ஒரு வழியா ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டியாச்சு... சரி, அந்த அனுபவம் எப்படி? அதன் சாதக, பாதகங்கள் என்ன?
உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)
உண்மையிலேயே, வலைச்சர ஆசிரியர் என்பது மிகவும் பொறுப்பு மிகுந்த வேலைதான். பல ஜாம்பவான்கள் எழுதி இருக்கும் இடத்தில் நீங்களும் எழுதி உங்கள் முத்திரையை பதிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. நிறைய படிக்க வேண்டும், புதிய பதிவர்களை தேட வேண்டும் (அடேய்! அதுதாண்டா வலைச்சர கான்செப்ட்டே!)
எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் விளையாட்டாய் தெரிந்தாலும், நேரம் நெருங்க நெருங்க ஒரு சீரியஸ்னேஸ் ஆட்டோமெட்டிக்காக வந்துவிடுகிறது. உங்களின் பதிவுகளை பற்றி எழுத, உங்கள் பழைய பதிவுகளை படிக்கும் போதுதான் நம்முடைய ( + ) மற்றும் ( - ) தெரியவருது. என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும், சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான். இப்போ தெரியுது மத்தவங்க எவ்வளோ கஷ்ட்டப்பட்டு இருப்பாங்கனு, என் பதிவை படிச்சி.
சாதகங்கள்:
1. மற்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ இல்லையோ கண்டிப்பாய் நீங்கள் வெளிச்சத்திற்கு வருகிறீர்கள்
2. உங்கள் எழுத்து நடை, பொது அறிவு, கற்பனைத்திறன் எல்லாம் ஊன்றி கவனிக்கபடுவதால், உங்களுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது.
3. உங்கள் followers எண்ணிக்கை கணிசமாக உயரும்.
4. நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய பதிவர்கள் உளமாற சொல்லும் நன்றியை நீங்கள் உணர முடியும்.
5. உங்களை பாராட்டி அவர்கள் ஒரு நாலு வார்த்தை எழுதுவார்கள் அவர்கள் பதிவில்.
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....
பாதங்கள்:
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
1. நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்
2. தினமும் பதிவு எழுதனும், அதுக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்யனும்.
3. நண்பர்களின் பிளாக்குகளுக்கு போக கொஞ்சம் சிரமமா இருக்கும்.
4. ஒரு வாரம் முடிஞ்சிவந்தா... புது உலகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.
டிப்ஸ்: (இப்படித்தான் நான் செஞ்சேன்)
1. எழுதப்போறதுக்கு 2 வாரத்துக்கு முன்னாடி இருந்தே பதிவர்கள் / பதிவுகள் லிஸ்ட் ரெடி பண்ண ஆரம்பிச்சுடுங்க
2. உங்களுக்கு கமெண்ட் போடுறவுங்க, நீங்க கமெண்ட் போடுற பதிவர்களுக்கு கமெண்ட் போடுறவுங்களை எல்லாம் பார்த்துட்டே இருங்க.
3. புதுசா யாராவது தெரிஞ்சா அவங்க பிளாக் போய் பாருங்க.
4. அவங்க யாரை எல்லாம் follow பண்ணுறாங்கனும் போய் பார்த்துட்டு வாங்க.
5. வித்தியாசமா ஒரு கான்செப்ட்ல பதிவர்களை அறிமுப்படுத்துங்க. (பூக்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள் - இப்படி)
6. ஓவரா தூய தமிழ்ல எழுதாதீங்க... பேச்சு தமிழ்தான் ஒரு கோர்வையா நல்லா இருக்கும்
7. எதுக்கும் திட்டமிட்டதைவிட அதிக பதிவர்களின் பட்டியலை வெச்சிக்கோங்க. உங்களுக்கு முன் வாரம் எழுதும் ஆசிரியர்கள் உங்கள் பட்டியலில் இருப்பவரை அறிமுகப்படுத்தும் சாத்தியம் அதிகம் (நம்ம ராம்ஸ் இப்போ என்னால அவஸ்தைபடுற மாதிரி... நல்ல வேளை நான் எழுதினதுக்கு முன் வாரம் வலைச்சரத்துக்கு லீவ் விட்டுடாங்க)
8. தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....
சரி, வலைசரத்துல நான் எழுதிய பதிவுகளின் பட்டியல் இதோ....
1. சீனா சாரின் வரவேற்ப்பு - வருக ! வருக ! அருண் பிரசாத் ! கலக்குக !
2. சுயபுராணம் - ஆட்டம் ஆரம்பம்!
3. முதல் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஒன்று
4. இரண்டாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் இரண்டு...
5. மூன்றாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் மூன்று...
6. நான்காம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் நான்கு....
7. ஐந்தாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஐந்து.....
8. ஆறாம் நாள் அறிமுகங்கள் - கதம்பம் ஆறு......
9. வாழ்த்தும் வழியனுப்புதலும் - செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்
தயவுசெய்து இதை போய் மறுபடியும் படிச்சி நொந்து போகாதீங்க....
ஆங்... சொல்ல மறந்துட்டனே.... வலைசரத்தில் 7 நாளும் கமெண்ட் சரவெடி கொண்டாட்டம் நடத்திய நம்ம கும்மி குரூப்பு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!
54 comments:
குட்
ரைட்டு. உங்க அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி.
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
நான் சொன்ன விசயங்கள அப்படியே follow பண்ணினதுக்கு ஒரு நன்றி..
6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....
//
இனிமேல் இங்கே மொக்கை பதிவுகள் கிடையாதா...
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!
:-)
//முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!
:-)//
oh, ghost blogger :-O
Good work arun :)
//வெங்கட் said..."
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!
:-) //
எனக்கும் எழுதித் தாங்க.. நா ஒங்க பேர கண்டிப்பா சொல்லுவேன்..
புதுசா எழுதறவங்களுக்கு நல்ல டிப்ஸ்
மொக்கை பதிவு வாழ்க..அதை கைவிட கூடாது
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!
//
இது வேரயா டேமேஜ் பண்ணிட்டாப்புல..
@ LK
Thanks
@ karthikkumar
நன்றி
@ வெறும்பய
நன்றிப்பா
//இனிமேல் இங்கே மொக்கை பதிவுகள் கிடையாதா...//
ஓவர் மொக்கை கிடையாது
@ Chitra
// You did a great job!!!//
thanks
@ வெங்கட்
// முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!! //
க்கும்... பாரதியாரை தப்பா சொன்னதுமே உங்களை கழட்டி விட்டுடேன்... இதுல இப்படி கமெண்ட் போட்டு பேரு வேற வாங்கிகறீங்களா?
வந்துட்டேன்
@ vaarththai
//oh, ghost blogger :-O//
நல்லா சொல்லுங்க வெங்கட்டுக்கு
@ Balajisaravana
// Good work arun :)//
thanks balaji
@ Madhavan Srinivasagopalan
//எனக்கும் எழுதித் தாங்க.. நா ஒங்க பேர கண்டிப்பா சொல்லுவேன்..//
ஏங்க அதுக்கு நீங்க எழுதாமலேயே இருக்கலாம்
நம்ம பேர காபாத்திடீங்க தல...
@ ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி சதீஷ்
// மொக்கை பதிவு வாழ்க..அதை கைவிட கூடாது//
அட அப்படி இல்லைங்க.... ஓவர் மொக்கை கிடையாது
@ Arun Prasath
// வந்துட்டேன்//
வாய்யா... இப்போதான் வழி தெரிஞ்சுதா?
ஹி ஹி, கொஞ்சம் வேலை.... வந்துட்டோம்ல
Thank u very much for ur useful ideas
@அருண்
//என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும்//
சும்மா ஜோக்கடிக்காத மச்சி... ஒரு வாரம் டைம் முடிஞ்சி போச்சி.. இனி இப்படி பேசின... கும்பல வந்து கலாய்ப்போம்.. :))
THODARNTHU VASICHEN... NALLA SENJEENGA BOSS..VALTHUKKAL..
Greath Job Arun!
Congrats... :)
@அருண்
சரி சரி அழாத... பாராட்டி தொலைக்கிறேன்...
குட்
ரைட்டு. உங்க அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி.
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
நான் சொன்ன விசயங்கள அப்படியே follow பண்ணினதுக்கு ஒரு நன்றி..
You did a great job!!!
Good work arun :)
புதுசா எழுதறவங்களுக்கு நல்ல டிப்ஸ்
நம்ம பேர காபாத்திடீங்க தல...
Thank u very much for ur useful ideas
THODARNTHU VASICHEN... NALLA SENJEENGA BOSS..VALTHUKKAL..
போதுமா?? :))
@ TERROR-PANDIYAN(VAS)
//
@அருண்
//என் சில பதிவுகளை படித்து விட்டு இவ்வளவு நல்லா நானா எழுதினேன்னு ஆச்சரியப்பட்டதும்//
சும்மா ஜோக்கடிக்காத மச்சி... ஒரு வாரம் டைம் முடிஞ்சி போச்சி.. இனி இப்படி பேசின... கும்பல வந்து கலாய்ப்போம்.. :))//
நீ இப்படி போடுவனு தெரிஞ்சிதான அடுத்த லைன் “சில பதிவுகளை பார்த்து தவறுகளை கண்டு கொண்டது இந்த வலைசரத்தால்தான்” இப்படி போட்டு இருக்கேன்...
விட மாட்டியே
///6. முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....
///
ஐயோ ... நல்ல வேளை நான் அங்க எழுதலை .. மொக்கை எனது தெய்வம் ..!!
எனக்கு வலைசரத்தில் எழுத பயமா இருக்கு ம்ம உங்க ஐடியா பார்த்து எழுத முயற்சி செய்றேன்
//இனிமேல் இங்கே மொக்கை பதிவுகள் கிடையாதா...//
ஓவர் மொக்கை கிடையாது///
அப்படி வந்தா வார்த்தையை விட்டு ட்டு அப்பறம் மொக்கை வந்தா ம்ம்ம் பாருங்க
//நிறைய மெனகெடவேண்டி இருக்கும். நிறைய பதிவுகள் (மொக்கைகள் உட்பட) படிக்கவேண்டி இருக்கும்/
நேரவே சொல்லலாம் கோமாளி ப்ளாக் படிக்கச் பயமா இருக்கு அப்படின்னு ..!!
//தயவு செய்து பாரதி, பாரதிதாசன், ள, ல, ற, ர - இதை எல்லாம் கரெக்ட்டா போடுங்க... இல்லைனா எனக்கு கிடைச்ச பல்பு உங்களுக்கும் கண்டிப்பா கிடைச்சிடும். அவ்வ்வ்வ்வ்....
//
இது நம்மளுக்கு புதுசா அண்ணா ..? அடிக்கடி வாங்குறது தானே ..!!
இனி அடுத்தது புதிர் வேலை ஆரம்பிச்சுர வேண்டியது தானே .........dec15 இதோ வந்துட்டு ..ம்ம் சீக்கிரம்
sorry comment delete panniyatharkku dec 15 thappa vilunthuttu
//முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....//
அப்போ நம்ம கோமாளி செல்வாவ ஆசிரியர இருக்கச் சொல்லலாமே, நாமளும் அவன் மொக்கையில் இருந்து தப்பிக்கலாம்.
//வெங்கட் said...
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!
//
அதான் அந்த ஆறு நாளும் கும்மி ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சா, அருண், இந்த ரோதனை உனக்கு தேவையா?
//அப்போ நம்ம கோமாளி செல்வாவ ஆசிரியர இருக்கச் சொல்லலாமே, நாமளும் அவன் மொக்கையில் இருந்து தப்பிக்கலாம்.
//
நாளைக்கு மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத்தகவல் அப்படின்னு ஒரு பதிவு போடப்போறேன் .. அதப் படிச்சா மொக்கை எவ்ளோ மகத்துவமானது அப்படின்னு உங்களுத் தெரியும் ..!!
அது சரி இப்போ இந்த போஸ்ட் கண்டிப்பா தேவையா? எதுக்கு இந்த விளம்பரம். வலைச்சரத்துல கமெண்ட்ஸ் போட சொல்லி கெஞ்சி காசு தர்றேன்னு சொன்னீங்க. இன்னும் பணம் வரலை?
செமயா ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கீங்கன்னு டெய்லி அந்தப் பதிவுகளைப் பாக்கும் போதே நினைப்பேன்... எப்படி திட்டமிடறதுன்னு எங்களுக்கும் இந்தப் பதிவு மூலமா சொல்லித் தர்றீங்களா.. நன்றி...
டிப்ஸ் எல்லாம் சூப்பருங்க..
வெற்றிகரமாக பொறுப்பை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள் :-)
வலைசரத்தில என்னை அறிமுக படுத்தியதுக்கு இங்கே நன்றி சொல்லிகிறேன். இனி ஆசிரியராக போறவங்களுக்கு நீங்க கொடுத்து இருக்கிற டிப்ஸ் ரொம்ப உதவியா இருக்கும்.
வலைசரத்தில் நீங்க மலர்களின் பெயரில் ஒவ்வொருத்தரையும் அறிமுக படுத்தியது வித்தியாசமா நல்லா இருந்தது...வாழ்த்துக்கள்.... நன்றி.
மொக்கை பதிவுன்னா எப்படி சீவாம இருக்குமா?
அனுபவம் இனிமை!
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
இந்த வாட்டி என்னயும் மதிச்சு அறிமுகப்படுத்தியிருக்காரு ராமசாமி சார்..
அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிச்சுக்கறேன்.
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
repeat 2times...
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
நல்ல டிப்ஸ் ப்ரோ மிக்க நன்றி
வ்லைச்சர ஆசிரியார போனதில் பதிவ்ர்களை நல்ல புரிந்து புட்டு புட்டு வைத்து இருக்கீஙக்.
கீழே சூப்பர் ஸடார் இனைத்தது ரொம்ப ஜூப்பரு
நல்ல டிப்ஸ் கொடுத்துருக்கீங்க!!!
பணியை நல்லபடியா செய்து முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
50!!!
வடை கிடைச்சிருச்சு..
//முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க...//
யோசிச்ச மாதிரி தெரியலயே :-P
வட போச்சே..
பரவாயில்ல..கிரேட் ஜாப்..வாழ்த்துக்கள்....
உங்களுடைய மொத்த அனுபவத்தையும் எங்க கண்முன் நிறுத்திட்டீங்க.
சூப்பர்.
அன்பின் அருண் - அருமை அருமை - வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றால் சாதக பாதகங்கள் என்ன என்பது நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. டிப்ஸ் சூப்பர் - எப்பொழுதும் புதியதாக் ஒரு பணியில் அமரும் போது - இவை எல்லாம் சகஜம் - இனி வரும் ஆசிரியர்களுக்கு இவை அனைத்தும் பயன்படும். நன்று நல்வாழ்த்துகள் அருண்
@ சீனா சார்
நன்றி ஐயா!
//ஐயோ ... நல்ல வேளை நான் அங்க எழுதலை .. மொக்கை எனது தெய்வம் ..!!//
யப்பா நீ தருமிக்கே அண்ணன்'ல.....:]]
Post a Comment