Cricket Countdown....

Friday, July 16, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!

தில்லுதுர, சூப்பர் சிங்கர், தில்லாலங்கடி, சீரியல் கில்லர் (இதெல்லாம் பட்டபெயர் இல்லை, இவர் எழுதிய பதிவின் பெயர்) பிரபல பதிவரான (?!?!) வெங்கட் அவர்களை ஒரு வாரமாக காணவில்லை. 


அவரை பற்றிய பய(யோ)டேட்டா:
(கே.ஆர்.பி அண்ணன் மன்னிப்பாராக)

பெயர்                                             : வெங்கட்
தலைவர்                                       : இவர் கட்சில இருக்குறது இவர் மட்டும்தான். இவரே 
                                                               தலைவர், செயலாளர், பொருளாளர், தொண்டர்
                                                               எல்லாம்
துணை தலைவர்கள்                 : ஜனா என்ற நல்லவர்
மேலும் துணைத் தலைவர்கள் : தேடி கொண்டிருக்கிறார்
வயது                                              : சமீபத்தில் Profile ல் இருந்து Date of Birth ஐ 
                                                                எடுத்துட்டாரு (ஆனாலும் 34 னு கண்டுபிடிச்சாச்சு)
தொழில்                                         : பிளாக்கில் மொக்கை போடுவது
பலம்                                                : ஜனா
பலவீனம்                                       : தன் மொக்கையே தன்னை திருப்பி தாக்குவது
நீண்ட கால சாதனைகள்          : தனி ஆளாய் அடி வாங்குவது
சமீபத்திய சாதனைகள்            : உடன் அடிவாங்க Terror - Pandiyan ஐ சேர்த்து கொண்டது
நீண்ட கால எரிச்சல்                  : VKS சங்கம் (V - வெங்கடை K - கலாய்ப்போர் S - சங்கம்)
சமீபத்திய எரிச்சல்                    : தன் கம்பியூட்டரும் தன் கால் ஐ வாரியது
மக்கள்                                            : VKS ல் உள்ளவர்கள் தவிர
சொத்து மதிப்பு                           : 94 Followers, 113 பதிவுகள்
நண்பர்கள்                                    : உலக தமிழர்கள் அனைவரும்னு அவரே சொல்லிக்கிறார்
எதிரிகள்                                      : கண்டிப்பா VKS ல உள்ள 5 பேர் மட்டுமே
ஆசை                                            : மொக்கை வாங்காமல் தப்பிக்க
நிராசை                                        : எப்படி எழுதினாலும் VKS கும்முவது
பாராட்டுக்குரியது                    : எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குவது
பயம்                                              : VKS தவிர வேறு எதற்கும் இல்லை
கோபம்                                         : இவர் மனைவியும் இவரை கலாய்ப்பது
காணமல் போனவை               :  சீரியஸ் பதிவுகள்
புதியவை                                     : சுட்ட கவிதைகள்
கருத்து                                          : சூரியனுக்கே டார்ச் அடிக்கிறேனு சொல்லிகொண்டு
                                                          பகலில் டார்ச் உடன் அலைவது
டிஸ்கி: VKS ,VAS பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இங்கு சென்று பார்க்கவும். இவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு VKS சார்பாக கேட்டுகொள்கிறேன். கலாய்க்க ஆள் இல்லாமல் தவிக்கிறோம், தாமதமானால் அனைத்து பதிவர்களையும் கன்னாபின்னாவென கலாய்க்கும் வாய்ப்பு உள்ளதால் சீக்கிரம் கண்டுபிடித்து தந்து கலாய்ப்பில் இருந்து தப்பிக்கவும். பிறகு நீங்களும் தாராளமாக உடன் சேர்ந்து வெங்கடை கலாய்க்கலாம்

31 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சூப்பர். நீர் என் இனம் அய்யா. அதெப்படி நம்ம ரெண்டு பெரும் ஒரே நாள்ல ஒரே நேரத்துல வெங்கட்ட கலாய்ச்சி பதிவு போட்டிருக்கோம். நம் VKS சங்கத்துல எவ்ளோ ஒற்றுமை. பதிவு கூட ஒரே மாதிரி போடுறோம்.

@ வெங்கட் கவனிங்க எங்களோட ஒற்றுமையை. இனி எங்ககிட்ட மோதுவீங்க?

Jey said...

ஒருத்தர் சிக்குன இப்படி போட்டு வாருறீகளே , உங்களுக்கே பாவமா இல்லையாப்பா111??, போய் புள்ளகுட்டிகள படிக்க போடுங்கப்பா...( இப்படிக்கு அடிவாங்குபவர்களை கண்டு பரிதாபப்படுவோர் சங்கம்)

கருடன் said...

அருண் நம்ம நேத்து போன்ல பேசிட்ட மாதிரியே கரெக்டா போஸ்ட் போட்டு இருக்கீங்க... இனி கோகுலத்தில் சூரியன் ப்ளாக் தெரியாதவங்க (யாரவது இருந்த) நீங்க கொடுத்து இருக்க லிங்க்ஸ் வச்சி நல்ல தெரிஞ்சிபங்க.. பேசினபடி உங்க A/c ல அமௌன்ட் கிரெடிட் பண்ணியாச்சி.

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்,

// 1st //

பின்ன வெங்கட் பதிவு போட்டாலும் முதல்ல கலாய்க்கறது நாமதான், வெங்கடை பற்றி பதிவு போட்டாலும் முதல்ல Attendance கொடுக்கறது நாமதானே!

@ Jey

தல, நீங்களும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல...

@ Terror

அமெளண்ட்ல 10 பைசா குறையுது. கரெக்டா அனுப்பிடுங்க இல்லைனா உங்கள பத்தி பதிவு போட வேண்டி வரும்.

கருடன் said...

(MIND VOICE)

//பிரபல பதிவரான (?!?!) வெங்கட் அவர்களை ஒரு வாரமாக காணவில்லை.//

போஸ்ட் போட்டதன் குருப்ப வந்து கும்முவிங்க நினச்சேன்.. போஸ்ட் போடடியுமா?

//நீண்ட கால சாதனைகள் : தனி ஆளாய் அடி வாங்குவது//

எப்பிடிதான் தாங்கரரோ..

//சமீபத்திய எரிச்சல் : தன் கம்பியூட்டரும் தன் கால் ஐ வாரியது//

வெங்கட் கம்ப்யூட்டர் பழுது ஆகியது VKS சதி. எங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை....

Jey said...

அருண் பிரசாத் சொன்னது...

@ Jey

தல, நீங்களும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல...///

நீங்க போடுர மொக்கயயும் படிக்கனுமில்ல அதுதான் லேட்.
( நாலாப்பு பெயிலான கதைய எழுதி வச்சிருகேன், இன்னிக்கு ஈவெனிங்க் போடலாம்னு, கும்முர கும்பல பாத்தாதான் கொஞ்சம் அலர்ஜியாஇருக்கு)

அருண் பிரசாத் said...

@ Terror
//வெங்கட் கம்ப்யூட்டர் பழுது ஆகியது VKS சதி. எங்களுக்கு சிபிஐ விசாரணை தேவை....//

கரெக்ட், இப்படியே தான் மெயிண்டெயின் பண்ணனும், நீங்க VKS Spy -னு காட்டிக்க கூடாது

@ jey

//நாலாப்பு பெயிலான கதைய எழுதி வச்சிருகேன், இன்னிக்கு ஈவெனிங்க் போடலாம்னு, கும்முர கும்பல பாத்தாதான் கொஞ்சம் அலர்ஜியாஇருக்கு//
எப்படியோ, நம்ம போதைக்கு ஊருகாய் கிடைச்சா சரி

pinkyrose said...

அங்க ஒருத்தர் யாரு தமிழன்னு தேடிட்டு இருக்கார்...
எல்லாரும் இங்க இருக்கீங்க...
போங்க போய் நாங்க தான் தமிலன்னு சொல்லுங்க...

Madhavan Srinivasagopalan said...

//கலாய்க்க ஆள் இல்லாமல் தவிக்கிறோம்//
அதான் அக்கறையா போஸ்ட் போட்டுத் தேடுறீங்களா?

Anonymous said...

உங்க நண்பனை கண்டுபிடிச்சு தந்தா என்ன பரிசு தருவிங்க.. அது எழுத மறந்திங்களா???

இது படிச்ச பிறகாவது வெங்கட் சார் உங்கள்காகே எதா ஒரு பதிவு போடுவா ... ஒரு வாரமா தான் காணுமா அட இங்கே ஒரு மாதம் இல்லாமல் போனாலும் கேட்க ஆளு இல்லை ஹூம் ...ஹலோ வெங்கட் நீங்க ரொம்ப லக்கி தான் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போஸ்ட் போட்டதன் குருப்ப வந்து கும்முவிங்க நினச்சேன்.. போஸ்ட் போடடியுமா?//

எப்படினாலும் கும்முறது உறுதி...

செல்வா said...

//தொழில் : பிளாக்கில் மொக்கை போடுவது///
நானும் அந்த தொழில் தாங்க செய்யுறேன் ..!!

செல்வா said...

///கருத்து : சூரியனுக்கே டார்ச் அடிக்கிறேனு சொல்லிகொண்டு
பகலில் டார்ச் உடன் அலைவது////
பகல்ல தானே சூரியன் வருது ..!!

Jey said...

பதிவு பொட்டாச்சி:
http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_16.html

அருண் பிரசாத் said...

@ Pinky rose

யார் அது? யார் அது?

@ Madhavan
//அதான் அக்கறையா போஸ்ட் போட்டுத் தேடுறீங்களா? //

நாங்களும் எவ்வள்வு நாள் தான் சார் பொருமையா இருக்குறது. ரொம்ப போர் அடிக்குதுல

@ Sandhya
//ஒரு வாரமா தான் காணுமா அட இங்கே ஒரு மாதம் இல்லாமல் போனாலும் கேட்க ஆளு இல்லை ஹூம்//
உங்களையும் இப்படி தேடனுமா? செய்துடுவோம். (இதை தான் ஆடு தானா மஞ்ச தண்ணி ஊத்திக்கிட்டு, தலையா காட்டுறதுனு சொல்வாங்க)

@ ரமெஷ்

//எப்படினாலும் கும்முறது உறுதி..//

சங்க கொள்கை அப்படி. நீ கலக்கு சித்தப்பு

@ ப.செல்வக்குமார்

//நானும் அந்த தொழில் தாங்க செய்யுறேன் ..!! //

தம்பி, ஊருக்கு புதுசோ! வாங்க வாங்க

//பகல்ல தானே சூரியன் வருது //

என்னா கண்டுபிடிப்பு!

வெங்கட் said...

( Mind Voice )
சரி விட்றா வெங்கட்..,

இதெல்லாம் நாளைக்கு
உன் சரித்திரத்தில வரும்..
Students எல்லாம் நோட்ஸ்
எடுப்பாங்க..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

யப்பா, உயிர் வந்தது, எங்கள் அழைப்பை ஏற்று திரும்ப வந்துடீங்களா!

//இதெல்லாம் நாளைக்கு
உன் சரித்திரத்தில வரும்..
Students எல்லாம் நோட்ஸ்
எடுப்பாங்க.. //

எது இந்த பயோடேட்டாவையா?

வெங்கட் said...

ஆமா இந்த பதிவை படிக்கும் போது
இங்கே யாருக்காவது குடுத்த காசுக்கு
மேல கூவுன மாதிரி ஒரு Feel இருக்கா..??

இருந்தா சொல்லிடுங்க..

அருணுக்கு இன்னும் கொஞ்சம்
Extra போட்டு குடுத்திடலாம்..

சௌந்தர் said...

@ வெங்கட்

யப்பா, உயிர் வந்தது, எங்கள் அழைப்பை ஏற்று திரும்ப வந்துடீங்களா!

//இதெல்லாம் நாளைக்கு
உன் சரித்திரத்தில வரும்..
Students எல்லாம் நோட்ஸ்
எடுப்பாங்க.. //

எது இந்த பயோடேட்டாவையா?//

காணமல் போனவர் வந்துவிட்டார்
34 வயசு ஆனா சின்ன வயசு போட்டோ போட்டு ஏமாற்றுகிறார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எது இந்த பயோடேட்டாவையா?//

ayyo ayyo. venkat ஏன் தேடி வந்து தொப்பி வாங்குறீங்க?

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

விரைவில் வெங்கட் ஒரு பெரிய தொப்பி கடையே வெச்சிடுவார் போல

@ அனு

எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும், இல்லையேல் உங்களை பற்றி ஒரு பயோடெட்டா எழுத வேண்டிவரும்

Gayathri said...

ஒரு லீவு லெட்டெர் கொடுத்துட்டு போயிருந்தா இத்தனை குழப்பம் வந்துருக்காது...

ரசிகன் said...

அருண்..

VASதலைவர் எப்பவும் பதிவு போட தான் யோசிப்பார்...
இனி Leaveவிட , அத விட பயங்கரமா யோசிப்பார்..
பின்னி பெட‌லெடுத்துட்டீங்க‌ போங்க‌..

அனு said...

//@ அனு

எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும், இல்லையேல் உங்களை பற்றி ஒரு பயோடெட்டா எழுத வேண்டிவரும்//

அருண்,
நான் நேற்றே கமெண்ட் போட்டுட்டேன்.. அதை ஒழுங்கா publish பண்ணுங்க..

அனு said...

நம் கட்சியின் சக்தியை பற்றி தெரிந்து கொண்ட வெங்கட் VKSக்கு எதிராக சதி செய்யவே இந்த வாரம் பதிவுலகத்துக்கு லீவ் போட்டார் என்று உளவுத்துறைல இருந்து நியூஸ் வந்திருக்கு..

இது சம்பந்தமா அவர் டெல்லிக்குக் கூட போய் வந்ததாக தகவல்.. அங்கிருந்தவர்கள் இவர் வந்த நோக்கத்தைத் தெரிந்தவுடன் சகல மரியாதையுடன்(??) அனுப்பிவிட்டார்களாம்.. அதனால, சிங்கம் சோகமா வந்து ஒன்னுமே நடக்காத மாதிரி கடைய தொரந்துடுச்சாம்..

அருண் பிரசாத் said...

@ Gayathri

//ஒரு லீவு லெட்டெர் கொடுத்துட்டு போயிருந்தா இத்தனை குழப்பம் வந்துருக்காது...//

இந்த மேட்டர் நல்லா இருக்கே! சங்கத்துல சொல்லி தீர்மானம் போட்டுற வேண்டியது தான்

@ ரசிகன்

பின்ன, எவ்வளவு நாள்தான் வெங்கடை கலாய்க்காம இருக்குறது. 2 நாளா தூக்கமே வரலை

@ அனு

//அருண்,
நான் நேற்றே கமெண்ட் போட்டுட்டேன்.. அதை ஒழுங்கா publish பண்ணுங்க.//

அப்படியா, எனக்கு வரலையே. ஒருவேளை VAS சதியா இருக்குமோ?


ஓ! அந்த சிங்கம் தான் பதிவுல வந்த சிங்கமா?

பெசொவி said...

ஹா....ஹா.....கலக்கல்!

Gayathri said...

en valaypadhivin right side la POll nadakuthu..angethan vote podanum..
namathu india arasi ethirgalam ungal kaiyil ilai ilai ..octopus kaiyil? monkey kaiyil? methu optionukku polla parkavum..

Unknown said...

வணக்கம் தம்பி மிகவும் ரசித்தேன்.. இன்றைக்குத்தான் பார்த்தேன்..


அப்படியே நான் ரொம்ப நல்லவன்னு சத்தியம் பண்ணும் ரமேஷ் தம்பிக்கு அனுவை விட்டு பயோடேட்டா போட வேண்டும் என
வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்...

அருண் பிரசாத் said...

@ பெ.சொ.வி

நன்றிங்க

@ Gayathri

ok done

@ கே ஆர் பி

செய்துடுவோம்னா. ஆனா லிஸ்ட் பெருசா போகும் பரவாயில்லை.