Cricket Countdown....

Monday, July 5, 2010

நான் இந்தியன் அல்ல! - தொடர்பதிவு


தொடர்பதிவுக்கு அழைத்த ரமெஷுக்கு நன்றி. அவர் தந்த தலைப்பு "நான் இந்தியன் அல்ல" அதாவது, நான் ஒரு வெளிநாட்டுக்காரன். சுற்றுப்பயணத்துக்கு இந்தியா வர்றேன். என் பார்வைல இந்தியா எப்படி இருக்கும். இதுதான் பதிவுக்கான கரு. இந்த கருவை கொண்டு பல பதிவுகளை போடலாம், பின் அதுவே ஒரு பெரிய தொடர் பதிவாக போய்விடும். அதனால், ஒரு சில விஷயங்களை ஒரு பயணகட்டுரையாக பதிவு செய்து உள்ளேன்.


"நான் இந்தியன் அல்ல"

வாண்க்கமுங்க, நான் தான் சைக்கிள் ஜாக்சனுங்க. இந்தியாக்கி நான் போய்ட்டு வந்தான். நம்க்கு தமிள் கொஞ்சம்தான் வரும் so நெம்மல் friends பதிவர்கள் help கேட்க மிடியுதானு பார்துச்சு. ஆனா, அவங்க blog போய் பார்த்தா,

1. ரமெஷ் - இந்த ஆள் சினிமா ரொம்ப பாக்குது. so, நம்கு ஊர் சுத்திகாட்ட டைம் கிடையாது
2. பட்டாபட்டி -எழுதுன பதிவைவிட கமெண்ட் overaa வருது. அத reply பண்ணவே டைம் போதாது
3. வெங்கட் - சாரி, இவர் பிஸியோ பிஸி மனைவிக்கு புடவை எடுக்க போகனும், பசங்களுக்கு homework செய்யனும்.
4.பெயர் சொல்ல விருப்பமில்லை - பாவம் பொண்ணு கேட்குற கேள்விக்கு பதில் சொல்லவே நேரம் இல்லை
5. அனு - வெங்கிய கலாய்கரதே Full Time Job, நம்கி Appointment தராது
6. ப்ரியமுடன் வஸந்த் - ஒரு தொடர்பதிவுக்கு அல்லாரையும் மாட்டிவிட்டுச்சி, பதிவுல்கம் இத அடிக்க தேடுது, So நம்கூட வராது

(வெளிநாட்டு தமிழ் தொடர்ந்து எழுத கடினமாக இருப்பதால், நம் தமிழிலேயே இனி தொடருவோம்)

அதனால் இவங்களை எல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நானே நேரடியாக சென்று பார்த்தேன்.



முதலில் எங்கள் நாட்டில் இல்லாத ஆட்டோவில் ஏறி ஒரு கோவிலுக்கு போனேன். நல்லா பெயர் வெச்சாங்கையா, ஆட்டோனு ஒரே ஆட்டோ ஆட்டுனு ஆட்டி எடுத்துட்டான். கிடைக்கிற சந்துல, 2 பஸ்க்கு நடுவுலலாம் ஓட்டுராங்க. ஒரு வழியா உயிர்பிழைத்து கோவிலுக்கு போனேன்.
இந்த நாட்டின் கோவில்கள் மிக அருமையான கலைநயத்துடன் கூடிய சிற்பங்களை பார்த்து வியந்தேன். அவற்றை சரியாக பாராமரிக்க வேண்டும். அங்கு வரும் பெண்களும் அவர்களின் உடையும் வண்ணமயம்.

இந்த ஆட்டோவே வேணாம் சாமினு, அடுத்து பேருந்தில் கடற்கரைக்கு போனேன்.ஏதோ மாநகர பேரூந்தாம்ல இதுல ஏறி உட்கார்ந்தா ஏதோ ஹெலிகாப்டர்ல உட்கார்ந்த மாதிரி இருந்தது. நீங்க வேற பெருசா கற்பனை பண்ண வேண்டாம், நான் அதோட ஓட்டை உடைச்சல் சத்தத்தை சொன்னேன். பக்கத்துல இருந்த புண்ணியவான் நான் அவர் வீட்டு தலையணை மாதிரி நல்லா என் தோள் ல சாஞ்சு தூங்குறார். இன்னும் என்னடானா இந்த மாதிரி பஸ்ல மனிஷனை ஏத்திட்டு போறதே பெருசு போதாததுக்கு பஸ் மேல சைக்கிள், சாமான்கள், மூட்டை இன்னும் எதைஎதையோ ஏத்துறாங்க.
ஆனா இந்த மெரீனா கடற்கரை, எவ்வளவு பெருசு! எவ்வளவு கூட்டம்! எவ்வளவு குப்பை! குப்பைத்தொட்டியை தவிர எல்லா இடத்திலும் குப்பை இருக்கு.

அடுத்து மைசூருக்கு போனேன்.  உலகதுலயே அதிக Employers இருக்குற நிறுவனம்னு பெருமை உள்ள ரயில்ல பயணம், உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... இத பத்தி சொல்லியே ஆகணும். இது தான் இந்த நாட்டிலேயே வேகமா போகும் வாகனமாம். நடுவுல டிரைவருக்கு வழி மறந்துபோச்சானு தெரியலை. அங்க அங்க அரை மணிநேரம் நிருத்திபுடராருயா! சிக்னல் கிடைகலையாம். இதுல பான் பராக் நாற்றம் வேற வண்டி பூரா. நாங்க எங்க ஊருல இந்திய டீயை விரும்பி குடிப்போம் அந்த நினைப்புல ரயில்ல விற்கிர டீயை குடிச்சா, வாய்ல வைக்க முடியல. கிட்டதட்ட 3 மணிநேரம் லேட்டா போய் சேர்ந்தேன் . ஆனா, இந்த மைசூரு அரண்மனை அருமைங்க. என்னமா வாழ்ந்து இருக்காருயா அந்த மஹாராஜா. Climate உம் நல்லா இருந்தது.

அடுத்து அங்க இருந்து ஆக்ரா போனேன், ஒரு கார்ல ஏறி தாஜ்மகாலுக்கு போனேன். என்னா டிராபிக்பா. வண்டி நத்தை போல ஊருது. அங்க அங்க டிராபிக் போலிசு வண்டிய நிறுத்தி பணம் வாங்குறார். இது இங்க வழக்கமாம் (மாமூலாம்). அடிக்குற வெயில்ல Non Ac கார்ல போனா நீங்க கருவாடுதான். ஆனாலும், அந்த பெரிய ரோடை நல்லா மெயின்டேய்ன் பண்ணுறாங்கப்பா....

ஆணிய புடுங்க வேணாம்னுட்டு, நடந்தா - அய்யோ, பிளாட்பாரத்தை கானோம். எல்லாத்துலயும் கடை போட்டு இருக்காங்க. நீங்க இங்க நடக்கும்போது கவனம் கொள்ளவேண்டியது என்னனா முதல்ல லாரி, பிறகு பஸ், பிறகு கார், பிறகு பைக் எல்லாத்துக்கும் வழிவிட்டுட்டு பிறகே நீங்க போகனும். என்னாது? டிராபிக் சிக்னல்லா! அதை பார்த்து போனா உங்களுக்கு சங்குதான்.

ஆனா, தெரு ஓரமா இருக்குற சாப்பாட்டு கடைல கூட்டம் இருக்கு. ஏழைல இருந்து எல்லாதரப்பு மக்களும் சாப்பிடுறாங்க. விலையும் ரொம்ப குறைவு. ருசியும் அருமை. இந்த நாடு எல்லா துறைகளிலும் வேகமாக முன்னெறிவருகிறது. மக்களின் உழைப்பும், அப்துல் கலாம் போன்ற அறிவாளிகளும் இணைந்து விரைவில் இதை உலகின் பெரிய வல்லரசாக மாற்றுவர். கண்டிப்பாக படங்களில் காட்டுவது போல இந்தியா கிடையாது 20% அப்படி இருந்தால் 80% நன்றாக முன்னேறியுள்ளது. சிறு மாற்றங்களையும், சில திருத்தங்களையும் செய்தால் இந்தியா அழகான, வலிமையான நாடு.


டிப்ஸ்:
1. நீங்கள் வெளிநாட்டவராக இருந்தால், இந்தியாவில் பிரதமர் பதவியை எளிதாக அடையலாம். அதை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள்
2. மேலும் இங்கு எந்த ஒரு பதவியையும் அடைய நீங்கள் ஒரு அரசியல்வாதியின் வாரிசாகஇருக்க வேண்டும்
3. இல்லையெனில், வெட்டியாய் இதை போல எழுதியும், பேசியும் மட்டுமே வாழ்நாளை முடிக்க வேண்டும்.


இந்த 3 க்கும் நீங்கள் உடன்பட்டால் - நீங்கள் "இந்தியர்" ஆக தகுதி உண்டு

ஜெய் ஹிந்த்!

டிஸ்கி: இதில் சொல்லிய கருத்துக்கள், பெரும்பாலும் இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்து சென்ற என் வெளிநாட்டு நண்பர்கள் சொல்லியது.

அடுத்து தொடர்பதிவுக்கு வருபவர் - "பெயர் சொல்ல விருப்பமில்லை"
கரு - கடவுள் ஒரு வாரம் லீவில் செல்கிறார், நீங்கள் அவர் பொறுப்பை ஏற்றால் என்ன என்ன செய்வீர்கள்?
தலைப்பு - நான் கடவுள்

கலக்குங்க......


Friday, July 2, 2010

ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்

நண்பர்களே


ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்………………………………..



    ----- ஒரு சின்ன சோதனை, உங்கள் கண் பார்வைக்கு. உங்களுக்கு இது பயன் தரலாம். விதிமுறைகளைக் கவனமாக பின்பற்றவும்....
   
1.
  முதலில் ஒரு கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள்.
2. 
  உங்கள் எலியை (mouse) சிவப்பு நிறத்தில் உள்ள இந்த  * குறிக்கு நகர்த்தி செல்லுங்கள் .    
3.  
இந்த சிவப்பு * குறியின் மீது வலப்பக்க சொடுக்கு (RIGHT lick) புரியுங்கள்.  
4.  
பிறகு எல்லாவற்றையும் தெரிவு (select all) செய்யுங்கள்.
5.  
இனிபரிசோதனையின் முடிவைக் காண்க.
  அட 
யாராச்சும் எதாச்சும் பண்ண சொன்னா அப்படியே பண்ணிடுறதா? மேல் மாடி வேலை செய்யுறதே இல்லையாக்கும் ;)
கண் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, மூளையிலதான் பிரச்சனை கெக்கபுக்க கெக்கபுக்க .. 
  சரி, போதும் வேலைய பாருங்க, நானும் ஏமாந்தவன் தான்....