நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்வதில் தப்பில்லை. இப்பொழுது இல்லையெனும் என்றாவது, யாருக்காவது உதவும் என்ற எண்ணத்தில் உருவானது இந்த பதிவு. (நாமதான் மத்தவங்களுக்கு உதவுறதுல கர்ணனுக்கு பக்கத்து வீடாச்சே)
NGPAY - இந்த வசதியை பற்றி அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு தெரியும். இது ஒரு Mobile Software. (அப்பிடியா, தல ரொம்ப படிச்சவனு காட்டிக்குதோ...) இதன் மூலம் நீங்கள் ரயில் டிக்கட், தனியார் பஸ் டிக்கட், சினிமா டிக்கட், (பிளாக் டிக்கெட் கிடைக்குமா?) ஷாப்பிங் போன்ற ஏராளமான சேவைகள் பெறலாம். ஓசி கிடையாது. (சொல்லிட்டாருயா... எவன் ஓசில ஒத்தை பைசா கொடுக்கறது அதுவும் உனக்கு...)
இதை உங்கள் GPRS உள்ள மொபைலில் நிறுவி, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அவர்களுடன் இணைந்துள்ள பல மேற்சொன்ன நிறுவனங்களின் சேவையை நீங்கள் சுலபமாக பெறலாம். (இதுக்கு மொபைல் ஆன் பண்ணனுமா, சிம் போடனுமா, பெலன்ஸ் இருக்கனுமா?)
இதை உங்கள் GPRS உள்ள மொபைலில் நிறுவி, உங்கள் கிரெடிட் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்பு அவர்களுடன் இணைந்துள்ள பல மேற்சொன்ன நிறுவனங்களின் சேவையை நீங்கள் சுலபமாக பெறலாம். (இதுக்கு மொபைல் ஆன் பண்ணனுமா, சிம் போடனுமா, பெலன்ஸ் இருக்கனுமா?)
இந்த NGPAY மூலமாகதான், நான் எல்லா ரயில் டிக்கெட்களையும் புக் செய்வேன். காரணம்,
1. என் வேலை. எப்பொழுது எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது.
2. மற்ற இடத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்ய இன்டர்நெட் சென்டரை தேடி அலைய முடியாது (வேலை செய்யாம ஊரை சுத்தினதை எப்படி பில் டப் கொடுத்து சொல்லுறத பாரு...)
2. மற்ற இடத்திற்கு செல்ல டிக்கெட் புக் செய்ய இன்டர்நெட் சென்டரை தேடி அலைய முடியாது (வேலை செய்யாம ஊரை சுத்தினதை எப்படி பில் டப் கொடுத்து சொல்லுறத பாரு...)
3. கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவதால், அதிகபடியான பணம் கையில் வைத்திருக்க தேவையில்லை (கைல காசு இல்லைன்றத டீசண்டா சொல்லி இருக்கீரு)
4. புக் செய்தவுடன் டிக்கெட் மெயிலில் (இது E mail, ஹவுரா மெயில் இல்லை) அனுப்பிவிடுவார்கள்
5. தட்கால் டிக்கெட் கண்டிப்பாய் கிடைத்துவிடும். சர்வர் ஜாம் ஆகி இன்டர்நெட் சைட் ஓப்பன் ஆகவில்லை என்ற பிரச்சினை குறைவு.
6. டிக்கெட் Availability யை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
7. எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியும். மொபைலில் சிக்னல் இருந்தால் போதும்
ஒருமுறை நான் வேலை விஷயமாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி இருந்தேன் (பாவம் அங்க எவன் இவர் மொக்கைக்கு மாட்டினானோ?) . மறுநாள், நான் விசாகபட்டிணத்தில் இருக்க வேண்டும் ( இப்போதான் தெரியுது ஆந்திரால ஏன் அவ்வளோ பிரச்சினைனு...). இரவு 11 மணி ரயிலில் டிக்கட் புக் செய்தாகிவிட்டது. திடீரென, அன்று ஓங்கோல் என்ற இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம். விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் 3 மணி நேர பயணம். (நடந்து போனா கூடவா 3 மணி நேரம்? ) எப்படியாவது இரவு திரும்பி விடலாம் என்று காரில் கிளம்பி விட்டேன். ஆனால் அங்கு தாமதமாகிவிட்டது. ஓங்கோலில் இருந்து கிளம்பியதே இரவு 8 மணிக்குதான்.
எப்படியும் 11 மணி ரயிலை பிடிக்க முடியாது. ஏனெனில், விஜயவாடாவில் ரூம் காலி செய்ய வேண்டும், உடன் வரும் நண்பர்களுக்காகவாவது சாப்பிட வேண்டும், (அதை சொல்லு முதல்ல... அந்த வேலைதான முக்கியம்...) டாக்ஸி செட்டில் செய்ய வேண்டும். அப்பொழுது கபாலத்தில் கனபொழுதில் உதித்தது ஒரு யோசனை. (அதான, எப்பவுமே லேட்டாதான மேல்மாடி வேலை செய்யும்...) உடனே இரவு ரயில் டிக்கெட்டை கான்சல் செய்தேன். மறுநாள், காலை 6 மணி ரத்னாசல் எக்ஸ்பிரஸில் புக் செய்தேன். (ராத்திரி தூங்க வழி செஞ்சாச்சினு சொல்லுங்க...) எல்லாம் NGPAY மூலம் வரும் வழியிலேயே காரில் இருந்தபடியே செய்தேன். டிக்கெட்டும் மெயிலில் அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த பிரச்சினை, டிக்கெட் பிரிண்ட் எடுப்பது. வழியில் ஏதாவது பிரெளசிங் சென்டர் தென்படுகிறதா என்றால், இல்லை. (காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...) விஜயவாடா சென்று சேர்ந்தது இரவு மணி 12. அங்கும் கடைகள் குளோஸ். காலை 5.30 க்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்.
அடுத்த பிரச்சினை, டிக்கெட் பிரிண்ட் எடுப்பது. வழியில் ஏதாவது பிரெளசிங் சென்டர் தென்படுகிறதா என்றால், இல்லை. (காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...) விஜயவாடா சென்று சேர்ந்தது இரவு மணி 12. அங்கும் கடைகள் குளோஸ். காலை 5.30 க்கு ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்.
என்ன செய்ய?
எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?
விடையை யூகித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். மீதி அடுத்த பதிவில் தொடரும்..... (அடுத்த பதிவுவேறயா... வெளங்கிடும்...)
63 comments:
நல்ல பயனுள்ள தகவல்..
நகைச்சுவையுடன் கூறிய விதம் அருமை..
பகிர்வுக்கு நன்றி...
//
என்ன செய்ய?
எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?//
சிரிப்பு போலிஸோட நண்பர் அப்டின்னு சொல்லிருப்பீரு. உடனே உங்களை டிடிஆர் மன்னிச்சு விட்டிருப்பாரு.
ரயில் நிலையம் சென்று அங்கு முன் கூட்டியே சொன்னால் பிரிண்ட் அவுட் தருவார்கள்.. ( என்னா கண்டுபிடிப்பு )
பயனுள்ள இடுமை தம்பி....! கணிப்பு கூற பொறுமை இல்லை..உன் பதிவுக்காக காத்திருக்கிறோம்!
@ வெறும்பய
நன்றி பாஸ், பதில் சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்குமே
@ ரமெஷ்
என்னை உதை வாங்க வைக்காம விடமாட்டீர் போல
@ கே ஆர் பி
ரயில்வே ஸ்டேஷன்ல எந்த ஆபிஸர் நம்மள மதிச்சி இதை எல்லாம் செய்ய போறான் அண்ணா.
அப்படி கொடுப்பதில்லை அண்ணா, ஆனா நல்ல சிந்தனை
I guess you might have shown the ticket in your mobile. hope they allow this.
எங்களுக்கு எப்படி தெரியும் ஹா ஹா அடுத்த பதிவில்....
உங்க கிட்ட மடி கணினி இருந்தா அதில் இருக்கும் டிக்கெட் காண்பித்து இருக்காலம்...அவ்வவ்....
இணையம் மூலம் பதிவு செய்யப்பட பயணச்சீட்டின் நகல் இல்லையெனில் அதற்கு முப்பது ரூபாய் பயணச்சீட்டு பரிசோதகரிடம் அபராதமாக் கொடுத்தால் போதுமென நண்பரொருவர் சொல்லியிருக்கிறார். அதற்கு நமது அடையாள அட்டை ஒன்றைக் காட்டி அது நாம்தான் என உறுதி செய்தால் போதும். ஆனால் அனுபவம் இல்லை.
மொபைல் போன்ல சவெ பண்ணி வச்சிருக்குற பைலை ஒபென் பண்ணி காசிருப்பே..., அதெல்லாம் டிடிஆர் ஒத்துக்குவாரு.
@ பெயரில்லா
No its not accepted as per Indian Railways Rules
@ ஜெய்
செல்லாது செல்லாது டிடிஆர் ஒத்துக்கமாட்டாரு
@ செளந்தர்
இல்லை தம்பி, Laptop கொண்டு போகல
@ அரைகிறுக்கன்
நீங்க கரெக்டா பாயிண்டுக்கு வந்துடீங்க, சின்ன மாற்றம் இருக்கு. சுவாரசியத்திற்காக உங்க கருத்தை அப்புறம் வெளியிடுறேன்
///(காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்...///
என்ன கடை வச்சிருக்கும் ..?
NGPAY பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நல்ல பதிவு அண்ணா .!!
அதைய எங்கிருந்து Download செய்வது ..?
//என்ன செய்ய?
எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?
///
*.உங்க நண்பர் யாருக்காவது மெயில் forward பண்ணி எடுத்திருப்பீங்க ..!!
@ செல்வா
www.ngpay.com
சைட்ல போய் உங்க மொபைல் நம்பர் கொடுத்தா அவங்க லிங்க் அனுப்புவாங்க, டவுன்லோட் பண்ணி உபயொகிக்கலாம்
//உங்க நண்பர் யாருக்காவது மெயில் forward பண்ணி எடுத்திருப்பீங்க ..!!//
நான் official டிரிப்ல இருந்தேன், நண்பர்களும் கிடையாது விஜயவாடாவில். சக ஊழியர் என்னுடன் காரில் வருகிறார்.
நாளைக்கு எல்லறோம் மொக்கை வாங்க போறோம்....
If the printed ticket is not shown, we can pay Rs. 50 per ticket as per internet booking rules. But, we must produce proper identity to the TTE
// இந்த NGPAY மூலமாகதான், நான்
எல்லா ரயில் டிக்கெட்களையும் புக் செய்வேன். //
நீங்க போக போறது ஒரு ரயில்ல..,
அப்புறம் எதுக்கு எல்லா ரயில்
டிக்கெட்டையும் புக் பண்றீங்க..?!!
நீங்க என்ன ரயில்வே டிக்கெட் புக்கிங் ஏஜெண்டா..??
தல ,
என்ன ஒரு ஆச்சர்யம் ..,மொரிஷியஸ் ல கூட ,விஜயவாடா,ongole ,விசாகபட்டினம் எல்லாம் irukiratha
ஹுஹும் ...,இது சரில்லை ...எல்லாம் கமெண்ட் moderation போட்டு அலையுதுங்க ....:) எதுக்குனு தான் தெரியலை
எல்லா பூத் லயும் வோட்டு போட்டாச்சு தல
@ செளந்தர்
முடிவே பண்ணிடீங்களா? நான் மொக்கை மட்டும் தான் போடுவேன்னு, நல்ல பதிவும் போடுவேன்பா
@ வெங்கட்
தல, ஏன் இந்த கொலைவெறி?
@ நரி
இப்படி ஓவரா ஆராய்ச்சி பண்ணகூடாது
@ பெ.சொ.வி
அடிச்சாரு பாருய்யா, அததாங்க பண்ணேன். உங்க கமெண்ட் அப்புறம் பப்ளிஷ் செய்யரேன்
@ நரி
//எல்லா பூத் லயும் வோட்டு போட்டாச்சு தல//
நீ ரொம்ப நல்லவன்யா. தமிழ்மணம் விட்டுடயே
@அருண்
//நமக்கு தெரிந்ததை நாலு பேருக்கு சொல்வதில் தப்பில்லை//
என்பா அருண்... உனக்குதான் உன் வீட்டுக்கே வழி தெரியாது... அதுல இந்த ஆசை வேறைய?
ஸ்ஸாப்பா......... நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமா.......
@அருண்
//1. என் வேலை. எப்பொழுது எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது. //
ஏன்? எங்க போனாலும் அடிச்சி தூரத்துவாங்கள?
if u don'r hav printout, pay 50 rupees as fine. ttr will produce a ticket for you. make sure u have the identity evidence. Happy Journey dude!
@அருண்
//எப்பொழுது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் புக் செய்யவோ, கேன்சல் செய்யவோ முடியும். மொபைலில் சிக்னல் இருந்தால் போதும்//
மொபைல் வீட்டுல வச்சிட்டு நாம ஆபீஸ் இருந்து பண்ண முடியுமா? எங்க விட்டுல மொபைலில் சிக்னல் நல்ல இருக்கும்... (நீங்க மொபைல் கைல இருக்கணும் இங்க சொல்லல...)
நல்ல பகிர்தல்..
அப்புறம் எனக்கு கேள்வி கேட்டுத்தான் பழக்கம் :))
@அருண்
//எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?//
பிரிண்டர்லதான்.....
என்ன செய்திருப்பேன்?//
சிம்பிள்....என்ன மாதிரி ஒரு புத்திசாலிகிட்ட கேட்டு இருபிங்க...
@அருண்
//@ பெ.சொ.வி
அடிச்சாரு பாருய்யா, அததாங்க பண்ணேன். உங்க கமெண்ட் அப்புறம் பப்ளிஷ் செய்யரேன்//
//@ அரைகிறுக்கன்
நீங்க கரெக்டா பாயிண்டுக்கு வந்துடீங்க, சின்ன மாற்றம் இருக்கு. சுவாரசியத்திற்காக உங்க கருத்தை அப்புறம் வெளியிடுறேன்//
ஹ்ம்ம் ...எங்களுக்கும் பதில் தெரியும்... இருந்தாலும் இரண்டு பேரு செஞ்ச விஷயத்த மூணாவதா நாம செய்யகூடாது எங்க பாட்டி சொல்லி இருக்கு... அதனால நான் சொல்ல மாட்டேன்.... VAS WILL ALWAYS ROCKS UNIQUILY...
Hello sir,
If we provide our Identity proof (voter id, driving license or pan card etc) to IRCTC, they will release the ticket...
this is only the way ...
Note that you didn't get the tatkal tickets at morning 8-9 from ngpay as per latest rules from railways.
NGPay really ஒரு நல்ல அப்ளிகேஷன். நாங்க generally சினிமா டிக்கட் புக் பண்ண use பண்ணுவோம்.. (சினிமா ப்ளான் தான் mostly impromptu-வா டிசைட் ஆகும்)
PNR நம்பர் சொல்லி ID Proof காமிச்சு, 25% ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்தா Duplicate Ticket கிடைக்கும்...என்ன, சொன்னது கரெக்ட் தானே :) [ஆனா, நீங்க சொன்ன டைம்ல டிக்கட் கவுண்டர் திறந்திருக்குமா-ன்னு ஒரு சின்ன டவுட்டு.. :)]
அலைபேசி மூலம் கார்டு விவரங்கள் உபயோகிப்பது எந்த அளவு பாதுகாப்பானது ????
@ யூர்கன் க்ருகியர்
You are right. will post your comment later
@ ஜீவன்பென்னி
அடுத்த பதிவுக்கு வந்துடுங்க தல
@ Terror
இவ்வளோ வக்கனயா பேசுறீறே பதில் தெரியுமா?
@ சுசி
கேள்வியின் நாயகியோ
@ PVS
Thats only in case of if you lost your ticket in IRCTC site
@ chenayil
oh, thanks for your update
@ அனு
பரவாயில்லையே திரும்பி பத்திரமா வந்துடீங்களா? திருவிழால தொலைஞ்சி போய்டீங்களோனு பார்த்தேன்
நீங்க சொன்னது கவுண்டர்ல புக் ப்ண்ணுற டிக்கெட், i ticket க்கு தான். நான் இங்க சொல்லி இருக்குறது மெயில்ல அனுப்புற e ticket க்கு
@ LK
NGPAY ல உபயோகிக்கறது safe னு மட்டும் தெரியும்
அங்கே தான் சார்ட் ல உங்க பேரு இருக்குமே .ID card காட்டினா போதுமே சார் நாங்களே இப்படி travel பண்ணிருக்கோம்...ஐம்பது ரூபாய் அபராதம் மட்டும் கட்ட வேன்டும் அவ்ளோதான்...
மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் . மிகவும் தெளிவான விளக்கத்துடன் கூடிய சிறந்தப் பதிவு . பகிர்வுக்கு நன்றி
@ பனித்துளி சங்கர்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
@ Gayathri
ஆம், அந்த விதிமுறையை தெரியபடுத்தவே இந்த பதிவு. உங்கள் கருத்தை மாலை வெளியிடுகிறேன்
நல்ல பதிவு....செய்தி சொல்ற பதிவுல கூட...சஸ்பென்ஸா...செம!.....அசத்துங்க.........
ஹ்ம்ம் ,
அப்புறம் ..சீக்கிரம் கருத்தை வெளியிடையா ...இது எப்படி சாத்தியம்னு இங்க CNN -IBN -ராஜ்தீப் சர்தேசாய் ,TIMES NOW -அர்னாப் கோஸ்வாமி ,NDTV -பர்க்ஹா தத் ,சன் டிவி -இள மாறன் எல்லாரும் மக்களுக்கு தெரிவிபதற்காக ஸ்பெஷல் COVERAGE அண்ட் டைரக்ட் RELAY பண்ணபோரங்க
இன்னும் நீங்க கமெண்ட் MODERATION தூக்கலியா
@அருண்
//Great Terror!!!!!! எப்பவும் போலவே நீ அறிவாளி நிருபிச்சிட்டயா. 100% ரைட்... உன் கமெண்ட் அப்புறம் பப்ளிஷ் செய்யரேன்//
அட விடுங்க அருண்... இத எல்லாம் பெருசா பேசிகிட்டு...
"காட்டுல காண்டாமிருகம்தான் கடை வெச்சிட்டு இருக்கும்.."
இதுமாதிரி அரிய தகவல்களை அப்பப்போ சொல்லுங்க....
@ ரமெஷ்
வாங்க, கருத்துக்கு நன்றி
@ நரி
உங்க ஆர்வம் எனக்கு புல்லரிக்குது
@ சேலம் தேவா
வாங்க தேவா, தொடர்ந்து வாங்க பல கருத்துகளை சொல்லுறேன்
@ Terror
ராத்திரிலாம் கூகுள்ல தேடியும் பதில் தெரியாம, இப்ப நீங்களே ஒரு பதில் சொன்ன மாதிரி பில்டப் குடுத்துக்கற. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?
யோவ் புதுசா ஒரு இடுகையை போடிருகேன் வந்து பாருமையா
//வாங்க தேவா, தொடர்ந்து வாங்க பல கருத்துகளை சொல்லுறேன்//
நானும் வரட்டா?
நிறைய செய்தி சொல்வீங்களா?
நீங்க ரொம்ப நல்லவர்னு ஊருக்குள்ளே
(நிசசயமா வெளியே கிடையாது-
உள்ளேதான்) பேசிக்கிறாங்க.
இந்த மாதிரி நிறைய கருத்து
சொல்றதனாலதான். அத மட்டும்
விட்டுப்புறாதீக. உங்க சேவை
தொடரட்டும்...டும்...டும்...
@அருண்
// இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?//
என்ன? பதில் வரலயா? சரி மருபடி சொல்ரேன். முதலில் PNR எடுத்துகொள்ளவும்....(தொடரும்)
(சிக்கிரம் பதிவ போடுயா... ரொம்ப நேரம் சமாளிக்க முடியது..)
மீ ஜூட் ரயிலக்கண்டாலே பயம்ணே எனக்கு..!
மொபைல்ல வந்த மெயில அப்படியே மொபைலயே ஜெராக்ஸ் மெஷின்ல வச்சு ஜெராக்ஸ் எடுத்துருப்பீங்களோ?
ஓட்றா வசந்து ஓடு அருண் அடிக்க வர்றார்யா ஓடு ஓடு...
ஓகே ஓகே.. தொடருங்க.. தொடருங்க..
மீண்டும் வருகிறேன்.. :-))
ஓகே ஓகே.. தொடருங்க.. தொடருங்க..
மீண்டும் வருகிறேன்.. :-))
@NIZAMUDEEN
//நானும் வரட்டா?
நிறைய செய்தி சொல்வீங்களா?
நீங்க ரொம்ப நல்லவர்னு ஊருக்குள்ளே//
வதந்திகளை நம்பாதிர்....
@Flash News
//சரியான பதில் சொல்லிய 4 பேரின் கமெண்டையும் இன்று இரவு வெளியிடுகிறேன். இதன் அடுத்த பகுதி நாளை வருகிறது.....//
இது எல்லாம் ஓவர் அலும்பல்...
@ நரி
யோவ், அங்க மொதல் வெட்டே என்னுடையதுதான்
@ Nizamudhin
வாங்க, நான் ரொம்ப நல்லவங்க
@ ப்ரியமுடன் வசந்த்
ஏன் இப்படி? ரூம் போட்டு யோசிங்களோ!
நான்தான் 50. வடை எனக்குத்தான்..
ஒருவேளை, PNR நம்பரைக்காட்டி, டிக்கெட் பரிசோதகரிடம் 50 ரூபாய் Fine கட்டி பயணம் செய்திருப்பீரோ???
வடை கடக்குது விடுங்க...விடை எங்கப்பா..என்னதான் செஞ்சீங்க அப்புறம்.
நீங்க என்னமோ செஞ்சிட்டு போங்க... கிரெடிட்கார்டு மட்டும்தன் வேலை செய்யுமா இல்ல டெபிட் கார்டும் ஓகேவா?
@ Ananthi
சரி, நாளைக்கு வந்து பாருங்க.
@ Terror
//வதந்திகளை நம்பாதிர்.... //
நாங்களாம் அக்மார்க் முத்திரை குத்துன யோக்கியர்கள்
//Flash news//
ஒரு பில்டப்தான், மார்கெட்டிங் டெக்னிக் கண்டுக்காத
//வடை எனக்குத்தான்.//
டிரெயின்ல விக்கற வடைய சாப்பிட்டு இருகீறா?
@ ரமேஷ்
நாளைக்கு வடை, சாரி, விடை நிச்சயம்
@ இரவீந்தர்
ஆமாங்க, அதைதான் செய்தேன். உங்க கமெண்டை இரவு பப்ளிஸ் செய்யரேன்
@ விந்தைமனிதன்
வேலை செய்யும். www.ngpay.com சைட்ல டீடைலா கொடுத்து இருக்காங்க. பாருங்க
//ஹ்ம்ம் ...எங்களுக்கும் பதில் தெரியும்... இருந்தாலும் இரண்டு பேரு செஞ்ச விஷயத்த மூணாவதா நாம செய்யகூடாது எங்க பாட்டி சொல்லி இருக்கு... அதனால நான் சொல்ல மாட்டேன்.... VAS WILL ALWAYS ROCKS UNIQUILY...////
ரொம்ப சரியா சொன்னீக .. நானும் அதனாலதான் சொல்லல..?
@அருண்
//எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?//
எப்பவும் போல இது போங்காட்டம்... பிரிண்ட் இல்லாமல் எப்படி பயணம் செய்து இருப்பேன்? இதன் சரியான கேள்வி... தப்ப கேள்வி கேட்டு எங்களை தப்பு தப்ப பதில் சொல்ல வைத்த அருண் down down...
@அருண்
//எப்படி டிக்கெட் பிரிண்ட் எடுப்பது?
என்ன செய்திருப்பேன்?//
பாண்டி விடாதே..., என்ன கேள்வி கேட்டு, என்ன பதில் எதிர்பாத்திருக்கு இந்த பன்னாடை..., டிக்கெட் இல்லாம எப்படி பயனம் செஞ்சிருப்பேனுதானா கேட்ருக்கனும்... ஹூகும் செல்லாது மறுபடியும் பதிவை போடுயா, நாங்க முதல்லேர்ந்து பின்னூட்டம் போடுறோம்...
"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"
இடுகைக்கு
//அருண் பிரசாத் said...
நல்ல பதிவு பாஸ்//
பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.
Post a Comment