Cricket Countdown....

Monday, June 20, 2011

சூரியன் மீண்டும் உதிக்கும்

அன்பார்ந்த தோழர்களே தோழமைகளே, (ரெண்டும் ஒண்ணுதானா? யாருப்பா இங்க இலக்கியவாதி... வந்து விளக்கத்தை சொல்லிட்டு போங்க)

கடந்த சில மாதங்களாக இழுத்து மூடப்பட்டு BLOCK ஆகி இருந்த என் BLOG சென்ற வாரம் முதல் தூசுத்தட்ட ஆரம்பிக்கப்பட்டது. அந்த நெடிதாங்காமல் சீக்கிரம் சுத்தம் செய்ய வேண்டி Baa, Baa, Black Sheep பாபா ராம்தேவ் அவர்கள் ஹாஸ்பிட்டலில் டிரிப்ஸ் ஏற்றி கொண்டே உண்ணாவிரதம் இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஒருவர் கதறி அழுது கேட்டதாலும் (யாரா? என் Blogதான், “நான் துரு பிடிச்சி போயிட்டேன்...சீக்கிரம் வாடா வெண்னை” என்றது) இன்று முதல் இந்த வலையுலகில் மீண்டும் பதவி பிரமானம் எற்கிறேன். (யார் அது, “சூரியன் மீண்டும் உதிக்காதுனு சொன்னது” - அய்யோ, அம்மா, அது நீங்க சொன்னதா.. உணர்ச்சி வசத்துல பேசிட்டேன்மா மன்னிச்சிடுங்க, சூரியன் என் பிளாக்கோட பேரும்மா...இதுல எந்த உள்குத்தும் இல்ல)

இந்த சூரியன், கண்ணாடி ரெண்டையும் சேர்த்து வெச்சி இது அரசியல் பதிவுனு கிளப்பிவிட்டுறாதீங்கப்பா

சரி இத்தனை நாள் ஏன் பதிவு எழுத முடியலைனு கேக்றீங்களா? ( நீங்க  கேக்கலைனாலும் நான் சொல்லியே தீருவேன்... அப்புறம் எப்படி இந்த பதிவை ஒரு பக்கத்துக்கு இழுக்கறதாம்) எல்லாத்துக்கும் கூடா நட்புதாங்க காரணம். அட ஆமாங்க இந்த கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு, இதுக்கு நடுவுல நம்ம தேர்தல் கமிஷன் நடத்திய விளையாட்டுனு இப்படி பல கூடா நட்புகள் சேர்ந்து எனது ஆட்சிக்கு சாரி... என் பிளாக்குக்கு கேடாய் முடிஞ்சிடுச்சி.

சரி அதெல்லாம் முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சி.... இன்னும் என்ன பண்ணிட்டு இருந்தேன்னு பார்த்தீங்களா? நானும் இப்போ எழுதலாம், அப்போ எழுதலாம்னு பார்த்தா நமக்கு ஜாமினே...சே... நேரமே கிடைக்கமாட்டுது. அதானால, ரெண்டு மூணு முறை அவசர செயற்குழுகூட்டத்தை கூட்டி என்ன பண்ணலாம்னு கேட்டு, மறுபடி மறுபடி எதுவுமே பண்ண வேணாம்னு ஒரே மொக்கை முடிவையே எடுத்து காலத்தை ஓட்டிட்டு இருந்தேன்.

சரி இதுக்கு மேலயும் என்னை நம்பி ஓட்டு போட்ட (அட இண்ட்லி, தமிழ்மணத்துலதாங்க) மக்களையும் என்னை நம்பி என் கட்சில சேர்ந்து இருக்கற 200 Followersகளையும் டார்சர் பண்ணாம விடக்கூடாதுனு முடிவு பண்ணி எனது வலையுலக ஆட்சியை, புரட்சிதலைவர் கனவு கண்ட ஆட்சியை, காமராஜர் ஆட்சியை (இவங்கள்லாம் பழைய பிரபலபதிவருங்கோ) இனிதே தொடங்குகிறேன். 

விதீஈஈஈஈ வலியதூஊஊஊ.....

ஆட்சியின் முதல் ஒப்பந்தமாக என் பதிவுக்கு வாக்களித்த அனைவருக்கும் ஒரு லேப்டாப்.... மன்னிச்சிக்கோங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக்.... அனைவருக்கும் ஒரு லாலிபாப் இலவசமாய் வழங்கப்படுகிறது. உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல போய் என் பேரை சொல்லி அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோங்க.

முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது

டிஸ்கி: இந்த சமயத்தில் எல்லா எதிர்கட்சிக்கும் ஒன்று சொல்லிகொள்ள விருப்பபடுகிறேன், ஆசைப்படுகிறேன், கடமை படுகிறேன். நான் வலைப்பூவை தூசி தட்டியதற்கும், ரஜினி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வே....

ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?

சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க

90 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா இந்த திரட்டிகள்ல எல்லாம் இணைக்கிறதில்லியா? அதுவும் மறந்துடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூரியன் ஏன் கண்ணாடி போட்டிருக்கு.....? நீங்கதான் டார்ச் அடிச்சீங்களா? இதெல்லாம் ஓவரா இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இதுக்கு நான் என்ன பண்ணனும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்புறம் எதுக்கு லிங்க் எல்லாம் கேட்டாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"சூரியன் மீண்டும் உதிக்கும்"//

ராத்திரி கூடவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி இதுக்கு நான் என்ன பண்ணனும்./////

புதுசா என்ன பண்ண போற? எல்லாம் வழக்கம் போலதான், பாலிடால குடி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"சூரியன் மீண்டும் உதிக்கும்"//

ராத்திரி கூடவா?
////////

அடேடே இந்த பயலுக்கு இம்புட்டு அறிவா? பாலிடால் கேன்சல்......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரு இரு நான் போய் நரிய கூட்டிட்டு வரேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// இன்று முதல் இந்த வலையுலகில் மீண்டும் பதவி பிரமானம் எற்கிறேன். ///////

ஆமா இவருக்கு பெரிய கெவர்னர் போஸ்ட்டு கொடுத்துட்டாங்க, பதவியேற்கிறாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இரு இரு நான் போய் நரிய கூட்டிட்டு வரேன்////////

வண்டலூருக்கு போறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேர் இஸ் தி ப்ளாக் ஓனர்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அட ஆமாங்க இந்த கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு, ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு, இதுக்கு நடுவுல நம்ம தேர்தல் கமிஷன் நடத்திய விளையாட்டுனு இப்படி பல கூடா நட்புகள் சேர்ந்து எனது ஆட்சிக்கு சாரி... என் பிளாக்குக்கு கேடாய் முடிஞ்சிடுச்சி.//////////

இதெல்லாம் அவங்க பண்ணாங்க, உனக்கு என்னய்யா ஆச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////. உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல போய் என் பேரை சொல்லி அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோங்க.////////

எங்க வீட்டுக்கு பக்கத்துல வெல்டிங் பட்டறைதான் இருக்கு, என்ன பண்றது?

அருண் பிரசாத் said...

யோவ்... திரட்டில சப்மிட் பண்ணி முடிக்கறதுக்குள்ள ஒரு பச்ச புள்ளைய இப்படியா கும்முவீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அருண் பிரசாத் said...
யோவ்... திரட்டில சப்மிட் பண்ணி முடிக்கறதுக்குள்ள ஒரு பச்ச புள்ளைய இப்படியா கும்முவீங்க
/////////

என்னது பச்ச புள்ளையா, ப்ரொஃபைல்ல வேற கலராவுல இருக்கு?

அருண் பிரசாத் said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// "சூரியன் மீண்டும் உதிக்கும்"//

ராத்திரி கூடவா?//
ராத்திரி வந்து என் பிளாக் பாருங்க எல்லாமே உதிக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது////////

அப்போ பூர்வ ஜென்ம ஞாபகமெல்லாம் இருக்காதுல்ல?

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// //////அருண் பிரசாத் said...
யோவ்... திரட்டில சப்மிட் பண்ணி முடிக்கறதுக்குள்ள ஒரு பச்ச புள்ளைய இப்படியா கும்முவீங்க
/////////

என்னது பச்ச புள்ளையா, ப்ரொஃபைல்ல வேற கலராவுல இருக்கு?//

கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க பெரியவரே... சே..கவுண்டரே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ? //////

பினாமிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கறதா பேசிக்கிறாங்களே?

dheva said...

வலையுலக சூரியனே வருக...! மீண்டும் நிலையான ஆட்சி தருக.....!!! (ஆமாம் நீ போஸ்ட் இப்டி எழுதுனா கமெண்ட் இப்டிதான் போட வருது...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க////////

இது பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்ல பயன்படுத்துன பழையகாலத்து சிக்னல்ஸ்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Comment deleted
This post has been removed by the author.
////////

ஏன் இந்த வெளையாட்டு?

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// //////ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ? //////

பினாமிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கறதா பேசிக்கிறாங்களே?//
ஆமாம்...உங்களுக்கு 10 பினாமிங்க இருக்கறாங்களாமே உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// dheva said...
வலையுலக சூரியனே வருக...! மீண்டும் நிலையான ஆட்சி தருக.....!!! (ஆமாம் நீ போஸ்ட் இப்டி எழுதுனா கமெண்ட் இப்டிதான் போட வருது...)//////

அப்போ அம்மா ஆட்சி நிலையில்லியா? என்ன அநியாயம்யா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஊருக்கு நல்லது சொல்வேன்!//


ப்ளாக் எழுதரத நிறுத்த போறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அருண் பிரசாத் said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// //////ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ? //////

பினாமிகளின் நடமாட்டம் அதிகமா இருக்கறதா பேசிக்கிறாங்களே?//
ஆமாம்...உங்களுக்கு 10 பினாமிங்க இருக்கறாங்களாமே உண்மையா?
////////

இவ்ளோ கம்மியா சொன்னா எப்படி? அப்புறம் எப்படி பிரபல பதிவர் ஆகுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஊருக்கு நல்லது சொல்வேன்!//


ப்ளாக் எழுதரத நிறுத்த போறியா?//////

உன்ன பார்த்து அருணும் திருந்த போறாரா? வெரிகுட்....!

அருண் பிரசாத் said...

@ dheva
// வலையுலக சூரியனே வருக...! மீண்டும் நிலையான ஆட்சி தருக.....!!! (ஆமாம் நீ போஸ்ட் இப்டி எழுதுனா கமெண்ட் இப்டிதான் போட வருது...)//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.... அவ்வ்வ்வ்...

rajamelaiyur said...

//
முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது
//
நக்கல் திலகம் நீங்கள்

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//
//////Comment deleted
This post has been removed by the author.
////////

ஏன் இந்த வெளையாட்டு?//
அய்யோ...அது நான் இல்ல, நான் இல்ல

rajamelaiyur said...

என்று எனது வலையில்

ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்

அருண் பிரசாத் said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// ஊருக்கு நல்லது சொல்வேன்!//


ப்ளாக் எழுதரத நிறுத்த போறியா?//
இல்லை, ரமேஷ் பிளாக் பக்கம் போன இன்சுரன்ஸ் கவரேஜ் கூட இல்லைனு சொல்லப் போறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அன்பார்ந்த தோழர்களே தோழமைகளே, (ரெண்டும் ஒண்ணுதானா? யாருப்பா இங்க இலக்கியவாதி... வந்து விளக்கத்தை சொல்லிட்டு போங்க)//////

இதுக்கு ஒரே ஒருத்தர்தான் வெளக்கம் சொல்ல முடியும், அவரும் வந்துட்டு ரமேச பாத்த உடனே எஸ்கேப் ஆகிட்டாரு....!

அருண் பிரசாத் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
// //
முடிவாக கண்கள் பனித்ததாலும் இதயம் கனித்ததாலும் என் வலைப்பூ இனிதே மறு ஜென்மம் எடுக்கிறது
////
நக்கல் திலகம் நீங்கள்//
ஐ, புது பதவி புது பதவி... சீ. .பட்டம்...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
///////அன்பார்ந்த தோழர்களே தோழமைகளே, (ரெண்டும் ஒண்ணுதானா? யாருப்பா இங்க இலக்கியவாதி... வந்து விளக்கத்தை சொல்லிட்டு போங்க)//////

இதுக்கு ஒரே ஒருத்தர்தான் வெளக்கம் சொல்ல முடியும், அவரும் வந்துட்டு ரமேச பாத்த உடனே எஸ்கேப் ஆகிட்டாரு....!//

இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்குதா? அவ்வ்வ்வ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////(யார் அது, “சூரியன் மீண்டும் உதிக்காதுனு சொன்னது” - அய்யோ, அம்மா, அது நீங்க சொன்னதா.. உணர்ச்சி வசத்துல பேசிட்டேன்மா மன்னிச்சிடுங்க, சூரியன் என் பிளாக்கோட பேரும்மா...இதுல எந்த உள்குத்தும் இல்ல)///////

ஏன்யா இப்படி பம்முற? அம்மா இப்போ மாறிட்டதா அவங்களே சொல்றாங்களே.. கேக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////டிஸ்கி: இந்த சமயத்தில் எல்லா எதிர்கட்சிக்கும் ஒன்று சொல்லிகொள்ள விருப்பபடுகிறேன், ஆசைப்படுகிறேன், கடமை படுகிறேன். நான் வலைப்பூவை தூசி தட்டியதற்கும், ரஜினி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வே....//////////

அட்மிட் ஆனதுக்கா இல்ல டிஸ்சார்ஜ் ஆனதுக்கா?

அருண் பிரசாத் said...

//ஏன்யா இப்படி பம்முற? அம்மா இப்போ மாறிட்டதா அவங்களே சொல்றாங்களே.. கேக்கலியா?//

இருந்தாலும் அந்த பழிய...சே...பழைய கன்வு எல்லாம் வந்துட்டு போகுதே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்புறம் எதுக்கு லிங்க் எல்லாம் கேட்டாரு?
/////////

என்ன லிங்கு...? உனக்கும் கலாக்காவுக்கும் உள்ள லிங்கா? நாம ஏற்கனவே பேசிக்கிட்டபடி, அதப் பத்தி நான் ஒண்ணும் வெளிய சொல்ல மாட்டேம்பா......!

அருண் பிரசாத் said...

//அட்மிட் ஆனதுக்கா இல்ல டிஸ்சார்ஜ் ஆனதுக்கா?//

அவர் அட்மிட் ஆகறப்போ தூசு தட்ட ஆரம்பிச்சது...இப்போதான் முடிஞ்சது... அவரும் வெளில வந்துட்டாரு

Madhavan Srinivasagopalan said...

அது ஒரு 'சிம்பிள்' (நீங்கள்தான் 'சிம்பிள்'னு சொல்லச் சொன்னீங்க.. அதான்)

NaSo said...

சூரியனை உதிக்க வச்சாச்சு. அடுத்தது என்ன பண்ணப் போறிங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிளாக்க ஹேக் செஞ்சது யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
சூரியனை உதிக்க வச்சாச்சு. அடுத்தது என்ன பண்ணப் போறிங்க?//////

சிம்பிள், மறைய வெப்பாரு...!

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிளாக்க ஹேக் செஞ்சது யாரு? //

அது நீங்க இல்லையா.. ? @ போலீசு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அருண் பிளாக்க ஹேக் செஞ்சது யாரு?
//////

அதானே போயும் போயும் இதப் போயி ஹேக் செஞ்ச அந்த அறிவுக் கொழுந்தோட மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க......... பாத்துட்டு இப்படியே போயிடுறோம்....

Madhavan Srinivasagopalan said...

வ' வண்ணா
'ட' + 'ஐ'யன்னா

Madhavan Srinivasagopalan said...

வ' வண்ணா
'ட' + 'ஐ'யன்னா

Madhavan Srinivasagopalan said...

வ' வண்ணா
'ட' + 'ஐ'யன்னா

பெசொவி said...

//சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க //

blog

அருண் பிரசாத் said...

@ Madhavan Srinivasagopalan
// அது ஒரு 'சிம்பிள்' (நீங்கள்தான் 'சிம்பிள்'னு சொல்லச் சொன்னீங்க.. அதான்)//
அட என்னா அறிவு... சார் நீங்க பிறந்ததுல இருந்தே இப்படியா இல்ல நடுவுல ஏதாவது ஆக்ஸிடண்ட் ஆகி இப்படி ஆச்சா?

@ நாகராஜசோழன் MA
// சூரியனை உதிக்க வச்சாச்சு. அடுத்தது என்ன பண்ணப் போறிங்க?//
அடுத்தது உங்களுக்கு தேர்தல்ல நிக்க சீட்டு வாங்கி தர்றதுதான்னு சொன்னா நம்பவா போறீங்க

மாணவன் said...

வணக்கம் மாம்ஸ்,

சூரியன் மீண்டும் உதிக்கட்டும்....

உங்களின் பொன்னான பணி மீண்டும் தொடரட்டும்... :)

Anonymous said...

என்றா இது ? நானும் பாபுவும் எவ்ளோவோ முயற்சி பண்ணி இலையை மலர செய்திருக்கிறோம் ..,நீ சூரியன் உதிக்கட்டும் சொல்றே ..,நீ மொரிஷியஸ் பார்ட்டி .,உண்ணக்கும் எதுனா பங்கு வந்துதா ..,:))))))))))

Mohamed Faaique said...

ஆஹ்ஹா..நமக்கு ஓட்டு போட ஒரு ஆளு வந்துடுச்சுய்யா....

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
"சூரியன் மீண்டும் உதிக்கும்"//

ராத்திரி கூடவா//

ராத்திரி பன்னிரண்டு மணிக்கு அமெரிக்காவுக்கு போன் பன்னி கேட்டுப்பாரு..சூரியன் இருக்கும்! :))

வைகை said...

////. உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கடைல போய் என் பேரை சொல்லி அவங்க கொடுக்கறதை வாங்கிக்கோங்க.////////

எங்க வீட்டுக்கு பக்கத்துல வெல்டிங் பட்டறைதான் இருக்கு, என்ன பண்றது?///


இது பரவாயில்ல..எங்க வீட்டுக்கு பக்கத்துல சாக்கடைல இருக்கு?

வைகை said...

ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?//

மச்சி புரியலையா? நீ எழுதாம இருக்கதத்தான் மக்கள் விரும்புறாங்க :))

வைகை said...

நாகராஜசோழன் MA said...
சூரியனை உதிக்க வச்சாச்சு. அடுத்தது என்ன பண்ணப் போறிங்க?///

அடுத்து குதிக்க வைப்பாரு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
ஒரு டவுட்டு: மாங்கு மாங்குனு பதிவு எழுதும்போது ஏறாத Followers எண்ணிக்கை எதுவும் எழுதாம் இருக்கறப்போ எப்படி சர சரனு ஏறி 200 ஐ தாண்டி நிக்குது. இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ?//

மச்சி புரியலையா? நீ எழுதாம இருக்கதத்தான் மக்கள் விரும்புறாங்க :))////////

ROFL வைகை.....................

வைகை said...

பனங்காட்டு நரி said...
என்றா இது ? நானும் பாபுவும் எவ்ளோவோ முயற்சி பண்ணி இலையை மலர செய்திருக்கிறோம் ..,நீ சூரியன் உதிக்கட்டும் சொல்றே ..,நீ மொரிஷியஸ் பார்ட்டி .,உண்ணக்கும் எதுனா பங்கு வந்துதா ..,:))))))))))///

பூதானே மலரும்? இலை எப்படி மலரும்? இலை விரியும்... எங்க சொல்லு விரியும் :))

எஸ்.கே said...

இந்த நாளில் எல்லோரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவோம்!

செல்வா said...

அண்ணனை மறுபடியும் வரவேற்கிறேன்! ஹி ஹி . இனி மறுபடியும் படப்புதிர் போடுவீங்களா ?

வெங்கட் said...

@ செல்வா.,

// இனி மறுபடியும் படப்புதிர் போடுவீங்களா ? //

பின்ன., அதை விட்டா பதிவு போட
இவர்கிட்ட வேற சரக்கு ஏது..?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ செல்வா.,

// இனி மறுபடியும் படப்புதிர் போடுவீங்களா ? //

பின்ன., அதை விட்டா பதிவு போட
இவர்கிட்ட வேற சரக்கு ஏது..?!
////////

என்ன வெங்கட் இப்படி சொல்லிட்டீங்க? சரக்கு முடிஞ்சிட்டா பக்கத்துல வைன் ஷாப்ல போயி சரக்கு வாங்கிக்க கூட தெரியாமேயா இருப்பாரு?

வெங்கட் said...

// "சூரியன் மீண்டும் உதிக்கும்" //

சூரியன் மறையறதும் இல்ல.,
உதிக்கறதும் இல்ல.. அது அப்படியே
தான் இருக்கு.. பூமி சுத்தறதால தான்
சூரியன் மறையற / உதிக்கிற மாதிரி
தெரியுது..

நாங்களும் சூரியன் தாம்ல..!
எங்ககிட்டயேவா..?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெங்கட் said...
// "சூரியன் மீண்டும் உதிக்கும்" //

சூரியன் மறையறதும் இல்ல.,
உதிக்கறதும் இல்ல.. அது அப்படியே
தான் இருக்கு.. பூமி சுத்தறதால தான்
சூரியன் மறையற / உதிக்கிற மாதிரி
தெரியுது..

நாங்களும் சூரியன் தாம்ல..!
எங்ககிட்டயேவா..?!!//////////

அண்ணே பேசாம நீங்க ஐக்கியநாட்டு சபை தலைவராகிடுங்கண்ணே.....!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// சரக்கு முடிஞ்சிட்டா பக்கத்துல
வைன் ஷாப்ல போயி சரக்கு
வாங்கிக்க கூட தெரியாமேயா இருப்பாரு? //

" சரக்கு முடிஞ்சி போச்சு..! அதான்
பதிவு போடலைன்னு சொன்னாரே..! "

அப்ப அது இந்த சரக்கு தானா.?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// சரக்கு முடிஞ்சிட்டா பக்கத்துல
வைன் ஷாப்ல போயி சரக்கு
வாங்கிக்க கூட தெரியாமேயா இருப்பாரு? //

" சரக்கு முடிஞ்சி போச்சு..! அதான்
பதிவு போடலைன்னு சொன்னாரே..! "

அப்ப அது இந்த சரக்கு தானா.?!!
////////

என்னண்ணே இப்படி பச்சப் புள்ளையா இருக்கீங்க? இப்படியே இருந்தா அப்புறம் எப்ப ஐக்கியநாட்டு சபை தலைவராகுறது?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அண்ணே பேசாம நீங்க ஐக்கியநாட்டு
சபை தலைவராகிடுங்கண்ணே.....! //

எல்லா பதவிக்கும் நாமளே
தலைவரா இருக்கணும்னா முடியுமா..?
மத்தவங்களுக்கும் ஒரு சான்ஸ்
குடுக்கலாம்பா..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// என்னண்ணே இப்படி பச்சப் புள்ளையா
இருக்கீங்க? இப்படியே இருந்தா அப்புறம்
எப்ப ஐக்கியநாட்டு சபை தலைவராகுறது? //

இப்படி எல்லாம் அப்பாவி மாதிரி
நடிச்சாலாவது நம்மள தலைவர்
பதவிக்கு வாங்கன்னு தொந்தரவு
பண்ணாம இருபபாங்களேன்னு தான்..

ஹி., ஹி., ஹி.!

அருண் பிரசாத் said...

திட்டம் போட்டு என் இண்டர் நெட்டை கட் பண்ணிட்டு நான் ஆள் இல்லாதப்போ என் பிளாக்ல கும்மிட்டு இருந்த பன்னிகுட்டி, வெங்கட், ரமேஷ், வைகை, ஒபாமா, மற்றும் பலரையும் கண்ணாபின்னாவென கண்டிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// என்னண்ணே இப்படி பச்சப் புள்ளையா
இருக்கீங்க? இப்படியே இருந்தா அப்புறம்
எப்ப ஐக்கியநாட்டு சபை தலைவராகுறது? //

இப்படி எல்லாம் அப்பாவி மாதிரி
நடிச்சாலாவது நம்மள தலைவர்
பதவிக்கு வாங்கன்னு தொந்தரவு
பண்ணாம இருபபாங்களேன்னு தான்..

ஹி., ஹி., ஹி.!
/////////

சரி சரி விடுங்க, தலைவராவதற்கு வேற ஏதாவது சங்கம் கெடைக்காமேயா போயிடும்? எதுக்கும் நான் நாலு பேர்கிட்ட சொல்லி வைக்கிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அருண் பிரசாத் said...
திட்டம் போட்டு என் இண்டர் நெட்டை கட் பண்ணிட்டு நான் ஆள் இல்லாதப்போ என் பிளாக்ல கும்மிட்டு இருந்த பன்னிகுட்டி, வெங்கட், ரமேஷ், வைகை, ஒபாமா, மற்றும் பலரையும் கண்ணாபின்னாவென கண்டிக்கிறேன்
///////

யோவ் திட்டம் போட்டு அப்பீட் ஆகிட்டு இப்ப பேச்ச பாரு? ஆமா யாரு அந்தப்பய ஒபாமா? உங்க ஆபீஸ்ல வேல செய்யறவனா?

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
// இப்படி எல்லாம் அப்பாவி மாதிரி
நடிச்சாலாவது நம்மள தலைவர்
பதவிக்கு வாங்கன்னு தொந்தரவு
பண்ணாம இருபபாங்களேன்னு தான்..

ஹி., ஹி., ஹி.!//

ஏற்கனவே VKS, உங்க மனவி... லேட்டஸ்ட்டா உங்க பையன்கிட்ட எல்லாம் வாங்கன பட்டம் போதாதா?

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் திட்டம் போட்டு அப்பீட் ஆகிட்டு இப்ப பேச்ச பாரு? ஆமா யாரு அந்தப்பய ஒபாமா? உங்க ஆபீஸ்ல வேல செய்யறவனா?//
அவன் நம்ம பையன்னே...அமெரிக்கால ஜனாதிபதியா இருக்கறான்.... என்னை கேக்காம ஒன்னு கூட செய்ய மாட்டான்.... பாசக்கார பயபுள்ள

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// அதானே போயும் போயும் இதப் போயி ஹேக் செஞ்ச அந்த அறிவுக் கொழுந்தோட மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க......... பாத்துட்டு இப்படியே போயிடுறோம்....//

@ ரமேஷ்... அண்ணன் கேக்குறாருல்ல வந்து ஒரு ரொமாண்டிக் லுக் விட்டுட்டு போறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அருண் பிரசாத் said...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// யோவ் திட்டம் போட்டு அப்பீட் ஆகிட்டு இப்ப பேச்ச பாரு? ஆமா யாரு அந்தப்பய ஒபாமா? உங்க ஆபீஸ்ல வேல செய்யறவனா?//
அவன் நம்ம பையன்னே...அமெரிக்கால ஜனாதிபதியா இருக்கறான்.... என்னை கேக்காம ஒன்னு கூட செய்ய மாட்டான்.... பாசக்கார பயபுள்ள///////

ஓ அந்தப்பயலா என் ப்ளாக்ல கூட ஃபாலோயர் ஆகனும்னு அடம்புடிச்சானே அவன்தானே? பாவம் விடுங்க... அப்பாவிப்பய.... புதிரிகிதிர் போட்டு வெரட்டிடாதீங்க!

அருண் பிரசாத் said...

@ Madhavan Srinivasagopalan
// வ' வண்ணா
'ட' + 'ஐ'யன்னா//
சார் நீங்க ஏதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது...ஆனா எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறு பாஷை தெரியாதே!

@ பெசொவி
//
//சரி இது என்ன சிம்பிள்னு சொல்லிட்டு போங்க //

blog//
சபாஷ் PSV, நீங்கதான் கடமைல கண்ணா இருந்து பதில் சொல்லி இருக்கீங்க

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
// ஓ அந்தப்பயலா என் ப்ளாக்ல கூட ஃபாலோயர் ஆகனும்னு அடம்புடிச்சானே அவன்தானே? பாவம் விடுங்க... அப்பாவிப்பய.... புதிரிகிதிர் போட்டு வெரட்டிடாதீங்க!//

அட நம்ம புதிரை வெச்சிதான் ஒசாமாவையே முடிச்சான்... வெளில சொன்னா எனக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி வந்துடும்னு நான் தான் வெளில சொல்ல வேணாம்னு சொன்னேன்...பயபுள்ள அவன் ஒசாமா செத்த படத்தைகூட வெளி இடாம அவனோட பாசத்தை காட்டிட்டான்

அருண் பிரசாத் said...

@ மாணவன்
// வணக்கம் மாம்ஸ்,
சூரியன் மீண்டும் உதிக்கட்டும்....
உங்களின் பொன்னான பணி மீண்டும் தொடரட்டும்... :)//
வாங்க மச்சி... மாணவனுக்காக அடுத்து சமச்சீர் கலவி..சாரி...கல்விய கொண்டு வந்துடறேன்

@ பனங்காட்டு நரி
// என்றா இது ? நானும் பாபுவும் எவ்ளோவோ முயற்சி பண்ணி இலையை மலர செய்திருக்கிறோம் ..,நீ சூரியன் உதிக்கட்டும் சொல்றே ..,நீ மொரிஷியஸ் பார்ட்டி .,உண்ணக்கும் எதுனா பங்கு வந்துதா ..,:))))))))))//
அடப்பாவி நீதான என்னை இவ்வள்வு நாள் பதிவு எழுத விடாம ஆணி புடுங்க வச்சது.... திட்டமிட்ட உள்நாட்டு சதி

பீ கேர்புல் (நான் என்னை சொன்னேன்)

அருண் பிரசாத் said...

@ Mohamed Faaique
// ஆஹ்ஹா..நமக்கு ஓட்டு போட ஒரு ஆளு வந்துடுச்சுய்யா....//
நீ ம்னுஷன்ய்யா...நீ மனுஷன்...சரி எனக்கு ஓட்டு போட்டீங்களா? give and take policy


@ வைகை
// மச்சி புரியலையா? நீ எழுதாம இருக்கதத்தான் மக்கள் விரும்புறாங்க :))//
விட்றா விட்றா...சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்

@ எஸ்.கே
// இந்த நாளில் எல்லோரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவோம்!//
மறைமுகமா என் பிளாக்குக்கு பொங்க வைக்க சொல்லுறீங்க.... ரைட்டு

அருண் பிரசாத் said...

@ கோமாளி செல்வா
// அண்ணனை மறுபடியும் வரவேற்கிறேன்! ஹி ஹி . இனி மறுபடியும் படப்புதிர் போடுவீங்களா ?//
தம்பி நீ மொக்கை போடுறதை நிறுத்தறேன்னு சொல்லு நானும் சினிமாபுதிர் போடுறதை நிறுத்திடறேன்

Madhavan Srinivasagopalan said...

//அருண் பிரசாத் said...
தம்பி நீ மொக்கை போடுறதை நிறுத்தறேன்னு சொல்லு நானும் சினிமாபுதிர் போடுறதை நிறுத்திடறேன்//

அட ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..
செல்வா நிறுத்து.. எங்களுக்கு ரெண்டு விதத்துல லாபம்..

கிருபா said...

போச்சுடா சூரியன் ஹிஹி
நாளைக்கும் வாங்க

நாலு பேரு நல்லா இருந்தா மொக்க கமண்டு தப்பே இல்ல

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.
இனி மேல் தொடர்ந்து நன்கு எழுதுங்கள்.

ராஜி said...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அதுப்போல வெங்கட் போன்றவர்கள் எதிர்த்து நின்றாலும் நீங்க பதிவு போடுறதை நிறுத்தாதீங்க அருண்.

சாதாரணமானவள் said...

அந்த சிம்பலுக்கு அர்த்தம் BLOG. கரெக்டா?

படிக்காதவன் said...
This comment has been removed by the author.
அம்பாளடியாள் said...

எனது மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே.....