நம்ம பதிவுலகத்துல எத்தனையோ கவிதை போட்டிகள், சிறுகதை போட்டி, சமூக விழிப்புணர்வு போட்டினு பல போட்டிகள் நடந்து இருக்கு. ஆனா இதில் கலந்துக நீங்க ஒரு கவிஞராவோ எழுத்தாளராவோ இருந்தாத்தான் வெற்றி பெற முடியும்.
ஆனா முற்றிலும் வித்தியாசமான ஒரு போட்டிய நம்ம டெரர்கும்மி.காம்ல நடத்த போறாங்க. இதுக்கு நீங்க பெரிய அறிவாளியாவோ, இலக்கியம் தெரிஞ்சவராவோ இருக்கனும்னு அவசியம் இல்லை. கொஞ்சம் smart thinking இருந்தா போதும், கூகுளாண்டவர் உங்களுக்கு விடைகளை அள்ளி தருவார்.
ஆமாங்க, ஏற்கனவே போன சினிமாபுதிர் பதிவுல இதை பத்தி சொல்லி இருந்தேன். இதோ, பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு போட்டி - “HUNT FOR HINT” உங்கள் டெரர்கும்மி.காம் - இல் வரும் புதன்கிழமை (17/08/2011) வெளியாகிறது.
மொத்த பரிசாக ரூபாய் 10,000....
என்ன புதிர் போட்டி இது?
1.இந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் "KLUELESS" விளையாட்டின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.
2. நேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்
3. ஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்
4. விடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்....
5. விடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்
6. இப்படி மொத்தம் 25 லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்....
7. அனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.
8. போட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்
9. புதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.
பரிசு விவரம்:
முதல் பரிசு: 5000 ரூபாய்
இரண்டாம் பரிசு: 3000 ரூபாய்
மூன்றாம் பரிசு: 1000 ரூபாய்
இரண்டு ஆறுதல் பரிசு தலா 500 ரூபாய்.
நீங்கள் விளையாடி பார்க்க சாம்பிள் போட்டிகள் இதோ,
பரிசு தர நாங்க ரெடி!
விளையாட நீங்க ரெடியா?
6 comments:
அதுக்குதான் பாஸ் காத்துட்டு இருக்கேன்.
சாம்பிள் போட்டியே கண்ணைக்கட்டுதே....
டெரர் குரூப் இம்பூட்டு அறிவாளியா..
ஆஹா...10,000....பத்தாயிரம்... சொக்கா....
ரெடி...ரெடி...ரெடி...ரெடி...
//smart thinking இருந்தா போதும்//
mmmmmm that's the whole problem.
nice..........
Post a Comment