மரணம் - மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு. சில சமயங்களில் அது வரும் வழியே விசித்திரமாக இருக்கும். அதிக தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட மரணத்தை பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். இதோ, அதன் தொடர்ச்சியில் அடுத்த விசித்திர மரணம்...
24 மார்ச், 1975. 50 வயதான இங்கிலாந்தை சேர்ந்த அலெக்ஸ் மிட்சல் தன்னுடைய விருப்பமான காமெடி நிகழ்ச்சியான “The Goddies” பார்த்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி இவருக்கு பிடித்த ஒன்று. தவறவிடுவதில்லை. அதில் வரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் வாய்விட்டு சிரிப்பார்.
அன்றும் அப்படிதான் ஆரம்பித்தது. தொடர்ந்து 10 நிமிடம் நிகழ்ச்சி நகைச்சுவையாக சென்று கொண்டு இருக்க, இவர் தொடர்ந்து சிரித்து கொண்டு இருந்தார். இவர் தொல்லைதாளாத இவர் மனைவி எச்சரித்தும் சிரிப்பது நிற்கவில்லை. இப்படி தொடர்ந்து 25 நிமிடங்கள் சிரித்த இவர், அமர்ந்து இருந்த சோபாவில் இருந்து சுருண்டுவிழுந்து இறந்தார்.
மரணத்திற்கான மருத்துவ காரணம்:
- தொடர்ந்து சிரித்தால், சுவாசம் குறைந்து மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது
- மேலும், இதய துடிப்பும் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.
- இதனால் இதயத்திற்கு ஆக்சிஜன் சப்ளை குறைகிறது.
- ஆக்சிஜன் குறைந்ததால் இதய தசைகள் செயல் இழக்கின்றன.
- இதன் காரணமாக “Heart Attack” அல்லது “Heart Failure” ஏற்பட்டும்.
- இதன் காரணமாக மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.
- இவர் தொடர்ந்து சிரித்த THE GODDIES நிகழ்ச்சியின் பாகத்தின் பெயர் “ Kung Fu Kapers ”
- அலெக்ஸ்ன் மனைவி, அவர் இறந்த பின்னர் THE GOODIES நிகழ்ச்சிக்கு அனுப்பிய கடிதத்தில் அலெக்ஸ்ன் இறுதி நிமிடங்களை மகிழ்ச்சியாக வைத்ததற்கு நன்றி கூறி இருக்கிறார்
அதிகமாக சிரிப்பதும் ஆபத்துதான்....

