Cricket Countdown....

Thursday, September 23, 2010

ஐதராபாத் to சென்னை...

ஏற்கனவே விஜயவாடா டூ வைசாக் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். ஆந்திராவில் செய்த சில மறக்கமுடியாத பயணங்களின் தொடர்ச்சியில், இப்போழுது அடுத்த பயணம் போகலாமா.....

இந்த முறை ஹைதராபாத் டூ சென்னை பயணம்.

2009, சில பல நிதி நெருக்கடியாலும், குழந்தைக்கு 6 மாதமே ஆனதாலும் நான் ஐதராபாத்திலும், என் மனைவி சென்னையிலும் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை. குழந்தையை பார்த்துக் கொள்ள என் மாமியார், என் மனைவியுடன் சென்னையில் இருந்தார்

அந்த ஞாயிற்றுகிழமை விநாயக சதுர்த்தி, வழக்கம் போல வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்னை போக சென்னை எக்ஸ்பிரஸிலும் ஞாயிறு மாலை ஐதராபாத் திரும்ப சார்மினார் எக்ஸ்பிரஸிலும் டிக்கெட் புக் செய்தாகி விட்டது. வெள்ளிக்கிழமை காலை வரை நல்லாதான் போச்சு, வழக்கம் போல டிரஸ் எல்லாம் pack பண்ணிட்டு ஆபிஸ் வந்தாச்சு.


ஆபிஸ் வந்தா வில்லன் உட்கார்ந்து இருக்கார். என் சேல்ஸ் மேனஜர் ரூபத்துல. பெங்களூர்ல இருந்து இதுக்குனே வந்து இருக்கார் போல, “அருண், நாளைக்கு Factory Engineer இங்க வரார் நாம 3 பேரும் கஸ்டமரை பார்க்க போறோம். பிளான் பண்ணிக்க!”. (ஆப்பு) என்னத்த பிளான் பண்ண, போட்ட பிளானைத்தான் கான்சல் செய்யனும் என முடிவு செய்து என் பிளானை டேமேஜ்   செய்த டேமெஜருக்கு ஓகே சொன்னேன். (வேற வழி)

எனக்கு என் வேலை மேல எப்பவுமே அப்படி ஒரு நம்பிக்கை, இப்படி ஏதாவது எப்பவும் சொதப்பும்னு தெரியும், அதனால எப்பவுமே டிக்கெட்டை வெயிட்டிங் லிஸ்ட் 12 லிருந்து 15 க்குள்ள தான் புக் பண்ணுவேன். அப்பதான், கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும். (அட, என்ன ஒரு சிந்தனை) இதுலாம் ரயில்வே டிக்கெட் புக்கிங் சீக்ரெட், நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.

டிரெயின் 5 மணிக்கு, 2 மணிக்கு சார்ட் Prepare பண்ணிடுவாங்க. அப்புறம் கேன்சல் பண்ண முடியாது. இப்போ (காலை 9 மணி) கான்செல் பண்ணா வெயிட்டிங் லிஸ்ட் சார்ஜ் போக 50 ரூபாய்க்குள்ள தான் பிடிச்சிட்டு மிச்சம் ரிட்டர்ன் வந்துடும். சேல்ஸ் மேனேஜர் பிளானை மாத்துற மாதிரி தெரியல, சரின்னு அன்னைக்கு டிக்கெட்டை கேன்சல் செய்தாச்சு.

ஆனா, ரிட்டன் டிக்கெட் கேன்சல் செய்யல. பண்டிகைக்கு எப்படியாவது போகனும்னு ஒரு பக்கம் ஆசை, ஒருநாளுக்காக போகனுமானு ஒரு குழப்பம்.

போகனும்னு ஆசைபட காரணம்,

  1. என் குழந்தை பிறந்து அதுதான் அவளுக்கு முதல் பண்டிகை. அதை மிஸ் பண்ண விரும்பல.
  2. அந்த ரிட்டர்ன் டிக்கெட் அதிசயமா RAC ல புக் பண்ணேன். கன்பார்ம் ஆகிடுச்சு கேன்சல் பண்ணா Penalty அதிகம்
  3. தீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு!
  4. முதல் கடவுள் விநாயகர் மேல ஒரு தனி பிரியம். அதை பற்றி ஒரு தனி பதிவே போட்டு இருக்கறேன்.
இந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

38 comments:

Thenral said...

Enna sir!Anubavathilum suspense vaikiringa?

மங்குனி அமைச்சர் said...

கடைசி 3 மணி நேரம் வரை கன்பார்ம் ஆகாது + பிளான் ஓகே ஆகினால் பெர்த் கண்டிப்பாய் கன்பார்ம் ஆகும்.///

என்னா மூளைடா சாமி , மம்தா பானர்ஜி கிட்ட சொல்லு உனக்கு , துணை அமைசர் பதவி கிடைச்சாலும் கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

தீபாவளிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பண்டிகை விநாயக சதூர்த்தி (////

உன் பிறந்த நாளுக்கு , பொண்டாட்டி புள்ளைக கூட இருக்கனுமின்னு ஆசை படுற , ஒன்னும் தப்பே இல்லை , ஆனா உன் பிறந்த நாளை ஊரெல்லாம் கொண்டாடுராங்கப்பா

என்னது நானு யாரா? said...

சொல்லுங்க அருண்! சொல்லுங்க! நீங்க சென்னைப் போனீங்களா இல்லையா! இல்லைன்னா இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை வந்தாலும் வந்திடும். சீக்கிரம் சொல்லி அமைதிக்கான நோபல் பரிசுக்கு உரியவராகுங்க.

அருண் பிரசாத் said...

@ Thenral
எல்லாம் ஒரு பில்டப்தாங்க

@ மங்குனி
அய்யோ சாமி அந்த அம்மாகிட்ட யாரு வேலை செய்றது

@ என்னது நானு யாரா?
நான் போகலைனா எனக்கும் என் மனைவிக்கும்தான் சண்டை வரும். அது இந்தியா பாக்கிஸ்தான் பிரச்சனையவிட ரொம்ப பெருசு

Unknown said...

நல்லாத்தான் போகுது அருண் ....

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் உங்க மனது எவ்வளவு கஷ்டபட்டிருக்கும் என்பது ஒரு தகப்பனாக உள்ள ஒவ்வொருக்கும் உணர முடியும் .பயணங்கள் தொடரட்டும்

எல் கே said...

unnalathan railways nastam aagutham

Gayathri said...

enna brother ithulayuma suspense...ithenna suspense vaaramaa?

Anonymous said...

பயணம் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
வெய்டிங் அடுத்த பதிவுக்கு..

பாலாஜி சரவணா...

சௌந்தர் said...

அப்போ comment அடுத்த பதிவில் போடுறோம்

*இயற்கை ராஜி* said...

naala than plan podarenga.. awaiting fr the next part

செல்வா said...

///இந்த குழப்பத்திற்கு நடுவில் மறுநாள் கிளம்பும் போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமானது.//

அப்படியா ..? சரி என்ன பிரச்சினை ஆச்சு ..?!? டேமேஜர் மறுபடியும் ஆப்பு வச்சிட்டாரா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.//
இதுக்குதான் கொஞ்சம் காஸ்ட்லியான பர்ஸ் வாங்கனும்கிறது. damage ஆகாம இருக்கும்ல. பிளாட்பாரத்துல பத்து ரூபாய்க்கு மூணு வாங்கினா இப்படித்தான் பயப்படனும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இம்சைஅரசன் பாபு.. said...

அருண் உங்க மனது எவ்வளவு கஷ்டபட்டிருக்கும் என்பது ஒரு தகப்பனாக உள்ள ஒவ்வொருக்கும் உணர முடியும் .பயணங்கள் தொடரட்டும்//

வந்துட்டாருடா வயசானவரு..

சுசி said...

என்னா மாதிரி சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து தொடரும் போடராங்கய்யா..

Unknown said...

சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் சாப்பிடலாமே - அதை சொல்லு!) :

namma item..ok start music...

Unknown said...

என்னா மூளைடா சாமி , மம்தா பானர்ஜி கிட்ட சொல்லு உனக்கு , துணை அமைசர் பதவி கிடைச்சாலும் கிடைக்கும்---anney

antha elagavathan nama vera oruthavangalku tharatha cholitamey..

Unknown said...

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...
---

ada kadavuley...

ethilakooda suspensaaaa..

Unknown said...

இந்திய வலைபதிவில்
முதன் முறையாக சஸ்பென்ஸ் வைத்து எழுதிய
அருண் அண்ணன் அவர்களுக்கு
எங்கள் சங்கம் சார்பாக இந்த பொன்னாடையை போர்த்தி
வாழ்த்துகிறோம்..

Unknown said...

ஒட்டு பெட்டியில் ஒட்டு போடா முடிய வில்லை.
இது என் ஆபீஸ் நிர்வாகிகள் செய்த சதி என்பதை
எங்கு தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்

Unknown said...

//நம்ம பிளான் சொதப்பினாலும் பர்ஸ் டேமேஜ் ஆகாம பாத்துக்கலாம்.//
எப்பிடி எல்லாம் உக்காந்து
யோசிக்கிறாங்கப்பா ::::))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாத்தான் போகுது பில்டப்

Chitra said...

என்ன பிரச்சனை? சென்னை போனேனா? இல்லையா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...



....... என்னா ஒரு சஸ்பன்சு! மீதியை "வெள்ளித்திரையில்" காண்க!

அருண் பிரசாத் said...

@ All
எல்லோரும் இது என்னவோ சஸ்பென்ஸ் தொடர்னு நினைச்சி கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க. பதிவின் நீளம் கருதி இதை ஒரு தொடரா போட்டு இருக்கேன் அவ்வளவுதான்....

அருண் பிரசாத் said...

கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அருண் ,
மறுபடியும் மறுபடியும் நிருபிக்கிரே நீ ஆனந்த விகடன் ஆளுன்னு ...,சும்மா தொடரும் தொடரும் போட்டு காண்டு கிளப்புற ..,

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இந்த "ஐதராபாத் to சென்னை..." ரயில் பதிவிற்கு
கம்பார்ட்மெண்ட் போட, -அட ச்சை- கமெண்ட் போட
அடுத்த பெட்டியில், -அட ச்சை- அடுத்த பதிவில்
சந்திப்போம்.

சாந்தி மாரியப்பன் said...

டிக்கெட்ட கேன்சல் பண்ணிட்டு அப்றம் எப்படி ஊருக்கு மறுநாள் கிளம்பினீங்க..

thiyaa said...

என்ன சார்
ப்ளீஸ் சொல்லுங்க ...........

pinkyrose said...

அருண் சார்Pinky வந்துட்டாஆஆஆ...! பதிவு சூப்பர். இதுல ஏன் சஸ்பென்ஸ்....

Unknown said...

where is the next part..???waiting

ப்ரியமுடன் வசந்த் said...

:))

சஜ்பென்ஸ் சிக்கிரம் சொல்லுங்க பாஸ்

Anonymous said...

கலக்குறிங்க..உங்க கதையவே இவ்வளவு த்ரில்லா கொண்டு போறிங்க...குழந்தையை போய் சிக்கிரம் பாருங்க...

Karthick Chidambaram said...

நல்லா போகுது ... ரயில்கள் வாழ்க ...!

வெங்கட் said...

@ அருண்.,

// எல்லோரும் இது என்னவோ சஸ்பென்ஸ் தொடர்னு
நினைச்சி கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க.
பதிவின் நீளம் கருதி இதை ஒரு தொடரா
போட்டு இருக்கேன் அவ்வளவுதான்.... //

இங்கே யாரும் அப்படி நினைக்கலை..
ஓவரா சீன் போடாதீங்க..
சஸ்பென்ஸ் தொடராம்ல.,
சஸ்பென்ஸ் தொடர்..

எப்படியும் கடைசியில
Hero & Heroine சேர்ந்துடுவாங்கன்னு
தெரிஞ்சும் படத்தை பார்க்கறோம்ல..
அது மாதிரி தான்..

நீங்க எப்படியும் திருட்டு ரயில் ஏறி
சென்னை போயிருப்பீங்க..
எனக்கு தெரியாதா..?

நீங்களாவது Train-க்கு டிக்கெட்
எடுக்கறதாவது..?!!

கருடன் said...

োীহ সগ োীহসবোোলো জোূপগনহ ্লতকততচ ্রল্ে্ে র্রকলেে রপ্রল্ে রপর্্ রের্ রপ্ের্ে

্কb্কbেেরক রপকরপ তকতক রপকপ করতর
ে্bbb রকরতগbb ে্্ারbতকর রলকলb্

রb্েকb্েbক্
bপb্b্েত রbকb্ কb্েকপ্ ্েক্েকপ

எப்படி மச்சி நம்ம பெங்காளி கமெண்ட்... சூப்பரா???

கருடன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

நானூம் ஒரு ப்ளாக் ஓனர்தான் நான் சொல்றென் கமெண்ட் அப்ருட்.. Apporoved... ஹும்... இதுக்கு இங்லிஷும் புரியல தமிழும் புரியல...

(விடியர்காலை 3 மணிக்கு வித்யாசமாய் சிந்தித்து கமெண்ட் போடுவோர் சங்கம்...)