சென்ற வாரம் ஒரு நாள் வழக்கம்போல தொலைக்காட்சியின் பல்வேறு சேனல்களை மாற்றி கொண்டிருந்த போது, டிஸ்கவரி சேனலில் நிலவில் காலடி வைத்த படங்களை வைத்து ஏதோ காட்டி கொண்டிருந்தார்கள்.
என்ன வென்று பார்க்கலாம், என சில நிமிடம் நிறுத்தியபோது. நிலவிற்கு யாரும் செல்லவில்லை, நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். அந்த நிகழ்ச்சி - MythBusters.
அந்த நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் கொடுத்த விளக்கங்களும், அதை பற்றி நான் இண்டர்நெட்டில் தேடி கண்ட விளக்கத்தையும் தொகுத்து கொடுக்கிறேன்.
முதல் படம்:
Mythbusters கேள்விகள்:
படத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை. நிலவில் காற்று கிடையாது, Vaccum எனப்படும் வெற்றிடமே நிலவு முழுதும் இருப்பதால் கொடி கண்டிப்பாய் பறக்காது.
NASA விளக்கம்: விண்வெளி வீரர் அப்போதுதான் அந்த கொடியை பறப்பது போல வைத்தார், கொடி எப்படி வைக்கப்பட்டதோ அப்படியே இருக்கிறது, பறக்கவில்லை.
இரண்டாவது படம்:
MythBusters கேள்விகள்: வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.
NASA விளக்கம்: நிலவில் உள்ள மணல், ஈர மணல் இல்லை. எரிமலை சாம்பல் போன்ற தன்மையுடையது. இது போன்ற மணலில் காலடி நன்றாகவே பதியும்.
மூன்றாவது படம்:
MythBusters கேள்விகள்: 2 பேர் மட்டுமே சென்ற நிலவில் எப்படி இப்படி ஒரு படம் எடுக்கமுடிந்தது. இருவருமே தெரிகிறார்கள், புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது?
NASA விளக்கம்: கேமரா இருவரின் நெஞ்சிலும் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்டது. அதனால் இந்த புகைப்படம் சாத்தியமே.
நான்காவது படம்:
MythBusters கேள்விகள்: படத்தில் உள்ள பல பொருட்களின் நிழல் வேறு வேறு பக்கத்தில் விழுகிறது. எப்படி ஒரே புகைபடத்தில் பல பக்கங்களில் நிழல் விழும். இது ஸ்டுடியோ விளக்குகளில் மட்டுமே சாத்தியம்.
NASA விளக்கம்: சூரியன், பூமி, வீரர்களின் கவசம், நிலவின் தளத்தில் இருந்து வரும் வெளிச்சம் என பல ஊடகத்தில் (Source) இருந்தும் வருவதால் நிழலின் திசை பல பக்கங்களில் விழுகிறது.
ஐந்தாவது படம்:
Mythbusters கேள்விகள்: இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி? நிழல் மறைத்து கருப்பாக தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.
NASA விளக்கம்: முன்பு சொன்ன அதே பதில்தான். சூரியன், பூமி, நிலவின் தளத்தில் இருந்தும் வெளிச்சம் என பல பக்கத்தில் இருந்தும் வருவதால் வீரர் சிறிது வெளிச்சமாக தெரிகிறார்.
எது எப்படியோ? நிலவை தொட்டார்களோ இல்லையோ. நிலவு கவிஞர்கள் கைகளிலும், ஆராய்ச்சியாளர்கள் கைகளிளும் மாட்டி கொண்டு பாடாய் படுகிறது.
கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....
கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....
64 comments:
nillava muthalla thotttathu naaaaaaaaaaaaaaanthaaan
avvvvvvvvv
i mean intha postukku comment pottathai sonnean
he he he
yaarum auto annuppa kkooodathu soollittean
இதுல இப்படி ஒரு சர்ச்சை இருக்க? உண்மையில் ஆச்சர்யமான விஷயம்..
(நல்லவனா நடிக்கறது ரொம்ப கஷ்டம்)
நல்ல ஆராய்ச்சி அருண்!
ரொம்ப சுவாரசியமா இருக்கு..
நாசா விளக்கம் பத்தி இப்போ தான் தெரிஞ்சுக்கிறேன் :)
இது உண்மையான செய்தி தான் அவர்கள் நிலவுக்கு போகவில்லை
இந்த சர்ச்சை ரொம்ப நாளாக இருக்கு. முன்பு ஒரு முறை ஆனந்த விகடனிலும் இது சம்பந்தமாக ஒரு ஆக்கம் பார்த்த நினைவிருக்கு..
இந்த விஷயம் ரொம்ப நாளா அடிபட்டுக்கிட்டு இருக்கு :-))
இதே கருத்தை வைத்து ஒரு ஆங்கில படமும் வந்தது. அதில் மூன் மிஸன் பெயிலானது மக்களுக்கு தெரியக் கூடாதுன்னு...ஸ்டூடிடோ செட் பண்ணி மக்களுக்கு டிவீல காமிச்சி மக்களை ஏமாத்துவாங்க...
அங்க பாட்டி வடை சுட்டுக்கிட்டி இருந்ததுன்னு டெரர் இன்னும் நம்பிக்கிட்டு இருக்காரே. அது பொய் அப்டின்னு அவர்கிட்ட சொல்லுங்க...
எல்லா கேள்விகளும் அதற்கான பதில்களும் சிந்திக்கிற மாதிரி தான் இருக்கு ..படங்களும் நல்லா இருக்கு அண்ணா ..
///அங்க பாட்டி வடை சுட்டுக்கிட்டி இருந்ததுன்னு டெரர் இன்னும் நம்பிக்கிட்டு இருக்காரே. அது பொய் அப்டின்னு அவர்கிட்ட சொல்லுங்க..///
அங்க போனதே போய் அப்படிங்கிறார் அவர் .. அப்புறம் எப்படி பாட்டி வட சுடுறது பொய் அப்படிங்கிறீங்க.. போலீஸ் காரார் சரியா விசாரிக்கலை..
ippathaaan unga "pretty boy" vedio paarthean sorry keakkulai, inga office la Training class rooml speaker ellam kudukka maattangalam only projecter, appuram antha vedio vai naaan sumaar 1 1/2 varudangalukku munnamea paaarthu irrukkean beautifull lirics and voice pa athu koduthu vacha magaraaasaaa unga aaalu ivlo tase fullaaaa irrukkaaanga
நல்ல பதிவு..
இவ்ளோ விஷயங்கள்
எப்படி தேடி பிடிச்சீங்க..??!!
உங்களை நினைச்சா
எனக்கு பெருமையா இருக்கு..!!
" மொரிஷியஸ்ல மாடு மேய்க்கிற
பையனுக்கு இவ்ளோ அறிவா..??!! "
சந்திரனுக்கு (அ) நிலவுக்கு வாஸ்து சரி இல்லை.. வீட்ட மாத்த சொல்ணும் :((
முதன்முதலில் விண்வெளிக்கு சென்று ரஷ்யா சாதனை படைத்ததால், நாமும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என அமெரிக்கா சந்திரனில் முதலில் கால் வைத்தது போல் போலி ஆதாரங்களை உருவாக்கியதாக ஒரு கருத்து உண்டு!
நல்ல தகவலை பகிர்ந்திருக்கீங்க! அருமை நண்பா!
எழுத்தில் பல நிலைகளை தொட முயற்ச்சி செய்கிறீர்கள். உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்!!!
எங்க தல உங்களை எப்படி பாராட்டினார் பார்த்தீங்களா ..??
அருமை நண்பா நான் பார்க்க தவறி விட்டேன் நண்பா,
@ vinu
நிலவுல இருக்குற பாட்டி சுட்ட வடை உங்களுக்குதான் வினு
@ டெரர்
இம்பூட்டு நல்லவனா ஒரே நாள்ல மாறாதய்யா, உலகம் நம்பாதுய்யா
நன்றி Balaji, செளந்தர்,மொகமத், அமைதிச்சாரல்
@ ஜெய்
இங்கிலீஷ் படம்லாம் பார்பிய்யாய்யா நீ! ரொம்ப படிச்சவனோ, உங்கூட சேரக்கூடாது
@ ரமெஷ்
ரைட்டு சொல்லிட்டேன்
நன்றி செல்வா
@ வெங்கட்
உங்க கூட இந்தியாவுல மாடு மேய்ச்சப்ப ஒன்னும் தெரியல, இங்க வெளிநாட்டு காரன் கூட மெய்கறப்போ தானா அறிவு வளருது
@ சுசி
இப்படி ஒரு பிரச்சனை இருக்கறத அமெரிக்கா காரன் கூட கண்டுபிடிச்சு இருக்க மாட்டான், நீங்க கண்டுபிடிச்சிட்டீங்களே!
நன்றி எஸ் கே, என்னது நானு யாரா
@ சசி
வாங்க சசி, நன்றி, தொடர்ந்து வந்து ஆதரவுகொடுங்க
உனக்கு ஏன் இந்த ஆராய்ச்சி...... ? என்னமோ சொல்லிட்டு போகட்டுமே.....உன் குழப்பத்த எதுக்கு எங்க தலையில கொண்டு வந்து இறகி வைக்கிற...
பங்காளி ஜெய்.... நடு மண்டைல ஆப்பு இறக்கியே ஆகணும்... தம்பிக்கு....!
நில்லாவ முதல்ல தொட்டது S J சூரியான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க...
Apdiya?..
ஹி ஹி ஹி ..,என்ன தல நீ ., இது கூட தெரியலை சந்திரனை தொட்டது நம்ம '''' ரட்சகன் நாகர்ஜுனா ''''...,அந்த படத்துல ஒரு பாட்டுல அவரே சொல்லுவாரு
எனக்கு இன்னொரு சந்தேகம்..
சூரியனுக்கு பக்கத்துல பூமியை விட
நிலா ரொம்ப பக்கத்துல இருக்கு..
பூமியிலயே சூரியனோட வெப்பம்
இவ்ளோ அதிகமா இருக்குன்னா..
நிலாவுல இன்னும் எவ்ளோ
அதிகமா இருக்கும்..??!!
இவிங்க இந்த டிரஸ்சை போட்டுட்டு
நிலாவுக்கு போயிருந்தா பொசுங்கி
போயிருப்பாங்களே..!!
கேள்விகளை நம்புறதா?
பதில்களை நம்புறதா?
கண்ணைக் கட்டுதே!
"சந்திரனுக்கு போனேன்னு சொல்லி நம்மளையெல்லாம் கோமாளிங்கலாகிட்டனுங்கோ" என்று சில ஆதாரங்களைக் காட்டி நாசாவை சிலர் திட்டுவதும், "இல்ல, இல்ல, அவங்க சொல்லுறதெல்லாம் பொய், நாங்க நிசமாவே போனோம்" என்று நாசாவினர் பதில் சொல்வதும் இப்ப பதினஞ்சு வருஷங்களாக நடந்துகிட்டே தான் இருக்கு. இவங்க சொல்வதில் எதில் உண்மை, பொய் என்பதைக் கண்டுபிடிக்கனும்னா கொஞ்சம் இயற்பியல் + Common Sense இருந்தா போதும். எளிதா புரியும். இங்கே சில விளக்கங்கள். 1. சந்திரனில் காற்று கிடையாது. அங்கே இறங்கும் மாடியூல் எப்படி இறங்கும்? ராக்கெட்டில் ஒரு புறம் புகை கக்கும் அதற்க்கு எதிர் புறம் ராக்கெட் செல்லும். அதே மாதிரி, புகை கக்கும் எரிபொருள் அளவை குறைத்தால், டமால் என்று விழாமல் அழகாக பூ போல போய் இறங்கும். Lunar Module அந்த வண்டி எடை சில டன்கள், அதை தாங்கும் அளவுக்கு அதற்க்கு கீழே புகை கக்கி கொண்டு இறங்கி இருந்தால், இறங்கும் இடத்தில் ஒரு பெரிய பள்ளமே ஏற்ப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் காட்டியுள்ள படங்கள் அத்தனையிலும் Lunar Module நிற்கும் நாலு கால்களுக்கு இடையே உள்ள இடம் மற்ற இடங்களைப் போலவே சாதாரணமாகவே இருந்தது. [சொல்லப் போனால் காலடித் தடங்கள் எல்லாம் அங்கே காணப் பட்டது. இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் உடை, Oxygen Cylinder ஆகியவற்றை வைத்துக் கொண்டு அங்கே [under the lunar module] செல்லவே முடியாது. Lunar module கால்களில் எந்த தூசியோ மன்னோ இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. இது சினிமா செட் அப் தான் என்பதற்கு இது ஒரு வலுவான ஆதாரம்.
அடுத்து, காலடித் தடங்கள். சந்திரனில் தண்ணீர் இல்லை என்றார்கள். அந்த மாதிரி இடத்தில் காலை வைத்தால் ஏதோ பள்ளம் மாதிரி உருவாகும், ஆனால் காலனியை அச்சு வடித்த மாதிரி உருவாகனும்னா ஈரப்பசை இருந்தாத்தான் முடியும். ஆத்து மணலில் கால் வைப்பதற்கும், செங்கல் செய்ய உள்ள மண் மீது காலடி வைப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. அது மாதிரி தான். அடுத்து சந்திரனில் வெப்ப நிலை பாடலில் 200 degrees C மேலும், இரவில் -200 degrees C க்குக் கீழும் இருக்கும். இத சமாளிக்கனும்னா ஒரு பெரிய ரூம் சைசுக்கு Giant A/c வச்சாத்தான் முடியும். ஆனா விண்வெளி வீரர்கள் போட்டிருந்த Dress பாத்தா சிரிச்சிடுவீங்க. நிஜமாவே அதப் போட்டாக்க அவன் அதிலேயே அவிச்ச கோழி முட்டை மாதிரி ஆயிடுவான்.
@ தேவா
எனக்கு சத்தியமா குழம்பிடுச்சு, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
@ வெறும்பய
அட, இந்த மேட்டர் சூப்பரா இருக்கே
வாங்க அஹமத்
@ நரி
என்னா கண்டுபிடிப்பு
@ வெங்கட்
உங்க சந்தேகம் கரெக்ட், ஜெயதேவா விளக்கி இருக்கார் பாருங்க
@ நிசாமுதீன்
உண்மைதான். கண்கட்டி வித்தைதான் அது
@ Jayadeva
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதே நண்பா
அடுத்து அங்கு எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப் படும் புகைப் படங்கள். விண்வெளி வீரர்கள் நெஞ்சிற்கு சற்று கீழே கேமரா பொருத்தப் பட்டுள்ளது, அதற்க்கு எல்லாம் View Finder எதுவும் கிடையாது. குத்து மதிப்பாத்தான் படமெடுக்க முடியும். ஆனா எடுத்த படங்கள் அத்தனையும் அவ்வளவு அற்புதமா இருக்கு, எல்ல படத்துலயும் பாத்தா, "படத்த இப்படித்தாண்டா எடுக்கனும்னு" புத்தகத்தில் போட்டிருப்பாங்களே அது மாதிரி பக்காவா இருக்கு, ஒண்ணுல கூட Blur இல்ல, Out of Focus இல்ல. அப்படி எப்படி தோராயமா, குத்து மதிப்ப எடுத்தா , யாரு எந்த இடத்துல நின்னா படம் Perfect ஆக வருமோ, Lighting எப்படியெல்லாம் இருக்கணுமோ அத்தனை விதியையும் பின்பற்றி இருக்கு. இதை பற்றி, அமெரிக்காவின் மிகச் சிறந்த புகைப்பட வல்லுனரிடம் கேட்டப்போ, "இது எப்படி அந்த மாதிரி இக்கட்டான நிலையில் Camera வைத்துள்ளவர்கள் எடுத்திருக்க முடியும்? என்னால இத விளக்கவே முடியல" என்று சொல்லி விட்டார். அங்க போன பயலுக ஏன் வானத்தை ஒருதடவை கூட படமெடுக்கல? [போகவே இல்லையே அப்புறம் எப்படி எடுப்பது, காற்று மண்டலம் இல்லாத இடத்திலிருந்து எடுக்கப்படும் படம் மாதிரி இவங்களால உண்டாக்க முடியல அதுதான் காரணம். அது மிகத் தெளிவா இருக்கும், இப்போ Hubble Telescope -ல இருந்து எடுத்த மாதிரி.]
//எனக்கு சத்தியமா குழம்பிடுச்சு// Physics Basics தெரியலைன்னா புரியாது. மன்னிக்கணும், இந்த சுட்டியிலுள்ள படங்களைப் பாருங்க, மொத்தம் ஏழோ, எட்டோ இருக்கு [related videos-Telecast in the Fox Channel]. அதப் பாத்திட்டு படிங்க புரியும்.
http://www.youtube.com/watch?v=Y5MVVtFYTSo&feature=PlayList&p=61F2A078AB3E5266&index=0&playnext=1
கடைசியா சந்தேக வாதிகள் [Conspiracy Theorists] என்ன சொல்றாங்கன்னா, "நீங்க போனப்போ விட்டிட்டு வந்தீங்களே, கொடி, கார், அப்புறம் Lunar Module-லோட மிச்ச மீதிகள் அதையெல்லாம் இப்போ படம் பிடிச்சு காட்டுங்க நாங்க ஒத்துக்கறோம்". ஆனா அவ்வளவு சக்தி வாய்ந்த தொலை நோக்கி இன்னும் கண்டுபிடிக்கலே. அது சரி, நம்ம தமிழர் விட்டார் ஒரு சந்திராயன் அது அங்குலம் அங்குலமா படமேடுத்துச்சே, ஒண்ணுல கூட இந்த அமரிக்கர்கள் விட்டுவந்த மிச்ச மீதிகளின் படமில்லையா?
@ jayadeva
விரிவாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே, பலருக்கு இருந்த சந்தேகம் இப்போது சிறிது விளங்கும்
நாமெல்லாம் இங்கே பகலில் படமெடுக்கிறோம், அடிவானம் வரை உள்ள நிலப்பரப்பு வரை பளிச்சுன்னு தானே தெரியுது, ஆனா இவனுங்க காட்டுற படமேல்லாத்திலையும் ஒரு பத்து மீட்டருக்கப்புரம் அப்படியே இருட்டாகுது பாருங்க. காரணம் பாலை வானத்துல சினிமா செட்டிங்கு போட்டு லைட் வச்சு படமெடுத்திருக்கான். வேறென்ன?
என்னது காந்தி செத்துட்டாரா???? இது மாதிரி தான் இருக்கு இதுவும்....
இது ரொம்ப பழைய மேட்டர், இன்னும் நிறைய விஷயங்கள் இதைப்பற்றி உள்ளது (NASA சேட்டை பயங்கரமா இருக்கும், இந்த வீடியோ ரிலீசில் அவர்கள் அடித்த பல்டி, நாடகம், ரஷ்யா கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை....இன்னும் பல), முடிந்தால் எழுதுகிறேன் or லிங்க் அனுப்புறேன்...
oops just now saw Mr.Jayadeva comment, well done boss...he put many important points, but still more there...let me find out the link and share with u.
கடவுளை போல வேற்றுகிரகம், நிலவு சம்பந்தமான ஆராய்ச்சிகளும், அதன் விவாதங்களும் என்றும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல....
...... கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க!
நல்ல சுவாரசியமான ஆராய்ச்சி...
அமெரிக்கா தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என்று கூறுகிறது நாமும் அதை கேனத்தனமாக நம்பிக் கொண்டு இருக்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி நண்பரே..
அப்பீடியா...?
சூப்ப்ப்ப்ப்பரப்பு...!
http://communicatorindia.blogspot.com/
அருமையான தகவல் நண்பரே..ஆனால் நீங்கள் அளித்திருக்கும் இணைப்பு வேலை செய்யவில்லை
சுவாரஸ்யமான போஸ்ட் பாஸ் நமக்கு படிச்சு தெரிஞ்சுக்க முடியுது ஆராய்ச்சி செய்ற அளவுக்கு இன்னும் பிறக்கவே இல்லை.
ஜெய தேவாவொட பின்னூட்டங்கள் அதைவிட சுவார்ஸ்யம் ம்ம்
கடைசி ரெண்டு கேள்விக்கு பதில் சரியில்லையோ.... நல்ல பதிவு..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ரைட்டு
ரொம்ப நாளாச்சுன்னு உள்ள வந்தா என்னா சின்ன புள்ளத் தனமா கேள்வி கேட்டுகிட்டு
நிலாவுல முதல்ல கால வச்சது யாரு ?
//எனக்கு சத்தியமா குழம்பிடுச்சு // குழப்பியதுக்கு சாரி. என்னால குழப்பத்த நீக்க முடியுமான்னு பாக்கிறேன். முதலில் சந்திரனுக்கு போறதா சொல்லப்பட்ட பிளான் என்னன்னு பாப்போம். [அதுல எது நிஜம், எது புருடா என்பதை பின்னால பாப்போம்!]. கொளுத்தி விட்டா ஒரு பக்கம் நெருப்பை கக்கி கொண்டு அதற்க்கு நேர் எதிர் புறம் விர் என்று போகுதே சிவகாசி ராக்கெட் பட்டாசு, அந்த தத்துவம் தான் இந்த பயணத்தின் எல்லா நிலையிலும் பயன் படுத்தப் பட்டுள்ளது. எரிந்து முடிந்த ராக்கெட்டின் பகுதி அங்கங்கே கலட்டி விடப் படும். 1.ஏவுதளத்திலிருந்து ராக்கெட் கிளம்புதல். 2. குறிப்பிட்ட உயரம் போன பின்பு ஒரு சைடு கிக்கு குடுத்தா [எரிபொருளை ஒரு குறிப்பிட்ட கச்சிதமான திசையில, கச்சிதமான அளவில, கரெக்ட் நேரத்துல கொளுத்திவிடனும்!] அது பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும். 3. இப்படி சுத்திகிட்டே இருக்கும் போது நிலாவுக்கும் பூமிக்கும் நடுவில வாகான இடத்தில வரும்போது இன்னொரு கிக்கு கொடுத்தா அப்படியே நிலா பக்கம் போயி அங்கிருந்து நிலாவை வட்டமடிக்க ஆரம்பிக்கும். 4.இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணினா சுற்றுவட்டப் பாதை நிலாவுக்கு அருகில் செல்லும். 5.அங்கே இருந்து மூணு பேத்துல இரண்டு பேர் மட்டும் மெய்ன் வண்டியில இருந்து பிரிஞ்சு வேற வண்டியில [Lunar Module] ஏறி நிலவுல இறங்கனும். ஒருத்தர் அந்தரத்துல நிலா என்ன வேகத்துல சுத்துமோ அதே வேகத்துல சுத்துவாரு, நிலாவில் இருந்து பார்த்தால் [ஒருவேளை!] அப்படியே நிக்கிற மாதிரி இருக்கும்.
இப்ப மத்த ரெண்டு பேரும் எப்படி நிலாவுல இறங்குவாங்க? காற்று இருந்தா பாராசூட் மூலமா இறங்கலாம், காத்தே இல்லாத இடத்துல என்ன பண்ணுவது? போயி டமால்னு விழுந்திடுவோமே! அதுக்கு அவங்க வண்டியின் அடிப்புறம் உள்ள எரிபொருளை எரிப்பார்கள், [அதே சிவகாசி ராக்கெட் தத்துவம்தான்!] எரியும் அளவு இங்க முக்கியம். குறிப்பிட்ட அளவுக்கு [வண்டியின் எடையைவிட] அதிகமாக இருந்தால் வண்டி நிலவை விட்டு விலகி மேலே போகும். சரிசமமாக [equal] இருந்தால் அப்படியே [எரிபொருள் தீரும் வரைக்கும்தான்!] மிதக்கும், கம்மியாச்சுன்னா மெதுவா நிலவில போயி இறங்கும். [இதன் மாதிரியை பூமியில செஞ்சு அதில நீல் ஆம்ஸ்டிராங்கை உட்காரவச்சு குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு போயி தரையிரங்கச் சொன்னார்கள், அவரால் அந்த வண்டியை கட்டு படுத்த முடியாமல் கீழே விழும் போது நூறு மீட்டர் உயரத்தில் பாரசூட்டுடன் அதிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார், வண்டி தனியாக விழுந்து சிதறியது.] இப்ப Lunar Module-லின் எடை அஞ்சு டன், நிலவுல அதன் எடை ஆறில் ஒரு பங்கு, கிட்ட தட்ட ஒரு டன். ஒரு டன் எடையை எதிர்கொள்ளும் அதே விசையுடன் கீழே எரிபொருள் வெளியேறினால்தான் பத்திரமாக இறங்கும். [சைக்கிள் காத்தடிக்கும் பம்பை எடுத்து வேகம்மாக மண்ணில் காற்றை அடியுங்கள், அங்கே ஒரு பள்ளம் மண்ணில் விழும், அப்ப அஞ்சு டன் எடைக்கு சமமான நெருப்பு எரிபொருள் படும் இடம் எப்படி இருக்கும்? அந்த இறங்கும் வண்டியே உள்ளே போகும் அளவிற்கு பள்ளம் ஏற்ப்பட்டிருக்கும். ஆனால், இவர்கள் காட்டிய அத்தனை படத்திலும் அந்த இடம் சம தளமாகவே இருந்தது. ராக்கெட் எரிபொருள் அடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இன்னும் கொடுமை Lunar Module-லின் நாலு கால்களுக்கு நடுவில் எக்கச்சக்கம்மான காலடித் தடங்கள் வேறு! [சினுமா செட்டுல கொண்டு வந்து வச்சவங்கலோடதுதான்!] Lunar Module-லின் நாலுகால்களில் மண்ணு தூசி இல்லாமல் பளிச்சுன்னு இருக்கு! [ராக்கெட்டிலிருந்து வெளியேறிய வாயு கிளப்பிய புழுதியில் அது முங்கி போயிருக்கனும். சரி, அதுக்கப்புறம் 6. அங்கேயிருந்து Lunar Module-லின் ஒரு பகுதி மூலமா மேலே போயி காத்துக்கிட்டு இருப்பவரோட இணைஞ்சு நிலாவை வட்டமடிசுட்டு, 7. திரும்ப பூமியை வட்டமடிசுட்டு, அப்படியே கீழே வந்து பாராசூட் மூலமா கடலில குதிப்பாங்க, அவங்க கப்பலில போயி, கூட்டி வந்துடுவாங்க. இந்த மொத்த கதையில நிஜம் எந்த பகுதி? பூமியில இருந்து மேல போயி வத்தமடிச்சுட்டு வெயிட் பண்ணி நாலு நாள் கழிச்சு அப்படியே கீழே இறங்க வேண்டியதுதான். அப்ப மீதி? அதுதான் அமெரிக்கா பாலைவனத்துல ஏற்கனவே படம் பிடிச்சாச்சே, தொலைக்காட்சியில ஓடிகிட்டு இருக்கும், சீன் முடியரப்போ திரும்பவும் இந்த பயலுக வந்திடுவானுங்க! இது எப்படி இருக்கு!
எனது சந்தேகங்கள்
1. முதல் படத்தில் இருக்கும் ஸ்கூல் பையன் யார்?
2. இரண்டாவது படத்தில் இருக்கும் கால்தடத்தின் சைஸ் என்ன?
3. மூன்றாவது படத்தில் இருப்பவர் கண் எங்கே? தண்ணி வேண்டும் என்றால் எப்படி குடிப்பார்?
இப்பொழுது உங்கள் கேள்விக்கு பதில் : சந்திரனை முதலில் தொட்டாது ஒரு பாட்டி. அவர் இன்றும் வடை சுட்டு பல பிரபல நிறுவனங்களுக்கு தருகிறார். அவரை காண அம்மாவசை நடுநிசி தணியாக சுடுகாட்டுகு சென்று ரத்தம் வேண்டும் ரத்தம் வேண்டும் என்று அலரினால் பொதுமக்கள் உங்களை அனுப்பிவைப்பர்.
//படத்தில் உள்ளது போல அமெரிக்க கொடி பறக்க சாத்தியம் இல்லை.//
இந்திய கொடி பறக்குமா??
//வீரரின் காலடித்தடம் இவ்வளவு தெளிவாக ஈர மணலில் மட்டுமே பதியும். நிலவில் ஈரம் வர வாய்ப்பு இல்லை.//
முன் நாள் பூமியில் வந்த மழை சாரல் பட்டு நிலா நனைந்து விட்டது.
//பல பக்கங்களில் நிழல் விழும்.//
எந்த பக்கம் விழுந்தது என்பது முக்கியம் இல்லை. எந்த நிழுலூக்கும் அடி படவில்லை அதுதான் முக்கியாம்.
//இந்த புகைப்படத்தில், நிழலில் இருக்கும் வீரர் மட்டும் தெளிவாக தெரிவது எப்படி? நிழல் மறைத்து கருப்பாக தான் அவர் படமும் இருந்திருக்க வேண்டும்.//
அவர் உஜாலவுக்கு மாறிவிட்டார். ஆனால் அவர் ஷூ இன்னும் மாறவில்லை. மேலும் அவர் உடைகள் பவர் சோப் கொண்டு துவைத்தது. இருளிலும் ஒளிவீசும்.
// புகைபடம் எடுப்பது போலவும் தெரியவில்லை. அப்படி என்றால் யார் இந்த புகைப்படம் எடுத்தது?//
அங்கு உள்ள ஸ்டியோவில்.
// நாசா வெளியிட்ட படங்கள் அனைத்தும் பொய்யானவை என விளக்கினார்கள். //
உங்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் ப்ளாக் தமிழில் எழுதுகிறிற்கள். அந்த நிகழ்ச்சி உங்களூக்கு விளக்கியது உங்கள் மனைவி என்று என் குறிப்பிட வில்லை? ஆண்னாதிக்கமா?
@ரமேஷ்
//அங்க பாட்டி வடை சுட்டுக்கிட்டி இருந்ததுன்னு டெரர் இன்னும் நம்பிக்கிட்டு இருக்காரே. அது பொய் அப்டின்னு அவர்கிட்ட சொல்லுங்க...//
பொய் இல்லை ரமேசு இன்னும் அவர் அங்குதுதான் இருக்கிறார். அவர் திருமணம் ஆகதவர். பெயர் பறவை முணியம்மா. முயற்சி செய்யுங்கள். திருமணம் நடந்தால் வடை சுடும் வானல் சீதனமாக கிடைக்கும்.
@Jaydeva
//அதை தாங்கும் அளவுக்கு அதற்க்கு கீழே புகை கக்கி கொண்டு இறங்கி இருந்தால், இறங்கும் இடத்தில் ஒரு பெரிய பள்ளமே ஏற்ப்பட்டிருக்கும். //
இது ஒரு நல்ல கேள்வி. பள்ளம் எற்பட்டது உண்மை. இறக்கிய பின்னர்தான் தெரிந்தது அது NO PARKING AREA. அதனால் சிரிது நகர்த்தி பார்க் செய்தோம்.
Phantom Mohan சொன்னது…
//oops just now saw Mr.Jayadeva comment, well done boss...he put many important points, but still more there...let me find out the link and share with u.//
இதை எல்லம் share பண்ணு. தட்டுல இருக்க பிரியானி கேட்டா மட்டும் அம்மா திட்டுவாங்க சொல்லு...
(அருண் மீதி நாளைக்கு....)
பைக்கு, படகு எஞ்சின், பேருந்து போன்றவற்றை நீங்க எஞ்சினை ஆப் செய்தாலும் கொஞ்ச தூரம் போயி நிக்கும். ஏன்னா அதுங்க எல்லாம் தரிக்கு கிடை மட்டத்தில் இயங்குபவை. இங்கே எஞ்சினை ஆப் செய்தால், அந்த இடத்திலிருந்து தொப்பென்று தான் விழும். அதனால் கொஞ்சம் உயரத்துல ஆப் செய்துவிட்டோம்கிறது இங்கு செல்லுபடியாகாது, பல்லு பகுடு எகிறிடும். மேலும் வெற்றிடத்தில், வாயு வெளியேறிய திசையில் தடையின்றி செல்லும். உண்மையிலேயே ராக்கெட்டில் போய் இறங்கியிருந்தால் பள்ளம் ஏற்பட்டிருக்கும், இவர்கள் அவ்வாறு செல்லவில்லை. அவர்களுடைய விளக்கம் ஏற்புடையதல்ல. [நீதான் சினிமா செட்டுல தூக்கி வந்துதானே வச்சு படமெடுத்தே, அப்புறமென்ன!].
சந்திரனுக்கு போகவே முடியாதுங்குறதுக்கு வேறென்ன காரணம் கூறுகிறார்கள்? பூமியைச் சுற்றி காற்று மண்டலம் + ஓசோன் மண்டலம் இருக்கு. இது வின் கற்கள், சூரியனின் புற ஊதாக் கதிர்களிடமிருந்து மனிதனைக் காக்கிறது. வான் ஆலன் பெல்ட் Val Allen Belt என்னும் பகுதி புவியின் கந்த மண்டலத்தால் ஏற்பட்டுள்ளது, அது சூரியன் மற்றும் வேறு நட்சத்திரங்களில் இருந்து வரும் அபாயகரமான கதிர் வீச்சுகளை [Dangerous Nuclear Radiation like x-ray, Gamma ray, Alpha, Beta particles etc.,] பிடித்து வைத்துக் கொண்டு, அவை நம்மை தாக்குவதிலிருந்து காக்கிறது. எந்த காரணத்துக்காகவும் மனிதன் வான் ஆலன் பெல்ட் பகுதியைத் தாண்டியதில்லை, இந்த நிலவுப் பயணத்தில் மட்டுமே அதைத் தாண்டிச் சென்றோம் என்று கூறுகிறார்கள். அப்படிச் செல்ல வேண்டுமானால் ஆறு அடிக்கு ஈயத்தால் [lead] ஆன கவசம் இருந்தால் மட்டுமே முடியும். [Even to cross the Van Allen Belt region which is thousands of KM in length]
சென்னை வெய்யிலில் ஒரு ஜமுக்காளத்தை தலையையும் சேர்த்து ஒரு பத்து நிமிஷம் ரோட்டில் நின்று பாருங்கள், எப்படி இருக்கும்? சென்னை வெய்யில் 40 C அதுக்கே அப்படிஎன்றால், விண்வெளி வீரர் உடையில் நிலவில் பகலில் 200 C எப்படி இருக்கும்? அவித்த முட்டை மாதிரி ஆயிடுவானுங்க! மேலும் இவனுங்க கேமரா வெளியில வெயில் படுற மாதிரி தானே இருக்கு, அதுக்குள்ள இருக்குற பிலிம் வெந்து சுருங்கி போயிடுமே, அப்புறம் எப்படி படமெடுத்தானுங்க? இவங்க எடுத்த படத்துல வானம் நட்சத்திரமே இல்லாம இருக்கு. [குறிப்பு: நம் காற்று மண்டலம் சூரிய ஒளியை சிதறடித்து வானம் முழுவதையும் வெளிச்சமாக்கிவிடுவதால், நாம் பகலில் நட்சத்திரங்களைக் காண முடியாது. நிலவில் தான் காற்றே இல்லையே, பகலில் கூட விண்மீன்கள் பூமியை விட தெளிவாகத் தெரியும். அந்த கால கட்டத்தில் காற்று மண்டலத்துக்கு வெளியில் இருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் எப்படித் தெரியும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பூமியில் இருப்பதை விட நன்றாக இருக்கும் என்பது மட்டும் தெரியும். இப்போது வளி மண்டலத்துக்கு வெளியே Hubble Telescope நிறுவியுள்ளனர், அதன் மூலம் நட்சத்திரங்கள் தெரிவது போலவே நிலவில் பகலில் கூடத் தெரியும். (போய்ப் பார்த்தால்!)]ஏன் என்று கேட்ட போது சந்திரனின் நிலப்பரப்பின் வெளிச்சமும் வானத்தின் இருட்டும் சேர்ந்திருக்கும் படங்களில் வானத்து நட்சத்திரங்கள் பிலிமில் அடி பட்டுப் போகும் என்றார்கள். ஆனால், ஆறு முறை போயிருக்கும் பன்னிரண்டு பேத்துல ஒரு பய கூட ஏன் வெறும் வானத்தை படமெடுக்கவில்லை? அது தவற விடக்கூடாத வாய்ப்பாயிற்றே! [இது எப்படி இருக்குன்னா, குற்றாலம் போனியே என்னடா பார்த்தே என்று கேட்டால், அங்க ஒருத்தன் போண்டா சுட்டு வித்துகிட்டு இருந்தான், வாங்கி தின்னுட்டு வந்தேன்- அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு! அதுக்கு போயா குற்றாலம் போகணும்? போண்டா எங்க வேணுமின்னாலும் கிடைக்கும், ஆனா நீர் வீழ்ச்சி?] காரணம் இவனுங்க தான் போகவே இல்லையே, எப்படி காமிப்பானுங்க?
Post a Comment