Cricket Countdown....

Saturday, July 31, 2010

அமெரிக்கன் சாப்ஸி



                       நானும் என் நண்பனும் அலுவலக வேலை விஷயமாக பாண்டிசேரியில் இரண்டு வாரம் தங்க நேர்ந்தது. தினமும் ஹோட்டலில் தான் சாப்பிடவேண்டும். அங்கு புதிதாய் திறந்த ஒரு செட்டிநாடு  ஹோட்டலை தேர்ந்து எடுத்து தினமும் புது புது ஐட்டம் ஆக சாப்பிடுவது என முடிவுசெய்தோம். கம்பணி காசுதான் அதனால் செலவு பற்றி கவலை இல்லை. ( ஏன்னா, கம்பனி சொத்து ஆளுக்கு, ஒரு குத்து - என்பது எங்கள் பாலிசி)

ஒவ்வொரு நாளும் பிரியாணி, கீமா தோசை, செட்டிநாடு முட்டை கறி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ் என வெளுத்து கட்டினோம்
ஊருக்கு கிளம்ப இன்னும் 2 நாட்களே இருக்க, அன்றும் அதே ஹோட்டலுக்கு சென்றோம். அன்று மெனு கார்டில் AMERICAN CHOPSUEY என ஒரு ஐட்டம் கண்ணில் பட அதை TRY செய்யலாம் என, சர்வரை அழைத்தோம்.

சர்வர்:     என்ன சார் சாப்பிடுறீங்க
நான்:       ரெண்டு AMERICAN CHOPSUEY
சர்வர்:     ( எங்களை ஒருமாதிரியாக பார்த்தவாரே) ரெண்டா சார்!
நான்:        ஆமாம், சரி அது எப்படி இருக்கும்
சர்வர்:      நூடுல்ஸ் மாதிரிதான் சார், கூடவே முந்திரி, FRUITS எல்லாம் போட்டு
                   இருப்பாங்க. VEG ஆ NON VEG ஆ சார்.

நான்:        எனக்கு VEG AMERICAN CHOPSUEY
என் நண்பன்: ரிஸ்க் எடுக்குறது எல்லாம் நமக்கு தான் ரஸ்க்கு  
                           சாப்பிடறமாதிரி என்று சொல்லி கொண்டே எனக்கு NON VEG
சர்வர்:     ஓகே சார் (என்று சென்றுவிட்டார்)

நான், என் நண்பனிடம் "டேய், அந்த சர்வர் லுக்கே சரியில்லை. உனக்கு NON VEG அவசியம் தானா? ஏதும் பிரச்சினை ஆகப்போகுது"
அதற்கு அவன், "தல, நாம தினமும் பிரச்சினைய போர்வையா போர்த்தி தூங்குறவுங்க. ஒன்னும் ஆகாது".

 சரியென, காத்திருந்தோம்.......

வந்ததுயா AMERICAN CHOPSUEY அத பார்த்து நாங்க ரெண்டு பேரும்  பேஜார் ஆகிட்டோம்.

எனக்கு VEG AMERICAN CHOPSUEY , ஒரு PLATE FULL ஆ (நிஜமாவே ஒரு பெரிய PLATE FULL ஆ வழிய வழிய ) நூடுல்ஸ் ஐ போட்டு அதை TOMATTO SAUCE ல மிதக்க விட்டு FRUITS , முந்திரி எல்லாம் கலந்து குடுத்தங்க.

எனக்கு பரவாயில்லை என் நண்பனுக்கு NON VEG AMERICAN CHOPSUEY . அவனுக்கும் நூடுல்ஸ் ஐ SAUCE ல மிதக்க விட்டு சிக்கன் பீஸ் எல்லாம் போட்டு எல்லாத்துக்கும் மேல் ஒரு முழு ஆப் பாயில் ஆம்லட் ஐ வச்சி கொடுத்தாங்க.



சத்தியமா என்னால ஒரு PLATE AMERICAN CHOPSUEY யை சாப்பிட முடியாது. இப்போதான் புரிஞ்சது எதுக்கு அந்த சர்வர் அப்படி ஒரு லுக்கு விட்டார்னு.

சரி நூட்லஸ் தான சாப்பிட்டுடலாம்னு எடுத்து வாயில வைத்தால், நூடுல்ஸ் போல SOFT ஆக இல்லாமல் முறுக்கு போல மொறு மொறுனு இருந்தது. சர்வரிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே நக்கலாக FRIED NOODLES அப்படிதான் இருக்கும் என்கிறார்.

அதனால் மக்களே, என்னதான் ஓசில கிடைக்குதுனாலும் இதற்கு முன் தெரியாததை சாப்பிடதிங்க, அப்படியே சாப்பிடறதா இருந்தாலும் AMERICAN CHOPSUEY சாப்பிடாதிங்க.

டிஸ்கி;
பிரச்சனைய போர்வையாக போர்த்தி தூங்குவதாக சொன்ன என் நண்பன் அன்று இரவு எல்லாம் தூங்க முடியாமல் அவஸ்தை பட்டது வேறு கதை...



35 comments:

Jey said...

me the 1st

Chitra said...

American Chopsuey????? இது எந்த நாட்டு ஐட்டம், சார்? நிச்சயமாக இது டிபிகல் அமெரிக்கன் உணவு கிடையாது.....

மங்குனி அமைச்சர் said...

செம் பிளட் , எனக்கு ரெசிடன்சில இந்த அனுபவம் இருக்கு

கருடன் said...

@அருண் & மங்குனி

எலேய் மக்கா... American Chopsy பத்தி தப்ப பேசாதிங்களே... நாங்க எல்லாம் ஒரு புல் chopsy அப்படியே அடிக்கறவங்க... அந்த ஆப் பாயில் ஆம்லட் கலந்து சாப்டர ருசியே தனி... கொஞ்சம் கொஞ்சமா sauceல மிக்ஸ்பன்னி சாப்பிடனும்... இல்லன Same Blood .......

செல்வா said...

///"தல, நாம தினமும் பிரச்சினைய போர்வையா போர்த்தி தூங்குறவுங்க. ஒன்னும் ஆகாது".///
உங்கள் நண்பரை VAS க்கு அழைக்கிறோம் ...

செல்வா said...

எனக்கு ஒரு பார்சல் அனுப்பி வைங்க...!!!

ஜில்தண்ணி said...

என்னா ஜிப்சியோ கப்சியோ

ரிஸ்க் எடுத்து புது ஐடத்த சாப்புட நினைத்த உங்கள் இருவருக்கும் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவோர் சங்கத்தின் சார்பில் பாராட்டுகள்

சுசி said...

அருண் இனிமே எங்க போனாலும் புது புது ஐட்டமா ட்ரை பண்ணிட்டு போஸ்ட்ல எழுதுங்க. அப்போதானே நாங்க தப்பிக்க முடியும் :))

அனு said...

என் ஃப்ரெண்ட் பெருமையா சொன்னத கேட்டு நாங்களும் ஒரு தடவை இந்த கொடுமைய பெங்களூர் Forumல வாங்கினோம் (வீட்டுகாரருக்கும் சேர்த்து தான்).. ஒரு வாய் சாப்பிட்ட அப்புறம் அவர் என்னை கொலைவெறியோட பார்க்க, உலகத்திலேயே டேஸ்டியான dishஐ சாப்பிடுற மாதிரி act குடுத்து அதை காலி பண்ணி முடிக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு.. அப்பப்பா...

சௌந்தர் said...

பிரச்சனைய போர்வையாக போர்த்தி தூங்குவதாக சொன்ன என் நண்பன் அன்று இரவு எல்லாம் தூங்க முடியாமல் அவஸ்தை பட்டது வேறு கதை//

அப்போ நீங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post_11.html

itha padichchathukku appuramum ippadiyaa?

Jey said...

///ஒவ்வொரு நாளும் பிரியாணி, கீமா தோசை, செட்டிநாடு முட்டை கறி, நூடுல்ஸ், பிரைடு ரைஸ் என வெளுத்து கட்டினோம்///

கம்பனி செலவுனா நல்லா கட்டியிருக்கனுக....(அப்புறம் சரக்கு அடிச்சதயெல்லாம் சொல்லவே இல்லை...)

Jey said...

கேஅப்களிக்கு “அமெரிக்கன் கூல் “ பேர வச்சிருந்தா அதையும் ஆர்டர் பண்ணிட்டு அசடு வழிஞ்சிருபீங்களே...

அருண் பிரசாத் said...

@ ஜெய்

1st வந்த ஜெய்க்கு ஒரு American choupsey பார்சல்

@ Chitra

உங்கள மாதிரி நல்ல படிச்சவங்க சொன்னாதான் எங்கள மாதிரி ஆளுங்களுக்கு தெரியும்

@ மங்குணி

நமலாம் ஒரே சங்கம், ரிஸ்க் எடுப்போர் சங்கம்

@ Terror

எலேய் மாப்பு, என்னதான் உங்க ஊருனாலும் இவ்வள்வு சப்போர்ட் பண்ணகூடாது

அருண் பிரசாத் said...

@ செல்வா

பார்சல்தான அனுப்பிடுவோம்.எலி தேடி வந்து வலைல மாட்டுது

@ ஜில் தண்ணி

நன்றி

@ சுசி

அவ்வ்வ்வ்வ்வ்வ்...மீ பாவம்

@ அனு

அப்பாடி நிறைய பேர் மாட்டிருக்காங்க போல, இப்போதான் சந்தோஷமா இருக்கு

கருடன் said...

@அருண்
//எலேய் மாப்பு, என்னதான் உங்க ஊருனாலும் இவ்வள்வு சப்போர்ட் பண்ணகூடாது //

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா நல்லதா சொன்ன நம்ப மாட்டரங்க.... அமெரிக்கன் Chopsy சாப்பிட்டே இப்படி. இன்னும் Chinese Chopsy சாப்பிட என்னாவிங்க?

@ஜெய்
//கேஅப்களிக்கு “அமெரிக்கன் கூல் “ பேர வச்சிருந்தா அதையும் ஆர்டர் பண்ணிட்டு அசடு வழிஞ்சிருபீங்களே... //

கலக்கிட்டிங்க தல..

@அணு
//என் ஃப்ரெண்ட் பெருமையா சொன்னத கேட்டு நாங்களும் ஒரு தடவை இந்த கொடுமைய பெங்களூர் Forumல வாங்கினோம் //

மெம்பெர் எது சொன்னாலும் தலைவி ஆமா ஆமா சொல்லறது சரியல்ல. உங்க ஃப்ரெண்ட் என்னமாதிரி நல்ல ஹோட்டல் சாப்பிட்டு இருக்காங்க. நீங்க அருண் மாதிரி சாப்பிட்டு இருக்கீங்க.

Admin said...

எனக்கும் ஒரு பார்சல் வேணும்...

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

என்ன இப்படி பொசுக்குனு கேட்டுபுட்டீங்க, இருங்க யோசிச்சி சொல்லுறேன்

@ ரமெஷ்

நீங்க பிளான் பண்ணி பதிவை லேட்டா போட்டுடீங்க. அதான் மாட்டிகிட்டேன்

@ ஜெய்

சரக்கா? பாண்டிச்சேரில சரக்கு கிடைக்குமா?

அருண் பிரசாத் said...

@ Terror

//Chinese Chopsy சாப்பிட என்னாவிங்க?//

அடப்பாவிங்களா... அதுல பாம்பு போட்டு குடுத்தாலும் குடுப்பாங்க

//உங்க ஃப்ரெண்ட் என்னமாதிரி நல்ல ஹோட்டல் சாப்பிட்டு இருக்காங்க. நீங்க அருண் மாதிரி சாப்பிட்டு இருக்கீங்க.//

Forum பத்தி தெரியாம பேசிட்டார் விட்டுடுங்க. அடுத்த் முறை அவர மாதிரியே கையேந்தி பவன்ல சாப்பிடலாம்

@ சந்ரு

வாங்க, நீங்க ரொம்ப தைரியசாலிதான். அனுப்பிடுவோம்

Unknown said...

பிரமாதம்... இப்பிடித்தான் இருக்கணும்... சாப்பிட்டு பாத்தாதானே எங்களுக்கு சொல்ல முடியுது..


நாங்கலாம் பாண்டிச்சேரி போனா உயரமான மரங்களில் இருந்து இறக்கப்படும் (ஹி ஹி ) வெள்ளை ஒயின் அப்புறம் அவிச்ச கிழங்கு, கருவாடு, தோசை..
இப்படியாக குடி, குளி தான்...

கருடன் said...

@அருண்
//Forum பத்தி தெரியாம பேசிட்டார் விட்டுடுங்க. அடுத்த் முறை அவர மாதிரியே கையேந்தி பவன்ல சாப்பிடலாம்//

சத்தியம் தோத்துபோச்சி டா டெரர்.... இனி பேசி புண்ணியம் இல்ல. ப்ளாக் ஹக் பண்ண ஆள் பாரு....கிரர்ர்ர்ர்

அருண் பிரசாத் said...

@ கே ஆர் பி

//நாங்கலாம் பாண்டிச்சேரி போனா உயரமான மரங்களில் இருந்து இறக்கப்படும் (ஹி ஹி ) வெள்ளை ஒயின் அப்புறம் அவிச்ச கிழங்கு, கருவாடு, தோசை//

அண்ணா, அந்த ஒயின் சாப்பிட்டா நல்ல Strength வரும்னு சொல்லுவாங்களே அததான சொல்லுறீங்க.

@ Terror

//ப்ளாக் ஹக் பண்ண ஆள் பாரு.//

அதெல்லாம் அப்புறம் கத்துக்கலாம், மொதல்ல கம்ப்யூட்டர் ஆன் பண்ண கத்துக்குங்க

கருடன் said...

@அருண்
//அதெல்லாம் அப்புறம் கத்துக்கலாம், மொதல்ல கம்ப்யூட்டர் ஆன் பண்ண கத்துக்குங்க//

விடு மாப்பு!!! சண்டைன சட்டை கிழியதன் செய்யும்... இத எல்லாம் போய் வெளிய சொல்லிட்டு. அருணுக்கு 2 பாட்டில் வெள்ளை ஒய்ன் பார்சல்.

அனு said...

@டெரர்

//சத்தியம் தோத்துபோச்சி டா டெரர்.... இனி பேசி புண்ணியம் இல்ல. ப்ளாக் ஹக் பண்ண ஆள் பாரு....கிரர்ர்ர்ர்//

சின்ன வைரஸ பாத்த உடனே அலறி அடிச்சு ஒரு வாரம் ப்ளாக்-க்கு லீவ் விட அருண் ஒன்னும் VAS ஆள் கிடையாது.. எவ்வளவு பெரிய சூனியம் வச்சாலும் ஃப்பூ-ன்னு ஊதிட்டு அதை எப்படி முறியடிக்குறதுன்னு போஸ்ட் போடுற VKS ஆளு...

அருண் பிரசாத் said...

//சின்ன வைரஸ பாத்த உடனே அலறி அடிச்சு ஒரு வாரம் ப்ளாக்-க்கு லீவ் விட அருண் ஒன்னும் VAS ஆள் கிடையாது.. எவ்வளவு பெரிய சூனியம் வச்சாலும் ஃப்பூ-ன்னு ஊதிட்டு அதை எப்படி முறியடிக்குறதுன்னு போஸ்ட் போடுற VKS ஆளு..//

ரிப்பீட்டேடேடேடேடே.....

கருடன் said...

சிங்கம் சிகரட் பிடிக்க போன சிறு நரி பீடிக்கு லைட்டர் கேக்குதாம்... ஏதோ VKS மெம்பெர் எல்லாம் எங்கள கலாய்க்க ட்ரை செய்து (முடியாம) சோர்ந்து போய் இருக்கீங்க சொல்லி ஒரு வாரம் லீவ் விட சொன்னது தப்பா போச்சி...

எல் கே said...

hahah sema bulb pola arun

வெங்கட் said...

@ அருண்..,

// கம்பணி காசுதான் அதனால்
செலவு பற்றி கவலை இல்லை. //

Free-யா குடுத்தா
பினாயிலயும் குடிப்பாங்கன்னு
கேள்விதான் பட்டிருக்கேன்..

அதுக்கும் இதுக்கும் எதாவது
சம்பந்தம் இருக்கா..??

அப்புறம் நீங்க வேலை
செஞ்ச கம்பெனி Loss ஆகி.,
உங்க பழைய முதலாளி
இப்போ மவுண்ட் ரோட்ல பிச்சை
எடுத்திட்டு இருக்காராமே..?!!

அதை சொல்லவே இல்ல..!!

வெங்கட் said...

@ டெரர்.,

// சிங்கம் சிகரட் பிடிக்க போனா
சிறு நரி பீடிக்கு லைட்டர் கேக்குதாம்... //

எப்படிப்பா இது..
கலக்கலா இருக்கே..

Unknown said...

// என் நண்பன் அன்று இரவு எல்லாம் தூங்க முடியாமல் அவஸ்தை பட்டது வேறு கதை...//

அடடா! பிடிக்கலேன்னா வேறு எதையாவது ஆடர் செய்து சாப்பிட்டு இருக்கலாம்ல....

Anonymous said...

அருண் வெஜ். அமெரிக்கன் சோப்சி நல்ல இருக்குமே ஆனா நான் சாப்பிட்ட சோப்சியில் ப்ரூட்ஸ் நட்ஸ் எல்லாம் போட மாட்டாங்க ...

" பிரச்சனைய போர்வையாக போர்த்தி தூங்குவதாக சொன்ன என் நண்பன் அன்று இரவு எல்லாம் தூங்க முடியாமல் அவஸ்தை பட்டது வேறு கதை..."

ஐயோ பாவம் ,இது படிச்சு நாங்க இன்னிக்கு ஒரு புது பாடம் கத்து கிட்டோம் ..ஓசியில் சாப்பிடும்போது தெரிஞ்ச ஐடேம்ஸ் தான் சபிடனம் இல்லேனா உங்க நண்பன் கதி தான் ஹி ஹி ஹி

Karthick Chidambaram said...

Arun intha american chopsy americavil kidaikkirathu illai. Namma aalunga kandu pidippu aana peru americavukku

அருண் பிரசாத் said...

@ LK

ஓவர் பல்பு சாரே

@ வெங்கட்

கம்பனி ரகசியத்தை வெளியே சொல்வது இல்லை

@ கலாநேசன்

அதான் டயலாக்லாம் விட்டாச்சே, மெயிண்டெயின் பண்றாராம்

@ Karthick

நானும் பேரை பாத்துதான் ஏமாந்துட்டேன்

vinu said...

thanks for adding my blog on your list of blogs which you likes.

and i love the "பிளாக்குக்கு சூனியம்"
post of yours.

will come frequently

Gayathri said...

ROFL....sirichchu sirichchu vayaru punnaa pochu..mothal mothalla pizza saptapodhum "enna da ithu vendhum vegamalum enna kodumai ithu ? " nnu polambhinen..ipo andha pizzave pazhagi pochchu