“வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்
இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்”
ஏ பாரதியே!
நீ சொல்லிவிட்டு போய்விட்டாய்!
இங்கு வந்து பார்
செத்து மடியும் எம்மக்களை!
என் செய்வோம் யாம்
எதற்கும் உதவா மானிட பதர்கள் நாங்கள்!!பசி - இந்த ஒரு வார்த்தையை மனதில் இருந்து உச்சரித்து பாருங்கள்,
என்ன காட்சி உங்கள் கண்முன் விரிகிறது?
பாலுக்காக அழும் குழந்தை,
பாலில்லாமல் தவிக்கும் தாய்,
எலும்பாய் தெரியும் ஏழை நாட்டு குழந்தைகள்,
எலிக்கறி சாப்பிடும் விவசாயி,
கஞ்சித்தொட்டியில் காத்திருக்கும் நெசவாளி.
வாழ்க்கையின் பாதையில் இப்படி பல சம்பவங்களை அனுபவித்திருக்கலாம், குறைந்த பட்சம் கேட்டாவது இருக்கலாம்.
ஐநா சபையின் கணக்குபடி 10 நொடிகளுக்கு (Seconds) ஒரு குழந்தை பசியால் இறக்கிறது.
யார் காரணம்? “விதி” என ஒரு வார்த்தை சொல்லி ஒதுங்கி போக முடியாது.
அரசாங்கமா? இயற்கையா? எதிரி நாடா? கடவுளா? யாரை குறை கூறி தப்பிக்கலாம்.
ஒரே ஒரு முறை உங்களை ஒரு கேள்வி கேட்டு பாருங்கள். நன்றாக இருக்கும் நான் மற்றவர்கள் பசி போக்க என்ன செய்தேன்?
அனாதை விடுதிகளுக்கும், முதியோர் இல்லத்திற்கும் வருடத்தில் ஒரு நாளாவது சென்று வருகிறேன், உதவுகிறன் என்று சொல்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
செல்ல நேரம் இல்லை, பணவசதி இல்லை, ஆனால் தினமும் உதவ மனம் உண்டு என விரும்புபவர்களுக்கு நான் வழிகாட்ட நினைக்கிறேன். உங்கள் ஒரு சொடுக்கு (Mouse Click) ஒரு மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு பிடி சோற்றை கொடுக்கிறது என்றால் செய்வீர்களா?
இந்த 2 வெப்சைட்டுக்கும் சென்று பாருங்கள்.
நீங்கள் செய்யும் கிளிக் வேறொரு பக்கத்திற்கு கொண்டு செல்கிறது, அங்கு வரும் விளம்பரங்கள் உங்கள் சார்பாக உணவுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
உடனே, ஒரு கேள்வி வரும், இது உண்மையா? எப்படி நம்புவது? இது போல 100 மெயில் வருகிறது! எல்லாம் பொய்!! என நீங்கள் நினைப்பது புரிகிறது. நானும் அப்படிதான் கேட்டேன், ஆராய்ந்து பார்த்ததில் சில விஷயம் தெரிந்தது.
1) Freerice.com
இது ஒரு ஐநா சபையின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.
இங்கு அறிவு சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டே உதவலாம் - ஆங்கில மொழிஅறிவு சார்ந்த கேள்விகள் default option ஆக இருக்கிறது
விருப்பத்திற்கு ஏற்ப கணிதம், புவியியல், வேதியியல் என பல துறைகளை தேர்ந்து எடுத்து விளையாடி கொண்டே உதவலாம்
எவ்வளவு ஜெயிக்கிறீர்களோ அந்த அளவு உணவு கொடுக்க முடியும்
FAQ பகுதியில் தெளிவான விளக்கமும், செயல்படும் விதமும் கொடுத்து இருக்கிறார்கள்
முடிந்தால் பண, பொருள் உதவியும் செய்யலாம்
உண்மையானது தானா?: New York Times Magazine, USA Today, CBS Evening News, BBC News, Washington Post போன்ற நாளிதழ்களில் இந்த தளத்தை பற்றி நல்ல தகவல்கள் வந்துள்ளது.
2) Bhookh.com
இது இந்திய இளைஞர்களின் முயற்சியால் உருவான வலைதளம் - Registration தேவை இல்லை, Spam கிடையாது.
இதில் உதவ ஒரு எல்லை வைத்து இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு சொடுக்கு மட்டுமே அனுமதி ( IP Address - வைத்து கணக்கிடுகிறார்கள்)
நீங்கள் அலுவலகத்திலும், வீட்டுலும் கிளிக் செய்து 2 முறை உதவலாம்.
FAQ மூலமும், வீடியோ மூலமும் எப்படி செயல்படுகிறார்கள் என விளக்கி இருக்கிறார்கள்
பண, பொருள் உதவியும் செய்யலாம்
உண்மையானது தானா?: Times of India வில் 2006 ல் "Hello, conscience?"என ஒரு கட்டுரை இவர்களை பற்றி வந்துள்ளது.
நண்பர்களே! ஒரு கிளிக் செய்து விட்டு போவதுடன் முடித்து கொள்ளாதீர்கள். வலைதளம் என்னும் ஒரு அரிய ஆயுதம் நமது கையில் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோம்.
என் இந்த பதிவின் மூலம் ஒரு 100 பேருக்கு தெரியும் இந்த விஷயம் உங்கள் வலைதளம் மூலம் ஆயிரம் பேருக்கு சென்றடைய முடியும்.
அனைத்து மக்களும் நல்லவர்களே! உதவ மனம் உள்ளவர்களே! அவர்களின் சூழலும் பொருளாதார வசதியும் அவர்களை தடுக்கிறது. அவர்கள் எல்லாம் இது போல ஒரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், இதை பரவச்செய்வது.
நூறு மெயில்களையும் ஆயிரம் மொக்கைகளையும் பதிவிடும் நாம், நம் தேசிய அவமானத்தை கலைக்க ஒரு பதிவு வெளியிடும் உணர்வு கொண்டிருக்கிறோமா?
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
இனி அது உங்கள் கைகளில்.....
40 comments:
very nice article. i'll comment after my work finished.
நல்ல தகவல். ஆரம்பிச்சிடேன்..... :)
important message.Your tey is the best.we can do it.i wiil do now itself
நல்ல பதிவு பாஸ்...
நிச்சயமா உதவி பண்ணுவோம் அண்ணா.
நம்ம அறிவுக்கும் வேளை கொடுத்த மாதிரியும் இருக்கும் ..
அதே போல நம்ம மனசுக்கும் சந்தோசமா இருக்கும் ..
பதிவு படிச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அருண் ..எதோ எதோ செலவு பண்ணற ஜனங்கள் இந்த மாதிரி ஆளுகளை ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும் ..பகிர்வுக்கு நன்றி
manasukku migavum bhaaram tharakoodiya pagirvu..kandippaaga ennaal mudindhadhai seyven..nandri
நல்ல பதிவுங்க.. கண்டிப்பா செய்யலாம்..
நல்ல பதிவுங்க.. கண்டிப்பா செய்யலாம்
after read ur article i immediately made 500 grains avbl from freerise
Thank You !
recd mesg. from bhook.com "You have donated a cup of staple food to a hungry Indian through the UN.
Please remember to come back tomorrow " & BTW 'bhook' in hindi means 'hunger' in Eng (tamil - 'pasi')
உண்மையில் இந்த பதிவிற்காக உங்களை பாராட்டுகிறேன். நான் செய்து முடித்த பின்னே பின்னூட்டமிடுகிறேன். இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை அவ்வப்போது இடுங்கள்.
நன்றி ஜெய், டெரர், ஹரிணி, மொஹமத், செல்வா
Good Post Arun ......,
ஒரு கிளிக் செய்யுங்க மாமி, நீங்களும் காயத்திரி அது போதும்
நன்றி மாதவன் சார், எஸ் கே
நல்ல தகவல் இதை படிக்கும் போது நாம் என்ன செய்தோம் என்று தோன்ற வைக்கிறது நிச்சயம் உதவி செய்வோம்
@ரமேஷ்
//நல்ல பதிவுங்க.. கண்டிப்பா செய்யலாம்//
ரமேசு... உனக்கு முன்னாடி இருக்க கமெண்ட் காப்பி & பேஸ்ட் பண்ணிட்டு.. கடைசில இருக்க இரண்டு புள்ளி அழிச்சிட்டா அது புது கமெண்டா??
Anyone can do this. Thanks for information
அவசியமான இடுக்கை தோழா, நல்ல விழிப்புணர்வு தகவல் ... வாழ்த்துக்கள் ;
hats off to u
in that site, we are getting 10 grains for each correct answer
நல்ல பதிவுங்க.. கண்டிப்பா செய்யலாம்
//தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!//
ஜகத்தினை அழிப்பதை விட சாப்பாடு வாங்கி கொடுப்பது சுலபம் ......
சிரிப்பு இருக்குமென்று வந்தால் சீரியஸ் மேட்டரை சொல்லிட்டீங்க அருண்!
கண்டிப்பாக அந்த வலைதளங்களுக்கு சென்று பார்கிறேன்.
காலம் மாற வேண்டும்! இதெல்லாம் யானை பசிக்கு சோளபொறி தான்!
பசியின் கொடுமையை, பணம்படைத்தோர் தெரிந்து கொண்டால் தான் நிலைமை மாறும்!
அருண் உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கீங்க
அருமையான் பதிவு அருண் , நல்ல விஷயம்
போன வருஷம், ரெண்டு மூணு தடவை அந்த siteக்கு போய்ட்டு, அப்புறம் spamஆ இருக்குமோன்னு விட்டுட்டேன்..
விளக்கம் தந்ததற்கு நன்றி...
நல்ல பதிவு நல்ல தகவல் அருண்.. நிச்சயம் உதவவேண்டிய விஷயம்
நல்ல பதிவு நல்ல தகவல் அருண்.. நிச்சயம் உதவவேண்டிய விஷயம்
நல்ல தகவல். நல்ல சிந்தனை.
நல்ல பதிவு..!!
உங்க வார்த்தையை நம்பி
இந்த Sites-க்கு போறேன்..
நல்லது நடந்தா சந்தோஷம் தானே..
நல்ல பகிர்வு. நிச்சயம் நம்மால ஆனதை செய்யணும்..
இதுபற்றிய தங்களின் விவர சேமிப்பு
ஆச்சரியம்; அதே சமயம் இதை
பலரும் அறிந்திட வேண்டும் எனும்
நோக்கில் பதிவு செய்த தங்கள்
உயர்ந்த எண்ணத்திற்கு மிக்க நன்றி
கூறிக் கொள்கிறேன். நானும்
இதில் இணைந்து கொள்கிறேன்.
Super... I just started...
பயனுள்ள பதிவு
//@ரமேஷ்
//நல்ல பதிவுங்க.. கண்டிப்பா செய்யலாம்//
ரமேசு... உனக்கு முன்னாடி இருக்க கமெண்ட் காப்பி & பேஸ்ட் பண்ணிட்டு.. கடைசில இருக்க இரண்டு புள்ளி அழிச்சிட்டா அது புது கமெண்டா??///
@ டெரர் நீங்க ப்ராஜெக்ட் ல பேர மட்டும் மாத்துனா புது ப்ராஜெக்ட் னு சொல்லலாம். நாங்க சொல்ல கூடாதா??
நல்ல தகவல். நல்ல சிந்தனை.
Very Well brother.....I will do my best.
Share this matter with ur facebook n twitter.we make chain.do our best
அன்பின் அருண் பிரசாத்
நல்ல செயல்கள் - பகிர்வினிற்கு நன்றி - உதவும் நல்ல உள்ளம் வாழ்க ! செல்கிறேன். செய்வோம்
நல்வாழ்த்துகள் அருண் பிரசாத்
நட்புடன் சீனா
நிச்சயமா உதவி பண்ணுவோம் அண்ணா.
ரமேசு... உனக்கு முன்னாடி இருக்க கமெண்ட் காப்பி & பேஸ்ட் பண்ணிட்டு.. கடைசில இருக்க இரண்டு புள்ளி அழிச்சிட்டா அது புது கமெண்டா??
---arasiala ethu elam sagajamappa...
etha poi detaila visarithukitu...
nala padivu pota valathanum..detaila visarikapidathu..ammam choliputen..
நல்ல தகவல் பாஸ்..
Post a Comment