Cricket Countdown....

Tuesday, August 9, 2011

3 Idiots - தொடர்பதிவு

சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்.... ரமேஷ், செல்வா, பாபு, டெரர், நரினு ஒரு பெரிய பட்டாளத்தோட பிளாக் எல்லாம் தூசு புடிச்சி இருந்ததை பார்த்து பொறுக்காத வெட்டிபயல்.... (சாரி... வெறும்பயல்னு சொல்லனுமா....) வெறும்பய ஜெயந்த் மூணை வெச்சி ஒரு தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு.... எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... தொடர் பதிவ.....
1. விரும்பும் 3 விஷயங்கள் 

அ. ரயில் பயணம்
ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா


2. விரும்பாத 3 விஷயங்கள்


அ.  அரசியல்
ஆ. ஊருக்கு உபதேசம்
இ.  தற்பெருமை

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு 

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  தற்கால சினிமா பாடல்
ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் 
இ.  கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஃபைல்கள்
ஆ. Planனே எழுதாத Monthly Planner
இ.  என் குழந்தையின் கிறுக்கல்கள்

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. கும்மி குரூப்
ஆ.ஷமியின் குறும்புகள்
இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும்7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ.  சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)
ஆ. டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்
இ.
கும்மி குரூப்புடன் அரட்டை

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்
ஆ. இலக்கியம்
இ. போட்டோஷாப்

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்
. சரவண பவன் காபி
இ.  ஹைதராபாத் பிரியாணி

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. தற்பெருமை
ஆ. குறை சொல்லுறது
இ. அட்வைஸ்

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. இதயம் ஒரு கோவில்...
ஆ. சலங்கையிட்டால் ஒரு மாது
இ. ஹரிவராசனம் (காலைல தினமும் அலாரம் அடிச்சி எழுப்பிவிட்டுரும்)

14. பிடித்த 3 படங்கள்

அ. தில்லுமுல்லு, வசூல்ராஜா, அன்பே சிவம் (காமெடி)
ஆ. பாட்ஷா, சிவாஜி, காக்க காக்க (அதிரடி)
இ. ரோஜாக்கூட்டம், சேது, இதயத்தை திருடாதே (காதல்)

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆ, இ. அதானால இந்த 2 கேள்வி பாஸ் 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு
ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்
இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய்எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான்

72 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத்துச்சரம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான விருப்பு வெருப்புகள் பதிவில் பிரிதிபலிக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான்
//////////

அடுத்த தொடர் பதிவு ரெடியாயிடிச்சி...

Madhavan Srinivasagopalan said...

// எவண்டா தொடர்பதிவுனு ஒரு கான்செப்ட்டை கண்டுபிடிச்சது.... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்.... தக்காளி...சட்னிதான் //

எவண்டா.... அவன்..
வந்து அருண்கிட்ட தக்காளி சட்னி இலவசமா வாங்கிக் கொள்ளவும்..

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா //

இப்போ உனக்கு தனியா போகனுமா இல்லை இளையராஜா கூட வரனுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

/அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு//

இருட்டுல வேகமா ஓடி போய் உயரத்தில் இருந்து விழுந்தான்.... அட பின்நவினத்துவம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் /

இவரு இஞ்ஜினியராம்.... பழைய ஓட்டை ஒடச்சல் ரிப்பேர் பண்ற பையனுக்கு பேச்ச பாரு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்//

நண்பர்களுட் சேர்ந்து என்று போடாத அருணை வண்மையாக கண்டிக்கிறேன்... (அப்பா கோர்த்து விட்டாச்சி)

அருண் பிரசாத் said...

@ டெரர்
என்ன மச்சி... ஆபிஸ்ல ஆணி இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// @அருண்

//டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்//

நண்பர்களுட் சேர்ந்து என்று போடாத அருணை வண்மையாக கண்டிக்கிறேன்... (அப்பா கோர்த்து விட்டாச்சி)//

எங்கடா தூங்க விடுறீங்க.... தினமும் 12.30 ஆகுது தூங்க போக...

TERROR-PANDIYAN(VAS) said...

//அ. கமெண்ட் மட்டுமே போட்டு பிலாக் எழுதாத அனு
ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்
இ. கமெண்ட் போட்டும் பதிவு எழுதிட்டும் இருந்த, இப்போ எழுதாத பட்டிக்காட்டன் ஜெய்//

வெளங்கிடும்... அது என்னவோ சொல்லுவங்களே என்னாது.. அஹங்.. வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு வாழ்த்துகள்.. :)

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// //நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் /

இவரு இஞ்ஜினியராம்.... பழைய ஓட்டை ஒடச்சல் ரிப்பேர் பண்ற பையனுக்கு பேச்ச பாரு.. :)//

நீ ஆபிஸ் பாய்யா இருந்துட்டு சிஸ்டம் அட்மின்னு சொல்லுறது இல்லையா...அது மாதிரிதான் கண்டுக்காத...

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
//
//ஆ. ஜன்னலோர தனி இருக்கை
இ. துணைக்கு இளையராஜா //

இப்போ உனக்கு தனியா போகனுமா இல்லை இளையராஜா கூட வரனுமா?//
MP3 player வந்தாருன்னா போதும் மச்சி...

TERROR-PANDIYAN(VAS) said...

எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் பண்னிடலாம்...

அருமையான பதிவு வாழ்த்துகள்.. ஒட்டு போட்டேன். அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் வந்து போறது... :))

(ஏலேய்!! அங்க ஒன்னும் இல்லை உள்ள போய் பாம்பு பூரன் கடிச்சிதுனு யாரும் இன்சூரன்ஸ் கேட்டு வராதிங்க)

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
//
எவ்வளவோ பண்ணிட்டோம் இதையும் பண்னிடலாம்...

அருமையான பதிவு வாழ்த்துகள்.. ஒட்டு போட்டேன். அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் வந்து போறது... :))

(ஏலேய்!! அங்க ஒன்னும் இல்லை உள்ள போய் பாம்பு பூரன் கடிச்சிதுனு யாரும் இன்சூரன்ஸ் கேட்டு வராதிங்க)//

என்னை தற்கொலைக்கு தூண்டும் டெரர் ஒழிக

இம்சைஅரசன் பாபு.. said...

ம்ம ஆழ்ந்த கருத்துகள ....நான் தான் இன்னும் எழுதலை

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை பாபு

//நான் தான் இன்னும் எழுதலை //

சீக்கிரம் போய் எழுதுங்க மக்கா... தினம் தினம் சித்திரவதை படுவதைவிட ஒரே நாள்ல அனுபவிச்சிட்டு போய்டலாம்.... ஏற்க்கனவே இரண்டு தொடர்பதிவு ஓவர்... :)

அனு said...

//பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்//

liquid formல தான் இருக்கும்.. வேறன்ன ஃபார்ம்?? ஒரு வேளை freezerல வச்சு ஐஸ்கட்டியாக்கி சாப்பிடுவீங்களோ?? :)

அனு said...

//தற்பெருமை //

ஹிஹி.. இது ரெண்டு தடவை ரிப்பீட் ஆகுது..

அனு said...

அடப்பாவி... ஏன்ன்ன்ன்ன் இந்த கொலைவெறீறீறீ????

(டெரரண்ணே.. நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேண்ணே.. :) )

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

////அடப்பாவி... ஏன்ன்ன்ன்ன் இந்த கொலைவெறீறீறீ????//

நீ​ங்க தான் ஒரு விளம்பரத்துக்கு கூப்பிட சொன்னிங்கன்னு அருண் சொல்லிட்டான்.. ஓவர் ஆக்ட் ஒடம்புக்கு ஆகாது... :)))

அருண் பிரசாத் said...

@அனு & டெரர்

என்ன இங்க சத்தம்....

காவியத்தை ரசிக்கனும்... ஆராயக்கூடாது

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//(டெரரண்ணே.. நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டேண்ணே.. :) )//

குட். அடுத்து இதே மாதிரி வேற யாராவது ஒரு ப்ளாக்கர்கிட்ட கெஞ்சி உங்க பேர போட சொல்லிட்டு அப்புறம் கமெண்ட்ல போய் ஏன் இந்த கொலை வெறி கேக்கனு... அடுத்து நீங்க அனுக வேண்டிய ப்ளாக்கர் பாபு..

- Consulting Service for எப்படியாவது பாப்புலராக நினைப்பவர்கள், துபாய் கிளை.. :)

(ஊரு பக்கம் இன்னும் 10 வருஷம் வரமாட்டேன்)

செல்வா said...

உங்களுக்கும் கமல் படம்தான் பிடிக்குமா ? சூப்பர்னா :) ஹி ஹி

செல்வா said...

நேரம் இருந்தா நானும் இன்னிகு எழுதறேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//என்ன இங்க சத்தம்....

காவியத்தை ரசிக்கனும்... ஆராயக்கூடாது //

டேய் ப்ளாக்கர்!! மேனேஜர் வர டைம் ஆகும். அது வரைக்கும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//நேரம் இருந்தா நானும் இன்னிகு எழுதறேன்..//

உன்னை என்னா இதிகாசமா எழுத சொன்னாங்க? எழுத போர நாலு வரிக்கு இவருக்கு நேரமில்லையாம்... :)

(நம்ம முன்னாடி எழுதினது அடுத்தவன வார எவ்வளவு வசதியா இருக்கு)

சாதாரணமானவள் said...

//சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)//
அட...நீங்களுமா? நானும் இப்ப அவரோட "One night @ the call center" படிச்சிட்டு இருக்கேன்

//கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்
ஆ. இலக்கியம்
இ. போட்டோஷாப்//
முதல் இரண்டும் எனக்கும் தெரியாது. மூன்றாவது விஷயம் வேண்டுமானால் கற்று தருகிறேன்.

செல்வா said...

//நம்ம முன்னாடி எழுதினது அடுத்தவன வார எவ்வளவு வசதியா இருக்கு)//

இன்னிக்கு எழுதறேன்னா.. ஹி ஹி..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

ஆன்லைனில் இருந்தும் இங்கு வந்து கமெண்ட் போடாதா ரமேஷ் ஒழிக!! :)

சக்தி கல்வி மையம் said...

எனக்கும் டிஸ்கில இருக்கிற பீலிங் தான்..

Chitra said...

நல்ல பதில்கள்!!! :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சும்மா இருந்தவனை சொறிஞ்சிவிடுறதுனு சொல்லுவாங்கல்ல, அதுக்கு உதாரணம்தான் இந்த தொடர்பதிவு கான்செப்ட்....////////

சொறிஞ்சி விடுறவனுங்க சும்மாவா இருக்கானுங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இ. துணைக்கு இளையராஜா//////

அப்போ டிக்கட்டு யாரு எடுத்து கொடுக்கறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////2. விரும்பாத 3 விஷயங்கள்


அ. அரசியல்
ஆ. ஊருக்கு உபதேசம்
இ. தற்பெருமை
///////

அப்போ பதிவர்கள் யாரையும் புடிக்காதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் கும்மிக்காக “Hunt for the Hint” கேம் தயாரிச்சிட்டு இருக்கேன்///

Vilankidum

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

ஆன்லைனில் இருந்தும் இங்கு வந்து கமெண்ட் போடாதா ரமேஷ் ஒழிக!! :)
//

லைன்ன கூட்டமா இருக்கு மச்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. உயரம்
ஆ. வேகம்
இ. இருட்டு
///////

மொத்தமா ப்ளேன்ல போக பயம்னு சொல்ல வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////4. புரியாத 3 விஷயங்கள்


ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் //////

என்னது அருண் இஞ்சினியரா? சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இ. கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)///////

கலாக்கான்னா என்ன மச்சி பலாக்கா மாதிரியா?

'பரிவை' சே.குமார் said...

பதில்கள் எல்லாமே சூப்பர்.

Mohamed Faaique said...

///தொடர்பதிவு போட்டு பாராபட்சம் இல்லாம எல்லாரையும் கூப்பிட்டு விட்டுடாரு....////

ஏதோ மேட்டர் கெடச்சுதே`னு விட்ருங்க... எதுக்கு இப்படியெல்லாம் build up.....???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அ. சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)//////

அதுல 36-வது பக்கத்துல பர்ஸ்ட் லைன் என்னான்னு சொல்லு பார்ப்போம்? (ங்கொய்யால மாட்டுனியா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. சொன்னா வெவகாரமா போய்டும்.... உங்களுக்கு தெரியாமயே இருக்கட்டும்///

வெளங்கிருச்சு..........

வெங்கட் said...

// சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life"
படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3) //

6 மாசம் முன்னாடியும் இதையே தான்
எங்கிட்ட சொன்னீரு.. இன்னுமா
அந்த புக்கை எழுத்து கூட்டி படிச்சி
முடிக்கல..?!?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
// சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life"
படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3) //

6 மாசம் முன்னாடியும் இதையே தான்
எங்கிட்ட சொன்னீரு.. இன்னுமா
அந்த புக்கை எழுத்து கூட்டி படிச்சி
முடிக்கல..?!?!!
////////

வெங்கட்டு, அருண் எப்பவும் பேச்சு மாறமாட்டாருன்னு தெரியாதா உங்களுக்கு?

வெங்கட் said...

// இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு
எழுதாத வெங்கட் //

நான் இங்கே வரவே இல்ல..
இந்த பதிவை படிக்கவும் இல்ல..
வேணும்னா என் முதல் கமெண்ட்டை
டெலிட் பண்ணிக்கோங்க..

( கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க
விட மாட்டாங்க போல இருக்கே..! )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்//////

அப்போ இதுவரை வீட்ல வெறும் பாத்திரம் கழுவுறது மட்டும்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. பன்னீர் - எந்த பார்ம்மா இருந்தாலும்///////

பன்னீர் பார்ம்லதான் செய்யறாங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. இதயம் ஒரு கோவில்...//////

அதெல்லாம் நீங்க லவ் பண்ற காலத்துல வந்ததா? பெரிய ஃப்ளாஷ்பேக்கே இருக்கும் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆ. பிலாக் எழுதியும் தொடர்பதிவு எழுதாத வெங்கட்//////

அப்போ வெங்கட் எழுதுறது கவிதை இல்லியா?

வெங்கட் said...

// இ. கும்மி குரூப்புடன் அரட்டை //

அந்த குரூப்ல எப்ப போயி சேர்ந்தீங்க..
இந்த விஷயம் நம்ம " டெரர் கும்மி குரூப்க்கு "
தெரியுமா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இம்சைஅரசன் பாபு.. said...
ம்ம ஆழ்ந்த கருத்துகள ....நான் தான் இன்னும் எழுதலை////////

???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எங்க எழுதாம விட்டா டெரர் கும்மிய விட்டு ஒதுக்கு வெச்சி நம்மள உருப்படி வெச்சிடுவாங்களோனு சொல்லி நானும் எழுதறேன்... ////////

ஏதோ எழுத மேட்டர் கெடச்சிடுச்சேன்னு சந்தோசமா எழுதுறத விட்டுப்புட்டு..... லொல்ல பாத்தியா?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அப்போ வெங்கட் எழுதுறது
கவிதை இல்லியா? //

என் கிறுக்கல்களையும் கவிதை என்று
நினைக்கும் பன்னிகுட்டியை நினைத்தால்
எனக்கு பெருமையாய் இருக்கு..!

# இது தன்னடக்க கமெண்ட்.!

ஜெயந்த் கிருஷ்ணா said...

1. விரும்பும் விஷயங்கள்

அ. ரயில் பயணம் @

ரயில்ல டிக்கெட் எடுக்காம ஊசியில போலாம்.. ரொம்ப தொந்தரவி இருக்காது..

ஆ. ஜன்னலோர தனி இருக்கை @

பஸில் ஜன்னலோரமா உக்காந்தா செக்கர் வரும் போது ஈசியா குதிச்சு ஓடிரலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆ. நான் எப்படி இஞ்சினியர் ஆனேன் //
மறந்திடியா மச்சி பிட்டு அடிச்சு தான் பாசாகி இஞ்சினியர் ஆன...

ஜெயந்த் கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஜெயந்த் கிருஷ்ணா said...

சேத்தன் பகத்தின் “ the 3 mistakes of my life" படிச்சிட்டு இருக்கேன் (அட இதுலயும் 3)//

மச்சி இதுவும் மூணு வருஷ பட்ட படிப்பா.. எந்த யுனிவர்சிட்டி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. சமையல்//

மச்சி இது பொய் தானே.. கல்யாணம் ஆனதிலிருந்து வீட்டில நீதான் சமயல்ன்னு கேள்வி பட்டேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

ஆ. இலக்கியம்///

எதுக்கும் நம்ம நரிய கான்டக்ட் பண்ணு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வெறும்பய said...
இ. கெமிஸ்ட்ரி (அட வேதியியல் பாடம்பா... கலாக்காகிட்டலாம் ட்ரைனிங் போக முடியாது)//

சேம் ப்ளட்

எஸ்.கே said...

பதில் 1ல நீங்க ஒரு ரசனையாளர்னு தெரிஞ்சுது

பதில் 2ல நீங்க ஒரு உயர்ந்த கொள்கை உடையவர்னு தெரிஞ்சுது

பதில் 3ல நீங்க ஒரு குழந்தை மனசு உடையவர்னு தெரிஞ்சுது

பதில் 4ல நீங்க ஒரு அப்பாவினு தெரிஞ்சுது

பதில் 5ல நீங்க ஒரு பொறுப்பானவர்னு தெரிஞ்சுது

பதில் 6ல நீங்க ஒரு இனிமையானவர்னு தெரிஞ்சுது


பதில் 7ல நீங்க எப்போதும் இயங்கிக் கொண்டு இருப்பவர்னு தெரிஞ்சுது

பதில் 10ல நீங்க கற்றுக்கிற ஆர்வமுடையவர்னு தெரிஞ்சுது


பதில் 11ல நீங்க உணவுப் பிரியர்னு தெரிஞ்சுது

பதில் 12ல நீங்க ஒரு நல்லவர்னு தெரிஞ்சுது


பதில் 13ல நீங்க ஒரு இசை ரசிகர்னு தெரிஞ்சுது

பதில் 14ல நீங்க ஒரு நல்ல மதிப்பிடுபவர்னு தெரிஞ்சுது


பதில் 15ல நீங்க ஒரு தன்னம்பிக்கையாளர்னு தெரிஞ்சுது

பதில் 16ல நீங்க ஒரு வித்தியாசமானவர்னு தெரிஞ்சுது

ஆனா பாருங்க பதில் 8, 9ஐ காணோம். இதில இருந்து நீங்க ஒரு மறதிக்காரர்னு தெரிஞ்சுது!

எஸ்.கே said...
This comment has been removed by the author.
RAMA RAVI (RAMVI) said...

சுருக்கமான சுவையான பதில்கள். நன்னாயிருக்கு.

வைகை said...

"3 Idiots -//

இது ஏதோ டெரர், ரமேஷ், பாபு மூணு பேரையும் குறிப்பிட்டு சொன்னமாதிரி இருக்கு?

Rathnavel Natarajan said...

அருமை.

Unknown said...

me the firstu.

Unknown said...

இதில பதினைந்தாவது கேள்விக்கு சொன்ன பதில் மிக அருமை அருண் அண்ணா
வாழ்க வளமுடன்

Unknown said...

70...hey

குறையொன்றுமில்லை. said...

சுருக்கமா அழகா சொல்லிட்டிங்க. நல்லாவே சொல்லி இருக்கீங்க.

Prabu Krishna said...

இதுக்கு மூணு கமெண்ட் போடணுமா #டவுட்டு