Cricket Countdown....

Monday, January 31, 2011

எச்சரிக்கை - உங்களுக்குதான்...

அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை

இத்தனை நாட்களாக மொரீசியஸ்ல் மையம் கொண்டு இருந்த புயல் சற்றே தீவிரமாகி, வடமேற்கே நகர்ந்து, நாளை இந்திய நேரம் காலை 6.30 மணி அளவில் சென்னையை தாக்கப்போகிறது. இதனால் சென்னை மக்களுக்கு பெரிய அளவில் நன்மையே நடக்க இருக்கிறது. பிறகு அந்த புயல் கோவையில் கொஞ்ச நாளும், வந்தவாசியில் கொஞ்ச நாளும் அருள் மழை பொழிந்து அவ்வப்பொழுது சென்னையையும் தாக்கும் என அறிவிக்கப்பபடுகிறது. அந்த புயலுக்கு அருண்பிரசாத் என பல வருடங்களுக்கு முன்பே பெயரிடப்பட்டுவிட்டது.

@ ஆல்,

கூல் டவுன்...
கூல் டவுன்...
கூல் டவுன்...

ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க! 


அட, நான் ஒன்னும் உங்க கிட்ட பெருசா எதிர் பார்க்கலைங்க, நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம். நான் தான் பரவாயில்லப்பா மத்தவங்களுக்கு வாய்ப்பு தரணும், நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)

என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும், அதை சமாளிக்க மொரீசியஸ் மக்கள் இப்போவே என் காலடி மண்ணை கொண்டு போய் எரிமலைய சுத்தி போட ஆரம்பிச்சிட்டாங்க. அப்போதான் எரிமலைங்க பயந்து உள்ளவே இருக்குமாம். சே... இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிட்டு இருக்கு!  சாரி.....சாரி..... தப்பா டைப் பண்ணிட்டேன்.... (என்ன கெட்ட பழக்கம் அது, அடிச்சி வெச்சதை படிக்கறது...ராஸ்கல்ஸ்) சே.... எவ்வளவு மரியாதை நம்ம மேல!  ஒரு மாசத்துல திரும்பி வந்துடறேன்னு சொல்லிட்டேன். வந்தவுடனே பெரிய விழா எடுக்க போறாங்களாம். அதை தனி பதிவா மார்ச் 1, 2011 அன்னைக்கு சொல்லுறேன். (மகாசிவராத்திரி திருவிழாவை நமக்கான விழா தான்னு சொன்னா யாராவது வந்து பார்க்கவா போறாங்க...அருண், அப்படியே மெயிண்டெயின் பண்ணுடா)

சரி, அண்ணண் தரிசனம் வேண்டுறவங்க, அண்ணண் ஆட்டோகிராப் தேவைபடுறவங்க, அண்ணணுக்கு ஊர்காசு தர விருப்பபடுறவங்க (எத்தனை முறை சொல்லுறது அண்ணண்னு சொன்னா அது நான் தான், திரும்ப திரும்ப கேட்டுகிட்டு)  எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் , டிராபிக் ஜாம் ஆக கூடாதுனு சொல்லி ரஜினிகாந்து, டாக்குடரு தம்பி, கலிஞ்சருனு யாரையும் வரவேணாம்னு சொல்லிட்டேன். பார்த்து சூதனாம நடந்துக்கோங்க இன்னொரு மகர ஜோதி டராஜடி சென்னைல வேணாம்.

இருங்க, இருங்க, ஒரு நிமிஷம் அங்க ஏதோ சத்தமா இருக்கு என்னானு பார்த்துட்டு வரேன்.

எலேய்ய்ய்ய்ய்ய்ய்...... யார்ரா அது என் பிளாக்கை இப்போவே ஏலம் போட ஆரம்பிச்சிட்டது? நடக்காது மகனே, நடக்காது. பிளாக்கை மூடி யாரையும் நிம்மதியா இருக்க விட மாட்டேன், பதிவுகள் வழக்கம் போல வரும். 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி. சிங்கம் தூங்கினாலும் பதிவு சும்மா ஜிவ்வுனு வரும் (மறுபடியும் பாரு, அட சிங்கமும் நான் தாங்க)

சரி, அடுத்த 3 வரிகளை யாரும் படிக்காதீங்க, அது டெரருக்கு மட்டும்தான் (நீங்க பதிவையே படிக்கலைனு தெரியும் இருந்தாலும் லைட்டா ஒரு பிலடப். லைட்டாதான்பா)

@ டெரர்
மச்சி, டாக்சி புக் பண்ணகூட சென்னைல எனக்கு ஆள் இல்ல. ஏதாவது ஏற்பாடு பண்ணமுடியுமானு பாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(அப்பாடி எழுதி அடிச்சிட்டேன், இப்போ யாராலும் படிக்க முடியாதே படிக்க முடியாதே....)

சரி எல்லோரும் கேட்டுக்கோங்க அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்.... என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க.


BYEEEEEEEEEEEEEE.........

75 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த பொழப்புக்கு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

(எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)//

தொலைந்தான் எதிரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஊருக்கு வரேன்னு ஒரு இன்பர்மேஷன் குடுகறேங்க உங்களுக்கு. அதுக்கா இந்த வெறியோட அடிக்க வரீங்க!

//

வா மச்சி.. நான் ஆட்டோ அனுப்புறேன்..

Madhavan Srinivasagopalan said...

காமன்டு மாடரேஷனை எடுத்தாச்சா ?

சேலம் தேவா said...

தானைத்தலைவர்.. தங்கத்தலைவர்.. சிங்கநிகர் தலைவர்.. etc.,etc., அண்ணன் அருண்பிரசாத்.. அவர்களை வருக.. வருக.. என வரவேற்று மகிழ்கிறோம். :)

karthikkumar said...

வங்கண்ணே கோவைதானே வரீங்க... வாங்க வந்து சாப்பாடு வாங்கி தரேன் சொல்றீங்க. சந்தோசமா வாங்க ஹி ஹி

வைகை said...

வெறும்பய said...
இந்த பொழப்புக்கு...//////////

என்ன மாம்ஸ் பண்ணலாம்?!

வைகை said...

நல்லவேள சிங்கைய கடக்கல! தப்பிச்சோம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...
இந்த பொழப்புக்கு...//////////

என்ன மாம்ஸ் பண்ணலாம்?!
//

நாம ஒண்ணும் பண்ண வேணாம்.. எல்லாம் நம்ம போலீஸ் பாத்துப்பார்.. ஏற்க்கனவே சொல்லியாச்சு.. நல்லா கவனிக்க..

வைகை said...

உயர்திரு சிரிப்புபோலிச அவர்களை கேட்டதாக சொல்லவும்!

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// இந்த பொழப்புக்கு...//
ஏன் இந்த கொலவெறி

//தொலைந்தான் எதிரி..//
வேணும்னா உன் பேரை சொல்லி ஒரு நாள் டின்னர் சாப்புடறேன் மச்சி...ரமேஷ் செலவுல

//வா மச்சி.. நான் ஆட்டோ அனுப்புறேன்..//
ம்கனே நீ எதுக்கு அனுப்பறேன்னு தெரியும்...ஆணியே புடுங்க வேணாம்

@ Madhavan Srinivasagopalan
// காமன்டு மாடரேஷனை எடுத்தாச்சா ?//
என்ன கேள்வி இது சின்ன புள்ள தனமா

@ சேலம் தேவா
// தானைத்தலைவர்.. தங்கத்தலைவர்.. சிங்கநிகர் தலைவர்.. etc.,etc., அண்ணன் அருண்பிரசாத்.. அவர்களை வருக.. வருக.. என வரவேற்று மகிழ்கிறோம். :)//
குலோதுங்குவை விட்டுவிட்டீர்கள் தேவா

அருண் பிரசாத் said...

@ karthikkumar
// வங்கண்ணே கோவைதானே வரீங்க... வாங்க வந்து சாப்பாடு வாங்கி தரேன் சொல்றீங்க. சந்தோசமா வாங்க ஹி ஹி//
ஆமா கார்த்தி என்ன தான் இருந்தல்லும் கையேந்தி பவன்ல வாங்கி தந்தா போதும் சொன்ன உன் மனசை பாராட்டறேன்

@ வைகை
// வெறும்பய said...
இந்த பொழப்புக்கு...//////////

என்ன மாம்ஸ் பண்ணலாம்?!//

டின்னர் வாங்கி தரது

அருண் பிரசாத் said...

@ வைகை
// நல்லவேள சிங்கைய கடக்கல! தப்பிச்சோம்!//
சிங்கைக்கு வர எனக்கு பிளைட் டிக்கேட் அனுப்புங்க, வந்துட்டா போச்சு.

// உயர்திரு சிரிப்புபோலிச அவர்களை கேட்டதாக சொல்லவும்!//
எவ்வளவு கேக்கனும் மச்சி...ஒரு 10,000 ரூ.....?

சௌந்தர் said...

டேய் ராசுகுட்டி அந்த அரவளா திட்டு டா நாளைக்கு அதுக்கு வேளை இருக்கு

அருண் பிரசாத் said...

@ சௌந்தர்
// டேய் ராசுகுட்டி அந்த அரவளா திட்டு டா நாளைக்கு அதுக்கு வேளை இருக்கு//
அருவாளை நான் தொட்டு குடுக்கனும்... அப்போதான் உன் தொழில நல்லா இருக்கும்னு நினைக்கறியா செளந்தர்....
உன் மரியாதை என்னை புல்லரிக்க வைக்குது!

TERROR-PANDIYAN(VAS) said...

HAPPY JOURNEY MACHI!!!

(aani pudungitu varen.. )

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 16
HAPPY JOURNEY MACHI!!!

(aani pudungitu varen.. )///

comment போட தெரியலை சொல்லுங்க...!அதுக்கு இப்படி ஒரு பில்டப்...

மங்குனி அமைச்சர் said...

விதி விளையாடுகிறது ................ (போலீசு உனக்கு இந்த வருஷம் ஜாக்பாட் வருசம்ன்னு நினைக்கிறேன் )

Anonymous said...

சந்தோஷமா போயிட்டு வா அருண்! :) மீதிய நம்ம பங்காளிங்க பார்த்துப்பாங்க! ;)

Anonymous said...

//(எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)//


சிரிப்பு போலீஸ் எஸ்கேப் ஆயிருப்பாரே...

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// HAPPY JOURNEY MACHI!!!

(aani pudungitu varen.. )//
Thanks machi

@ மங்குனி அமைச்சர்
// விதி விளையாடுகிறது ................ (போலீசு உனக்கு இந்த வருஷம் ஜாக்பாட் வருசம்ன்னு நினைக்கிறேன் )//
மங்குனி, பதிவை ஒழுங்கா படிங்க அவருதான் வாங்கி தரபோறார்

@ Balaji saravana
// சந்தோஷமா போயிட்டு வா அருண்! :) மீதிய நம்ம பங்காளிங்க பார்த்துப்பாங்க! ;)//
நன்றி பாலாஜி...

ஆமா இதுல ஏதும் உள்குத்து இல்லையே!

@ இந்திரா
// சிரிப்பு போலீஸ் எஸ்கேப் ஆயிருப்பாரே...//
அட அவர் 10 நாள் முன்னாடியே எஸ்கேப். பாருங்க இந்த பதிவுக்கு இன்னும் கமெண்ட் கூட போடல

மங்குனி அமைச்சர் said...

@ மங்குனி அமைச்சர்
// விதி விளையாடுகிறது ................ (போலீசு உனக்கு இந்த வருஷம் ஜாக்பாட் வருசம்ன்னு நினைக்கிறேன் )//
மங்குனி, பதிவை ஒழுங்கா படிங்க அவருதான் வாங்கி தரபோறார்
////

அடப்பாவிகளா ....சிரிப்பு போலீசோட இன்னொரு முகம் தெரியாம இப்படி ஒரு அப்பாவி ஆடு தானா போயி தலைய கொடுக்குதே .... (அருண் படிச்சிட்டுதான் போட்டேன் அதுக்குதான் விதி விளையாடுதுன்னு போட்டு இருந்தேன் )

'பரிவை' சே.குமார் said...

விடுமுறையை சந்தோஷமாக களிக்க வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

மங்குனி அமைச்சர் said...
// அடப்பாவிகளா ....சிரிப்பு போலீசோட இன்னொரு முகம் தெரியாம இப்படி ஒரு அப்பாவி ஆடு தானா போயி தலைய கொடுக்குதே .... (அருண் படிச்சிட்டுதான் போட்டேன் அதுக்குதான் விதி விளையாடுதுன்னு போட்டு இருந்தேன் )//
விடுங்க மங்குனி நாங்க சிங்கத்து குகைலயே சீட்டு விளையாடினவங்க.... சிரிப்பு போலிஸ்லாம் சாதாரணம்...

சே.குமார்
// விடுமுறையை சந்தோஷமாக களிக்க வாழ்த்துக்கள்.//
நன்றிங்க குமார்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...மங்குனி அமைச்சர் said...
// அடப்பாவிகளா ....சிரிப்பு போலீசோட இன்னொரு முகம் தெரியாம இப்படி ஒரு அப்பாவி ஆடு தானா போயி தலைய கொடுக்குதே .... (அருண் படிச்சிட்டுதான் போட்டேன் அதுக்குதான் விதி விளையாடுதுன்னு போட்டு இருந்தேன் )//
விடுங்க மங்குனி நாங்க சிங்கத்து குகைலயே சீட்டு விளையாடினவங்க.... சிரிப்பு போலிஸ்லாம் சாதாரணம்...////

இது நல்லா இருக்கே ???? சரி , சரி உங்களுக்குள்ள பந்தயமாம் .....நான்தான் நடுவராம் ........... (அப்பாடா எப்படியும் நமக்கு சாப்பாடு ஓசில கிடைச்சிடும் ......... மங்கு பின்றடா )

அருண் பிரசாத் said...

//இது நல்லா இருக்கே ???? சரி , சரி உங்களுக்குள்ள பந்தயமாம் .....நான்தான் நடுவராம் ........... (அப்பாடா எப்படியும் நமக்கு சாப்பாடு ஓசில கிடைச்சிடும் ......... மங்கு பின்றடா )//
@ ரமேஷ்
மச்சி, பிளான் பண்ண மாதிரியெ மங்குனி சிக்கிட்டாரு.... நாளைக்கு மெரிடியன் வந்துடு.... இப்போல இருந்தே சாப்பிடுறதை நிறுத்திக்கோ.... பச்சதண்ணி பல்லில படக்கூடாது...

Chitra said...

பில்ட் அப் ..... பிரமாதம்!

Have a fun and safe trip!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க//

சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு
ஒரு பன்னாடை வருகிறதே
அடடே ஆச்சரியக் குறி!!!

மாணவன் said...

உங்கள் பயணம் இனிதாகுக....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

விதி விளையாடுகிறது ................ (போலீசு உனக்கு இந்த வருஷம் ஜாக்பாட் வருசம்ன்னு நினைக்கிறேன் )//


ககக போ..(யாருப்பா கக்கா போறது. இது அருண் பிளாக்)

மாணவன் said...

//
வெறும்பய said...
இந்த பொழப்புக்கு...///

பாரிலி தண்ணி குடிச்சிட்டு....ஸாரி பால்டாயில் குடிச்சிட்டு........ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர் said...

@ மங்குனி அமைச்சர்
// விதி விளையாடுகிறது ................ (போலீசு உனக்கு இந்த வருஷம் ஜாக்பாட் வருசம்ன்னு நினைக்கிறேன் )//
மங்குனி, பதிவை ஒழுங்கா படிங்க அவருதான் வாங்கி தரபோறார்
////

அடப்பாவிகளா ....சிரிப்பு போலீசோட இன்னொரு முகம் தெரியாம இப்படி ஒரு அப்பாவி ஆடு தானா போயி தலைய கொடுக்குதே .... (அருண் படிச்சிட்டுதான் போட்டேன் அதுக்குதான் விதி விளையாடுதுன்னு போட்டு இருந்தேன் )///


நீ என் நன்பெண்டா..ஹிஹி

மாணவன் said...

உயர்திரு சிரிப்புபோலிச அவர்களை கேட்டதாக சொல்லவும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

//இது நல்லா இருக்கே ???? சரி , சரி உங்களுக்குள்ள பந்தயமாம் .....நான்தான் நடுவராம் ........... (அப்பாடா எப்படியும் நமக்கு சாப்பாடு ஓசில கிடைச்சிடும் ......... மங்கு பின்றடா )//
@ ரமேஷ்
மச்சி, பிளான் பண்ண மாதிரியெ மங்குனி சிக்கிட்டாரு.... நாளைக்கு மெரிடியன் வந்துடு.... இப்போல இருந்தே சாப்பிடுறதை நிறுத்திக்கோ.... பச்சதண்ணி பல்லில படக்கூடாது...//


மச்சி நீங்க இந்திய வரேன்னு சொன்னதுமே நான் சாப்பிடுரத நிறுத்திட்டேன்.

மாணவன் said...

////(எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)//


சிரிப்பு போலீஸ் எஸ்கேப் ஆயிருப்பாரே...///

ஆமாம் நீங்க ஊருக்கு போறீங்க...அவரு இங்க சிங்கைக்கு வராரு....ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

உயர்திரு சிரிப்புபோலிச அவர்களை கேட்டதாக சொல்லவும்!//

சொல்லிடுவோம். அங்கு அபிநயா நலமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய பயண வாழ்த்துக்கள். ஏர் ஹோச்டேர்ஸ் யை கேட்டதாக சொல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு மாலைபோட ஒரு யானை,//

விடு மச்சி யானைய உன் மேல ஏத்தி மலர்வளயமே வைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ அண்ணனுக்கு (அட என்ன சிரிப்பு நாந்தாங்க அண்ணண்) மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... என்னா பாசம் புள்ளைக்கு! (எத்தனை நாள் தான் ஓசி சோறு சாப்பிடுவாரு அவரு, வரோம்ல ஆப்பு வைக்க)///

மச்சி பகல்,மதியம் இரவு எந்த கனவுமே பலிக்காது. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும்,//

எரிமலைல வாட்ச்மேன் வேலை பாக்குற பயலா நீ?

ரஹீம் கஸ்ஸாலி said...

வெளிநாடு சுற்றுப்பயணம் சே....வெட்டி முறித்துவிட்டு தாயகம் திரும்பும் தமிழ் ஈன (அய்யய்யோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்) தமிழின தலைவர் அண்ணன் அருண் பிரசாத் அவர்களை தமிழக (வலைப்பதிவில்) மொக்கை போடுவோர் சங்கம் சார்பில் வராதீங்க...வராதீங்க...என்று திருப்பியனுப்புகிறோம்

Unknown said...

Tamil Nadu
Heartly welcomes you.

Tamil Nadu
Heartly welcomes you.

Tamil Nadu
Heartly welcomes you.

with red carbet.

eliphants...

and

start music......

Unknown said...

அண்ணா
உங்களை மிஸ் பண்றோம்

:(((


ஆடுங்கடா என்ன சுத்தி....

செல்வா said...

// நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும்,//

ஹி ஹி ஹி ,, இத நாங்க நம்பனுமா அண்ணா ? ஹி ஹி

செல்வா said...

// (என்ன கெட்ட பழக்கம் அது, அடிச்சி வெச்சதை படிக்கறது...ராஸ்கல்ஸ்)/

நான் படிக்கலை .. ஆனா நீங்க சரியா அடிக்கலை ..

செல்வா said...

//எல்லோரும் நாளைக்கு காலைல சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க. முக்கியமான விஷயம் //

எனக்கு இதுல ஒரு சந்தேகம் இருக்குது ., பன்னாட்டு விமான நிலையம்னா என்ன ? எல்லோரையும் பன்னாட்டுப் பண்ணுமா ?

செல்வா said...

//என்னது இது தப்பா? சரி ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்... ஊருக்கு வரேன்...யாருக்கு எது எது ஒத்துவருதோ அதை எடுத்துக்கோங்க.//

சரி சரி வந்திட்டு சொல்லுங்க , நாம சந்திக்கலாம் .. ஹி ஹி

எஸ்.கே said...

இனிய பயணம் அமையட்டும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

// நீ அண்ணனுக்கு மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல
லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன
பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... //

இது என்ன பெரிய விஷயம்..?
சும்மா அரேஞ்ச் பண்றது தானே..
அதெல்லாம் பக்காவா பண்ணிடுவாரு..

ஆனா பில்லுக்கு பணம் நீங்க தான்
தரணும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Copy Right இது - அப்போ Tea Wrong???

So what?

சுசி said...

பயணம் இனிமையா அமையட்டும் அருண்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் வந்து இறங்கறப்போ ஒரு சிவப்பு கம்பளி வரவேற்பு, ஒரு பூரண கும்பம் மரியாதை, எனக்கு மாலைபோட ஒரு யானை, அப்புறம் பேண்டு வாத்தியம்..... இது போதும், இது மட்டும் போதும், என்னை வரவேற்க. இதை எல்லாம் நான் தான் ஏற்பாடு பண்ணுவேன்னு தம்பி சிரிப்பு போலீசு ஒரே அடம்.//////

சிரிப்பு போலீச நம்பி.........??? சரி சரி, என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
// நீ அண்ணனுக்கு மத்தியம் ராயல்-லீ-மெரிடியன்ல
லஞ்ச் அரேஞ்ச் பண்ணா போதும்னு சொன்ன
பிறகுதான் அழுகாச்சிய நிறுத்திச்சி... //

இது என்ன பெரிய விஷயம்..?
சும்மா அரேஞ்ச் பண்றது தானே..
அதெல்லாம் பக்காவா பண்ணிடுவாரு..

ஆனா பில்லுக்கு பணம் நீங்க தான்
தரணும்../////

அப்புறம் சிரிப்பு போலீசுக்கும் டிப்சு கொடுக்கனுமே? மறந்துட்டீங்களா வெங்கட்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////TERROR-PANDIYAN(VAS) said...
HAPPY JOURNEY MACHI!!!

(aani pudungitu varen.. )//////


வந்துட்டாருய்யா கலக்டரு..... புடுங்கறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான், அதுக்கு பாரு எம்புட்டு பில்டப்புன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
வைகை said...

வெறும்பய said...
இந்த பொழப்புக்கு...//////////

என்ன மாம்ஸ் பண்ணலாம்?!
//

நாம ஒண்ணும் பண்ண வேணாம்.. எல்லாம் நம்ம போலீஸ் பாத்துப்பார்.. ஏற்க்கனவே சொல்லியாச்சு.. நல்லா கவனிக்க../////

ஆமா நல்லா பார்ப்பாரு, மேலேயும் கீழேயும்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////அருண் பிரசாத் said...
//இது நல்லா இருக்கே ???? சரி , சரி உங்களுக்குள்ள பந்தயமாம் .....நான்தான் நடுவராம் ........... (அப்பாடா எப்படியும் நமக்கு சாப்பாடு ஓசில கிடைச்சிடும் ......... மங்கு பின்றடா )//
@ ரமேஷ்
மச்சி, பிளான் பண்ண மாதிரியெ மங்குனி சிக்கிட்டாரு.... நாளைக்கு மெரிடியன் வந்துடு.... இப்போல இருந்தே சாப்பிடுறதை நிறுத்திக்கோ.... பச்சதண்ணி பல்லில படக்கூடாது...///////////

ஆகவே மகாஜனங்களே நாளைக்கு மெரிடியன் பக்கமா யாராவ்து போனீங்கன்னா, கிச்சனுக்குள்ள ஒரு எட்டு போயி மூணு பன்னாடைக மாவாட்டறதை கண் குளிர பாத்துட்டு வாங்க.... சென்னை மக்கள யாராவது படம் புடிச்சி அனுப்புங்கப்பா......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன ஒரே பிரச்சனைனா..... நான் ஊருக்கு போயிட்டேன்னு தெரிஞ்சா மொரீசியஸ்ல, எனக்கு பயந்து அடங்கி இருக்கற எரிமலைங்க எல்லாம் ஆட்டம் போட ஆரம்பிக்கும்,//

எரிமலைல வாட்ச்மேன் வேலை பாக்குற பயலா நீ?///////

மச்சி எரிமலைன்னா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அருண் பிரசாத் said...

//இது நல்லா இருக்கே ???? சரி , சரி உங்களுக்குள்ள பந்தயமாம் .....நான்தான் நடுவராம் ........... (அப்பாடா எப்படியும் நமக்கு சாப்பாடு ஓசில கிடைச்சிடும் ......... மங்கு பின்றடா )//
@ ரமேஷ்
மச்சி, பிளான் பண்ண மாதிரியெ மங்குனி சிக்கிட்டாரு.... நாளைக்கு மெரிடியன் வந்துடு.... இப்போல இருந்தே சாப்பிடுறதை நிறுத்திக்கோ.... பச்சதண்ணி பல்லில படக்கூடாது...//


மச்சி நீங்க இந்திய வரேன்னு சொன்னதுமே நான் சாப்பிடுரத நிறுத்திட்டேன்.///////

மச்சி நல்லா சாப்பிட்டுக்க, மாவாட்ட தெம்பு வேணும்......!

அனு said...

ஐ.. ஜாலி.. ஒரு மாசத்துக்கு உங்க மொக்கையில இருந்து தப்பிச்சோமா??

// 10 பதிவு டிராப்ட்ல போட்டு ஆட்டோமெடிக் பப்ளீஸ் செட் பண்ணியாச்சி.//

:( :(

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சென்னை ஏர்போட்டில் நாளை தங்களை சந்திக்க உள்ளேன்.. எனது தொடர்பிற்கு 81222278803 tnmanee@gmail.com

vinu said...

ooru pakkam vanthaa koopidunga 9524559726

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சென்னை ஏர்போட்டில் நாளை தங்களை சந்திக்க உள்ளேன்.. எனது தொடர்பிற்கு 8122278803 tnmanee@gmail.com முந்தய பின்னுட்டத்தில் மொபைல் என்னில் ஒரு 2 அதிகமாகி விட்டது. இதுதான் சரியான எண்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

உங்கள் இந்திய மொபைல் நம்ம்பர் ப்ளீஸ்...

அன்பரசன் said...

//அண்ணன் ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன், ஊருக்கு போறேன்....//

சரி சரி வந்து தொலைங்க...

அன்பரசன் said...

வருக! வருக!

வெளங்காதவன்™ said...

அப்பு,
வந்தா போனு பண்ணுங்க...

வினோ said...

பயணம் இனிதாக அமையட்டும்...

Philosophy Prabhakaran said...

வாங்க தலைவா... மீனம்பாக்கத்துல இருந்து உங்க வீடு வரைக்கும் விடிவெள்ளியே, எதிர்காலமே என்றெல்லாம் போட்டு பேனர்களை இறக்குறேன்...

ஆச்சி ஸ்ரீதர் said...

வரேன்னு சொல்றதே இத்தனை கலக்கல்.அப்போ வந்த பின் ?
அசத்துங்க...

ksground said...

your message is more useful......

ksground said...

your message is more useful......

சி.பி.செந்தில்குமார் said...

velkamவெல்கம் டூ தமிழ்நாடு அருண்

உங்க அக்கா வீடு திருநெல்வேல்சைடுலயோ எங்க்யோ இருக்கறதாவும் அந்த ஊரில் ( உங்க அக்கா வீடு ) வசிக்கும் ஒரு பெண் பதிவர் உங்க நெம்பர் கேட்டாங்க.. வெங்கட் கிட்டே வாங்கி குடுத்திருக்கேன்..சந்தியுங்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு வந்துடுங்க//

சென்னை பன்னாட்டு விமான முனையத்துக்கு
ஒரு பன்னாடை வருகிறதே
அடடே ஆச்சரியக் குறி!!!

கலக்கல் கமெண்ட்

! சிவகுமார் ! said...

>>> வெல்கம் டு மதராசபட்டினம், அருண்!

vinu said...

me 75thu eppudiiiiiiiiii