Cricket Countdown....

Wednesday, September 8, 2010

என்னது இவர் யாரா?

வருடம் 1980,
செப்டம்பர் 8....


நல்ல இடியுடன் கூடிய மழை,
திடீரென வெட்டிச்சென்றது ஒரு வெளிச்சம்,
இதை அனைத்தையும் தாண்டி ஒரு குழந்தையும் அழுகுரல்.

 “ஆண்பிள்ளை பிறந்து இருக்குங்க” என செவிலியர் சொல்ல, குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சினை தெரியாமல்.

பள்ளி செல்லும் காலம் வந்தது. பள்ளியில் இவருடைய குறும்புதனம் ஆரம்பமானது.யாராவது அடித்தால் பூத்தொட்டி கொண்டு அடிப்பது, ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு பழைய சினிமா பற்றி கேள்வி கேட்பது, ஓவராக மொக்கை போடுவது என இவருடன் அவையும் வளர ஆரம்பித்தது

சரி, காலேஜ் சென்றால் சரியா போகும் என்று பார்த்தனர். ஆனால் அங்கே சென்று, ஸ்ட்ரைக் செய்கிறேன் பேர் விழி என்று போலிஸ் வந்தவுடன் இடத்தை விட்டு ஓடுவது, பஸ் கண்ணாடியை உடைத்து நம்பி உடன் வந்த நண்பனை தர்மஅடிவாங்க வைப்பது என ஓவர் அலும்பு பண்ண ஆரம்பித்தார். ஒரு சினிமா விடாமல் பார்த்து டயலாக்கா விட ஆரம்பித்தார். குறிப்பாக சரத்குமார் படம்னா ரத்தம் சிந்தியாவது பார்த்துட்டு வருவார்.

இவர் தொல்லை தாங்காமல் நாட்டைவிட்டே துரத்தி சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பினார்கள் அங்கேயும் ஆபிஸில் Farmville விளையாடியும், பிளாக் ஆரம்பிச்சும் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கொடுமைப்படுத்தினார்.

சார், பெல்ட் கட்டாம வந்துட்டாரு அதான் இடுப்புல கை

இது ஒத்துவராது என்று சொல்லி ஒரு போலிஸ் வேலை கொடுத்தால் அதையும் காமெடியாக மாற்றி அங்க அங்க போய் அடிவாங்குகிறார். ஏன் தனக்கு கிடைத்த அவார்டை கூட பத்திரமா வைத்துக்கொள்ள தெரியாமல் ஒரு களவாணியிடம் குடுத்துவிட்டு முழித்தவர் இவர்.

அப்படிப்பட்ட இவர் இன்றைக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருஷம் இவருக்கு திருமணம் ஆகி நாங்கள் பெறும் (?!?!) இன்பம் அனைத்தையும் பெற இறைவனை வேண்டுவோம்.

டிஸ்கி: என்னது இவர் யாரா? சத்தியமா, இது யாரை பற்றிய பதிவும் இல்லை, அதே போல இங்க கொடுத்து இருக்குற லிங்க் வேற ஒருவர் பிளாக்குக்கு டைவர்ட் ஆச்சுனாலும் அவருக்கும் இந்த பதிவுல சொல்லபட்டவருக்கும்  அந்த படத்தில் இருப்பருக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ!.


பதிவுலக வரலாற்றில் முதன் முதலாக ஒருவருக்கு என் பதிவையும் சேர்த்து 4 வாழ்த்து(?!?!) பதிவுகள்.  மற்ற 3க்கும் இங்க போய் பாருங்க

ஒன்று
இரண்டு
மூன்று

அங்க போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டுட்டு போங்க.


55 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuuu

Anonymous said...

just mis :(

Anonymous said...

me Come back soon :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யார் தல இது போட்டோ வுல ரொம்ப அழகா இருக்கானே. தம்பி உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஹாப்பி பர்த் டே போலிஸ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அர்ச்சனை பண்ண நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன். அதுவரைக்கும் நீங்க இங்க அர்ச்சனை பண்ணுங்க..

Unknown said...

உங்க பிறந்த நாளான இன்று..
ஒரு மறக்க முடியாத நாள்...
கண் தானம் பண்ணுங்க...
உங்கள யார்ன்னு நீங்க கேட்க வேணாம்....
எல்லோரும் உங்க கண்களைத்தான் பார்த்துதான் பேசுவாங்க...
வாழ்க வளமுடன் !

Unknown said...

donate your eyes...the people will say who u are...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Happy birthday...to photo la irukkaravar.. :)

என்னது நானு யாரா? said...

சிரிப்பு போலிஸ்சுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

அப்புறம் அருண்! நானும் யோசிச்சி பார்த்து, கௌவரவமா தானம் கொடுக்கிற

http://www.bhookh.com/index.php லிங்கை மட்டும் என் வலைபக்கத்தில் இணைச்சிருக்கேன். அவங்க மனசை காயபடுத்தாத மாதிரி தானம் கொடுக்குறது எனக்கு சந்தோஷம்.

அவர்களை அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி அருண்!!!

என்னது நானு யாரா? said...

@ஆகாயமனிதன்:

//donate your eyes...the people will say who u are...//

உங்க கருத்து அருமை. மண்ணுக்குள்ள போகிற கண்களை தானம் செய்வோமே! நல்ல விஷயம் சொல்றீங்க!

அதோடு கூட வருஷத்திற்கு ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோமே!

அந்த தானம் செய்கிற நாள் நம்முடைய பிறந்த நாளாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி!

என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?

Chitra said...

HAPPY BIRTHDAY, Ramesh - Sirippu Police!

கருடன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரமேசு....

சௌந்தர் said...

சிரிப்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

pinkyrose said...

Happy birthday...to photo la irukkaravar.. :)


repeatuuuuuuuuuuuu

இம்சைஅரசன் பாபு.. said...

//பதிவுலக வரலாற்றில் முதன் முதலாக ஒருவருக்கு என் பதிவையும் சேர்த்து 4 வாழ்த்து(?!?!) பதிவுகள்//

அருண் என்னோட பதிவுல தேவாவும் ஒரு கவிதை போடிருகர் அதனால ஐந்து-ன்னும் வசுகலம்

மங்குனி அமைச்சர் said...

பஸ்ட்டு வால்த்திகிர்றேன் , (இரு படிச்சிட்டு வர்றேன் )

மங்குனி அமைச்சர் said...

இந்த கள்ளிப்பால் மேட்டர் ஒன்னு இருக்கே அது அந்த ஊரு மக்களுக்கு தெரியாது போல .
ஏம்பா அந்த காலத்துல "தமிழ் படம்" வெளியாகலையோ ?

கருடன் said...

@மங்குனி அமைசர்
//இந்த கள்ளிப்பால் மேட்டர் ஒன்னு இருக்கே அது அந்த ஊரு மக்களுக்கு தெரியாது போல .//

என்னாது கழுதைக்கு கள்ளிபால் கொடுக்கலாம?

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@மங்குனி அமைசர்
//இந்த கள்ளிப்பால் மேட்டர் ஒன்னு இருக்கே அது அந்த ஊரு மக்களுக்கு தெரியாது போல .//

என்னாது கழுதைக்கு கள்ளிபால் கொடுக்கலாம?///

சும்மா ஒரு டிரையல் தான் தான் . குட்டியாவது அழகா பைரக்குமில்ல (கள்ளிப்பால் குடிச்சா குட்டி பிறக்குமா?)

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வெங்கட் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் to ரமேசு.

கருடன் said...

எலேய் எல்லாம் எங்க போனிங்க?? வந்து கும்முங்கபா... உங்க வசதிக்குதான் நாலு பூத் திறந்து இருக்கோம்...

இம்சைஅரசன் பாபு.. said...

//இளம் புயல் இம்சை அரசன் பாபு //

என்ன கொடுமை terror இது

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//இளம் புயல் இம்சை அரசன் பாபு //

என்ன கொடுமை terror இது//

கலைலே மப்பா?? பதிவ என் வீட்டுல படிச்சிட்டு கமெண்ட் இங்க போட்டு இருக்க....

Gayathri said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்

செல்வா said...

ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ் கண்ண ரெண்டையும் புடுங்கி உன்னை நொள்ளைய அக்க பாக்குறாங்க (alert ஆகிகோடா ரமேஷ் இன்னும் கல்யாணம் கூட ஆகல)

dheva said...

அட என்னங்கடா.. இன்னைக்கு புல்லா ஒவ்வொரு பிளாக்கா போய் வாழ்த்து சொல்லிட்டே வரதுதான் வேலையா....ஒரு இடத்துல வச்சுக்குவோம் கும்மிய...எல்லோரும் இம்சை பிளாக் வந்துடுங்க.....

அருணு..ஒரு மாசத்துக்கு ஒருத்தன போட்ட போதும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் நீங்க பண்ணினது கொஞ்சம் கூட நல்லா இல்லை. எதுக்கும் ஒரு லிமிட் தான்.என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க. நம்ம சிரிப்பு போலிஸ வச்சு இதோட சேர்த்து மூணு பதிவு(களவாணி, பிளாக்குக்கு சூனியம்) போட்டு நிறைய ஓட்டும் கமேன்ட்சும் வாங்கிருக்கீங்க. அதுக்கு இன்னும் ராயல்டி, கண்ணன் தேவன் டீ, அட்லீஸ்ட் பிளாக் டீ கூட வரலை. என்ன கொடுமை இது. ஒழுங்கா அனுப்புங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ என்னது நானு யாரா?

பங்காளி அருண் ப்ளாக் தலைப்ப பாத்தீங்களா. உங்களை நக்கல் விட்டிருக்காரு. என்னான்னு கேளுங்க.

செல்வா said...

கோவிலில் நானும் ஐயரும்
செல்வா : வணக்கம்க , ரமேஷ் அண்ணா பேருல ஒரு அர்ச்சனை பண்ணனும்.
ஐயர் : எந்த ரமேஷ் ..?
செல்வா : என்ன இப்படி கேட்டுடிருக்கீங்க , உங்களுக்கு எத்தன ரமேஷ் தெரியும்..?
ஐயர் : எனக்கு நிறைய ரமேஷ் தெரியும் , குறிப்பா சொல்லனும்னா நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் தெரியும்.
செல்வா : அவரே தான் .. அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள். அதுக்கு வாழ்த்து சொல்லணும்.
ஐயர் : எனக்குத் தெரியும் அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள் அப்படின்னு. அதான் காலைல போன் போட்டு வாழ்த்தலாம்னு கூப்பிட்டேன். அதுக்கு அவர் " பிறந்தநாளன எல்லோரும் குளிக்கசொல்லி மிரட்டுவாங்க. அதனால நான் அடுத்தவருசம் பிறந்தநாள் வச்சுக்கிறேன் அப்படினாரே.
செல்வா : அதெல்லாம் நாங்க கம்பெல் பன்னி இந்த வருசமே கொண்டாட வச்சிட்டோம். நீங்க அவரு பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க.
ஐயர் : இந்ந்த வருஷம் முதல் அவர் சினிமா புதிர் போடாமல் இருக்கவேண்டுமாய நமக.!
செல்வா : அதெல்லாம் வேண்டாம், அவரு அதைய நிறுத்தமாட்டார். வேற சொல்லுங்க.
ஐயர் : இந்த வருடம் முதல் அவர் அண்ணன் மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று பல்பு வாங்காமல் இருக்கேவேண்டுமாய நமக.!
செல்வா : ஐயோ , அதைய அவரு எப்படி விடுவாரு..? வேற சொல்லுங்க .
ஐயர் : இந்த வருடம் முதல் அவருக்கு இங்கிலீஸ் பேசி பழக வேண்டுமாய நமக .!
செல்வா : ஏன் நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?
ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!
செல்வா : அப்பாடா , இப்பத்தான் ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!!

பெசொவி said...

Happy Birthday, Ramesh!

pinkyrose said...

கோமாளி!

என்ன கொடும இது

எல்லா ப்ளாக்லயும் பூசாரியா கூட்டிட்டு வந்தாச்சு

சுசி said...

வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////Balaji saravana சொன்னது…

ஹாப்பி பர்த் டே போலிஸ்!//

தேங்க்ஸ்

//ஆகாயமனிதன்.. சொன்னது… உங்க பிறந்த நாளான இன்று..
ஒரு மறக்க முடியாத நாள்...
கண் தானம் பண்ணுங்க...
உங்கள யார்ன்னு நீங்க கேட்க வேணாம்....
எல்லோரும் உங்க கண்களைத்தான் பார்த்துதான் பேசுவாங்க...
வாழ்க வளமுடன் !//

கண்டிப்பா பண்றேன் சார்

//Ananthi சொன்னது… Happy birthday...to photo la irukkaravar.. :)// தேங்க்ஸ்

//என்னது நானு யாரா? சொன்னது… சிரிப்பு போலிஸ்சுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!//

நன்றி பங்காளி..

//மங்குனி அமைசர் சொன்னது… பஸ்ட்டு வால்த்திகிர்றேன் , (இரு படிச்சிட்டு வர்றேன் )//

நன்றி..

//மங்குனி அமைசர் சொன்னது… இந்த கள்ளிப்பால் மேட்டர் ஒன்னு இருக்கே அது அந்த ஊரு மக்களுக்கு தெரியாது போல .
ஏம்பா அந்த காலத்துல "தமிழ் படம்" வெளியாகலையோ ?//

அடப்பாவிகளா!!!

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… @மங்குனி அமைசர்
//இந்த கள்ளிப்பால் மேட்டர் ஒன்னு இருக்கே அது அந்த ஊரு மக்களுக்கு தெரியாது போல .//

என்னாது கழுதைக்கு கள்ளிபால் கொடுக்கலாம?//

யோவ் டெரர் மங்கு உன்னை பத்தி சொல்லலை. என்னை பத்தி சொல்றார்...

//பதிவுலகில் பாபு சொன்னது… பிறந்தநாள் வாழ்த்துக்கள்..//

நன்றி

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… @இம்சைஅரசன் பாபு..
//இளம் புயல் இம்சை அரசன் பாபு //

என்ன கொடுமை terror இது//

கலைலே மப்பா?? பதிவ என் வீட்டுல படிச்சிட்டு கமெண்ட் இங்க போட்டு இருக்க....//

அவன்தான் குடிகாரப் பயலாச்சே..

//Gayathri சொன்னது… பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்// தேங்க்ஸ்

@ செல்வா தேங்க்ஸ்

//சுசி சொன்னது… வாழ்த்துக்கள்../// நன்றி

வெங்கட் said...

@ அருண்.,

// நல்ல இடியுடன் கூடிய மழை,
திடீரென வெட்டிச்சென்றது ஒரு வெளிச்சம்,
இதை அனைத்தையும் தாண்டி ஒரு
குழந்தையும் அழுகுரல். //

இந்த குழந்தை பிற்காலத்தில
இந்த மாதியெல்லாம் ரவுசு
பண்ண போகுதுன்னு தெரிஞ்சிதான்
அன்னிக்கு வானம் கதறி., கதறி அழுததோ..?!!

Anonymous said...

many many happy returns of the day to you ramesh ..நீங்க ரொம்ப கொடுதுவெச்சவர் தான் ரமேஷ் இப்பிடி நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்கே அதான் ..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அனு said...

எந்த ரத்தபூமியா இருந்தாலும் அலட்டாம அங்க போய் காத்து வாங்கிட்டு வர்ற அளவுக்கு தில் உள்ள ஒரே போலிஸ், நம்ம சிரிப்புப் போலிஸ் தான்... அவருக்கு என் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!!!

ரிஸ்க் எடுக்குறது எல்லாம் இவருக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி.. அதனால, சீக்கிரமே அடுத்த ரிஸ்க் எடுத்து எங்கள் Bandwagonல் சேர வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//sandhya சொன்னது…

many many happy returns of the day to you ramesh ..நீங்க ரொம்ப கொடுதுவெச்சவர் தான் ரமேஷ் இப்பிடி நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்கே அதான்//


ஆமாங்க. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு பயமாவும் இருக்கு. இவங்களுக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்???

ப்ரியமுடன் வசந்த் said...

@ ஹைய்யய்யோ லேட்டாயிடுச்சே இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ் ! சாரிப்பா!

GSV said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...

@ vasanth thanks maams

கருடன் said...

ரமேஷ்
//ஆமாங்க. ரொம்ப சந்தோசமாவும் இருக்கு பயமாவும் இருக்கு. இவங்களுக்கெல்லாம் நான் என்ன பண்ண போறேன்???
//

நீ ஒன்னும் செய்ய வேண்டாம்... எல்லாம் நாங்க பாத்துகிறேம்...

அருண் பிரசாத் said...

//நீ ஒன்னும் செய்ய வேண்டாம்... எல்லாம் நாங்க பாத்துகிறேம்...//

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏ

அருண் பிரசாத் said...

@ வசந்த்
//ஹைய்யய்யோ லேட்டாயிடுச்சே இனிய பொறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ் ! சாரிப்பா!//

ரொம்ப ஃபீல் பண்ணாதிங்க, எங்களுக்கு கூட இன்னும் ஒரு பீஸ் கேக் கூட தரலை

கருடன் said...

50

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

என்னய்யா... கமெண்ட் 50 வந்துடுச்சு ஆனா ஓட்டு 22 லயே நிக்குது, இதுல 2 நெகட்டிவ் ஓட்டு வேற... அவ்வளோ எதிரிகளா தல உங்களுக்கு?

கருடன் said...

// “ஆண்பிள்ளை பிறந்து இருக்குங்க” என செவிலியர் சொல்ல, குடும்பமே மகிழ்ச்சியடைந்தது. பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சினை தெரியாமல்.//

”சாத்தான் பிறந்து இருக்கு” என்று சொல்லி செவிலியர் ஓட. குடும்பமே பயத்தில் உறைந்தது... பிற்காலத்தில் வரப்போகும் பிரச்சனை அறிந்து முகம் வெளிறியது...

கருடன் said...

//பள்ளி செல்லும் காலம் வந்தது. பள்ளியில் இவருடைய குறும்புதனம் ஆரம்பமானது.யாராவது அடித்தால் பூத்தொட்டி கொண்டு அடிப்பது, ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு பழைய சினிமா பற்றி கேள்வி கேட்பது//

ரத்தம் குடிக்கும் காலம் வந்தது. பள்ளியில் இவர் வில்லத்தனம் ஆரம்பித்தது... யாரவது அடித்தால் திருப்பி கடிப்பது. ஆசிரியர் கேள்வி கேட்டால் பதிலுக்கு அவர் ஈரலை கேட்பது...

கருடன் said...

//சார், பெல்ட் கட்டாம வந்துட்டாரு அதான் இடுப்புல கை //

Phant பிடிச்சிட்டு நிக்கறார் விளக்கமா சொல்லுங்க...

Rajkumar said...

உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் தமிழில் பின்னூட்டமிடும் வசதியை ஏற்படுத்தித் தரும் கமெண்ட் பகுதியில் தமிழ் தட்டச்சுப் பலகை அமைக்கும் முறை இப்போது வந்து விட்டது, உங்கள் வலைமலரில் இந்த தொழில் நுட்பத்தை அமைத்து அதிக பின்னூட்டங்களைப் பெறுங்கள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்