என் தம்பி 3வது படித்து கொண்டிருந்தான். நானும் அவனும் ஒரே பள்ளி. (ஒரே கிளாஸானு கேட்டு கமெண்ட் போட தடை)
அரையாண்டு பரிட்சை முடிந்து பள்ளி திறந்த முதல் நாள். அனைத்து பரிட்சை விடைத்தாள்களையும் கொடுத்தார்கள் (அதுதான் காலகாலமா நடக்குதே, லீவு முடிஞ்சு ஸ்கூல் போய் வந்த மொத நாள் வீட்டுல பூசை இல்லைனா தெய்வ குத்தம் ஆகிடுமே!)
என் தம்பி வகுப்பிலிருந்து எனக்கு அழைப்பு, அழைத்தது தமிழ் ஆசிரியை. “நாளை உன் பெற்றோரை அழைத்துவந்து உன் தம்பி விடைதாளை வாங்கி போக சொல்” - வேறு விளக்கங்கள் இல்லை. ( தம்பி கிளாஸ் தமிழ் ஆசிரியை என்னை கூப்பிடுறதும், என் தமிழ் ஆசிரியை என் தம்பியை கூப்பிடுறதும் சகஜம், இதை அவங்க ஒரு விளையாட்டாவே செய்துட்டு இருக்காங்க. இப்பவும்?!)
மறுநாள் என் தந்தை வந்து விடைதாளை வாங்கி சென்றார். மாலை ஒருவித பயத்துடன் நாங்கள் இருவரும் வீட்டிற்கு சென்றோம்.(முந்தின நாள் கிடைக்க வேண்டிய பூசை, மறுநாள் கண்டிப்பா உண்டுன்னு தயாரா போனோம்)
அப்பா, டென்ஷனாக இருப்பார் என பார்த்தால், என் தம்பியை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
மேட்டர் இதுதான்:
தமிழ் பரிட்சையில் பழமொழிகளை எழுத சொல்லி இருக்கிறார்கள். அதில் ஒரு பழமொழி
“கந்தையானாலும் கசக்கி கட்டு”
அதற்கு என் தம்பி எழுதியது,
“தந்தையானாலும் காசாக்கி காட்டு”
(எப்புடி குடும்பமா தமிழ் வளர்க்குறோம்ல, நான் வளர்த்த தமிழை இங்க போய் பாருங்க மக்கா)
25 comments:
//தந்தையானாலும் காசாக்கி காட்டு”//
சூப்ப்ர்ர்ர்ர்
@அருண்
//என் தம்பி 3வது படித்து கொண்டிருந்தான்//
அப்போ நீங்க 2 வதுதான படிச்சிட்டு இருந்திங்க?
என்னை போல உங்க தம்பி ஹி ஹி சங்கம் வைத்து தமிழ் வளர்ப்போம்
வருகைக்கு நன்றி ரியாஸ்
@ Terror
//அப்போ நீங்க 2 வதுதான படிச்சிட்டு இருந்திங்க?//
ஆமா, ஆனா 2 க்கு முன்னாடி ஒரு 1 மிஸ்ஸிங். 12 வது படிச்சிட்டு இருந்தேன்
@ செளந்தர்
மாநாடு வெச்சி தமிழ் வளர்ப்பதுதான்பா இப்ப டிரெண்டு
@ அருண்.,
// ஆமா, ஆனா 2 க்கு முன்னாடி
ஒரு 1 மிஸ்ஸிங்.
12 வது படிச்சிட்டு இருந்தேன் //
எல்லோரும் நல்லா
கேட்டுக்கோங்க...
இவரு 12வது வரை
படிச்சிருக்காராம்..!!!
என்ன இந்த கதையை
எல்லோரும் நம்பிட்டீங்களா..??
அப்ப ஓ.கே..
ஏம்பா அருண்..
நாங்கல்லாம் இதை
நம்பிட்டோம்., நம்பிட்டோம்..!!
கடைசியில, நீ எத்தனாப்பு, உந்தம்பி எத்தனாப்புனு சொல்லாததுக்கு, என் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
@ வெங்கட்,
//ஏம்பா அருண்..
நாங்கல்லாம் இதை
நம்பிட்டோம்., நம்பிட்டோம்..!!//
யப்பா, உங்கள நம்ப வெக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது.
@ Jey
எத்தனாப்பா முக்கியம், தமிழை வளர்கிறதுதான முக்கியம்.
// தம்பி கிளாஸ் தமிழ் ஆசிரியை என்னை கூப்பிடுறதும், என் தமிழ் ஆசிரியை என் தம்பியை கூப்பிடுறதும் சகஜம், இதை அவங்க ஒரு விளையாட்டாவே செய்துட்டு இருக்காங்க. இப்பவும்?!//
இப்பவுமா?!!!!!!!!!
அடக்கடவுளே!
:(
///(ஒரே கிளாஸானு கேட்டு கமெண்ட் போட தடை)
///
அப்படின்னா ஒரே வகுப்பா ..?
@ pinky
ஆமாங்க, அவங்களுக்கு போர் அடிக்குறப்பலாம் நம்மல கூப்பிட்டு அடிக்கிறாங்க...
@ செல்வா
இல்லை, அப்படினா டம்ளர் (அ) கண்ணாடி (கிளாஸ் - Glass)
//தந்தையானாலும் காசாக்கி காட்டு//
நல்லா இருகு தம்பி...கதை....ஹா..ஹா..ஹா...!
வாங்க தேவான்னா! இப்பவாவது வழி தெரிஞ்சிதே!
இது கதையில்லைனா, நிஜமோ நிஜம்!
“தந்தையானாலும் காசாக்கி காட்டு”
.... செம்மொழி மாநாட்டில இதையும் சேர்க்காம விட்டுட்டாங்களே..... கலக்கல் மொழி!
சூப்பர். இந்தமாதிரி ஒரு பழமொழிய கேள்விபட்டதே இல்லை.
@ Chitra
முதல் வருகைக்கு நன்றிங்க.
கலைஞர் கூப்பிட்டார் நாங்கதான் போகல, ரொம்ப பிஸி
@ ரமெஷ்
நல்லவேளை வந்திங்க, இல்ல ஒரு பயோடேட்டா போட்டிருப்பேன்
என் தம்பியும் இதே மாதிரி வேலை பண்ணியிருக்கான்.. ஆனா, இங்கிலிஷ்-ல...
Q: Who is a good friend?
A: A Good friend who even sacrifies his own life for his friend.
என் தம்பி எழுதியது:
A Good friend who even sacrifies his own wife for his friend. :))
//"தந்தையானாலும் காசாக்கி காட்டு”// - தலைவா இத நீங்கதானே எழுதுனீங்க .... இப்ப தம்பிங்குறீங்க ?
எப்படி கண்டுபுடிச்சுட்டோம்ல :-)
//A Good friend who even sacrifies his own wife for his friend//
nice
உங்க தம்பி சரியா தானே எழுதிருக்காரு
@ அனு
என் தம்பி பரவாயில்லை போல, உங்க தம்பி ரொம்ப டேஞ்சர் பார்டியோ/
@ கார்திக்
எப்படி வந்து உண்மைய போட்டு உடைக்க கூடாது, சொல்லிட்டேன்
@ மங்குனி
சரிதான் மங்குனி, யாரு வாங்குறது
“தந்தையானாலும் காசாக்கி காட்டு”
சூப்பர் பழ மொழி தான்
@ Sandhya
வாங்க, புதுசா கத்துக்கிடீங்களா? அதான் நமக்கு வேணும்
// தந்தையானாலும் காசாக்கி காட்டு...///
ஹா ஹா... :D :D :D
எழுத்து தவறினா... எல்லாமே மாறி போயிருச்சு..!!
அருண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண் சாஆஆஆஆஆஆஆஆஆஅர்!
@ Ananthi
முதல் வருகைக்கு நன்றி ஆனந்தி. தொடர்ந்து வாங்க
@ Pinky rose
Present மேடம்
Post a Comment