Cricket Countdown....

Monday, February 14, 2011

பிரபல பதிவரின் தலைகனம்

போன வியாழகிழமை நம்ம
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கோவை வந்து இருந்தாரு.....

எனக்கு போன் பண்ணி,
அவரோட Family யோட
கோவை வந்து இருக்கேன்
RS புரம் KFC ல Meet பண்ணலாம்
வாங்கனு கூப்பிட்டாரு....

பிரபலபதிவரா ஆச்சே, அதிலும்
எதிர்கட்சிகாரர் ஆச்சே,
அவர் கூப்பிட்டும் போகலைனா
அரசியல் நாகரீகம் கெட்டுபோச்சினு
அறிக்கை வந்துடுமேனே
நானும் என் Family யோட போய்
மரியாதை நிமித்தம் சந்திச்சிட்டு வந்தேன்

இதை பத்தி பெருமையா
ஒரு பதிவா வேற போட்டு இருந்தாரு

அதே மாதிரி நான் சனிக்கிழமை
என் Family யோட சேலம் போனேன்
அவருக்கு PHONE  பண்ணி
நான் சேலம் வந்து இருக்கேன்
வாங்க MEET பண்ணலாம்னு
சொன்னா முடியதுனுட்டாரு

அட ஒரு 10 நிமிஷம் வந்து
போங்கனு சொல்லியும்
வரவே முடியாதுனு
முடிவா சொல்லிட்டாரு

சரி ரயில்வே ஸ்டேஷனுக்காவது
வாங்கனு சொன்னா
கண்டபடி திட்ட ஆரம்பிச்சிட்டாருங்க

நான் என்னங்க பண்ணுறது
நான் சென்னைக்கு போற
சேரன் எக்ஸ்பிரஸ் ராத்திரி
1 மணிக்குதான் சேலம் வருது

நான் வேணா கண் முழிச்சி
உங்களுக்காக வெயிட் பண்ணுறேன்
நீங்க வாங்கனு 
சொன்னதுக்காங்க இப்படி திட்டுவாரு!

நீங்ளாவது அவர் பண்ணுற
அநியாத்தை கேளுங்கங்களேன்.......
45 comments:

வெங்கட் said...

Me the First

வெங்கட் said...

enga ooru salemla irunthu 25kms thalli iruku. athai kuripidathathai kandikkiren

RAVINDRAN said...

good response/counter...............?

ராஜி said...

தப்பு உங்க மேலதான். அவரு கே.ஃப்சி தவிர எங்கயும் சந்திப்பை வச்சுக்கறதில்ல. அது தெரியாம நீங்க ரயில்வே ஸ்டேஷனுக்கு கூப்பிட்டா எப்படி

Unknown said...

அடங்கொன்னியா இரவு 1 மணிக்கு வெளிய போக இது என்ன வியத்னாமா....காலம் கெட்டு கெடக்கு....இந்த நேரத்துல போயி ஹி ஹி!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் மாதிரி ஒரு அழகான பையன(என்ன சிரிப்பு ராஸ்கல்) இரவு ஒரு மணிக்கு தனியா கூப்டா எப்படி வருவாரு..

எஸ்.கே said...

So SAD!
Welcome to Chennai!

இம்சைஅரசன் பாபு.. said...

//So SAD!
Welcome to Chennai!//

அட பாவி மக்கா உண்ணக்கும் நைட் ரெண்டு மணிக்கு போன் பன்னி ஸ்டேஷன் வா ன்னு கூப்பிட போறாரு ...

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said... 1

Me the First


இந்த மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடமாட்டேன்ன்னு ஒரு மானஸ்தன் சொன்னாரே..?

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு வராமல் சேலம் போன அருணை வன்மையாக கண்டிக்கிறேன்

ராஜி said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் மாதிரி ஒரு அழகான பையன(என்ன சிரிப்பு ராஸ்கல்) இரவு ஒரு மணிக்கு தனியா கூப்டா எப்படி வருவாரு..
////////////////////////
ஏன் துணைக்கு அவருக்கு அவ்வளவு பயமிருந்தா மூணாப்பு படிக்குற அவர் பையனை துனைக்கு கூப்புட்டு வந்திருக்கலாமில்ல‌

சக்தி கல்வி மையம் said...

திருவள்ளுருக்கு வாங்க..நாங்கேல்லாம் நைட் எவ்வளவு நேரமானாலும் வருவோம்ல்ல..

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு வராமல் சேலம் போன அருணை வன்மையாக கண்டிக்கிறேன்
///////////////////////
வந்துட்டா மட்டும் என்ன five star hotel ல விருந்து வைக்குற மாதிரிதான்

Madhavan Srinivasagopalan said...

ஹா.. ஹா.. ஹா....
அப்பு.. என்னமா யோசிக்கிராணுக அப்பு..

Madhavan Srinivasagopalan said...

அர்த்த ராத்திரில வெங்கட் சாருக்கு போன் பண்ணி அவரு தூக்கத்தை கெடுத்துட்டு.. என்னாமா பீலா விடுறானுக....
அந்த ராத்திரி நேரத்துல, அவர் உங்கள் போன அட்டென்ட் பண்ணாரு பாருங்க.. அவரைத்தான் திட்டனும்..

மங்குனி அமைச்சர் said...

RS புரம் KFC ல Meet பண்ணலாம்
வாங்கனு கூப்பிட்டாரு....///

பில்லு யாரு பே பண்ணினா ???

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
Anonymous said...

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் எங்கள் மனங் கவர் கள்வன் அண்ணன் போலீஸ் அவர்களை எப்ப வேண்டுமென்றாலும் கூப்பிட்டு பாருங்கள் வருவார்.ரொம்ப நல்லவர்.

அதிரடிக்கு ஸ்காட்லாந்து போலீஸ்
அன்புக்கு நட்புக்கு சிரிப்பு போலீஸ்

போலீஸ் நட்புவட்டம்

வெங்கட் said...

@ சி.பி.,

// இந்த மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்
போடமாட்டேன்ன்னு ஒரு மானஸ்தன்
சொன்னாரே..? //

எவன் அவன்..? அவன் பேரை மட்டும்
சொல்லுங்க.., துவைச்சி எடுத்துடுறேன்..!!

// ஈரோடு வராமல் சேலம் போன அருணை
வன்மையாக கண்டிக்கிறேன் //

ஈரோடு வழியா தான் வந்தாரு..
அங்கிட்டு டைம் நைட் 12 மணி,,!!
நீங்க வாக்கிங் போற டைம்..

Unknown said...

இம்சையை ப்ளாக்கோட நிறுத்தாம ஊர் ஊரா வேற போறீங்களா அதுவும் பேய்கள் நடமாடற சமயத்தில சந்திப்பு. நல்ல விளங்கும்.

Unknown said...

இன்னா இது அனாமத்து நேரத்துல இந்த மாதிரி சுத்திட்டு வந்தா ஏன் செய்வென பத்தி யோசிக்க தோணாது...........அத கொண்டுவந்து பதிவுல வேற வச்சிபுட்டீன்களே ஹி ஹி!!

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த வாரம் முழுவதும் வலைச்சரத்தில் டேரா போட்டிருக்கேன். வந்து எட்டி பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பாஸ்
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......

செல்வா said...

எங்கள சீண்டிப் பாக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு ?

செல்வா said...

///வெங்கட் மாதிரி ஒரு அழகான பையன(என்ன சிரிப்பு ராஸ்கல்) இரவு ஒரு மணிக்கு தனியா கூப்டா எப்படி வருவாரு.///

இதுல என்ன சிரிப்பு இருக்கு ? போலீசுக்கு உண்மை சொன்னா கூட சிரிப்பு வருது .. ஹய்யோ ஹய்யோ ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யாருய்யா அந்த பிரபல பதிவரு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவேள சேலத்துல KFC இல்லேன்னு முடியாதுன்னாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
ஈரோடு வராமல் சேலம் போன அருணை வன்மையாக கண்டிக்கிறேன்////////

அப்போ அந்த ட்ரெயினு கோயம்புத்தூர்ல இருந்து பறந்து சேலத்துக்கு போயிடுச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... 6
வெங்கட் மாதிரி ஒரு அழகான பையன(என்ன சிரிப்பு ராஸ்கல்) இரவு ஒரு மணிக்கு தனியா கூப்டா எப்படி வருவாரு..////////

ஆனாலும் சிரிப்பு போலீசுக்கு ஓவர் நக்கல்யா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருண், அப்போ கோவைக்கு ரிடர்ன் போறப்போ, KFC-ல இருந்து பார்சல் வாங்கிக்குங்க, அப்புறம் நைட்டு 2 மணி, 3 மணியா இருந்தாலும் டேசன்ல வந்து விடிய விடிய உக்காந்திருப்பாரு பாருங்களேன்....

Anonymous said...

ஏ .....தம்பி அருணோய்ய்ய்ய்ய்ய்ய்ய்.............கானமே போய்ட்ட்ட நம்ம கருப்பு பன்னி வந்திருக்குது வாவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......ஓஓய்ய்ய்ய்ய்ய்...

(”வம்சம்”) எபெக்ட் எப்படி ????

சுசி said...

:)

அனு said...

எண்டர் கவிதை கேள்விப்பட்டிருக்கேன்..
இது தான் எண்டர் பதிவா??

Unknown said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

Unknown said...

கலைஞரின் காதல் !!!
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

ராஜி said...

வெங்கட் said...

@ சி.பி.,

// இந்த மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்
போடமாட்டேன்ன்னு ஒரு மானஸ்தன்
சொன்னாரே..? //

எவன் அவன்..? அவன் பேரை மட்டும்
சொல்லுங்க.., துவைச்சி எடுத்துடுறேன்..!!

// ஈரோடு வராமல் சேலம் போன அருணை
வன்மையாக கண்டிக்கிறேன் //

ஈரோடு வழியா தான் வந்தாரு..
அங்கிட்டு டைம் நைட் 12 மணி,,!!
நீங்க வாக்கிங் போற டைம்..

//////////////////////
12 மணிக்கு வாக்கிங் போக அவர் என்ன பேயா இல்ல பிசாசா? டவுட்டு

ராஜி said...

வெங்கட் said...

@ சி.பி.,

// இந்த மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ்
போடமாட்டேன்ன்னு ஒரு மானஸ்தன்
சொன்னாரே..? //

எவன் அவன்..? அவன் பேரை மட்டும்
சொல்லுங்க.., துவைச்சி எடுத்துடுறேன்..!!

// ஈரோடு வராமல் சேலம் போன அருணை
வன்மையாக கண்டிக்கிறேன் //

ஈரோடு வழியா தான் வந்தாரு..
அங்கிட்டு டைம் நைட் 12 மணி,,!!
நீங்க வாக்கிங் போற டைம்..

//////////////////////
12 மணிக்கு வாக்கிங் போக அவர் என்ன பேயா இல்ல பிசாசா? டவுட்டு

'பரிவை' சே.குமார் said...

ha... ha.... haaa...
kilampittangaiyaaa..

Madhavan Srinivasagopalan said...

உங்களது இந்தப் பதிவும் மூலம் எனக்கு கிடைத்த (அருமையான !) ஐடியா எனது வலைப்பூவில் ஒரு பதிவாக.. மறக்காம படித்துவிட்டு கருத்தை (!!) சொல்லவும்.. நன்றி.

Unknown said...

//பிரபலபதிவரா ஆச்சே, அதிலும்
எதிர்கட்சிகாரர் ஆச்சே,//

அப்படியா சங்கதி..

Unknown said...

//போலீஸ் அவர்களை எப்ப வேண்டுமென்றாலும் கூப்பிட்டு பாருங்கள் வருவார்.ரொம்ப நல்லவர்.//

சாப்பாட்டு போலீஸ்...

Unknown said...

//புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் எங்கள் மனங் கவர் கள்வன் அண்ணன் //
இது எனக்கு நானே திட்டம் தானே?

Unknown said...

//// ஈரோடு வராமல் சேலம் போன அருணை//

அப்ப இந்த பக்கம் தான் உலாவிட்டு இருக்கீங்களா?

Unknown said...

இது என்ன கவிதை மாதிரி எழுதியிருக்கீங்க...

சாமக்கோடங்கி said...

ராத்திரிக்கு ஒரு ஆளை தனியா கூப்பிடறது தப்பு மா..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா.. :-) எப்படி எல்லாம், திட்டு வாங்குறீங்க?

நீங்க ரொம்ப நல்லவரு...