ஊருக்கு நல்லது சொல்வேன்! எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!! சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்!!!
Cricket Countdown....
Thursday, August 5, 2010
பதின்ம வயது
உன் வீட்டை கடக்கும் போது
எனக்காய் நீ பூத்த புன்னகை....
தெரு கோவிலை கடக்கும் போது
உனக்காய் நான் காத்திருந்த நேரங்கள்....
உன் தெருவை கடக்கும் போது
பண்டிகைகாய் நீ வரைந்த கோலங்கள்...
சாலை மரத்தை கடக்கும் போது
கல்லூரி பேருந்திற்கு நீ காத்திருந்த நிமிடங்கள்...
கல்லூரி பேருந்தை பார்க்கும் போது
எனக்காக நீ அமர்ந்த ஜன்னல் ஓர இருக்கை...
மறுகரையில் நீ கால் நனைத்தாய் என்பதற்காய்
இக்கரையில் நான் கால் நனைத்த குளக்கரை....
ஏனோ இன்றுவரை
என் பதின்மவயது நினவுகளை
மறக்கமுடியவில்லை,
என் முன்னாள் காதலியே!
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
நல்லா இருக்கு பதின்ம வயது நினைவுகள்.. உங்க வீட்டு அம்மணிக்கு இதெல்லாம் தெரியுமா .. ச்ச்சும்மா கேட்டேன்
கலக்கல் கவிதை...
ஏனோ இன்றுவரை
என் பதின்மவயது நினவுகளை
மறக்கமுடியவில்லை,
என் முன்னாள் காதலியே!///
எப்போதும் மறக்க முடியாது நினைவு காதல்
//மறுகரையில் நீ கால் நனைத்தாய் என்பதற்காய்
இக்கரையில் நான் கால் நனைத்த குளக்கரை....//
nice..
கவிதை நல்லா இருக்கு ..அந்த நாள் ஞாபகமா ஹூம் நடக்கட்டும் ..
///மறுகரையில் நீ கால் நனைத்தாய் என்பதற்காய்
இக்கரையில் நான் கால் நனைத்த குளக்கரை...////
கவிதை அருமையா இருக்கு அண்ணா ...!!
இவ்ளோ நல்லா கவிதை எழுதுவீங்களா ...???!
///தெரு கோவிலை கடக்கும் போது
உனக்காய் நான் காத்திருந்த நேரங்கள்.... ///
நீங்க காத்திருந்தது அவுங்களுக்காகவா இல்ல யாராவது தேங்காய் உடைபாங்கன்னு தானே கோவில் பக்கம் போனீர்,சும்மாஆஆஆ
நினைவுகளில் நனைத்துவிட்டீர் :)
செம செம
பதின்ம பருவங்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கமுடியாதுதான்...
கவிதை நன்று,
தொடர்க
ஏம்பா பிரபல பதிவர்களா இந்த திரட்டி ,தமிழ் மணம் போன்றவற்றில் எப்படிப்பா இணைகிறது ..,கண்ணு முழி பிதுங்குது யாராவது சொல்லுங்களேன்
இந்நாள் காதலி யாரோ ..?
காலங்கள் மேகங்கள் போல
கலைந்தாலும் கலையாதது..
முன்னாள் காதலியும்..
கல்லூரியும் தான்..
// உன் வீட்டை கடக்கும் போது
எனக்காய் நீ பூத்த புன்னகை.... //
அசப்புல பார்க்கறதுக்கு
எங்க சித்தாப்பு மாதிரியே
இருக்குன்னு.. அந்த பொண்ணு
பாசமா ஒரு Smile பண்ணினா...
அதுக்கு இப்படியெல்லாம
தப்பு அர்த்தம் பண்ணிக்குவீங்க..??!!
Very Bad-ங்க நீங்க....!!!
//நீங்க காத்திருந்தது அவுங்களுக்காகவா இல்ல யாராவது தேங்காய் உடைபாங்கன்னு தானே கோவில் பக்கம் போனீர்,சும்மாஆஆஆ//
public public
கவிதை நல்லாயிருக்கு அருண்..
மறக்க முடியலையா?
நினைவு வந்து வந்து வாட்டுது-
கவிதை வந்து வந்து கொட்டுது...
அழகாய் இருக்கிறது கவிதை..
இந்த கதையெல்லாம் வீட்டு அம்மணிக்கு தெரியுமோ?? இல்லை அவங்க தான இது.. ஹா ஹா..மிகவும் ரசித்தேன்
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக ரிப்ளை செய்ய முடியாத்தற்கு மண்ணிக்கவும்
@அருண்
//வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தனித்தனியாக ரிப்ளை செய்ய முடியாத்தற்கு மண்ணிக்கவும் //
செல்லாது செல்லாது....
யாருப்பா, அருண் அந்த தேவதை....,உன் வீட்டு தங்ஸ்-க்கு தெரியுமா?!!!!!!
அருண்ப்ரசாத்.. விகடன் முன்னாள் நிருபரா.. நான் ஏங்கிய பதவி அது.. நாங்கள் மூன்றாம் வருடம் படிக்கும்போது அறிமுகமானது மாணவர் பத்ரிக்கையாளர் திட்டம்..
வாழ்த்துக்கள்.. அருமையான கவிதை..
என் முன்னாள் காதலியே!
irunthochooooooooooo?
நன்றாய் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அதிகமாய் எழுத இருந்தது.
Post a Comment