ப்பேன் .. ..!! ஹி ஹி ஹி

கருடன் said...

@இம்சை
//நேத்து ஒரு மகான் chat ல வந்து நான் இன்னி கும்மி அடிக்க மாட்டேன் .பதிவு என்பது எல்லோருக்கும் நல்ல கருத்துகள் சொல்ல வேண்டும் .சும்மா வந்து கும்மி அடிக்க கூடாது அப்படின்னு சொன்னாரு .சரி நானும் கருத சொல்லலாமேன்னு இங்க வந்து கமெண்ட் டிபே பண்ணி முடிகிரதுகுள்ள அவர் தன இந்த ப்ளாக் ல முதல் ஆளா கமெண்ட் போட்டிருக்காரு .....
நல்ல கருத்துள்ள கமெண்ட்ப்பா...........
இது எப்படி இருக்கு .........//

என்ன்ன்ன்னா மக்கா!!! நான் என்ன சொன்னேன் தெளிவா புரிஞ்சிட்டு சொல்லுங்க மக்கா. சாட் திரும்பி படிங்க.... :) . இன்னும் 100 வருஷம் ஆனாலும் நான் கும்மி அடிப்போன்... நக்கலா பதிவு எழுதுவேன்....

Gayathri said...

வாழ்த்துக்கள் கலக்குங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/TERROR-PANDIYAN(VAS) said...

உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு!!!! //


எலேய் சம்பளம் கொடுக்குற ஆபீஸ் ல என்னைக்காவது ஒழுங்கா வேலை பாத்திருக்கியா?

சௌந்தர் said...

என்ன்ன்ன்னா மக்கா!!! நான் என்ன சொன்னேன் தெளிவா புரிஞ்சிட்டு சொல்லுங்க மக்கா. சாட் திரும்பி படிங்க.... :) . இன்னும் 100 வருஷம் ஆனாலும் நான் கும்மி அடிப்போன்... நக்கலா பதிவு எழுதுவேன்../////

@@@terror
நீங்க எழுத மாட்டிங்க அப்படி கும்மி அடிக்க மாட்டிங்க

கருடன் said...

@சௌந்தர்
//நீங்க எழுத மாட்டிங்க அப்படி கும்மி அடிக்க மாட்டிங்க//

ஏன் ஏன் ஏன் இந்த கொலைவெறி?? லைட்டா நல்லவன் மாதிரி நடிச்சி பாத்தேன். அதுக்குள்ள..... இப்படி ஒரு முடிவு எடுத்துட்ட..

வெங்கட் said...

எனக்கு ரஜினி படமும் பிடிக்கும்.,
ஷங்கர் படமும் பிடிக்கும்..

ரஜினிக்கு - படையப்பா
ஷங்கர்க்கு - முதல்வன்

இதை மீறி ஒரு படம் வரணும்..
அந்த அளவு எதிர்பார்ப்பு
இவங்க கூட்டணிக்கு இருக்கு..

ஆனா " சிவாஜி " அந்த அளவு
என் Expectation-ஐ நிறைவேத்தலை..

Let us wait & See " எந்திரன்.. "

அனு said...

எங்க ஊருல ரிலீஸும் ஆகியிருக்கு..
டிக்கட் விலையும் நார்மலா தான் இருக்கு..
தியேட்டர்ல சீட்-டும் கிடைக்குது..
ஆனா, வீட்டுத் தலைவர் மூணு நாளைக்கு ரொம்ப பிஸி :(

ஏற்கனவே தலைவர் படத்த பாக்க சான்ஸ் இருந்தும், பாக்க முடியலயேன்னு ஒரே ஃபீலிங்க்ஸ்-ல இருக்கேன்.. இந்த நேரம் பார்த்து இப்படி ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்களே.. இதெல்லாம் சரி இல்ல.. :( :(

தியேட்டர்ல வர்ற விசில் சத்தத்துல உங்களுக்கு எந்த டயலாக்-க்கும் கேக்கக் கூடாதுன்னு வேண்டிக்கறேன்..

DR.K.S.BALASUBRAMANIAN said...

அட பாவிகளா........................

elamthenral said...

mmm thalaivar padam varuthu...paarpom ethuvarai ettapogirathu endru.. nice... all the best

vaasagi said...

enga oorula (US) naalaike release adhuvum iMAX-la poduranga, enna ticket-dhan jaasthi, $40, irundhalum thalaivar padamache vitruvoma? enjoy pannunga ;)

Prakash said...

சிவாஜி படம் முடிந்து வெளியே வரும் போது நீங்க Rs.500 மதிப்புள்ள lunch box தொலைத்ததை ஏன் சொல்லவில்லை ... உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு .. நம் பணம் கர்நாடகாவில் சொத்து சேர்பதற்கு .. வாழ்க தமிழ்

அருண் பிரசாத் said...

@ Prakash
ஹி ஹி ஹி, எவனோ சம்பாதிக்கு தேர்தலுக்கு நீங்க ஓட்டு போடலையா? எவனோ சம்பாதிக்கும் பணத்திற்கு நீங்க கிரிக்கெட் பார்கலையா? எவனோ எடுக்கும் பல படங்களை நீங்க (கல்யாணம் ஆகியும்) தனியா போய் பார்கலையா?

படத்தை படமா பார்த்து ரசிங்க தம்பி. அடுத்த வேளை சோறு நீங்க உழைச்சாதான் கிடைக்கும். ரஜினியோ, பிரபாகரனோ, கலைஞரோ போடமாட்டாரு

(@ all
இது என் சொந்த தம்பிதான், எங்களுக்குள்ள இப்படிதான் விளையாடிப்போம் கண்டுக்காதிங்க)

கருடன் said...

@அருண்
//சிவாஜி படம் முடிந்து வெளியே வரும் போது நீங்க Rs.500 மதிப்புள்ள lunch box தொலைத்ததை ஏன் சொல்லவில்லை ... //

என்னா lunch box தொலச்சிடாரா?? என் அருண் ஒரு லஞ்ச் பாக்ஸ் கூட பத்திரமா பாத்துக தெரியல நீ எல்லாம் சிவாஜி பாக்கனுமா?

கருடன் said...

@Prakash

// எவனோ சம்பாதிக்கும் பணத்திற்கு நீங்க கிரிக்கெட் பார்கலையா? எவனோ எடுக்கும் பல படங்களை நீங்க (கல்யாணம் ஆகியும்) தனியா போய் பார்கலையா?//

இதுக்கு எல்லாம் நாங்க பதிவு எழுதினமா?? போய் புள்ள குட்டியை படிக்க வைங்க அண்ணானு சொல்லுங்க பிரதர்....

கருடன் said...

@அருண்
//ளா! சனிக்கிழமை நான் “எந்திரன்” பார்க்க போறேனே! தமிழ் படமே ரிலிஸ் ஆகாத மொரீசியஸ்-இல் தலைவர் படம் ரிலீஸ்.... ஜாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....
//

அங்க போய் என்ன என்ன தொலைக்க போறியோ!!!

அன்பரசன் said...

நாங்களும் சனிக்கிழமை போறோம்ல.

GSV said...

:( ennala eppa parka mudiyummunu sollave mudiyalaiye.....

அனு said...

நாங்களும் பாத்துட்டோம்ல!!!

என்ன இருந்தாலும் தலைவர் தலைவர் தான்!!!