Cricket Countdown....

Monday, May 24, 2010

மனைவி.....



மே 26,

ஒவ்வொருவருடமும் சாதாரனமாய் இருந்த இந்த நாள்,
2004 முதல் முக்கியமானதாய் மாறியது.

நட்பை காதலித்தேன், காதலியாய் வந்தாள்.
காதலை மணந்தேன், மனைவியாய் மாறினாள்.

நண்பன்னாய் அவள் பிறந்தநாளில்,
உலகத்தில் ஒருவனாய் வாழ்த்தினேன்.

காதலனாய் அவள் பிறந்தநாளில்,
நாங்களே உலகமாய் வாழ்ந்தோம்.

கணவனாய் அவள் பிறந்தநாளில்......
ஒரு முறையும் உடன் இருக்கவில்லை.....

பணத்தை தேடி, பிரதேசங்கள் சென்றேன்....
மனதையும் மழலையையும் மறந்தேன், மறுத்தேன்...

இன்று,

மனம், மனைவி, மழலை - மூன்றும் என்னுடன்....
மணமாகி இரண்டு வருடங்களில்.....
மனைவியுடன் கொண்டாடும்....
அவளின் முதல் பிறந்தநாள்....

என்ன பரிசு கொடுக்க?
எப்படி அவளை பரவசபடுத்த?

கொடுக்கும் பரிசு ....
அவளை சுனாமியாய் சுழற்றிபோடவேண்டும்...
பரவசத்தில் அவள்...
பதில் சொலமுடியாமல் பாடாய் பட வேண்டும்....

யோசித்து... யோசித்து....
ஏதும் புலபடாமல்...

கவிதை எழுதவா? காவியம் பாடவா?
ஓவியம் வரையவா? பூக்கள் கொடுக்கவா?

ஏது செய்தாலும்....
அது நீ என்மேல் காட்டும் காதலுக்கு ஈடு ஆகாதடி...

ஏன் அடி என்னை உன் காதலுக்கு கூட ஈடுகொடுக்க முடியாதவனாய் காதலித்தாய்...
பார்! என்னையே கொடுத்தாலும், எல்லாம் அற்பமே...

ஏதும் கிடைக்காமல், ஒற்றை ரோஜாவுடன்...
அவள் முன் நின்றேன்...
என்னிடம் வேறு பரிசு இல்லை என்றேன்...


" இந்த நொடி போதுமடா, என்ன பரிசு உண்டு உலகில் இதை ஈடுசெய்ய" என்றாள்.


அன்பு மனைவி காயத்ரிகாக இந்த பதிவு....




Friday, May 21, 2010

பாவம் பாகிஸ்தான் இளைஞ்சர்கள்!

பாகிஸ்தான் இளைஞ்சர்களுக்கு போறாத காலம் போலும்.

நிகழ்வு 1 :
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் 2009 முதல் ஜனவரி 2010 வரை ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் சென்றது . 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு ட்வென்டி ட்வென்டி என அனைத்திலும் தோல்வி. மருந்திற்கு கூட ஒரு வெற்றி இல்லை. டாஸ்மானியா உடன் நடந்த ப்ராக்டிஸ் மேட்ச் கூட டிரா வில் முடிந்தது. இதன் தொடர்ச்சியாக யூனுஸ் மற்றும் யூசுப் க்கு வாழ்நாள் தடையும், ரானா மற்றும் மாலிக் க்கு ஓராண்டு தடையும் விதித்தது.

நிகழ்வு 2 :
T20 உலக கோப்பை அரை இறுதியில், அந்த தொடரிலேயே அதிகபட்ச ஸ்கோர்களில் ஒன்றான 191 ஐ ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்தது. ஆஸ்திரேலியா வும் பாகிஸ்தானின் சுழல் பந்து வீச்சில் திணறித்தான் போனது. கைக்கு ஏறியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல மைக்கல் ஹுசே கடைசி  ஓவரில் விஸ்வருபம் எடுத்து வெற்றியை பாகிஸ்தான்னிடம் இருந்து  பறித்தார் என்பதைவிட பிடுங்கினார் என்றே சொல்லவேண்டும்

நிகழ்வு 3 :
பாகிஸ்தான் அரசாங்கம் தற்போது FACE BOOK, YOUTUBE ஆகிய தளங்களை தடை செய்து உள்ளது. அவர்கள் சொல்லும் காரணம்:  OBJECTIONAL CONTENT. இன்டர்நெட்டில் பல தேவையிலாத விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. தடை என்பது தீர்வு இல்லை. அந்த தலத்தில் உள்ள URL மட்டும் தடை செய்தால் போதும். மேலும் அந்த இரு தலத்தில் மட்டும் OBJECTIONAL கன்டென்ட் இல்லை இன்டர்நெட் முழுதும் கொட்டி கிடக்கிறது. இண்டர்நேடையே தடை செய்யவேண்டியது தானே.

ஒன்றுமட்டும் நிச்சயம் குரங்குகையில் கிடைத்த பூமாலை போல தேவை இல்லாதவர்கள் கையில் கிரிக்கெட்டும் இண்டர்நெட்டும் சிக்கிஉளது. இன்னும் எனென தடைகள் வரும் மோ பாகிஸ்தான்னுக்கு.

பாகிஸ்தான் னுக்கு அதிர்ஷ்டமும் இல்லை, முளை உள்ள தலைவர்களும் இல்லை.

அணைத்து நாடுகளும் முன்னோக்கி சென்றால் பாகிஸ்தான் பின்னோக்கி கற்காலத்திற்கு செல்கிறது...

பிரேக்கிங் நியூஸ்:

எதிர் பார்த்தது போலவே இந்த பதிவை publish செய்த சில மணி நேரத்தில் TWITTER உம் தடை செய்ய பட்டுவிட்டது பாகிஸ்தானில்.

எல்லாம் சரி எப்போது தீவிரவாதத்தை தடை செய்யும் பாகிஸ்தான்!

டையில் பிட்:

சென்னையை கலந்கடிதாள் லைலா (புயல்) -


 பொது மக்கள் இதை கண்டு கலங்க வேண்டாம்.