Cricket Countdown....

Friday, December 10, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் மனசை வெளிப்படுத்தும் அல்லது பெண் குரலில் ஒலித்த எனக்கு பிடித்த 10 பாடல்களை பகிரும்படி ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம மேட்டுபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ சகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. 

கொஞ்சம் (?!) லேட்டாகிடுச்சு. பெண் குரல்கள், பெண் மனசை வெளிப்படுத்தும் பாடல் அதிக அளவில் இருகிறது அதில் 10 தேர்ந்து எடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்,  என் நினைவில் உடனே வந்த 10 பாடல்களை இங்கே பகிர்கிறேன்.

சின்ன குயில் சித்ராவின் குரலில், இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய புன்னகை மன்னனின்  “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” என் ஆல் டைம் பேவரைட். வைரமுத்துவின் வைர வரிகள் இவை...

“நீயே அணைக்க வா தீயை அணைக்க வா
நீ பார்க்கும் போது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும் இந்த அன்பு போதும்....

2. சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே....
ஜென்சி குரலில் இளையராஜாவின் மயக்கும் இசையில் கண்ணதாசன் வார்த்தை ஜாலம் காட்டி இருப்பார். ஜானி படத்தில் வரும் “என் வானிலே.. ஒரே வெண்ணிலா” - மனதை மயக்கும் பாடல்

“நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா...”

3. பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...
அனுராதா ஸ்ரீராம் குரல் + ஹாரீஸ் ஜெயராஜ் இசை = பர்பெக்ட் காம்பினேஷன். லேசா லேசா படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் கவிஞர் வாலியின் எழுத்தில் இந்த பாடல், கண்டிப்பாய் THE BEST...

“நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தெரிகிறதே
விரிகிறதே தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே...”

4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...
ஒரு பெண்ணின் காதல் உணர்வையும் எதிர்பார்ப்பையும் அழகாய் சொல்லி இருப்பார் கவிஞர் தாமரை. பாம்பே ஜெயஸ்ரீ குரலும் ஹாரீஸ் இசையும் மின்னலே படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்

“அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம...”

5. பிறந்த உடலும் நீ! பிரிந்த உயிரும் நீ!
“ஒரு தெய்வம் தந்த பூவே” இதைவிட அருமையாய் ஒரு குழந்தையை எந்த கவிஞராலும் வர்ணிக்க முடியாது. வைரமுத்து அதில் சளைதவர் இல்லை என்பதை நிருபித்து இருப்பார். சின்மயியின் செல்லக்குரலில் ஏஆர் ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” கண்டிப்பாய் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும்?

“எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!...”

6. ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே...
லதா ரஜினிகாந்த், இளையராஜா இசையில் பாடியது. காட்சி அமைப்பும் பாடல் வரிகளும் மனதை உருக்கும். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் பெயரை சொன்னது நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்..

“கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில்

7. தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர...
இளையராஜாவின் மெல்லிய இசையில் ஜானகி அம்மாவின் குரலில்  - கண்மூடி கேட்டால் நம்மை நம் தாயின் மடிக்கே கொண்டு செல்லும் பாடல். வாலியின் வரிகளில் தளபதி படத்தின் “சின்னத்தாயவள் தந்த” பாடல் எனக்கு பல முறை மனஆறுதல் தந்து இருக்கிறது.

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”

8. சிங்கார வேலனே தேவா...
இந்த பாடலை எப்படித்தான் ஜானகி அம்மாவால் பாட முடிந்ததோ! வரிகளுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அதில் வரும் ஸ்வரங்கள், அதற்கு இணையான நாதஸ்வர இசை பிரம்மிக்க வைக்கும். சுப்பையா நாயுடுவின் இசையில் கொஞ்சும் சலங்கை படத்தின் “சிங்கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்...

“செந்தூரில் நின்றாடும் தேவா….
திருச்செந்தூரில் நின்றாடு தேவா
முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா
அழகிய சிங்கார வேலனே தேவா”

9. விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே...
கண்மூடி கேட்டால் கடவுளை கொஞ்சுவது போல இருக்கும் இந்த பாடல். அனுராதா ஸ்ரீராம் குரலில் வைரமுத்து எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...

“இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே”

10. அன்பே உந்தன் அழகு முகத்தை... யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது..
சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன். இந்த பாடலில் வைரமுத்து எடுத்தாண்டு இருக்கும் வார்த்தைகள் நன்றாய் இருக்கும். ஹரினி குரலும் தேவா இசையும் சேர்ந்து வந்த நேருக்கு நேர் படத்தின் பாடல் என் பதின்மத்தை நினைவுபடுத்தும்.
 “புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்”

இந்த பதிவை தொடர நான் அழைப்பது....

மேலும், பெண்பதிவர்கள் பார்வையிலும் என்ன பாடல்கள் வருகிறது என தொடர வருகிறார்கள்...


66 comments:

karthikkumar said...

padichittu varen

Arun Prasath said...

வடை எனக்கே

Arun Prasath said...

அடப்பாவி பங்காளி.... சரி சந்தோசமா எடுத்துக்கோ

karthikkumar said...

thambi mela paaru

Arun Prasath said...

சூப்பர் அண்ணே.. (template போடாம வேற எப்டி இத பாராட்ட?)

எல் கே said...

நல்ல தேர்வுகள்... அடுத்த வாரம் போடுகிறேன் அருண்

karthikkumar said...

உங்க தொகுப்பு அருமை சார்.

Arun Prasath said...

சிம்ரனுக்காகவே இந்த பாட்டை பல முறை பார்த்தேன்.//

அப்டி சொல்லுங்க..... அப்போ இந்த பாட்டு மொதல் எடத்ல போடுங்க தல

karthikkumar said...

ஈரோடு பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதாக எதோ ஒரு பதிவில் உங்கள் கமென்ட் பார்த்தேன். சந்திக்க காத்திருக்கிறேன்.

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// சூப்பர் அண்ணே.. (template போடாம வேற எப்டி இத பாராட்ட?)//
விடு விடு... எதிர்பார்த்ததுதான்

@ LK said...
// நல்ல தேர்வுகள்... அடுத்த வாரம் போடுகிறேன் அருண்//
ஊருக்கு போய்ட்டு வந்தே போடுங்க நோ பிராப்ளம்

ஹரிஸ் Harish said...

நல்லாதான் ரசிக்கிரீங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

//மாணசகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. //

புரியலையே.............. தமிழ் வலைச்சரத்துல எழுதின பின்பும் சரி இல்லையே

Arun Prasath said...

ஊருக்கு போய்ட்டு வந்தே போடுங்க நோ பிராப்ளம்//

இல்ல பிராப்ளம் இருக்குன்னு தான் சொல்லி பாருங்களேன்

Chitra said...

தேன் சொட்டுக்கள்! நல்ல தேர்வுகள்!

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல songs மக்கா எனக்கு ஸ்வர்ண லதா வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் மக்கா

அருண் பிரசாத் said...

//அப்டி சொல்லுங்க..... அப்போ இந்த பாட்டு மொதல் எடத்ல போடுங்க தல//
நாங்களாம் உண்மையத்தான் பேசுவோம்

@ ஹரிஸ்
// நல்லாதான் ரசிக்கிரீங்க...//
நன்றி ஹாரிஸ்

@ karthikkumar
// ஈரோடு பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதாக எதோ ஒரு பதிவில் உங்கள் கமென்ட் பார்த்தேன். சந்திக்க காத்திருக்கிறேன்.//
கண்டிப்பாய் கார்த்திக்

@ இம்சைஅரசன் பாபு..
//
//மாணசகோதரிகள் கூப்பிட்டு இருந்தாங்க. //

புரியலையே.............. தமிழ் வலைச்சரத்துல எழுதின பின்பும் சரி இல்லையே//
ஏன்ய்யா மானத்தை வாங்குற... chat ல சொல்லி இருக்கலாம்ல... மாத்திட்டேன்... மாத்திட்டேன்... மாத்திட்டேன்...

Ramesh said...

//ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

என் வானிலே.. ஒரே வெண்ணிலா


இந்த ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மற்ற பாடல்களும் அருமை.. நல்ல தொகுப்பு..

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// ஊருக்கு போய்ட்டு வந்தே போடுங்க நோ பிராப்ளம்//

இல்ல பிராப்ளம் இருக்குன்னு தான் சொல்லி பாருங்களேன்//
ஏன் என்னை பிராப்ளத்துல மாட்டி விடுற

@ Chitra
// தேன் சொட்டுக்கள்! நல்ல தேர்வுகள்//
நன்றி சித்ரா

@ இம்சைஅரசன் பாபு..
// நல்ல songs மக்கா எனக்கு ஸ்வர்ண லதா வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் மக்கா//
மக்கா... இங்க ஸ்வர்ணலதா பாடு எது மக்கா...அவ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

அருண் உங்களுக்கு நல்ல ரசனை உள்ளது , நல்ல பாடல்கள்

Arun Prasath said...
This comment has been removed by the author.
Anonymous said...

not even 1 frm roja :'(

அருண் பிரசாத் said...

//இந்த ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. மற்ற பாடல்களும் அருமை.. நல்ல தொகுப்பு.//
நன்றி ரமெஷ்

@ மங்குனி அமைச்சர்
// அருண் உங்களுக்கு நல்ல ரசனை உள்ளது , நல்ல பாடல்கள்//
அப்படியா சொல்லுறீங்க...அப்போ நான் யார் பிளாக்குக்குலாம் போக கூடாது...

சௌந்தர் said...

ரொம்ப நன்றி என்னை தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு இதோ படித்து விட்டு வரேன்

Kousalya Raj said...

நல்ல பாடல் தொகுப்புகள்.

Arun Prasath said...

25

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தேர்வுகள்...

சௌந்தர் said...

புன்னைகை மன்னன் மிகவும் பிடிக்கும் அதுவும் சித்ரா குரல் சான்சே இல்லை

ஜானி படத்தில் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அந்த பாடலை ரஜினி ரசிப்பார் பாருங்க அதை மாதிரி தான் நாமும் ரசிப்போம்

லேசா லேசா இந்த ஒரே ஒரு பாடலை மட்டும் அப்போது வெளியிட்டார்கள்...மிகவும் பிடித்த பாடல்

மின்னலே நான் போடலாம் என்று வைத்து இருந்த பாடல் வசீகரா....

ஒரு தெய்வம் தந்த பூவே ம் பிடிக்கும்

கடவுள் உள்ளமே கருணனை உள்ளமே எந்த கவலையில் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் கவலை போய் விடும்

என்னமா பாட்டு எல்லாம் செலக்ட் பண்றீங்க சின்ன தாய் அவள் கலக்குறிங்க ....ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு

சிங்கார வேலனே தேவா...இந்த பாடலை பள்ளி ஆண்டு விழாவில் கேட்டது

மின்சாரகனவு மிகவும் பிடித்த பாடல்

உண்மையில் மனம் விரும்புதே உன்னை தாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் கவிதைகள் மிகவும் அருமை. மேலும் இது போல நல்ல கவிதைகளை எழுதவும். நன்றி

ராஜி said...

தொடர்பதிவுனா எல்லார் பதிவும் அச்சுஅசலா ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், உங்கள் பதிவு நிச்சயம் தனித்துக் காட்ட காரணமான உங்கள் ரசனைக்கு பாராட்டுக்கள்.(ஆனால் ஒரு முக்கியமான பாட்டை விட்டுட்டீங்களே னு மனசுக்கு சங்கடமா இருக்கு. எப்படி மறந்தீங்க உங்க மகளுக்கு பிடித்த"வரம் தந்த சாமிக்கு" பாடலை) என்னை லாம் கூப்பிடலை. வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினதோட மறந்துட்டீங்க. கடைபக்கம் ஆளக் காணோம்

எஸ்.கே said...

அற்புதமான பாடல்கள்!

ராஜி said...

ரமேஷ் கூறியது
கவிதைகள் அருமை.ஃஃஃ பயபுள்ள விருதகிரி மயக்கத்துலயே இருக்கு என்னிக்குதான் தெளியப்போகுதோ இல்ல ஏர்வாடி, பாகாயம், கீழ்பாக்கம் னு எங்காவது கூட்டிப்போகனுமானு தெரியலியே. இதப்போயி தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கீங்க. உருப்பட்டமாதிரிதான்

அருண் பிரசாத் said...

நன்றி செளந்தர், கௌசல்யா, வெறும்பய, ரமெஷ், எஸ் கே

@ ராஜி
அட ஆமாம்ல... சே... லிஸ்ட் போயிட்டே இருந்துச்சு... டக்குனு தோணினதை எழுதினேன்...

எல்லாரையும் நானே கூப்பிட்டுட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க... உங்களை கண்டிப்பா கூப்பிடுவாங்க

வலைசரம் பிசி இப்போதான் முடிஞ்சது... கண்டிப்பா வரேன்

அருண் பிரசாத் said...

//இதப்போயி தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கீங்க. உருப்பட்டமாதிரிதான்//
எல்லாம் விதிங்க... அவர் என்னை ஒரு தொடர் பதிவுக்கு கூபிட்டு இருக்கார் அதுக்குதான் இந்த பழிக்கு பழி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படிச்சிட்டு பொறூமையா வாரென் கண்ணு!

ராஜி said...

உங்க பாப்பாக்கு பிடிச்ச கற்பூரமுல்லையும் மிஸ்ஸிங். நான் ஷமிக்குட்டிக்கிட்ட பேசனுமே. அப்பா உன் FAVARITEபாட்டை மறந்துட்டாருடா செல்லம்னு சொல்லனுமே (உங்க பாப்பா பேரோட அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ் மறந்துட்டேன்

Unknown said...

“தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ...”
இந்தபாடல் மட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் வரும்..

Anonymous said...

“ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்”
“என் வானிலே ஒரே வெண்ணிலா”
“லேசா லேசா”
“வசீகரா”
“ஒரு தெய்வம் தந்த பூவே”
“கடவுள் உள்ளமே”
“சின்னத்தாயவள் தந்த”
“சிங்கார வேலனே தேவா”
“அன்பென்ற மழையிலே”
“மனம் விரும்புதே உன்னை”

செம கலக் ஷன்....எனக்கு மிகவும் பிடித்த நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள்!!!
மிகவும் ரசித்தேன்.
குறிப்பாக ஜானி, கன்னத்தில் முத்தமிட்டால், தளபதி, நேருக்குநேர் இதெல்லாம் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் அருண்.

என்னை தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி :)

செல்வா said...

.//4. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்...//

இந்த நாலாவது பாட்டும் அஞ்சாவது பட்டும் நான் டிக்கடி இல்ல இல்லை தினமும் ஒரு தடவையாவது கேட்டிருவேன் .. அவ்ளோ பிடிக்கும் .. கலக்கல் பட்டு அண்ணா .!!

Anonymous said...

கார வேலனே தேவா...” மலைக்க வைக்கும் பாடல்.//
எனக்கு பிடிச்ச பாட்டு

அருண் பிரசாத் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

படிச்சிட்டு பொறூமையா வாரென் கண்ணு!//
எங்கய்யா போனவனை ஆளைகாணோம்... உசுருக்கு சேதாரமோ?

அருண் பிரசாத் said...

//ராஜி said...

உங்க பாப்பாக்கு பிடிச்ச கற்பூரமுல்லையும் மிஸ்ஸிங். நான் ஷமிக்குட்டிக்கிட்ட பேசனுமே. அப்பா உன் FAVARITEபாட்டை மறந்துட்டாருடா செல்லம்னு சொல்லனுமே (உங்க பாப்பா பேரோட அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ் மறந்துட்டேன்//
ஆகா... ரொம்ப டீப்பாத்தான் follow பன்னுறீங்க...

பொண்ணு பேரு ஷம்ஹித்தா = வேதங்களின் தொகுப்புனு அர்த்தம்

அருண் பிரசாத் said...

@ KRP
//இந்தபாடல் மட்டும் எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் வரும்..//
உண்மை அண்ணா.

@ ராதை
//இதெல்லாம் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் அருண். //
முதல் வருகைக்கு நன்றிங்க... இல்லை முதல் கமெண்ட்டுக்கு நன்றிங்க

@ செல்வா
வசீகரா தினமும் கேட்டா லவ் மூட்ல இருக்கியோ?

@ ஆர் கே சதீஷ்
//இதெல்லாம் நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்கள். வாழ்த்துக்கள் //
நன்றி சதீஷ்

அமுதா கிருஷ்ணா said...

nice selection..1,2,9 ஆம் பாட்டுக்கள் நானும் செலக்ட் செய்து இருந்தேன் என்னோட பதிவில் http://amuthakrish.blogspot.com/2010/11/blog-post_29.html#more

Unknown said...

தளபதி பாடலைக் கேக்கும்போதே கண்களில் நீர் தேங்கிடும்.. அவ்வளவு உருக்கமாக இருக்கும் வாய்ஸ்..

நல்ல ரசனை உங்களுக்கு..

சசிகுமார் said...

அருமை

மாணவன் said...

பாடல்கள் சிறப்பான தேர்வு அருமை..

8. சிங்கார வேலனே தேவா... எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

தொடரட்டும் உங்கள் பணி

வெங்கட் said...

நல்ல தேர்வு.. நானும் இது மாதிரி
ஒரு பதிவு எழுதணும்னு நினைச்சிட்டு
இருந்தேன்.

பார்க்கலாம்.. முடியுதான்னு..

அருண் பிரசாத் said...

//வெங்கட் said...

நல்ல தேர்வு.. நானும் இது மாதிரி
ஒரு பதிவு எழுதணும்னு நினைச்சிட்டு
இருந்தேன்.

பார்க்கலாம்.. முடியுதான்னு..//
நீங்க தொடர்பதிவு எழுதபோறீங்க... காமெடி பண்ணாம போய் பையன் ஹோம் ஒர்க் செய்யுங்க

Arun Prasath said...

vadai

Arun Prasath said...

ஹப்பா இங்கயாச்சும் கெடச்சதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1,2,4,5,6,7,9,10 பாடல்கள் நானும் விரும்பி கேப்பவை.அதிலும் 9ம் பாடல், அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றீனானே... பாடல் கேக்கக் கேக்க அப்படியே உருகிவிடுவேன். இந்தப் பாடல் பிடிக்கும் என்றூ இது வரை யாரும் குறீப்பிட்டுச் சொல்லிக் கேட்டதில்லை, நீங்கள் சொல்வதில் மிக்க சந்தோசம்...!

வைகை said...

அனைத்துமே நானும் ரசிக்கும் பாடல்கள்! அதிலும் அந்த சிங்காரவேலனே வாவ்!!

அனு said...

2,3,9 மூன்றும் என்னுடைய மொபல்ல இருக்குது.. ட்ரையினில ஜன்னலோர சீட்டுல, சாய்ஞ்சு கிட்டே இந்த பாடல்களை கேட்டுட்டு போற சுகமே தனி :) சூப்பரா இருக்கும்..

மற்ற பாடல்களும் அருமை.. playlist-la சேர்த்துடுறேன்..

Unknown said...

பாடல்களின் தேர்வு அருமை, எமது எண்ணத்தில் TOP SONGS
1.கடவுள் உள்ளமே ஓர் கருணை...
2.சின்னத்தாயவள் தந்த.
3.என் வானிலே.. ஒரே வெண்ணிலா..
4.ஒரு தெய்வம் தந்த பூவே...
5.ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்...

Unknown said...

லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
எங்கள் அழைப்பினை ஏற்று, தொடர் பதிவு எழுதியமைக்கு மனமார்ந்த நன்றிகள்..

சுசி said...

நல்ல பாடல்கள் அருண்.

அன்பரசன் said...

8ஐ தவிர எல்லாமே நான் விரும்பி அடிக்கடி கேட்கக்கூடிய பாடல்கள்.
நல்ல தேர்வு.

குறையொன்றுமில்லை. said...

நல்லரசனை நல்ல பாடல்தொகுப்பு.

தினேஷ்குமார் said...

லேட்டா பதிவு போட்டாலும் கலக்கல் நண்பரே எல்லா பாடல்களுமே இனிக்குதே எதைச்சொல்வது எனக்கு பிடித்த பாடல் என்று

Unknown said...

சாரி வாத்தியாரே
கொஞ்சம் லேட்...
அனைத்தும் பிடித்த பாடலில் உள்ளது

Mohamed Faaique said...

///ஏஆர் ரஹ்மான் இசையில் அருமையாக அமைந்த மின்சாரகனவு படப்பாடல்...///

இதில் வரும் புல்லாங்குழல் இசை sooper 'ஆ இருக்கும்...

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பரப்பு....

Anonymous said...

சிங்கார வேலனே தேவா..காலம் தாண்டி நிற்கும் அற்புதம்!
தங்களை Follow செய்கிறேன் இன்று முதல்! நேரம் இருப்பின்....நான் குப்பை கொட்டும் இடத்திற்கு வருக.... madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com

'பரிவை' சே.குமார் said...

பாடல்கள் தேர்வு அருமை..

Gayathri said...

எல்லாமே நல்ல பாடல்கள்,
சுப்பர்

நானும் ஆட்டத்துல இருக்கேனா,
ஹை நன்றி

சேகரமா எழுதறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

லேசா லேசா

கடவுள் உள்ளமே

சின்னத்தாயவள்

அன்பென்ற மழையிலே

மனம்விரும்புதே உன்னை (இந்த பாடல் ரிலீஸ் ஆன டைம்ல நிறைய தடவை கேட்ட பாடல்)

இந்த பாடல்கள் என்னோட ஃபேவரிட்ஸ்ம் கூட....