Cricket Countdown....

Sunday, August 8, 2010

பொங்கல்....


டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு, 2 வயதில் நான் செய்த குறும்பு இது. ஒரு சுவாரசியத்திற்காக, தற்பொழுது நடந்தது போல எழுதியுள்ளேன்.

அன்றில் இருந்து பொங்கலுக்கு
இன்னும் பத்தே நாட்கள்...  
யாருக்கும் இன்னும்  
புத்தாடைகள் எடுக்கவில்லை....  

இந்த ஞாயிற்றுகிழமையை விட்டால்  
அடுத்த வாரம் தி நகரில் கூட்டம் அலை மோதும்....  

சரி இன்றே போத்திஸ் 
அல்லது சரவணா ஸ்டோர்ஸ் 
சென்றுவிடலாம் என முடிவாயிற்று...  

யார் யாருக்கு...  
என்ன என்ன வேண்டும்... 
லிஸ்ட் போடுங்கள் என்றேன்...  

மனைவி - எனக்கு பேன்சி சாரி....  
அம்மா - எனக்கு பட்டு சாரி.... 
அப்பா - எனக்கு வேட்டி சட்டை... 
தங்கை - எனக்கு சல்வார் காமிஸ்... 
தம்பி - எனக்கு ஜீன்ஸ் டீ ஷர்ட்...  

விளையாடிகொண்டிருந்த 
என் இரண்டு வயது மகளிடம்...  
" குட்டிமா, பொங்கலுக்கு பாப்பாக்கு என்ன வேண்டும்?" என்றேன்...

 மழலை மாறாமல் சொன்னாள் 
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."






30 comments:

எல் கே said...

/// மழலை மாறாமல் சொன்னாள்
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."//

இது நீங்கதான்னு சொல்ல வேண்டியது இல்லை

Unknown said...

எனக்கு சக்கரை வேணும்...

கருடன் said...

பொங்கலுக்கு நம்ப வீட்டுல ஆடு வெட்டற பழக்கம் இருக்க ராசா? இல்லைனாலும் இந்த வருஷம் வெட்டறோம்... தலைல மஞ்ச தண்ணி ஊத்திகிட்டு ரெடியா இரு...

Anonymous said...

that definitely wasnt cooked by Gayathri !!

சுசி said...

ஹஹாஹா.. எனக்கு அப்டியே படத்தில இருக்கிற அந்த தட்டோட வேணும்.

சூப்பர் அருண்.

Anonymous said...

நல்லாயிருக்கு...

Jey said...

ஞாயித்து கிழமையும் பதிவா?.. இருப்பா படிச்சிட்டு வரேன்...

Jey said...

ரைட்டு...,

ஞாயித்து கிழமை காலைல எங்க வீட்ல எப்பயும் இந்த பொங்கல் சட்னி சாம்பார்தான்...

Unknown said...

இப்பவே பொங்கல் வச்சாச்சு... நல்ல கவிதை...

Anonymous said...

அருண் எனக்கு அந்த தட்டில் இருக்கறது அப்பிடியே வேணம் ..சீக்ரமா கொடு இல்லேன்னா அழுதிடுவேன் ...சொல்லிட்டேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு...

ஜீவன்பென்னி said...

எனக்கும் சட்னிதான்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இது பொங்கல் ஸ்பெஷலா!
டேஸ்ட்டாத்தான் கீது!

வெங்கட் said...

அந்த போட்டவுல இருக்குறது
எனக்கு அப்படியே வேணும்..
ஆசைய கிளப்பிட்டீங்க..

இப்ப போய் என் மனைவி கிட்ட
பொங்கல் + வடை கேட்டா
உதை தான் கிடைக்கும்..

ஹும்ம்ம்ம்..

அருண் பிரசாத் said...

@ All

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பொங்கல் நல்லா இருக்கா இல்லை பதிவு நல்லா இருக்கா?

Gayathri said...

மழலை மாறாமல் சொன்னாள்
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."

sooooooooooooo cute....குழந்தை னா இப்படித்தான்...மிக மிக ரசித்தேன்...
எவ்ளோ இன்னோசெண்டா இருகாங்கல

படத்த பார்த்து பசிக்குது..போய் சமைக்க முடியல அங்கே ஒரு பெரிய்ய்ய்ய்ய பல்லி!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சட்னியோ சாம்பாரோ சமைக்க போறது நீங்கதான தல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இல்லைனாலும் இந்த வருஷம் வெட்டறோம்... தலைல மஞ்ச தண்ணி ஊத்திகிட்டு ரெடியா இரு...///

டெரர் என்ன ஒரு ரத்த வெறி

கருடன் said...

//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பொங்கல் நல்லா இருக்கா இல்லை பதிவு நல்லா இருக்கா? //

விடுங்க பஸ் இத எல்லம் பப்ளிக்ல கேக்கலாம? பொங்கல் பதிவு ஸுப்பர்...

அருண் பிரசாத் said...

@ LK

ஹி ஹி ஹி பிறப்புலயே வந்திடுச்சு போல

@ கலாநேசன்

சக்கரையா... நீங்க bad boyங்க

@ Terror

நீங்க தீபாவளிக்கு வரீங்களா? நம்ம வீட்டுல தீபாவளிக்கு மறுநாள்தான் கறிசோறு

@ பெயரில்லா

public public

அருண் பிரசாத் said...

@ சுசி

சுசிக்கு ஊசி போன வடை பார்சல்

@ ஜெய்

குடுத்து வெச்சவர்யா நீ

@ கே ஆர் பி

கவிதையா? தல என்னை வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே!

அருண் பிரசாத் said...

@ Sandya

சுசிக்கு அனுப்பியாச்சி, சண்டை போடாம பிரிச்சிக்கோங்க

@ வெறும்பய & Nizamuddin

நன்றிப்பா

@ ஜீவன்பென்னி

நம்ம ஆளிங்க நீங்க

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

ஆசைபட்டா நீங்க ஹோட்டல்காவது போலாம், இங்க அதுவும் கிடைக்காது

@ Gayathri

innocent ன்னு என்னைதான சொன்னீங்க. உண்மைதாங்க

@ ரமெஷ்

பப்ளிக்ல மானத்தைவங்காதீங்க, தனியா பேசிக்கலாம்

@ Terror

அப்பாடி, நீங்களாவது சொன்னீங்களே!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் terror ,

பொங்கல கொஞ்சம் கொஞ்சமா பொங்க விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கணும்...அதுக்குளே வெட்றதை பத்தி பேசுற

கருடன் said...

@நரி
//யோவ் terror ,

பொங்கல கொஞ்சம் கொஞ்சமா பொங்க விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கணும்...அதுக்குளே வெட்றதை பத்தி பேசுற//

ஆஆமா.... துரை கலைல இருந்து கலைக்டர் அஃப்ஸ்ல கையெழுத்து போட்டாரு... இப்போ வந்து பொங்க வைக்கராரு.... சிக்கிரம் புது பதிவு போடுயா... உன்ன கும்ம ஒரு க்ருப்பே அலையுது....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. உண்மையிலயே... அழகு..

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு சார்!

குறிப்பா அந்த கடைசி படம் எச்சில் ஊற வைச்சிடுச்சி!

சௌந்தர் said...

ஓரு செட் பொங்கல் பார்சல்...

Gayathri said...

ஹா ஹா நான் குழந்தையா இருந்த அருண் பிரசாத் பாப்பா வ சொனேன்..haa haa

செல்வா said...

///மழலை மாறாமல் சொன்னாள்
"பொங்கலுக்கு எனக்கு... சட்னி வேணும்..."///
இது தான் பொங்கலுக்கு வேணும் ..
இது கூட உங்களுக்கு தெரியல ..
அருமை அண்ணா ..!!